Followers

Tuesday, March 15, 2011

வீட்டு வேலைக்கு வரும பெண்கள் படும் துயரம்!

அரபு நாடுகளுக்கு வறுமையின் காரணத்தினால் வீட்டு வேலைக்கு பல பெண்கள் வருகின்றனர். இவர்களில் சிலரின் வாழ்வு பிரகாசமாகி விடுகிறது. பலரின் வாழ்வு பரிகாசமாகி விடுகிறது. இதில் அதிகம் பாதிக்கப்படுவது நமது சிரீலங்கா தமிழ் சகோதரிகளும் இந்தோனேஷிய சகோதரிகளும்தான்.

நதன்டியா என்ற ஊரிலிருந்து வீட்டு வேலைக்கு வந்த திலினி குமாரி (வயது 26) என்ற இளம் பெண் விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டிருக்கிறார். எத்தனை கனவுகளோடு சவுதிக்கு வந்திருப்பார் அந்த நங்கை. பிறந்தது ஒரு நாடு. சொந்த நாட்டிலும் போர்களினால் நிம்மதி இல்லை. சவுதி முதலாளியோ 'நல்ல பெண். எந்த குறையும் சொல்ல முடியாது. திடீரென்று ஏன் இந்த முடிவை எடுத்தார் என்று ஆச்சரியமாக இருக்கிறது' என்கிறார்.

புஷ்பவல்லி செல்லதுரை, பவானிதேவி சின்னையா என்ற வேறு இரு பணிப் பெண்களும் வேறு வேறு இடங்களில் கொலை செய்யப்பட்டிருக்கிறார்கள். இதெல்லாம் நமக்கு உணர்த்துவது தனியாக இனி பணிப் பெண் வேலைக்கு வருவதை முற்றிலுமாக தவிர்த்துக் கொள்ள வேண்டும். கணவன் வீட்டு டிரைவராக இருக்கும் பட்சத்தில் அந்த வீட்டில் பணிப் பெண்ணாக வருவதில் தவறில்லை. மொழி புதிது. கலாச்சாரம் புதிது. இப்படி ஒரு சூழலில் அந்த வீட்டில் தனிமையில் மனதால் மிகவும் பாதிக்கப்படுகிறார்கள். சிலர் வாழ்க்கையில் வெறுப்புற்று தற்கொலையை நாடுகின்றனர்.

சில வீடுகளில் பாலியல் தொந்தரவுக்கும் பணிப் பெண்கள் ஆளாக்கப்டுகிறார்கள். எவ்வளவுதான் இஸ்லாம் கடுமையாக சட்டங்களை கொடுத்தாலும் சில மனித மிருகங்கள் அந்த பெண்களை தங்களின் தேவைகளுக்கு பயன்படுத்திக் கொள்கிறது. பணிப் பெண்கள் சவுதி வீடுகளை விட்டு அதிகம் வெளியில் செல்வதில்லை. எனவே அங்கு நடக்கும் அத்து மீறல்களை அவர்களால் யாரிடமும் சொல்ல வாய்ப்பில்லை. நல்ல மனதுடைய சவுதி பெண்கள் உடைய வீடுகளில் எந்த பிரச்னையும் இல்லை.

சில வீடுகளில் தொடர்ந்த வேலை. காலையில் ஐந்து மணிக்கு வேலையை ஆரம்பித்தால் இரவு பத்து மணி வரை கூட ஓய்வில்லாத வேலையில் பலர் சிரமப்படுகின்றனர். இவ்வளவு சிரமத்தை அனுபவிப்பதற்க்கு பதில் சொந்த நாட்டிலேயே குறைந்த வருமானமாக இருந்தாலும் நிம்மதியாக வாழ்க்கையை ஓட்டலாம். அல்லது தக்க துணையோடு பணிப் பெண் வேலைக்கு அரபு நாடுகளுக்கு வரலாம்.

இதற்கு அரசாங்கங்களும் முயற்சி எடுக்க வேண்டும். நமது அட்டை கத்தி வீரர்கள் வைகோ, சீமான், நெடுமாறன் போன்றவர்கள் அந்த மக்களின் வேலை வாய்ப்புக்கு ஏதாவது ஆவண செய்யலாம். எம்எல்ஏ சீட்டுகளுக்காக மந்திரிகளை ராஜினாமா செய்யச் சொன்ன கலைஞர் அதுபோல் மத்திய அரசோடு வாதாடி அந்த மக்களுக்கு ஏதாவது செய்யலாம்.

இனியும் தனி ஈழம் என்று கதைத்துக் கொண்டிருக்காமல் ஒன்றுபட்ட இலங்கையில் அந்த மக்களையும் ஐக்கியப்படுத்த நம்மால் ஆன முயற்ச்சிகளை எடுக்க வேண்டும். மேலும் விடுதலைப் புலிகளால் பிளவுபடுத்தப்ட்ட தமிழ் இந்துக்களும், தமிழ் முஸ்லிம்களும் ஓரணியில் திரண்டு இலங்கையின் எதிர்காலத்தை வளமுள்ளதாக்க முன்வர வேண்டும். கண்டியில் எனது தாத்தா தான் இலங்கையில் இருந்த அந்த பசுமையான நாட்களை நான் சிறுவனாக இருந்த போது சொல்லக் கேட்டிருக்கிறேன். அத்தகைய சூழல் திரும்பவும் வர வேண்டும். எல்லோரும் இன்புற்றிருக்க வேண்டும் என பிரார்த்திக்கிறேன். எதையோ எழுத நினைத்து பதிவு எங்கெங்கொ சென்று விட்டது.

9 comments:

ப.கந்தசாமி said...

நல்ல கருத்துக்கள். உங்கள் கனவு நனவாகட்டும்.

சக்தி கல்வி மையம் said...

வருத்தப் படுவதைத் தவிர வேறென்ன செய்யமுடியும் நம்மால்..

நிரூபன் said...

இதற்கு அரசாங்கங்களும் முயற்சி எடுக்க வேண்டும். நமது அட்டை கத்தி வீரர்கள் வைகோ, சீமான், நெடுமாறன் போன்றவர்கள் அந்த மக்களின் வேலை வாய்ப்புக்கு ஏதாவது ஆவண செய்யலாம். எம்எல்ஏ சீட்டுகளுக்காக மந்திரிகளை ராஜினாமா செய்யச் சொன்ன கலைஞர் அதுபோல் மத்திய அரசோடு வாதாடி அந்த மக்களுக்கு ஏதாவது செய்யலாம்.//

வணக்கம் சகோதரம், நலமா?

இது சரியான அடி, மக்களைப் பற்றி எவர் சிந்திக்கிறார்கள்?
இவர்கள் எல்லோரும் இனியொரு ஈழப் போர் எனக் காலைத்தை ஓட்டுகிறார்கள்.
வீட்டுப் பணிப்பெண்களைப் பாதுகாப்பதற்கான இறுக்கமான சட்டங்கள் உள்ள நாடுகளுக்கு மக்களை அனுப்பினால் தான் இலங்கையின் பணிப் பெண்கள் பாதுக்காக்கப்படுவார்கள். யார் செத்தாலும் மனித உயிர் தானே?
அதனை மதிக்கத் தெரியாத உசுப் பேத்தும் நீங்கள் சொன்ன அரசியல்வாதிகள் எங்களைப் போல போரை அனுபவித்தால் தான் திருந்துவார்கள்.
இவர்களுக்கு எங்கே தெரியப் போகிறது எங்களின் துன்பங்களும், நாங்கள் பட்ட அவலங்களும்?

~முஹம்மத் ஆஷிக் citizen of world~ said...

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...

நல்ல பதிவு சகோ சுவனப்பிரியன்.

இவையெல்லாம் நடக்கின்றன.

நடக்காமல் இருக்க சரியான தீர்வுகள் என்ன என்று நாம் சிந்திக்க வேண்டும்.

->பணிப்பெண்களிடம் குற்றம் செய்யும் சவுதிகள் இஸ்லாமை சரியாக பின்பற்றப்படுவதில்லை. இறைவனுக்கு அஞ்சுவதில்லை.

->இவர்களை சவூதி அரசு இனியாவது மிகக்கடுமையாக தண்டிக்க வேண்டும். பாரபட்சமில்லாமல்.

->இதுபற்றிய பிரச்சினை வரும் முன்னாலே, ஒரு பணிப்பெண் எவரிடம் வேலைக்கு சேரப்போகிறார் என்று அந்த நாட்டில் உள்ள இந்திய அல்லது சவூதி தூதரகம் அப்பணிப்பெண் வரும் முன்னாலேயே அந்த அரபி பற்றி அவர் இதற்கு முன் பணியாட்களுக்கு சம்பளம் ஒழுங்காக கொடுத்தவரா, குற்றம் இழைத்தவரா, அவர் பின்னணி என்ன என்றெல்லாம் விசாரித்து சரியானவராக இருந்தால் மட்டுமே பணிக்கு சவூதிக்கு வர அனுமதிக்க வேண்டும்.

->இதெல்லாம் எதுவுமே ஒழுங்காக நடக்காத போது... பணிப்பெண்களாக நம் சகோதரிகள் சவூதி வருவது அவர்களுக்கு நல்லதல்ல.

->அதே நேரம் சவுதிக்கு வந்து பணிப்பெண்ணாக வேலை பார்த்து லட்ச் லட்ச மாக சம்பாதித்து மிக்க மகிழ்ச்சியுடன் இந்தியாவில் மாடிவீடு கட்டி வாழும் பெண்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். அவர்களைப்பார்த்து எல்லா சவுதிகளும் அப்படித்தான் சம்பளத்தை அள்ளிக்கொடுத்து பணிப்பெண்களை கவனித்துக்கொல்வார்கள் என்று நம்பவும் கூடாது.(இவை செய்திகளாக பத்திரிக்கையில் வராது)

->அதேபோல சவுதிகளால் கொடுமை இழைக்கப்பட்ட பணிப்பெண்களை பற்றி அவ்வப்போது வரும் செய்திகளை கண்டு எல்லா சவுதிகளும் அப்படித்தான் என்ற முடிவுக்கும் வரக்கூடாது.

->நல்லோரும் கெட்டோரும் எல்லா நாட்டிலும் எல்லா சமயத்திலும் உள்ளார்கள் என்று உணர்ந்து நாம் தான் பாதுகாப்பாக இருக்க வேண்டும்.

suvanappiriyan said...

டாக்டர் கந்தசாமி!

//நல்ல கருத்துக்கள். உங்கள் கனவு நனவாகட்டும்.//

முதல் வருகைக்கும் கருத்தைப் பதிந்தமைக்கும் நன்றி! இலங்கைப் பணிப் பெண்களில் பலர் உளவியல் ரீதியாக நிறைய பாதிக்கப்பட்டுள்ளனர். இடை விடாத போர்களினால் இந்த நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கலாம். ஒருமுறை ஒரு இலங்கைப் பணிப் பெண் வெறும் நைட்டியோடு தெருவில் ஓட ஆரம்பித்து விட்டார். நம் சகோதரர்கள் அவரை நிறுத்தி விபரத்தைக் கேட்டர்ல் 'எப்படியும் நான் இலங்கைக்கு சென்றுவிட வேண்டும்' என்கிறார் 'சவுதி வீட்டில் பிரச்னையா?' என்றால் 'அதெல்லாம் பிரச்னை இல்லை. எனக்கு வீட்டு வெலை செய்ய பிரியமில்லை' என்கிறார். பிறகு அவரை இலங்கை தூதரகத்தில் கொண்டு போய் விட்டு வந்தனர் தோழர்கள்.

suvanappiriyan said...

//வருத்தப் படுவதைத் தவிர வேறென்ன செய்யமுடியும் நம்மால்..//

வருகைக்கும் கருத்தைப் பதிந்தமைக்கும் நன்றி கருன்.

suvanappiriyan said...

நிருபன்!

நலமாக இருக்கிறேன். நாம் அனைவரும் நலமுடன் வாழ இறைவனிடம் பிரார்த்திக்கிறேன்.

//எங்களைப் போல போரை அனுபவித்தால் தான் திருந்துவார்கள்.
இவர்களுக்கு எங்கே தெரியப் போகிறது எங்களின் துன்பங்களும், நாங்கள் பட்ட அவலங்களும்?//

உண்மைதான் சகோதரரே! நடந்தது நடந்தவையாக இருக்கட்டும். இனி வரும் காலமாவது சுபமாக இருக்கட்டும்.

suvanappiriyan said...

வஅலைக்கும் சலாம்! சகோ. ஆஷிக்!

//அதே நேரம் சவுதிக்கு வந்து பணிப்பெண்ணாக வேலை பார்த்து லட்ச் லட்ச மாக சம்பாதித்து மிக்க மகிழ்ச்சியுடன் இந்தியாவில் மாடிவீடு கட்டி வாழும் பெண்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். //

கண்டிப்பாக! ராஜவாழ்க்கை வாழ்ந்து வரும் பல பணிப் பெண்களை நான் அறிவேன். இடம் ஒத்துப் போய் விட்டால் இரு தரப்புக்கும் பிரச்னை இல்லை. கணவன் மனைவியாக சேர்ந்து வேலை செய்து வரும் பல பெண்கள் பல வருடங்களாக மகிழ்ச்சியுடன் வாழ்ந்து வருகின்றனர். இதனால் பெண்களுக்கும் பாதுகாப்பு கிடைக்கிறது. அரசாங்கத்திடம் இந்த பெண்களின் குறைபாடுகள் முறையாக சேர்ப்பிக்கப்படுவதில்லை. அரசுக்கு இது போன்ற ஒரு சில பாலியல் வழக்குகள் வந்து அதனால் சவுதிகள் தண்டிக்கவும் பட்டிருக்கிறார்கள். முறையான ஆவணங்கள், பாதுகாப்புக்கு ஆண் துணை என்ற ஏற்பாட்டோடு வந்தால் அவர்களின் எதிர்கால கனவு நனவாக வாய்ப்புண்டு.

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!

Unknown said...

//எம்எல்ஏ சீட்டுகளுக்காக மந்திரிகளை ராஜினாமா செய்யச் சொன்ன கலைஞர் அதுபோல் மத்திய அரசோடு வாதாடி அந்த மக்களுக்கு ஏதாவது செய்யலாம்//

நோட் பண்ண வேண்டிய விஷயம்.