Followers

Wednesday, March 02, 2011

இந்தியாவும் பாகிஸ்தானும் தீவிரவாதமும்!

பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாண அமைச்சர் சில விஷமிகளால் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியது. சாபாஷ் பாட்டி என்ற சிறுபான்மை நலனுக்கான இந்த அமைச்சர் ஒரு கிறித்தவர். சமீபகாலமாக பாகிஸ்தான் அழிவை நோக்கி சென்று கொண்டிருக்கிறது என்பதை இது போன்ற சம்பவங்கள் வெளிச்சம் போட்டு நமக்கு காட்டிக் கொண்டிருக்கிறது. ஜனாதிபதி ஆஷிப் அலி ஜர்தாரியும் பிரதம மந்திரி சையத் யூசுப் ரஜாவும் இந்த காட்டுமிராண்டித் தனத்தை வன்மையாக கண்டித்துள்ளனர். 'அல்காய்தா பஞ்சாப்', பிதாயீன் இ முகம்மத், இஸ்ரேலின் மொஸாத் இவைகளில் ஏதோ ஒன்றின் வேலையாக இருக்கலாம் என்று அரசு கருதுகிறது. இது போன்ற காட்டுமிராண்டித் தனங்களை மதங்களை கடந்து அனைவரும் ஒன்று சேர்ந்து எதிர்க்க வேண்டும். பாகிஸ்தான் வெப் சைட்டுக்கு சென்று என்னுடைய எதிர்ப்பையும் தெரிவித்து விட்டுத்தான் பதிவு எழுதுகிறேன்.

பாகிஸ்தானில் குழப்பத்தை உண்டாக்க இஸ்ரேலின் வேலையாக இருந்தால் அரசு தீவிர நடவடிக்கையை எடுக்க வேண்டும். இஸ்லாத்தின் பெயரால் எவராது செய்திருந்தால் அந்த மர மண்டைக்கு இஸ்லாம் என்றால் என்னவென்று விளங்கவில்லை என்றுதான் எடுத்துக் கொள்ள வேண்டும். போர்க் களங்களில் கூட முதியவர் பெண்கள் சிறுவர்கள் மதத்தலைவர்கள் போன்றவர்களை எந்த சிரமத்திற்கும் ஆளாக்கக் கூடாது என்று கட்டளையிட்டிருக்கும் இஸ்லாத்தை ஏற்ற ஒருவன் அநியாயமாக ஒரு உயிரை எக்காலத்திலும் எடுக்கமாட்டான். இது போன்ற பாதக செயல்களை ஒரு மூடன் இஸ்லாத்தின் பெயரால் செய்தால் அவனுக்கு இஸ்லாம் விளங்கவில்லை. சரிவர போதிக்கப்படவில்லை.

இது போன்ற சம்பவங்கள் இஸ்லாத்தின் பெயரால் நடக்கும் போது முஸ்லிம்கள் அனைத்து தரப்பிலிருந்தும் தங்களின் எதிர்ப்பை காட்ட வேண்டும். இஸ்லாத்தில் வன்முறைக்கு இடமில்லை என்பதை மாற்றாருக்கும் புரிய வைக்க வேண்டும். தவறான பாதையில் செல்லும் ஒரு சில முஸ்லிம்களும் நேர்வழியில் வர இயலும்.

அடுத்து இந்தியாவின் பக்கம் வருவோம்.

கோத்ரா ரயில் எரிப்பு சம்பவத்தில் குற்றவாளிகளுக்கு தூக்கு தண்டனையும் சிலருக்கு ஆயுள் தண்டனையும் வழங்கி நீதிமன்றம் அதிரடியான தீர்ப்பை வழங்கியிருக்கிறது. இவர்கள் அனைவரும் உண்மையான குற்றவாளிகள் என்றால் இந்த தண்டனையைப் பற்றி எந்த ஆட்சேபனையும் இல்லை. தூக்கில் தொங்கவிடப்பட வேண்டியவர்களே! ஆனால் இதற்கு முன்னால் வெளிவந்த பானர்ஜியின் அறிக்கையோ இதை தற் செயலாக நடந்த விபத்தாகத்தான் கூறுகிறது. இந்த விபத்தை மோடி தனது அரசியல் லாபத்துக்காக பயன்படுத்திக் கொண்டதாகத்தாகத்தான் நம்பப்படுகிறது. இதற்கு பலமாக தடவியல் ஆதாரங்களும் இருக்கிறது.அதோடு ரயில் எரிப்புக்குப்பின் மோடியே தலைமையேற்று 2000 முஸ்லிம்களையும் அவர்களின் சொத்துக்களையும் சூறையாடிய கூட்டத்துக்கு இந்த நீதிமன்றம் என்ன தண்டனையை தரப் போகிறது? மோடியே அனைத்து உத்தரவுகளையும் போட்டதாகவும் டெஹல்கா வீடியோ ஆதாரத்தோடு தந்ததற்க்கு அரசு என்ன நடவடிக்கை எடுத்தது?

கேவலம் ஐந்து வருடம் ஆட்சிக் கட்டிலில் அமருவதற்க்காக தனது சொந்த மக்களையே சூழ்ச்சியால் கொன்று குவித்த நர மோடி நமது நாட்டு அரசியல் வரலாறில் ஒரு கரும் புள்ளி. பாதிக்கப்பட்டவர்களின் பிரார்த்தனை என்றுமே வீண் போகாது. இன்றில்லா விட்டாலும் என்றாவது ஒருநாள் மோடி இழிவுபடுத்தப்பட்டு சிறையிலடைக்கப்படுவார்.

இன்று ரயில் எரிப்பு வழக்கில் சம்பந்தப்பட்ட முஸ்லிம்கள் சந்தேகத்தின் பேரிலேயே கொண்டு செல்லப்பட்டார்கள். மோடியின் தலைமையில் உள்ள போலீஸ் எப்படி ஆட்களை பிடித்திருக்கும் என்பது சொல்லித் தெரிய வேண்டியதில்லை.

இது போன்ற ஒருதலைபட்சமான தீர்ப்பபுகள் தொடர்ந்து நீதிமன்றங்களால் வழங்கப்படுவது ஜனநாயகத்தையே கேலிக் கூத்தாக்குகிறது. நீதிமன்றங்களின் மேல் உள்ள மதிப்பும் காலப் பேர்கில் மறைந்து விடும். இது பன் முகங்களை கொண்ட நமது நாட்டுக்கு நல்லதல்ல.

ஒரு முறை நம் பிரதமர் மன் மோகன்சிங் ரியாத் வந்திருந்தபோது வழக்கத்துக்கு மாறாக பல மேம்பாலங்களிலும் சவுதியின் கொடியும், நமது நாட்டு கொடியும் ஒன்றாக பறந்து கொண்டிருந்த காட்சியை சந்தோஷத்தோடு பார்த்துக் கொண்டு வாடகை டாக்சியில் சென்றேன். டாக்ஸி ஓட்டி வந்த பாகிஸ்தானியும் கொடிகளை பார்த்து விட்டு 'பாகிஸ்தான் பிரதமர் வந்தால் இந்த அளவு முக்கியத்துவம் இவர்கள் ஏன் கொடுப்பதில்லை? காஃபிர்களுக்கு ஏன் இவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கிறார்கள்?' என்றார். நானோ 'இந்தியாவிலிருந்து பிரிந்த இரண்டு மூன்று மாநிலங்கள்தான் இன்றைய பாகிஸ்தான்.அகண்ட பாரதமும் பாகிஸ்தானும் ஒன்றாக முடியுமா?' என்றேன். உடனே அந்த ஓட்டுனர் கோபத்துடன் 'நீ முஸ்லிம்தானே! முஸ்லிம்களை தினம் தினம் கொன்றொழிக்கும் இந்தியாவை புகழ உனக்கு எப்படி மனது வருகிறது? நீங்கள் எல்லாம் பெயருக்குத்தான் முஸ்லிம்கள்.' என்றார். உடன் நான் 'அதை நாங்கள் பார்த்துக் கொள்கிறோம். முஸ்லிம் நாடு என்று சொல்லிக் கொண்டு தினமும் ஒருவரை யொருவர் நீங்கள் வெட்டிக் கொள்ளவில்லையா? நீண்ட ஜிப்பாவும், நீண்ட தாடியும், தஸ்பீஹ் மணிகளையும் உருட்டிக் கொண்டிருப்பதும மாற்று மதத்தவர் மேல் வெறுப்பை உமிழ்வதும்தான் இஸ்லாம் என்கிறீர்களா? நான் படித்த இஸ்லாம் வேறு' என்றேன். அதற்க்குள் நான் இறங்கும் இடம் வரவே அந்த மூடனிடம் பணத்தைக் கொடுத்து விட்டு நடையை கட்டினேன். நம் நாடு சில நேரங்களில் முஸ்லிம்களுக்கு துரோகம் இழைத்திருந்தாலும் எதிரி நாட்டுக்காரனிடம் நம் நாட்டைப் பற்றி இழிவாக பேசக் கூடாதல்லவா?

காக்கைக்கு தன் குஞ்சு பொன் குஞ்சு தானே!

36 comments:

Anisha Yunus said...

//கேவலம் ஐந்து வருடம் ஆட்சிக் கட்டிலில் அமருவதற்க்காக தனது சொந்த மக்களையே சூழ்ச்சியால் கொன்று குவித்த நர மோடி நமது நாட்டு அரசியல் வரலாறில் ஒரு கரும் புள்ளி. பாதிக்கப்பட்டவர்களின் பிரார்த்தனை என்றுமே வீண் போகாது. இன்றில்லா விட்டாலும் என்றாவது ஒருநாள் மோடி இழிவுபடுத்தப்பட்டு சிறையிலடைக்கப்படுவார்.//

ஆமீன், சும்ம ஆமீன். யா ரப்புல் ஆலமீன்.

இதைப் படித்ததும் இமாம் அன்வர் அவ்லகியின் பிளாகில் ஒரு தடவை அவருக்கு வந்திருந்த ஒரு கடிதத்தை பதிவிட்டிருந்தார். அது நினைவுக்கு வந்தது. குஜராத்தில் ஒரு சிறிய கிராமமுமல்லாத நகரமுமல்லாத ஒரு ஊரில் இருந்து ஒரு சகோதரர் எழுதியிருந்தார். அவர், அவரின் அக்கா, அம்மா, அப்பா இவர்களே அவரின் குடும்பம். குஜராத் கலவரத்தின் போது, அதில் எந்த வகையிலும் சம்பந்தப்படாத தன் வேலையுண்டு தானுண்டு என ஒரு குமாஸ்தாவாய் வாழ்ந்து வந்த அந்த சகோதரரின் தந்தையை போலீஸ் இழுத்துச் சென்றது. அப்பொழுது இந்த சகோதரரின் வயது 10 கூட இல்லை. அவரின் அக்காவிற்கு 16/17 வயது. முப்பதுகளில் அவர்களின் அம்மா. அம்மாவும், மகனும், மகளும் போலீஸ் ஸ்டேசனின் படியை தினம்தினம் ஏறினார்கள், அப்பாவியான கணவரை விட்டுவிட சொல்லி. ஒரு வாரம் கழித்து போலீஸ் ஒரு நிபந்தனையுடன் அந்த குடும்பத்தின் தலைவனை விட முன் வந்தது. நிபந்தனை என்ன, அந்த இரவில் வரும் 4 அரசியல்வாதிகளுக்கு அம்மாவும், மகளும் அட்ஜஸ்ட் செய்ய வேண்டும். அப்போதுதான் விடுவோம் என்று. பிராமணர்கள் அஹ்டிகம் வாழும் பகுதியில் வாழ்ந்ததும், இஸ்லாமியர்களாக இருந்ததும், ஏழைகளாகவும் உதவிக்கு ஆளில்லாதவர்களாகவும் இருந்ததே அவர்கள் செய்த மகா பாவம். தகப்பன் முக்கியமா கற்பு முக்கியமா என்று அதிகம் ஆராய்ந்து பார்க்க தெரியவில்லை அந்த தாய்க்கு. ஊமையாய் ஒத்துக் கொண்டனர். அந்த இரவில் அரசியல்வாதிகளும் குண்டர்களுமாய் நான்கு பேர் வந்தனர். அந்த இரவோடு அது முடியவில்லை. ஒரு மாதம் முழுவதும் அந்த மகனின் முன் தாயும், தமக்கையும் சீரழிக்கப்பட்டனர். அக்கம்பக்கம் வெறுமனே வேடிக்கை பார்த்து பின் அவல் மெல்ல தொடங்கியது. ஒரு மாதம் கழித்து அந்த தந்தையை குற்ருயிரும் கொலையுயிருமாய் விடுதலை செய்தது போலீஸ் ஸ்டேஷன். தந்தைக்கு எந்த விவரமும் சொல்லப்படாமல், அக்கம்பக்கத்தினரின் வெந்த புண்ணில் வேல் பாய்ச்சும் வாசகங்களை சகிக்க இயலாது வேறு ஊருக்கு சென்று விட்டனர். கடிதம் எழுதிய அந்த சகோதரர், தன் மனதை, தன் தாய், தமக்கையின் மனதை / வாழ்வை எப்படி தேற்றுவது என விம்மியிருந்தார். ஒரு குடும்பமாய் வாழ்ந்தாலும் ஒருவர் முகத்தில் ஒருவர் விழிப்பதற்கே சங்கடப்படுவதும், தினம் தினம் வாழ்க்கையை முடிவு செய்யாமல் காப்பதுமே பெரிய போர் என்று குமுரியிருந்தார். சுபஹானல்லாஹ். அந்த சகோதரரை எண்ணுகிறேன். இன்னும் எத்தனை பேரின் வாழ்வை இந்த அயோக்கியன் சீரழித்திருப்பான் என்றெண்ணுகிறேன். இன்ஷா அல்லாஹ், அல்லாஹ் மோடியின் இறுதி நிமிடங்களை உலகிற்கு சாட்சியாக்கி வைப்பான். எம் மக்களின் வாழ்வை சூறையாண்டவர்களின் கதி எதுவென அல்லாஹு த ஆலா நிச்சயம் காட்டுவான். ஹஸ்புனல்லாஹ் வ நி’அமல் வகீல்.

ஹுஸைனம்மா said...

அன்னு, எழுதியிருப்பதை வாசிக்கவே பதறுகிறது. படுபாவிகள்!!

//அல்லாஹ் மோடியின் இறுதி நிமிடங்களை உலகிற்கு சாட்சியாக்கி வைப்பான// ஆமீன்.

~முஹம்மத் ஆஷிக் citizen of world~ said...

அஸ்ஸலாமு அலைக்கும் சகோ.சுவனப்பிரியன்.

அவசியமான பதிவு. நானும் இதைப்பற்றி இன்ரோ நாளையோ எழுத எண்ணி இருந்தேன்.

சிறுபான்மை நலனுக்கான சாபாஷ் பாட்டி என்ற கிறித்தவ அமைச்சரை அநியாயமாய் அக்கிரமாய் சுட்டுக்கொன்ற காட்டுமிராண்டிகளை அவர்கள் எவராக இருந்தாலும் கண்டுபிடித்து நடுரோட்டில் மக்கள் முன்னிலையில் தூக்கிலிட வேண்டும்.

அதற்கு முன்னால் சல்மான் தசீரை கொன்ற காட்டுமிராண்டியை உடனடியாக நடுரோட்டில் வைத்து தலையை சீவ வேண்டும்.

இப்படி செய்தால் அழிவை நோக்கி சென்று கொண்டு இருக்கும் பாகிஸ்தான் மீளும். இல்லையேல் அது ஒரு காட்டுமிராண்டிகளின் தேசம் என்றுதான் இனிமேல் அழைப்பேன்.

அது ஒரு இஸ்லாமிய நாடு இல்லை என்று ஆகி... அறுபத்து மூன்றேகால் ஆண்டுகளுக்கும் மேலாகி விட்டது.

தான் சகோதரர்களின் நிலையை கண்டுகொள்ளாமல், தான் மட்டும் பிரதமர் பதிவை அடைந்தால் போதும் என்று "ஆர்.எஸ்.எஸ்.--காங்கிரஸ் கூட்டு களவாணித்தன 'தனிநாடு' சதி சூழ்ச்சியை" ஏற்றுக்கொண்டவனால் இஸ்லாமிய அரசை என்றுமே நிறுவ இயலவில்லை.

அதை எதிர்க்காத அந்நாட்டு பெரும்பாண்மை மக்களின் பச்சை துரோகம் என்றுமே அவர்களை இஸ்லாமிய அரசை நிறுவவும் விட வில்லை.

நம்மைப்பற்றிய அக்கறை இன்றி இங்கிருந்து சென்ற இஸ்லாமிய சுயநலவாதிகளுக்கும் என்றுமே ஒரு இஸ்லாமிய நாட்டில் வாழ கொடுத்து வைக்க வில்லை.

அல்ஹம்துலில்லாஹ்... இன்று அவர்களை விட நாம் இஸ்லாமிய கருத்துக்களை மிகவும் தைரியமாக கூறி வருகிறோம். அங்கே அப்படி கூறிய சல்மான தசீர் கொல்லப்படுகிறார்.

அதை எதிர்த்த பாக்.சிறுபாண்மை நல அமைச்சர் கொல்லப்படுகிறார்.

ஆனால்,நம்மால் தைரியமாக நடுரோட்டில் மேடை போட்டு கொலைகாரன் மோடியின் படத்தை செருப்பால் அடித்து... அரசை, மோடியை கைது செய்து விசாரித்து தூக்கில் இடச்சொல்லி கோஷம்போட முடிகிறது.

முஸ்லிம்கள் எங்கே சுதந்திரமான முஸ்லிம்களாக உள்ளனர்? (பாஜக, சிவசேனா ஆளும் மாநிலங்கள் தவிர) இந்தியாவிலா? பாகிஸ்தானிலா? இதை பாகிஸ்தாநிகளும் உணர வேண்டும்.

காவி நிற மற்றும் பச்சை நிற காட்டுமிராண்டிகள் ஒழிக.

~முஹம்மத் ஆஷிக் citizen of world~ said...

தொடர்ச்சி....

இந்தியாவிலும்...
தம்மை ஒரு மதச்சார்பற்ற அரசு என்று சொல்லிகொள்பவர்கள்,
குஜராதில் இனப்படுகொலை செய்த காட்டுமிராண்டிகளை தூக்கில் இட வேண்டும். இதற்கு பல ஆதாரங்கள் இருந்தும் இன்னும் ஏதும் செய்யாமல் இருந்தால், பாகிஸ்தானை பின்பற்றி இந்தியாவும் அழிவுப்பாதையை நோக்கி முன்னேறுகிறது என சொல்லலாம்.

ஏற்கனவே மூவாயிரம் சீக்கியர்களை கொன்ற கொலைகார காட்டுமிராண்டிகள் மீது நன்கு அறிந்தும், ஆறு ஆண்டுகள் ஆட்சி புரிந்த பாஜக எந்த நடவடிக்கையும் எடுக்க வில்லை. அதற்கு காங்கிரசின் பிரதியுபகாரம்தானோ என்று ஐயுற வேண்டியுள்ளது.

இன்ஷாஅல்லாஹ்...கோத்ரா வழக்கு நிச்சயம் சுப்ரீம் கோர்ட்டு போகும். அங்கே, பானர்ஜி கமிஷன் அடிப்படையில் ரயில் பெட்டிக்கு உள்ளேயிருந்து விமானத்துக்கு நிரப்பும் ஒயிட் பெட்ரோல் மூலம் தீவைத்து அப்பாவி கரசெவகர்களை கொன்ற சதிகார காவி பயங்கரவாதிகளுக்கு இன்ஷாஅல்லாஹ் நிச்சயம் தூக்கு கிடைக்கும். தர்மம் மட்டுமே வெல்ல இறைவனிடம் தொடர்ந்து துவா செய்வோம்.

அதேநேரம், கோத்ரா வழக்கில் இத்தனை வருடம் விசாரனைக்கைதிகளாக சிறையில் வைத்திருந்துவிட்டு இப்போது 'நிரபராதிகள்' என்று (அல்ஹ்மதுலில்லாஹ்) அறிவித்து... ஆனால், எந்தவித நஷ்ட ஈடும் இன்றி விடுவித்தது என்ன விதத்தில் நீதி? இதற்குப்பெயரா நீதி மன்றம்? இவர்களுக்கு நஷ்ட ஈடு ஒன்றும் தரப்படாதது படு பயங்கர அநீதி அல்லவா? எட்டாண்டு சிறை தண்டனைக்கு... இழந்த இளமைக்கு... அடைந்த துயரத்துக்கு... இதனால் அவதியுற்ற இவர்களின் குடும்பத்தாருக்கு... செலவழித்த பணத்துக்கு... நேர்ந்த தொல்லைகளுக்கு... கிடைத்த அவப்பெயருக்கு எல்லாம் என்ன பரிகாரம்? நீதி மன்றத்தில் என்ன பரிகாரம்?

மூவாயிரம் முஸ்லிம்களை கொன்ற குஜராத் சங்பரிவார காட்டுமிராண்டிகளை... அவர்கள் அமைச்சர்களாக அல்லது முதலமைச்சராக இருந்தாலும் நடுரோட்டில் மக்கள் முன்னிலையில் தூக்கிலிடப்பட வேண்டும். அதுதான் நீதி.

இதற்கு முன் சீக்கியர்களுக்கும் இதேபோன்ற நீதி வழங்கப்பட வேண்டும். இந்த நீதிக்காக நேற்று அமெரிக்க கோர்ட்டு காங்கிரசிற்கு சம்மன் அனுப்பும் நிலை எல்லாம் நம் நாட்டின் மதச்சார்பின்மைக்கு ஆக மகா கேவலம்... இது நம் நாட்டில் சிறுபான்மையினருக்கு நீதி எப்படி இருக்கிறது என்று தெளிவாக உலகிற்கு காட்டுகிறது.


இப்படி சிறுபான்மையினருக்கு நீதி செய்தால் அழிவை நோக்கி சென்று கொண்டு இருக்கும் நம் நாடும் மீளும். இல்லையேல் இதுவும் ஒரு காட்டுமிராண்டிகளின் தேசம் என்றுதான் இனிமேல் உலகத்தோர் அழைப்பார்கள்.

சகோ.அன்னு அவர்களின் பின்னூட்டம் நெஞ்சை உலுக்குகிறது.

//// காக்கைக்கு தன் குஞ்சு பொன் குஞ்சு தானே!////---கொலைகார காட்டுமிராண்டி அநீதி குஞ்சாக இருந்தாலுமா?

இப்போது இதை நீங்கள் ஒருமுறை பரிசீலிக்க வேண்டியுள்ளது சகோ.சுவனப்பிரியன்.

வானம் said...

இந்த படுகொலையைச்செய்தது தெக்ரித்-இ தாலிபான் என அந்த அமைப்பே கூறியபின்னும் இஸ்ரேலாக இருக்கலாம் என எழுதுகிறீர்கள்.
அது என்னங்க இஸ்ரேலாக இருந்தால் தீவிர நடவடிக்கை எடுக்கவேண்டும். இஸ்லாமியனாக இருந்தால் இஸ்லாத்தை பற்றி விளக்கவேண்டும்.
மோடி,இஸ்ரேல்,தலிபான் இவர்களின் செயலுக்கும் உங்கள் வாதங்களுக்கும் பெரிய வேறுபாடு இருப்பதாக கருதமுடியவில்லை.
சக மனிதனை மனிதனாக கருதுங்கள்.மதத்தை வைத்து மனிதர்களை பிரிக்கும் கொடுஞ்செயலுக்கு துணைபோகாதீர்கள். மதமெனும் இருட்டறையிலிருந்து வெளிவந்து உலகத்தைப்பாருங்கள். அழகாகவே இருக்கும்

suvanappiriyan said...

சகோ. அன்னு, சகோ.ஹூசைனம்மா இருவரின் கருத்துக்கும் வருகைக்கும் நன்றி.

சகோ. அன்னு குறிப்பிட்டிருக்கும் நிகழ்ச்சியைப் படித்து மனது மிகுந்த வருத்தமுற்றது. படிக்கும் நமக்கே இந்த நிலை என்றால் அந்த குடும்பத்தின் நிலையையும் அந்த பெண்களின் சிரமத்தையும் வடிக்க வார்த்தைகள் இல்லை. இன்றில்லா விட்டாலும் என்றாவது ஒருநாள் இந்த கயவர்கள் தண்டிக்கப்படுவார்கள். இந்த உலகில் தப்பித்து விட்டாலும் மறுமையில் இதற்கான பலனை கண்டிப்பாக கொடியவர்கள் அனுபவிப்பார்கள்.

suvanappiriyan said...

சகோ. ஆஷிக்!

வஅலைக்கும் சலாம்!

உங்களின் நீண்ட பின்னூட்டத்திற்கு முதற்கண் நன்றி! கையாலாத அரசுகளைப் பற்றிய உங்களின் ஆதங்கங்களை அப்படியே வழிமொழிகிறேன். பானர்ஜியின் அறிக்கைக்கு இவர்கள் எந்த முக்கியத்துவமும் கொடுக்கவில்லை. காரணம் முஸ்லிம்களை நிரபராதிகளாக அந்த அறிக்கை வெளிச்சம் போட்டு காட்டுகிறது. நேரம் கிடைக்கும் போது அவற்றைப் பற்றியும் பின்னூட்டங்களில் தெரிவிக்கிறேன்.

//// காக்கைக்கு தன் குஞ்சு பொன் குஞ்சு தானே!////---கொலைகார காட்டுமிராண்டி அநீதி குஞ்சாக இருந்தாலுமா?

இப்போது இதை நீங்கள் ஒருமுறை பரிசீலிக்க வேண்டியுள்ளது சகோ.சுவனப்பிரியன்.//

உங்களின் ஆதங்கம் எனக்கு புரிகிறது. சங்பரிவாரத்தோடு தொடர்புடையவர்கள் மொத்தத்தில் மக்கள் தொகையில் 20 சதம் கூட தேறமாட்டார்கள். இந்து நண்பர்களில் நடுநிலையோடு சிந்திப்பவர்கள் பெரும்பான்மையோர். மீதம் உள்ளவர்களையும் நம்முடைய பிரச்சாரத்தினால் நேர்வழிக்கு கொண்டுவர வேண்டும் இந்த தலையாய பணி நம்முன் நிற்கிறது. கல்வியிலும் அரசு வேலை வாய்ப்பிலும் உரிய பிரதிநிதித்துவத்தை கோட்டை விட்டது நம் முன்னோர்கள் செய்த தவறு. அதன் பலனை இப்போது நாம் அனுபவிக்கிறோம். இந்த நிலை மாற வேண்டும். இன்ஷா அல்லாஹ் கண்டிப்பாக மாறும்.

Anonymous said...

//இதைப் படித்ததும் இமாம் அன்வர் அவ்லகியின் பிளாகில் ஒரு தடவை அவருக்கு வந்திருந்த ஒரு கடிதத்தை பதிவிட்டிருந்தார். அது நினைவுக்கு வந்தது. குஜராத்தில் ஒரு சிறிய கிராமமுமல்லாத நகரமுமல்லாத ஒரு ஊரில் இருந்து ஒரு சகோதரர் எழுதியிருந்தார். //

Please contact Teesta Seetalvad or any other NGO of her ilk.

Or contact National Commision for Woman's Girija Vyas or National Human Rights Commision.

There are more than one forum to handle such atrocity like this.

If this allegation is true it is surprising Muslim brethren are mute except for writing in blogs.

It is hard to believe and seem to a fake story created to whip up passion.

Anonymous said...

//ஆனால் இதற்கு முன்னால் வெளிவந்த பானர்ஜியின் அறிக்கையோ இதை தற் செயலாக நடந்த விபத்தாகத்தான் கூறுகிறது.//

http://www.rediff.com/news/slide-show/slide-show-1-exclusive-godhra-case-investigator-speaks/20110228.htm

One of the passengers, who is quoted as a witness in Justice Banerjee's report, claimed he saw karsevaks cooking inside the compartment on a stove. He actually got off much before Godhra. I have taken the statements of about 200 witnesses of all types. Not one has said that there was enough space inside the compartment to cook. The train was over-crowded.

Almost three-times more-than-capacity passengers were inside the compartment, making it difficult to even walk. I have met enough people who are independent witnesses and not karsevaks. I have enough statements of educated people who were travelling in the train.

I want to ask a few questions to people who debunk our theory. If it was an accident, even then you need inflammable material to burn a train, right? If it was a stove with kerosene that triggered the fire, please tell me how much kerosene can one stove carry? It can store just about a litre of liquid.

Forensic science says that to burn a train compartment, a minimum of 60 litres of inflammable material is required. A lot of the materials used to build Indian train coaches are fire-resistant, so just 1 litre of kerosene could not have burned S-6.

Anonymous said...

//இஸ்லாத்தில் வன்முறைக்கு இடமில்லை என்பதை மாற்றாருக்கும் புரிய வைக்க வேண்டும்.//

First help your Muslim brethren understand that they should divide themselves as Shia and Sunni and kill each other.

குடுகுடுப்பை said...

இன்ஷாஅல்லாஹ்...கோத்ரா வழக்கு நிச்சயம் சுப்ரீம் கோர்ட்டு போகும். அங்கே, பானர்ஜி கமிஷன் அடிப்படையில் ரயில் பெட்டிக்கு உள்ளேயிருந்து விமானத்துக்கு நிரப்பும் ஒயிட் பெட்ரோல் மூலம் தீவைத்து அப்பாவி கரசெவகர்களை கொன்ற சதிகார காவி பயங்கரவாதிகளுக்கு இன்ஷாஅல்லாஹ் நிச்சயம் தூக்கு கிடைக்கும். தர்மம் மட்டுமே வெல்ல இறைவனிடம் தொடர்ந்து துவா செய்வோம்.//

இது தானாக எரிந்தது/காவிகள் செய்தது என்று நீங்கள் விளக்கும் சொல்லும் வரை குஜராத் கலவரம் முற்றிலும் பச்சை பயங்கரவாதிகளால் நடத்தப்பட்டது என்று சொல்லவும் ஆள் இருக்கும். கோத்ரா ரயில் தானாக எரிந்தது உண்மையென்றால், குஜராத் கலவரமும் தானாக நடந்தது என்று சொல்லலாமா? மனித உயிர் ஒன்றுதான் என்பதை முதலில் உணருங்கள்.

suvanappiriyan said...

On 22rd February 2011, the session’s court gave its verdict on Godhra train burning of Sabarmati Express. It accepted the Gujarat state’s theory that the local Muslims had hatched a conspiracy to burn S-6 Coach of Sabaramati Express. At the same time of the 94 people being tried for this crime 63 were exonerated of the crime and 31 were held to be the guilty of planning to burn the Kar Sevaks. This conspiracy theory was initially put forward by Gujarat Chief Minister Narendra Modi, who within half hour of the burning of the train came to this conclusion. He had gone on to say that the conspiracy has been hatched by international terrorism, in collusion with the local Muslims through Pakistan’s ISI. At that time the Godhra collector Jayanti Ravi had ruled out the conspiracy theory.



In such ghastly Railway accidents it is mandatory to investigate them but the Railway Ministry sat quiet, as the then Raliway Minister Niteesh Kumar was part of BJP led NDA Government. This conspiracy theory was given wide currency and was used as a sort of justification for the post Godhra anti Muslim pogrom. The NDA Prime Minister Atal Bihari Vajpayee went on to say, Gujarat happened because Godhra took place. UP Chief Minister Mayawati, who was then allying with BJP, campaigned for Modi and in response to the question about Gujarat carnage, said that there was Godhra also! Later with change of Government Lalu Prasad Yadav who became Railways minister in UPA Government, initiated the much delayed obligation to investigate every major railway accident, and instituted Bannerjee Commission. This Commission opined that there is no evidence of a conspiracy by local Muslims.



To prove that it was a conspiracy the Gujarat police investigated the case in a manner in which many witnesses were made to confess of selling 140 liters petrol, carrying the same, cutting open the vestibule between S6 and S7, pouring petrol in the S6 coach and then burning it by throwing the fire balls into the train. The present judgment accepts the conspiracy theory but finds no evidence at all against the culprit-in-Chief, the chief conspirator as per the Gujarat Government, Haji Umarji and also no evidence against other major accused! The whole judgment seems to fall flat on this ground.

-Ram punyani

suvanappiriyan said...

The mainstay of conspiracy theory has been the selling of loose petrol, throwing burning fire balls into the train, for all this there is no eye witness, and even those who initially confessed to having sold petrol did not stand the scrutiny and one of them said that he was paid Rs 50000, like the other person who is saying that they sold loose petrol, by Noel Parmar the Chief investigating officer. As such there have been many loose ends in the conspiracy theory. The point that Muslims wanted to take revenge by burning Kar Sevaks does not stand the scrutiny of logic due to multiple reasons. To begin with the Muslims and also the state officials did not know that Sabarmati Express is carrying Kar Sevaks. The only people who knew that Kar Sevaks are travelling in the train were VHP people. Secondly; the train that day was late by close to five hours; normally it comes to Godhra in the midnight. In case of planned conspiracy from outside it is difficult to plan for such circumstances. Thirdly; as vestibule was being cut open, what was being done by the Railway protection force? Cutting-open the vestibule and entering from that is not an easy job. Fourthly, if windows and doors were closed how can burning fireballs enter the train? It was initially propagated that train was stopped by Muslims, but investigations show that the first stoppage of train was due to chain pulling by kar sevaks and the second due to technical failure. There is a general impression that train was locked from outside. The very simple fact that train coach cannot be locked from outside was forgotten while propagating this falsehood.

So as the matters stand there are enough grounds to doubt the theory that it was a conspiracy by Muslims. Another dimension to the whole incident has been added by the latest issue of Tehelka (March 5, 2011). Ashsih Khetan in this path breaking investigation (http://www.tehelka.com/story_main48.asp?filename=Ne050311CoverStory.asp) shows that there is no substance at all in the theory that it was a conspiracy by Muslims. In a meticulously argued expose he shows that this whole theory is not only fallacious, it distracts attention from the truth of another conspiracy which was going on. As per him it was a conspiracy yes, but not by Muslims. He points out that:

* It’s important to recall that, in its 2007 sting investigation (The Truth about Gujarat 2002), TEHELKA had exposed that the nine BJP men who were cited as eyewitnesses were, in fact, not even present at the scene of crime. They had been asked to give false testimonies by the police to further the Modi government’s communal and political agenda, and they had gone along to “serve the cause of Hindutva”.

* Ajay Baria, a Hindu vendor, forced into the plot; saw it all, Judge Patel has relied hugely on Baria’s account. But why would Muslim conspirators pick a Hindu man at the last minute to help load the petrol and burn the train? TEHELKA tried to track him but failed. His mother said he had been coerced into becoming a police witness and lived under constant police surveillance.


* Two petrol pump attendants who claim they sold 140 liters of fuel to some Muslims on 26 Feb, Ranjitsinh and Pratapsinh Patel had first told the police that they had not sold any loose petrol that crucial night. In a shocking turnaround, six months later, they changed their version. However, TEHELKA caught Ranjitsinh admitting on camera that he and Pratap had been bribed Rs. 50,000 by police officer Noel Parmar to do that. He also tutored them to identify particular Muslims in court as being the buyers

-Ram punyani

suvanappiriyan said...

* Jabir Bahera, a petty criminal, first named Maulvi Umarji as a mastermind. Bahera claimed it was Umarji who picked coach S-6 as the target, but also said Umarji was not present at any conspiracy meetings. He later retracted everything

* Sikandar Siddique, another petty criminal, had said Maulvi Punjabi had incited the mob. But Punjabi was not even in the country that day

Khetan’s path-breaking investigation makes it clear that the real conspiracy is not from the side of Muslims. Truth is many a times stranger than fiction. We have been made to believe from last many years that it is Muslims who are responsible for Malegaon, Samjhauta, Ajmer and many such blasts. Those writers and social activists who doubted this police-Hindutva version of the cause of terror were totally ignored by the investigating authorities and by the big media. Their investigations did show the involvement of Hindutva elements. These writers and social activists were criticized and intimidated for being anti Hindu and anti nationals. Now as the matters stand today, thanks to Hemant Karkare’s investigations and later Swami Aseemanand’s confessions, truth is that in all these cases of acts of terror, Hindutva groups were involved. Now by piecing together the observations from the one of Godhra Collector Jayanti Ravi to the Sting operations by Tehelka Khetan points out “That there was a conspiracy afoot in Gujarat those years is beyond doubt. But as this story shows, it was a conspiracy of a different kind. It was a conspiracy designed to rent the fabric of this country: a conspiracy by State machinery to blacken one community’s name. And declare them the enemy.”



In this case the nature of shoddy, biased investigation done by police is very obvious. We do need an impartial investigation; a CBI inquiry into the whole thing is called for. We are living in strange times. The sectarianism, the politics of religious identity has overtaken the better of us. What is aggressively propagated is far from truth, and the truth remains submerged in the din of hysteria created by politics in the name of religion. Be it terrorism, be it communal violence, we need to invoke our humane, rational faculties, honesty and professionalism, overcome our biases, investigate the acts of crime properly and punish the guilty, irrespective of their religion. So many innocents have lost their lives, 59 Kar Sevaks, over 2000 innocent Muslims! We do need to reject the politics of communalism and try to follow the path of justice, the path of peace and communal amity as shown by the greatest Gujarati-Indian of all the times, Mohandas Karamchand Gandhi.

-Ram punyani

suvanappiriyan said...

வானம்!

//இந்த படுகொலையைச்செய்தது தெக்ரித்-இ தாலிபான் என அந்த அமைப்பே கூறியபின்னும்//

முதல் கட்ட விசாரணையில் அரசின் அறிக்கையைத்தான் நான் பிரதிபலித்தேன். அது என் கருத்து அல்ல. குற்றத்தை செய்தவர்கள் யாராயிருந்தாலும் அதிக பட்ச தண்டனை கொடுக்க வேண்டும் அப்பொழுதுதான் குற்றங்கள் குறையும் என்பதுதான் எனது நிலை.

//மதமெனும் இருட்டறையிலிருந்து வெளிவந்து உலகத்தைப்பாருங்கள். அழகாகவே இருக்கும்//

இஸ்லாம் என்ற மார்க்கத்தின் வாயிலாக நான் உலகை மகிழ்வோடு பார்க்கிறேன். மற்றவர்களையும் இந்த மகிழ்ச்சியில் பங்கு பெற அழைக்கிறேன்.

hindu anonymous said...

Naanum Hinduism enra nalla mathathin paarvaiyil ulaginai makilchiyudan paarkiren. Neengalum athe pol ungal theeviravaathathai vittu vittu nallavarkal aaha vendum. Unkalayum ien mathathukku alaikkiren. Shivaaya namaha. Nanri.

Anonymous said...

**
//இஸ்லாத்தில் வன்முறைக்கு இடமில்லை என்பதை மாற்றாருக்கும் புரிய வைக்க வேண்டும்.//

First help your Muslim brethren understand that they should not divide themselves as Shia and Sunni and kill each other.**

~முஹம்மத் ஆஷிக் citizen of world~ said...

@ அனானிகள்...

எரியும் ரயில் பெட்டியின் படத்தை பார்த்தாலே தெரியுமே..! எரிபொருள் உள்ளே இருந்திருக்குமா அல்லது ஓடும் ரயிலில் வெளியில் இருந்து ஓடிக்கொண்டே 11 பேரால் தெளிக்கப்பட்டிருக்குமா என்று..!

அப்படித்தான் இந்திருக்குமேயானால், (அப்போது உள்ளே இருந்த, இறந்த அந்த அப்பாவி கரசேவயாளர்கள் அனைவருக்குமே ரயில் பெட்டி ஜன்னல் கண்ணாடிகளை உடனே எப்படி மூடுவது என்ற 'அதிநவீன தொழில்நுட்பம்(?)' புரியவில்லை என்றே நம்புவோம்... நம்புவோம்... நம்பித்தொலைவோம்...?!). சரி...

வெளியிலிருந்து தெளிக்கப்பட்ட எரிபொருள் ஓடும் ரயில் பெட்டிக்கு உள்ளே சிறிதும் வெளியே நிறையவும் சிதறி, பெட்டிக்கு வெளியே இருந்து பற்ற வைக்கப்பட்டதால் அப்பெட்டியின் ஜன்னலுக்கு கீழேயும் நிறைய எறிந்து கொண்டு இருக்கும்.

ஆனால், ரயில் பெட்டியின் வெளியே- ஜன்னலுக்கு கீழே- எரிபொருள் தெளிக்கப்பட்டவாறோ... அது எரிந்தமையோ என எந்த ஒரு சுவடையுமே காணோமே..!

எரிபொருள் உள்ளே இருந்திருந்தால் மட்டுமே ரயில் பெட்டி இப்படி எரிந்து கொண்டிருக்க சாத்தியம் என்கிறேன் நான். ரயில் பெட்டி உள்ளே எலும்புக்கூடாக எரிந்தும் வெளியே ஜம்பமாக சிகப்பு பெயிண்ட் கூட கருகாமலும் எறிவது எப்படி..? எப்படி..? எப்படி..?

இதற்கெல்லாம் மூன்று கமிஷன்கள் தேவையா? ஒரு உண்மையை மறைத்து திரிக்கத்தான் திரும்ப திரும்ப பொய் சொல்ல வேண்டி வரும்...

மேலும்...இங்கே படியுங்கள்தொடர்ந்து...

~முஹம்மத் ஆஷிக் citizen of world~ said...

அனானிகளா... அப்புறம்...

உலகத்துக்கே நன்கு தெரிந்த விஷயமான ஒன்றை...'பாபர் மசூதியை இடித்தவர் யார்' என்று துப்பறிந்து கண்டுபிடிக்கவே ஒரு கமிஷனை போட்ட 'மகா பெரிய படா அயோக்கியர்கள்' ஆயிற்றே நாம்..! (கோத்ராவுக்கு கமிஷன் போட மாட்டோமா என்ன?)

பலகோடிரூபாய் செலவில், அந்த லிபரானுக்கும் 13 வருஷம் ஆயிற்றே உண்மையை கண்டுபிடிக்க...!?!?! 'உண்மையை கண்டுபிடிக்க' என பெருமையா வேறு நாம் சொல்லிக்கனுமா? ச்சீ... தலையெழுத்துடா...!

அந்த கமிஷன் அறிக்கையையும் கூட 'ஆதாரமற்ற அவதூறு' என்று நாடாளுமன்ற கழிவறையில் கிடப்பில் தூக்கி வீசி எறிந்து விட்டு... "உன் பயங்கரவாதத்தை நான் கண்டுக்க மாட்டேன்... என் பயங்கரவாதத்தை நீ கண்டுக்காதே..." என்று மீண்டும் பாராளுமன்றம் செல்லவேண்டி ஓட்டுப்பறிக்க வரும் அதே அரசியல்(பயங்கர)வாதிகளுக்கு மீண்டும் ஓட்டளிக்கிறோம் நாம்... ச்சீ... த்தூ... வெக்கமாயில்லை நமக்கு..!

இதற்குத்தான் என் பிளாக்கில் உங்களைப்போன்ற அனானிகளை எல்லாம் பின்னூட்ட அனுமதிப்பதில்லை..!

~முஹம்மத் ஆஷிக் citizen of world~ said...

@ சகோ.கு.கு.பை,

அமெரிக்காவில் இருக்கும் தங்களுக்கு ஆங்கிலம் படிக்கத்தெரியும் என்றே நம்புகிறேன்.

சகோ.சுவனப்பிரியன் அவர்கள் எடுத்துப்போட்ட (Mr.Ram punyani) பின்னூட்டங்களுக்கு பதில் சொல்வீர்களா அல்லது...


மிக்க நன்றி சகோ.சுவனப்பிரியன்.

~முஹம்மத் ஆஷிக் citizen of world~ said...

////////////////////////////
Please contact Teesta Seetalvad or any other NGO of her ilk.

Or contact National Commision for Woman's Girija Vyas or National Human Rights Commision.

There are more than one forum to handle such atrocity like this.
//////////////////////////////

அடப்பாவமே..!
அப்போ இந்த போலிஸ்... கோர்ட்டு... எல்லாம் என்னத்துக்குங்க இருக்காங்க அனானி...????????
பதில் சொல்லுங்க...அனானி.

'நம் நாட்டு சட்டம் ஒழுங்கை அமல் படுத்த என்றே அரசு மூலம் இவர்களுக்கு தண்டமாய் நாம் சம்பளம் கொடுத்துக்கொண்டு இருக்கிறோம்' என்று சொல்ல வருகிறீர்களா?

போலிஸ்...கோர்ட்...எல்லாத்தையும் தூக்கி எறிஞ்சிட்டு... நீங்கள் சொன்னவர்களையே இனி நம் நாட்டில் சட்டம் ஒழுங்கை பாதுக்காக்க அரசுப்பூர்வமாய் அதிகாரப்பூர்வமாய் நியமித்து விடுவோம் என்று சொல்ல வருகிறீர்களா அனானி...?

அனானியாய் வேஷம் போட்டால் பொய் அமேசான் நதியாய் பெருக்கெடுத்து ஓடுகிறதே...!!!!!

suvanappiriyan said...

அனானி!

//First help your Muslim brethren understand that they should not divide themselves as Shia and Sunni and kill each other.**//

“இஸ்லாத்தில் வன்முறைக்கு இடமில்லை என்பதை மாற்றாருக்கும்”

'மாற்றாருக்கும்' என்ற வார்த்தை முஸ்லிமகள்,மாற்றார் என்ற இருவரையும் குறிக்கும் என்ற சாதாரண விஷயத்தை கூட நான் விளக்க வேண்டுமா? முகமது நபிக்கு பிறகு வாரிசாக அவர் மருமகன்தான் வர வேண்டும் என்பது ஷியாக்களின் கொள்கை. மக்கள் ஆதரவுதான் முக்கியம், இங்கு வாரிசை கொண்டு வர முடியாது எனபது சன்னிகளின் வாதம். கடைசியில் அலி அவர்கள் உண்மையை உணர்ந்து ஆட்சித் தலைவராக அபுபக்கரை ஏற்றுக் கொண்டு விட்டார். ஆனால் அவரது அதரவாளர்கள் இதை ஒத்துக் கொள்ளவில்லை. எகிப்திலிருந்து வந்த சில இஸ்லாமிய எதிரிகள் இதைப் பயன்படுத்தி நிறைய வதந்திகளை பரப்பினார்கள். அது இன்று வரை பல உயிரிழப்புகளுக்கு காரணமாகி விட்டது. இது தவறு என்று பிரச்சாரத்தின் மூலம் சொல்லி வருகிறோம். பலர் உணர்ந்து கொள்கிறார்கள்.

suvanappiriyan said...

குடுகுடுப்பை!

//கோத்ரா ரயில் தானாக எரிந்தது உண்மையென்றால், குஜராத் கலவரமும் தானாக நடந்தது என்று சொல்லலாமா? மனித உயிர் ஒன்றுதான் என்பதை முதலில் உணருங்கள்.//

கோத்ரா ரயில் எரிப்பு விபத்தா, முஸ்லிம்கள் எரித்ததா, அல்லது நரேந்திர மோடி முன்பே திட்டமிட்டு நடத்திய சதியா என்பதை இனி வரும் காலங்களில் விசாரணையில் தெரிய வரும். ராம் புன்யானியின் அறிக்கையையும் ஆங்கிலத்தில் கொடுத்திருக்கிறேன் படித்துப் பாருங்கள். ஆனால் அதன் பிறகு முஸ்லிம்களை நோக்கி நடத்தப்பட்ட கொலையும் கொள்ளையும் நரேந்திர மோடி தலைமையில் நடந்ததற்க்கான வீடியோ ஆதாரமே டெஹல்கா சமர்ப்பித்தது. இதற்கு அரசு தரப்பிலிருந்து என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது? இதை எதிர்த்து எத்தனை பேர் குரல் கொடுத்தீர்கள்?

இதில் மனித உயிர் ஒன்றுதான் என்று உபதேசம் வேறு!

குடுகுடுப்பை said...

ராம் புணியானி, லல்லு, 911 அமெரிக்காவின் உள்ளடி வேலை, கார்க்கரே கொன்றது இந்து பயங்கரவாதிகள் இன்னும் எப்படி வேண்டுமானாலும் அறிக்கை விடலாம். அவைகளை நம்புபவர்களும் இருக்கலாம்.அதற்கு மேல் சொல்வதற்கு ஒன்றுமில்லை.

குடுகுடுப்பை said...

ஆஷிக் அவர்களே
அமெரிக்காவில் இருந்தால் ஆங்கிலம் தெரியவேண்டும் என்று நினைப்பது உங்களின் அறியாமையைக்காட்டுகிறது, எனக்கு ஆங்கிலம் தெரியாது.நீங்களே மொழி பெயர்த்து விடுங்கள்.

அறியாமை என்ற வார்த்தை தாங்கள் அதிகம் பயன்படுத்தும் வார்த்தை, நான் பயன்படுத்த விரும்பாத ஒன்று.எனது அறியாமையால் இந்தமுறை உபயோகம் செய்துவிட்டேன்:)

குடுகுடுப்பை said...

இதில் மனித உயிர் ஒன்றுதான் என்று உபதேசம் வேறு//

உங்களுக்கு உபதேசம் செய்வது என் வேலையல்ல.பின்னூட்டங்கள், வாசிப்பவர்களுக்காக இடுவது.இனி பின்னூட்டம் இடுவதை தவிர்த்துகொள்கிறேன்.

Issadeen Rilwan said...

கொல்லப்பட்டவர் எந்த ம்தத்தைச் சார்ந்தவர் என்பதல்ல பிரச்சினை, இஸ்லாமிய மார்க்கத்தின் பெயரால் வன்முறையை தூண்டுவது தான் கவனத்தில் கொள்ளப்பட வேண்டியது.

suvanappiriyan said...

குடுகுடுப்பை!


//உங்களுக்கு உபதேசம் செய்வது என் வேலையல்ல.பின்னூட்டங்கள், வாசிப்பவர்களுக்காக இடுவது.இனி பின்னூட்டம் இடுவதை தவிர்த்துகொள்கிறேன்.//

அனைத்து உயிர்களையும் சமமாக பாவிக்க சொன்ன நீங்களே ஆதாரபூர்வமான குஜராத் கலவரத்தை மோடி செய்யவில்லை என்ற பாணியில் கருத்து சொன்னதாலேயே நான் அவ்வாறு சொல்ல நேர்ந்தது. உபதேசம் யாரும் யாருக்கும் செய்யலாம். ஒரு தமிழன் இன்னொரு தமிழனுக்கு உபதேசம் அவசியம் செய்ய வேண்டும். நான் அதை தவறாக எடுத்துக் கொள்ளவில்லை. தொடர்ந்து உங்கள் கருத்தை சொல்லி வாருங்கள்.

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!

suvanappiriyan said...

ரிள்வான்!

//கொல்லப்பட்டவர் எந்த ம்தத்தைச் சார்ந்தவர் என்பதல்ல பிரச்சினை, இஸ்லாமிய மார்க்கத்தின் பெயரால் வன்முறையை தூண்டுவது தான் கவனத்தில் கொள்ளப்பட வேண்டியது.//

இதை யாருக்கு பதிலாக சொல்கிறீர்கள் என்று விளக்கவில்லை. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!

~முஹம்மத் ஆஷிக் citizen of world~ said...

@ சகோ.கு.கு.பை.
said...//எனக்கு ஆங்கிலம் தெரியாது//
:)
:))
:)))
:))))
:))))))))))))))))))))))))))))))

குடுகுடுப்பை said...

அனைத்து உயிர்களையும் சமமாக பாவிக்க சொன்ன நீங்களே ஆதாரபூர்வமான குஜராத் கலவரத்தை மோடி செய்யவில்லை என்ற பாணியில் கருத்து சொன்னதாலேயே நான் அவ்வாறு சொல்ல நேர்ந்தது. //

கோத்ரா படுகொலையை மோடி செய்தது என்று சொல்வது நீங்கள்,அதற்கு சில ஓட்டுப்பொறுக்கி ஜல்லிகள்.நான் எங்கேயும் குஜராத் கலவரத்தில் மோடிக்கு வக்காலத்து வாங்கவில்லை, ஆனால் நீங்கள் கோத்ரா முஸ்லீம்களால் நடத்தப்பட்டதல்ல என நிறுவ முயல்கிறீர்கள்.அதை நடுநிலையோடு படிப்பவர்களுக்கு புரியும். முற்றும்

The Times of India said...

Hindus were burnt in Godhra before: Verdict

AHMEDABAD: The verdict, which gave death to 11 and life terms to 20 in the Godhra carnage case on Tuesday, substantiates the motive of the attack and the conspiracy partly by falling back on Godhra's history of communal riots.

The target of the mob in Godhra on February 27, 2002 was only kar sevaks returning from Ayodhya and not other Hindus travelling on the Sabarmati Express, says the 826-page judgment. Fiftynine passengers of S-6 coach, mainly kar sevaks, were killed that day sparking off riots across the state.

Although judge P R Patel does not pin-point the motive of the attack, he notes, "Godhra is known for its past history of communal riots...For Godhra, this is not the first incident of burning alive innocent persons belonging to Hindu community. Earlier, during many riot incidents in Godhra, persons were burnt alive and shops/houses etc came to be destroyed by fire." He cites 10 incidents of communal riots in Godhra since 1965 and noted that several riots broke out during the rath yatra in 1990 and 1992.

The judge says shouting slogans like 'Pakistan Zindabad', 'Hindustan Murdabad' etc and announcements on loudspeaker from a nearby mosque clearly suggest a motive and pre-planning to attack the train.

The court has substantiated this conclusion by saying: "If the petrol was not kept ready in loose in carboys on previous night near Aman Guest House, it would not have been possible to reach with carboys within 5-10 minutes near S-6 coach...Not possible to gather Muslim persons with deadly weapons within short time to reach near A cabin on the railway tracks".

The Times of India said...

Hindus were burnt in Godhra before: Verdict

AHMEDABAD: The verdict, which gave death to 11 and life terms to 20 in the Godhra carnage case on Tuesday, substantiates the motive of the attack and the conspiracy partly by falling back on Godhra's history of communal riots.

The target of the mob in Godhra on February 27, 2002 was only kar sevaks returning from Ayodhya and not other Hindus travelling on the Sabarmati Express, says the 826-page judgment. Fiftynine passengers of S-6 coach, mainly kar sevaks, were killed that day sparking off riots across the state.

Although judge P R Patel does not pin-point the motive of the attack, he notes, "Godhra is known for its past history of communal riots...For Godhra, this is not the first incident of burning alive innocent persons belonging to Hindu community. Earlier, during many riot incidents in Godhra, persons were burnt alive and shops/houses etc came to be destroyed by fire." He cites 10 incidents of communal riots in Godhra since 1965 and noted that several riots broke out during the rath yatra in 1990 and 1992.

The judge says shouting slogans like 'Pakistan Zindabad', 'Hindustan Murdabad' etc and announcements on loudspeaker from a nearby mosque clearly suggest a motive and pre-planning to attack the train.

The court has substantiated this conclusion by saying: "If the petrol was not kept ready in loose in carboys on previous night near Aman Guest House, it would not have been possible to reach with carboys within 5-10 minutes near S-6 coach...Not possible to gather Muslim persons with deadly weapons within short time to reach near A cabin on the railway tracks".

suvanappiriyan said...

'அன்று நான் ரயில் நிலையத்தில் இல்லை. வீட்டில் உறங்கிக் கொண்டிருந்தேன். ஆனால் காவல்துறை என்னை சாட்சியமாக இணைத்து விட்டது.' -முரளி முன்சந்தானி.

'காவல் துறைதான் எல்லா பெயர்களையும் கொடுத்தது. எந்த சாட்சியும் தன் வாக்குமூலத்தை எழுதவில்லை. காவல்துறைதான் அனைத்தையும் செய்தது.'-சுகுல்பாதக்.

'நோயல் சாகேப் தான் என்னிடம் 50000 ரூபாய் கொடுத்து ஒரு புகைப்படத்தைக் காட்டி அவரை அடையாளம் காட்டும்படி கூறினார்' - ரஞ்சித் சிங் பட்டேல்.

-டெஹல்காவிடம் உண்மையை கூறிய(நம்மஆள்தான் என்று தவறாக விளங்கி) இந்துத்வாவாதிகள்.
-குஜராத் 2002 இனப்படுகொலை: பக்கம் 78

~முஹம்மத் ஆஷிக் citizen of world~ said...

சகோ.குடுகுடுப்பை...
//கோத்ரா படுகொலையை மோடி செய்தது என்று சொல்வது நீங்கள்,அதற்கு சில ஓட்டுப்பொறுக்கி ஜல்லிகள்.//--முற்றிலும் உங்களின் உண்மைகளை "அறிய முற்படாமை"தான் இதற்கு காரணம்.

'குஜராத் இனப்படுகொலை வேறு, கோத்ரா ரயில் பெட்டி எரிப்பு சம்பவம் வேறு' என்றே பலரும் தவறாக நினைக்கிறார்கள்.

கோத்ரா ரயில் எரிப்பு சம்பவம் என்பது பலநாள் திட்டமிட்ட சதியான குஜராத் இனப்படுகொலையின் ஒரு ஆரம்ப அத்தியாயம்தான்.

சந்தேகம் உள்ளவர்கள் கீழ்க்காணும் சுட்டிகளை வாசியுங்கள்.

இந்தியாவின் மிகக்கொடிய மனிதனுடன் ஒரு மிகச்சிறந்த நேர்மையான மனிதரின் தர்மயுத்தம் முன்னாள் குஜராத் உளவுத்துறை தலைவர் திரு.ஸ்ரீகுமார் அவர்களின் வாக்குமூலம்.
http://www.uyirmmai.com/Uyirosai/ContentDetails.aspx?cid=1305

கோத்ரா சூழ்ச்சி அப்பட்டம்.
http://amvarman.blogspot.com/2011/03/gothra-verdict-burn-after-reading.html

"I was there. Narendra Modi said let the people vent their anger:- Sanjeev Bhatt, DC" --உயர் அதிகாரியின் வாக்குமூலம்.
http://www.indiandefence.com/forums/f31/i-there-narendra-modi-said-let-people-vent-their-anger-sanjeev-bhatt-dc-4445/

மீதி தெஹல்காவின் ஆதாரத்துடன் கூடிய அம்பலப்படுத்தல்கள்.
http://www.tehelka.com/story_main35.asp?filename=Ne031107spycam_videos.asp

http://www.tehelka.com/story_main35.asp?filename=Ne031107Godhra.asp

http://www.tehelka.com/story_main35.asp?filename=Ne031107OverviewGodhra.asp

http://www.tehelka.com/story_main35.asp?filename=Ne031107TwiceBurntStillSimmering.asp

அன்றே சொன்ன பி.பி.சி. ரிப்போர்ட்டர்.
http://news.bbc.co.uk/2/hi/south_asia/2087709.stm

'கோத்ரா சதி செயலின் சூத்ரதாரிகள்' எனக்கூறி தலைப்புச்செய்திகளாய் கைது செய்யப்பட்ட இருவர் எட்டாண்டுகள் பொடா விசாரணைக்கைது சிறைவாசத்துக்குப்பின் நிரபராதிகள் என்று இப்போது விடுதலை.
http://www.telegraphindia.com/1110223/jsp/frontpage/story_13622736.jsp

பெட்டி உள்ளிருந்தே எரிக்கப்பட்டது என்பதை வெளிப்படையாக காட்டும் ஆதாரங்கள் அவற்றில் கொட்டிக்கிடக்கின்றன. இதைத்தொடர்ந்து நடந்த கலவர(!)த்திற்கு பல மாதங்களுக்கு முன்பிருந்தே.... "ரயில் பெட்டி எரிக்கப்படும்" என்று முன்பே நன்கு அறிந்திருந்து... ஆயத்தங்களைச் செய்து கலவரத்தில் ஆயிரக்கணக்கில் முஸ்லிம்களை கொல்ல தயாராக இருந்திருந்தார்கள் சங்பரிவார ஹிந்துத்துவா பயங்கரவாதிகள் என்பதை தெகல்கா நிரூபித்திருக்கிறது.

ஆக, முஸ்லீம்கள் தான் இதைச் செய்தார்கள் என்று எப்படி நம்ப முடியும்?

//ஆனால் நீங்கள் கோத்ரா முஸ்லீம்களால் நடத்தப்பட்டதல்ல என நிறுவ முயல்கிறீர்கள்//---முஸ்லிம்கள் இல்லை என்று ஏற்கனவே நிறுவியாச்சு...!!!

முஸ்லிம்கள்தான் என்றுதான் ஹிந்துத்துவாவினரால் நிறுவ முயலப்படுகிறது. இதுவே உண்மை.

எனில்....

'கோத்ரா சதி செயலின் முக்கிய சூத்ரதாரி' யார்...?

இப்போது இது எல்லார்க்கும் விடை தெரிந்த எல்கேஜி லெவல் கொஸ்டின்...!!!

ஆனாலும், பூனைக்கு மணி கட்டும் தைரியம் மத்திய காங்கிரஸ் அரசுக்கு இல்லை...!!!

suvanappiriyan said...

//27ஆம் தேதி இரவு எட்டு மணிக்கு சீப் செக்கரட்டரி ஜி.சுப்பாராவ், டி.ஜி.பி.சக்கரவர்த்தி, அகமதாபாத் சிட்டி கமிஷனர் (இவர் தற்போது குஜராத் காவல்துறை தலைவராக இருக்கிறார்) பி.சி. பாண்டே, அடிசனல் சீப் செக்ரட்டரி அசோக் நாராயணன், முதல் அமைச்சரின் சிறப்பு செயலாளர் பி.சி.மிஸ்ரா (இப்போது இவர் மத்திய அமைச்சர் சரத்பவாரின் செயலாளர். இவர் ஆட்சித்தலைமைக்கு உயர்த்தப்பட்டதை கவனிக்கவும்) இவர்கள் அனை வரும் சேர்ந்து முதல் அமைச்சரின் முன்னிலையில் கலந்தாலோசனைக் கூட்டம் நடத்தினர். அக்கூட்டத்தில் முதல்வர் கூறினார். “இந்து மக்களைப் பொறுத்தமட்டில் மிகவும் துரதிருஷ்டவசமான, வேதனை நிறைந்த விஷயங்கள்தான் நடந்து இருப்பவை. சாதாரண நிலையில் நீங்கள், ஒரு இனக் கலவரம் வெடிக்கும் போது இந்துக்களையும், முஸ்லீம்களையும் சரிசமமாகக் கைது செய்வீர்கள். அந்த நடைமுறை இங்கு எக்காரணம் கொண்டும் நிகழக்கூடாது. மூன்று நாட்களுக்கு இங்கு இந்துக்களின் பழிவாங்கும் நெருப்பு பொங்கி எழும். யாரும் அதைக் கண்டுகொள்ளவும் கூடாது, அதில் தலையிடவும்கூடாது. இது என் பிரத்தியேகமான உத்தரவு.”
அதற்கு யாரும் பதில் கூறவில்லை “சார், கலவரம் நடைபெற்றால் அதில் தலையிடாமல் இருக்க முடியாது. எங்களுக்குரிய சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளாமல் இருக்க முடியாது!” என்று ஒருவராவது கூறியிருக்கலாம். முதலமைச்சரின் முகத்தை நோக்கி மறுத்துக்கூற சிலருக்குத் தயக்கம் இருந்திருக்கலாம். இருப்பினும் வெளியில் வந்தபிறகு தங்களின் கடமையை, நாணயமாக அவர்கள் மேற்கொண்டிருக்கவேண்டும். அதையும் அவர்கள் செய்யவில்லை.
மதியம் மோதலை ஒடுக்குவதற்குத் தேவையான ஆணைகளை அளித்திருந்த பி.சி.பாண்டே, இந்தக் கூட்டத்திற்குபின் தனது உத்தரவை திரும்பப் பெற்றுக் கொண்டார்.//

கேரளாவைச் சேர்ந்த ஸ்ரீகுமாரின் பேட்டியை முழுவதுமாக உயிர்மையில் படித்தேன். கோத்ரா ரயில் சம்பவம் நரேந்திர மோடியின் அரசியல் முன்னேறற்றத்துக்கு எடுத்துக் கொண்ட ஒரு வாய்ப்பாக நன்றாகவே தெரிகிறது.

சிறந்த பல சுட்டிகளை தந்தமைக்கு நன்றி சகோ.ஆஷிக்.