'பாதைகளையுடைய வானத்தின் மீது சத்தியமாக!'
-குர்ஆன் 51:7
இந்த வசனத்தைப் படிக்கும் போது ஏதோ போகிற போக்கில் அலட்சியமாக சொல்லி விட்டுப் போகக் கூடிய ஒரு வாக்கியமாக நமக்குத் தெரியும். இதனுள் எத்தனை அறிவியல் விபரங்கள் உள் வாங்கப் பட்டிருக்கிறது என்பதை இனி பார்போம்.
பூமியில் பாதைகள் உண்டு என்று சொன்னால் நமக்கு ஆச்சரியமாகத் தோன்றாது. ஆனால் வானத்தில் பாதைகள் உண்டு என்று 500 வருடங்களுக்கு முன்பு ஒரு சராசரி மனிதனிடம் சொன்னால் அவனை கிறுக்கன் என்றுதான் சொல்வார்கள். ஆனால் தற்போதய விஞ்ஞான யுகத்தில் வான் வெளியில் பாதைகள் உண்டு என்பதை பல சோதனைகள் மூலம் நிரூபித்து விட்டோம். விண்வெளிப் பயணம், ராக்கெட்டுகளை ஏவுதல், கோள்களின் சஞ்சாரம் என இவை அனைத்தும் விண் வெளியில் பாதைகள் உள்ளது என்பதை நமக்கு மிகத் தெளிவாக பறை சாற்றிக் கொண்டிருக்கிறது.
இனி குர்ஆனின் வசனத்தை எடுத்துக் கொள்வோம்.
'வஸ்ஸமாயி தாதில் ஹூப்கி' இங்கு ஹூப்கி என்ற அரபி வார்த்தை ''ஹூப்க்" என்ற மூலச் சொல்லில் இருந்து பிறந்ததாகும். இதை நமது தமிழில் அர்த்தப்படுத்தினால் 'கையால் பின்னப்பட்ட ஒரு வலை' என்று வரும். மேற்கண்ட குர்ஆனின் வசனத்தை நாம் சரியாக மொழி பெயர்த்தோமானால் 'பின்னப்பட்ட வலைகளையொத்த பாதைகளையுடைய வானத்தின் மீது சத்தியமாக' என்று வரும். ஆனால் அன்றைய மக்களுக்கு 'பின்னப்பட்ட வலைகளையொத்த பாதை' என்று சொன்னால் ஒன்றும் விளங்கியிருக்காது.அந்த மக்கள் வான்வெளி ஆராய்ச்சியில் அன்று தேர்ச்சி பெற்றிருக்கவில்லை. எனவே அந்த மக்கள் சாதாரணமாகவே 'பாதைகளையுடைய வானத்தின் மீது சத்தியமாக' என்று படித்து சென்று விட்டனர். நம்முடைய மொழி பெயர்ப்புகளிலும் இதே முறையிலேயே மொழி பெயர்க்கப்பட்டுள்ளது. இரண்டு விதமாக இதனை மொழி பெயர்த்திருந்தாலும் மூல விளக்கத்தில் எந்த மாற்றமும் ஏற்படவில்லை. அன்றைய அரபு மக்களுக்கும் இந்த வசனம் புரிந்தது. இன்றைய நவீன யுகத்தில் வாழும் நமக்கும் இந்த சிறிய வசனம் இன்னும் அதிக அறிவியலைச் சொல்லிக் கொண்டிருக்கிறது.
பால் வெளி மண்டலத்தில் கோடிக்கணக்கான கோள்கள் தங்களையும் சுற்றிக் கொண்டு சூரியனையும் சுற்றிக் கொண்டு அனைத்தும் சேர்ந்து ஒரு இலக்கை நோக்கி ஓடிக் கொண்டிருக்கிறது. பால்வெளி மண்டலத்தில் தோராயமாக 400 பில்லியன் நட்சத்திரங்கள் இருப்பதாக அறிஞர்கள் கண்டுபிடித்திருக்கின்றனர். இது எப்படி சாத்தியப்படுகிறது? நமது சாலைகளில் எத்தனை கட்டுப்பாடுகளை விதித்தாலும் விபத்துகளுக்கு குறைவில்லை. பகுத்தறிவுடைய மனிதனுக்கு இத்தனை வசதிகள் இருந்தும் நம்மால் எந்த ஒரு விபத்தும் இல்லாமல் செல்ல முடிவதில்லை. ஆனால் சிந்திக்கத் தெரியாத இந்தக் கோள்கள் ஒன்றோடொன்று மோதாமல் எவ்வளவு துல்லியமாக சுற்றி வருகின்றன. இது பற்றி என்றாவது நாம் சிந்தித்திருக்கிறோமா?
பிட்ஸ்பர்க் பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த டாக்டர் கார்லோ ரொவெல்லி இது பற்றிய ஆராய்ச்சியில் இறங்கினார். கோள்களின் சஞ்சாரங்களை ஆராய்ந்து எவ்வாறு அவைகளால் எந்த ஒரு உராய்வும் இன்றி செல்ல முடிகிறது என்பதை கண்டறிந்தார். கோள்கள் செல்லும் பாதைகளைப் பற்றி இவர் சொல்லும் போது 'சுழலக் கூடிய ஒரு வலைப் பின்னலைப் போன்ற' பாதைகள் என்கிறார். இவரது வார்த்தை குர்ஆன் சொல்லக் கூடிய வார்த்தைகளை அப்படியே ஒத்துச் செல்வதைப் பார்த்து ஆச்சரியப் படுகிறோம்.
அதே போல் 'நியூயார்க் டைம்ஸ்' பத்திரிக்கையின் கேள்வி பதில் பகுதியில் 'நமது விண்வெளி எவ்வாறு கட்டப்பட்டுள்ளது?' என்ற கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பதிலாக
An Article in the New York Times seeking an answer to the question "How Was the Universe Built?" contained the following lines:
Even the tiny quarks that make up protons, neutrons and other particles are too big to feel the bumps that may exist on the Planck scale. More recently, though, physicists have suggested that quarks and everything else are made of far tinier objects: superstrings vibrating in 10 dimensions. At the Planck level, the weave of space-time would be as apparent as when the finest Egyptian cotton is viewed under a magnifying glass, exposing the warp and woof.
In his book Three Roads to Quantum Gravity, the theoretical quantum physicist Lee Smolin devotes one chapter to "How to Weave a String" and says this on the subject:
... space may be 'woven' from a network of loops... just like a piece of cloth is 'woven' from a network of threads.
In his book Our Cosmic Habitat the cosmologist and astrophysicist Prof. Martin Rees says:
According to our present concepts, empty space is anything but simple... and on an even tinier scale, it may be a seething tangle of strings.
இது தொடர்பான மேலும் அதிக விளக்கங்களை அறிவியல் அறிவும் ஆங்கில அறிவும் உடையவர்கள் கீழ்க்காணும் சுட்டிகளுக்கு சென்று பெற்றுக் கொள்ளுங்கள்.
1.http://casswww.ucsd.edu/public/tutorial/MW.html
2 George Johnson, "How Is the Universe Built? Grain by Grain", The New York Times, 7 December 1999; http://www.nytimes.com/library/national/science/120799sci-planck-length.html
3 http://upload.wikimedia.org/wikipedia/commons/1/12/Oort_cloud_Sedna_orbit.jpg
4 http://theory.uwinnipeg.ca/users/gabor/symmetry/slide22.html
5 http://www.phys.unsw.edu.au/einsteinlight/jw/module6_Planck.htm
6 http://www.physlink.com/Education/AskExperts/ae281.cfm
7 http://www.pbs.org/wgbh/nova/elegant/everything.html
8 Abhay Ashtekar, Jerzy Lewandowski, " Space and Time Beyond Einstein", Rzeczpospolita, April 2002; http://gravity.psu.edu/people/Ashtekar/articles/Rzeczpospolita_SaTBE.html
9 George Johnson, "How Is the Universe Built? Grain by Grain", The New York Times, 7 December 1999; http://www.nytimes.com/library/national/science/120799sci-planck-length.html
10 Lee Smolin, Three Roads to Quantum Gravity, Basic Books, New York, 2001, p. 186.
11 Martin Rees, Our Cosmic Habitat, Princeton University Press, 2001, p. 107.
இப்பொழுது வேண்டுமானால் இந்த செய்திகள் எல்லாம் சிலருக்கு புதிதாகவும் பலருக்கு பழையதாகவும் இருக்கலாம். ஆனால் 1400 அண்டுகளுக்கு முன்பு அந்த எழுத்தறிவில்லாத மக்களுக்கு இந்த செய்திகள் எல்லாம் எவ்வாறு கிடைத்திருக்கும்? எழுதப்படிக்கத் தெரியாத முகமது நபி எங்கிருந்து இந்த விபரங்களை பெற்றிருப்பார் என்று சிந்திக்கக் கடமைபட்டுள்ளோம்.
தகவல் உதவி: ஹாருன் யஹ்யா
இனி திரு செ.ஜெயபாரதன் இது பற்றி என்ன சொல்கிறார் என்று பார்ப்போம்:
பால்மய வீதியை முதன்முதலில் நோக்கிய விஞ்ஞானி கலிலியோ
1600 ஆண்டின் ஆரம்ப காலத்தில் இத்தாலிய வானியல் விஞ்ஞான மேதை கலிலியோதான் முதன்முதல் நமது பால்மய வீதி (Milky Way Galaxy) காலக்ஸியைத் தனது தொலைநோக்கியில் கண்டு உளவு செய்தவர். அந்த ஒளி விண்ணரங்கில் எண்ணற்ற விண்மீன்கள் இருந்ததைக் கண்டு வியந்தார். அதற்குப் பிறகு 1755 இல் ஜெர்மன் வேதாந்தி இம்மானுவல் கென்ட் (Immanuel Kant) பால்மய வீதி குவியாடி போன்ற விண்மீன்களின் மந்தை (Lens-shaped Group of Stars) என்றும், அதனைப் போல் வேறு விண்மீன்களின் மந்தைகள் உள்ளன வென்றும் கூறினார். பிரிட்டனில் பணிபுரிந்த அடுத்தொரு ஜெர்மன் வானியல் நோக்காளர் வில்லியம் ஹெர்ச்செல்தான் (1738-1822) முதன்முதலில் விஞ்ஞான ரீதியாக பால்மய வீதியைத் துருவி ஆராய்ந்து எழுதியவர். அதற்குப் பிறகு அவரது சகோதரி கரோலின் ஹெர்ச்செல்லும் புதல்வர் ஜான் ஹெர்ச்செல்லும் வில்லியத்தைப் பின்பற்ற ஏராளமான காலாக்ஸிகளைத் தொலைநோக்கிகள் மூலம் கண்டுபிடித்துப் பதிவு செய்தார்கள்.
காலக்ஸியும் அதில் சுற்றிவரும் கோடான கோடி விண்மீன்களும்
காலக்ஸி என்றால் என்ன ? சூரியனைப் போன்ற கோடான கோடி விண்மீன்கள் மையக்கண் ஒன்றைச் சுற்றிவரும் ஒரு பூத வடிவான விண்ணரங்கமே காலக்ஸியாகக் கருதப்படுகிறது. அந்த காலக்ஸியில் விண்மீன்களுடன், விண்மீனைச் சுற்றும் அண்டக்கோள்களும், ஒளிமய நிபுளாக்களும், வாயுக்களும், தூசிகளும் மண்டிக் கிடக்கின்றன ! மேலும் காலக்ஸிகளில் மாபெரும் திணிவும், மையத்தில் அளவற்ற ஈர்ர்ப்பாற்றலும் கொண்ட கருந்துளை (Black Hole: A Single Point of Infinite Mass & Gravity) ஒன்றும் இருக்கலாம். பிரபஞ்சத்தின் பெரும்பான்மையான திணிவாகக் (Mass) கருதப்படும் 50 பில்லியனுக்கு மேற்பட்ட காலக்ஸிகள் இருப்பதாக விஞ்ஞானிகள் கணிக்கிறார்கள் ! கண்ணுக்குப் புலப்படாத கருமைப் பிண்டம் இல்லாமல், அவையே பிரபஞ்சத்தின் 90% திணிவைக் கொண்டிருப்பதாகவும் கருதப்படுகிறது.
காலக்ஸிகள் சில சுருளாக இருப்பவை. சில நீள்வட்ட வடிவில் இருப்பவை. சில கோணலாக இருப்பவை. பால்மய காலக்ஸியும் அதன் அருகே உள்ள அன்டிரோமேடா காலக்ஸியும் சுருளானவை. காலக்ஸி முழுவதும் ஓர் அச்சில் சுற்றுவதால் விண்மீன்களைக் கவ்விக் கொண்டு சுருள் கரங்கள் தோன்றின. நீள்வட்ட காலக்ஸிகளில் சுருள் கரங்கள் எழாமல் பொதுவாகப் பழைய விண்மீன்களும் மிகச் சிறிதளவு வாயுக்களும், தூசிகளும் உள்ளன.
குடை ராட்டினம் போல் நமது பரிதி மண்டலம் தனித்து ஒரு மையக்கண்ணைச் சுற்றி வருகிறது பால்மய வீதி காலக்ஸியே ! பால்மய வீதியில் பரிதியைப் போல் நூறு பில்லியன் விண்மீன்களும், ஒருவேளை கருந்துளை ஒன்றும் இருக்கலாம் என்று கருத இடமிருக்கிறது. நமது பால்மய வீதியில் விண்மீன் முந்திரிக் கொத்துகளும் (Star Clusters) அண்டக் கோள்களும், ஒளிமயமான நிபுளாக்களும், வாயு மேகங்களும், தூசிகளும், வெற்றிடமும் சேர்ந்து உள்ளன. பூர்வீக விண்மீன்களும், நெருங்கி அடர்ந்த கொத்துக்களும் (Denser Clusters), காலக்ஸி மையத்துக்கு அருகிலும், இளைய விண்மீன்களும், தளர்ந்த கொத்துக்களும் (Open Clusters) காலக்ஸி தளத்தட்டில் அமைந்துள்ளன !
--நன்றி திரு செ.ஜெயபாரதன்
டிஸ்கி:'புனித வேத நூல்களில் நாம் காணும் மேன்மையான நியதிகளை நிலைநாட்டி மெய்ப்பிக்கவே, மனித முயற்சிகள் விஞ்ஞானத்தில் மேற்கொள்ளப் பட்டன என்று எனக்குத் தோன்றுகிறது '
ஜான் ஹெர்ச்செல் (John F. Herschel) (1792-1871)
அறிஞர் ஹெர்சல் சொல்வது போல் வேத புத்தகங்களில் உள்ள செய்திகளை நிலை நாட்டுவதற்கே முற்காலத்தில் அறிவியல் ஆய்வுகள் அதிகம் நடத்தப்பட்டிருக்கிறது. அந்த வகையிலும் இந்த வேத புத்தகங்கள் மனிதனின் அறிவியல் வளர்ச்சிக்கு பெருந் துணையாக இருந்திருக்கிறது.
'அவர்கள் இந்தக் குர்ஆனைச் சிந்திக்க மாட்டார்களா? இது இறைவன் அல்லாதவரிடமிருந்து வந்திருந்தால் இதில் ஏராளமான முரண்பாடுகளைக் கண்டிருப்பார்கள்.'-குர்ஆன் 4:82
7 comments:
அஸ்ஸலாமு அழைக்கும் வரஹ...
சகோ.சுவனப்பிரியன்,
அட்டகாசமானதொரு அறிவியல் ஆக்கம்...!
பதிவும் படங்களும் அருமை..!
அறிவியல் பூர்வமாய் சிந்திப்பவர்களுக்கு குர்ஆன் அள்ள அள்ள வற்றாத ஒரு முடிவில்லாத பொக்கிஷம்.
அருமையான ஒரு பதிவிற்கு மிக்க நன்றி சகோ.
வஅலைக்கும் சலாம்! சகோ.ஆஷிக்!
//அறிவியல் பூர்வமாய் சிந்திப்பவர்களுக்கு குர்ஆன் அள்ள அள்ள வற்றாத ஒரு முடிவில்லாத பொக்கிஷம்.//
உண்மைதான் சகோ. ஆனால் இத்தனை அருமையான பொக்கிஷத்துக்கு சொந்தக்காரர்களான முஸ்லிம்களில் சிலர் இன்னும் தர்ஹாக்களிலும், மூடப்பழக்க வழக்கங்களிலும் மூழ்கிக் கிடப்பது வேதனைக்குரிய விஷயம். ஆனால் தற்போது நம்நாட்டோடு ஒப்பிடும்போது தமிழகம் மூடப்பழக்கங்கள்,தர்ஹா விஷயத்தில் ஓரளவு விழிப்புணர்வு வந்திருப்பது மகிழ்ச்சிக்குரிய விஷயம்.
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
திருச்சிக்காரன் சொன்னது...
//சுவனப் பிரியன் ,
//எனது அரபி நண்பர் ஒரு நாள் என்னிடம் அரபு தினசரி ஒன்றை கொண்டு வந்து காண்பித்தார். அதில் ஒரு இந்து நண்பர் எலியின் சிலையை மிகவும் பய பக்தியோடு வணங்கிக் கொண்டிருந்ததை காண்பித்து ‘உங்கள் நாட்டை காப்பாற்றும் கடவுள் இவர்தானா?’ என்று கேட்டவுடன் ஏதேதோ சொல்லி அவனை சமாளிக்க வேண்டியதாகி விட்டது.//- சுவனப் பிரியன்
நமது அன்புக்குரிய அரேபிய சகோதரரிடம் என் சார்பாக ஒரு விளக்கத்தை அளிக்குமாறு கோருகிறேன். நீங்கள் அவரிடம் சொல்லுங்கள், இந்தியாவில் எலியைக் கும்பிடுகிறார்கள், பறவைகளைக் கும்பிடுகிறார்கள், குரங்குகளைக் கும்பிடுகிறார்கள் என்று சொல்லுங்கள். அவர் சிரிப்பார் .
அப்போது அவரிடம் சொல்லுங்கள்.
அப்பாவியான ஒரு பெண்ணை ஏமாற்றித் தூக்கி சென்ற ஒரு காமக் கொடூர சர்வாதிகாரியிடம் இருந்து அவளை விடுவிக்க, எந்த வித பிரதிபலனும் எதிரபாராமல், சுயநலமற்று போராடி அவளின் துன்பம் துடைக்க உதவுவதற்காக கடவுள் குரங்கு வடிவில், பறவை வடிவில் வந்ததாக கடவுள் கோட்பாடை வைத்துக் கொள்வது மிகச் சிறந்த கோட்பாடே என இந்தியர்கள் சொல்லுகிறார்கள் என சொல்லுங்கள்.///
திருச்சிக்காரன்!
குரங்கு,மயில்,எலி போன்றவைகளை வணங்குவதற்கான காரணத்தை நான் கேட்கவில்லை. இவைகளை வணங்குவதற்கு இறைவனின் கட்டளை இருக்கிறதா? என்பது தான் என் கேள்வி. ஏனெனில் இந்து மத வேதங்கள் இவற்றை எல்லாம் கண்டிக்கின்றன.
கண்ணால் காண முடியாதது யாரோ அவனே படைத்த இறைவன் அவனே கண்களுக்கு பார்வை சக்தியைத் தருகிறான். அவர்கள் வணங்கிக் கொண்டிருக்கும் கண் கொண்டு பார்க்கும் பொருட்கள் யாவும் கடவுள் இல்லை.
-கேனோ உபநிஷத் (1 : 6)
வணக்கத்திற்குரியவன் இறைவன் ஒருவன்தான்.
-ரிக் வேதம் 6:45:16
இறைவன் தன்னை வெளிப்படுத்திக் கொள்ளுவதில்லை
-அதர்வண வேதம் 32 : 3
இதை எல்லாம் நான் உங்களிடம் முன்பே கேட்டிருக்கிறேன்.
உங்களிடம் பதில் இல்லை என்பதால்தான் எனது கடைசி இரண்டு பின்னூட்டங்களை உங்கள் பதிவில் வெளியிடவில்லை. எனவே அதை நான் இங்கு வெளியிடுகிறேன்.
சுவனப்பிரியன் மற்றொரு சிறந்த பதிவை கொடுத்திருக்கிறீர்கள். வாழ்த்துக்கள்.
//கடவுள் குரங்கு வடிவில், பறவை வடிவில் வந்ததாக கடவுள் கோட்பாடை வைத்துக் கொள்வது மிகச் சிறந்த கோட்பாடே//
நன்கு படித்தவர்களே ஏன் இப்படி சிந்திக்கிறார்கள். அவர்கள் வேதமும் தடுத்திருக்கிறது. இறைவன்தான் நமது சகோதரர்களை நேர்வழிப்படுத்த வேண்டும்.
அஸ்ஸலாமு அலைக்கும்
சிறந்த பதிவு! தொடர்ந்து எழுதுங்கள் சுவனப்பிரியன்.
-அப்துல் காதர், மதுரை
ஆஷிக் அன்வர்!
//நன்கு படித்தவர்களே ஏன் இப்படி சிந்திக்கிறார்கள். அவர்கள் வேதமும் தடுத்திருக்கிறது. இறைவன்தான் நமது சகோதரர்களை நேர்வழிப்படுத்த வேண்டும்.//
நானும் உங்களோடு பிரார்த்தனையில் சேர்ந்து கொள்கிறேன். அதுதான் நம்மால் செய்ய முடியும்.
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!
வஅலைக்கும் சலாம்!
//சிறந்த பதிவு! தொடர்ந்து எழுதுங்கள் சுவனப்பிரியன்.//
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி திரு அப்துல் காதர்.
Post a Comment