இந்திய அரசியல், சினிமாத்துறை, கல்விக் கூடங்கள் என்று எங்கு பார்த்தாலும் மரியாதை நிமித்தமாக காலில் விழும் பழக்கம் அனைவரிடத்திலும் குடி கொண்டுள்ளது. ஒருவரை மதிக்கிறோம் என்ற பெயரில் இந்த காரியத்தை நாம் சர்வ சாதாரணமாக செய்து வருகிறோம். அரசியல் வாதிகளைப் பற்றிக் கேட்கவே வேண்டாம். புகழ் கிடைக்கிறது என்பதற்காக இதை அவர்கள் மனதாற ஆதரிக்கிறார்கள். தொண்டனும் கிடைக்கும் பணத்துக்காகவும், ஒரு சில எம்.எல்.ஏ, எம்.பி சீட்டுகளுக்காகவும் காலில் விழுவதைப் பார்க்கிறோம். நம்மைப்போன்ற ஒரு மனிதனிடம் மிகச்சிறப்பு வாய்ந்த தலையை அவன் காலடியில் கொண்டு வைப்பது சுய மரியாதைக்கு இழுக்கு என்று நாம் சிந்திப்பதில்லை.
ஜீ டிவி சரிகமபா வில் கமால்கான் என்ற ஒரு பாடகரின் செய்கையைத்தான் இங்கு பார்க்கிறீர்கள். பாடல் முடிந்தவுடன் அபிமானத்தைக் காட்ட வேண்டி 'ஏ.ஆர்.ரஹ்மானின் காலைத் தொட்டு ஆசீர்வாதம் வாங்குகிறேன்' என்கிறார். அதற்கு அனுமதியும் வழங்கப்படுகிறது. தலர் மெஹந்தி ஆசீர்வாதம் பெற அனுமதிக்கிறார். ஆனால் ஏ.ஆர்.ரஹ்மான் சீட்டை விட்டு எழும்பாமல் கைகளை மட்டும் கொடுத்து விட்டு 'காலில் விழ வேண்டாம்' என்று தடுப்பதைத்தான் நாம் பார்க்கிறோம். பிறவியிலேயே முஸ்லிம் குடும்பத்தில் பிறந்த கமால்கான் இஸ்லாத்தின் போதனைகளை மறந்து காலில் விழ செல்கிறார். நமக்கு தெரிந்து இஸ்லாத்தை ஏற்ற ரஹ்மான் இஸ்லாம் தடுத்ததால் காலில் விழுவதை தடுக்கிறார். இவர் சினிமாத் துறையில் இருப்பதில் எனக்கு உடன்பாடில்லை. இதிலிருந்து இவர் தவிர்ந்து கொள்ள வேண்டும். அதே போல் தர்ஹாக்களுக்கு செல்வதையும் தவிர்த்துக் கொள்ள வேண்டும். அவருக்கு நெருக்கமானவர்கள் இந்த செய்தியை அவருக்கு கொண்டு சென்றால் நல்லது. ஒருவரின் பெயரில் இஸ்லாம் இல்லை. இஸ்லாமிய கொள்கைகளை கடைபிடிப்பதில்தான் அவர் இஸ்லாமியனாகப் பார்க்கப்படுகிறார்.
'நான் ஹீரா என்ற ஊருக்குச் சென்றேன். அங்குள்ள தலைவருக்கு அந்த மக்கள் காலில் விழுந்து சிரம் பணிவதைப் பார்த்தேன். காலில் விழுந்து மரியாதை செய்வதற்கு நம்முடைய நபி மிகப் பொருத்தமானவர்களாயிற்றே என்று எனக்குள் கூறிக் கொண்டேன். முகமது நபி அவர்களிடம் வந்து 'ஹீரா ஊர் மக்கள் தங்கள் தலைவருக்கு காலில் விழுந்து மரியாதை செய்வதைக் கண்டேன். இறைவனின் தூதரே! இதற்கு நீங்கள் தகுதியானவர்கள்' என்றேன். அதற்கு முகமது நபி அவர்கள் 'நான் இறந்த பிறகு எனது சமாதியில் இதே போன்ற வணக்கத்தைச் செலுத்துவாயோ?' என்று கேட்டனர். மாட்டேன் என்று நான் கூறினேன். பின்னர் முகமது நபி அவர்கள் 'மனிதனுக்கு மனிதன் காலில் விழுந்து மரியாதை செய்யும் பழக்கத்தை செய்யாதீர்கள். ஒரு மனிதன் இன்னொரு மனிதனுக்கு சிரம் தாழ்த்த அனுமதி இருந்தால் ஒரு மனைவி தனது கணவனுக்கு சிரம் தாழ்த்த சொல்லியிருப்பேன். ஏனெனில் அவர்கள் கணவர்களுக்கு அதிகம் கடன்பட்டிருக்கிறார்கள்.'
-அறிவிப்பவர் கைஸ் பின் சாத், நூல் அபுதாவுத்: 1828.
'படைக்கப்பட்டவற்றிற்க்கு சிரம் தாழ்த்தி வணங்காதீர்கள். படைத்தவனை மாத்திரமே சிரம தாழ்த்தி வணங்க நாம் கட்டளையிடப்பட்டுள்ளோம்.'-முகமது நபி, அரபி 45.
ஒருமுறை முகமது நபி அவர்கள் தமது தோழர்களுடன் நடந்து சென்றார்கள். அவர்களின் தலை மீது மட்டும் நிழல்படுவதைக் கண்டார்கள். தலையை உயர்த்திப் பார்த்தபோது ஒரு துணிக் குடையால் அவர்களுக்கு நிழல் தரப்படுவதைக் கண்டார்கள். 'விடுங்கள்' என்று கூறி அந்தத் துணியை வாங்கி மடக்கி வைத்தார்கள். 'நானும் உங்களைப் போன்ற மனிதன் தான்' என்றும் கூறினார்கள்.
ஆதாரம்: தப்ரானி.
தனக்கு யாரும் விசேஷமாக மரியாதை செய்து விடக் கூடாது என்பதிலும், தனது இறப்புக்குப் பின் யாரும் தன்னை கடவுளாக்கி விடக் கூடாது என்பதிலும் முகமது நபி எந்த அளவு கவனமாக இருந்திருக்கிறார்கள் என்பதை நினைத்து ஆச்சரியப்படுகிறோம்.
இறைவனையே சிரம் தாழ்த்தி வணங்குங்கள்.
-குர்ஆன்: 53: 62
15 comments:
கலாசாரங்கள் மதத்திற்கு மதம் வேறுபடுகின்றன. இந்து மதம் பெரிவர்களின் காலைத்தொட்டு வணங்குவதை சம்பிரதாயமாக வைத்திருக்கிறது. இன்றும் வட இந்தியாவில் வயதில் பெரியவர்களைக் காலைத்தொட்டு வணங்கும் வழக்கம் இருப்பதைக் காணலாம்.
எளிமையான எழுத்து நடை..அருமையான விளக்கம்... நன்றி தோழரே..
அருமையான கருத்து.....
இஸ்லாம் ஒரு அழகிய வாழ்க்கை முறை....!!!!
டாக்டர் திரு கந்தசாமி!
//இன்றும் வட இந்தியாவில் வயதில் பெரியவர்களைக் காலைத்தொட்டு வணங்கும் வழக்கம் இருப்பதைக் காணலாம்.//
நம்மில் வாழ்ந்து மறைந்த சிறந்த மனிதர்களை கடவுளாக வழிபடும் வழக்கம் நம் நாட்டில் முன்பிருந்தே இருந்து வருகிறது. ஆனால் இந்து மத வேதங்களில் இது போன்று மனிதர்களின் காலில் தலையை வைத்து வணங்கும் வழக்கத்தை நான் பார்த்த வகையில் காண முடியவில்லை.
'இறைவன் தன்னை வெளிப்படுத்திக் கொள்வதில்லை.' -அதர்வண வேதம் 32:3
'அந்த ஆதி பகவானின் வடிவத்தை தேவர்களும் உணர்ந்தவர்களில்லை. அசுரர்களும் உணர்ந்தவர்கள் அல்ல.'- பகவத் கீதை 10:14
'யார் அசம்பூதியை(இயற்கையை) வணங்குகின்றார்களோ அவர்கள் அறியாமையில் இருக்கின்றார்கள்'-அதர்வண வேதம் 40:9
இந்த கருத்துக்களெல்லாம் எந்த வகையிலும் இறைவனுக்கு நிகராக எந்த படைப்பும் இருக்க முடியாது என்று அறுதியிட்டுக் கூறுகிறது. நம் முன்னோர்கள் இறைவனுக்குத்தான் சாஷ்டாங்கமான வணக்கத்தை செய்திருக்கிறார்கள். பின்னால் வந்த கலாசார மாற்றங்களினால் இறைவனுக்கு செய்யும் வணக்கத்தை மனிதர்களுக்கும் செய்ய நம்மவர்கள் முயன்றிருக்கலாம் என்பது என் கருத்து.
வருகைக்கும் கருத்தக்கும் நன்றி!
//எளிமையான எழுத்து நடை..அருமையான விளக்கம்... நன்றி தோழரே..//
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி திரு வேடந்தாங்கல் கருன்!
//அருமையான கருத்து.....
இஸ்லாம் ஒரு அழகிய வாழ்க்கை முறை....!!!!//
அதை முஸ்லிம்களில் பலரே இன்னும் முழுமையாக கடைபிடிக்க முயற்ச்சிப்பதில்லை. முஸ்லிம்களில் காலில் விழும் கலாச்சாரம் அதிகம் கிடையாது. ஆனால் திருமணத்தன்று பெண்ணும் மாப்பிள்ளையும் தாய் தகப்பன் மற்றும் உறவினர்கள் காலில் விழும் வழக்கம் சில இடங்களில் இன்றும் உள்ளது. இது முகமது நபி தடுத்த வழிமுறை. இதிலிருந்து நாம் விலகிக் கொள்ள வேண்டும்.
முதல் வருகைக்கும் கருத்துக்கும். நன்றி சகோதரி ரஹீமா ஃபைஷல்.!
அருமை
//அருமை//
வருகைக்கும் கருத்தை பதிந்தமைக்கும் நன்றி பிரணவம் ரவிக்குமார்.
அருமையான விசயம் இந்துக்கள் பெரியவர்களின் ஆசிர்வாதம் வேண்டி பாதம்பணிவதில் தவறு இல்லை என இதிகாசம் கூறுகிறதே!ராமனை பணிந்தே சுக்கிரிவன் வரம் கேட்டான்.
திரு நேசன்!
//அருமையான விசயம் இந்துக்கள் பெரியவர்களின் ஆசிர்வாதம் வேண்டி பாதம்பணிவதில் தவறு இல்லை என இதிகாசம் கூறுகிறதே!ராமனை பணிந்தே சுக்கிரிவன் வரம் கேட்டான்.//
ராமாயணம் என்பது வேத புத்தகமா என்பதில் சர்ச்சை இருக்கிறது. 'இறைவன் தன்னை வெளிப்படுத்திக் கொள்வதில்லை' என்ற வேத வசனத்தின்படி ராமன் என்பவர் நாட்டை ஆண்ட தசரத மஹாராஜாவின் மகனாகத்தான் இருந்திருக்கிறார். அவரின் நல்ல செயல்களை வைத்து பின்னால் வந்தவர்கள் அவரை கடவுளின் அவதாரம் என்று கூற தலைப்பட்டனர். ராமன் கடவுள் என்று வேதங்களோ, வேறு எந்த நம்பகமான ஆதாரங்கள் இல்லாததால் ராமனின் வாழ்க்கையை இங்கு நாம் உதாரணமாக எவ்வாறு எடுக்க முடியும்? வேத வசனங்கள் தான் பின்பற்றக் கூடிய மக்களை கட்டுப்படுத்தும்.
முதல் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!
நம் அனைவர் மீதும் ஸலாம் உண்டாகட்டுமாக.
எல்லா மனிதர்களும் படைப்பில் சமமே. ஒவ்வொரு மனிதனுக்கும் தலையாயது அவரின் தலை. அதை தானே விரும்பி மற்றவரின் காலில் வைத்து வணங்குவது/ஆசி பெறுவது தன்மானத்துக்கு இழுக்கு. கட்டாயப்படுத்தல் தனி மனித உரிமைக்கு எதிரானது. இஸ்லாம் இந்த உரிமையையும் தன்மானத்தையும் ஒவ்வொரு மனிதனுக்கும் தருகிறது.
முஹம்மத் நபி(ஸல்) அவர்களே ஏற்றுக்கொள்ளாத மரியாதையை ஏ.ஆர்.ரஹ்மான் எப்படி ஏற்பார்?
அவரை பாராட்டுவோம்.
நம் நாட்டில் பெரும்பாலோர்... அரசியலில், திருமணத்தில் என சூழ்நிலையாலோ, சம்பிரதாயத்தினாலோதான் கட்டாயப்படுத்தப்படுகிறார்கள்.
நல்லதொரு விழிப்புணர்வூட்டும் பதிவு சகோ.சுவனப்பிரியன். மிக்க நன்றி.
அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மதுல்லாஹி வபர காத்துஹு...
சகோதரர் சுவனப்பிரியன்,
-------
அதே போல் தர்ஹாக்களுக்கு செல்வதையும் தவிர்த்துக் கொள்ள வேண்டும்.
-------
இன்ஷா அல்லாஹ். துவா செய்வோம்...அவருடைய இமெயில் முகவரியை நான் தேடிப்பார்த்து விட்டேன். ஆனால் கிடைக்கவில்லை. இங்கே பின்னூட்டமிடும் சகோதரர்கள் யாருக்காவது தெரிந்தால் தயவுக்கூர்ந்து தெரியப்படுத்தவும்.
நன்றி,
உங்கள் சகோதரன்,
ஆஷிக் அஹ்மத் அ
சகோ. ஆஷிக்!
//முஹம்மத் நபி(ஸல்) அவர்களே ஏற்றுக்கொள்ளாத மரியாதையை ஏ.ஆர்.ரஹ்மான் எப்படி ஏற்பார்?
அவரை பாராட்டுவோம்.
நம் நாட்டில் பெரும்பாலோர்... அரசியலில், திருமணத்தில் என சூழ்நிலையாலோ, சம்பிரதாயத்தினாலோதான் கட்டாயப்படுத்தப்படுகிறார்கள்.//
உண்மைதான் சகோதரரே! மிகச் சிறப்பாக முகமது நபியின் வாழ்க்கையை தன் வாழ்க்கையில் பின் பற்றி வரும் பலரும் வரதட்சணை, திருமண சடங்குகள் என்று வரும்போது கொள்கைகளை மறந்து விடுகிறோம். சிறந்த பிரச்சாரத்தின் மூலமாகவே மாற்றங்களை கொண்டு வர முடியும்.
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!
வஅலைக்கும் சலாம் சகோதரர் ஆஷிக் அஹமத்!
//அவருடைய இமெயில் முகவரியை நான் தேடிப்பார்த்து விட்டேன். ஆனால் கிடைக்கவில்லை. இங்கே பின்னூட்டமிடும் சகோதரர்கள் யாருக்காவது தெரிந்தால் தயவுக்கூர்ந்து தெரியப்படுத்தவும். //
பின்னூட்டம் இடுபவர்கள் யாரும் அறிவித்தால் நானும் அவருக்கு ஒரு மெயில் அனுப்புகிறேன்.
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!
அஸ்ஸலாமு அலைக்கும். நான் சமீபத்தில் அதிர்ச்சி அடைந்த வீடியோ காட்சி!
https://www.facebook.com/video/video.php?v=1430669661728&oid=155526841144596&comments
Post a Comment