Followers

Monday, January 30, 2012

இரும்பின் அருமையை நாம் உணர்ந்தோமா?

இந்த பதிவை படிக்கும் முன் ஒரு விளக்கம். குர்ஆன் ஒரு அறிவியல் புத்தகம் அல்ல. அது மனிதன் எவ்வாறு தனது வாழ்வை அமைத்துக் கொள்ள வேண்டும் என்ற அறிவுரை அடங்கிய வேதம். இது இறைவனிடம் இருந்துதான் வந்ததா? அல்லது முகமது நபி தனது கற்பனையில் குர்ஆனைக் கொடுத்தாரா என்பதுதான் நமக்கு முன் உள்ள கேள்வி. முஸ்லிம்களை பொறுத்த வரையில் ஒரு பிரச்னையும் இல்லை. குர்ஆன் இறைவனின் வார்த்தைதான் என்பதில் எந்த சந்தேகமும் அவர்களிடத்தில் கிடையாது. மற்ற மதத்தவர் இந்த குர்ஆன் இறைவன் வாக்காக இருக்க முடியாது என்ற வாதத்தை வைக்கின்றனர். எனவே அந்த வாதத்தை எதிர் கொள்ள முஸ்லிம்களும் இது இறைவேதம்தான் என்பதை நிரூபிக்க சில அறிவியல் ஆதாரங்களை தர வேண்டிய நிர்பந்தம் உண்டாகிறது. அந்த வகையில் முன்பு கடலுக்கடியில் உள்ள இருள்களைப் பார்த்தோம். இந்த பதிவில் இரும்பைப் பற்றி குர்ஆன் என்ன சொல்கிறது. அதற்கு அறிவியல் அறிஞர்கள் என்ன சொல்கிறார்கள் என்பதை இந்த பதிவில் பார்ப்போம்.



நமது தூதர்களைத் தெளிவான சான்றுகளுடன் அனுப்பினோம். அவர்களுடன் வேதத்தையும் மக்கள் நீதியை நிலை நாட்ட தராசையும் அருளினோம். இரும்பையும் இறக்கினோம். அதில் கடுமையான ஆற்றலும் மக்களுக்குப் பயன்களும் உள்ளன.
-குர்ஆன் 57:25


மேற்கண்ட இந்த வசனம் மிகச்சிறந்த ஒரு அறிவியல் உண்மையை நமக்கு கூறிக் கொண்டிருக்கிறது. ஆகாயத்திலிருந்து மழைநீர் பொழிவதாக நாம் பார்த்திருப்போம். இரும்பு வானத்திலிருந்து பொழிவதை நாம் பார்த்ததில்லை. ஆனால் திருக்குர்ஆன் ஏழாம் நூற்றாண்டிலேயே ஆகாயத்திலிருந்து இரும்பு மழை பொழிவதைக் கூறிக் கொண்டிருக்கிறது. பூமியின் மீது விண்கற்கள் வந்து விழுவதை நாம் அடிக்கடி பத்திரிக்கை வாயிலாக படித்திருப்போம்.




இந்த விண்கற்களின் பெரும் பகுதி இரும்பும் சிலிக்கனும் ஆகும்.
சிலிக்கன் என்ற பெயரையோ, அப்படி ஒரு உலோகம் இருப்பது பற்றியோ முகமது நபி காலத்தில் தெரிந்திராத போதிலும் அந்த மக்கள் இரும்பின் தேவையைப் பற்றி நிறைய அறிந்தே வைத்திருந்தார்கள். இரும்பு என்பது பூமியிலிருந்து கிடைக்கக் கூடிய ஒரு தாதுப் பொருள் என்பது நமக்கு தெரியும். தாதுப் பொருட்கள் என்பது பூமியின் கட்டுமானப் பொருட்களே! எனவே பூமி படைக்கப்பட்டபோது இரும்பும் அதோடு சேர்ந்து இறைவனால் படைக்கப்பட்டாகி விட்டது.அப்படி பூமி படைக்கப்படும் போது இரும்பு எவ்வாறு பூமியின் கட்டுமானத்தில் வந்திருக்க முடியும் என்பதை இந்த காணொளி விளக்குகிறது.




விண்ணிலிருந்து வரும் விண்கற்களில் உள்ள இரும்புக்கும் நாம் பயன்படுத்தும் இரும்புக்கும் சில வித்தியாசங்கள் இருக்கிறது.

நமது முன்னோர்கள் பயன்படுத்தி வந்த உலோகங்களை விஞ்ஞானிகள் சோதனைக்கு உட்படுத்தினார்கள். அந்த மக்களின் உலோகங்களில் கசடுகளான கோபால்டு, சிலிக்கன் போன்றவை இருப்பது கண்டு விஞ்ஞானிகள் ஆச்சரியம் அடைந்தனர். ஏனெனில் நாம் பயன்படுத்தும் சாதாரண இரும்புகளில் இந்த கசடுகள் சேர வாய்ப்பில்லை. விண்ணில் இருந்து விழுந்த கற்களைக் கொண்டே அந்த மக்கள் உலோகங்களை செய்திருப்பது ஆராய்ச்சியில் தெரிய வந்தது. எனவேதான் இறைவன் நாம் விண்ணிலிருந்து இறக்கினோம். அதில் மனிதர்களுக்கு பெரும் பயன்பாடும் மிக்க வலிமைகளும் உண்டு எனக் கூறுகிறான்.

http://www.encyclopedia-of-meteorites.com/collection.aspx?id=2637

என்சைக்ளோபீடியாவின் இந்த பக்கத்துக்கு சென்று வானிலிருந்து விழுந்த இரும்பு துண்டுகளை நாடு வாரியாக படங்களோடு பாருங்கள். சில காணொளிகளும் நம்மை ஆச்சரியப்படுத்தும்.




'இரும்பில் மக்களுக்கு பயன்கள் உண்டு' என்ற இந்த வார்த்தையை ஒட்டி நாம் சிறிது ஆராய்வோம். நமது மருத்துவ உலகம் மனிதனுக்கு இரும்புச் சத்து எந்த வகையில் உபயோகமாக உள்ளது என்பதை பட்டியலிடுகிறது. அதை இனி பார்ப்போம்:

இயற்கையில் அபரிமிதமாக கிடைக்கும் இரும்புச் சத்து உடலின் நலத்திற்கு மிக அவசியமாகும். பெரும்பான்மையான புரதங்கள், என்சைம்கள் போன்றவற்றிற்கு இரும்புச் சத்து ஒரு இன்றியமையாத மூலப்பொருள். ஆக்ஸிஜன் ஒரு இடத்திலிருந்து இன்னோர் இடத்திற்கு உடலில் எடுத்து செல்ல இரும்புச் சத்து அவசியம். செல்கள் மேலும் பெருக, வளார்ச்சி அடைய இரும்பு முக்கியமான மூலப்பொருள். இரும்புச் சத்து குறைவால் போதிய ஆக்ஸிஜன் இல்லாமல் தளர்ச்சியும், வேலை செய்ய திறமை இல்லாமை போன்றவையும் நோய் எதிர்ப்பு சக்தி குறைவும் ஏற்படும். அதே சமயத்தில் இரும்புச் சத்து அதிகமானால் விஷமாகி இறக்கவும் நேரிடலாம்.

உடலில் 3ல் 2 பகுதி இரும்புச் சத்து ஹீமோக்லோபின் ஆக இரத்த சிவப்பணுக்களில் இருக்கிறது.இவை ஆக்சிஜனை திசுக்களுக்கு எடுத்து செல்லும். அதேபோல தசைகளில் உள்ள மையோ க்ளொபின் என்பது ஆக்சிஜனை தசைகளுக்கு மாற்றும். இவற்றிலும் இரும்பு சத்து உண்டு.

இரும்பை உறிஞ்ச தேவையான புரதத்திலும் இரும்புச் சத்து உள்ளது. அதேபோல அதிக இரும்பை சேகரித்து வைக்க உதவும் என்சைம்களில் இரும்பு இருக்கிறது. ஹீம், ஹீம் அல்லாத வகை என இரண்டு வகைகளில் இரும்பு உடலில் இருக்கிறது. இது பெரும்பாலும் புலால் உணவில் கிடைக்கும். பருப்பு வகைகளில் இருக்கும் இரும்பு ஹீம் அல்லாத வகையில் இருக்கிறது. குழந்தைகளுக்காக கிடைக்கும் பாலில் சேர்க்க படும் இரும்புச் சத்து இந்த வகையை சேர்ந்ததே.

உலக சுகாதார மையம் இரும்புச் சத்தின் குறைவால் வரும் நோய்கள்தான் உலகில் உண்ணும் பழக்கத்தால் வரும் நோய்களில் முதன்மையானவை என்று கூறுகிறார்கள். உலகின் 80% மக்கள் இரும்பு குறைவாக கொண்டவர்கள் அதில் 30% மக்கள் இரும்பு குறைவதால் வரும் இரத்த சோகை கொண்டவர்கள் எனக் கூறுகிறார்கள்.

………Iron is an essential element for most life on Earth, including human beings. Most of the human body's iron is contained in red blood cells……
- http://en.wikipedia.org/wiki/Human_iron_metabolism

Without the iron atom, there would be no carbon-based life in the cosmos; no supernovae, no heating of the primitive earth, no atmosphere or hydrosphere. There would be no protective magnetic field, no Van Allen radiation belts, no ozone layer, no metal to make hemoglobin [in human blood], no metal to tame the reactivity of oxygen, and no oxidative metabolism.
-Nature’s Destiny, the well-known microbiologist Michael Denton emphasizes the importance of iron.





அமெரிக்க நாசா நிறுவனத்தில் புரபசராக வேலை செய்யும் விஞ்ஞானி ஆம்ஸ்ட்ராங் சிறந்த அறிவியல் அறிஞர். the National Aeronautics and Space Administration என்ற நிறுவனத்தில் மிகப் பிரபல்யமானவர். 'வானியலைப் பற்றி குர்ஆன் என்ன கூறுகிறது?' என்று பல ஆராய்ச்சிகளை செய்துள்ளார். உலகில் உள்ள அனைத்து திட பொருட்களும் எவ்வாறு உருவாகியிருக்க முடியும் என்ற முடிவுகளையும் அறிந்து வைத்துள்ளார். மேலும் இரும்பை உருவாக்கும் முறையை விஞ்ஞானிகள் சமீப காலங்களில்தான் கண்டு பிடித்தனர். இரும்பின் அடிப்படை உருவாக்கத்தை பெற போதிய சக்தியற்று இருந்தோம். அதாவது இரும்பை உருவாக்கும் ஒரு அணுவை உற்பத்தி செய்ய போதிய சக்தியை இந்த பிரபஞ்சம் பெற்றிருக்கவில்லை என்கிறது அறிவியல் முடிவுகள். எனவே இந்த இரும்பானது வேறு ஒரு கிரகத்திலிருந்து நமது பூமிக்கு வந்திருக்க வேண்டும் என்ற முடிவுக்கு வருகின்றனர் நமது விஞ்ஞானிகள்..

அதிலும் நமது பிரபஞ்சத்திலிருந்து இரும்பு வந்திருக்க முடியும் என்ற நம்பிக்கையையும் விஞ்ஞானிகள் ஏறத்தாழ கைகழுவி விட்டனர். நமது சூரியனை விட மிகப் பெரும் ஒரு நட்சத்திரத்திலிருந்து இந்த இரும்பானது வந்திருக்கலாம் என்ற ரீதியில் ஆராய்ச்சிகள் தற்போது நடந்து வருகிறது. சில நூறு மில்லியன் டிகிரி செல்சியஸ் அளவில் உள்ள வெப்பத்துடன் கூடிய ஒரு நட்சத்திமாக அது இருக்கலாம் என்பது இவர்களின் கணிப்பு. இரும்பின் அடர்த்தி குறிப்பிட்ட நட்சத்திரத்தில் அதிகரிக்கும் போது வெடித்து சிதறி வால் நட்சத்திரங்களாக பூமியை நோக்கி வந்திருக்கலாம். அது வானுலக விசையாக இருக்கலாம் என்ற முடிவுக்கும் வருகின்றனர் விஞ்ஞானிகள்.



“இரும்பையும் இறக்கினோம்”

அதிலும் கூட தனிமங்களாக இல்லாமல் முழு இரும்பாகவே இந்த பூமிக்கு வந்திருக்க வேண்டும் என்ற முடிவுக்கு வருகின்றனர் விஞ்ஞானிகள். இனி குர்ஆனுடைய வசனத்தைப் பார்ப்போம். 'இரும்பையும் இறக்கினோம்: அதில் பல உபயோகங்கள் மனித குலத்துக்கு உள்ளது' என்ற வசனத்தை நாம் சிந்தித்தோமானோல் தற்கால அறிவியல் முடிவோடு குர்ஆன் ஒத்து செல்வதை எண்ணி பிரமிக்கிறோம். வேறு எத்தனையோ பொருள்கள் அனைத்தும் பூமியிலேயே நமக்கு கிடைத்துக் கொண்டிருக்க அதை எல்லாம் குர்ஆன் சொல்லாமல் இரும்பை மட்டும் தனித்து சொல்வதால் அதுவும் தற்கால அறிவியலோடு முற்றிலும் ஒத்து போவதால் இது இறை வேதம்தான் என்பது மேலும் உறுதியாகிறது.


பண்டைய எகிப்தியர்களும் இரும்பை 'சொர்க்கத்தின் உலோகம்' என்று குறிப்புகள் எழுதியுள்ளது கிடைக்கப் பெறுகிறது. குர்ஆனுக்கு முந்தய இறை வேதங்களிலும் இந்த செய்தி சொல்லப் பட்டிருக்க வேண்டும். எனவேதான் பண்டைய எகிப்தியர்களுக்கும் இந்த உண்மை தெரிந்திருக்கிறது. பண்டைய எகிப்துக்கு மோசே என்ற இறைத் தூதர் வந்ததும் அவருக்கு கொடுக்கப்பட்ட வேதம் தோரா என்பதும் நமக்கு முன்பே தெரியும்.

'இது அகிலத்தாருக்கு அறிவுரை தவிர வேறில்லை. சிறிது காலத்திற்கு பிறகு இதனுடைய செய்தியை அறிந்து கொள்வீர்கள்.'

-குர்ஆன் 38:87,88

ஆம். இந்த குர்ஆன் மனிதன் தனது வாழ்வை எவ்வாறு அமைத்துக் கொண்டால் வெற்றி பெறுவான் என்பதை விளக்கும் ஒரு வேதம். வெறுமனே மரியாதை செய்கிறோம் என்று கண்களில் ஒத்திக் கொள்வதை விட அதன் மொழிபெயர்ப்பை வாசித்து இறைவன் நம்மோடு என்ன பேசுகிறான் என்பதை ஒவ்வொரு மனிதனும் விளங்க வேண்டும் என்பதற்காகத்தான் குர்ஆனை அருளியதாக இறைவன் கூறகிறான். இந்த குர்ஆனில் சொல்லப்பட்டிருக்கும் பல உண்மைகள முகமது நபி காலத்திய மக்களுக்கு விளங்கா விட்டாலும் பின்னால் வரக் கூடிய அறிவார்ந்த சமூகம் விளங்கிக் கொள்ள பல அத்தாட்சிகள் இதில் இருக்கிறது என்பதையும் இறைவன் குறிப்பிடுகிறான்.

References
1.↑ Kathryn A. Bard - Encyclopedia of the archaeology of ancient Egypt (P. 526) - Routledge; Ill edition, May 14, 1999, ISBN 978-0415185899
2.↑ Kate Melville - Sun's Iron Core May Be Cause Of Solar Flares - Science a Go Go, November 3, 2003
3.Harun yahya.com
4.wikipedia
5. http://www.encyclopedia-of-meteorites.com/collection.aspx?id=2637

23 comments:

VANJOOR said...

சொடுக்கி கேளுங்க‌ள்



>>>>
குரானில் புனைவுகள் இல்லை. குரான் காலச்சுவடுகள் - விடியோக்கள். குரான் வசனங்களில் கூறப்பட்டிருக்கும் நபிமார்கள்
வாழ்ந்த, நிகழ்வுகளின் இடங்களை காணுவோம் வாருங்கள்.
<<<<<<<

NKS.ஹாஜா மைதீன் said...

நல்ல பதிவு...இதுபோல திருக்குர்ஆன் கூறும் மேலும் பல அறிவியல் உண்மைகளை ஆராய்ந்தால் இது இறைவேதம் என்பதில் யாரும் மாறுபட முடியாது....நன்றி...சலாம்...

~முஹம்மத் ஆஷிக் citizen of world~ said...

சலாம் சகோ.சுவனப்பிரியன்,

////எனவே இந்த இரும்பானது வேறு ஒரு கிரகத்திலிருந்து நமது பூமிக்கு வந்திருக்க வேண்டும் என்ற முடிவுக்கு வருகின்றனர் நமது விஞ்ஞானிகள்..

நமது சூரியனை விட மிகப் பெரும் ஒரு நட்சத்திரத்திலிருந்து இந்த இரும்பானது வந்திருக்கலாம் என்ற ரீதியில் ஆராய்ச்சிகள் தற்போது நடந்து வருகிறது.

சில நூறு மில்லியன் டிகிரி செல்சியஸ் அளவில் உள்ள வெப்பத்துடன் கூடிய ஒரு நட்சத்திமாக அது இருக்கலாம் என்பது இவர்களின் கணிப்பு.

இரும்பின் அடர்த்தி குறிப்பிட்ட நட்சத்திரத்தில் அதிகரிக்கும் போது வெடித்து சிதறி வால் நட்சத்திரங்களாக பூமியை நோக்கி வந்திருக்கலாம்.

அது வானுலக விசையாக இருக்கலாம் என்ற முடிவுக்கும் வருகின்றனர் விஞ்ஞானிகள்.

“இரும்பையும் இறக்கினோம்”////

இறைவனின் ஆற்றலை பறைசாற்றக்கூடிய குர்ஆன் வசனங்கள்...

ஆழமாக உணர்ந்து வாசித்தால் அளவிடமுடியாத விளக்கங்கள்...

மிக அருமையான பதிவு.
நன்றி சகோ.

எல்லா புகழும் இறைவனுக்கே..!

suvanappiriyan said...

சலாம் சகோ ஆஷிக்!

//இறைவனின் ஆற்றலை பறைசாற்றக்கூடிய குர்ஆன் வசனங்கள்...

ஆழமாக உணர்ந்து வாசித்தால் அளவிடமுடியாத விளக்கங்கள்...//

எழுதப் படிக்கத் தெரியாத படிப்பறிவற்ற சமூகத்திலிருந்து வந்த ஒருவர் இவ்வாறு கூற முடியுமா? இது சாத்தியம்தானா என்பதை எதிர்க் கருத்து உடையவர்க்ள சிந்திக்க வேண்டும்.

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோ!

suvanappiriyan said...

சலாம் சகோ ஹாஜா மைதீன்!

//நல்ல பதிவு...இதுபோல திருக்குர்ஆன் கூறும் மேலும் பல அறிவியல் உண்மைகளை ஆராய்ந்தால் இது இறைவேதம் என்பதில் யாரும் மாறுபட முடியாது....நன்றி...சலாம்...//

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!

suvanappiriyan said...

சலாம் வாஞ்சூர் பாய்!

//சொடுக்கி கேளுங்க‌ள்//

வருகைக்கும் சுட்டிகளை பகிர்ந்தமைக்கும் நன்றி!

naren said...

திரு.சுவனப்பிரியன்,
எல்லா உலோகங்களும் அருமையான உலோகங்கள் தான். ஒவ்வொரு உலோகங்களுக்கும் ஒவ்வொரு பயன்பாடு இருக்கும்.

periodic tables இருக்கிற உலோகங்களைப் பற்றி சொல்லியிருந்தால் குரானின் பெருமை எங்கேயோ போயிருக்கும்.

அதை விடுங்க...இந்த ஹாரூண் யாய்யா என்ற பெயரை பதிவில் பார்த்தேன்..

1) அவர் தன்னை ஒரு மஹதி என்று அழைத்துக் கொள்கிறாராமே? அது உண்மையா.

2) மஹதி வரும் சமயத்தில் செருப்புகள் பேசும் என்று சொல்லப்பட்டிருக்கிறதே. செருப்பு பேசுவதில் ஏதாவது சிறப்பு இருக்கிறதா?? செருப்பு எப்படி பேச முடியும்? இப்போதுள்ள செருப்புகள் எல்லாம் விஞ்ஞானத்தின் உதவியுடன் பேசுகின்றன அதனால் மஹதி வந்துவிட்டாரென்று அர்த்தமா?

3) மஹதி வரும் சமயத்தில் மேற்கே சூரியன் உதிப்பதை தவிர வேறு என்னவெல்லாம் நடக்கும்???

suvanappiriyan said...

சகோ நரேன்!

//1) அவர் தன்னை ஒரு மஹதி என்று அழைத்துக் கொள்கிறாராமே? அது உண்மையா.//

தவறாக விளங்கிக் கொள்ளப்பட்டது என்று அவரே மறுத்துள்ளார்.

//2) மஹதி வரும் சமயத்தில் செருப்புகள் பேசும் என்று சொல்லப்பட்டிருக்கிறதே. செருப்பு பேசுவதில் ஏதாவது சிறப்பு இருக்கிறதா?? செருப்பு எப்படி பேச முடியும்?//

உயிரற்ற பொருட்கள் பேசுவது

விலங்கினங்கள் மனிதனிடம் பேசும் வரையிலும் தோல் சாட்டையும் செருப்பு
வாரும் மனிதனிடம் பேசும் வரையிலும் யுக முடிவு நாள் ஏற்படாது என்பதும்
நபிமொழி.

நூல்: அஹ்மத் 11365

செருப்புகளும் செருப்புகளுக்கு வாராகவும் தோல்களையும் பிளாஸ்டிக் பொருள்களையும் தற்காலத்தில் உபயோகப்படுத்துகிறோம். ஒளி நாடாக்களிலும் குறுந்தகடுகளிலும் கம்யூட்டர் சிப்களிலும் இந்த பொருட்களின் உதவி கொண்டுதான் உற்பத்தியே செய்கிறோம். அவை எல்லாம் நாம் பேசியதை பதிக்கின்றன. பிறகு தேவைப்படும்போது நமக்கு ஒலி ஒளி திரும்பவும் தருகின்றன.

//இப்போதுள்ள செருப்புகள் எல்லாம் விஞ்ஞானத்தின் உதவியுடன் பேசுகின்றன அதனால் மஹதி வந்துவிட்டாரென்று அர்த்தமா?//

இல்லை. இதுபோல் இன்னும் பல அடையாளங்கள் உள்ளன.

//3) மஹதி வரும் சமயத்தில் மேற்கே சூரியன் உதிப்பதை தவிர வேறு என்னவெல்லாம் நடக்கும்???//

செல்வம் பொங்கிப் பிரவாகித்து, அதற்கான ஸகாத்தைப் பெறுவதற்கு எவரும் கிடைக்காத நிலையும், அரபுப் பிரதேசம் நதிகளும், சோலைகளும் கொண்டதாக மாறும் நிலையும் ஏற்படாமல் அந்த நாள் ஏற்படாது. (நூல் : முஸ்லிம் 1681)

யுக முடிவு நாள் நெருங்கும் போது விபச்சாரமும், மதுவும் பெருகும் என்று நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் குறிப்பிட்டுள்ளனர். (நூல் : புகாரி 80, 81, 5577, 6808, 5231)

ஆடை அணிந்தும் நிர்வாணமாகத் தோற்றமளிக்கும் பெண்கள் இனி மேல் தோன்றுவார்கள் என்பதும் நபிமொழியாகும். (நூல் : முஸ்லிம் 3971, 5098)
பூகம்பங்கள் அதிகரிப்பதும் யுக முடிவு நாளின் அடையாளமாகும் என்று நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் குறிப்பிட்டுள்ளனர். (நூல்: புகாரி 1036, 7121)

இது போன்று 20க்கும் மேற்பட்ட அடையாளங்களை முகமது நபி கூறியிருக்கிறார். இணையத்தில் தேடினால் கிடைக்கும்.

R.Puratchimani said...

சகோ,
நான் இசுலாமுக்கு எதிராக எழுதுவதாக என்ன வேண்டாம்....நான் உண்மையை அறியும் முயற்சியில் சில மத புத்தகங்களை படித்து கொண்டிருக்கின்றேன். அதில் குரானும் ஒன்று.

இருப்பினும் ஒன்று முரணாக இருக்கும் பொழுது "எடுத்துரைப்பதே உனது பணி" என்ற இறை வேதத்தின் படி அதை பகிர்வதும் என்னுடைய கடமை என்றே கருதுகிறேன்.

கிருத்து பிறப்பதற்கு ஐநூறு ஆண்டுகளுக்கு முன்பே இதை பற்றி கிரேக்கம் மற்றும் ரோம மொழி புத்தகங்களில் உள்ளதாக தெரியவருகிறது.

The fall of the famous Aegospotami meteorite circa 469-467 B.C. on ancient Thracian Chersonese (modern Gallipoli Peninsula, near the Dardanelle, now part of Turkey) at Goat River is a second example and one of many reports of meteorites identified by D’Orazio in the ancient Greek and Roman literature. (6)

http://www.semp.us/publications/biot_reader.php?BiotID=452


Meteorites have traditionally been divided into three broad categories: stony meteorites are rocks, mainly composed of silicate minerals; iron meteorites are largely composed of metallic iron-nickel; and, stony-iron meteorites contain large amounts of both metallic and rocky material.

மேலே இரும்பு என்ற வார்த்தையை அவர்கள் உபயோக படுத்தினார்கள என தெரியவில்லை. ஆனால் இரும்பும் அதில் அடங்கும். கிரேக்க புத்தகத்தை படித்தால் இன்னும் தெரியவரலாம்.

மேலும் பைபிளிலும் இதை பற்றி குறிப்பு உள்ளதாக தெரிகிறது...

Probably the oldest report about stones falling to Earth is in the Book of Joshua in the Bible, describing the time of the Israelites in either the 15th or 13th centuries. “As they [the Canaanite kings] fled from before Israel, and were in the going down to Beth-horon…the Lord cast down great stones from heaven upon them [italics by author] unto Azekah, and they died: they were more which died with hail stones (stones ofbarad) than they whom the children of Israel slew with the sword.” (Joshua 10:11) http://www.semp.us/publications/biot_reader.php?BiotID=452

நன்றி

Anonymous said...

Bro,
/ இரும்பையும் இறக்கினோம். அதில் கடுமையான ஆற்றலும் /
இரும்பில் கடுமையான ஆற்றல் ????அவர் இரும்புக்கு பதிலா உரேனியம் அல்லது தோரியத்த சொல்லி இருக்கலாம்...அதையும் அவர்தானே படைத்தார் உங்க வாதப்படி...

ஆனா சத்தியமா நான் மலைச்சு போயிட்டேன் ..உங்களோட ஆராய்ச்சி திறன பத்தி....இரும்புன்னு ஒத்த வரத்தைய வச்சி சும்மா சுத்தி சுத்தி அடிசிருக்கேங்க .....

நல்ல வேளை "அணுவை துளைத்து" அப்படிண்ணு ஒளவையார் மாதிரி எதுவும் சொல்லல ..இல்லேன்னா கூடங்குளம் அணு விஞ்ஞானி மாதிரி அணு பிளவும் அதன் ஆற்றலும் அல்லவும்னு ஒரு பதிவ விட்டுருப்பீங்க...

Bro i have no rights to comment anything personal about you but can't control after reading most of your posts....pls comeout of the religion...u follow your religion and u have every right to it but dont measure or see anything through religion.

Thanks
Raja

suvanappiriyan said...

சகோ புரட்சிமணி!

//நான் இசுலாமுக்கு எதிராக எழுதுவதாக என்ன வேண்டாம்....நான் உண்மையை அறியும் முயற்சியில் சில மத புத்தகங்களை படித்து கொண்டிருக்கின்றேன். அதில் குரானும் ஒன்று.//

தாராளமாக நீங்கள் எந்தக் கேள்வியையும் கேட்கலாம்.

//கிருத்து பிறப்பதற்கு ஐநூறு ஆண்டுகளுக்கு முன்பே இதை பற்றி கிரேக்கம் மற்றும் ரோம மொழி புத்தகங்களில் உள்ளதாக தெரியவருகிறது.//

'மனிதர்கள் ஒரே ஒரு சமுதாயமாகவே இருந்தனர். எச்சரிக்கை செய்யவும் நற்செய்தி கூறவும் நபிமார்களை இறைவன் அனுப்பினான். மக்கள் முரண்பட்டவற்றில் அவர்களிடையே தீர்ப்பு வழங்குவதற்காக அவர்களுடன் உண்மையை உள்ளடக்கிய வேதத்தை அருளினான்'

-குர்ஆன் 2:213

இது போன்று பல இடங்களில் உலகில் உள்ள அனைத்து மொழிகளுக்கும் வேதத்தை அருளியதாக இறைவன் கூறுகிறான். எனவே கிரேக்க மொழியில் முன்பு வேதம் வந்திருக்கலாம். அதில் கூட இது போன்ற செய்திகளை இறைவன் கொடுத்திருக்கலாம். எகிப்திய மக்கள் கூட இந்த இரும்பை 'சொர்க்கத்தின் உலோகம்' என்று சொன்னதாக இந்த பதிவிலேயே குறிப்பிட்டு இருக்கிறேன்.

நீங்கள் குறிப்பிடும் பைபிளிலும் கூட இந்த செய்தி வந்திருக்கலாம். ஏனெனில் பைபிளும் இறைவன் அருளிய வேதம்தானே! பிற்பாடு பவுல் வந்து மாற்றியதால்தான் புதிய ஏற்பாட்டில் பல குளறுபடிகள் வந்துள்ளது. எனவே நீங்கள் சொல்லும் கருத்தை நான் மறுக்கவில்லை.

இந்த உண்மைகள் முகமது நபிக்கு எப்படி தெரிந்தது என்பதுதான் நமது கேள்வி. ஏனெனில் முகமதுயை சுற்றி வாழ்ந்த சமூகம் படிப்பறிவற்ற சமூகம். வட்டி, கொலை, சூது, மது. விபசாரம் இவை எல்லாம் கொடி கட்டி பறந்தது அந்த சமூகத்தில். அதிலும் முகமது நபிக்கு எழுதவும் படிக்கவும் தெரியாது. ஒரு ஒப்பந்தத்தில் கையெழுத்து இடும்போது 'தனது பெயர் எங்கே' என்று கேட்கும் நிலையில்தான் முகமது நபியின் படிக்கும் திறமை இருந்தது.

அடுத்து அவரை சுற்றியிருந்தவர்கள் இது போன்ற அறிவியல் சம்பந்தமான கேள்விகளையும் கேட்கவில்லை. ஏனெனில் அதைப்பற்றிய அறிவும் அன்று அந்த மக்களிடத்தில் இல்லை. இன்று உள்ளது போல் இணைய வசதியோ மற்றதகவல் தொடர்பு சாதனங்களோ அன்று கிடையாது. இந்த நிலையில் அவர் வேறு வேதங்களில் சொன்னதை குர்ஆனாக கொடுத்தார் என்ற வாதம் அடிபட்டுப் போகிறது.

அடுத்து பைபிளிலும் குர்ஆனிலும் சில பெயர்கள் ஒன்றாக வந்தாலும் அவர்களைப் பற்றிய வரலாறு சுத்தமாக மாறுபடுகிறது. முக்கியமாக ஏசுவின் இறப்பிலேயே பெருத்த வேறுபாடு இரண்டு வேதங்களுக்கும உண்டு.

அடுத்து இதைச் சொல்லித்தான் தூதர் என்பதை நிலை நிறுத்த வேண்டிய அவசியம் அன்று முகமது நபிக்கு இல்லை.. ஏனெனில் விளங்காத சமூகத்திடம் இது போன்ற அறிவியல் கருத்துகளை சொல்வதால் என்ன மாற்றம் வந்து விட முடியும்? இந்த வசனங்களெல்லாம் பிற் காலத்தில் வரக் கூடிய அறிவு சார்ந்த சமூகத்துக்கு இது இறை வேதம்தான் என்பதை தெரிந்து கொள்வதற்காகவே இறைவன் கொடுத்துள்ளான். குர்ஆனிலும் இதைத்தான் இறைவனும் சொல்கிறான்.

எவ்வளவுதான் ஒருவர் திறமையாக காப்பி அடித்திருந்தாலும் ஏதாவது ஒன்றிரண்டு இடத்திலாவது மனிதன் என்ற முறையில் தடுமாற்றம் வந்தே இருக்கும். அதிலும் 20 வருடத்துக்கு மேலாக சிறு சிறு பகுதிகளாக அருளப்பட்டதுதான் குர்ஆன் என்பதையும் இங்கு நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.

தொடர்ந்து கருததுகளை சொல்லி வாருங்கள். வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!

suvanappiriyan said...

சகோ ராஜா!

//அவர் இரும்புக்கு பதிலா உரேனியம் அல்லது தோரியத்த சொல்லி இருக்கலாம்...அதையும் அவர்தானே படைத்தார் உங்க வாதப்படி...//

உரேனியத்தையும் தோரியத்தையும் சொல்லியிருந்தால் ஏன் இரும்பை சொல்லியிருக்கலாமே என்று கேட்பீர்கள். எனவே கேள்விக்கு எல்லை ஏது? உரேனியத்தையும் தோரியத்தையும் விட அதிக பயன்பாடு மனிதனுக்கு இரும்பிலிருந்துதானே கிடைக்கிறது. 'இரும்பையும்' என்ற வார்த்தையிலிருந்து மற்ற பொருள்களையும் அந்த இறைவனே படைத்திருக்க இரும்பின் அவசியத்தை மனிதன் உணர வேண்டும் எனபதற்காககத்தான் பிரத்யேகமான இந்த வார்த்தை. இதில் அறிவியல் முரண் என்ன இருக்கிறது?

//Bro i have no rights to comment anything personal about you but can't control after reading most of your posts....pls comeout of the religion...u follow your religion and u have every right to it but dont measure or see anything through religion.//

அறிவைத் தேடுவதற்கு மதத்தை விட்டோ அல்லது மார்க்கத்தை விட்டோ வெளியேற வேண்டும் என்ற நிலைப்பாட்டை ஏன் எடுக்கிறீர்கள்? மார்க்கத்தை விட்டு வெளியேறியவர்களால் அவர்களின் குடும்பத்தவரையே நாத்திகத்தின் பால் கொண்டு வர முடியவிலலையே! ஒருவரின் அறிவு வளர்ச்சிக்கு ஆத்திகம் என்றுமே தடையாக இருந்ததில்லை.

ஆனால் மத கருத்துகளின் மூலம் மற்ற மதத்தவரை கொல்வதோ கொடுமைக்குள்ளாக்குவதையோ அது எந்த மார்க்கமாக இருந்தாலும் நான் எதிர்க்கிறேன். இஸ்லாமும் எதிர்க்கிறது.

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!

Raja said...

Bro,
நான் "இரும்பில் கடுமையான ஆற்றல்" என்பதைத்தான் வினவியிருந்தேன்....இரும்பில் ஆற்றல் இருக்கலாம் ; ஆனால் கடுமையான என்று சொல்லும் அளவுக்கு ஒன்றும் இல்லை. மற்ற ஆற்றல் மிக்க தனிமங்களன உரேனியம், தோரியம், கோபல்டை ஒப்பிடும்போது இரும்பில் ஒன்றும் இல்லை.....இங்கு பயன் வேறு ஆற்றல் வேறு....

R.Puratchimani said...

வணக்கம் சகோ

// இந்த உண்மைகள் முகமது நபிக்கு எப்படி தெரிந்தது என்பதுதான் நமது கேள்வி. ஏனெனில் முகமதுயை சுற்றி வாழ்ந்த சமூகம் படிப்பறிவற்ற சமூகம். வட்டி, கொலை, சூது, மது. விபசாரம் இவை எல்லாம் கொடி கட்டி பறந்தது அந்த சமூகத்தில். அதிலும் முகமது நபிக்கு எழுதவும் படிக்கவும் தெரியாது//


நபி இவர்களோடு மட்டும் வாழவில்லை அவர் யூதர்களோடும்,கிருத்துவர்களோடும் வாழ்ந்துள்ளார் என தெரியவருகிறது. எனவே யூத,கிருத்துவ மதத்தில் உள்ள கருத்துக்கள் செவி வழியாக அவருக்கு வந்திருக்க வாய்ப்புகள் நிறையவே உள்ளது. மேலும் அவர் காலத்தில் கிருத்துவர்களும் மதப் பிரச்சாரம் செய்து வருகிறார்கள். அதாலால் அதையும் அவர் கேள்வி பட்டிருக்க வாய்ப்புகள் மிக அதிகம்.

//// இந்த நிலையில் அவர் வேறு வேதங்களில் சொன்னதை குர்ஆனாக கொடுத்தார் என்ற வாதம் அடிபட்டுப் போகிறது.//

இன்னும் வாதம் அடிபடவில்லை வில்லை என்று எனக்கு தெரிகிறது.

முகமது நபி குரானை எழுத வில்லை வாயால் தான் சொன்னார் என்று சொல்லப்படுகிறது. அதுவும் இருபத்து மூன்று ஆண்டுகள். அவப்பொழுது கேள்வி பட்டதை அவப்பொழுது வாயால் சொல்ல, எழுத படிக்க தேவையில்லை என்பதை நீங்கள் ஒப்புக்கொள்வீர்கள் என நினைக்கின்றேன்.

//எவ்வளவுதான் ஒருவர் திறமையாக காப்பி அடித்திருந்தாலும் ஏதாவது ஒன்றிரண்டு இடத்திலாவது மனிதன் என்ற முறையில் தடுமாற்றம் வந்தே இருக்கும்.//
கண்டிப்பாக குர்ஆனில் அந்த தடு மாற்றம் தெரிகிறது. அதை இறைவன் விரும்பினால் விரைவில் பதிவிடுவேன்.

இதை சொல்வதால் என்னை நாத்திகவாதி என்றோ வேறு மதவாதி என்றோ நீங்கள் எண்ணக்கூடும். நபிகள் இறைவனை தரிசித்திருப்பார் என்பதில் எனக்கு எள்ளளவும் சந்தேகமேயில்லை. அதே நேரத்தில் குர்ஆனில் உள்ளவை யாவும் இறை வேதம் என்பதில் எனக்கு சிறிது சந்தேகம் உள்ளது. இறைவன் விரும்பினால் உண்மை எனக்கோ அல்லது உங்களுக்கோ தெரிய வரும்.

மிக்க நன்றி சகோ...

Radhakrishnan said...

இரும்பு பற்றிய பயனுள்ள விசயங்கள் தெரிந்து கொண்டேன்.

இரும்பு இந்த பூமியின் அரும்பு, கரும்பு மற்றும் துரும்பு. இரும்பு காந்த சக்தி உடையது. மேலும் பேரிச்சம்பழம் இரும்பு சக்தியை அதிகரிக்க வல்லது என சொல்வார்கள்.

அரபு நாடு பகுதிகளில் பேரிச்சம்பழம் அதிகம் விளையுமாமே, உண்மையா?

உலோக காலங்கள் வந்து குறைந்தது எட்டாயிரம் வருடங்கள் எனவும், தான் தோன்றி தனமாக திரிந்த மனிதர்கள் உலோகங்களை அதிகம் பயன்படுத்தினார்கள் எனவும் வரலாறு சொல்கிறது.

இரும்பு மிகவும் பலமிக்கது என பண்டைய காலங்களில் மக்கள் அறிந்து இருந்தார்கள்.

தொடர்ந்து எழுதுங்கள், திருக்குரான் மூலமாக பிற விசயங்கள் அனைவரும் கற்று கொள்வதில் தவறில்லை.

அரபுத்தமிழன் said...

மாஷா அல்லாஹ், என் கடன் பணி செய்து கிடப்பதே
வலவ் கரிஹல் காஃபிரூன் ‍(நிராகரிப்போர் வெறுத்தாலும் சரி)
என்ற ரீதியில் செ(வெ)ன்றுகொண்டே இருப்பதற்கு வாழ்த்துகள்.
ஜசாக்கல்லாஹ்.

suvanappiriyan said...

சகோ ராதா கிருஷ்ணன்!

//இரும்பு இந்த பூமியின் அரும்பு, கரும்பு மற்றும் துரும்பு. இரும்பு காந்த சக்தி உடையது. மேலும் பேரிச்சம்பழம் இரும்பு சக்தியை அதிகரிக்க வல்லது என சொல்வார்கள்.

அரபு நாடு பகுதிகளில் பேரிச்சம்பழம் அதிகம் விளையுமாமே, உண்மையா?//

நீங்கள் கூறுவது உண்மையே! இரும்பு சத்து அதிகம் உள்ள பழங்களில் பேரித்தம் பழமும் ஒன்று. பாலைவனப் பிரதேசங்களில் இந்த பழங்கள் அதிகம் விளையும். எந்த அளவு வெயில் அதிகம் படுகிறதோ அந்த அளவு ருசியும் அதிகரிக்கும்.

//இரும்பு மிகவும் பலமிக்கது என பண்டைய காலங்களில் மக்கள் அறிந்து இருந்தார்கள்.

தொடர்ந்து எழுதுங்கள், திருக்குரான் மூலமாக பிற விசயங்கள் அனைவரும் கற்று கொள்வதில் தவறில்லை.//

எந்த ஒரு விஷயத்தையும் தெரிந்து கொள்வது நமது அறிவை மேம்படுத்தும். அழகாக சொல்லியிருக்கிறீர்கள். நேரம் கிடைக்கும் போது பகிருகிறேன்.

முதல் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!

suvanappiriyan said...

சகோ அரபு தமிழன்!

//மாஷா அல்லாஹ், என் கடன் பணி செய்து கிடப்பதே
வலவ் கரிஹல் காஃபிரூன் ‍(நிராகரிப்போர் வெறுத்தாலும் சரி)
என்ற ரீதியில் செ(வெ)ன்றுகொண்டே இருப்பதற்கு வாழ்த்துகள்.
ஜசாக்கல்லாஹ்.//

உங்களைப் போன்றவர்களின் ஊக்கமான பின்னூட்டங்கள்தான் இத போன்ற பதிவுகளை இட ஆர்வமூட்டுகிறது.

வருகைக்கும் கருத்தைப் பதிந்தமைக்கும் நன்றி!

suvanappiriyan said...

சகோ புரட்சி மணி!

//நபி இவர்களோடு மட்டும் வாழவில்லை அவர் யூதர்களோடும்,கிருத்துவர்களோடும் வாழ்ந்துள்ளார் என தெரியவருகிறது. எனவே யூத,கிருத்துவ மதத்தில் உள்ள கருத்துக்கள் செவி வழியாக அவருக்கு வந்திருக்க வாய்ப்புகள் நிறையவே உள்ளது. மேலும் அவர் காலத்தில் கிருத்துவர்களும் மதப் பிரச்சாரம் செய்து வருகிறார்கள். அதாலால் அதையும் அவர் கேள்வி பட்டிருக்க வாய்ப்புகள் மிக அதிகம்.//

நான் முன்பே சொன்னது போல் முகமது நபி கிறித்தவர்களின் வேதத்தைப் பாரத்து குர்ஆன் எழுதினால் அது பைபிளை ஒட்டியல்லவா இருக்க வேண்டும்? 80 சதவீத பைபிளோடு குர்ஆன் முரண்படுகிறது. 20 சதவீதம் இரண்டு வேதங்களிலும் வரலாறுகள் ஒன்று போல் வந்தாலும் அதில் நடக்கும் சம்பவங்கள் வேறு வேறாக இருக்கின்றன. பெயர்கள்தான் ஒத்து வருகிறது. யூதர்களின் வேதததை எடுத்துக் கொண்டாலும் இதே நிலைதான்.

//கண்டிப்பாக குர்ஆனில் அந்த தடு மாற்றம் தெரிகிறது. அதை இறைவன் விரும்பினால் விரைவில் பதிவிடுவேன்.//

தாராளமாக பதிவிடுங்கள். ஆனால் அத்தியாயம் வசன எண் அனைத்தும் நன்றாக சரிபார்த்து கொண்டு பதிவிடுங்கள். எனது கருத்தையும் சொல்கிறேன்.

R.Puratchimani said...

//நான் முன்பே சொன்னது போல் முகமது நபி கிறித்தவர்களின் வேதத்தைப் பாரத்து குர்ஆன் எழுதினால் அது பைபிளை ஒட்டியல்லவா இருக்க வேண்டும்? 80 சதவீத பைபிளோடு குர்ஆன் முரண்படுகிறது//


இரும்பை பற்றிய வசனத்தை காட்டி இதை அறிந்திருந்ததால் அவர் இறைத்தூதர் தான், குரான் இறைவேதம் தான் என்றீர்கள். ஆதலால் தான் அது ஏற்க்கனவே வேறு இறை வேதத்திலும், புத்தகங்களிலும் இருக்கின்றது என்று எடுத்து காட்டினேன்.
மற்றபடி குரான் முந்தைய வேதங்களிலிருந்து நிறைய மாறுபடுகிறது என்பதை ஒப்புக்கொள்கிறேன்.

கொஞ்சம் வரலாற்றை சொல்லி நிறைய முரண்பட(வேறுபட) வேண்டும் என்பதே குரானின் நோக்கமாகும். :)
அதை தாங்கள் நன்று அறிவீர்கள் என்று நானறிவேன்.

சகோ மீண்டும் சந்திப்போம் நன்றி

suvanappiriyan said...

சகோ புரட்சி மணி!

//கொஞ்சம் வரலாற்றை சொல்லி நிறைய முரண்பட(வேறுபட) வேண்டும் என்பதே குரானின் நோக்கமாகும். :)
அதை தாங்கள் நன்று அறிவீர்கள் என்று நானறிவேன்.//

குர்ஆன் வலிந்து ஒரு சில முரண்பாடுகளை கொண்டு வந்துள்ளது போல் உங்கள் கருத்து உள்ளது. முரண்பாட்டை குர்ஆன் உண்டாக்கவில்லை. முந்தய வேதத்தை பின்பற்றிய கிறித்தவர்களும் யூதர்களும் இறைவனின் வார்த்தைகளை மாற்றியுள்ளனர். இதனை பல கிறித்தவ அறிஞர்களே ஒத்துக் கொண்டுள்ளனர். இறைவன் அருளிய அதே வேதம் இன்றும் இருக்குமானால் அது முழுக்க முழுக்க குர்ஆனைப் பின் பற்றியே இருக்கும்.

அடுத்து இதற்கு முன் நான் எடுத்து வைக்கும் அனேக அறிவியல் வசனங்கள் பைபிளிலோ தோராவிலோ அல்லது இந்து மத வேதங்களிலோ இல்லாததையும் நீங்கள் கவனிக்க வேண்டும்.

VANJOOR said...

சொடுக்கி கேளுங்க‌ள்

>>>> அன்றே திரு குரானில் கூறப்பட்டிருக்கும் இன்றைய விஞ்ஞான கண்டுபிடிப்புகள். !!! இன்றைய விஞ்ஞான கண்டுபிடிப்புகள் குரானில் 1400 வருடங்களுக்கு முன்பே அழுத்தமாக கூறப்பட்டிருக்கிறது. <<<<<<

R.Puratchimani said...

//அடுத்து இதற்கு முன் நான் எடுத்து வைக்கும் அனேக அறிவியல் வசனங்கள் பைபிளிலோ தோராவிலோ அல்லது இந்து மத வேதங்களிலோ இல்லாததையும் நீங்கள் கவனிக்க வேண்டும்.//

கண்டிப்பாக சகோ..
நான் சொல்ல விரும்பும் மேலதிக தகவலை நானும் உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன். உங்களது கருத்தை தெரிந்து கொள்கிறேன். நன்றி