Followers

Showing posts with label உயிர். Show all posts
Showing posts with label உயிர். Show all posts

Tuesday, December 01, 2015

காலத்தினாற் செய்த நன்றி சிறிதெனினும்.......





'பாகிஸ்தானுக்கு ஓடுங்கள்' என்று ஓயாமல் ஊளையிடும் தேசபக்தியை மொத்தமாக குத்தகைக்கு எடுத்திருக்கும் அரை டவுசர்கள் எங்கப்பா போனீங்க....

Wednesday, October 28, 2015

கோமாதா பிரியர்கள் இந்த யாகங்களுக்கு என்ன பதில் வைத்துள்ளார்கள்!

கோமாதா பிரியர்கள் இந்த யாகங்களுக்கு என்ன பதில் வைத்துள்ளார்கள்!

கோசவம்- பசுமாடுகளை கொல்லும் யாகம்

வாயவியஸ் வேதபசு- வாயூ தேவதைகளுக்காக வெள்ளை பசுவைக் கொல்லும் யாகம்

காமயபசு‬- தனது எண்ணங்களை ஈடேற்றி கொள்வதற்கு உரிய பசு யாகம்

‪வதசொபகரணம்‬- கன்று குட்டியைக் கொலை செய்து நடத்தும் யாகம்

‪அஷ்டதச பசுவிதானம்‬ – 18 பசுக்களைக் கொலை செய்து நடத்தும் யாகம்

‪‎ஏகாதசீ பசுவிதானம்‬ – 11 பசுக்களைக் கொல்லும் யாகம்

‪கிறாமாரணயா பசுபிர்சம்ஷா‬ – நாட்டிலும் காட்டிலும் உள்ள பசுக்களைக் கொன்று யாகம் செய்வது

ஆதித்யவேதபசு‬ – சூரிய தேவனுக்கு பசு யாகம்

‪‎ரிஷபாலம்பன விதானம்‬ – எருதைக் கொன்று நடத்தும் யாகத்தின் விதி…

Monday, August 17, 2015

சங்கராபுரம் தலித் வீடுகளின் கோரக் காட்சி!



தலித் மக்களும் இந்து மதத்தை சேர்ந்தவர்கள் தான்: வீட்டை கொளுத்திய வன்னியர்களும் இந்து மதத்தை சேர்ந்தவர்கள்தான். இரண்டு சாதிகளின் கடவுளும் ஒருவன்தான். ஆனால் அந்த கடவுளுக்கு மரியாதை செய்ய ஒரு தரப்பு மறுக்கப்பட்டு காலகாலமாக உதாசீனப்படுத்தப்படுகிறது. எரிக்கப்பட்ட அந்த வீடுகளில் ஏதாவது மிஞ்சியிருக்கிறதா என்று பாருங்கள்.

கூலி வேலை செய்து பிழைத்து வரும் அந்த தலித் இனி தனது வீட்டை நிர்மாணிக்க எத்தனை வருடம் உழைக்க வேண்டும்? வீட்டை கொளுத்தியதில் தாய்மார்களும் குழந்தைகளும் கூட பங்கெடுத்தார்களாம். சாதியின் கொடூரம் பெண்களையும் குழந்தைகளையும் கூட விட்டு வைக்கவில்லை. பாதுகாப்புக்கு வந்த காவல் துறையையும் இந்த கும்பல் தாக்கியிருக்கிறது. உழைத்து வாழ்ந்தாலும் வாழ அனுமதிக்காத சமூகத்தின் மீது அவனது கோபப் பார்வை திரும்பினால் அதன் பின் விளைவுகள் எப்படி எல்லாம் இருக்கும் என்பதை நினைத்தாலே பயமாக இருக்கிறது.

சாதியை வைத்து அரசியல் நடத்தும் அனைத்து தலைவர்களையும் சமூகத்தில் இருந்து மக்கள் ஒதுக்கினாலேயே இது போன்ற கொடூரங்களை குறைக்க முடியும். அடுத்த ஆண்டு நடைபெற இருக்கும் தேர்தலை கணக்கில் வைத்து தன் மக்களை வேறெங்கும் சென்று விடாமல் காக்கும் ஒரு உக்தியாகவே இதனை பார்க்கிறேன்.

Thursday, April 30, 2015

நேபாள துயர் துடைப்பில் ஜமாத் ஏ இஸ்லாமி ஹிந்த்!







நமது இந்தியாவின் பக்கத்து நாடான நேபாளத்தில் வரலாறு காணாத பேரழிவு பூகம்பத்தால் ஏற்பட்டுள்ளது. பொது மக்களின் தயர் துடைப்பில் அரும் பணியாற்றி வரும் ஜமாத் ஏ இஸ்லாமி ஹிந்த் தனது பங்காக போர்வைகள், உணவுப் பொருட்கள், தண்ணீர், டென்ட் அமைத்துக் கொடுத்தல் போன்ற அத்தியாவசியப் பணிகளை ஏற்கெனவே செய்து வருகிறது. இழப்பு மிக அதிகம் என்பதால் மீட்பு பணிகள் மந்த கதியில் நடந்து வருகிறது. அரசும் தன்னார்வ தொண்டு நிறுவனங்களும் மழையையும் பொருட்படுத்தாது பெரும் சேவை செய்து வருகின்றன. ஜமாத் ஏ இஸ்லாமி ஹிந்த் பொது மக்களிடமிருந்து நன்கொடைகளை எதிர்பார்க்கிறது. வசதி படைத்தவர்கள் சிரமத்தில் ஆழ்ந்துள்ள நமது அண்டை நாட்டு சகோதரர்களின் தயர் துடைக்க தங்களால் இயன்ற உதவிகளை கீழே வரும் விலாசத்திற்கு அனுப்பி வைக்கவும். இறைவனுக்கு பயந்து முறையாக அதனை நாங்கள் விநியோகம் செய்வோம் என்று உறுதி கூறுகிறோம்.

Regards,
Nusrat Ali
Secretary General
Jamaat-e-Islami Hind

Cheque or Draft should be in favour of:
MARKAZ RELIEF FUND
JAMAAT-E-ISLAMI HIND
A/c No. 1447308475
Central Bank of India
Sukhdev Vihar, New Delhi-110025
Branch Code-02953
IFS Code- CBIN0282953

Cheque or Draft should be sent to the following address:
Secretary General
JAMAAT-E-ISLAMI HIND
D-321, Dawat Nagar, Abul Fazl Enclave,
Jamia Nagar, Okhla, New Delhi-110025
Cont. No. 09818996951 / 08826732590

மார்க்க விஷயத்தில் உங்களுடன் போரிடாதோருக்கும், உங்கள் வீடுகளிலிருந்து உங்களை வெளியேற்றாதோருக்கும் நன்மை செய்வதையும், அவர்களுக்கு நீதி செலுத்துவதையும் அல்லாஹ் உங்களுக்குத் தடை செய்யவில்லை. நீதி செலுத்துவோரை அல்லாஹ் விரும்புகிறான்.

அல்குர்ஆன் 60 : 8

Friday, April 17, 2015

புரோட்டா பிரியர்களுக்கு சில பகீர் தகவல்கள்!



சிலருக்கு பரோட்டா சாப்பிட்டால்தான் தூக்கமே வரும். அந்த அளவுக்கு பரோட்டாவுக்கு அடிமையானவர்கள் பலர் நம்மில் இருக்கிறார்கள். இதற்கு முக்கிய காரணம் அதன் சுவை தான். இதையே பல ஊர்களில் பலவிதமாகச் செய்கிறார்கள். மதுரை பக்கம் போனால் சும்மா மெத்மெத்தென்று அடித்த மாவில் செய்த சுவையான பரோட்டா கிடைக்கும். விருதுநகர் பக்கம் சென்றால் எண்ணெயில் சுட்ட பொறித்த பரோட்டா கிடைக்கும். அப்படியே செங்கோட்டை பார்டர் கடைக்குச் சென்றால் கோழிக்குழம்புடன் அள்ளி அள்ளி விழுங்கத் தோன்றும் சுவையான பரோட்டா கிடைக்கும். இப்படி ஒவ்வொரு பரோட்டா பாடாய்படுத்திக் கொண்டிருக்கிறது.

பரோட்டாவுக்கு பின்னால் ஒரு வரலாறே இருக்கிறது என்பது பலருக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை. இது பரோட்டா வரலாறு அல்ல. அதை செய்யப் பயன்படும் மைதாவுக்கான வரலாறு. மைதா என்றொரு பொருள் ஆங்கிலேயர்களால்தான் அறிமுகம் செய்து வைக்கப்பட்டது. அதற்கு முன்பு வரையில் இந்தியாவில் கோதுமை பயன்பாடுதான். அதில்தான் ரொட்டி சுடுவது, சப்பாத்தி சுடுவது எல்லாம். தனிக்காட்டு ராஜாவாக இந்தியாவில் கோதுமை கோலோச்சிக் கொண்டிருந்தபோது அதற்கு ஆப்பு வைத்தது இரண்டாம் உலகப்போர். போர் வீரர்களுக்கு பெருமளவில் கோதுமை தேவைப்பட்டது. இதனால் கோதுமைக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டது. இதையடுத்து கோதுமைக்கு மாற்றுப் பொருளை கண்டறியும் முயற்சி தீவிரமானது. அப்போது அறிமுகமானதுதான் மைதா. அதாவது மரவள்ளிக் கிழங்கில் இருந்து தயாரிக்கப்பட்ட மாவுடன் சில ரசாயனங்களையும் சேர்மானங்களையும் சேர்த்து தயாரிப்பதுதான் மைதா. இந்த மைதா மிக எளிதாக உருட்டவும் மாவு பிசையவும் வந்தது. கோதுமையைக் காட்டிலும் விலை குறைவாக இருந்தது. இதனால் மக்களிடம் எளிதில் மைதா புகழ் பெறத் தொடங்கியது. குறிப்பாக ஏழை மக்களின் உணவுப் பொருளாக மைதா பிரபலமானது. அதுவே படிப்படியாக வளர்ச்சி பெற்று நாகரீக உணவு பொருளாகியது.

இதுதான் மைதா அரக்கனின் வரலாறு. மைதாவின் மூலப்பொருளான மரவள்ளிக் கிழங்கு மாவு என்பது சற்று பழுப்பு நிறம் கொண்டது. இதை வெளுக்க வைத்து வெண்மையாக மாற்றுவதற்காக அதில் பென்சாயில், பெராக்சைடு கலக்கப்படுகிறது. சாதாரணமாக சொன்னால் ரசாயனம். இதை இன்னும் மேலும் விளக்கமாக சொல்ல வேண்டும் என்றால், தலைமுடிக்கு அடிக்கும் டையில் உள்ள ரசாயனம் என்று கூறினால் நன்கு விளங்கும். இந்த ரசாயனத்தால் சில அரிப்பு ஒவ்வாமை ஏற்படுகிறது. தலைமுடிக்கு இந்த நிலைமை என்றால் உடலில் சென்றால் சொல்ல வேண்டியதே இல்லை. மெல்லக் கொல்லும் விஷமாக பல பாதிப்புகளை இது செய்து வருகிறது. நீரிழிவு என சொல்லப்படும் டயாப்டீஸ் நோய்க்கு அடிக்கல் நாட்டும் விழாவாக மைதா ஆகிவிடும்.

‘அலாக்ஸான்’ எனும் ரசாயனம் மாவை மிருதுவாக்க கலக்கப்படுகிறது. வெண்மை என்றால் சாதாரண வெண்மையா என்ன? மைதாவின் வெண்மையை ஊரே போற்ற வேண்டும் என்பதற்காக அதில் செயற்கை வண்ணப்பொடியும் கலக்கப்படுகிறது. பரோட்டாவுக்கு சுவை சேர்க்க வேண்டாமா? இதற்காக உணவு எண்ணெய்கள், சுவை கூட்டிகள் எனப்படும் டேஸ்ட் மேக்கர்ஸ், மைதா நீண்ட நாட்கள் பூஞ்சை பிடிக்காமல் பாதுகாப்பாக இருக்க தேவையான ரசாயனங்கள் (பிரசர் வேடீவ்ஸ்) அஜினோ மோட்டோ, இனிப்பு பொருட்களில் சாக்ரின் என்று பட்டியல் நீண்டு கொண்டே போகிறது.

கடைகளில் விற்கப்படுகின்ற பரோட்டா மாவாகப் பிசைந்து சில மணி நேரங்கள் எண்ணெயில் ஊற வைக்கப்படுகிறது. அது எந்தவகையான எண்ணெய் என்பது மாஸ்டருக்கு மட்டுமே தெரியும். பின்னர் அதை எடுத்து உருண்டைகளை சுற்றி தட்டும்போதும் எண்ணெய் ஊற்றப்படுகிறது. அவ்வாறு எண்ணெயில் குளிப்பாட்டிய பரோட்டாவை எடுத்து சுடும்போது ஊற்றப்படும் எண்ணெய்க்கு அளவே இல்லை. இதில் சுவைக்காகவும், மணத்திற்காகவும் சேர்க்கப்படும் மட்ட ரகமான நெய் அல்லது டால்டாவில் பொரித்து எடுக்கப்படும் பரோட்டாவை சாப்பிட்டால் ஏற்படுகின்ற தீங்கான விளைவுகளை சொல்லவே அச்சமாக உள்ளது. இதயத்திற்குச் செல்லும் ரத்த நாளங்களில் உட்புறம் படியும் கொழுப்பாக மாறி ஹார்ட் அட்டாக் ஏற்பட வழிவகுத்து விடுகிறது. ஹார்ட் அட்டாக், கிட்னி பெயிலியர், டயாபடீஸ் என்று விதவிதமான நோய்களை வரவழைக்கும் மைதாவில் எவ்வித பயனும் இல்லை என்பதால்தான் ஐரோப்பிய யூனியனும், கனடாவும் இதற்கு தடை விதித்துள்ளது.

இந்த பரோட்டாவுக்கு சைட் டிஸ் என்ன தெரியுமா? கோழி குருமா, சிக்கன் 65! முன்பெல்லாம் வீடுகளில் வளர்க்கப்படும் நாட்டுக் கோழி கறி சமைத்து உண்பார்கள். அதில் நல்ல சத்தும் இருந்தது. இப்போது பிராய்லர் சிக்கன் வந்துவிட்டது. பிராய்லர் கோழியை உணவாக உட்கொள்ளும் இந்தியர்களில் நூற்றில் 65 பேருக்கு கல்லீரல் வீக்க நோய் இருப்பதாக சென்னை மருத்துவ ஆய்வுக் குழு ஒன்றின் குடல் நோய் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். குறிப்பிட்ட நாட்கள் மட்டுமே உயிர் வாழும் தன்மை கொண்டதுதான் பிராய்லர் கோழிகள். அதற்குள் எடை கூட்டி வளர்க்க பயன்படுத்தப்படும் ரோக்ஸார்ஜோன் என்ற ஹார்மோன் ஊசிகள், மனிதர்களுக்கு புற்றுநோயை ஊக்குவிக்கும் தன்மை வாய்ந்தவை. கோழிகளுக்கு செலுத்தப்பட்ட ஆன்டிபயாட்டிக் ரசாயனங்கள், கோழியின் கறியிலும், கல்லீரலிலும், சிறுநீரகங்களிலும் தேங்கி விடுகின்றன. சிக்கன் 65 தயாரிக்கப் பயன்படும் சிவப்பு நிற கலர் பவுடர் புற்று நோயினை ஏற்படுத்தும். வேதியப் பொருள்களும் இதய நோய்க்கு வித்திடுகின்றன. இத்தகைய அபாயகரமான நோய்களை ஏற்படுத்தும் பரோட்டாவையும், சிக்கன் குழம்பு, சிக்கன் 65 ஆகியவற்றினை சாப்பிட்டு நோயினை விலைக்கு வாங்க வேண்டுமா?

நன்றி : நர்கிஸ் – மார்ச் 2015

Friday, March 27, 2015

பாவத்தின் சம்பளம்!- உண்மை நிகழ்வு!

பாவத்தின் சம்பளம்!-உண்மை நிகழ்வு!

எனது கம்பெனியில் கேரள மலப்புரத்தைச் சேர்ந்த முஹம்மது .... என்ற நபர் சேல்ஸ்மேனாக வேலை செய்து வந்தார். ஆடம்பர பிரியன். நாலு பேர் தன்னை மெச்ச வேண்டும் என்பதற்காக எதையும் செய்யக் கூடியவன். இஸ்லாமிய பற்று அந்த அளவு இல்லாதவன்.

ஒருமுறை எனது ஓனரிடம் புதுப்பிப்பதற்காக பாஸ்போர்ட்டைக் கேட்டான். அவனிடம் அவனது பாஸ்போர்ட்டைக் கொடுத்தார் எனது ஓனர். இந்த சம்பவத்தை பலரும் மறந்து விட்டோம். இதையே வாய்ப்பாக பயன்படுத்திக் கொண்ட அந்த மலையாளி 60000 ரியால்(கிட்டத்தட்ட 8 லட்ச ரூபாய்) கம்பெனி பணத்தில் கையாடல் செய்து விட்டு மறுநாளே கேரளாவும் சென்று விட்டான்.

வியாழன் இரவு டிக்கெட் புக் பண்ணியதால் வெள்ளிக்கிழமை விடுமுறை. எனவே யாருக்கும் சந்தேகம் வரவில்லை. அவன் கேரளா சென்று அவனது வீட்டில் சேரும் போதுதான் எங்களுக்கே விபரம் தெரிகிறது. சும்மா சொல்லப்படாது. திறமைசாலிதான். :-)

எனது ஓனரால் இதை நம்பவே முடியவில்லை. 'எவ்வளவு நம்பிக்கை வைத்திருந்தேன்! இப்படி நம்பிக்கை மோசம் செய்து விட்டானே! அவசரம் என்று என்னிடம் கேட்டிருந்தால் நானே கடனாக கொடுத்திருப்பேனே' என்று ஆதங்கப்பட்டார். பிறகு என்னிடம் 'மும்பையில் எனது ஏஜண்டுகள் மூலமாக அவனது காலையோ கையையோ இங்கிருந்து கொண்டே என்னால் எடுக்க முடியும். இறைவன் குர்ஆனில் 'தீமையின் கூலி அது போன்ற தீமையே! சமாதானமாகச் செல்வோருக்கு அவரது கூலி இறைவனிடத்தில் உள்ளது'-(குர்ஆன் 42:40) என்று கூறுகிறான். எனவே அவனது மனைவிக்காகவும், அவனது குழந்தைகளுக்காகவும் அவனை அதுபோல் செய்யாமல் விடுகிறேன். மறுமையில் எனக்கு அந்த பணம் கிடைத்து விடும்' என்று கூறியவுடன் நானும் சற்று இந்தியன் என்ற முறையில் வெட்கப் பட்டேன்.

குர்ஆனும், முஹமது நபியின் வாழ்வும் இந்த அரபுகளை எந்த அளவு மாற்றியிருக்கிறது என்பதை நினைத்து ஆச்சரியப்பட்டேன். அவரிடம் 'நீங்கள் செய்வதுதான் சரி' என்று கூறி அவரை சமாதானப் படுத்தினோம்.

இந்த நேரத்தில் இஸ்லாம் வருவதற்கு முன்பு ஜனாதிபதி உமர் அவர்களின் வாழ்வில் நடைபெற்ற ஒரு நிகழ்வு எனக்கு ஞாபகம் வந்தது. அதை பகிர்ந்து கொள்கிறேன்.

முகமது நபிக்குப் பிறகு இரண்டாவது கலீபாவாக பொறுப்பேற்ற உமரைப் பற்றி நாம் அறிவோம். அவர் இஸ்லாத்தை ஏற்பதற்கு முன்பு அவருக்கு ஒரு பெண் குழந்தை இருந்தது. அன்றைய அரபியர்களின் மூட பழக்கத்தின் படி தன் குழந்தையை கொன்று விடுவது என்று உமர் முடிவு செய்கிறார். அதன்படி அந்தக் குழந்தையை அழைத்துக் கொண்டு ஆளரவமற்ற இடத்துக்கு வருகிறார். பிறகு அங்கு தன் குழந்தையை உயிரோடு புதைப்பதற்காக குழியைத் தோண்டுகிறார். அப்பொழுது அவரது தாடியில் மண் ஒட்டிக் கொள்கிறது. இதைப் பார்த்த அந்த குழந்தை தன் கையால் அந்த மண்ணைத் தட்டி விடுகிறாள். குழி வெட்டி முடிந்தவுடன் அந்த குழந்தையை குழியில் இறக்குகிறார் உமர். அப்பொழுது அந்த சிறுமி 'நீங்களும் வரவில்லையா?' என்று அப்பாவியாக கேட்டது. மனதைக் கல்லாக்கிக் கொண்ட உமர் மண்ணைத் தள்ளி அந்தக் குழந்தையை உயிரோடு சமாதியாக்குகிறார். எந்த அளவு அன்றைய சமூகம் கல் நெஞ்சம் படைத்ததாக இருந்திருந்தால் இத்தகைய கொடூரங்களை அரங்கேற்றியிருக்கும்.

பல வருடங்கள் கழித்து முகமது நபியின் பிரச்சாரத்தால் கவரப்பட்டு உமர் இஸ்லாத்தை ஏற்கிறார். ஒரு நாள் முகமது நபியிடம் தன் பெண் குழந்தையை தன் கையாலேயே கொன்றதை நினைவு கூர்ந்து தேம்பி அழ ஆரம்பித்து விட்டார். அவரைத் தேற்றிய முகமது நபி அறியாமைக் காலத்து பாவங்களை இறைவன் மன்னித்து விடுவதாக வாக்களித்துள்ளான் என்று சொல்லி அவரை அனுப்பி வைக்கிறார்.

பின்னால் முகமது நபி, அபுபக்கருக்குப் பிறகு இஸ்லாமிய சாம்ராஜ்ஜியத்தின் ஜனாதிபதியாக பொறுப்பேற்று திறம்பட ஆட்சியும் செய்கிறார் உமர். இவரது வரலாறைப் படித்த காந்தியடிகள் 'சுதந்திர இந்தியாவின் ஆட்சி முறை கலீபா உமருடைய ஆட்சியைப் போல் இருக்க வேண்டும்' என்று சொல்லும் அளவுக்கு சிறந்திருந்தது.

சரி. இனி பதிவுக்கு வருவோம். பணத்தை மோசடி செய்த அந்த மலையாளி சென்று கிட்டத்தட்ட பதினைந்து வருடங்கள் ஆகின்றது. தவறான வழியில் வந்த பணம் தவறாகவே ஆடம்பரமாக செலவு செய்து அனைத்தையும் இழக்கிறான். சில மாதங்களுக்கு முன்பு அவனது உறவினர் மூலமாக அவன் மிகவும் கஷ்டப்படுவதாகவும் அவனுக்கு மூளையில் கட்டி இருப்பதாகவும், ஆபரேஷன் செய்தால் பிழைப்பது கஷ்டம் என்றும், அந்த அளவு பணம் வசதியும் இல்லை என்றும் கேள்விப்பட்டோம். சில கேரள நண்பர்கள் மூலமாக செய்தியை உறுதி செய்து கொண்டோம். கம்பெனியில் உள்ளவர்களும் ஒரு சில மலையாளிகளும் சேர்ந்து பணம் வசூல் செய்து அவனது விலாசத்துக்கு அனுப்பி வைத்தோம்.

சில நாட்களுக்கு முன்பு அவனின் தற்போதய நிலையை எனது ஓனரிடம் சொல்லிக் கொண்டிருந்தேன். பொறுமையாக கேட்டவர் 'தவறான வழியில் வந்த பணத்தினால் என்ன சுகத்தை அவன் அடைந்து விட்டான். இந்த உலகம் இந்த உலகில் உள்ள பொருட்கள் அனைத்தும் மண்ணினால் ஆனது. மக்கி மண்ணோடு மண்ணாகக் கூடியவை. இதன் அழகில் அவன் மயங்கியதால் கௌரமான வேலையும் போய் மறுமையிலும் எனக்கு கடன்காரனாகவும் ஆகி விட்டான். பணம் இழந்த நான் பல மடங்கு முன்பைவிட சிறப்பாகவே இருக்கிறேன். அவனது அக்கவுண்ட் நம்பரை வாங்கவும். அவனது மருத்துவ செலவுக்கு நான் பணம் அனுப்புகிறேன்' என்று சொன்னவுடன் இந்த அரபியை நினைத்து நெகிழ்ந்து விட்டேன். எப்படிப்பட்ட கல் நெஞ்சக்காரர்களாக இருந்த இவர்களின் மனதை இஸ்லாம் எந்த அளவு பண்படுத்தியிருக்கிறது என்று நினைத்துப் பார்கிறேன்.

மறுமை என்ற ஒரு வாழ்வை அந்த அரபி நம்பாமல் இருந்திருந்தால் அந்த மலையாளி உயிரோடு இருந்திருக்க முடியாது. எனது ஓனரின் பணம் அவனது வைத்திய செலவுக்கு பயன்படுகிறது என்ற செய்தியே அவனை சிறந்த மனிதனாக மாற்றும். செய்த தவறை எண்ணி வருந்தி எனது ஓனரிடம் மன்னிப்பும் கேட்டால் ஒருக்கால் இறைவன் அவனை மன்னிக்கலாம். சென்ற ஆண்டு சிகிச்சை பலனளிக்காமல் அந்த மலையாளி இறந்து விட்டார். சேர்த்த பணமெல்லாம் வைத்தியத்துக்கே சென்று விட்டதால் குழந்தைகளை வளர்க்க அவரது மனைவியிடம் பொருளாதார வசதி இல்லை. தற்போது அந்த குழந்தைகள் இஸ்லாமியர்கள் நடத்தும் அனாதை ஆஸ்ரமத்தில் சேர்க்கப்பட்டுள்ளதாக அவரது நண்பர் சொன்னார்.

இவருடைய வாழ்வு நமக்கெல்லாம் ஒரு பாடமாக அமையட்டும்.

-------------------------------------------------------------------------------

இன்னா செய்தாரே ஒறுத்தல் அவர்நாண

நன்னயம் செய்து விடல்.-குறள்

'உங்கள் பொருட் செல்வமும், மக்கட் செல்வமும் சோதனையே! இறைவனிடமே மகத்தான கூலி இருக்கிறது.'-குர்ஆன் 64:15

'தீமையின் கூலி அது போன்ற தீமையே! சமாதானமாகச் செல்வோருக்கு அவரது கூலி இறைவனிடத்தில் உள்ளது'-(குர்ஆன் 42:40)

'விபசாரி விபசாரம் புரியும்போது இறைவிசுவாசியாக இருந்து கொண்டு விபசாரம் புரிவதில்லை. ஒருவன் மது அருந்தும்போது இறை விசுவாசியாக இருந்து கொண்டு மது அருந்துவதில்லை. ஒருவன் பிறரது பொருளை திருடும்போது இறை விசுவாசியாக இருந்து கொண்டு திருடுவதில்லை.'-முகமது நபி

அறிவிப்பவர் : அபு ஹூரைரா ஆதாரம் புகாரி 2475

Monday, February 09, 2015

உயிர் - ஆன்மா இரண்டுக்குமுள்ள வித்தியாசம் என்ன? -2



'ஆன்மாக்களை அவை மரணிக்கும் நேரத்திலும், மரணிக்காதவற்றை அவற்றின் உறக்கத்திலும் இறைவன் கைப்பற்றுகிறான். எதற்கு மரணத்தை விதித்து விட்டானோ அதைத் தனது கைவசத்தில் வைத்துக் கொண்டு மற்றதை குறிப்பிட்ட காலம் வரை விட்டு விடுகிறான். சிந்திக்கிற மக்களுக்கு இதில் பல சான்றுகள் உள்ளது'
குர்ஆன் 39: 42


இந்த வசனம் மிகப் பெரும் அறிவியல் உண்மைகளை மனிதர்களுக்கு கூறிக் கொண்டுள்ளது.

உடலில் உறவாடும் உயிருக்கும் ((Life) அந்த உயிருக்குச் செறிவூட்டி செம்மைப்படுத்தும் ஆன்மா(Soul) வுக்கும் இடையே உள்ள வித்தியாசத்தை திருகுர்ஆன் அழகுற எடுத்துக் காட்டுகிறது. அல்லாஹ் ஆன்மாக்களை அவை மரணிக்கிற நேரத்திலும் இன்னும் தூக்கத்தில் அவை மரணிக்காத நிலையிலும் கைப்பற்றுகிறான்.

உறங்கும்போது நமக்கு கிளினிகல் மரணம் (Clinical Death) என்ற சம்பவம் நடப்பதில்லை. உயிர் மட்டும் உடலில் தங்கி இருக்கிறது. ஆனால் ஆன்மா இறைவனிடம் சென்று விடுகிறது. அதாவது உடலை விட்டு அது பிரிந்து விடுகிறது. உயிர் உடலை விட்டுப் பிரியும்போது கிளினிகல் மரணம் (Clinical Death) நிகழ்கிறது. அதாவது உயிரோட்டம் நின்று, உடல் உறுப்புகள் செயலிழக்கும் நிலை (Clinical Death) சம்பவிக்கிறது. அப்போதும் ஆன்மா இறைவன் வசமாகிறது.

குர்ஆனின் இந்தக் கருத்து 10 ஆண்டுகளுக்கு முன் பிரிட்டானிய உளவியல் பேராசிரியர் ஒருவரின் கவனத்தை ஈர்த்தது. அவர் அந் நாட்டு, உளவியல் வல்லு நர்கள் சங்கத்தின் (British Psychologists Society) தலைவர். அவர் பெயர் டாக்டர் ஆர்தர் ஆலிசன் (Dr.Arthur Alison) அவர் தூக்கம், மரணம், கனவு போன்ற அதீத மனோ தத்துவ செயல்பாடுகள் (Para Psychology) குறித்து ஆய்வு நடத்திக் கொண்டிருந்தார். அவரின் ஆய்வு முடிவுகள் (Datas) அன்றைய உளவியல் வல்லுநர்களின் கருத்துகளுக்கு முரண்பட்டிருப்பதைக் கண்டார். அம்முடிவுகளை அக்கருத்துகளைக் கொண்டு அவரால் விளக்க முடியவில்லை. அதனால் பல்வேறு மத நூல்களைப் படிக்கத் தொடங்கினார். அவற்றில் ஏதேனும் விடை கிடைக்குமா? என்று அலசினார். அந்தத் தேடுதல் வேட்டையில் அவர் கண்டதுதான் மேற்கண்ட 39:42 குர்ஆன் வசனம். குர்ஆனின் கருத்து மின்னணு (Electronic) கருவிகள் மூலம் அவர் கண்ட ஆராய்ச்சி முடிவுகளை அப்படியே கொஞ்சமும் பிசகாமல் விளக்கியது. பரவசமடைந்த பேராசிரியர் திருகுர்ஆனின் விளக்கத்தில் மெய் சிலிர்த்துப் போனார். அந்த வசனம் இப்படி முடிகிறது. "நிச்சயமாக இதில் சிந்திக்கின்ற மக்களுக்கு உறுதியான பல சான்றுகள் இருக்கின்றன".

இதன்படி அந்த அறிஞர் உண்மையைக் கண்டார். சத்திய இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டார். தனது பெயரை அப்துல்லா எலிசன் என்றும் மாற்றிக் கொண்டார். டாக்டரின் ஆய்வுகள் நமக்கு சொல்ல வருவது நாம் உறங்கும்போது உடலில் உயிர் இருக்கிறது. ஆனால் ஆன்மா இல்லை. உயிர் பிரியும் போது உடலில் இரண்டும் இல்லை.

---------------------------------------------

இனி இந்து மதக் கருத்துக்குள் நுழைவோம். மரணித்த உடலை எரியூட்டும்போது ஆன்மா உடலை விட்டுப் பிரிகிறது என்ற இந்து மதத்தின் ஒரு சிலரின் வாதம் குர்ஆனின் கருத்துப் படியும் அறிவியல் ஆய்வுகளின் படியும் தவறாகும். மறு உலக வாழ்வை தவறாக புரிந்து கொண்டு மறு பிறவி என்ற கோட்பாட்டை வலிந்து தமிழர்கள் தலையிலும் கட்டி விட்டனர். :-) வாழும் கலை ரவி சங்கர் மறு பிறவி தத்துவத்தை மறுக்கிறார். பண்டைய தமிழ் நூல்களும் மறு பிறவி என்று எதுவும் கிடையாது என்று கூறுகிறது. இது பற்றி முன்பு பத்திரிக்கையில் வந்த சம்பவத்தை நினைவு கூர்வோம்.

இங்கிலாந்தில் ஒரு மூத்த ஹிந்து குடிமகன் அந் நாட்டு நீதிமன்றத்தில் விசித்திரமான வழக்கொன்றை 2009-ல் மேல் முறையீடு (Appeal) செய்திருந்தார். அவர் பெயர் தேவேந்தர் காய் (Devender Ghai) 70 வயதான அவர் 1958-ல் கென்யா எனும் ஆப்ரிக்க நாட்டிலிருந்து அங்கு போய் குடியேறியவர். அவர் குடியிருந்து வரும் New Castle என்ற நகரின் மாநகராட்சி மன்றத்திற்கு (City Council) மனு ஒன்றை அனுப்பி இருந்தார். அதில் தாம் இறந்த பின் தம் உடலை ஹிந்து மத ஆச்சாரப்படி திறந்த வெளியில் (Open Air) எரியூட்டுவதற்கு அனுமதிக்கும்படிக் கேட்டிருந்தார். ஆனால் அவர் கோரிக்கையை அம்மன்றம் நிராகரித்து விட்டது. அதனால் அவர் லண்டன் உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தார்.

அவர் அந்த வழக்கில் கீழ்வருமாறு வாதிட்டார். இறந்த பின் புனித வேள்வி நெருப்பில் தகனமாகும் உடலிலிருந்து எனது ஆன்மா விடுவிக்கப்படுவதுடன் மறுபிறப்பு எனும் உயர் நிலையை அடையும் என்று ஒரு ஹிந்து என்ற முறையில் நான் நம்புகிறேன். எப்படி (கிரேக்க) புராணக் கதையில் ஃபீனிக்ஸ் ((Phoenix-பறவை) எரிந்த பின் தீ நாக்குகளிலிருந்து (Flames) எழும்பி மறு படியும் உருப்பெற்று வந்ததோ அதுபோல் எனது இந்த முறையீடு மத உணர்வுகளைத் தூண்டக் கூடியது என்பதை நான் மறுக்கவில்லை. அதுவும் குறிப்பாக இறப்பு என்பது நம்மோடு முடிந்து போய்விடுகிறது என்ற கருத் தோட்டத்தைப் பரவலாக நம்புகின்ற மக்கள் வாழும் ஒரு நாட்டில் இந்த வழக்கு இங்கிலாந்தில் ஒரு மாதிரி வழக்கு (A Test Case) என்று கருதப்பட்டது. மேலும் மரணித்த மனித உடலைப் போக்கி அழிக்கும்(Disposing off) வழி முறையைப் பற்றி சுவையான ஒரு விவாதத்தையும் எழுப்பியிருந்தது.

-(செய்தி : ஹிந்து நாளிதழ் (25.03.2009)

மறு பிறவி என்று ஒன்று இருந்தால் உயிரினங்களின் எண்ணிக்கை அதிகமாகக் கூடாது. இந்த ஒரு கோடி உயிரினங்கள் தான் அடுத்த ஜென்மத்திலும் இருக்க வேண்டும். வேண்டுமானால் ஆடு மனிதனாக, மனிதன் ஆடாக பிறப்பெடுக்கலாமே தவிர, ஒரு கோடியை விட அதிகமாகவே கூடாது. ஒரு கோடியாக இருந்த உயிரினங்கள் இரண்டு கோடியாக பெருகினால் அதற்குப் பெயர் மறுபிறவி அல்ல. புதிய உயிர்களின் உற்பத்தி என்றே கூற வேண்டும்.

பாரதியார் முப்பது கோடி முகமுடையாள் என்று பாடினார். அப்போது இந்தியாவில் முப்பது கோடி மக்கள் இருந்தனர். அவர்கள் மறு பிறவி எடுத்தால் இப்போதும் முப்பது கோடி தான் இருக்க வேண்டும். 70 கோடிப் பேர் அதிகமாகியுள்ளோம். நாம் மட்டும் அதிகமாகவில்லை. அனைத்து உயிரினங்களும் அதிகமாகியுள்ளன.

புதுப் புதுப் பிறவிகள் உற்பத்தியானால் மட்டுமே இது சாத்தியமாகுமே தவிர பழையவர்களே மீண்டும் பிறந்தால் இப்படி தாறுமாறாகப் பெருகக் கூடாது. பெருக முடியாது. மறு பிறவி இல்லை என்பதற்கு இதை விட வேறு எந்தச் சான்றும் தேவையில்லை.

அதற்குச் சொல்லப்படுகின்ற தத்துவமும் ஏற்புடையதாக இல்லை. ஏற்கனவே செய்த பிறவிப் பயனையே இப்போது அனுபவிக்கிறோம் என்பதற்கு இவர்கள் கூறும் தத்துவம் என்ன?

இவ்வுலகில் நாம் கெட்ட காரியம் செய்தால் அடுத்த பிறவியில் அனுபவிப்போம் என்று கூறினால் மனிதன் நல்லவனாக வாழ்வான் என்பது தான் தத்துவம்.

ஒருவருக்குத் தண்டனை கொடுப்பதாக இருந்தால் இன்ன குற்றத்துக்காக இந்தத் தண்டனை வழங்கப்படுகிறது என்று அவருக்குத் தெரிய வேண்டும். அது தான் தண்டனை. பரிசு கொடுப்பதாக இருந்தாலும் எந்தச் செயலுக்காக அந்தப் பரிசு கிடைத்தது என்பதை அவர் உணர வேண்டும்.

அவ்வாறு இல்லாவிட்டால் பரிசுகளாலோ, தண்டனைகளாலோ எந்தப் பயனும் ஏற்படாது.

இந்தப் பிறவியில் துன்பம் அனுபவிக்கும் யாருக்காவது நாம் இதற்கு முன் எந்தப் பிறவியில் இருந்தோம் என்பது தெரியுமா? நிச்சயம் தெரியாது! என்ன பாவம் செய்ததற்காக இந்த நிலையை அடைந்தோம் என்று தெரியுமா? அதுவும் தெரியாது. அப்படியானால் அவன் அடுத்த பிறவியைப் பற்றிக் கவலைப்பட்டு எப்படி நல்லவனாக வாழ்வான்?

ஆன்மாவானது மறுபடியும் மறுபடியும் பல ஜென்மம் எடுத்து வரும் என்று எந்த இந்து வேதமும் குறிப்பிடவில்லை என்றுSri Satya Prakash Vidya Lankar தன்னுடைய நூலான Awagawan (Page 104) -ல் குறிப்பிடுகிறார்.

'மறு பிறவித் தத்துவம் என்பது ஒரு கொள்கை அளவில் மட்டுமே இந்து மதத்தில் குறிப்பிடப் படுகிறது. அது உண்மை என்றோ அடிப்படையான தத்துவம் என்றோ கொள்ளப் பட வேண்டியது இல்லை. வேதங்களோ, உபநிஷத்துகளோ இதைக் குறிப்பிடவில்லை.'
-சுவாமி பூமாந்த தீர்த்தர், ஞான பூமி
10 பக்கம்
97 ஏப்ரல்

மரணத்திற்குப் பின் உள்ள மறுமை வாழ்வு பற்றி குர்ஆன் என்ன கருத்து வைக்கிறதோ அதையே தான் இந்து மத வேதங்களும் வைக்கின்றன. அவற்றை வரிசையாக கிழே பார்ப்போம்.

'ஏ அக்னி! இறந்த இந்த மனிதர் மறு உலகிற்கு செல்வார்'
10 : 16 : 5 - ரிக் வேதம்

மேற்கண்ட ஆதாரங்கள் மறு பிறவி என்பது இந்து மதமே ஒத்துக் கொள்ளாத ஒரு கோட்பாடு என்பதை விளங்குகிறோம்.

--------------------------------------------

Invited to the First Islamic International Conference on the Medical Inimitability in the Quran held in Cairo in 1985, Dr. Alison presented two papers:

The first paper was: “the psychological and spiritual methods of therapy in the light of the Holy Quran”,
The second paper was: “sleep and death in the light of the Quranic verse 39:42″ which he presented in association with Dr Muhammad Yehya.

Hearing the numerous Quranic facts presented in the conference, Dr Alison uttered the “Shahadah” and embraced Islam at the concluding session of the event.

In an interview given to the Arabic-weekly, he narrated the story of his conversion to Islam saying:

“During the conference on Medical Inimitability in the Qur’an, I could realize that the difference was great. Then I was convinced that Islam is the most proper religion that befits my inborn nature and conduct. In the heart of my hearts I had felt that there is a God controlling the Universe. He is the Creator.”

“Therefore, when I studied Islam, I found that it did not conflict with reason and science. I believe that is the revealed religion from the one and only God. As I witnessed the truth, I uttered the two testimonies. The moment I uttered it, I was overwhelmed by a strange and ineffable feeling mingled with ease, comfort and satisfaction.”

தகவல் உதவி:
http://aliaalifali.blogspot.com/2010/02/blog-post.html
http://annajaath.com/archives/7140
http://www.themodernreligion.com/convert/convert_Scientists.htm



Tuesday, January 13, 2015

உத்தர பிரதேசத்தில் விஷ சாராயம் அருந்திய 30 பேர் சாவு!



லக்னோ மாவட்டத்தில் அருகருகில் அமைந்த கர்கா, மலிகாபாத், கசங்கஞ்ச், தலசாரரை கிராமங்களில் விஷ சாராயம் அருந்திய நுற்றுக்கும் அதிகமான நபர்கள் அஸ்பத்திரியில் அனுமதிக்கப் பட்டனர். இதில் 30 பேர் சிகிச்சை பலனலிக்காமல் இறந்துள்ளனர் பலரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது.

குடும்பத்தவர்களை இழந்து வாடுபவர்களுக்கு நமது ஆழ்ந்த அனுதாபங்கள்! மது என்ற அரக்கனை ஒழிக்காமல் ஏழைகளின் வாழ்வு நிம்மதியடையப் போவதில்லை. இதை என்றுதான் நமது அரசுகள் உணருமோ தெரியவில்லை.

Wednesday, December 31, 2014

பிகே சினிமாவை எதிர்ப்பவர்கள் இதற்கு என்ன பதில் வைத்துள்ளனர்?

"உங்கள் பணக்கஷ்டம் தீர வேண்டுமென்றால் பலிகொடுப்பது அவசியம் என்று பெண் மந்திரவாதி கூறியதால் பெற்ற தாயையும், இரு சகோதரர்கள் கொன்றனர்."

அக்டோபர் 30-31 தேதிகளுக்கு இடையிலான நள்ளிரவில் மகாராஷ்டிராவின் நாசிக் மாவட்டத்தில் இந்த பயங்கர சம்பவம் நடந்துள்ளது. ஆனால், பலியிடப்பட்ட இரண்டு பேர்களின் உடல்கள் திரம்பகேஸ்வரில் உள்ள தேகிஹார்ஷ் என்ற கிராமத்தில் கிடைத்ததையடுத்து துப்பு துலக்கப்பட்டு இந்தச் செய்தி இரண்டு சகோதரர்களை கைது செய்த பிறகே வெளியாகியுள்ளது.

கொலை செய்யப்பட்ட தாயாரின் பெயர் புதாபய் டோரி (65), இவரது உறவினர் காஷிபாய் வீர் (வயது 80).

இந்த பயங்கரக் கொலைகள் தொடர்பாக போலீஸார் தாயைக் கொலை செய்த 2 சகோதரர்கள் உட்பட 10 பேரை கைது செய்து, பல்வேறு கிரிமினல் வழக்குகளை பதிவு செய்துள்ளனர்.

இது பற்றி போலீஸ் தரப்பு கூறுவதாவது: காசிநாத், கோவிந்த் டோரி என்கிற 2 சகோதரர்கள் பொருளாதார அளவில் கஷ்டமான காலத்தில் இருந்துள்ளனர். இதனையடுத்து யார் யார் பேச்சையோ கேட்டு பெண் மந்திரவாதி பச்சிபாய் காட்கே என்பவரைச் சென்று சந்தித்துள்ளனர். தங்களது குடும்ப உறுப்பினர்கள் விவரம் உட்பட அனைத்தையும் அந்த பெண் மந்திரவாதியிடம் தெரிவித்துள்ளனர்.

அந்த மந்திரவாதி உடனே, சகோதரர்களின் தாயார் புதாபாய் டோரி மற்றும் அவரது சகோதரி ஆகியோரிடையே தீயசக்திகள் உள்ளன. அத்தீய சக்திகளை ஒழித்தால் மட்டுமே உங்கள் கஷ்டம் நீங்கும் என்று கூறியிருக்கிறார்.

இந்த சகோதரர்கள் தினக்கூலியாக பணியாற்றி வருகின்றனர்.

“பெண் மந்திரவாதி பச்சிபாய் காட்கேயின் அறிவுரையின் படி சகோதரர்கள் தன் தாயார் புதாபாய் டோரியையும் அவரது சகோதரி ராஹிபாய் பிங்ளி என்பவரையும் அழைத்து வந்தனர். 80 வயது உறவினர் காஷிபாய் வீர் என்பவரும் உடனிருந்துள்ளார். பூஜை செய்வதான பாவனையுடன் தொடங்கியது பரிகாரம்.

திடீரென அந்தப் பெண் மந்திரவாதி சகோதரர்களின் தாயார் புதாபாயையும், 80 வயது காஷிபாய் மற்றும் ராஹிபாய் பிங்ளி ஆகியோரை தாறுமாறாக அடித்து நொறுக்கத் தொடங்கினர். இதில் 65 வயது தாயார் புதாபாய் மற்றும் 80 வயது காஷிபாயும் கொலை செய்யப்பட, ரிஷிபாய் பிங்கிள் எப்படியோ அந்த இடத்திலிருந்து தப்பி ஓடிவிட்டார்”என்று நாசிக் ஊரகக் காவல்துறை கண்காணிப்பாளர் சஞ்சய் மோஹித் கூறினார்.

கொலை செய்ததோடு புதாபாயின் கண்களையும் எடுத்துள்ளார் பெண் மந்திரவாதி. நவம்பர் 1ஆம் தேதி தாயார் மற்றும் காஷிபாய் உடல்களை சகோதரர்கள் கிராமத்தில் இருந்த வயல் ஒன்றில் தூக்கி எறிந்துவிட்டுச் சென்றுள்ளனர்.

தப்பிச் சென்ற ராஹிபாய் பிங்ளி பிற்பாடு மூடநம்பிக்கை ஒழிப்பு சமூக ஊழியர் பக்வான் மாதே என்பவரைச் சந்தித்து கடந்த வாரத்தில்தான் நடந்த பயங்கரத்தைத் தெரிவித்துள்ளார்.

மகாராஷ்டிர அரசு கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் மூடநம்பிக்கைத் தடுப்புச் சட்டத்தை இயற்றியது. ஆனால், சட்டத்தின் மூலம் மூடநம்பிக்கையை தடுத்து விட முடியுமா, மூடத்தன பயங்கரவாதத்திற்கு மகாராஷ்டிராவில் பலியாவோருக்கு அரசின் பதில் என்ன? போன்ற கேள்விகள் அங்கு சமூக ஆர்வலர்களிடையே எழுந்துள்ளது.

தகவல் உதவி
தமிழ் இந்து நாளிதழ்
31-12-2014

Wednesday, November 26, 2014

இந்துவின் உயிர் காக்க தன் உயிர் விட்ட முஸ்லிம்கள்!



உபியில் அனைத்து மதத்தினரும் அண்ணன் தம்பிகளாக கலந்து வாழும் ஓர் ஊர் மொராதாபாத். இங்கு சுமன் என்ற பெண் திடீரென்று ஏற்பட்ட வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டுள்ளார். இதனை தூரத்தில் இருந்து பார்த்துக் கொண்டிருந்த நுஃமான், தனீஷ் என்ற இரு இஸ்லாமிய இளைஞர்கள் தத்தளித்துக் கொண்டிருந்த அந்த பெண்ணை காப்பாற்ற அந்த வெள்ளத்தில் குதித்தனர். ஆனால் நீரின் வேகம் அதிகரிக்கவே அந்த இளைஞர்களால் அந்த பெண்ணைக் காப்பாற்ற முடியவில்லை. இவர்களாலும் தங்களைக் காப்பாற்றிக் கொள்ள முடியவில்லை. ஆம். இந்த இரு இளைஞர்களும் நீரால் அடித்துச் செல்லப்பட்டனர். 36 மணி நேர போராட்டத்துக்குப் பிறகு மூன்று உடல்களையும் ராணுவத்தினர் மீட்டனர்.

இரு இஸ்லாமிய இளைஞர்களின் சவ(ஜனாஜா) ஊர்வலத்தில் பல இந்துக்கள் தங்கள் தோள்களால் அந்த தியாகிகளை சுமந்து சென்றனர். வழி நெடுக இந்து பெண்கள் மலர்களை தூவி அந்த இளைஞர்களுக்கு தங்கள் அன்பை வெளிப்படுத்தினர். 'யாரோ சாலையில் இறந்து கிடந்தாலும் நமக்கென்ன என்று செல்பவர்களை பார்த்துள்ளோம். ஆனால் இந்த இளைஞர்கள் தங்கள் உயிரை விட மற்றவரின் உயிருக்கு மதிப்புக் கொடுத்த தன்மை எல்லோருக்கும் வந்து விடாது. இந்த இரு இளைஞர்களும் எங்கள் பார்வையில் உண்மையில் ஹீரோக்கள்' என்று புகழ்ந்தார் அந்த ஊரின் இந்துவான சக்தி மல்ஹோத்ரா.

'எங்கள் நகரம் சமூக ஒற்றுமையில் சிறந்து விளங்குவதை இந்த நிகழ்வு எடுத்துக் காட்டுகிறது' என்கிறார் உள்ளூர் வாசியான முஸ்லிம் இக்ராம் குரைஷி. இறந்த மூன்று குடும்பத்தினருக்கும் தலா ஐந்து லட்சம் அரசு தரப்பில் வழங்கப்படும். அரசு உத்தியோகமும் வழங்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

ஆதாரம்:

-முஸ்லிம் மிர்ரர்
-ஹிந்துஸ்தான் டைம்ஸ்
24-09-2014



குஜராத்தில் அப்பாவியான ஒரு முஸ்லிம் கர்ப்பிணியின் வயிற்றைக் கிழித்து அந்த சிசுவையும் வெளியில் இழுத்து நெருப்பில் இட்டவர்களும் நமது நாட்டிலேதான் வாழ்கிறார்கள். தனது உயிரையும் துச்சமாக மதித்து ஒரு இந்து பெண்ணை காப்பாற்ற முயற்சித்து உயிர் விட்ட இந்த இரு இஸ்லாமிய இளைஞர்களும் நமது நாட்டில்தான் வாழ்கிறார்கள். மனிதரில்தான் எத்தனை நிறங்கள்!

'ஒரு மனிதனை வாழ வைத்தவர் எல்லா மனிதர்களையும் வாழ வைத்தவர் போலாவார்'

-குர்ஆன் 5:32

Tuesday, November 25, 2014

'தூக்கம் என் கண்களைத் தழுவட்டுமே' - குடி மகன்!



தூக்கம். பெரும் வரம். குடிநோயாளிகளுக்கோ இது பெரும் ஏக்கம். ஒருவர் தினசரி ஆறு முதல் எட்டு மணி நேரம் தூங்க வேண்டும். ஒருவர் நான்கு நாட்கள் தூங்கவில்லை என்றால் அவரது உயிரியல் கடிகாரம் உருக்குலைந்துவிடும். செரிமான உறுப்புகள் செயலிழந்துவிடும். மேலும் நான்கு நாட்கள் தூங்கவில்லை எனில் பாதி மனநோயாளியாகிவிடுவார். தூக்கமின்மை தொடர்ந்தால் நிச்சயம் அவர் ஒரு மனநோயாளிதான்.

குடிநோயாளிகள் பலரும், “தூக்கம் வரலைங்க, அதான், குடிக்கிறேன்” என்பார்கள். ஒருவர் ஐந்து ஆண்டுகள் தொடர்ந்து தினமும் மது அருந்துகிறார் என்று வைத்துக்கொள்வோம். அவர் தூங்கி ஐந்து ஆண்டுகள் ஆகிவிட்டது என்று அர்த்தம். பத்து நாட்கள் தூக்க மின்மைக்கே ஒருவருக்குப் பைத்தியம் பிடிக்கும் என்றால் ஐந்து ஆண்டுகளாக ஒரு குடிநோயாளி தூங்கவில்லை என்றால் - நிச்சயமாக அவரும் ஒரு குடி மற்றும் மனநோயாளியே. என்ன, பலருக்கு வெளியே தெரிய வதில்லை.

உண்மையில், மது அருந்திவிட்டுப் படுக்கும்போது வருவது, தூக்கம் அல்ல; மயக்கம். மூளையைத் தவிர அவரது உடல் உறுப்புகள் அனைத்தும் மயங்கிக்கிடக்கும். உறக்கம் என்பது பூப்போல கண் இமைகள் அணைய வேண்டும், குழந்தையின் தூக்கத்தைப் போல. ஆனால், குடிநோயாளிகளின் மயக்கம் என்னும் தூக்கம் எருமை ஏறி மிதிப்பதற்கு ஒப்பானது. இந்த ஒப்பீட்டுக்குக் காரணம் இருக்கிறது. ஒருவர் மீது எருமை ஏறி மிதித்தால் உயிரிழக்கவும் வாய்ப்பிருக்கிறது இல்லையா? அப்படி மது அருந்திவிட்டு மயக்கத்தில் ஆழ்ந்திருக்கும்போது உயிர் பிரியும் அபாயங்கள் நிறையவே உண்டு. சரி, டாக்டர் என்ன சொல்கிறார் என்று பார்ப்போம்.

உறக்கத்தில் உயிர் பிரியும் அபாயம்!

“சுவாசத்தின் சூட்சுமம் பின்னந்தலையில் இருக்கிறது. அந்த நரம்பு மண்டலத்துக்குப் பெயர் ‘ரெஸ்பிரேட்டரி சென்டர்’ (Respiratory centre). நமது சுவாசத்தைக் கட்டுப் படுத்தும் உயிரியல் கருவி இது. பின்னந்தலையில் பலமாக அடித்தால் மயக்கம் அடைவார்களே, அதற்குக் காரணம் இந்த கருவி சேதம் அடைவதுதான். ஒருவர் தொடர்ந்து மது அருந்தும்போது இந்த உயிரியல் கருவி கடுமையாக பாதிக்கப்படும். ஒருவருக்கு ரத்தத்தில் ஆல்கஹாலின் அளவு 0.30 அளவுக்கு மேல் உயர்ந்துவிட்டாலே அவரது சுவாசம் சீராக இயங்காது. திடீரென்று உச்ச நிலைக்குச் செல்லும். திடீரென்று அபாயகரமான அளவுக்கு தாழும். மூச்சுத் திணறல் இது. ஒருகட்டத்தில் முச்சு விட முடியாமல் தன்னிச்சையாகத் தூக்கத்தில் வாயைத் திறந்து சுவாசத்துக்குத் துடியாய்த் துடித்து, அடங்கி, இறந்துபோவார். எனவே, ஒருவர் அதிக அளவு மது அருந்தி மயக்க நிலைக்குச் சென்று விட்டால் அவரை விட்டு விலகிச் சென்றுவிடக் கூடாது. அருகிலிருந்து கவனித்துக்கொள்ள வேண்டும். அவருக்கு எந்த நேரமும் மூச்சுத் திணறல் ஏற்படலாம்.

அடுத்து, ஒருவர் அதிக அளவு மது அருந்திவிட்டு எழுப்ப இயலாத அளவுக்கு மயக்கத்தில் ஆழ்ந் திருக்கும்போது பெரும்பாலும் மல்லாக்கப் படுத்திருப்பார். அதிகப்படியான மது, உணவு இரைப்பையை நிறைத்திருக்கும். அதிக அளவு மது அருந்திய நிலையில் உணவு செரிக்காது. மயக்க நிலையிலேயே வாந்தி எடுப்பார்கள். மதுக்கடை வாசலில் மயக்கிக்கிடக்கும் குடிநோயாளிகள் பலரும் மயக்கத்திலேயே வாந்தி எடுக்கும் காட்சிகளை நினைவுபடுத்திப் பாருங்கள். பக்கவாட்டில் சரிந்த நிலையில் அப்படி வாந்தி எடுத்தால் பெரியதாக அபாயம் இல்லை. மல்லாக்கப் படுத்த நிலையில் வேகமாக வாந்தி எடுக்கும்போது அது உணவுக் குழாய்க்கு மிக அருகில் இருக்கும் மூச்சுக் குழாய்க்குள் சென்றுவிட அதிக வாய்ப்புகள் இருக்கின்றன.

உதாரணத்துக்கு, புரையேறுவதை எடுத்துக்கொள்வோம். உண்ணும்போது லேசாக சிறு உணவுத் துகள் மூச்சுக் குழாய்க்குள் சென்றாலே தாங்க முடியாமல் இருமி, கண்ணில் நீர் வழியத் துடிக்கிறோம். தலையில் தட்டி, மெதுவாகத் தண்ணீர் குடித்த பின்பே ஆசுவாசம் அடைய முடிகிறது. அப்படி என்றால் ஏராளமான வாந்தி ஒருவரின் மூச்சுக்குழாய்க்குள் செல்லும்போது, அதுவும் அப்போது அவர் மயக்கம் நிலைக்கும்போது, என்ன நடக்கும்? மரணம் நிச்சயம்.

‘குடி’ நுரையீரலையும் கெடுக்கும்!

புகைபிடிப்பதால் நுரையீரல் கெடும் என்பது தெரியும். மதுவும் நுரையீரலை பாதிக்கும் என்பது தெரியுமா? பெரும்பாலான குடிநோயாளிகள் குறட்டை விடுவார்கள். குறட்டை என்பது ஒரு உடல் குறைபாடுதான். மது அருந்துவதால் குறட்டை நோய் அதிகரிக்கும். அதுவும் சில குடிநோயாளிகள் பயங்கரமாக வாயைத் திறந்து வைத்துக்கொண்டு சத்தமாகக் குறட்டை விடுவார்கள். குறட்டை சத்தம் உச்ச நிலையிலும் தாழ்ந்த நிலையிலும் ஏறி, இறங்கிப் பயணிக்கும். அப்போது அவர்களின் உடல் அதிர்ந்து அடங்கும். இது நகைப்புக்குரிய விஷயம் அல்ல. அபாயகரமானது. இதுபோன்ற குறட்டையின்போது புரை ஏறி உணவுத் துகள்கள் நுரையீரலுக்குள் சென்றுவிட வாய்ப்புகள் இருக்கின்றன. நுரையீரல் என்பது பாதுகாக்கப்பட்ட பகுதி. அங்கே காற்றைத் தவிர எதற்கும் அனுமதி இல்லை. அங்கே உணவுத் துகள் அல்லது சிறு இறைச்சி துகள் சென்றுவிட்டால் உடனே எதுவும் தெரியாது. ஒரு வாரத்துக்குள் அது அழுகி, நோய்க் கிருமிகள் பெருகி நுரையீரல் கடுமையாக பாதிக்கப்படும். மூச்சுத்திணறலுடன் கூடிய கடுமையான காய்ச்சல் ஏற்படும். இதன் பெயர் ‘ஆஸ்பிரேஷன் நிமோனியா’ (Aspiration pneumonia). உடனடியாகத் தகுந்த சிகிச்சை அளிக்கவில்லை என்றால் மரணமும் நேரலாம். எனவே, மதுவின் மயக்கம் என்பது மரணம் வரை அழைத்துச் செல்லும்.” என்றார்.

(தெளிவோம்)

- டி.எல். சஞ்சீவிகுமார்,

தொடர்புக்கு: sanjeevikumar.tl@thehindutamil.co.in
Keywords: மெல்லத் தமிழன் இனி, குடி நோயாளி, மன நோயாளி, தூக்கமின்மை, தூக்கம் இன்மை நோய், ‘ஆஸ்பிரேஷன் நிமோனியா’

நன்றி: தமிழ் இந்து நாளிதழ்
26-11-2014

“நபியே! மதுபானத்தையும், சூதாட்டத்தையும் பற்றி அவர்கள் உம்மிடம் கேட்கின்றனர்; நீர் கூறும்; “அவ்விரண்டிலும் பெரும் பாவம் இருக்கிறது; மனிதர்களுக்கு அவற்றில் சில பலன்களுமுண்டு; ஆனால் அவ்விரண்டிலும் உள்ள பாவம் அவ்விரண்டிலும் உள்ள பலனைவிடப் பெரிது.”

(அல்குர்ஆன் 2: 219)

மது அருந்துதல் ஷைத்தானின் அருவக்கத்தக்க செயலாகும்: -

ஈமான் கொண்டோரே! மதுபானமும், சூதாட்டமும், கற்சிலைகளை வழிபடுதலும், அம்புகள் எறிந்து குறி கேட்பதும், ஷைத்தானின் அருவருக்கத்தக்க செயல்களிலுள்ளவையாகும்; ஆகவே நீங்கள் இவற்றைத் தவிர்த்துக் கொள்ளுங்கள் – அதனால் நீங்கள் வெற்றியடைவீர்கள். நிச்சயமாக ஷைத்தான் விரும்புவதெல்லாம், மதுபானத்தைக் கொண்டும், சூதாட்டத்தைக் கொண்டும் உங்களிடையே பகைமையையும், வெறுப்பையும் உண்டு பண்ணி அல்லாஹ்வின் நினைவிலிருந்தும், தொழுகையிலிருந்தும் உங்களைத் தடுத்து விடத்தான்; எனவே, அவற்றை விட்டும் நீங்கள் விலகிக் கொள்ள மாட்டீர்களா?

(அல்-குர்ஆன் 5:90-91)

மது அருந்துபவர், அதனை அருந்தச் செய்பவர், வாங்குபவர், விற்பவர், தயாரிப்பாளர், சுமப்பவர், இதன் மூலம் கிடைத்த வருவாயை சாப்பிடுபவர்கள் அனைவரையும் நபி அவர்கள் சபித்துள்ளார்கள்.

(ஆதாரங்கள் : அபூதாவுத், திர்மிதி, இப்னுமாஜா)

Monday, August 04, 2014

உயிரைப் பற்றிய பல மலைக்க வைக்கும் உண்மைகள்!

''முஹம்மதே! உயிரைப் பற்றி அவர்கள் உன்னிடம் கேட்கின்றனர். 'உயிர் என்பது எனது இறைவனின் கட்டளைப்படி உள்ளது. நீங்கள் குறைவாகவே கல்வி கொடுக்கப்பட்டுள்ளீர்கள்' என்று கூறுவீராக.'' (குர்ஆன் 17:85)

குர்ஆன் கூறும் இந்த வசனம் நம்மை வியப்பின் உச்சத்துக்கே கொண்டு செல்கிறது. குர்ஆனின் பல வசனங்கள் உலகில் உள்ள அனைத்து படைப்புகளைப் பற்றியும் சிந்திக்கச் சொல்கிறது. விண்வெளி பயணம் மனிதர்கள் ஆகிய நீங்கள் செய்ய முடியும். இன்னும் பல அறிவியல் முன்னேற்றங்களைக் கண்டாலும் உயிரைப் பற்றி உங்களால் ஒரு முடிவுக்கு வர முடியாது என்று அடித்து சொல்கிறது குர்ஆன். 'மனிதனே நீ குறைவாகவே அறிவு கொடுக்கப்பட்டிருக்கிறாய். உயிரின் சூட்சுமத்தை உன்னால் அறிந்து கொள்ள முடியாது' என்று கூறுகிறது.

உயிரைப் பற்றி சில யூதர்கள் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் கேட்டபோது என்ன நடந்தது என்பதை பின் வரும் புகாரி ஹதீஸ் நமக்கு விளக்குகிறது.

பேரீச்ச மட்டை ஒன்றைக் கையில் ஊன்றியவர்களாக, நபி அவர்கள் மதீனாவில் மக்கள் சஞ்சாரம் இல்லாத ஒரு பாழ் வெளியில் சென்றபோது அவர்களுடன் நானும் சென்று கொண்டிருந்தேன். அப்போது யூதர்களின் குழு ஒன்றை அவர்கள் கடந்து சென்றார்கள். அப்போது அவர்களில் ஒருவர் மற்றவரிடம் 'ரூஹை (உயிர்) பற்றி அவரிடம் கேளுங்கள்' என்றார்.

அவர்களின் இன்னொருவர் 'அவரிடம் அதைப் பற்றிக் கேட்காதீர்கள்; உங்களுக்குப் பிடிக்காத எதையும் அவர் சொல்லப் போவதில்லை' என்றார். அவர்களில் மற்றொருவரோ, '(இல்லை!) இறைவன் மீது ஆணையாக நாம் (அதைப் பற்றி) அவரிடம் கேட்டே விடுவோம்' என்றார். (முடிவில்) அவர்களில் ஒருவர் எழுந்து, 'அபுல் காஸிம் அவர்களே! உயிர் என்றால் என்ன? என்று கேட்டார்.

உடனே நபி அவர்கள் மெளனமானார்கள். 'அவர்களுக்கு இறைவனிடமிருந்து இப்போது செய்தி அறிவிக்கப்படுகிறது' என்று என்னுடைய மனதிற்குள் நினைத்தபடி நான் நின்று கொண்டிருந்தேன். (இறைச் செய்தி வரும்போது ஏற்படும் சிரமம் விலகும் வரை பொறுத்திருந்தேன்)) அவர்கள் தெளிவடைந்தபோது '(நபியே!) உம்மிடம் அவர்கள் ரூஹைப் பற்றிக் கேட்டார்கள். ரூஹு என்பது என் இறைவனுடைய கட்டளையைச் சார்ந்ததாகும். ஞானத்தில் (மிகக்) குறைந்த அளவே தவிர அவர்கள் கொடுக்கப்படவில்லை என்று நீர் (பதில்) கூறும்!' (திருக்குர்ஆன் 17:85) என்று (திருக்குர்ஆன் வசனத்தை) கூறினார்கள்" என அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத் ரளியல்லாஹு அன்ஹு அறிவித்தார். (ஸஹீஹூல் புகாரி 125) Volume:1, Book: 3)
இந்த நபி மொழியை நாம் ஆழ்ந்து சிந்திக்க வேண்டும். முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஏற்கெனவெ தயார் செய்திருந்து திட்டமிட்டு சொன்ன பதிலும் கிடையாது இது. தனது தோழர்களோடு நடந்து செல்லும் பொது எதேச்சையாக யூதர்கள் எதிரில் தென்பட அவர்கள் முகமது நபியிடம் தங்களது சந்தேகத்தைக் கேட்கின்றனர். யூதர்கள் கேட்ட கேள்விக்கு அவர்களால் சுயமாக பதில் சொல்ல முடியவில்லை. சிறிது நேரம் மௌனமாகிறார்கள். ஏனெனில் இது போன்ற அறிவு பூர்வமான விஷயங்களை அந்த அரபு மக்கள் அதிகம் விளங்கியிருக்கவில்லை. பிறகு இறைச் செய்தி வருகிறது. அந்த நேரத்தில் முகமது நபிக்குள் ஏற்படும் மாற்றத்தை நபித் தோழர் கவனிக்கிறார். அன்று இறங்கிய இந்த வசனம் இன்று வரை விஞ்ஞானிகளால் ஒரு தீர்வைக் காண முடியவில்லை.

பல சினிமாக்களில் இறந்தவுடன் அந்த உடலிலிருந்து ஒரு ஆவி பிரிவது போலவும் பிறகு அந்த ஆவி வேறொரு உடலில் புகுந்து கொண்டு 'லக லக லக லக லக' என்று புரியாத மொழியில் பேசுவதை பார்த்து நம் தமிழன் வாய் பிளந்து உட்கார்ந்திருப்பது எல்லாம் அறிவியலுக்கு சாததியம் இல்லை. அதே போல் பேய் பிசாசு குட்டி சாத்தான் என்று சொல்லி நாகூரிலும், ஏர்வாடியிலும், வேளாங்கண்ணியிலும் மனநோயாளிகள் புரள்வதை அறிவியலும் ஒத்துக் கொள்வதில்லை இஸ்லாமும் ஒத்துக் கொள்வதில்லை.

ஏதோ இப்படித்தான் இருக்க வேண்டும் என்று அவரவர் கற்பனைக்கு ஒரு வரையறையை உயிருக்கு வைத்திருக்கிறார்கள்.
இனி உலக வழக்கில் உயிரைப் பற்றி நாம் வைத்திருக்கும் இலக்கணத்தை வரிசையாக பார்ப்போம்.

1. உடம்பு உயிர் எடுத்ததோ? உயிர் உடம்பு எடுத்ததோ?
உடம்பு உயிர் எடுத்த போது உருவம் ஏது?
உருத் தரிப்பதற்கு முன் உடல் கலந்தது எங்ஙனே?
கருத் தரிப்பதற்கு முன் காரணங்கள் எங்ஙனே?
நம் முன்னோர்களான சிவ வாக்கியர் கூட இந்த உயிரின் சூட்சுமத்தை விளங்காமல் அதனையே பாடலாக எழுதி வைத்து சென்றும் விட்டார்.

2. உயிருக்கு விக்கி பீடியா தரும் தகவல்

உலக மதங்கள் பலவற்றில் உயிர் என்பது, உயிரினம் ஒன்றின் "பொருள் தன்மை" அற்ற பகுதியைக் குறிக்கும். ஆன்மா, ஆவி போன்ற வேறு பல பெயர்களாலும் குறிப்பிடப்படும் இதிலேயே சிந்தனை, ஆளுமை முதலியன அடங்கியிருப்பதாகக் கருதப்படுகிறது. இறையியலில், பொதுவாக உயிர் ஒரு உயிரினத்தின் இறப்பிற்குப் பின்னரும் தொடர்ந்து இருப்பதாக நம்பப்படுகிறது. சில மதங்கள், உயிர்கள் இறைவனால் படைக்கப்பட்டன என்கின்றன. வேறு சில மதங்களில் உயிர் எவராலும் படைக்கப்படாத நிலையானவற்றுள் ஒன்றாகக் கருதப்படுகின்றது. இறப்பின் போது உடலை விட்டு நீங்கும் உயிர் இன்னொரு உடல் எடுத்து உலகில் மீண்டும் பிறக்கின்றது என்கின்றன மறுபிறவியில் நம்பிக்கை கொண்ட சில மதங்கள். உடல் உயிர்களுக்கான தற்காலிகத் தங்குமிடம் என்றும், இறுதியில் இறைவனைச் சென்றடைவதற்கான செயல்களில் ஈடுபடுவதற்காக உயிர்களுக்கு இறைவன் உடலைக் கொடுக்கிறான் என்பதும் சில மதங்களின் கொள்கை.

உலகிலுள்ள பொருள்களைக் கிடைபொருள், கிளர்பொருள் என அறிவியல் உலகம் பகுத்துக் காண்கிறது.
உயிர் உள்ள பொருளை அறிவியல் கிளர்பொருள் Organism என்கிறது.
இது தூண்டினால் துலங்கும் response to stimuli.
இனப்பெருக்கம் செய்யும் reproduce.
வளர்ந்து மறையும் grow and develope.
தனித்துவம் கொள்ளும் Homeostasis.

இதனைத் தமிழர் மால் என்றனர். மால் என்றால் ஆசை. எல்லா உயிருக்கும் ஆசை உண்டு. பிற்காலத்தில் இதனைச் சத்தி என்றனர். சத்துள்ள பொருள் சத்தி. உடலில் சத்து இருந்தால் இயங்கும். இயங்குவது சக்தி.

உயிர் இல்லாமல் சும்மா கிடக்கும் பொருளைக் கிடைபொருள் Inorganism என்கிறோம். இதுதான் மெய். இதனைத் தமிழர் சிவம் என்றனர்.

--------------------------------------------------------------------------------------

இன்று உயிரைக் கூட செயற்கையாக உருவாக்கி கடவுளின் தேவையே இல்லை என்ற இடத்துக்கு வந்துள்ளோம் என்று சிலர் கூறி வருகின்றனர். அது எந்த அளவு உண்மை என்பதை இனி பார்ப்போம்.

சகோ ஆஷிக் எதிர்க்குரல் தளத்தில் பதிந்த கட்டுரையை பார்ப்போம்.

விலங்கு, செடி, காளான், என்பன உயிரின வகைகள். (such as animal, plant, fungus, or micro-organism), virus)
செயற்கையாக ஒரு உயிரை உருவாக்கி விட முடியுமா? என்ற கேள்விக்கான விடையை இனி பார்ப்போம்.

இந்த ஆராய்ச்சியை நடத்திய கிரேக் வென்டர் கழகத்தின் தலைவரும் (J.Craig Venter Institute (JCVI)), "செயற்கை செல்" உருவாக்கத்தில் பெரும் பங்காற்றியவருமான டாக்டர் கிரேக் வென்டர் அவர்கள் சொன்னால் சரியாக இருக்குமா?

"Kornberg did not create life in a test tube, nor did we create life from scratch. We transformed existing life into new life. We also did not design and build a new chromosome from nothing. Rather, using only digitized information, we synthesized a modified version of the naturally occurring Mycoplasma mycoides genome. The result is not an "artificial" life form" - J.Craig Venter and Daniel Gibson, How We Created the First Synthetic Cell, The Wall Street Journal, dated 26th May 2010.

நாங்கள் உயிரை ஆரம்பத்திலிருந்து (from scratch) உருவாக்கவில்லை. இருந்த ஒரு உயிரை வேறொரு புது உயிராக உருமாற்றியுள்ளோம். அது போல, நாங்கள் ஒன்றும் ஒரு புது உயிர் அணுககோலை (Chromosme) ஒன்றுமில்லாததிலிருந்து வடிவமைக்கவோ, கட்டமைக்கவோ இல்லை. முடிவோ, செயற்கை உயிர் இல்லை - (Extract from the original quote of) J.Craig Venter and Daniel Gibson, How We Created the First Synthetic Cell, The Wall Street Journal, dated 26th May 2010.



இந்த ஆராய்ச்சியை முன்னின்று நடத்தியவரே சொல்கின்றார் 'நாங்கள் செயற்கை உயிரை உருவாக்கவில்லை"யென்று.

இதே போன்றதொரு கருத்தை தான் "தி நியூயார்க் டைம்ஸ்" நாளிதழில் வந்த ஒரு கட்டுரையும் பிரதிபலிக்கின்றது.
"He has not created life, only mimicked it” - Dr. Baltimore, Researchers Say They Created a ‘Synthetic Cell’, The New York Times, dated 20th May 2010.

அவர் உயிரை உருவாக்கவில்லை, ஒரு உயிரை மிமிக்ரி மட்டுமே செய்துள்ளார் - (Extract from the original quote of) Dr. Baltimore, Researchers Say They Created a ‘Synthetic Cell’, The New York Times, dated 20th May 2010.

செயற்கை செல் என்றால் என்ன?

உலகில் உள்ள அனைத்து உயிரினங்களும் செல்களால் ஆனவையே. அவை ஒருசெல் உயிரினங்கள், பலசெல் உயிரினங்கள் என்று பிரிக்கப்பட்டுள்ளன. பெரும்பாலான நுண்ணுயிரிகள் (உதாரணத்துக்கு பாக்டீரியாக்கள்) ஒரு செல் உயிரினங்களே. ஆக, ஒரு செல்லை ஆரம்பத்திலிருந்து உருவாக்கினாலே (from Scratch) உயிரியலைப் பொறுத்தவரை அது ஒரு உயிரை உருவாக்கியதாகத் தான் அர்த்தம்.

இப்போது செயற்கை செல் ஆய்வுக்கு வருவோம்.

JCV கழகம் கடந்த பதினைந்து ஆண்டுகளாக ஒரு முக்கியமான உயிரியல் கேள்விக்கான பதிலை கண்டுபிடிப்பதில் ஆய்வு மேற்கொண்டு வருகின்றது. "ஒரு வாழும் செல்லுக்கு குறைந்த பட்சம் எத்தனை மரபணுக்கள் (Genes) தேவை? (what is the minimum number of genes required to make a living cell?)" என்ற கேள்விதான் அது. இந்த ஆய்வுக்கு அவர்கள் சூட்டிய பெயர் "குறைந்தபட்ச மரபணு திட்டம் (Minimal Genome Project)".

இந்த கேள்விக்கான பதிலை கண்டுபிடிப்பதற்காக ஒரு மிகச் சாதாரண உயிரினமான Mycoplasma mycoides பாக்டீரியாவை பல ஆண்டுகளாக ஆராய்ந்து வருகின்றார்கள். இந்த பாக்டீரியா சுமார் 475 மரபணுக்களால் ஆனது. ஒப்பிட்டு சொல்ல வேண்டுமென்றால், மனித மரபுரேகை அல்லது மரபணுத் தொகுப்பு (Genome, which means a full complement of genes found in the cell) சுமார் 20,000-25,000 மரபணுக்களால் ஆனது.

முதலில் இந்த பாக்டீரியாவின் (475 மரபணுகளுக்குண்டான) டி.என்.ஏ வார்த்தைகளை வரிசைப்படுத்தி கொண்டார்கள். கணிப்பொறியில் அந்த தகவல்களை பதிந்து கொண்டனர். பின்னர் அவற்றை 1,100 துண்டுகளாக பிரித்து கொண்டார்கள். ஒவ்வொரு துண்டையும் செயற்கையான முறையில் நான்கு வெவ்வேறு விதமான வேதிப்பொருட்களை கொண்டு உருவாக்கினார்கள்.

இப்படி செயற்கையாக உருவாக்கப்பட்ட 1,100 டி.என்.ஏ துண்டுகளையும் ஒன்று சேர்த்து (Assembling) மரபுரேகையை (Genome) உருவாக்கினார்கள்.

இந்த துண்டுகளை எப்படி இணைத்தார்கள் என்றால், ஈஸ்ட் (Yeast) செல்களை கொண்டுதான். அதாவது, செயற்கையாக ஒரு மரபுரேகையை உருவாக்க ஏற்கனவே இயற்கையாக உள்ள ஒரு வாழும் செல் தான் அவர்களுக்கு உதவியிருக்கின்றது.

"The synthetic Mycoplasma mycoides genome was assembled by adding the overlapping DNA fragments to yeast. Once inside a yeast cell, the yeast machinery recognized that two DNA fragments had the same sequence and assembled them at this overlapping region" - J.Craig Venter and Daniel Gibson, How We Created the First Synthetic Cell, The Wall Street Journal, dated 26th May 2010.
இந்த வாழும் செல் இல்லையென்றால் செயற்கை மரபுரேகையை உருவாக்கியிருக்க முடியாது. இது கவனிக்கப்பட வேண்டிய முக்கிய விஷயம்.

இப்படி உருவாக்கப்பட்ட மரபுரேகை சுமார் 1.08 மில்லியன் (1 Million = 10 lakhs) வார்த்தைகளை கொண்டதாக இருந்தது. இதுதான் உலகிலேயே இது வரை உருவாக்கப்பட்ட செயற்கை மரபுரேகைகளில் மிகப் பெரியது.

இப்படியாக செயற்கை மரபுரேகை (Synthetic Genome) உருவாக்கப்பட்டது. இப்போது இதனை வேறொரு பாக்டீரியாவின் செல்லுக்குள் (Recipient Cells) செலுத்தி சோதனை செய்ய வேண்டும். இதற்கு ஆய்வாளர்கள் தேர்ந்தெடுத்த பாக்டீரியா Mycoplasma capricolum என்பதாகும். முதலில் இந்த பாக்டீரியாவின் மரபுரேகையை நீக்கிவிட்டனர்.

பின்னர், Mycoplasma capricolum பாக்டீரியாவின் தடுப்பு நொதி மரபணுவை (Restriction Enzyme gene) செயலிழக்க செய்தார்கள். அப்படி செய்யவில்லை என்றால் அது உள்ளே வரும் செயற்கை மரபுரேகையை அழித்து விடும்.

அந்த மரபணுவை செயலிழக்க செய்த பின்பு செயற்கை மரபுரேகையை Mycoplasma capricolum பாக்டீரிய செல்லின் சய்டோப்லாசத்தின் (Cytoplasm) உள்ளே செலுத்தினர் (Transplantation). செயற்கையாக உருவாக்கப்பட்ட மரபுரேகையை அந்த பாக்டீரியா ஏற்றுக்கொண்டு (Booted up) பிரதி எடுக்க (replicate) ஆரம்பித்து விட்டது.

இது குறித்த விரிவான ஆய்வு முடிவுகள் சயின்ஸ் எக்ஸ்பிரஸ் (Science Express) இணைய இதழில் மே மாதம் 20 ஆம் தேதி வெளிவந்தன.

இப்படி உருவான அந்த பாக்டீரியாவிற்கு அவர்கள் வைத்த பெயர் "Mycoplasma mycoides JCVI-syn1.0" என்பதாகும். இதற்கு சின்தியா (Synthia) என்ற செல்லப் பெயரும் உண்டு.

சற்று எளிமையாக சொல்ல வேண்டுமென்றால், ஒரு காரின் ஒரு பாகத்தை பார்த்து அந்த தகவல்களை கணிப்பொறியில் ஏற்றிக்கொண்டு, பின்னர் அதே போன்ற ஒன்றை ஆய்வுக்கூடத்தில் உருவாக்கி அதனை வேறொரு காரில் பொருத்தி அது வேலை செய்கின்றதா என்று பார்ப்பது.

ஆக, இவர்கள் செய்தது, ஒரு பாக்டீரியாவை நன்கு ஆராய்ந்து அதன் மரபுரேகையை கணிப்பொறி துணையோடு ஆய்வுக்கூடத்தில் செயற்கையாக உருவாக்கி பின்னர் அதனை மற்றொரு பாக்டீரியாவில் செலுத்தியது.

மொத்தத்தில், இவர்கள் மரபுரேகையை புதிதாக உருவாக்கவில்லை. ஏற்கனவே இருந்த ஒன்றை பார்த்து அதே போன்ற ஒன்றை சிற்சில மாற்றங்களோடு உருவாக்கியுள்ளனர். இது எப்படி செயற்கை உயிரை உருவாக்கியதாக அமையும்? அதனால் தான் கிரேக் வென்டர், தாங்கள் செயற்கை உயிரை உருவாக்கவில்லை என்றும், ஏற்கனவே இருந்த ஒரு உயிரை உருமாற்றி மட்டுமே உள்ளோம் என்று தெளிவாக விளக்கியுள்ளார்.

விஞ்ஞானிகள் செயற்கை உயிரை உருவாக்கிவிட்டார்கள் என்று சிலர் நினைத்தால் அது அவர்களது அறியாமையே தவிர வேறொன்றுமில்லை.....

இப்போது உங்களுக்கு ஒரு சந்தேகம் வந்திருக்கலாம். அதாவது, கிரேக் வென்டர் குழு (JCVI) செயற்கையாக உருவாக்கியது பாக்டீரிய செல்லின் மரபுரேகையைத் தானே?, பிறகு ஏன் ஒரு செல்லையே செயற்கையாக உருவாக்கியது போல "செயற்கை செல்" என்று பெயர் வைத்திருக்கின்றார்கள்?

உங்களுடைய சந்தேகம் மிக நியாயமான ஒன்றுதான். இந்த கேள்வியைத்தான் பலரும் கேட்கின்றனர். மரபுரேகையை மட்டும் நகலெடுத்து செயற்கையாக உருவாக்கிவிட்டு அதற்கு "செயற்கை செல்" என்று பெயரிடுவது என்ன மாதிரியான லாஜிக்?, "செயற்கை மரபுரேகை" (Synthetic Genome) என்றுதானே பெயரிட்டிருக்க வேண்டும்?

"First, as many have noted, the technical accomplishment is not quite what the JCVI press release claimed. It’s hard to see this as a synthetic species, or a synthetic organism, or a synthetic cell; it’s a synthetic genome of Mycoplasma mycoides, which is familiar enough" - Gregory Kaebnick, Is the “Synthetic Cell” about Life?, The Scientist, Volume 24, Issue 7, Page 27, dated 1st July 2010.

"முதலில், பலரும் குறிப்பிட்டது போல, JCV கழகம் வெளியிட்ட அறிக்கை கோருவது போல இந்த ஆராய்ச்சி தொழில்நுட்ப சாதனையாக தெரியவில்லை. இதனை ஒரு செயற்கை இனமாகவோ, அல்லது செயற்கை உயிரியாகவோ, அல்லது செயற்கை செல்லாகவோ பார்க்க கடினமாக உள்ளது; Mycoplasma mycoidesனுடைய செயற்கை மரபுரேகையான இது நமக்கெல்லாம் நன்கு அறியப்பட்ட ஒன்றுதான்" - (Extract from the original quote of) Gregory Kaebnick, Is the “Synthetic Cell” about Life?, The Scientist, Volume 24, Issue 7, Page 27, dated 1st July 2010.

ராய்டர்ஸ் (Reuters) செய்தி நிறுவனம் செயற்கை செல் குறித்து எழுதும் போது "Artificial life? Synthetic genes 'boot up' cell" என்று தலைப்பு வைத்ததற்கு இந்த குழப்பம் ஒரு காரணமாக இருந்திருக்கலாமோ?

இது குறித்து வென்டர் என்ன கூறுகின்றார்?...செல்லை கட்டுபடுத்துவது செயற்கையாக உருவான மரபுரேகை என்பதால் இதற்கு "செயற்கை செல்" என்று பெயர் வைத்ததாக கூறுகின்றார். ஆனால் அவருடைய இந்த விளக்கம் விமர்சனத்துக்கு உள்ளாகி இருக்கின்றது...

"The explanation from the Venter camp is that the genome took over the cell, and since the genome is synthetic, therefore the cell is synthetic. But this assumes a strictly top-down control structure that some biologists now question. Why not say instead that the genome and the cell managed to work out their differences and collaborate, or even that the cell adopted the genome (and its identity)? Do we know enough to say which metaphor is most accurate?" - Gregory Kaebnick, Is the “Synthetic Cell” about Life?, The Scientist, Volume 24, Issue 7, Page 27, dated 1st July 2010.

ஆக, இவர்களது ஆய்வுக்கு சரியான பெயர் "செயற்கை மரபுரேகை" என்பது தானே தவிர "செயற்கை செல்" அல்ல.

இந்த ஆய்வின் மூலம் JCV கழகம் தங்கள் திட்டத்தை நோக்கி ஒரு படி மேலே சென்றிருக்கின்றனர். அதாவது, ஒரு வாழும் செல்லுக்கு குறைந்த பட்சம் எத்தனை மரபணுக்கள் தேவை என்பது பற்றி அறியும் திட்டம்.

இங்கு நான் சொல்ல முயற்சித்திருப்பது மிகச் சிறிதுதான். இந்த ஆய்வு பல நுணுக்கமான விஷயங்களை உள்ளடக்கியது. அதனால் நீங்கள் இது பற்றி மேலும் ஆராய்ந்தறிய வேண்டுமென்று கேட்டுக்கொள்கின்றேன்.

இந்த ஆய்வு, உயிர் என்பது வெறும் வேதிப்பொருட்களால் ஆனது என்று கூறுகின்றதா? (Does the Venter Institute's achievement show that life is just chemicals?)

இல்லை. நான் அப்படி நினைக்கவில்லை.

செயற்கையாக டி.என்.ஏவை உருவாக்கி அவற்றை மற்ற உயிரின செல்களுக்குள் செலுத்துவதென்பது பல காலங்களாக நடந்து வருவதுதான். இந்த முறை நடந்ததுதான் அளவுக்கோளில் மிகப் பெரியது.

ஒரு முக்கிய விஷயத்தை நீங்கள் கவனிக்க வேண்டும்.

அதாவது, Mycoplasma capricolum பாக்டீரியாவின் மரபுரேகை வெளியே எடுக்கப்பட்டு விட்டாலும் அது இன்னும் உயிருள்ள ஒரு செல் தான் (மரபுரேகையை வெளியே எடுத்தவுடன் அது செத்துவிடவில்லை). ஆனால், அது தன்னுடைய தன்மையான "தன்னைத்தானே பிரதி எடுத்துக்கொள்வதை" செய்யாது. செயற்கையாக உருவாக்கப்பட்ட மரபுரேகை உள்ளே செலுத்தபட்டவுடன் அந்த பாக்டீரியா தன்னைத்தானே பிரதி எடுத்துக்கொள்ள ஆரம்பித்து விட்டது.

வாழும் மற்றும் பிரதி எடுக்கும் என்று இவற்றுக்கான வித்தியாசம் இன்னும் சரிவர அறிவியலாளர்களுக்கு புலப்படவில்லை. ஒரு செல்லையே செயற்கையாக உருவாக்குவது எப்படி என்றும் விளங்கவில்லை.

"What separates a bag of DNA from a living, replicating cell is still unclear and un-synthesizable. To me, life is still "special" and incredibly powerful" - Christina Agapakis, What Synthia Means to Me, Oscillator, Scienceblogs, dated 21st May 2010.

"வாழும் மற்றும் பிரதி எடுக்கும் செல் என்று இவற்றுக்கான வித்தியாசம் இன்னும் சரிவர அறிவியலாளர்களுக்கு புலப்படவில்லை. ஒரு செல் செயற்கையாக உருவாக்கப்படவும் இல்லை. என்னை பொறுத்தவரை உயிர் என்பது தனித்துவம் மிக்கது மற்றும் மிகவும் வலிமையானது" - (Extract from the Original quote of) Christina Agapakis, What Synthia Means to Me, Oscillator, Scienceblogs, dated 21st May 2010.

ஆக, உயிருள்ள ஒரு செல்லுக்குள் தான் செயற்கை மரபுரேகை புகுத்த பட்டுள்ளது.

ஒரு வாழும் செல்லை செயற்கையாக வேதிப்பொருட்களை கொண்டு உருவாக்கும் வரை உயிர் என்பது வெறும் வேதிப்பொருட்களால் ஆனது என்று கூற முடியாது.

செயற்கை செல் இறைவனை மறுக்கின்றதா?

இதற்கான பதிலை வென்டர் தெளிவாக கூறிவிட்டார். தாங்கள் செயற்கை உயிரை உருவாக்கவில்லை என்று. ஏற்கனவே இருந்த ஒரு உயிரை ரி-ப்ரோக்ராம் (Re-Program) தான் செய்துள்ளார்கள்.

மரபுரேகையையும் (Genome) இவர்களாக உருவாக்கவில்லை, இயற்கையாக இருந்த ஒரு உயிரின் மரபுரேகையை பார்த்து அதே போன்ற ஒன்றை செய்துள்ளனர்.

உதாரணத்துக்கு, மரபுரேகையை ஒரு மென்பொருளோடு (Software) ஒப்பிட்டால், அந்த மென்பொருளை இவர்களாக எழுதவில்லை, ஏற்கனவே இருந்த ஒரு மென்பொருளை பார்த்து காப்பி அடித்திருக்கின்றனர், அவ்வளவுதான். (They didn't write a new software, they just copied a existing one).

"The work reported by Venter and his colleagues is an important advance in our ability to re-engineer organisms; it does not represent the making of new life from scratch." - Jim Collins, Artificial life? Synthetic genes 'boot up' cell, Reuters, dated 20th May 2010.

வென்டர் மற்றும் அவருடைய குழுவினருடைய ஆய்வு, உயிரினங்களை மறுசீரமைப்பு செய்யும் தொழில்நுட்பத்தில் ஒரு முக்கிய முன்னேற்றம். (ஆனால்) அது ஒரு புது உயிரை ஆரம்பத்திலிருந்து உருவாக்கவில்லை - (Extracted from the original quote of) Jim Collins, Artificial life? Synthetic genes 'boot up' cell, Reuters, dated 20th May 2010.

இவர்கள் கடவுளாக முயற்சிக்கவில்லை. கடவுள் உருவாக்கிய ஒரு உயிரின் சிறு பகுதியை பார்த்து அதனை 40 மில்லியன் டாலர்கள் செலவில், அதிநவீன இயந்திரங்களின் துணையோடு, 15 வருட கடின உழைப்பில், 25 விஞ்ஞானிகளின் கண்காணிப்பில் நகலெடுத்துள்ளனர். இது எப்படி கடவுளை மறுப்பதாக அமையும்?

மேலும், மரபுரேகை மட்டும் தான் செயற்கையாக உருவாக்கப்பட்டது, அது செலுத்தப்பட்ட செல்லோ இயற்கையானது.

ஒரு செல்லையே செயற்கையாக உருவாக்கினால் தான் உயிரியல் வரையரைப்படி அது உயிரினமாக கருதப்படும்.

ஆக, செயற்கையாக உருவாக்கப்பட்ட மரபுரேகையை செயற்கையாக உருவாக்கப்பட்ட செல்லுக்குள் இவர்கள் செலுத்தவில்லை. இயற்கையாக உள்ள மற்றொரு செல்லுக்குள் தான் செலுத்தியிருக்கிறார்கள்.

வேறுவிதமாக சொல்லப்போனால் இந்த மரபுரேகையை உருவாக்க ஒரு சிறு பகுதியை மிமிக்ரி செய்தும் மற்றவற்றை கடன் வாங்கியும் உள்ளனர்.

"It might be still more accurate to say that the researchers mimicked one part and borrowed the rest" - Gregory Kaebnick, Is the “Synthetic Cell” about Life?, The Scientist, Volume 24, Issue 7, Page 27, dated 1st July 2010.
இன்னும் துல்லியமாக சொல்ல வேண்டுமென்றால், ஆய்வாளர்கள் ஒரு பகுதியை மிமிக்ரி செய்தும், மற்றவற்றை கடன் வாங்கியும் உள்ளனர் - (Extract from the original quote of) Gregory Kaebnick, Is the “Synthetic Cell” about Life?, The Scientist, Volume 24, Issue 7, Page 27, dated 1st July 2010.

ஒரு கணிப்பொறியில் (Mycoplasma mycoides) உள்ள மென்பொருளை (Genome of Mycoplasma mycoides) காப்பி செய்து அதனை மற்றொரு கணிப்பொறியில் (Mycoplasma capricolum) மாற்றி விட்டு விட்டனர். ஆக, செல் என்னும் கணிப்பொறியை கடன் வாங்கியும், மரபுரேகை என்னும் மென்பொருளை மிமிக்ரி செய்தும் ஆய்வு முடிவுகளை அளித்திருக்கின்றனர். இது எப்படி கடவுளை மறுப்பதாக அமையும்?

அதுமட்டுமல்லாமல் இவர்களுடைய ஆய்வுக்கு உறுதுணையாக இருந்தது ஒரு வாழும் செல் தான் (ஈஸ்ட் செல்).

ஈஸ்ட் செல்கள் இல்லையென்றால் சின்தியா உருவாகியிருக்காது. ஆக, ஏற்கனவே இருந்த ஒரு உயிரைக்கொண்டு தான் செயற்கை மரபுரேகையை உருவாக்கியுள்ளனர்.

"Without life, Synthia wouldn't be alive" - Christina Agapakis, What Synthia Means to Me, Oscillator, Scienceblogs, dated 21st May 2010.
உயிரில்லை என்றால் சின்தியா வந்திருக்காது - (Extract from the original quote of) Christina Agapakis, What Synthia Means to Me, Oscillator, Scienceblogs, dated 21st May 2010.

செயற்கையான ஒன்றை உருவாக்குவதற்கு இயற்கையான ஒன்றுதான் இவர்களுக்கு தேவைப்பட்டிருக்கின்றது.

மொத்தத்தில், இறைவனால் படைக்கப்பட்ட ஒரு உயிரை மாதிரியாக எடுத்துக்கொண்டு, இறைவனால் படைக்கப்பட்ட ஒரு உயிரை "செயற்கை மரபுரேகையை" உருவாக்க பயன்படுத்தி கொண்டு, இறைவனால் படைக்கப்பட்ட ஒரு உயிருக்குள் தங்களது செயற்கை மரபுரேகையை செலுத்திவிட்டு என்று இப்படி எல்லா நிலையிலும் JCV குழுவினருக்கு இறைவனுடைய படைப்புகள் தான் தேவைப்பட்டிருக்கின்றது.

இப்படி இறைவன் கொடுத்த அனைத்தையும் உபயோகப்படுத்தி கொண்டு, விஞ்ஞானிகள் ஒரு உயிரை செயற்கையாக உருவாக்கி கடவுளை பொய்பித்து விட்டனர் என்று கூறுவது அபத்தமானது மட்டுமல்ல, அறிவுக்கு ஒத்து வராததும் கூட.

இதனால் தான் வென்டர் "தாங்கள் செயற்கை உயிரை உருவாக்கவில்லை" என்று மிக தெளிவாக, விரைவாக மறுத்து விட்டாரோ?

செயற்கை செல் நாத்திக கொள்கையை பொய்பிக்கின்றதா?

என்னை பொறுத்தவரை, ஆம்.

உலகில், பல மில்லியன் ஆண்டுகளுக்கு முன் தற்செயலாக ஒரு செல் உருவாகியிருக்க வேண்டும் (Abiogenesis), பின்னர் அவற்றில் இருந்து படிப்படியாக உயிரினங்கள் வந்திருக்க வேண்டுமென்பது பல நாத்திகர்களின் நம்பிக்கை. இந்த நம்பிக்கையை சுக்குநூறாக உடைத்துள்ளது செயற்கை செல் ஆராய்ச்சி.

பல பேருடைய அயராத உழைப்பில், அதி நவீன கருவிகளைக் கொண்டு இந்த செயற்கை மரபுரேகை உருவாகியுள்ளது. (நகலெடுப்பதில் ஏற்பட்ட) ஒரு சிறிய தவறு பல மாதங்களுக்கு இந்த ஆராய்ச்சியை மேற்கொண்டு நடக்க விடாமல் தடுத்திருக்கின்றது. ஆக, அதி கவனமாக பதினைந்து வருடங்களாக பாடுபட்டு இந்த ஆய்வை செய்திருக்கின்றனர்.

ஆனால் பல நாத்திகர்களோ ஒரு வாழும் செல் தற்செயலாக உருவாகியிருக்கும் என்ற வாதத்தை எந்தவொரு ஆதாரமும் இல்லாமலேயே நம்பிக்கொண்டிருக்கின்றனர். ஒரு சாதாரண பாக்டீரிய செல்லின் உள்ளே இருக்கும் மரபுரேகையை உருவாக்குவதற்கு அதிநவீன இயந்திரங்களின் உதவியும், பலருடைய தீவிர கண்காணிப்பும் தேவைப்படுகிறதென்றால், மிக சிக்கலான கட்டமைப்பை கொண்ட ஒரு வாழும் செல் யாருடைய கண்காணிப்பும், உதவியும் இல்லாமல் தற்செயலாக உருவாகியிருக்கும் என்பது என்ன விதமான வாதம்?

ஒரு செல்லே தற்செயலாக உருவாகியிருக்க வாய்ப்பில்லை என்னும் போது அதனை அடிப்படையாக கொண்டு மற்றவை வந்திருக்கும் என்பது பகுத்தறிவுக்கு உட்பட்டதா?

ஒவ்வொரு முறையும் இறைவனை மறுப்பதாக கூறிக்கொண்டு நாத்திகர்கள் கொண்டு வரும் அறிவியல் ஆதாரங்கள் எல்லாம் பூமராங் போல திரும்ப அவர்களையே வந்து தாக்கும். இந்த முறையும் அது தான் நடந்துள்ளது. என்ன, கடந்த காலங்களை போலல்லாமல் வெகு விரைவாகவே அந்த பூமராங் இந்த முறை வந்து விட்டது.

இதுபோன்ற ஆய்வுகள் சில நாத்திகர்களது உள்ளத்தில் நிச்சயம் பல கேள்விகளை எழுப்பியிருக்கும். தங்கள் நிலைப்பாட்டை தள்ளி வைத்துவிட்டு உண்மையை அறிய தூண்டியிருக்கும்.

மனித குலத்திற்கு இந்த ஆய்வால் என்ன பலன்?

பல பயன்கள் உள்ளதாக வென்டர் கூறியுள்ளார். சுத்தமான தண்ணீர் வழங்குவதிலிருந்து சுகாதாரம் வரை இந்த ஆய்வால் பயனுள்ளதாக அவர் கூறியுள்ளார். இந்த ஆராய்ச்சி கேன்சர் போன்ற நோய்களை பற்றி நன்கு அறிவதற்கும், புதிய மருந்துகளை உருவாக்குவதற்கும் பயன்படலாம்.

ஆனால் அதே சமயம் இந்த ஆய்வுகளால் விபரீதங்களும் ஏற்படலாம் என்று பலரும் அஞ்சுகின்றனர். Bio-Terrorism போன்ற அசம்பாவிதங்கள் ஏற்படலாம் என்று சமூக ஆர்வலர்கள் எண்ணுகின்றனர். அமெரிக்க அதிபர் ஒபாமாவும் இந்த ஆய்வு குறித்து கவலை தெரிவித்திருக்கின்றார்.

"This development raises the prospect of important benefits, such as the ability to accelerate vaccine development. At the same time, it raises genuine concerns, and so we must consider carefully the implications of this research." - President Obama, in a letter to the chair of his new bioethics commission.

இந்த ஆய்வு சரியான திசையில் சென்றால் இதனை வரவேற்று ஊக்குவிக்க வேண்டியது நம் அனைவரின் மீதும் கடமையாகிறது.

இறைவன் எந்தவொரு நோயையும் அதற்குண்டான நிவாரணம் இல்லாமல் படைப்பதில்லை என்பது நபி மொழி. இது போன்ற ஆய்வுகள் மனித குலத்திற்கு சவாலாக இருக்கும் நோய்களை பற்றி நன்கு அறிவதற்கு பயன்படுகிறது என்றால் இதனை ஊக்குவிப்பதே ஒவ்வொரு இறை நம்பிக்கையாளரின் எண்ணமாக இருக்க வேண்டும் என்பது என்னுடைய கருத்து.

முடிவாக...

உயிரியல் துறையில் ஒரு குறிப்பிடத்தக்க முன்னேற்றமாக கருதப்படும் இந்த ஆய்வை மருதையன் போன்ற சகோதரர்கள் தங்கள் நாத்திக கொள்கையை வளர்க்க பயன்படுத்துவது ஆச்சர்யமாக உள்ளது.

ஆனால் பாவம், அவர்களும் என்ன செய்வார்கள்...கடவுளை மறுப்பதற்கு அறிவியல் ரீதியாக எந்தவொரு காரணங்களும் இல்லாத நிலையில் இப்படி ஏதாவது ஒன்று குறுக்கே வரும் போது அதனை வெளிச்சம் போட்டு காட்டிதான் தங்கள் நாத்திக நம்பிக்கையை தக்க வைத்து கொள்ள வேண்டியிருக்கின்றது. ஆனால் அந்த வெளிச்சமும் சிறிது காலமே நிலைத்திருக்கும் என்பது வரலாறு நமக்கு உணர்த்தும் பாடம். இந்த முறையும், "செயற்கை செல்" ஆராய்ச்சி கடவுளை பொய்பிக்கின்றது என்ற கருத்துக்கு அந்த ஆய்வை முன்னின்று நடத்தியவரே தெளிவாக பதில் சொல்லி இவர்களது பொய் பிரசாரத்திற்கு முற்றுபுள்ளி வைத்து விட்டார்.

இந்த ஆய்வு இறைவனை மறுக்காது, மாறாக இறைவனின் ஆற்றலை பறைச்சாற்றி இறை நம்பிக்கையாளர்களின் நம்பிக்கையை மேலும் அதிகரிக்கின்றது.

நான் நாத்திக சகோதரர்களை கேட்டுக்கொள்வதெல்லாம் இதுதான், நீங்கள் "செயற்கை செல்" ஆய்வை நன்கு ஆராய்ந்து பாருங்கள். அது கடவுளை மறுக்கின்றதா? அல்லது உங்கள் கொள்கையை அசைத்து பார்க்கின்றதா? என்று உங்கள் பகுத்தறிவை கொண்டு பதிலளிக்க முயலுங்கள்.....

முடிவாக, விஞ்ஞானிகளால் ஒரு உயிரை உருவாக்கவே முடியாதா? என்று நீங்கள் கேட்டால் அதற்கான பதிலை மே மாதம் வெளிவந்த பிரபல Nature இதழில் காணலாம்.

"Frankly, scientists do not know enough about biology to create life," - Jim Collins, Life after the synthetic cell, Nature, 27th May 2010.
வெளிப்படையாக, ஒரு உயிரை உருவாக்கும் அளவு உயிரியலைப் பற்றி விஞ்ஞானிகளுக்கு தெரியாது - Jim Collins, Life after the synthetic cell, Nature, 27th May 2010.

விஷயம் முடிந்தது....முற்றுப்புள்ளி......

---------------------------------------------------------------

மறுபிறவி பற்றி சுஜாதா (கற்றதும் பெற்றதும்)

“எனக்கு மறுபிறவியில் நம்பிக்கை இல்லை. ஆனால், எதற்கும் ஒரு செட் பனியன், அண்டர்வேர் எடுத்துச் செல்லப்போகிறேன்”

என்னிடம் அடிக்கடி கேட்கப்படும் கேள்வி இது — உங்களுக்கு மறுபிறவியில் நம்பிக்கை உண்டா ? இதன் கிளையாக ஆத்மா என்று ஒன்று இருக்கிறதா ?அது உடலில் எங்கு இருக்கிறது ? சாவை வெல்ல முடியுமா ? நாம் சாசுவதமாக வாழ முடியுமா என்பவை அந்தக் கேள்வியின் பல வடிவங்கள். நாற்பது வயசுக்குப்புறம் பலர் மனத்தை இது குடைகிறது. இதற்கெல்லாம் பதில் தரும் விதத்தில், Immortality பற்றி ஒரு விஸ்தாரமான கட்டுரை சமயம் கிடைக்குபோது நிச்சயம் எழுதுகிறேன். அதைப்பற்றி எனக்கு தெளிவான கருத்துக்கள் உள்ளன. இப்போதைக்கு Edward Young என்பவரின் ‘Night Thoughts on Life , Death and Immortality ‘ என்னும் கட்டுரையிலிருந்து ஒரு மேற்கோள் கொடுக்கிறேன் –

“நீங்கள் சாசுவதமாக வாழ முடியும் என்பதை ஏன் சந்தேகிக்கிறீர்கள்? நீங்கள் உயிர் வாழ்வதே ஒரு அதிசயம் அல்லவா, வியப்பல்லவா ? உயிரெனும் அற்புதத்தைக் கொடுத்தவனால் அதன் முடிவை ரத்து செய்ய முடியாதா ? இதில் என்ன அதிசயம் !”

கேள்வி: மனித வாழ்க்கையில் இன்னமும் புரியாத புதிராகத் தோன்றுவது எது?

சுஜாதாவின் பதில்: மரணத்துக்குப்பின் என்ன என்பதை அறிந்து கொள்ள மரணம் சம்பவிக்க வேண்டியிருக்கிறதே அதுதான்.

கேள்வி: எல்லாவற்றிற்கும் ஒரு Saturation point இருப்பது போல் விஞ்ஞான வளர்ச்சிக்கும் உண்டா?

சுஜாதாவின் பதில்:உண்டு. உயிரின் ரகசியமும் மரணத்துக்குப் பின் என்ன என்பதும் தெரியும் போது விஞ்ஞானம் முற்று பெறும்.

சுஜாதா விஞ்ஞானம் முற்று பெறும் என்று சொல்லி சென்று விட்டார்.ஆனால் முற்று பெறாது. உயிரின் உண்மையை அறிய அன்றும் நமது பேரன்களின் காலத்திலும் ஆராய்ச்சிகள் நடைபெறும். கடைசி வரையில் உயிரின் உண்மையை அறியாமலேயே பூமியில் வாழும் மனித குலமும் அழியத் தொடங்கும்.

Tuesday, July 08, 2014

கள்ளக் காதலால் குன்னூர் பாஜக செயலாளர் கொலை!

நீலகிரி மாவட்டம் குன்னூர் நகர பாஜக பொதுச் செயலாளர் மணி கண்டன் (வயது 28): திருமணமாகாதவர். இவருக்கும் குன்னூர் ரயில்வே காம்பவுண்டைச் சேர்ந்த கோகிலா(32) என்பவருக்கும் கள்ளக் காதல் இருந்துள்ளது. கோகிலா ஏற்கெனவே திருமணமாகி அவரது கணவரை பிரிந்து வாழ்கிறார். இவருக்கு ஒரு மகனும் உண்டு. மணிகண்டனும் கோகிலாவும் பலமுறை ரகசியமாக சந்தித்து பழகி வந்துள்ளனர். நேற்றிரவு ரயில்வே காம்பவுண்டில் உள்ள கோகிலாவின் வீட்டுக்கு மணி கண்டன் வந்துள்ளார். அங்கு சென்ற சில மணி நேரத்தில் மணி கண்டனின் உடல் நிலை மோசமானது. உடன் 108 ஆம்புலன்ஸூக்கு போன் செய்து மருத்துவ மனைக்கு மணி கண்டனை கொண்டு சென்றனர். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கெனவே இறந்து விட்டதாக அறிக்கை சமர்ப்பித்துள்ளனர்.

கோகிலாதான் மணிகண்டனை கொலை செய்திருக்கலாம் என்று அவரது உறவினர்கள் போலீஸாரிடம் தெரிவித்தனர். போலீஸார் கோகிலாவிடம் விசாரணை தொடங்கினர். முதலில் 'தூக்கு போட்டு தற்கொலைக்கு முயன்றார்' என்றும் 'சிலர் அவரை அடித்து எனது வீட்டில் கொண்டு வந்து போட்டுள்ளனர்' என்றும் முன்னுக்குப் பின் முரணாக பதிலளித்தார். எனவே போலீஸார் கோகிலாவின் மீது சந்தேகங் கொண்டு தீர விசாரிக்கின்றனர்.

இந்துத்வாவாதிகளே! இதனையும் இஸ்லாமிய இளைஞர்களோடு கோர்த்து விட்டு வேடிக்கை பார்க்க வேண்டாம். அரசு பஸ்களை உடைக்க வேண்டாம். பேரணிகள் நடத்தி மதக் கலவரங்களை தூண்ட வேண்டாம். ஏனெனில் இது கள்ளக் காதலால் நடந்த ஒரு கொலை.

மணிகண்டனை பிரிந்து வாடும் அவரது குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்கள்.

தகவல் உதவி
மாலை மலர்
08-07-2014

Wednesday, July 02, 2014

மெல்லக் கொல்லும் தண்ணீர் பாட்டில்கள்!



மதுரை : குடிநீர் தயாரிக்கும் கம்பெனி பெயர் பார்த்து விலை கொடுத்து வாங்குபவர்கள், பாட்டிலுக்கு அடியில் முக்கோணக் குறிக்குள் இருக்கும் எண்ணை கவனிப்பதில்லை.

குடிநீர் பாட்டில்களில் 1 முதல் 7க்குள் ஏதேனும் ஒரு எண் இருக்கும். இந்த எண் மூலம் அந்த பாட்டில் எவ்வகை வேதிப்பொருளால் ஆனது, இது எந்த பொருள் வைக்க தகுதி கொண்டது என்பதை அறியலாம். அடிப்புற முக்கோணத்திற்குள் எண் ''1'' இருந்தால் அந்த பாட்டில் பிஇடி (பாலி எத்திலின் டெர்ப்தலேட்) வேதிப்பொருளில் ஆனது. இதில் பானம், குளிரூட்டிய உடனடி உணவு இருக்கும்.

எண் ''2'' இருப்பின், ஹெச்டிபிஇ (ஹை டென்சிட்டி பாலிஎத்தனால்) வேதிப்பொருளால் ஆனது. இதில் பால் உள்ளிட்ட பொருட்கள் விற்கப்படும். எண் ''3'' என இருந்தால், பிவிசி (பாலிவினைல் குளோரைடு) என்ற வேதி பொருளால் தயாரிக்கப்பட்டவை. இதில் உணவுப்பொருட்கள், பழரசம் இருக்கும். எண் ''4'' எனில், எல்டிபிஇ (லோ டென்சிட்டி பாலி எத்திலின்) என்ற வேதி பொருளால் உருவாகி, பொருட்களை அடைப்பதற்கான பாக்கெட்டுகளாக இருக்கும்.

எண் ''5'' பிபி (பாலி புரோபைலின்) வேதிப்பொருளால் ஆகி, மைக்ரோவேவ் போன்ற உணவு பாத்திர பயன்பாட்டிலும், எண் ''6'' இருப்பின், பிஎஸ் (பாலிஸ்டிரின்) வேதிப்பொருளில் உருவாகி முட்டைகளுக்கான கூடு, பொம்மை, எலக்ட்ரானிக் பொருட்களுக்கான பிளாஸ்டிக்காக இருக்கும். இதுதவிர எண் ''7'' இடப்பட்டிருந்தால் மற்ற வகை பிளாஸ்டிக்காக குவளைகள், தட்டுகள் உள்ளிட்ட பாத்திரங்களாக மட்டுமே பயன்படுத்தலாம்.

இந்த 7 பிளாஸ்டிக் வகைகளில் அடிப்புறம் 1, 3, 6 எண்களிட்ட பாட்டில்கள் தரும் பாதிப்பு அதிகமிருக்கும். பள்ளி செல்லும் குழந்தைகள், பயணம் செய்வோர் என பலரும் ஏற்கனவே உபயோகப்படுத்திய பழைய பாட்டில்களில் தண்ணீர் நிரப்பி எடுத்துச் செல்வது அதிகரித்துள்ளது. புதிய மினரல் வாட்டர் பாட்டிலை வெயிலில் வைத்தாலே வேதிவினைகள் நடந்து நீரில் எளிதில் வேதிப்பொருட்கள் கலந்து விஷமாகுமென சமீபத்திய ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

இதைவிட மோசமாக, பழைய பாட்டிலில் குடிநீரை சுட வைத்து நிரப்புவது, ஆண்டுக்கணக்காக இந்த ஓற்றை பாட்டிலில் நீர் நிரப்பி பயன்படுத்துவதென மக்கள் அறியாமையில் உள்ளனர். இனிமேல் குடிநீரோ, உணவுப் பொருட்களோ வாங்கும் பாட்டில்கள், பேக்கிங்குகளில் அடிப்புறத்து எண்ணை பார்ப்பது அவசியம்.

தமிழக அரசு டாக்டர்கள் சங்க தலைவர் செந்தில் கூறுகையில், ''மறு சுழற்சிக்கு தகுதியற்ற சாதாரண குடிநீர் பாட்டில்களை பல நாட்களுக்கு அடுத்தடுத்து தொடர்ந்து பயன்படுத்தக்கூடாது. உணவுத் தரம் மிக்க பிளாஸ்டிக்கில் செய்த பாட்டில்கள் விலை அதிகமிருப்பினும், அதில் தண்ணீர் வைத்து குடிப்பதே உகந்தது. ''ஒன்ஸ் யூஸ்'' பாட்டில்களை ஒருமுறை பயன்படுத்தியதும் உடைத்தெறிய வேண்டும். இதில் அந்த பாட்டிலின் வேதிப்பொருள் அந்த நீர், உணவுடன் வினையாகி ''மெல்லக் கொல்லும் விஷமாகி'' நரம்பு மண்டலம் துவங்கி உடலின் அனைத்து பாகங்களையும் பாதிக்கும்'' என்றார்.

நன்றி: தினகரன்

Monday, April 28, 2014

கேளிக்கைகளுக்காக கோழி சண்டைகளை ஊக்குவிக்கலாமா?



சவுதி அரேபிய மாநிலங்களில் ஒன்றான நஜ்ரானில் அவ்வப்போது நடக்கும் சேவல் சண்டையைத்தான் நாம் மேலே பார்க்கிறோம். இது போன்ற போட்டிகளை நடத்துவது இஸ்லாமிய சட்டங்களுக்கு மாற்றமானது என்ற கருத்தில் சவுதி அரசு தடை செய்துள்ளது. ஆனால் நஜ்ரான் போன்ற எல்லையோர பகுதிகளில் கிராமங்களில் இதுபோன்ற விளையாட்டுக்களை சிலர் சந்தோஷத்துக்காக செய்கின்றனர். இன்னும் சிலர் இதில் மிகப் பெரும் தொகைகளை பந்தய பணமாக கட்டி பணம் பண்ணும் வழியாகவும் மாற்றிக் கொண்டுள்ளனர்.

மெக்சிகோ, உஸ்பெஸ்கிஸ்தான் போன்ற நாடுகளில் இந்த போட்டிகளில் வெற்றி பெறும் கோழிகள் மிக அதிக விலையை பெறும். நமது இந்தியாவிலும் மாடுகளை பிடிப்பதிலும், கோழி சண்டைகளை ஊக்குவிப்பதிலும் பெரும்பாலோர் பங்கு பெறுவதை பார்க்க முடிகிறது.

ஒரு உயிரை இவ்வாறு இம்சை படுத்தி அது படும் கஷ்டத்தை நாம் பார்த்து ரசிப்பது என்பது மிக கொடூர எண்ணங்களை நம்முள் உண்டாக்கும். இதற்கு நமது அரசாங்கங்களும் தடை விதிக்க வேண்டும். மற்றவர்கள் எப்படியோ ஆனால் ஒரு முஸ்லிம் மிருகங்களிடத்தில் அன்பு பாராட்ட வேண்டும். அதனை பின் வரும் நபி மொழிகள் நமக்கு விளக்குகின்றன.

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: முன்னொரு சமுதாயத்தைச் சேர்ந்த பெண்ணொருத்தி ஒரு பூனைக்குத் துன்பம் தந்த விஷயத்தில் வேதனைப்படுத்தப்பட்டாள். அந்தப் பூனையை அது பசியால் துடித்துச் சாகும் வரை அவள் அடைத்து வைத்திருந்தாள். அதன் காரணத்தால் அவள் நரகத்தில் புகுந்தாள். அப்போது அல்லாஹ்வே மிக அறிந்தவன் – ‘நீ அதைக் கட்டிவைத்து அதற்குத் தீனி போடவுமில்லை; தண்ணீர் தரவுமில்லை; அது பூமியிலுள்ள புழு பூச்சிகளைத் தின்று பிழைத்துக் கொள்ளட்டும் என்று அதை அவிழ்த்து விடவுமில்லை” என்று அல்லாஹ் கூறினான். (புஹாரி:2365, முஸ்லிம்)

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: விபசாரியான ஒரு பெண், ஒரு கிணற்றின் விளிம்பில் தன்னுடைய நாக்கைத் தொங்கவிட்டுக் கொண்டிருந்த ஒரு நாயைக் கடந்து சென்றாள். அந்த நாயைத் தாகம் சாகடிக்கவிருந்தது. அதைக் கண்ட அப்பெண் உடனே தன் காலுறையைக் கழற்றி அதைத் தன் முந்தானையில் கட்டி (கிணற்று) நீரை இறைத்து அதற்குக் கொடுத்தாள். எனவே, அது பிழைத்தது. அவள் ஓர் உயிருக்குக் காட்டிய இந்தக் கருணையினால் அவளுக்கு (பாவ) மன்னிப்பு வழங்கப்பட்டது. (புஹாரி:3321)

நபித்தோழர்கள், ‘இறைத்தூதர் அவர்களே! கால்நடைகள் (மற்ற பிராணிகளுக்கு உதவும்) விஷயத்திலும் எங்களுக்குப் பலன் கிடைக்குமா?’ என்று கேட்டார்கள். நபி(ஸல்) அவர்கள், ‘(ஆம்;) உயிருடைய பிராணி ஒவ்வொன்றின் விஷயத்திலும் (அதற்கு உதவும் பட்சத்தில் மறுமையில்) அதற்கான பிரதிபலன் கிடைக்கும்” என்று கூறினார்கள். (புஹாரி:2363, முஸ்லிம்)

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்’ ஒரு முஸ்லிம் மரம் ஒன்றை நட்டினாலோ, ஏதாவது ஒன்றை பயிரிட்டாலோ அதிலிருந்து ஒரு மனிதனோ அல்லது (மற்ற) உயிரினமோ உண்டால் (அதன் காரணத்தால்) ஒரு தர்மம் செய்ததற்கான பிரதிபலன் அவருக்குக் கிடைக்காமல் இருப்பதில்லை. (புஹாரி:6012, முஸ்லிம்)

ஸஈதுப்னு ஜுபைர் (றழி) அவர்கள் கூறினார்கள்: இப்னு உமர் (றழி) அவர்கள், குரைஷி கூட்டத்தைச் சார்ந்த சில வாழிபர்களை கடந்து சென்றார்கள், அவர்கள் ஒரு பறவையை குறியாக வைத்து எறிந்து கொண்டிருந்தனர், தவறும் ஒவ்வொரு அம்புக்காகவும் பறவையின் சொந்தக் காரனுக்கு (சன்மானம்) வைத்தனர். இதனை இப்னு உமரவர்கள் கண்ட போது. ‘யார் இதனை செய்தது?’ ‘இப்படி செய்தவரை அல்லாஹ் சபிப்பானாக, ஏனெனில் நபி (ஸல்) அவர்கள், உயிருள்ள ஒன்றை இலக்காக, குறியாக ஏற்படுத்தியவரை சபித்தார்கள்.’ என்று கூறினார்கள். (முஸ்லிம்:5174)

அடுத்து இவ்வளவு ஜீவகாருண்யம் பேசும் நீங்கள் உயிர்களைக் கொன்று சாப்பிடலாமா? என்று கேட்கலாம். இந்த பூமியை மனிதனுக்காக படைத்த இறைவன், அதில் உள்ள மற்ற உயிரினங்களை மனிதனின் தேவைக்காகவே படைத்ததாக சொல்கிறான்.

உலகில் வாழும் மனிதர்களில் பெரும்பான்மை சமூகம் நாத்திகர்கள் தவிர கடவுள் கொள்கையை இந்த உலகம் தானாக வந்ததல்ல, மனிதனைப் படைத்த சிருஷ்டி இருக்கின்றான் என்ற கொள்கையை ஏற்றவர்களாகத் தான் இருக்கின்றனர். அந்த அடிப்படையில் படைப்பாளன் அல்லாஹ் படைப்பினங்களைப் படைக்கும் போதே அவற்றின் இயல்பை வெளிப்படுத்திக் காட்டும் நிலையிலேயே படைத்துள்ளான். ஆடு, மாடு போன்ற தாவர உண்ணிகளை எடுத்துக் கொண்டால் அவற்றின் பல் வரிசையை எடுத்து நோக்கினால் அதன் இயல்பு தாவரம் உண்ணுவது என்பது விளங்கும். சிங்கம், புலி போன்ற வேட்டைப் பிராணிகளை எடுத்துக் கொண்டால் அவற்றின் பல் வரிசையில் வேட்டை பல் வெளிப்படையாகத் தென்படும். அதன் மூலம் அவை வேட்டைப் பிராணிகள் என்பதை விளங்கிக் கொள்ளலாம். ஆனால் மனிதனை எடுத்துக் கொண்டால் அவனும் ஒரு மிருகமாக ஆனால் பேச முடிந்தவனாக இருந்தாலும் அவன் இந்த இரண்டு இயல்புகளுக்கும் உட்பட்டவனாகவே இருக்கின்றான். அவன் மாமிசத்தையும், தாவரத்தையும் உண்ணுபவனாக இருக்கின்றான். படைப்பாளன் அல்லாஹ் அதனை தெளிவுபடுத்தும் நிலையில் அதனது பல் வரிசையை வேட்டைப் பல் கொண்டதாகவும், அரைக்கும் பல் கொண்டதாகவுமே படைத்துள்ளான். எனவே மனிதன் மாமிசம் (ஆட்டிறைச்சி, மாட்டிறைச்சி) உண்ணுவதை காழ்ப்புணர்ச்சிக்காக விமர்சிப்பது, தாம் ஏற்றிருக்கும் கடவுள் கொள்கைக்கு முரணானதாக இருப்பதுடன், கடவுளையே விமர்சிப்பதாக அமையும். இப்படி நடு நிலையாக அனைவரும் ஏற்ற அடிப்படையில் சிந்தித்தாலும் மனிதன் மாமிசம் சாப்பிடுவது இயற்கையானதே என்று விளங்கும். காய்கறிகளுக்கும் உயிர் உண்டு என்று இன்றைய விஞ்ஞானம் கூறுகிறது. அதனால் ஜீவகாருண்யம் பேசுபவர்கள் காய்கறிகளை சாப்பிடுவதையும் நிறுத்தி விட்டு நியாயம் பேச வேண்டும்.

காட்டுவாசிகளும், ஆதிகால மனிதர்களும் வேட்டையாடி மாமிசத்தை சாப்பிட்டதனாலே வேடர்கள் என்ற ஒரு சமூகமே உருவானது. இன்று இஸ்லாத்தை ‘ஜீவகாரூன்யமற்ற மார்க்கம்’ என்று விமர்சிப்போர் யோசிக்க வேண்டும், காட்டு வாசிகள் வேட்டையாடியது, மாமிசத்தை சாப்பிட்டது, இஸ்லாம் காட்டிக் கொடுத்ததனாலா?! அல்லது மனிதனின் இயல்பு என்பதனாலா?! இஸ்லாத்தை விமர்சிக்கும் இவர்கள் காட்டு வாசிகளை வேடர்களை மனித சமூகமாக நோக்காதவர்களா?! நடு நிலையாக சிந்திப்போர் தெளிவு பெறுவர். தற்போது துருவப் பிரதேசமான ஆர்டிக் பகுதிகளில் எஸ்கிமோக்கள் மாமிசம் சாப்பிடாமல் இருந்தால் இறந்தே விடுவார்கள்.

உணவுக்காக உயிர்களை அறுக்கும் போது கத்தியை நன்கு தீட்டிக் கொள்ள இஸ்லாம் அறிவுறுத்துகிறது. அந்த உயிர் அதிக நேரம் இம்சைபடாமல் இருக்க குரல்வளையில் அறுத்து அதன் உயிர் சீக்கிரம் சென்று விடும்படி அமைத்துக் கொள்ள இஸ்லாம் கட்டளையிடுகிறது. எனவே உணவு தேவைகளுக்காக மிருகங்களை அறுப்போம். அதே சமயம் நமது கேளிக்கைகளுக்காக அந்த உயிரினங்களை இம்சைபடுத்துவதை நிறுத்திக் கொள்வோம்.

Wednesday, December 04, 2013

மசூதியை அன்று இடித்தவர்கள், இன்று பரிகாரம் தேடுகிறார்கள்!



கட்டிடத்தின் மீது எப்போது
கடப்பாரை விழுந்ததோ
அப்போதிருந்தே
சரயு நதி
உப்புக் கரித்துக் கொண்டு
ஓடுகிறது..

சீதை சிறைப் பட்டப்பின்
இப்போதுதான் ராமன்
இரண்டாம் முறை அழுகிறான்

மாண்பு மிகு மத வாதிகளே
சில கேள்விகள் கேட்பேன்
செவி தருவீரா

அயோத்தி ராமன்
அவதாரமா மனிதனா
அயோத்தி ராமன்
அவதாரமெனில்
அவன்
பிறப்புமற்றவன்
இறப்புமற்றவன்
பிறவாதவனுக்கா
பிறப்பிடம் தேடுவீர்

அயோத்தி ராமன்
மனிதனெனில்
கற்பத்தில் வந்தவன்
கடவுளாகான்
மனித கோவிலுக்கா
மசூதி இடித்தீர்!

-கவி வைரமுத்து

எங்கெல்லாம் இஸ்லாம் தீவிரமாக எதிர்க்கப்படுகிறதோ அங்கெல்லாம் அது மிக வீரியத்துடன் எதிர்ப்புகளை சமாளித்து மீண்டு வரும். அன்றைய அரபுலகம், ஐரோப்பா, அமெரிக்கா, நமது இந்தியா என்று உலக சரித்திரங்களை எடுததுப் பார்த்தால் அதற்கு விடை கிடைக்கும்.

அன்று இடித்தவர்கள், இன்று பரிகாரம் தேடுகிறார்கள்!

முழுமையாக படித்து பாருங்கள்...

இஸ்லாமை கடுமையாக எதிர்ப்பவர்கள் இஸ்லாத்தை தழுவுகின்றனர்.

'அல்லாஹ்வுடைய மஸ்ஜிதுகளில் அல்லாஹ்வின் பெயரைச் சொல்லித் துதிப்பதைத் தடுத்து அவற்றைப் பாழாக்க முயல்பவனை விட பெரிய கொடுமைக்காரன் யார்?' (திருக் குர்ஆன் 2:114)

பாபரி மஸ்ஜித் இடிக்கப்பட்டபோது எடுக்கப்பட்ட புகைப்படத்தில் மஸ்ஜிதின் நடுக்கோபுர உச்சியில் கடப்பாரையுடன் நிற்கும் இரண்டு பேர், நினைவிருக்கிறதா?

இடிக்கப்பட்ட பாபரி மஸ்ஜிதின் செங்கல்லை தன் ஊருக்கு எடுத்துச்சென்று ‘ஹிந்து சகோதரர்கள் அனைவரும் அந்த செங்கல்லின் மீது மூத்திர தானம் செய்யுங்கள்' என்று ஒலிபெருக்கி மூலம் அறிவிப்பு செய்து மஸ்ஜிதிலிருந்து எடுத்துவரப்பட்ட கற்களை கேவலப்படுத்த ஒவ்வொருவராக வந்து சிறுநீர் கழிக்க வைத்தவர் இன்று இஸ்லாத்தில் இணைந்து 100 பள்ளிவாசல்களையாவது புனர் நிர்மாணம் செய்ய உறுதிபூண்டு தன் பாவத்துக்கு பரிகாரம் தேடும் அதிசயம்!

அவ்விருவரும் இன்று முஹம்மது ஆமிர், முஹம்மது உமர் என்று பெருமையோடு கூறுவதுடன் பல மஸ்ஜிதுகளை கட்டுவதையும், புனர்நிர்மாணம் செய்வதையும் தமது பிறவிப்பலனாக கருதி செய்து வருகின்றனர். இந்த அதிசயம் எப்படி நடந்தது? இவர்கள் முஸ்லிம்களாவதற்கு யார் காரணம்? என்ன காரணம்?

அறிந்து கொள்ள உள்ளே நுழைவோம்!

பல்பீர் சிங் - 6-12-1970-ல், ஹரியானாவிலுள்ள பானிபட் மாவட்டத்திலள்ள ஒரு கிராமத்தில் பிறந்தவர். அவர் தந்தை ஒரு சிறந்த விவசாயி, தொடக்கப்பள்ளி ஆசிரியர் என்பதோடு நல்லவர், மனிதநேயமிக்கவர். பிறருக்கு அநீதம் விளைவிப்பதை கடுமையாக வெறுப்பவர்.

மும்பாய்க்குப் பிறகு 'சிவசேனா' வின் உறுதிமிக்க கோட்டையான பானிபட்டடில் வாலிபர்களும் மாணவர்களும் சிவசேனாவில் ஈடுபட்டிருந்த நேரம் அது.; பானிபட்டில் இன்டர் மீடியேட்டில் படித்துக் கொண்டிருந்த போது பல்பீரசிங்; 'அந்த' இயக்கத்தில் தன்னை பதிவு செய்து சேர்ந்து கொண்டார்.

பானிபட்டில், இந்திய வரலாற்றை எடுத்துக் கூறும் சாக்கில், வாலிபர்களிடையே முஸ்லிம்கள் மீதும், பாபர் போன்ற முஸ்லிம் மன்னர்கள் மீதும் வெறுப்பை ஊட்டப்பட்டது. தனது மகன் ‘அந்த’ இயக்கத்தில் சேர்ந்ததை அறிந்த பல்பீர்சிங்குடைய தந்தை உண்மை சரித்திரத்தை தனது மகனுக்கு புரிய வைக்க முயன்றார். "பாபர் மற்றும் அவ்ரங்கசேப் ஆட்சிக்காலத்தில் இருந்த நீதம், முஸ்லிம் அல்லாதோருடன் அவர்கள் நடந்து கொண்ட நன்னடத்தைகளையும், இந்திய மக்கள் தமக்குள்ளே மோதி இந்நாடு பலவீனப்பட வேண்டும் என்ற நோக்கில் ஆங்கிலேயர்கள் வரலாற்றுத் திரிபுகள் செய்துள்ளனர்" என்கின்ற உண்மையை எடுத்துச் சொல்லியும் தனது மகனை அவரால் திருத்த முடியவில்லை.

1990-ல் அத்வானியின் ர(த்)த யாத்திரையின்போது பானிப்பட்டின் முக்கிப் பொறுப்பு பல்பீர் சிங்கிடம் ஒப்படைக்கப்படுகிறது. ர(த்)த யாத்திரையில் வந்த தலைவர்கள் முஸ்லிம்களுக்கு எதிரான வெறுப்பை கக்க அந்த நிமிடமே மஸ்ஜிதை இடிக்க எவர் வந்தாலும் வராவிட்டாலும் தான் மட்டுமே சென்று அதை இடித்துத் தரை மட்டமாக்குவதாக சிவாஜியின் மீது சத்திய பிரமானம் எடுக்கிறார் பல்பீர் சிங்.

சிவசேனாவின் ‘இளைஞர் பறக்கும் படை' யின் துணைத்தவைராக பொறுப்பேற்று 1990 அக்டோபர் 30 அன்று அயோத்திக்கு புறப்பட்ட அவரை ஃபஸாபாத்தில் போலீஸார் தடுத்து நிறுத்துகின்றனர். அதையும் மீறி அவரும் அவரது நண்பர்களும் எப்படியோ தப்பி அயோத்திக்குள் நுழைந்து விடுகின்றனர். அதற்கு முன்னர்தான் அங்கு துப்பாக்கிசூடு நடத்தப்பட்டிருந்ததால் எவ்வளவோ முயன்றும் அவர்களால் பாபரி மஸ்ஜிதை நெறுங்கக்கூட முடியவில்லை. கோபம் எல்லை மீறியது. அப்பொழுதே உடனே லக்னோ சென்று முலாயம் சிங்கை தனது கரங்களால் சுட்டுப் பொசுக்க அவர் உள்ளம் நாடியது.

அங்கு சோனிப்பட்டின் ஜாட் இனத்துக் கிராமத்தைச் சார்ந்த அவரது நண்பர் யோகேந்திர பாலும் சேர்ந்து கொண்டார். யோகேந்திர பாலின் தந்தை ரகுபீர் சிங் சௌத்ரி பெரும் நிலச்சுவான்தரராக இருந்தார். அவர் எவ்வளவோ தடுத்தும் இவர்கள் சற்றும் பின் வாங்கவில்லை.

டிசம்பர் - 6, 1990 – க்கு முந்தைய இரவு பாபரி மஸ்ஜிதை நெருங்கி அருகிலுள்ள முஸ்லிம்களின் வீட்டு மாடியில் இரவைக் கழித்தனர். தலைவர்களின் உத்தரவை எதிர்பார்க்காமல் கரசேவையை துவங்கி விட அவர் உள்ளம் துடித்தது. அவ்வளவு அவசரம்! இருந்த போதும் குழுத்தலைவர் கட்டுக்கோப்புடன் இருக்கும்படி கூறி தடுத்து விட்டார்.

இந்நிலையில் கரசேவகர்ளுக்கிடையில் உமாபாரதி உரை நிகழ்த்தினார். அவரது உரையை கேட்டதுமே பல்பீர் சிங்கும் அவரது நண்பர்களும் தங்கியிருந்த வீட்டின் மாடியிலிருந்து இறங்கி கடப்பாறையுடன் மஸ்ஜிதின் முகட்டில் ஏறினர். உமாபாரதி ம்… ஏக், தோ, பாபர் மஸ்ஜித் தோடுதோ! (ஒன், டூ … இடியுங்கள் பாபர் மஸ்ஜிதை) என்று முழங்க அந்த நாசகாரக் கும்படலுன் பல்பீர் சிங்கும் மஸ்ஜிதின் நடுக்கோபுரத்தின் மீது கடப்பாறையை செலுத்தி கொக்கரித்தபடி இடித்துத் தரை மட்டமாக்குகிறார்.

அதற்குப்பிறகு அந்த இடத்தில் சிலையை நட்டு விட்டு திரும்புகின்றனர். திரும்பும்போது இடிக்கப்பட்ட மஸ்ஜிதின் இரு செங்கற்களை உடன் எடுத்துச் செல்கின்றனர். அச்செங்கற்களை பானிபட்டில் தனது மற்ற நண்பர்களிடம் காட்டி பாராட்டையும் பெறுகின்றனர். சிவசேனா அலுவலகத்தில் அக்கற்கள் வைக்கப்பட்டு ஒரு விழாவே நடந்தது.

இந்நிகழ்வுகள் அனைத்தும் தெரிய வந்தபோது பல்பீர் சிங்கின் தந்தை மிகவும் கோபமுற்றார். தனது மகனிடம், "இப்போது இந்த வீட்டில் நீயும் நானும் ஒன்றாக இருக்க முடியாது. இறைவனின் இல்லத்தை இடித்தவனின் முகத்தை நான் பார்க்க மாட்டேன். எனது மரணம் வரும் வரை உன் முகத்தைக் காட்டாதே" என்று உறுதிபடக் கூறிவிட்டார்.

இதை சற்றும் எதிர்பார்க்காத பல்பீர் சிங் பானிபட்டில் தனக்கு கிடைத்த மரியாதையை அவரிடம் எடுத்துச் சொல்லியும் அவரது கோபம் தணியவில்லை. "இத்தகைய அநியாயக்காரர்களினால் இந்த நாடே அழிந்து போகும்" என்று கூறியவராக வீட்டை விட்டு வெளியேற தயாரானார். தந்தையின் கோபத்தைக் கண்ட பல்பீர் சிங் தானாகவே அவ்வீட்டை விட்டு வெளியேறி பானிபட்டில் தங்கினார்.

அதற்குப்பிறகு நடந்த சம்பவங்களைப்பற்றி அவரே கூறுகிறார், கேளுங்கள்:

நான் முஸ்லிமாவதற்கு படிப்பினையாக இருந்த எனது நண்பன் யோகேந்திரபாலின் சம்பவத்தை முதலில் சொல்கிறேன். பிறகு என் சம்பவத்தை கூறுகிறேன். எனது நண்பன் யோகேந்திரபாலும் இடிக்கப்பட்ட பாபரி மஸ்ஜிதின் செங்கல்லை எடுத்து வந்திருந்தான். 'ஹிந்து சகோதரர்கள் அனைவரும் அந்த செங்கல்லின் மீது மூத்திர தானம் செய்யுங்கள்’ என்று ஒலிபெருக்கி மூலம் அறிவிப்பு செய்தான். மஸ்ஜிதிலிருந்து எடுத்துவரப்பட்ட கற்களை கேவலப்படுத்த ஒவ்வொருவராக வந்து சிறுநீர் கழித்தனர். இங்குதான் ‘மஸ்ஜிதின் எஜமானன் அல்லாஹ் தான் யார் என்பதை நிரூபித்தான்'.

இறையாலயத்தின் செங்கல் மீது சிறுநீர் கழித்து அசிங்கப்படுத்திய நான்கைந்து நாட்களுக்குப்பின் யோகேந்திரபாலுக்கு பைத்தியம் பிடித்துவிட்டது. தனது ஆடைகளை சுற்றி எறிந்துவிட்டு நிர்வாணமாக அலைந்தான். இவன் கண்ணியமிக்க ஜமீன்தாரின் ஒரே மகன். பைத்தியம் முற்றி தாயின் ஆடையை உரிந்து தவறான செயலில் ஈடுபட முயன்றான். பலமுறை இத்தீய எண்ணத்தில் பெற்ற தாயை கட்டியணைத்தான். அவனது தந்தை பரிதவித்து மந்திரிப்போர் பலரிடம் தன் மகனை காட்டினார். தானதர்மங்கள் செய்து இறைவனிடம் மன்னிப்பு வேண்டினார்.

ஆனால், யோகேந்தர் நிலை மென்மேலும் மோசமடைந்தது. மீண்டும் ஒரு முறை பெற்ற தாயை உடலுறவு கொள்ள அவன் முயன்றபோது தாயாரின் கூச்சலைக் கேட்டு அக்கம் பக்கத்தவர்கள் ஓடி வந்து தாயை காப்பாற்றினர். நிலைமை மிக மோசமானதால் யோகேந்தர்பால் சங்கிலியால் கட்டப்பட்டான். மக்களிடம் மதிப்பு மிக்க அவனது தந்தை அவனை சுட்டுக்கொல்ல நாடினார். அப்போது ஒருவர் ‘சோனிபட் ஈத்காவில் ஒரு மதரஸா உள்ளது. அங்கு பெரிய மவ்லானா ஒருவர் வந்து செல்கிறார். கடைசி முயற்சியாக அவரிடம் சென்று உங்கள் பிரச்சனையை கூறுங்கள். அங்கும் பிரச்சனை தீரவில்லை என்றால் எது வேண்டுமானாலும் செய்து கொள்ளுங்கள்' என்று கூறினார்.


சோனிபட்டில் நடந்தது என்ன?

ஆனால் அவரால் பெரிய மவ்லானா(கலீம் சித்தீக்கி)வை சந்திக்க முடியவில்லை. மகனை சங்கிலியால் கட்டிக்கொண்டு டில்லி-பாவானாவின் இமாம் மவ்லானா பஷீர் அஹ்மதை சந்தித்தார். அனைத்தையும் கேட்டுவிட்டு பஷீர் அஹ்மது இப்படிச் சொன்னார். தற்போதைய நிலைமை மோசமாக இருப்பதால் டிசம்பர் 6 க்கு (1992) முன்பே ஹரியானாவின் பல இமாம்கள், ஆசிரியர்கள் உ.பி.யிலுள்ள தங்களது வீடுகளுக்கு திரும்பி விட்டனர். இந்நிலையில் இம்மாதம் முதல் தேதிதான் பெரிய மவ்லானா (கலீம் சித்தீக்கி) கவலையுடன் உரையாற்றினார்கள். அதில் முக்கிய சில வரிகளைக் கூறுகிறேன்.

‘முஸ்லிமல்லாத சகோதரர்களுக்கு முஸ்லிம்களாகிய நாம் அல்லாஹ், இஸ்லாம், மஸ்ஜித், இறைத்தூது பற்றி முன்பே எடுத்துக் கூறியிருந்தால் இத்தகைய அசம்பாவிதங்கள் நிகழ்ந்திருக்காது. எனவே பாபர் மஸ்ஜித் இடிக்கப்பட்டதில் முஸ்லிம்களும் ஒரு விதத்தில் குற்றவாளிகளே! ஆகவே. இப்பொழுதாவது நாம் உணர்வு பெற்று அழைப்பப்பணியில் ஈடுபட்டால் மஸ்ஜிதை இடித்தவர்களே மஸ்ஜிதை நிர்மாணிப்பவர்களாக, புனர் நிர்மாணம் செய்பவர்களாக மாறிடுவர். ஏனெனில் இதுபோன்ற இக்கட்டான சூழ்நிலைகளில் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் ‘யா அல்லாஹ்! என் சமூக மக்களுக்கு நேர்வழி காட்டு, அவர்கள் அறியாதவர்களாக உள்ளனர்’ என்று பிரார்த்தித்தார்கள் - என்று பெரிய மவ்லானா குறிப்பிட்டார்கள்.

உங்கள் மகனுக்கு சூனியம் எதுவும் இல்லை. இது எஜமானனின் தண்டனைதான். ஆகவே, நாளை மறுநாள் புதன் கிழமை மவ்லானா கலீம் சித்தீக்கி இங்கு வரும்போது உங்கள் மகனின் நிலையை கூறுங்கள். அவர் சரியாக்கி விடுவார் என்று நம்பிக்கை உள்ளது என்றார் பஷீர் அஹ்மது. அதற்கு யோகேந்தர்பாலின் தந்தை என் மகன் குணமடைந்து விட்டால் நான் எதையும் செய்ய தயாராக உள்ளேன் என்று பதிலளித்தார்.

புதன் கிழமையன்று ஜமீன்தார், சங்கிலியால் கட்டப்பட்டு அரை நிர்வாணக் கோலத்துடன் இருந்த தன் மகன் யோகேந்தர்பாலுடன்; மல்லானாவை சந்தித்தார். அவர் சொன்ன அனைத்தையம் கேட்டுக்கொண்ட மவுலானா கலீம் சித்தீக்கி ‘உங்கள் மகன் இவ்வுலகைப் படைத்து பரிபாலிக்கும் சர்வ வல்லமை மிக்க அல்லாஹ்வின் இல்லத்தை இடித்த மாபெரும் அநீதி இழைத்துள்ளான். இத்தண்டனை இவர் ஒருவருக்கு கிடைத்தது மிகவும் குறைவுதான். நாங்களும் அந்த இறைவனின் அடிமைகளே! மஸ்ஜிதை இடித்தவர்களுக்கு இறையில்லம் என்றால் என்னவென்பதை எடுத்துரைக்க நாங்கள் தவறிவிட்டதால், இப்பெரும் அநீதத்திற்கு நாங்களும் ஒருவிதத்தில் காரணமாக உள்ளோம். இப்போது எதுவும் எங்கள் கையில் இல்லை. ஒரே ஒரு வழி மட்டும்தான் உள்ளது. அந்த ஏக இறைவனின் சமூகத்தில் அழுது மன்றாடுங்கள். நாங்களும் மன்னிப்பு வேண்டுகிறோம். இம்மஸ்ஜிதின் நிகழ்ச்சி முடிவுறும் வரையில் நீங்கள் இறைவனிடம் ‘இறைவா! என் சிரமத்தை உன்னைத்தவிர வேறு எவராலும் நீக்க முடியாது’ என்று மாசற்ற உள்ளத்துடன் மன்றாடி பிரார்த்தித்துக் கொண்டே இருங்கள் என்று கூறிவிட்டு மஸ்ஜிதுக்குள் சென்று தொழுதார்;. சிறிதுநேரம் உரையாற்றி துஆ செய்ததுடன் மற்றவர்களையும் ரகுபீர்சிங் - யோகேந்தர்பால் ஆகியோருக்காக துஆச் செய்ய கூறினார். நிகழ்ச்சிக்குப்பின் மஸ்ஜிதிலேயே உணவு பரிமாறப்பட்டது.

உணவு முடித்து வெளியே வந்தால் அனைவருக்கும் மிகப்பெரும் ஆச்சர்யம்! அல்லாஹ்வின் கிருபையை என்னவென்பது! இத்துனை நாட்களாக நிர்வாணத்துடன் திரிந்து கொண்டிருந்த யோகேந்தர்பால் திடீரென தன் தந்தையின் தலைப்பாகையை கழற்றி தனது உடலை நன்கு மறைத்து தந்தையுடன் சாதாரண மனிதன் போல் பேசிக் கொண்டிருந்தான். பைத்தியம் தெளிந்த அவனைக்கண்ட அனைவருக்கும் மகிழ்ச்சி. ஜமீன்தார் ரகுபீர்சிங்கிற்கோ அளவிட முடியாத மகிழ்ச்சி.


இஸ்லாத்தை தழுவுவதற்காக ரகுபீர்சிங் மஸ்ஜிதுக்குள் நுழைய விழைந்ததைக் கண்ட யோகேந்தர்பால் ‘தந்தையே! சற்றுப்பொறுங்கள்! உங்களுக்கு முன் நான் இஸ்லாத்தைத் தழுவ வேண்டும். பாபரி மஸ்ஜிதை நான் திரும்பவும் கட்ட வேண்டும்’ என்று கூறினார். பிறகு இருவரையும் ஒளு செய்ய வைத்து கலிமா சொல்லிக் கொடுக்கப்பட்டது. ரகுபீர்சிங் - முஹம்மது உஸ்மானாக, யோகேந்தர்பால் - முஹம்மது உமர் ஆக மாறிவிட்டார்கள். இருவரும் சந்தோஷமாக ஊர் திரும்பினார்கள்.

தமது ஊர் திரும்பியவர்கள் முதல் வேலையாக அவ்வூர் மஸ்ஜிதின் இமாமை சந்தித்து தாங்கள் முஸ்லிமாகிவிட்ட விபரத்தை தெரிவித்தனர். இமாம் இச்சம்பவங்களை மக்களிடம் எடுத்துக்கூற அந்த பகுதி முழுவதும் செய்தி பரவியது. ஹிந்துக்களுக்கு இச்செய்தி மிகப்பெரும் அதிர்ச்சியாக இருந்தது. அவர்களில் சிலர் அவசரமாக ஆலோசனை செய்து இவ்விருவரையம் அன்று இரவே கொன்றுவிட வேண்டும் முடிவு செய்தார்கள். இல்லையேல் பலரும் இஸ்லாத்துக்கு மாறிவிடுவார்கள்' என்ற பயம் அவர்களுக்கு! அந்த கூட்டத்தில் கலந்து கொண்ட ஒரு நபர் இச்செய்தியை இமாம் ஸாஹிபிடம் தெரிவித்து விட்டதால் அல்லாஹ்வின் அருளால் அன்ற இரவே அவர்கள் இருவரும் ஊரைவிட்டு வெளியேறி புலத் சென்று சிலநாட்களுக்குப்பின் 40 நாள் ஜமா அத்தில் சென்று விட்டனர்.
முஹம்மது உமர் ஜமாஅத் அமீரின் ஆலோசனைப்படி மேலும் 4 மாதங்கள் ஜமாஅத்தில் சென்று விட்டார். இதன் தொடராக அவரது தாயாரும் முஸ்லிமாகிவிட்டார். டில்லியில் சிறந்ததொரு முஸ்லிம் குடும்பத்தில் முஹம்மது உமருக்கு திருமணமும் நடந்தது. தற்போது அனைவரும் மகிழ்ச்சியடன் டெல்லியில் வசிக்கின்றனர். சொந்த ஊரிலுள்ள சொத்துக்களை விற்று டெல்லியில் தொழிற்சாலை நடத்தி வருகின்றனர்.

முஹம்மது உமர் இஸ்லாத்தை ஏற்ற நிகழ்ச்சி, தான் இஸ்லாத்தை எற்ற நிகழ்ச்சியின் முதல் பகுதிதான் என்று கூறும் முஹம்மது ஆமிர் (பல்பீர்சிங்) இஸ்லாத்தை தழுவிய நிகழ்வு எப்படி?

கேள்வி: உங்கள் நண்பர், அவர் தந்தையின் இஸ்லாம் பற்றி கூறினீர்கள். நீங்கள் இஸ்லாத்தை தழுவியதைப்பற்றி கூறுங்களேன்?

பதில்: முஹம்மது உமர் இஸ்லாத்தை ஏற்ற நிகழ்ச்சி நான் இஸ்லாத்தை ஏற்ற நிகழச்சியின் முதல் பகுதிதான். இதோ நான் இஸ்லாத்தை ஏற்றதை கூறுகிறேன்! கேளுங்கள்.

9-மார்ச் 1993-ல் எனது தந்தை திடீரென மாரடைப்பால் மரணித்து விட்டார். பாபர் மஸ்ஜித் இடிக்கப்பட்டதும் அதில் நான் பங்கெடுத்ததும் அவரை மிகவும் பாதித்திருந்தது. அவர் என் தாயரிடம்,

"இறைவன் நம்மை ஏன் முஸ்லிமாக படைக்கவில்லை?

முஸ்லிம் குடும்பத்தில் பிறந்திருப்பின் குறைந்த பட்சம் அநீதம் இழைக்கப்பட்டவர்களில் நானும் ஒருவனாகியிருப்பேனே?

அநீதி இழைக்கும் கூட்டத்தாரில் நம்மைபிறக்கச் செய்து விட்டானே?" என்று வருத்தப்பட்டுக் கொண்டிருந்தார்.

மேலும் தான் இறந்த பிறகு தனது இறுதி சடங்கில் நான் கலந்து கொள்ளக்கூடாது என்றும்,

தனது சடலத்தை அநீதம் செய்யும் கூட்டத்தாரின் வழமை போல் எரிக்கக் கூடாது

ஹிந்துக்களின் அடக்கஸ்தலங்களுக்கும் எடுத்துச் செல்லக்கூடாது.

மண்ணில் புதைத்துவிடுங்கள் அல்லது தண்ணீரில் மூழ்கடித்து விடுங்கள் என்று தமது ஆசையை வெளிப்படுத்துயிருந்தார். (மறுமையில் இவர்களின் நிலை என்ன என்பதை அல்லாஹ் ஒருவனே அறிவான்)

எங்களது வீட்டினர் அவரது ஆசைப்படியே அனைத்துக் காரியங்களையும் செய்தனர். எட்டு தினங்களுக்குப் பிறகே அவரது மரணச் செய்தியை கேள்விப்பட்ட நான் மிகவும் நொடிந்துவிட்டேன். என் உள்ளம் நொறுங்கிவிட்டது.

"அவர் இறந்த பிறகுதான் பாபரி மஸ்ஜிதை இடித்தது எனக்கு அநீதியாகப்பட்டது எனது பெருமை அனைத்தும் கைசேதமாக தெரிந்தது."

நான் மிகவும் மனம் வெதும்பி எனது இல்லம் சென்றடைந்தபோது எனது தாய் என் தந்தையின் கவலையை பிரஸ்தாபித்து அழுது கொண்டிருந்தார்;. ஒரு சிறந்த தந்தையை துன்புறுத்தி கொன்றுவிட்டாயே! நீ ஒரு மனுஷனா? என்று இடித்துரைத்தார். இதன் பின் வீட்டிற்கு செல்வதை நிறுத்திக் கொண்டேன்.

யோகேந்தர்பாலுடன் சந்திப்பு

ஜுன், 1993-ல் முஹம்மது உமர் (யோகேந்தர்பால்) ஜமா அத்திலிருந்து பானிபட் வந்து என்னை சந்தித்தார். தனது சம்பவங்கள் அனைத்தையும் எடுத்துக் கூறினர். இரண்டு மாதங்களாக வானிலிருந்து ஆபத்து ஏதும் எனக்கு இறங்கிடுமோ என்று பயந்தேன். தந்தை இறந்த கவலையும் பாபரி மஸ்ஜித் இடிப்பும் என்னை வாட்டி வதைத்தன. முஹம்மது உமரின் சம்பவம் கேட்டு மேலும் கலக்கம் அடைந்தேன்.

ஜுன், 23ஆம் தேதி மௌலானா கலீம் சித்தீகி அவர்கள் சோனிபட் வரவிருப்பதாகவும் அவர்களை சந்தித்து அவர்களுடன் சில நாட்கள் தங்குவது தான் சிறந்தது எனவும் முஹம்மது உமர் மிகவும் வலியுறுத்தி கூறினார். நான் மௌலானாவை சந்திக்க திட்டமிடலானேன் எனினும் நான் சென்றடைவதில் காலதாமதம் ஏற்பட்டுவிட்டது எனக்கு முன்பாகவே முஹம்மது உமர் சென்று என்னை பற்றிய முழு விபரத்தையும் மௌலானாவிடம் தெரியப்படுத்திவிட்டார்.

நான் மௌலானாவிடம் சென்ற போது மிகவும் அன்புடன் வரவேற்றார்கள். மேலும் யோகேந்தர்பாலுக்கு அல்லாஹ் தண்டனை அளித்தது போல் நீங்கள் செய்த பாவத்திற்கும் அல்லாஹ் தண்டனை அளித்திருக்க முடியும். அதே சமயம் இவ்வுலகில் தண்டனை கிடைக்காவிட்டாலும் மறுமையின் தண்டனை நிரந்தரமானது அத்தண்டனை எப்படியிருக்குமென உமது சிந்தனைக்கே எட்டாது என்றார்கள்.

முஸ்லிமாவதே தீர்வு:

ஒரு மணி நேரம் மௌலானவுடன் அமர்ந்த பின் "இறை வேதனையிலிருந்து தப்ப முஸ்லிமாகுவதே தீர்வு என தீர்மானித்தேன்" மௌலானா இரண்டு நாட்கள் பயணத்தில் செல்லவிருப்பதை அறிந்து நானும் உடன் வருகிறேன் என்றேன். அவர்களும் சம்மதித்தார்கள். டில்லி, ஹரியானா, கூர்ஜா ஆகிய இடங்கள் சென்று ‘புலத்’ வந்தோம் இதற்கிடையில் இஸ்லாத்தை ஏற்றுக்கொள்ள நான் தயாராகிவிட்டேன். இந்த எனது எண்ணத்தை சகோதரர் உமரிடம் கூறிய போது அவரும் சந்தோஷப்பட்டு மௌலானவிடம் தெரிவித்தார்.

"அல்ஹம்துலில்லாஹ்! ஜுன் 25, 1993 அன்று லுஹர் தொழுகைக்குப்பின் புனித இஸ்லாத்தை தழுவினேன். மௌலானா எனக்கு முஹம்மது ஆமிர் என்று பெயரிட்டார்கள்.

தொழுகை மற்றும் அடிப்படை விஷயங்களை தெரிந்து கொள்ள என்னை புலத்தில் தங்கியிருக்க மௌலானா ஆலோசனை அளித்தார்கள் எனது மனைவியும், சிறு குழந்தையும் தனியாக இருப்பதை கூறியபோது எனக்காக ஒரு வீட்டையும் ஏற்பாடு செய்தார்கள். நான் சில மாதங்கள் புலத்தில் குடும்பத்துடன் தங்கி எனது மனைவிக்கும் இஸ்லாத்தை எடுத்துச் சொன்னேன். அல்ஹம்துலில்லாஹ்! மூன்று மாதத்தில் என் மனைவியும் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டார்.

கேள்வி: உங்களது தாய் உங்கள் மீது வருத்தத்தில் இருந்ததால் நீங்கள் இஸ்லாத்தைத் தழுவியதைப் பற்றி என்ன கூறினார்?

பதில்: நான் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டதை கூறிய போது மிகவும் சந்தோஷமடைந்து இப்போது தான் உன் தந்தையின் ஆத்மா சாந்தியடையும் என்று கூறினார். அதே வருடம் என் தாயாரும் இறைவன் அருளால் முஸ்லிமாகிவிட்டார்.

கேள்வி: உங்கள் எதிர்காலத் திட்டம் என்ன?

பதில்: "அல்லாஹ்வுடைய மஸ்ஜிதை இடித்ததற்கு பகரமாக பாழடைந்த மஸ்ஜிதுகளை நான் புதுப்பிக்க வேண்டும். சகோதரர் உமர் புதுப்பள்ளிகளை உருவாக்க வேண்டும்" என்று நாங்கள் இருவரும் உறுதி எடுத்துக் கொண்டோம். மேலும் இப்பணியில் ஒருவருக் கொருவர் துணையாக இருந்து வாழ்நாளில் மஸ்ஜிதுகளை உருவாக்கவும், 100 மஸ்ஜிதுகளை புதுப்பிக்கவும் இலக்கு நிர்ணயித்தோம்.

அல்ஹம்துலில்லாஹ்! டிசம்பர் 6-2004க்குள்- இந்தப்பாவி ஹரியானா, பஞ்சாப், டில்லி, மீரட், கேன்ட் ஆகிய இடங்களில் பாழடைந்த அபகரிக்கப்பட்ட 13 மஸ்ஜித்களை புனர் நிர்மாணம் செய்துள்ளேன். சகோதரர் உமர் என்னையும் விஞ்சி 20 மஸ்ஜித்களை கட்டி முடித்து 21வது மஸ்ஜிதுக்கு அடிக்கல் நாட்டியுள்ளார்."

ஒவ்வொரு வருடமும் டிசம்பர் 6 அன்று நான் பாழடைந்த ஒரு மஸ்ஜிதில் தொழுகையை ஆரம்பிக்க வேண்டும். சகோதரர் உமர் புதுப்பள்ளிக்கு அடிக்கல் நாட்ட வேண்டும் என்றும் முடிவு செய்துள்ளோம். அல்ஹம்துலில்லாஹ்! எந்த வருடமும் எங்களுக்கு தவறவில்லை. எனினும் 100 என்ற இலக்கு தூரமாகவே உள்ளது. இவ்வாண்டு 8 பள்ளிகள் பற்றி பேச்சுவார்த்தை நடக்கிறது. சில மாதங்களில் அங்கும் தொழுகை ஆரம்பிக்கப்படும் என்ற நம்பிக்கை உள்ளது.

சகோதரர் உமர் என்னைவிட ஆரம்பத்திலிருந்தே முன்னிலையில் உள்ளார் எனது பங்கும் அவருக்குரியதே என்று தான் சொல்ல வேண்டும். ஏனெனில் என்னை இருளிலிருந்து வெளிச்சத்திற்கு கொண்டு வந்ததே அவர்தான்.

தற்சமயம் நான் ‘ஜுனியர் ஹைஸ்கூல்’ நடத்தி வருகிறேன். இஸ்லாமிய போதனைகளுடன் ஆங்கிலவழிக் கல்வியும் உள்ளது.

கேள்வி: நீங்கள் முஸ்லிமான பிறகு உங்களது தாயார் முஸ்லிமாகிவிட்டார்கள் சரி. உங்கள் குடும்பத்தில் வேறு யாரும் இஸ்லாத்தை ஏற்றுள்ளார்களா?

பதில்: எனது மூத்த சகோதரரின் மனைவி நான்கு வருடங்களுக்கு முன் மரணித்துவிட்டார். நான்கு சின்னஞ்சிறு குழந்தைகள் அவரக்குண்டு. அதில் ஒரு குழந்தை ஊனம். எனக்கு பிறகே அண்ணணுக்கு திருமணம் நடந்தது. எனது அண்ணி சிறந்த பெண்ணாகவும் முன்மாதிரி மனைவியாகவும் நடந்து கொண்டதினால் அவரது மரணத்தால் எனது அண்ணன் மிகவும் பாதிக்கப்பட்டார். அவரது பிள்ளைகளை என் மனைவியே பராமரித்து வந்தார். என் மனைவியின் இச்சேவையினால் எனது அண்ணன் மிகவும் மகிழ்ச்சியடைந்தார்.

நான் அவருக்கு இஸ்லாமிய அழைப்பு விடுத்தேன் என் தந்தையின் மரணத்திற்கு நான் காரணமாக இருந்ததால் அவர் என்னை நல்ல மனிதராகவே கருதவில்லை.

ஸஹாபாக்கள் செய்தது போன்ற தியாகம்

நான் என் மனைவியிடம் "நம் பிள்ளைகள் பெரிய பிள்ளைகள் என் சகோதரர் மிகவும் கஷ்டமான சூழ்நிலையில் உள்ளார். எனவே நான் உன்னை விவாகரத்து செய்து நீ இத்தா காலம் முடிந்தபின் என் சகோதரர் முஸ்லிமாக தயாராகிவிட்டால் அவரை நீ திருமணம் செய்துகொள். இது இருவரின் வெற்றிக்கும் வழிகோலாகும் என்றேன்".

ஆரம்பத்தில் சம்மதிக்காத எனது மனைவி விளக்கிக் கூறியவுடன் ஏற்றுக்கொண்டார். எனது அண்ணனிடமும் நீங்கள் முஸ்லிமாகி குழந்தைகளின் வாழ்க்கைக்காக எனது மனைவியை திருமணம் செய்து கொள்ளுங்கள். அவள் தன் பிள்ளைகளைப் போன்று உங்கள் பிள்ளைகளை கவனித்துக் கொள்வாள் என்றேன் ஊராரை பயந்து தயங்கிய என் சகோதரரும் பிறகு சம்மதித்தார்.

பிறகு என் மனைவியை தலாக் கூறிவிட்டேன். இத்தா கழிந்த பிறகு என் சகோதரருக்கு கலிமா சொல்லிக்கொடுத்து அவருடன் திருமணமும் செய்து வைத்தேன். அல்ஹம்துலில்லாஹ்! அவர் இப்போது சந்தோஷமாக வாழ்ந்து வருகிறார். எனது குழந்தையும் அவருடனேயே வசிக்கிறது.