'இறைவன் என்ற ஒருவனைப் பற்றி முழுமையாக எனக்கு விளங்காத வரை அதாவது யாராலும் படைக்கப்படாமல் எவ்வாறு தோன்றினான் என்ற உண்மை விளங்காத வரை இறைவன் என்ற ஒருவனை நான் ஒப்புக் கொள்ள மாட்டேன் என வாதிடுவது உயிர் என்றால் என்னவென்று முழுமையாக எனக்குப் புரியாத வரை அப்படி ஒன்று எனக்குள் இருப்பதை நான் ஒப்புக் கொள்ள மாட்டேன் எனக் கூறுவதற்கு ஒப்பானதாகும்'
Followers
Showing posts with label உதவி. Show all posts
Showing posts with label உதவி. Show all posts
Saturday, November 17, 2018
Monday, October 16, 2017
முதியவருக்கு குடில் அமைத்துக் கொடுத்த மனித நேயம்!
பிறர் நலம் நாடுவதே இஸ்லாம்!
ஒரு மனிதர்
நபி (ஸல்) அவர்களிடம், “அல்லாஹ்வின் தூதரே! எனக்கு உறவினர்கள் சிலர் உள்ளனர்.
அவர்களுடன் நான் ஒட்டி உறவாடுகிறேன். ஆனால், அவர்கள் எனது உறவை முறிக்கின்றனர். நான்
அவர்களுக்கு உபகாரம் செய்கிறேன். ஆனால், அவர்கள் எனக்கு அபகாரம் செய்கிறார்கள்.
(என்னைப் புண்படுத்தும்போது) அவர்களை நான் சகித்துக்கொள்கிறேன். (ஆனாலும்,)
அவர்கள்
என்னிடம் அறியாமையோடு நடந்துகொள்கிறார்கள்” என்று கூறினார்.
நபி (ஸல்) அவர்கள்,
“நீங்கள்
சொன்னதைப் போன்று நீங்கள் நடந்திருந்தால், அவர்களது வாயில் நீங்கள் சுடு சாம்பலைப்
போட்டவரைப் போன்றுதான். இதே நிலையில் நீங்கள் நீடித்திருக்கும்வரை இறைவனிடமிருந்து
ஓர் உதவியாளர் அவர்களுக்கெதிராக உங்களுடன் இருந்து கொண்டேயிருப்பார்” என்றார்கள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா(ரலி),
நூல்: முஸ்லிம் (5000)
Tuesday, September 26, 2017
பிறர்நலம் நாடுவதே இஸ்லாம்....
பிறர்நலம் நாடுவதே
இஸ்லாம்
திருவள்ளூர் மேற்கு
மாவட்டம் அம்பத்தூர் பகுதியில் தீ விபத்து ஏற்பட்டு மாற்றுமத சகோதரர் அண்ணாமலை என்பவரின்
வீடு முழுவதும் தீயில் எரிந்து சாம்பலானது.
இதை செய்தியின் வாயிலாக
அறிந்து உடனே நேரடியாக களத்திற்க்கு சென்ற தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நிர்வாகிகள் பாதிக்கப்பட்ட
குடும்பத்தாருக்கு ஆறுதல் கூறியதோடு பிறகு பொருளாதாரம் திரட்டும் பணியில் ஈடுப்பட்டனர்.
குடும்பத்திற்கு தேவையான
வீட்டு உபயோக பொருட்கள், உணவு பொருட்கள், ரொக்கமாக ரூ.50,500/- ஆகியவை பாதிக்கப்பட மாற்றுமத சகோதரர் குடும்பத்தார் வசம் கொடுக்கப்பட்டது.
மாநில செயலாளர்கள்
சகோ. இப்ராஹிம் மற்றும் சகோ. சித்திக் ஆகியோர் குடும்பத்தாருக்கு ஆறுதல் கூறி பொருட்களையும்
விநியோகம் செய்தனர்.
அல்ஹம்துலில்லாஹ்...
ஆர்எஸ்எஸூம்,
இந்து முன்னணியும் முஸ்லிம்களின் வீடுகளை அடையாளமிட்டு
சொத்துக்களை தீயிட்டு கொளுத்துவதை வழக்கமாக கொண்டுள்ளன.
தவ்ஹீத் ஜமாத் மற்றும்
பர இஸ்லாமிய அமைப்புகள் இந்துக்களுக்கு ஏதேனும் பாதிப்பு என்றால் உடன் களத்தில் இறங்கி
இந்துக்களின் துயரைப் போக்குகின்றன.
இந்து மற்றும் இஸ்லாமிய
அமைப்புகளின் நோக்கங்களை தற்போது புரிந்திருப்பீர்கள்.
Monday, January 18, 2016
இந்துக்களுக்கு வீடு கட்டிக் கொடுத்த இஸ்லாமிய அமைப்பு!

பரங்கிப் பேட்டை ஆரிய நாட்டு கிழக்குத் தெருவைச் சேர்ந்த பிரதாப், தியாகராஜன், மணிகண்டன், குப்புசாமி ஆகிய நான்கு பேரின் கூரை வீடுகளும் சென்ற ஜனவரி ஏழாம் தேதி தீ விபத்தால் முற்றிலும் எரிந்து சாம்பலானது. ஏழைகளான இவர்கள் நால்வரும் வீட்டை புணரமைக்க முடியாமல் திகைத்து நின்றனர். இதனை கேள்விப்பட்ட தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் பரங்கிப் பட்டை கிளை அவர்களுக்கு வீடு கட்டிக் கொடுக்க முன் வந்தது. 60 ஆயிரம் செலவு செய்து அந்த ஏழை மக்களின் கூரை வீடுகளை செப்பனிட்டுக் கொடுத்தது.
மத நல்லிணக்கம் என்பதற்கு பெயர் இதுதான். ஒரு மதத்தவரின் பழக்கங்களை மற்ற மதத்தவர் பின் பற்றுவதன் மூலம் மத நல்லிணக்கம் வளராது. குழப்பமே மிஞ்சும். ஏகத்துவவாதிகளை பொறுத்த வரை மார்க்க விஷயங்களில் சமரசம் செய்து கொள்ள மாட்டார்கள். அதே நேரம் மனிதாபிமான உதவிகள் செய்வதில் மத வேறுபாடுகளைக் கடந்து முன்னணியில் இருப்பார்கள். சென்னை மழை வெள்ளத்திலும் அந்த மனிதாபிமானத்தைப் பார்த்தோம். இன்று பரங்கிப் பேட்டையிலும் அதே மனிதாபிமானத்தைப் பார்கிறோம்.
எல்லா புகழும் இறைவனுக்கே!...
Wednesday, December 30, 2015
தினமும் ஏழைகளுக்கு உணவளித்துக் கொண்டிருக்கும் இஸ்லாமிய இளைஞர்!
'மழையோ வெயிலோ... எப்படி இருந்தாலும் மதியம் ஒரு மணிக்கு எங்களுக்கு சாப்பாடு வந்து விடும்''சாப்பாட்டுக்கு பணம் வாங்குவதி...
Posted by Nazeer Ahamed on Wednesday, December 30, 2015
'மழையோ வெயிலோ... எப்படி இருந்தாலும் மதியம் ஒரு மணிக்கு எங்களுக்கு சாப்பாடு வந்து விடும்'
'சாப்பாட்டுக்கு பணம் வாங்குவதில்லை. அதோடு அன்பாக பரிமாறுகிறார்கள்'
'சாதி மதம் பார்க்காமல் தினமும் 100 லிருந்து 150 பேருக்கு வயிறு நிறைய சாப்பாடு போடகிறார் அஜர் பாய்'
மக்கள் இந்த உணவு வழங்கும் நிகழ்ச்சியைப் பற்றி பேசிக் கொள்வதையே நாம் மேலே பார்த்தது.
அமிதாப்பச்சன்:
நம் முன் அமர்ந்திருக்கும் அஜர் பாய் தினமும் 200 பேருக்கு ஹைதராபாத்தின் மேம்பாலத்துக்குக் கீழ் உள்ள பகுதியில் மதிய உணவு இலவசமாக கொடுத்து வருகிறார். அஜர் பாய்! கொஞ்சம் வருகிறீர்களா?
(அஜர் அமிதாப்பை நோக்கி வருகிறார்)
'அஜர் பாய்! உங்களின் அனுபவங்களைச் சொல்லுங்கள். தினமும் எத்தனை பேருக்கு உணவு வழங்கி வருகிறீர்கள்?
அஜர்: நூறிலிருந்து நூற்று முப்பது பேர் வரை.... (பலத்த கைத் தட்டல்)
அமிதாப் பச்சன்: உங்களின் அனுபவத்தை எங்களிடம் பகிருங்களேன்.
அஜர்: நான்கு வருடம் முன்பு எனது சகோதரனோடு ரயில்வே பகுதி சமீபமாக போய்க் கொண்டிருக்கும் போது டயர் பஞ்சராகி விட்டது. வண்டியை ஓரமாக்கி விட்டு சரி செய்ய காத்திருந்தோம். அப்போது ஒரு ஓரத்தில் ஒரு பெண் ஏதோ உளறிக் கொண்டிருந்தார். அங்கிருந்தவர்களிடம் 'இந்த பெண்ணுக்கு என்ன ஆனது' என்று கேட்டேன்.
'இந்த பெண்ணின் மகன் இரண்டு நாளாக இவரைப் பார்க்க வரவில்லை. சாப்பிடாததனால் பசியில் இவ்வாறு அரற்றிக் கொண்டுள்ளார்' என்று சொன்னவர்.
நான் ஆச்சரியம் அடைந்தவனாக 'ஏன்.. நீங்கள் இந்த பெண்ணுக்கு உணவளிக்கக் கூடாதா?' என்று கேட்டேன்.
'எங்களுக்கே உணவு பற்றாமல் இருக்கும் போது இந்த பெண்ணுக்கு நாங்கள் எங்கிருந்து கொடுப்பது?' என்றனர்.
இதைக் கேட்டவுடன் எனக்கு கண்களில் இருந்து கண்ணீர் வந்தது. உடன் பக்கத்தில் இருந்த உணவகத்துக்குச் சென்று உணவு வாங்கி வந்து அந்த பெண்ணுக்கு கொடுத்தேன். இந்த நிகழ்வு என் மனத்தை மிகவும் பாதித்தது. நடந்த விபரங்களை என் மனைவியிடம் கூறினேன். அன்று எங்கள் வீட்டில் செய்த சிறிது உணவை எடுத்துக் கொண்டு ரெயில்வே பிளாட்பாரத்தில் தங்கியிருக்கும் ஏழைகளுக்கு கொடுத்தோம். அந்த உணவை பார்த்தவுடன் ஏதோ காணாததைக் கண்டது போல் இரு கைகளால் அள்ளி அள்ளி சாப்பிட்டதைப் பார்த்து என் கண்கள் கலங்கி விட்டது. என் இளமைக்கால் வாழ்வும் எனது ஞாபகத்துக்கு வந்தது.
அமிதாப் பச்சன்: உங்களின் இளமைக்கால வாழ்வைப் பற்றி எங்களுக்கு சொல்ல முடியுமா? பசியின் கொடுமையை உணர்திருக்கிறீர்களா?
அஜர்: என் தந்தை இறந்த போது எனக்கு நான்கு வயதிருக்கும். என் தாயார் என்னை மிகவும் சிரமத்தில் வளர்த்தார். எனது நானா வீட்டிலிருந்து தினமும் ஒரு வேளை உணவு வரும். அதை வைத்து அனுசரித்து சரி செய்து கொள்வோம். இவ்வளவு வறுமையிலும் என்னை எனது தாயார் வேலைக்கு அனுப்பவில்லை. 'நீ நன்றாக படி' என்று தான் என்னிடம் சொன்னார் (சொல்லும் போது அழுகிறார்) உறவினர் வீட்டில் எங்காவது விருந்துக்கு சொல்லியிருந்தார்கள் என்றால் எட்டு நாட்களுக்கு முன்பிருந்தே அவலோடு இருப்பேன். அந்த ஒரு நாளில் வயிறு நிறைய சாப்பிட்டு விடலாம் என்ற எண்ணத்தில் காத்திருப்பேன். பசி என்பது எவ்வளவு பெரிய கொடுமை என்பதை என்னை விட யாரும் சரியாக அறிந்திருக்க முடியாது.
அமிதாப் பச்சன்: இங்கு வந்திருக்கும் உங்கள் தாயாரிடம் பேசுவோம்....
'அம்மா! உங்கள் குடும்பம் 20 வருடங்களுக்கு முன்பு சாப்பாட்டுக்கே சிரமப்பட்டது. இன்று உங்கள் மகன் பல பேருக்கு சாப்பாடு போடுகிறார். இது பற்றி என்ன நினைக்கிறீர்கள்?'
அஜரின் தாயார்: இதைப் பார்க்க எனக்கு சந்தோஷமாக உள்ளது (நா தழு தழுக்கிறது. அதற்கு மேல் பேச முடியாமல் மைக்கை தருகிறார்.)
Monday, December 28, 2015
'ரொட்டி வங்கி' தொடங்கி சேவையாற்றி வரும் யூசுப் முகாட்டி!

மகாராஷ்டிரா மாநிலம் அவுரங்கா பாத்தில் யூசுப் முகாட்டி என்பவர், ‘ரொட்டி வங்கி’ தொடங்கி ஏழை களின் பசியை போக்கி வருகிறார். இந்த உன்னத சேவைக்கு அவருடைய மனைவி, சகோதரிகள், பொதுமக்கள் ஆர்வமுடன் உதவி வருகின்றனர்.
இந்தியாவில் ஒருவேளை உணவு கூட கிடைக்காமல் பட்டினி கிடப்பவர்கள் அதிகம் உள்ளனர். அவர்களின் பசியை போக்க உத்தரப் பிரதேச மாநிலம் பண்டல்கண்ட் என்ற பகுதியில் ஒருவர், ‘ரொட்டி வங்கி’ தொடங்கினார். அதேபோல் இப்போது மகாராஷ்டிரா மாநிலம் அவுரங்காபாத்தில் யூசுப் முகாட்டி என்பவர் கடந்த 5-ம் தேதி ரொட்டி வங்கி தொடங்கி உள்ளார். ‘ஹாரூண் முகாட்டி இஸ்லாமிக் சென்டர்’ என்ற அமைப்பையும் நிறுவி ஏழை மக்களுக்கு உதவி வருகிறார். தவிர துணிக்கடையும் சிறிதாக நடத்திவருகிறார். இந்த ரொட்டி வங்கி ஜின்சி - பைஜிபுரா சாலையில் இயங்கி வருகிறது.
அஜந்தா எல்லோரா குகை ஓவியங்களுக்கு புகழ்பெற்ற அவுரங்காபாத்தில், யூசுப்பின் சேவைக்கு பலத்த வரவேற்பு கிடைத்துள்ளது. இதுகுறித்து 38 வயதாகும் யூசுப் கூறியதாவது:
ஏழைகள் குறிப்பாக முஸ்லிம்கள் பலர் ஒரு வேளை உணவு கூட கிடைக்காமல் மிகவும் கஷ்டப்படுவதை பல ஆண்டுகளாக பார்த்திருக்கிறேன். பல குடும்பங்களில் உறுப்பினர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. ஆனால், ஒருவர் மட்டுமே சம்பாதிப்பவராக இருக்கிறார். அவர்களால் வயிறார உணவு உண்ண கூட வருவாய் கிடையாது. இது மிகவும் பரிதாபமான விஷயம்.
என் மனைவி கவுசர் மற்றும் திருமணமான 4 சகோதரிகள் சீமா ஷாலிமார், மும்தாஜ் மேமன், ஷாநாஸ் ஷபானி, ஹூமா பரியானி ஆகியோருடன் கலந்தாலோசித்தேன். அவர்கள் எல்லோரும் மனதார ஒப்புக் கொண்டு உதவ முன்வந்தனர். கடைசியில் நினைத்தபடி கடந்த 5-ம் தேதி ரொட்டி வங்கியை திறந்து விட்டோம். முதலில் 250 பேர் மட்டுமே உறுப்பினர்களாக சேர்ந்தனர்.
ரொட்டி வங்கியை திறந்த பிறகு, இந்த பக்கம் போவோர் வருவோர் எல்லாம் விசாரிக்க தொடங்கினர். மிக உன்னதமான சேவை என்று அவர்கள் பேசி சென்றனர். ரொட்டி வங்கியில் உறுப்பினராக சேர ஒரு படிவத்தை பூர்த்தி செய்து தர வேண்டும். அவர்களுக்கு நாங்கள் தனி கோட் நம்பர் தருவோம். மேலும் கோட் நம்பருடன் தனி பை ஒன்றும் தருகிறோம்.
உறுப்பினர்கள் தினமும் குறைந்தபட்சம் புதிதாக செய்யப்பட்ட 2 ரொட்டிகள் மற்றும் சைவ, அசைவ உணவு குழம்புகளை வங்கியில் கொடுக்க வேண்டும். தினமும் அவர்களுடைய வீட்டில் என்ன சமைக்கிறார்களோ அதை கொடுத்தால் போதும். அவ்வளவுதான். இதை நாங்கள் சொன்ன பிறகு, 15 நாட்களில் உறுப்பினர்களின் எண்ணிக்கை 25 சதவீதம் அதிகரித்து விட்டது. மேலும் மேலும் உறுப்பினர்களின் எண்ணிக்கை பல்கி பெருகும் வாய்ப்பு உள்ளது.
காலை 11 மணி முதல் இரவு 11 மணி வரை ரொட்டி வங்கி செயல்படும். பொதுமக்கள் தாமாகவே முன்வந்து இங்கு ரொட்டிகளையும், சைவ, அசைவ உணவுகளையும் வழங்கி விட்டு செல்கின்றனர். சில வேளைகளில் எதிர்பார்ப்பதை விட அதிகளவு உணவு கிடைத்து விடுகிறது. சுமார் 500 பேருக்கு ரொட்டி வங்கி மூலம் தினமும் உணவு வழங்கி வருகிறோம்.
ரொட்டி வங்கி உணவு வழங்கும் உறுப்பினர்கள் மற்றும் உணவு பெற்று செல்லும் ஏழைகளில் மூன்றில் ஒரு பங்கினர் முஸ்லிம் அல்லாதவர்கள். எங்கள் ரொட்டி வங்கி பற்றி கேள்விப்பட்ட திருமண ஏற்பாட்டாளர்களும், கூடுதலாக உள்ள உணவு வகைகளை அனுப்பி தொடங்கி உள்ளனர். இதுபோல் 6 இந்து திருமண ஏற்பாட்டாளர்கள், 12 முஸ்லிம் திருமண ஏற்பாட்டா ளர்கள் மிகச்சிறந்த சைவ, அசைவ உணவுகளை அனுப்பி வைத்தனர்.
உணவு அதிகமாக வருவதால் அவை கெட்டு போகாமல் இருக்க மிகப்பெரிய பிரீஸரில் வைத்து பயன்படுத்துகிறோம். இதேபோல் பெரிய ரெஸ்டாரன்டுகள், டிலக்ஸ் ஓட்டல்கள், கார்ப்பரேட், தொழிற் சாலை கேன்டீன்கள், பயணிகள் விமான கிச்சன், மெகா நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களும் மிச்சமாகும் உணவு பொருட்களை அனுப்பி வைத்தால் ஏழைகளுக்கு வழங்க முடியும். மேலும், உணவு பொருட்களும் வீணாகாது.
வங்கிக்கு வரும் உணவு தரமான தாக, புதிதாக உள்ளதா என்பதை ஆய்வு செய்தே வாங்குகிறோம். ஏழை மக்கள், வயதானவர்கள், நோயுற்றவர்கள், வேலை இல்லாதவர்கள் போன்றோர் எந்த நேரத்திலும் வந்து அவர்களுக்கு தேவையான, விருப்பமான சைவ அல்லது அசைவ உணவுகளை பெற்றுக் கொள்ளலாம். இதன் மூலம் பட்டினி கிடக்கும் அவல நிலை ஏற்படாது. இவ்வாறு யூசப் கூறினார்.
தகவல் உதவி
தமிழ் இந்து நாளிதழ்
29-12-2015
இந்த சேவையை இஸ்லாமிய இயக்கங்கள் இந்தியா முழுக்க செயல்படுத்தினால் பல ஏழைகள் ஒரு வேளை உணவாவது வயிறார உண்ண வழி ஏற்படும்.
அல்லாஹ்வின் தூதர் அவர்கள், ''இன்று உங்களில் நோன்பு நோற்றிருப்பவர் யார்?'' என்று கேட்டார்கள். அதற்கு அபூபக்கர் (ரலி) அவர்கள் 'நான்' என்றார்கள்.
''இன்றைய தினம் உங்களில் ஜனாஸாவைப் பின்தொடர்ந்து சென்றவர் யார்?'' என்று கேட்டார்கள். அபூபக்கர் (ரலி) 'நான்' என்றார்கள்.
''இன்றைய தினம் ஓர் ஏழைக்கு உணவளித்தவர் உங்களில் யார்?'' என்று அவர்கள் கேட்க, அதற்கும் அபூபக்கர் (ரலி) அவர்கள் 'நான்' என்றார்கள்.
''இன்றைய தினம் ஒரு நோயாளியை உடல் நலம் விசாரித்தவர் உங்களில் யார்?'' என்று கேட்க, அதற்கும் அபூபக்கர் (ரலி) அவர்கள் 'நான்' என்றார்கள்.
அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ''எந்த மனிதர் இவை அனைத்தையும் மொத்தமாகச் செய்தோரோ அவர் சொர்க்கத்தில் நுழையாமல் இருப்பதில்லை'' என்றார்கள். அறிவிப்பவர்:
அபூஹுரைரா (ரலி), நூல்: முஸ்லிம் (1865)
Saturday, December 26, 2015
ஆரோக்கியதாஸ் என்ற நல்ல மனிதரின் அகால மரணம்!

வெள்ளத்திலிருந்து மீட்கப்பட்ட மோகன் சித்ரா தம்பதியர், தமது குழந்தைக்கு யூனுஸ் என்று பெயர் வைத்தார்களல்லவா! அந்த யூனுஸும் நானும் இன்று திருவொற்றியூரிலுள்ள ஆரோக்கிய தாஸ் வீட்டுக்கு சென்றோம்.
யார் அந்த ஆரோக்கியதாஸ்?
திமுகவின் நகரத் துணைச் செயலாளர். இருமுறை கவுன்சிலராக இருந்தவர். மக்கள் சேவகர். விஷ பூச்சி கடித்து பலியான இம்ரானின் அண்டை வீட்டுக்காரர். இம்ரானை மருத்துவமனையில் சேர்த்தது முதல் இம்ரான் மரணத்தை வெகுமக்களின் கவனத்துக்கு கொண்டுவந்தது வரை அனைத்தையும் உடனிருந்து செய்தவர். அத்துடன் நிற்கவில்லை அவர். திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலினை வரவழைத்து இம்ரானின் பெற்றோருக்கு ஆறுதல் சொன்னதோடு, தனது மகளின் நகையை அடகுவைத்து 50,000 ரூபாய் நிதியும் வழங்கினார். கடந்த 17-ஆம் தேதி தலைவர் திருமாவளவன் அவர்கள் இம்ரான் இல்லத்துக்குச் சென்றபோது முழுவதும் உடனிருந்தார், ஆரோக்கியதாஸ். அத்தகைய பொது நலத் தொண்டர், அன்று மாலையில் தனது வீட்டு மாடியிலிருந்து தவறி விழுந்து அகால மரணம் அடைந்தார்.
பெரிய கட்சியின் முக்கியப் பொறுப்பில் இருந்தபோதும், கவுன்சிலர் பதவியை இருமுறை வகித்தபோதும் எளிய வாழ்க்கை வாழ்ந்துள்ளார். அவரது வீடே அதற்கு சாட்சியாய் உள்ளது. அவரின் மூன்று பெண் மக்களுக்கும் இன்னும் திருமணமாகவில்லை. குடும்பமே கண்ணீர் வடிக்கிறது.
நண்பர் யூனுஸ் இன்று, ஆரோக்கிய தாஸ் குடும்பத்துக்கு ஆறுதல் நிதி வழங்கினார். மனிதநேயம் என்பது ஒருவழிப்பாதை அல்ல என்பதை நிரூபிக்கிறார் யூனுஸ்!
நன்றி
சகோ Aloor shanawas
இறந்த ஆரோக்கியதாஸின் குடும்பத்துக்கு திமுக சிறந்த ஒரு உதவியை செய்து தரும் என்று எதிர்பார்போம். பொது மக்களும் நிதி திரட்டி அந்த குடும்பம் சிரமப்படாமல் இருக்க ஆவண செய்யலாம்!
Thursday, December 24, 2015
நெகிழ வைத்த ஒரு நிகழ்வு - ரியாத் பேரூந்து நிலையத்தில்

நெகிழ வைத்த ஒரு நிகழ்வு - ரியாத் பேரூந்து நிலையத்தில்
கம்பெனி வேலையாக ஒரு வாரம் தபூக் மாநகருக்கு வரும் ஞாயிறன்று செல்கிறேன். அதற்காக டிக்கெட் முன் பதிவு செய்ய ரியாத் பேரூந்து நிலையத்துக்கு சென்று வரிசையில் காத்திருந்தேன். அப்போது எனக்கு பின்னால் ஒரு இந்தியர் திரு திரு என்று ஒரு பயம் கலந்த தொனியில் நின்று கொண்டிருந்தார். என்னிடம் ஏதோ சொல்ல வருவதை உணர்ந்து கொண்டு நான் கேட்டேன்...
'எந்த ஊரு?'
'ஆந்திரா... கர்நூல்' அந்த இந்து நண்பருக்கு உருதுவும் சரியாக வரவில்லை. தட்டுத் தடுமாறி பேசினார். தனது கையில் உள்ள ஒரு துண்டு சீட்டை என்னிடம் நீட்டினார். அதில் ஹஃப்ரல்பாதின் என்ற ஊர் பெயரும் - மற்றும் டெலிபோன் நம்பரும் எழுதப்பட்டிருந்தது. புதிதாக சவுதி வருகிறார். விமான நிலையத்திலிருந்து பேரூந்து நிலையம் வந்து விட்டார். இங்கு ரியாத்திலிருந்து அவர் வேலை செய்யும் இடமான ஹஃப்ரல் பாதின் 250 கிலோ மீட்டருக்கும் அதிக தூரத்தில் உள்ளது. அங்கு பஸ் பிடித்து இவர் செல்ல வேண்டும்.
எனது முறை வரவே நான் டிக்கெட் எடுத்து விட்டு அவரது பாஸ்போர்டை கொடுத்து 'ஹஃரல் பாதினுக்கு ஒரு டிக்கெட் கொடுங்கள்' என்று கவுண்டரில் உள்ளவரிடம் கேட்டேன். அவர் பெயரை பதிவு செய்து விட்டு '110 ரியால்' என்று என்னிடம் கேட்டார். நான் அந்த இந்து நண்பரிடம் '110 ரியால் பஸ் டிக்கெட்டுக்கான ரியாலை கொடுங்கள்' என்றேன். அவர் தனது கையில் இருந்து முழு பணத்தையும் என்னிடம் தந்தார். எண்ணிப் பார்த்தால் வெறும் 35 ரியால்தான் இருந்தது. 'என்ன இது? மீதி பணம் எங்கே?' என்றேன். தான் விமான நிலையத்திலிருந்து பேரூந்து நிலையம் வர 50 ரியால் கொடுத்ததாகவும் கொஞ்சம் இந்திய ரூபாய் இருப்பதாகவும் வேறு பணம் இல்லை என்றும் பரிதாபமாக சொன்னார். டிக்கெட் கவுண்டரில் உள்ள சவுதி நாட்டவரோ பணம் இல்லை என்றவுடன் சற்று கோபத்துடன் அடுத்த ஆளை கூப்பிட்டார்.
எனது தகுதிக்கு 10 ரியால் கொடுத்து மற்றவர்களிடமும் வசூல் பண்ணி கொடுக்கலாம் என்ற எண்ணத்தில் அவரை அழைத்துக் கொண்டு நகர ஆரம்பித்தேன். எங்கள் வரிசையில் நின்ற இரண்டு சவுதி நாட்டவர் இதனை கவனித்து விட்டு என்னிடம் 'என்ன பிரச்னை?' என்று கேட்டனர். நான் முழு விபரத்தையும் சொன்னேன். உடனே அந்த இருவரும் தங்கள் பையிலிருந்து 50 ரியாலையும் மற்றவர் 50 ரியாலையும் என்னிடம் கொடுத்து 'போதுமா' என்றனர். தற்போது 135 ரியால் சேர்ந்து விட்டது. நான் போதும்' என்றேன். அதே நபர் மேற்கொண்டு 20 ரியாலை அந்த இந்து நண்பரின் கையில் கொடுத்து 'வழியில் சாப்பிட வைத்துக் கொள்' என்று கொடுத்தார். அந்த இந்து நண்பருக்கு முகத்தில் ஏக மகிழ்ச்சி. அவர்கள் இருவருக்கும் நான் நன்றி சொன்னேன். அந்த இந்து நண்பரையும் நன்றி சொல்ல சொன்னேன். அவரும் அந்த சவுதிகளின் கைகளை பிடித்து நன்றி கூறினார். இது ஒரு சிறிய உதவிதான். ஆனால் மொழி தெரியாமல், சாப்பிடாமல் ஒரு அந்நிய தேசத்தில் அல்லாடிக் கொண்டிருக்கும் அந்த நேரத்தில் இந்த நூறு ரியால் என்பது வள்ளுவர் சொல்வது போல் 'ஞாலத்தின் மாணப் பெரிது' அல்லவா?
காலத்தினாற் செய்த நன்றி சிறிதெனினும்
ஞாலத்தின் மாணப் பெரிது
-திருக்குறள்
விளக்கம் : மிகவும் தேவைப்படும் நேரத்தில் ஒருவருக்கு செய்யப்படும் உதவி சிறிதாக இருந்தாலும், அது உலகத்தை விடப் பெரிதாக மதிக்கப்படும்.
நான் அவர் ஒரு இந்தியர் என்ற காரணத்தினால் உதவ போனேன். ஆனால் அந்த இரண்டு சவுதிகளும் யாரென்றே தெரியாத அந்த இந்து நண்பருக்கு உதவிய மனிதத் தன்மையை நினைத்து நெகிழ்வுற்றேன். இது போல் சவுதியில் ஆங்காங்கு பல நிகழ்வுகள் தினமும் நடந்து கொண்டுதான் இருக்கிறது. உலகம் முழுக்கவும் நடந்து கொண்டுதான் இருக்கிறது. நமது இந்திய நாட்டில் இந்துத்வாவாதிகளால் தினமும் எங்காவது ஒரு மூலையில் இஸ்லாமியர்கள் கொடுமைபடுத்தப்பட்டுக் கொண்டுதான் இருக்கிறார்கள். அந்த இந்துத்வாவாதிகள் செய்யும் அந்த கொடூரங்கள் என்னை இந்த இந்து நண்பருக்கு உதவி செய்ய தடுத்து விடவில்லை. அந்த இரண்டு சவுதிகளும் டிக்கெட்டுக்கு பணத்தையும் கொடுத்து சாப்பாட்டு செலவுக்கு மேற்கொண்டும் பணத்தை கொடுத்த அந்த மனித நேயத்தை இன்றும் நினைத்துப் பார்க்கிறேன்.
சில நாட்களுக்கு முன்பு பால்தாக்கரேயையும், சிவாஜியையும் தரக்குறைவாக விமரிசித்ததாக கூறி அதனை முஸ்லிம்கள் செய்ததாக வதந்தி பரப்பி கலவரத்தை காவிகள் மும்பையில் அரங்கேற்றினர். சற்றும் சம்பந்தம் இல்லாத ஒரு கணிணி வல்லுனர் காவிகளால் அடித்தே கொல்லப்பட்டார். அந்த நேரத்தில் முஸ்லிம்கள் அதிகம் உள்ள கிராமங்களில் இந்துக்களை யாரும் தாக்கி விடாமல் முஸ்லிம்கள் காவல் காத்தார்களாம். இதனை நெகிழ்வாக ஒரு இந்து நண்பரே பேட்டியாக கொடுத்துள்ளார். இதனைத்தான் குர்ஆன் முஸ்லிம்களுக்கு போதிக்கிறது.
திருக்குர்ஆன் கூறுவதைக் கேளுங்கள்:
'நம்பிக்கை கொண்டோரே! இறைவனுக்குக் கட்டுப்பட்டு நீதிக்கு சாட்சிகளாக ஆகி விடுங்கள். ஒரு சமுதாயத்தின் மீதுள்ள பகை நீங்கள் நீதியாக நடக்காமலிருக்க உங்களைத் தூண்ட வேண்டாம். நீதியாக நடங்கள். அதுவே இறையச்சத்திற்கு நெருக்கமானது. இறைவனை அஞ்சிக் கொள்ளுங்கள். இறைவன் நீங்கள் செய்வதை நன்கு அறிந்தவன்'
-குர்ஆன் 5:8
(இது ஒரு மீள் பதிவு)
விஜய் டிவியின் சூப்பர் சிங்கரை நேற்றும் தொடர்ந்தேன்!



விஜய் டிவியின் சூப்பர் சிங்கரை நேற்றும் தொடர்ந்தேன்!
23-12-2015 ஆம் தேதி ஒளிபரப்பான சூப்பர் சிங்கரில் வெளியான சில தகவல்கள்.....
பெல்ஜியம் நாட்டை சேர்ந்த பீட்டர் என்ற கிருத்துவர் 10 வருடங்களுக்கு முன்பிலிருந்து சென்னையிலேயே தங்கி பொதுப்பணிகளில் ஈடுபட்டு வருகிறார். 'சென்னை மக்கள் அன்பானவர்கள். அவர்களின் அன்பு என்னை இங்கேயே தங்க வைத்து விட்டது' என்று பெருமை பொங்க சொல்கிறார். கிட்டத்தட்ட 250 பேர்களின் உயிர்களை இவர்கள் குழுமம் காப்பாற்றியுள்ளது. உயிர்களை காப்பாற்றிதோடு நில்லாமல் சாக்கடைகளை சுத்தப்படுத்தி கழிவு நீர் தடையின்றி செல்ல மிகவும் உதவியிருக்கிறார். இவரை அழைத்து கவுரப்படுத்தி பூச்செண்டுகளும் கொடுத்தது சூப்பர் சிங்கர் குழுமம்.
அடுத்த ஹீரோ முஹம்மது யூனுஸ்...
இவரைப் பற்றி நாம் முன்பே பத்திரிக்கைகள் வாயிலாகவும் இணையம் வாயிலாகவும் நிறையவே கேள்விப் பட்டிருப்போம். இவரும் நேரிடையாக நிகழ்ச்சிக்கு வந்திருந்தார். அவர் தனது அனுபவங்களை பகிரும் போது....
'எங்களுக்கு சென்னையில் இரண்டு வீடு இருந்தது. ஒரு வீட்டை நாங்கள் உபயோகித்துக் கொண்டு மற்ற வீட்டை வீடிழந்தவர்களை தற்காலிகமாக தங்க வைக்கலாம் என்று முடிவு செய்தோம். அதனை இணையத்திலும் அறிவிப்பாக வெளியிட்டேன். நிறைய கால்கள் வந்தது. பல நண்பர்களும் தங்கள் வீடுகளை தர முன் வந்தனர். பல நூறு குடும்பங்களை இவ்வாறு தங்க வைத்தோம்.'
பாவனா: 'கர்ப்பிணி பெண்ணை காப்பாற்றியது சம்பந்தமாக...'
யூனுஸ்: அவர் கர்பிணி என்பது முதலில் தெரியாது. தண்ணீரின் வேகம் மிக அதிகமாக இருந்தது. ஒரு முறை நானே தவறி குழியில் விழப் போனேன். இவரைப் போன்ற பல குடும்பங்களைக் காப்பாற்றினோம். பிறகுதான் அவருக்கு குழந்தை பிறந்த செய்தி தெரிய வந்தது. இன்னும் நான் அவரை நேரில் சந்திக்கவில்லை. இனிமேல்தான் சந்திக்க வேண்டும். இந்த நேரத்தில் மீனவர்களின் பணியையும் குறைத்து மதிப்பிட முடியாது. அவர்களின் படகு இல்லை என்றால் பல உயிர்களை இழந்திருப்போம்.
பாவனா: இவருடைய சேவையை நினைத்து அந்த குடும்பம் பிறந்த குழந்தைக்கு இஸ்லாமிய பெயரான 'யூனுஸ்' என்ற பெயரை தேர்ந்தெடுத்துள்ளது...
(பலத்த கைத்தட்டல்)
அடுத்து பீஹாரைச் சேர்ந்த கூலி தொழிலாளி அலாவுதீனின் மனைவியையும் படகில் காப்பாற்றியுள்ளனர். காப்பாற்றியவர் பெயர் குறிப்பிடப்படவில்லை. மனித நேயமிக்க பல பணிகள் நடந்து பல உயிர்களை காப்பாற்றியுள்ளது. மீதியை நாளையும் தொடர்வோம்.
Tuesday, December 22, 2015
விஜய் டிவி நேற்றைய எமது பதிவைப் பார்த்து மிரண்டு விட்டதோ!


விஜய் டிவி நேற்றைய எமது பதிவைப் பார்த்து மிரண்டு விட்டதோ!
சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் வெள்ள பாதிப்பு தொகுப்பில் இஸ்லாமியரின் பெயர் வேண்டுமென்றே விடுபபட்டுள்ளதோ என்ற எனது சந்தேகத்தை நேற்றைய பதிவில் குறிப்பிட்டிருந்தேன். அந்த பதிவுக்கு ஏக வரவேற்பு. 500 ஷேர்களுக்கு மேல் போனதால் மிரண்டு போன விஜய் டிவி நிர்வாகம் இன்றைய எபிசோட்டில் பல உண்மைகளை உரக்கச் சொன்னது. :
நிகழ்ச்சியின் ஆரம்பத்திலேயே 'ஒன்றே குலம் என்று பாடுவோம்! ஒருவனே தேவன் என்று போற்றுவோம்' என்ற இஸ்லாத்தின் அடிப்படை கொள்கையை பறை சாற்றுவதோடு நிகழ்ச்சியை தொடங்கியது. அதையும் ஒரு இஸ்லாமியனான சியாதை விட்டு பாடச் சொன்னது. அந்த பாடல் முடிந்த கையோடு இஸ்லாமியர் தங்கள் பள்ளிவாசலில் அiனைத்து மதத்தினரையும் தங்க வைக்கச் சொன்ன நிகழ்வுகளை நம்ம பாவனா அக்கா விலாவாரியாக விளக்கிக் கொண்டிருந்தார். தொழுகை நேரத்தில் முஸ்லிம்கள் இடமில்லாததால் ரோட்டில் தொழுது கொண்டதையும் குறிப்பிட மறக்கவில்லை.
அடுத்து காப்பாற்றப் போன இம்ரான் பூச்சிக் கடியால் இறந்த துயரமான அந்த நிகழ்வை இம்ரானின் தந்தை விளக்கினார். பலரது கண்களில் கண்ணீர். ஒரு நிமிடம் மவுன அஞ்சலியும் செலுத்தினர்.
அதே போல் காப்பாற்றப் போன இடத்தில் சாக்கடைப் பள்ளத்தில் தவறி விழுந்து இறந்து போன சகோதரர் பரத்தைப் பற்றியும் ஒளிபரப்பினார்கள். இன்றைய நாள் நிகழ்ச்சி சிறப்பாக இருந்தது.
ஆனாலும் ஒரு குறை....
வெள்ள பாதிப்பில் ஆரம்பம் முதல் இன்று வரை பல உயிர்களைக் காப்பாற்றிய தமிழ்நாடு தவ்ஹித் ஜமாத்தைப் பற்றியும், தமுமுக, பாபுலர் ஃப்ரண்ட் பற்றியும் சிறிய குறிப்பு கொடுத்திருந்தால் நன்றாக இருந்திருக்கும். மலைபோல் குவிந்து கிடந்த குப்பைகளை கார்பரேஷன் காரர்களே கை வைக்க பயந்தபோது தவ்ஹீத் ஜமாத் முதலில் களமிறங்கி சென்னையை தூய்மையாக்கியது. இவர்களை பார்த்து வைகோவும் திருமாவளவனும் களத்தில் இறங்கி துப்புறவு பணியை கையிலெடுத்தனர். பாவனா அக்கா நாளைய எபிசோடில் இதனையும் சேர்த்துக் கொள்வாராக! :-)
-----------------------------------------------------
'என்ன பாய் இது! இது உங்களுக்கே ஓவரா தெரியல... உங்க பதிவை பார்த்து மிரண்டு விட்டது விஜய் டிவி நிர்வாகம் என்பதெல்லாம் நம்புற மாதிரியா இருக்கு' என்று நீங்கள் கேட்பது தெரிகிறது.
'துணை முதல்வர் பதவியை விட்டுத்தர தயாராக இருக்கிறேன்' என்று அன்பு மணி ராமதாஸ் சொன்னா மறு பேச்சு பேசாம நம்புவீங்க....
'தமிழகத்தை அடுத்த ஐந்து ஆண்டு ஆளப் போவது பிஜேபிதான்' என்று சவுண்டு சரோஜா சொன்னா மறு பேச்சு பேசாம நம்புவீங்க....
'என்னோட பதிவை பார்த்து விஜய் டிவி முடிவை மாத்திக்கிச்சு' என்று நான் சொன்னா மட்டும் நம்ப மாட்டீங்களா? .... இது நியாயமா? :-)
Monday, December 21, 2015
நேற்றைய விஜய் டிவியின் 'சூப்பர் சிங்கர்' நிகழ்ச்சி சம்பந்தமாக!
நேற்றைய விஜய் டிவியின் 'சூப்பர் சிங்கர்' நிகழ்ச்சி சம்பந்தமாக!நேரம் கிடைக்கும் போது அவ்வப்போது விஜய் டிவியின் 'சூப்பர்...
Posted by Nazeer Ahamed on Monday, December 21, 2015
நேரம் கிடைக்கும் போது அவ்வப்போது விஜய் டிவியின் 'சூப்பர் சிங்கர்' நிகழ்ச்சியை பார்ப்பது உண்டு. அந்த வகையில் நேற்றும் அந்த நிகழ்சியை பார்தேன். சென்னை கடலூர் வெள்ள பாதிப்பில் தங்கள் உயிரையும் பொருட்படுத்தாது மக்களை காப்பாற்றிய ஒரு சிலரை பேட்டி எடுத்தனர். அதில் காவல் துறை அதிகாரி சைலேந்திர பாபு தலைமையில் ஒரு டீம் சிறப்பாக செயல்பட்டு பல உயிர்களை காப்பாற்றியதை நாமும் அறிவோம். அவர்களை அழைத்து சிறப்பித்தனர் விஜய் டிவி 'சூப்பர் சிங்கர்' குழுமத்தினர்.
இவர்களில் விஷ்ணு, ஜமீல் என்ற இரண்டு பேர் சென்னை வெள்ளத்தில் 'சைலேந்திர பாபு டீமில்' கலந்து கொண்டு தண்ணீரில் இறங்கி பல உயிர்களை காப்பாற்றியுள்ளனர். கோவையிலிருந்து மீட்புப் பணிக்காக வந்தவர்கள். நன்கு பயிற்சி பெற்ற வீரர்கள்.
இந்த நிகழ்ச்சியை தொகுத்தளித்த ஆங்கர் பாவனா 'விஷ்ணு உங்க அனுபவத்த சொல்லுங்க' என்று விஷ்ணுவிடம் கேட்கிறார். அவரும் தனது அனுபவத்தை சொல்லி முடிக்கிறார். அடுத்து ஜமீல் என்ற இஸ்லாமியரின் அனுபவத்தை பகிரும்போது அவர் பெயர் சொல்லப்படாமல் நேரிடையாக தனது அனுபவத்தை சொல்ல வைக்கப்படுகிறார். ஜமீல் என்ற இஸ்லாமியரின் பெயரை சாமர்த்தியமாக எடிட் செய்து ஒளிபரப்புகிறார்கள். காப்பாற்றியவர் ஒரு இஸ்லாமியர் என்பது மற்றவர்களுக்கு தெரிந்து விடக் கூடாது என்பதில் மிக கவனமாக இருக்கிறார்கள். நேற்றைய சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியை பார்த்தவர்களுக்கு இது தெரிந்திருக்கும். இது தற்செயலாக எடிட் ஆனதா? அல்லது இஸ்லாமியரின் பெயர் வெளியில் தெரிந்து விடக் கூடாது என்பதற்காக திட்டமிட்டு எடிட் செய்யப்பட்டதா? என்பதை இறைவனே அறிவான்.
விஜய் டிவி மறைத்தால் என்ன? நம்மிடம்தான் 'முகநூல்' என்ற அருமையான ஊடகம் உள்ளதே... அதன் மூலம் மக்களிடம் உண்மையை எடுத்து வைப்போம்.
Friday, December 18, 2015
மனித நேயப் பணி என்பது இதுதான்!
'எங்களின் வாழ்நாளில் முஸ்லிம்கள் செய்த இந்த உதவியை மறக்கவே மாட்டோம். தண்ணீரைப் பார்த்து என்ன செய்வதென்று பயந்து போய் இரு...
Posted by Nazeer Ahamed on Friday, December 18, 2015
'எங்களின் வாழ்நாளில் முஸ்லிம்கள் செய்த இந்த உதவியை மறக்கவே மாட்டோம். தண்ணீரைப் பார்த்து என்ன செய்வதென்று பயந்து போய் இருந்த போது எங்கிருந்தோ வந்த முஸ்லிம்கள் தங்கள் தோள்களைக் கொடுத்து நாங்கள் கீழே இறங்க உதவினார்கள்.'
Tuesday, December 15, 2015
சமீபத்தில் பெய்த மழை இறைவன் அளித்த தண்டனை : இளையராஜா

சமீபத்தில் பெய்த மழை இறைவன் அளித்த தண்டனை. இதை நான் மட்டும்தான் சொல்ல முடியும் என்று இசையமைப்பாளர் இளையராஜா கூறியுள்ளார்.
தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனத்தை (பெப்சி) சேர்ந்த உறுப்பினர்களுக்கு வெள்ள நிவாரண உதவி வழங்கும் நிகழ்ச்சி இன்று சென்னையில் நடந்தது. இதில் தயாரிப்பாளர் சங்கத் தலைவர் தாணு, பெப்சி தலைவர் சிவா, இசையமைப்பாளர் இளையராஜா உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
இந்நிகழ்ச்சியில் தயாரிப்பாளர் சங்கம் சார்பில் 1000 மூட்டை அரிசியும், ஃபிலிம் சேம்பர் சார்பில் ரூ.5 லட்சம் மதிப்புள்ள நிவாரணப் பொருட்களும், ஏ.ஆர்.ரஹ்மான் 2000 மூட்டை அரிசியும், இளையராஜா 5000 போர்வைகளும், நடிகர் சங்கம் சார்பில் 4,500 லிட்டர் எண்ணெய் ஆகியவை வழங்கப்பட்டன.
இதில் இளையராஜா பேசியதாவது:
இங்கே கொடுப்பதும் வாங்குவதும் சினிமா கலைஞர்கள்தான். இங்கு விளம்பரம் கிடையாது.சமீபத்தில் பெய்த மழை இறைவன் அளித்த தண்டனை. இதை நான் மட்டும்தான் சொல்ல முடியும்.
மனிதன் எங்கேயோ எதுவோ தவறு செய்திருக்கிறான். இறைவன் நினைத்திருந்தால் சுனாமி போன்ற பேரழிவைக் கொடுத்திருக்கலாம். ஆனால், ஐம்பூதங்களில் ஒன்றான நீர் மூலம் கஷ்டப்படுத்தி இருக்கிறான். ஆனால், இந்த மழைதான் மனிதநேயத்தை வளர்த்திருக்கிறது.
பெரிய பணக்காரர்கள் எல்லாம் பிரெட் வாங்க கஷ்டப்படும்போது, பக்கத்து வீட்டுக்காரர்களும் பசியோடு இருக்கிறார்கள் என்று அவர்களுக்கும் சேர்த்து பிரெட் வாங்கியிருக்கிறார்கள். பிறருக்கு கொடுத்து உதவும் எண்ணத்தை இந்த மழை வளர்த்திருக்கிறது.
இவ்வாறு இளையராஜா பேசினார்.
தகவல் உதவி
தமிழ் இந்து நாளிதழ்
16-12-2015
Saturday, December 12, 2015
40 இடங்களில் ரத்ததான முகாம் நடத்திய ரஷ்ய முஸ்லிம்கள்!

இன்று டிசம்பர் 12 ந்தேதி ரஷ்யாவில் கிட்டத்தட்ட 40 இடங்களில் ரத்த தான முகாமை ரஷ்ய முஸ்லிம்கள் நடத்திக் காட்டியுள்ளனர். கிறிஸ்துமஸ் விடுமுறை நாட்களை மனித நேயப் பணியில் செலவிட முனைந்திருக்கும் இவர்களின் பணியை இறைவன் பொருந்திக் கொள்வானாக!
தகவல் உதவி
Revert To Islam
12-12-2014
Friday, December 11, 2015
வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்ட மாணவன் விஷ பூச்சி கடித்து உயிரிழந்த பரிதாபம்!

விகடன் செய்தி : 12.12.15
வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்ட மாணவன் விஷ பூச்சி கடித்து உயிரிழந்த பரிதாபம்!
சென்னையில் மழை வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்ட மாணவன் விஷ பூச்சி கடித்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை திருவொற்றியூர் தியாகராயபுரத்தில் வசித்து வருபவர் ஜாபர். இவரது மகன் இம்ரான் (17). இவர் புதுவண்ணாரப்பேட்டையில் உள்ள மாநகராட்சி பள்ளியில் பிளஸ்1 படித்து வந்தார். விடுமுறை நாட்களில் தனது தந்தையுடன் சேர்ந்து வீடு வீடாக தண்ணீர் கேன் போட்டு வந்துள்ளார்.
கடந்த 2ஆம் தேதி சென்னையில் பெய்த கனமழையால் நகரங்களில் உள்ள பல பகுதிகள் வெள்ளத்தில் மிதந்தது. இதில் தாங்கல் பகுதியும் தப்பவில்லை. வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்கும் முயற்சியில் இம்ரான் உள்ளிட்டவர்கள் களம் இறங்கினர். ஒவ்வொருவராக மீட்கும் முயற்சியில் அவர்கள் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.
அப்போது, மீட்பு பணியில் இருந்த இம்ரானை விஷ பூச்சி ஒன்று கடித்து விட்டது. வலி தாங்க முடியாமல் அவதிப்பட்ட இம்ரானை உடனடியாக அங்கிருந்தவர்கள் தனியார் மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். பின்னர், கை, கால்கள் செயல் இழந்த நிலையில் ஸ்டான்லி மருத்துவமனையில் இம்ரான் அனுமதிக்கப்பட்டார்.
தொடர்ந்து நான்கு நாள் சிகிச்சைக்கு பின்னர், இம்ரான் இன்று அதிகாலை 4.30 மணிக்கு உயிரிழந்தார்.
தன்னுயிரையும் பணயம் வைத்து வெள்ள மீட்பில் ஈடுபட்ட மாணவன் விஷ பூச்சி கடித்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
உலகில் மனிதம் இன்னும் செத்து விடவில்லை!
உலகில் மனிதம் இன்னும் செத்து விடவில்லை!
இதுவரை ஊடகங்களிலும் சமூக ஊடகங்களிலும் வெளிவராத தியாகம் அடுத்த நபருடையது. நண்பர் சொன்ன தகவல்.
சாலையை மூழ்கடித்த வெள்ளத்தில் காரில் அவர் போய்க்கொண்டி ருந்தபோது ஒரு முஸ்லீம் பெரியவர் நடுச் சாலையில் கையில் ஒரு செடியைப் பிடித்துக்கொண்டு நின்றிருக்கிறார். இறங்கி என்னவென்று விசாரித்த அந்த நண்பருக்குக் கண்கலங்கிவிட்டது.
சாலையின் அந்த இடத்தில் ஒரு குழி ஏற்பட்டுவிட்டது என்றும், யாரும் அதற்குள் விழுந்துவிடக் கூடாது என்பதால் அடையாளத் துக்காகச் செடியைப் பிடித்துக்கொண்டு நிற்கிறேன் என்றும் அந்த முஸ்லீம் பெரியவர் சொல்லியிருக்கிறார். ஊன்றிவிட்டு நீங்கள் போயிருக்கலாமே என்று நண்பர் கேட்டதற்கு, ஓடும் நீரில் செடி நிற்க மாட்டேன் என்கிறது, அதனால்தான் அதைப் பிடித்துக்கொண்டு நிற்கிறேன் என்று அந்த முஸ்லீம் பெரியவர் சொல்லியிருக்கிறார். அதுமட்டுமல்ல நண்பர்களே, அடுத்து வரும் விஷயம் தான் நம்மை மிக மிக அற்பர்களாகவும், அந்த முஸ்லீம் பெரியவரை மகாத்மாவாகவும் ஆக்குகிறது.
நண்பரிடம் அந்தப் பெரியவர் இப்படிச் சொல்லியிருக்கிறார், ‘கடந்த நான்கு மணி நேரமா நான் இப்படி நின்னுக்கிட்டிருக்கேன். யாராச்சும் பார்த்துக்குவாங்கனு அப்படியே விட்டுட்டுப் போவ மனசே வரல.”
தகவல் உதவி
தமிழ் இந்து நாளிதழ்
12-12-2015
தேச பக்தி என்பது இதுதான்!
இதுவரை ஊடகங்களிலும் சமூக ஊடகங்களிலும் வெளிவராத தியாகம் அடுத்த நபருடையது. நண்பர் சொன்ன தகவல்.
சாலையை மூழ்கடித்த வெள்ளத்தில் காரில் அவர் போய்க்கொண்டி ருந்தபோது ஒரு முஸ்லீம் பெரியவர் நடுச் சாலையில் கையில் ஒரு செடியைப் பிடித்துக்கொண்டு நின்றிருக்கிறார். இறங்கி என்னவென்று விசாரித்த அந்த நண்பருக்குக் கண்கலங்கிவிட்டது.
சாலையின் அந்த இடத்தில் ஒரு குழி ஏற்பட்டுவிட்டது என்றும், யாரும் அதற்குள் விழுந்துவிடக் கூடாது என்பதால் அடையாளத் துக்காகச் செடியைப் பிடித்துக்கொண்டு நிற்கிறேன் என்றும் அந்த முஸ்லீம் பெரியவர் சொல்லியிருக்கிறார். ஊன்றிவிட்டு நீங்கள் போயிருக்கலாமே என்று நண்பர் கேட்டதற்கு, ஓடும் நீரில் செடி நிற்க மாட்டேன் என்கிறது, அதனால்தான் அதைப் பிடித்துக்கொண்டு நிற்கிறேன் என்று அந்த முஸ்லீம் பெரியவர் சொல்லியிருக்கிறார். அதுமட்டுமல்ல நண்பர்களே, அடுத்து வரும் விஷயம் தான் நம்மை மிக மிக அற்பர்களாகவும், அந்த முஸ்லீம் பெரியவரை மகாத்மாவாகவும் ஆக்குகிறது.
நண்பரிடம் அந்தப் பெரியவர் இப்படிச் சொல்லியிருக்கிறார், ‘கடந்த நான்கு மணி நேரமா நான் இப்படி நின்னுக்கிட்டிருக்கேன். யாராச்சும் பார்த்துக்குவாங்கனு அப்படியே விட்டுட்டுப் போவ மனசே வரல.”
தகவல் உதவி
தமிழ் இந்து நாளிதழ்
12-12-2015
தேச பக்தி என்பது இதுதான்!
சகோதரி செல்வ ராணிக்கு எமது மனமார்ந்த நன்றிகள்!
'அலிகர் முஸ்லிம் யுனிவர்ஸிடி' சென்னைக்கு மருத்துவ குழுவை அனுப்புகிறது!


மருத்துவர்கள் அடங்கிய ஒரு குழுவை அலிகர் முஸ்லிம் யுனிவர்ஸிடி சென்னையில் மனிதாபிமான அடிப்படையில் சேவைகள் செய்ய அனுப்புகிறது. இதற்கு முன்பும் நேபாள், காஷ்மீர், உத்தரகாண்ட், முஜா.பர் நகர் போன்ற பாதிப்புக்கு உள்ளான பகுதிகளுக்கு தனது மருத்துவ குழுவை அனுப்பி மகத்தான சேவை செய்துள்ளது இந்த பல்கலைக் கழகம்.
தகவல் உதவி
மில்லி கெஜட்
A team of Doctors from Aligarh Muslim University will leave for Chennai Flood Hit areas to serve humanity.
it's the only university which send it teams in Such Natural Disasters.
Earlier team went to serve Nepal Earthquake Victims, Kashmir Flood Victims, MuzaffarNagar Communal Riots, Uttarakhand Flood Victims.
Regards
Team #SOCH
Dr Kashif Razi (+919412562870)
Dr Danish Suhail (+919997665436)
தென்சென்னை சைதாப்பேட்டையில் மருத்துவ முகாம்:
'அனுமன் சேனா' உறுப்பினர் பாலிமர் டிவிக்கு மிரட்டல்!


உண்மையை உரத்துச் சொன்னால் அது அரை டிரவுசர்களுக்கு கிலியை ஏற்படுத்தும் என்பதற்கு இந்த கிறுக்கனின் பதிவும் ஒரு சான்று.
மற்ற இயக்கத்தவர் ஏதும் செய்யவில்லை என்று பாலிமர் செய்தி எங்கும் சொல்லவில்லை. எல்லா அமைப்புகளையும் சொல்லி அதில் முஸ்லிம்களையும் இணைத்துக் கொண்டது. அதற்கே பொறுக்கவில்லை இந்த அரை டிரவுசருக்கு!
Subscribe to:
Posts (Atom)








