Followers

Sunday, October 12, 2014

மரம் செடி கொடிகளை மனிதனால் உருவாக்க முடியுமா?

நிச்சயமாக இறைவன்தான், வித்துகளையும, கொட்டைகளையும் வெடித்து முளைக்கச் செய்கிறான்; இறந்தவற்றிலிருந்து உயிருள்ளவற்றை வெளிப்படுத்துகிறான், உயிருள்ளவற்றிலிருந்து இறந்தவற்றையும் அவனே வெளிப்படுத்துகிறான்; அவனே உங்கள் இறைவன்- எப்படி நீங்கள் திசை திருப்பப்படுகிறீர்கள்?
-குர்ஆன் 6:95

“உங்களுக்கு வானத்திலிருந்தும், பூமியிலிருந்தும் உணவளிப்பவன் யார்? உங்கள் செவிப்புலன் மீதும், உங்கள் பார்வைகளின் மீதும் சக்தியுடையவன் யார்? இறந்தவற்றிலிருந்து உயிருள்ளவற்றையும், உயிருள்ளவற்றிலிருந்து இறந்தவற்றையும் வெளிப்படுத்துபவன் யார்? அகிலங்களின் அனைத்துக் காரியங்களையும் திட்டமிட்டுச் செயல்படுத்துபவன் யார்?” என்று நபியே! நீர் கேளும். உடனே அவர்கள் “இறைவன்” என பதிலளிப்பார்கள்; “அவ்வாறாயின் அவனிடம் நீங்கள் பயபக்தியுடன் இருக்க வேண்டாமா?” என்று நீர் கேட்பீராக.
-குர்ஆன் 10:31

'நீங்கள் மூட்டுகிற நெருப்பைப் பற்றி சிந்தித்தீர்களா? அதற்குரிய மரத்தை நீங்கள் உருவாக்கினீர்களா? அல்லது நாம் உருவாக்கினோமா?'
-குர்ஆன் 56:71,72


இந்த மூன்று வசனங்களையும் ஒரு மனிதன் ஆழ்ந்து சிந்தித்தான் என்றால் இறைவனின் ஆளுமையை உணரத் தொடங்கி விடுவான். நாம் பார்க்கும் விதைகள் அனைத்தும் கிட்டத் தட்ட இறப்பு நிலைக்கே சென்று விடுகிறது. பல மாதங்கள்: பல வருடங்கள் கழித்து நீங்கள் ஒரு விதையை பூமியில் போட்டு சிறிது தண்ணீரை ஊற்றினால் நிலத்தை பிளந்து கொண்டு செடிகளாகி பின்னர் மரங்கள் வெளியாவதை நாம் பார்ப்போம். இது எவ்வாறு சாத்தியமாகிறது? இத்தனை நாளும் சூரிய ஒளி கூட படாது இருட்டறையிலே இருந்த இந்த விதைக்கு எவ்வாறு உயிர் வந்தது? யார் கொடுத்தது? என்றாவது சிந்தித்திருக்கிறோமா?
அடுத்து மரங்களின் கட்டுமான பொருட்களில் பிரதானமானது லிக்னோ செல்லுலோஸ் என்ற வேதிப் பொருளாகும். லிக்னைனும் மற்றும் மரத்துக்கு கடினத் தன்மை கொடுக்க செல்லுலோஸ் என்ற பொருளும் சேர்ந்து கலவையாக மரங்கள் பரிணாமம் அடைகின்றன. வேதியியல் பாஷையில் சொல்வதாக இருந்தால் மரம் என்பது 50 சதவீதம் செல்லுலோசாலும், 25 சதவீதம் ஹெமி செல்லுலோசாலும், 25 சதவீதம் லிக்னைனாலும் உருவாக்கப்பட்டுள்ளது. ஹைட்ரஜனும் ஆக்சிஜனும் கார்பனும் கலந்த கலவைகளே நாம் மேலே பார்த்த தனிமங்கள். ஹைட்ரஜனும் ஆக்சிஜனும் கார்பனும் வளி மண்டலத்தில் மிகவும் கணக்கிலடங்காமல் பரந்து கிடப்பதை நாம் அறிவோம். இந்த மூன்றும் சேர்ந்துதான் லிக்னோ செல்லுலோஸ் என்ற பொருளை உருவாக்குகிறது. இந்த பொருள்தான் மரங்கள் விரிந்து படரக் காரணமாக அமைகிறது. ஆச்சரியமாக அறிவியல் அறிஞர்கள் லிக்னோ செல்லுலோஸை செயற்கையாக உருவாக்க பலமுறை முயன்றும் தோல்வியையே தழுவியுள்ளனர். இவ்வளவுக்கும் நமது வளி மண்டலத்தில் ஆக்சிஜனும், ஹைட்ரஜனும், கார்பனும் கணக்கிலடங்காமல் கிடைத்தும் அறிவியல் அறிஞர்களால் செயற்கையாக உருவாக்க முடியவில்லை.நம்மைச் சுற்றியுள்ள அத்தனை மரங்களும் பல மில்லியன் வருடங்களாக ஆக்சிஜன், கார்பன், தண்ணீர், சூரிய ஒளி போன்ற கலவைகளினால் கூட்டுத் தயாரிப்பாக தயாரிக்கப்பட்டு நம் கண் முன் காட்சியளித்துக் கொண்டிருக்கிறது. ஹைட்ரஜன் இரண்டு பங்கும் ஆக்சிஜன் ஒரு பங்கும் கலந்த கலவையான தண்ணீரை ஊற்றி நாம் மரத்தை வளர்க்கிறோம். நெருப்பை அணைக்கும் தண்ணீரை ஊற்றி நெருப்பால் எரிக்கப்படும் மரத்தை வளர்க்கின்றோம். இது ஒரு முரண்பாடான நிகழ்வு அல்லவா? இது எவ்வாறு சாத்தியமாகிறது? இறைவன் நாடினால் எதுவும் முடியும் என்பதற்கு இதுவும் ஒரு எடுத்துக் காட்டு.

36:33. அன்றியம், இறந்து தரிசாகக் கிடக்கும் பூமி அவர்களுக்கு ஓர் அத்தாட்சியாகும்; பின்னர் மழையினால் அதனை நாமே உயிர்ப்பித்து, அதிலிருந்து தானியத்தை வெளிப்படுத்துகின்றோம்; அதிலிருந்துதான் இவர்கள் உண்கிறார்கள்.

36:34. மேலும், அதில் நாம் பேரீத்த மரங்களினாலும், திராட்சை(க் கொடி)களினாலும் தோட்டங்களை உண்டாக்குகிறோம்; இன்னும் அதில் நீரூற்றுக்களைப் பீறிட்டு ஓடச்செய்கின்றோம்.

36:35. அதன் பழவகைகளை அவர்கள் உண்பதற்காக; ஆனால் அவர்களுடைய கைகள் இதை உண்டாக்கவில்லை - ஆகவே அவர்கள் நன்றி செலுத்தமாட்டார்களா?இந்த மரங்கள் எவ்வாறு உருவாகின்றது? இதன் செல்கள் எப்படி பரிணமிக்கின்றன? என்று ஆராய்ந்து சோர்ந்து போய் உள்ளனர் நமது விஞ்ஞானிகள். இது வரை நடந்த ஆராய்ச்சிகளில் எந்த முடிவும் இறுதியாக இதுவரை எட்டப்படவில்லை.

காடுகளைப் பற்றி ஆராய்ந்து வரும் ஒரு பிரிட்டன் நிறுவனம் 'மரம் கொடிகளைப் பற்றிய பல அரிய தகவல்கள் இன்று வரை நமக்கு அரிதாகவே கிடைத்து வருகிறது' என்கிறது.

Despite the knowledge resulting from earlier and ongoing research, there still exists a lack of information on the chemistry and structure of wood fibres. Large variations can be found within a single tree, from the pith to the bark and from the base to the top of a tree. Often the chemistry and structure of a wood cell are extremely heterogeneous and difficult to investigate with conventional techniques.2

A paper in the scientific journal Plant Physiology titled "Our Understanding of How Wood Develops is not Complete" describes the limited knowledge of the subject that scientists possess:

Considering the important role that wood is foreseen to play in the near future, it is surprising to see that our understanding of how wood develops is far from complete. With a few exceptions, very little is known about the cellular, molecular, and developmental processes that underlie wood formation. Xylogenesis represents an example of cell differentiation in an exceptionally complex form. This process is controlled by a wide variety of factors both exogenous (photoperiod and temperature) and endogenous (phytohormones) and by interaction between them. It is driven by the coordinated expression of numerous structural genes (some of known function) involved in cell origination, differentiation, programmed cell death, and heartwood (HW) formation and by virtually unknown regulatory genes orches trating this ordered developmental sequence. The presence of gene families and the extreme plasticity of the metabolism involved (as exemplified by the unusual behavior of plants with transformed cell walls; for review, see Fagard et al., 2000) add a further complexity to our understanding of the process of wood formation.3
The extraordinary creation in wood is emphasized thus in another scientific journal, Annals of Botany:
Wood formation is a highly complicated process involving an unbelievable variety of metabolic steps in the roots, stem and crown of shrubs and trees. At the centre of these processes is cambial activity which results in the release of young woody cells that undergo maturation until autolysis of the protoplast, indicating the final developmental stage. Later on, in various tree species, woody cells become further modified by an additional process called heartwood formation. The properties of wood that make it an appropriate raw material for many purposes are largely determined by the specific architecture of the cell walls. Difficulties in investigating these many developmental stages appear when routine techniques, which work well for soft plant tissues, are applied. Therefore, in most cases, these techniques need modification or the use of completely revised protocols to yield good results for woody tissues.4
In terms of absorbing the energy of low-speed blows and reducing the damage therefrom, wood is a most important material. The Second World War plane known as the “Mosquito” was made by compressing wood between strips of fiber board, making it the most damage-resistant plane of its time. The hardness and resistant nature of wood make it a very reliable material. Because wood breaks or cracks slowly enough to be visible from the outside, and that gives people enough time to take the necessary precautions .5


7.As seen in the picture to the left, wood consists of tube or straw-shaped cells. By combining one on top of the other, these cells, which make up the roots and trunks of plants, serve as channels that carry water and minerals right through the plant. This tisue, known as “xylem,” also constitutes a powerful structure that enables the plant to remain upright. To the right can be seen a slice of dry wood in cross-section. When dried out, the tube-like channels become hollow, as shown in the illustration.

The iron concentration inside plant cells is 1,000 times greater than that in the soil outside.8 Under normal condition, an exchange of matter from a high density region to a lower density one will take place. But exactly the opposite happens in plant roots, and the ions in the soil are easily able to pass into the root cells.9

Photosynthesis: The Superior Technology in a Miniature Factory
It is not only the wood and root parts of trees that cannot be obtained by artificial means, but also the leaves. Most important of the features that make leaves inimitable is their ability to make photosynthesis. Photosynthesis, one of the systems that scientists still do not fully understand, may be summarized as plants manufacturing their own nutrients. Thanks to the structure in plant cells that makes them able to make direct use of solar energy, they store solar energy, at the end of various complex processes, in the form of energy that can be used by human beings and animals. In addition, the photosynthetic energy stored in trees is also given off during burning. For example, the energy emitted by wood burned to heat a house is actually energy from the Sun stored during the formation of wood.10


1 http://www.forestpathology.org/wood.html; Wood Chemistry and Anatomy, 2005.
2 http://www.forestresearch.gov.uk/fr/INFD-6FMCUS; The Research Agency of the Forestry Commission, 2007.
3 Christophe Plomion, Gregoire Leprovost, Alexia Stokes, "Wood Formation in Trees", Plant Physiology, December 2001, Vol. 127, pp. 1513–1523.
4 Uwe Schmitt, "Chaffey, N.J. ed. Wood formation in trees—cell and molecular biology techniques", Annals of Botany, 2002, Vol. 90, no. 4, pp. 545-546.
5 Julian Vincent, "Tricks of Nature", New Scientist, 17 August 1996, Vol. 151, no. 2043, p. 39.
6 Julian Vincent, "Tricks of Nature", New Scientist, 17 August 1996, Vol. 151, no. 2043, p. 40.
7 http://www.smddrums.com/woodcell.htm
8 Malcolm Wilkins, Plantwatching, Facts on File Publications, New York, 1988, p. 119.
9 William K. Purves, Gordon H. Orions, H. Craig Heller, Life, The Science of Biology, 4th edition, W.H. Freeman and Company, p. 724.
10 http://www.montana.edu/wwwpb/pubs/mt8405.html; Michael Vogel, "Heating with Wood: Principles of Combustion", 2003.


4 comments:

UNMAIKAL said...

அரசமரத்தின் வேர் பகுதியில் பிரம்மனும், நடுவில் திருமாலும், உச்சியில் ஈசனும் அருள்புரிவதாக புராணங்கள் தெரிவிக்கின்றன

கருத்தரிக்க அரச மரத்தை சுற்றவேண்டும் என்றால் கருத்தடைக்கு எந்த மரத்தை சுற்றுவது?

பிழைக்கத் தெரிந்த ஆசாமி ஒருவர் அம்மணமாக இருக்கும் வேப்பமரத்துக்கு மஞ்சள் பாவாடை ஒன்றைக் கட்டினார். அதோடு விட்டுவிட்டால் விறுவிறுப்பு இருக்காதே மரத்தின் அடியில் இரண்டு செங்கற்களை நட்டு வைத்தார் அது மட்டும் போதுமா? மக்கள் பக்தி மயக்கத்தில் வந்து விழவேண்டுமே! என்ன செய்தார்? செங்கல்லில் குங்குமத்தைத் தடவினார்.

அந்த புத்திசாலி. ஒரு உண்டியலைக் கொண்டு வந்து வைத்தார். ஆம், இப்பொழுதுதான் தெய்வீகம், வழிபாடு, காணிக்கை என்பதான ஒரு சூழல். உண்டியல் நிரம்பி வழிந்தது.

ஒரு மாஸ்டர் திட்டம்; இந்த இடத்தில் கோயில் எழுப்பிடவேண்டும். அப்பொழுதுதானே பெருந்தொகை வசூல் வேட்டையில் இறங்க முடியும்?

வேப்ப மரத்தில் பால்?

அம்மன் ஆலய வேப்ப மரத்திலிருந்து பால் வடியும் அதிசயம்!

வரலாற்று சிறப்பு மிக்க முல்லைத்தீவு வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலயத்திலுள்ள வேப்பமரம் ஒன்றில் இருந்து அதிசயிக்கத்தக்க வகையில் நேற்று மாலையில் இருந்து பால் வடிகின்றது.

இவ்வாறு ஆலய மரத்தில் இருந்து பால் வடிகின்றமை அம்மனின் புதுமை எனக் கூறி இதனை பெருந்திரளான மக்கள் பார்வையிட்டு வருவதுடன் பக்திபரவசத்துடன் வழிபட்டும் வருகின்றனர்.

இதற்கு முன்புகூட இதுபோன்ற செய்திகள் வந்ததுண்டு. சென்னைத் தலைமைச் செயலகத்தின்முன் உள்ள ஒரு வேப்ப மரத்தில் இப்படித்தான் பால் வடிந்தது (1986 மார்ச்)

அப்பொழுதும் சென்னைப் பல்கலைக்கழகத்தின் தாவர இயல் பேராசிரியர் நாராயணசாமி அறிவியல் ரீதியாக இதன் குட்டை உடைத்துவிட்டார்.

வேப்ப மரத்தில் இப்படி பால் வடிவதற்கு எந்தவிதமான தெய்வீகக் காரணமும் அல்ல. இந்த மரத்தில் உள்ள மாவுச் சத்தை (ஸ்டார்ச்சை) வேப்பமர இலைகள் சர்க்கரையாக மாற்றுகின்றன. வேப்பமரப் பட்டையின் அடிப்பகுதியில் புளோயம் (Phloem) என்ற திசு இருக்கிறது. இந்தத் திசு வழியாக சர்க்கரையாக மாற்றப்பட்ட மாவுச் சத்து வரும்போது, அது பாலாக இனிக்கிறது. எல்லா வேப்ப மரத்திலும் இப்படி பால் வடிவதில்லை. இந்த மரத்தில் இந்தத் திசு பாதிக்கப்பட்ட காரணத்தால், இப்படிப் பாலாகக் கொட்டுகிறது. தேவையைவிட மரத்தில் உள்ள தண்ணீரின் அளவு அதிகமாகும்போது பட்டையின் அடிப்பகுதியில் உள்ள திசு பாதிக்கப்பட்டு, அதன் வழியாகப் பாலாகக் கொட்டுகிறது. மரத்தில் தண்ணீரின் அளவு குறையும்போது திசு அடைபட்டு, இனிப்புப் பால் வடிவதும் நின்று போகும்.
என்று விஞ்ஞான ரீதியாக விளக்கம் அளித்து 24 ஆண்டுகள் ஓடிவிட்டன. அதற்குப் பிறகும் மூடக் குப்பையைக் கிளறுகிறார்கள்- மக்களின் பணத்தைச் சுரண்டுகிறார்களே - சிந்திக்க-வேண்டாமா? பழமொழி ஒன்று உண்டு; கேழ்வரகில் நெய் வடிகிறது என்றால், கேட்பாருக்கு மதி எங்கே போச்சு?

UNMAIKAL said...

''வேப்ப மரம் கர்ப்பமா இருக்கு டோய்!'' - ஆனந்த விகடன் PART 1.

அனந்தநல்லூர் பரபர...
பிள்ளையார் பால் குடிக்கிறார்; அம்மன் படத்தில் இருந்து குங்குமம் கொட்டுகிறது; வேப்ப மரத்தில் பால் வடிகிறது... என்று எத்தனையோ எபிசோடுகளை பார்த்துவிட்ட நம் தமிழக மகாசனங்களுக்கு அடுத்த எபிசோட் தயார். இந்த முறை திரைக்கதை சாதாரணம் இல்லை; ரொம்பவே ஓவர். வேப்ப மரம் கர்ப்பமாக இருக்கிறது என்பதுதான் நாகை மாவட்டப் பரபரப்பு!

>>>> சொடுக்கி படம் பார்க்க<<<<

கருவுற்று இருக்கும் வேப்பமரத்தைப் பார்க்க தமிழகத்தின் பல பகுதிகளில் இருந்தும் வண்டிகளில் வந்து குவிகிறார்கள் மக்கள்.
மயிலாடுதுறையில் இருந்து திருவாரூர் செல்லும் சாலையில் இருக்கிறது மங்கைநல்லூர். அங்கு இருந்து இரண்டு கிலோ மீட்டர் தூரத்தில் இருக்கிறது அனந்தநல்லூர். ஊருக்கு ஒதுக்குபுறமாக பண்ணை வயல்காட்டில் இருக்கிற களத்தில் ஓங்கி உயர்ந்து நிற்கிறது ஓர் அரசமரம். அதோடு பின்னிப் பிணைந்து வளர்ந்து இருக்கிறது வேப்ப மரம் ஒன்று. அதுதான் கருவுற்ற வேப்ப மரமாம். வேரின் மேற்பகுதி சற்று உப்பலாக, பார்ப்பதற்கு மேடிட்ட வயிறு போலத் தெரிகிறது

>>>> சொடுக்கி படம் பார்க்க<<<

அந்த மரத்தைச் சுற்றிலும் சவுக்கு மரத் தடுப்புக் கட்டப்பட்டு இருக்கிறது. மனித நடமாட்டமே இல்லாமல் இருந்த அந்த இடத்தில் ஏகப்பட்ட திடீர்க் கடைகள். பூஜை சாமான்கள், மஞ்சள் கயிறு, வளையல், கருகமணி, எலுமிச்சை, மரத் தொட்டில்கள் என்று எல்லாமும் கிடைக்கிறது. குளிர் பானம், டீ, வடை, பஜ்ஜி என்று இன்னொரு பக்கம் பரபர விற்பனை. மரத்தின் தடுப்பைச் சுற்றிலும் ஏராளமான பெண்கள் காத்திருக்கிறார்கள். தடுப்பின் உள்ளே சில பெண்கள் உட்கார்ந்திருக்க... அவர்களில் ஒருவருக்குத் தலையில் கைவைத்து ஆசி வழங்கி, அவர் கொண்டுவந்திருந்த வளையல்களை அவருக்கே அணிவித்து, 'உனக்கு நிச்சயம் குழந்தை பாக்கியம் உண்டு. கவலைப்படாமல் போ’ என்கிறார் கோயிலின் இன்ஸ்டன்ட் பூசாரி கல்யாணி.

>>> சொடுக்கி படம் பார்க்க<<<

அடிமரத்தில் சிறிய மரத் தொட்டில்களும் வளையல்களும் தாலிக்கயிறுகளும் கட்டப்பட்டு, மஞ்சள் குங்குமம் பூசப்பட்டு, சிவப்பு மஞ்சள் துணிகளும் சுற்றப்பட்டு இருக்கிறது. அதற்கு அருகே ஒரு சூலம். தேங்காய், பழம், அர்ச்சனை தட்டோடு வருகிறவர்களுக்குத் தேங்காய் உடைத்து, சூடம் காட்டி, விபூதி, குங்குமம் தருகிறார் கல்யாணியின் கணவர் சரவணன். கல்யாணிக்கு உதவி செய்துகொண்டு இருக்கிறார் சரவணனின் தாய். எல்லாவற்றையும் மேற்பார்வை பார்த்துக்கொண்டு இருக்கிறார் சரவணனின் தந்தை. இப்படிக் குடும்பமே ஓடியாடி சாமியாடுகிறது.
- கரு.முத்து

SOURCE: http://en.vikatan.com/article.php?aid=23006
continued ....

UNMAIKAL said...

''வேப்ப மரம் கர்ப்பமா இருக்கு டோய்!'' - ஆனந்த விகடன் PART 2.

இதோ பூசாரி கல்யாணி பேட்டிக்கும் தயாராகி விட்டார். ஸ்டார் கேமரா... ''நாலு மாசத்துக்கு முன்னாடி என் கனவுல வயசான அம்மா ஒருத்தர் வந்தாங்க. 'எனக்கு வயிறு வலிக்குது... பால் வேணும்’னு கேட்டாங்க. ஆனா, அந்தம்மாவின் உருவம் முழுசா என் கண்ணுக்குத் தெரியலை. நானும் விரதம் இருந்து, கவனிக்க ஆரம்பிச்சேன். அப்போதான் அது என் கண்ணுக்குத் தெரிஞ்சுது. புள்ளதாச்சிப் பொம்பளையா இருந்துச்சு. 'எனக்குக் குழந்தை பொறக்கப் போவுது. வயிறு எல்லாம் வலிக்குது’னு அழுதுச்சு. 'எனக்கு யாரும் பால் தரலை. அதனால பால்காரன் ஒருத்தனைப் பலி வாங்கப்போறேன்’னு சொன்னுச்சு. நான் பால் கொடுக்கலாம்னு நினைச்சா, அந்தக் காட்சி மறைஞ்சிடுச்சு.

அது சொன்ன மாதிரியே மூணு நாள்ல எங்க ஊர் பால்காரர் ஒருத்தர் விபத்துல செத்துட்டார். எதிர்காலத்துல நடக்க இருந்த விபரீதங்களைத் தடுக்க முடிவு செஞ்சேன். உலகத்தை காக்கிறது நம்ம கடமை இல்லைங்களா... கடும் தவம் இருந்தேன். சோறு, தண்ணி பார்க்கலை. மூடின கண்ணைத் தொறக்கலை. என்னை சுத்தி இயங்குற இந்த உலகமே எனக்கு மறந்து போச்சு. நான் வேற ஒரு உலகத்துக்குப் போயிட்டேன். அங்கே போய் பார்த்தா ஆதி பராசக்தியில இருந்து கருமாரி அம்மா வரைக்கும் ஏகப்பட்ட அம்மன்கள் உலாவினாங்க. அவங்க எல்லார்கிட்டயும் காலில் விழுந்து ஆசி வாங்கினேன். சில அம்மன்கள் என்னை அப்படியே வாரி எடுத்து அணைச்சிக்கிட்டாங்க.

தவத்துல இருந்து வெளியே வந்தேன். அன்னிக்கு ராத்திரி திரும்பவும் கனவில அவங்க இருக்கிற இடத்தைக் காண்பிச்சாங்க. அந்த இடத்தைப் பார்த்தா அரசும் வேம்பும் பின்னி இருந்துச்சு. இங்கே தினமும் வந்து பூஜை செய்ய ஆரம்பிச்சேன். நடந்ததை எல்லாம் கேள்விப்பட்டு எங்க ஊர் மக்கள் இங்கே வர ஆரம்பிச்சாங்க. சாமியாக் கும்பிட ஆரம்பிச்சுட்டாங்க'' மரத்தில் சாமி தோன்றிய கதையைச் சொல்லி முடித்தார் கல்யாணி.

>>> சொடுக்கி படம் பார்க்க<<<

''கருவுற்ற வேம்பு எப்படி இருக்கிறது?'' என்று ஆர்வத்தோடு நான் கேட்க... ''ரெட்டைக் குழந்தை பிறந்திருக்கு'' என்று வேப்ப மரத்தில் புதிதாக முளைத்து இருக்கும் இரண்டு சிறிய கிளைகளைக் காண்பித்தார். பிள்ளைகள் பிறந்தும் வேப்ப மரத்தின் வயிறு அப்படியேதான் இருக்கிறது. ''பிள்ளை இல்லாதவர்கள் இங்கே வந்து வழிபட்டு வளையல் போட்டுக்கொண்டு போனால், நிச்சயம் குழந்தை பிறக்கும். கல்யாணம் ஆகாதவர்கள் வந்து வழிபட்டால், உடனே கல்யாணம் ஆகும்'' என்று சிறப்புகளையும் பட்டியலிட்டார்.

ஆட்டோ, வேன் என்று மங்கைநல்லூரில் இருந்து சிறப்பு போக்குவரத்து தொடங்கி இருக்கிறது. நாகப்பட்டினத்தில் இருந்து வளர்மதி, சிதம்பரத்தில் இருந்து சாந்தி, திருவாரூரில் இருந்து கவிதா என வெளியூர் பக்தர்களிடம் பேசினால், ''இங்கே வேம்பு கருவுற்று இருக்குது. வந்து கும்பிட்டா நல்லதுனு ஒருத்தங்க சொன்னாங்க. அதான் வந்தோம்'' என்கிறார்கள்.

''எங்க தாத்தா, அப்பா காலத்துல இருந்தே இந்த மரம் இப்படித்தான் இருக்கு. ஆனா, இப்பதான் இவங்க இங்க சாமி இருக்கிறதாச் சொல்லி கும்பிட ஆரம்பிச்சு இருக்காங்க. மக்களும் வர்றாங்க. இதைச் சாக்கா வெச்சு இதுவரை எந்த அடிப்படை வசதியும் இல்லாத இந்த ஊருக்கு ஏதாவது நல்லது நடந்தா சரிதான்'' என்கிறார் ஊரைச் சேர்ந்த இளைஞர் கலையரசன்.
மரத்தை கர்ப்பிணி ஆக்கி, அதைச் சாமியாகவும் மாற்றி வசூலை ஆரம்பித்து இருக்கிறார்கள். அதையும் நம்பி கூட்டம் வருகிறது. உஸ்... முடியலை!
- கரு.முத்து

SOURCE: http://en.vikatan.com/article.php?aid=23006

k.rahman said...

welcome back supi