Followers

Friday, October 31, 2014

கணவன் மனைவி விஷயத்தில் அல்லா ஏன் வரணும்?

திரு சாரங்க்!

//சல்லவர்கலுக்கும் அவரது பொண்டாட்டிமார்களுக்கும் ஊடே இருக்கும் இரவு நேரத்து பிரச்சனையில் அல்லா மூக்கை நோழைத்து எதற்கு குர்ஆனில் வசனம் வைக்க வேணும். இதனால மானிடனுக்கு என்ன லாபம்
புருஷன் இறந்துவிட்டால் எத்தனை மாதங்களுக்கு அவனது மனைவி மார்கள் உறவு வைத்துக் கொள்ளக் கூடாது என்பதை குர்ஆனில் எழுதி என்னத்தை அல்லா சாதித்துள்ளார்//

இதனால் சாதித்தது பல இருந்தாலும் எனக்கு தெரிந்த ஒன்றிரண்டை சொல்கிறேன். விவாகரத்து பண்ணிய மறு வாரமே ஒரு பெண் மறுமணம் புரிந்தால் அந்த நேரத்தில் அந்த பெண்ணுக்கு ஏதும் குழந்தை வயிற்றில் தங்கியிருந்தால் அதற்கு யார் சார் பொறுப்பு? கணவன்மார்கள் இருவருமே எனது குழந்தை இல்லை என்று வாதிட்டால் அந்த குழந்தையின் எதிர்காலம் என்னாவது? அவன் அனாதையாக திரிய வேண்டும் என்று சொல்கிறீர்களா? அந்த குழந்தைக்கு சேர வேண்டிய வாரிசு சொத்துக்களும் கிடைக்காமல்லவா போய் விடும்? தந்தை பெயர் தெரியாமல் அனாதையாக தெரிவில் சுற்றித் திரியச் சொல்கிறீர்களா?

முக்காலத்தையும் உணர்ந்த நம்மைப்படைத்த இறைவனுக்கு பிற்காலத்தில் இது போன்ற சிக்கல்கள் எல்லாம் வரக் கூடாது என்பதற்காகத்தான் நமக்கான சட்டங்களை வகுத்துத் தந்துள்ளான். இந்த சட்டங்களை உலக முஸ்லிம்கள் சரியாக கடைபிடிப்பதால்தான் தகப்பன் பெயர் தெரியாத குழந்தைகளை இஸ்லாமிய நாடுகளில்நம்மால் பார்க்க முடிவதில்லை.

இந்த சட்டங்களை உதாசீனப்படுத்திய ஐரோப்பிய நாடுகளில் தாய் தகப்பன் யாரென்றே தெரியாத பெரும் இளைஞர்கள் கூட்டம் மன நோயாளிகளாக சுற்றி வருவதை நாம் தினமும் பார்க்கிறோம். சமூகத்தில் வெறுப்படைந்து கல்லூரிக்குள் புகுந்து சக மாணவர்களை சகட்டு மேனிக்கு துப்பாக்கியால் போட்டு தள்ளுவதும் இறை சட்டங்களை அந்த மாணவர்கள் தூரமாக்கியதால்தான்.

மேலும் இறைத் தூதர்களின் குடும்ப பிரச்னைகள் தாம்பத்திய பிரச்னைகள் பலவற்றில் மனித குலத்துக்கு பல சட்டங்களும் தீர்வுகளும் இன்று வரை கிடைத்து வருகின்றன. இதனால் பலனடைந்த கோடிக்கணக்கான இஸ்லாமியர்களைக் கேட்டுப் பாருங்கள் அதன் பலன் உங்களுக்குத் தெரிய வரும்.

நான் தற்போது கம்பெனி வேலையாக தபூக்கில் உள்ளேன். ரியாத் வந்தவுடன் இன்னும் விரிவாக விளக்க முயற்சிக்கிறேன் இறைவன் நாடினால்.

No comments: