Followers

Thursday, October 16, 2014

பாலஸ்தீன மக்களை உங்கள் அல்லாஹ் ஏன் காப்பாற்றவில்லை?

பாலஸ்தீன மக்களை உங்கள் அல்லாஹ் ஏன் காப்பாற்றவில்லை?

தங்கமணி!

//அது சரி, இதுவரை எந்த பாலஸ்தீனரும் பாதிப்படையவில்லையா? அல்லது எந்த பாலஸ்தீனரும் இறைவனிடம் பிரார்த்தனை செய்யவில்லையா? //

மனிதனுடைய வாழ்வானது இந்த உலகத்தோடு முடிந்து விட்டால் உங்களின் கேள்வி நியாயமானது. அநீதி இழைக்கப்பட்டவர்களின் பிரார்த்தனை இன்றில்லா விட்டாலும் என்றாவது நிறைவேறும். இவ்வுலகத்தில் நிறைவேறா விட்டாலும் மறு உலக வாழ்வில் கண்டிப்பாக தண்டனையை அனுபவிப்பான். ஒருவன் இருபது பேரை கொலை செய்திருப்பதாக வைத்துக் கொள்வோம். இந்த உலகில் தண்டனை கொடுத்தால் ஒரு முறைதான் அவனது உயிரை எடுக்க முடியும். ஆனால் நியாயத் தீர்ப்பு நாளில் இறைவன் முன்னால் தண்டிக்கப்பட்டால் அவன் கொன்ற அந்த இருபது பேருக்குமாக இருபது முறை உயிர் கொடுக்கப்பட்டு வேதனை செய்யப்பட்டு கொல்லப்படுவான். அதுதான் நியாயமாகவும் இருக்கும். உங்களைப் போன்றவர்களெல்லாம் பிற்காலத்தில் கேலி செய்வீர்கள் என்பதை இறைவன் அறிந்ததால் தனது திருமறையில் கூறுகிறான்.

ஏக இறைவனை மறுப்போருக்கு இவ்வுலக வாழ்க்கை அழகாக்கப்பட்டுள்ளது. அவர்கள் நம்பிக்கைக் கொண்டோரைக் கேலி செய்கின்றனர். இறைவனை அஞ்சியோர் நியாயத் தீர்ப்பு நாளில் அவர்களுக்கு மேலே இருப்பார்கள். இறைவன் நாடியோருக்கு கணக்கின்றி வழங்குகிறான்.

-குர்ஆன் 2:212

//அது சரி. ஏன் இந்த ஹதீஸ் குரானில் இல்லை? இதுவும் வானவர் ஜிப்ரீல் மூலமாகத்தானே தெரிந்திருக்க வேண்டும்?//

குர்ஆனில் இல்லை என்று யார் சொன்னது?
யாரேனும் ஜிப்ரீலுக்கு எதிரியாக இருந்தால் அது தவறாகும். ஏனெனில் அவரே இறைவனின் விருப்பப்படி இந்த குர்ஆனை முஹமதாகிய உமது உள்ளத்தில் இறக்கினார். ' இந்த குர்ஆனானது தனக்கு முன் சென்ற வேதங்களை உண்மைப்படுத்தக் கூடியதாகவும் நம்பிக்கைக் கொண்டோருக்கு நேர் வழியாகவும் நற்செய்தியாகவும் உள்ளது' என்று கூறுவீராக!

-குர்ஆன் 2:97
வானவர் ஜிப்ரீல் சம்பந்தமாக குர்ஆனில் வரும் வேறு வசனங்கள்:
16:102, 19:64, 26:193, 53:5

//அது சரி ஜிப்ரீல் மூலமாக சொன்னதற்கு என்ன ஆதாரம்? முகம்மது தன்னிடம் ஜிப்ரீல் சொன்னார் என்று அவரே சொல்லிகொண்டதை தவிர?//

குர்ஆனின் நம்பகத்தன்மைதான் பிரதானமான ஆதாரம். அறிவியல், வரலாறு, வானவியல் என்று பல துறைகளை குர்ஆன் தொட்டுச் செல்கிறது. ஆனால் இன்று வரை நிரூபணமாக்கப்பட்ட அறிவியல் உண்மைகள் குர்ஆனோடு மோதவில்லை. இது ஒன்றே போதும் இந்த குர்ஆனானது முகமது நபியின் கற்பனை அல்ல. உங்களையும் என்னையும் படைத்த ஏக இறைவனின் வார்த்தைதான்: இதில் எந்த சந்தேகமும் இல்லை. இதில் ஏதேனும் அறிவியல் குறைகளை கண்டுபிடிக்க நீங்களும்தான் முயற்சித்துப் பாருங்களேன். உங்கள் முயற்சியில் வெற்றிப் பெற்று விட்டால் உங்கள் பக்கம் நான் வந்து விடுகின்றேன். :-)


2 comments:

UNMAIKAL said...

இறை ஒன்று! இனம் ஒன்று! இடம் ஒன்று! PART 1.

இறை ஒன்று! இனம் ஒன்று! இடம் ஒன்று!

* பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்

* ஒன்றே குலம் ஒருவனே தேவன்

* உலகம் ஒரு குடும்பம் (வசுதைவ குடும்பகம்)

* சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் (Liberty, Equality and fraternity)

* ஜாதிகள் இல்லையடி பாப்பா

மனித குல சமத்துவம் குறித்து பல்வேறு கால கட்டங்களில் தெரிவிக்கப்பட்ட கருத்துகள் இவை. எல்லா மனிதர்களின் உள்ளங்களும் எளிதில் ஏற்றுக் கொள்ளும் ஒரு கொள்கையே சமத்துவம் எனும் கோட்பாடு. உள்ளம் உண்மையை உரைத்த போதிலும் செயலில் அதைக் காட்ட மனிதர்கள் தயாராக இல்லை. மனித குலம் ஒன்று என்பதை செயலளவில் வெளிப்படுத்தும் போது அவர்கள் பல வசதிகளையும் சலுகைகளையும் இழக்க வேண்டும். வாய்ப்புகளைப் பிறருடன் பகிர்ந்து கொள்ள வேண்டும். அடக்கி ஆள்வதற்கும் நசுக்குவதற்கும் ஆட்கள் கிடைக்காத நிலை உருவாகும்.

பேதம் ஒழிந்தால் பாதகமே என்று எண்ணி மனித குலசமத்துவத்தை எல்லா வகையிலும் எதிர்த்தே வந்திருக்கின்றார்கள். ஆதிக்காரர்கள் மட்டுமல்ல, ஒடுக்கப்பட்ட இனத்தினரும் கூட அவர்களுக்குள்ளேயே சில பிரிவினரை சிறுமைப்படுத்தி, இழிவுபடுத்தி, பேதங்களை வளர்த்துக் கொண்டிருக்கிறார்கள்.

தனது தோள்களின் மீது ஏறி நிற்பவர்களைப் பற்றி கவலைப்படாமல் தான் ஏறி நிற்பதற்கு ஒரு தோள் வேண்டும் என்பதில் உறுதியாக நிற்கின்றார்கள்.

ஒன்றே குலம் என்ற நிலையை உருவாக்க பல நூற்றாண்டுகளாய் (ஆயிரம் ஆண்டுகளாய்....?) முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. சமய வட்டத்திற்குள் நின்று சிலர் குரல் கொடுத்தனர். சிலர் சமயங்களை உதறித்தள்ளுவதே சமத்துவத்திற்கு வழிகோலும் என்றனர். இவர்களின் கடுமையான உழைப்பிற்குப் பின்னரும் பேத உணர்வுகள் நீடிக்கின்றன என்பது வேதனைக்குரியது.

சமூக அமைதிப் பயணத்தின் முதல் மைல்கல் சமத்துவமே. சமத்துவ உணர்வு இல்லாத சமூகத்தில் அமைதி என்பது ஓர் எட்டாக்கனி. எனவேதான் அமைதிமிக்க சமூகத்தை உருவாக்க விரும்பும் இஸ்லாம், மனித குல ஒருமைப்பாடு குறித்து ஓர் உறுதியான நிலையை எடுத்துள்ளது.

இறைவன் ஒருவனே என்ற கோட்பாட்டில் எவ்வித சமரசத்திற்கும் இடமின்றி எவ்வாறு உறுதியாக உள்ளதோ அது போன்றே ‘ஒன்றே குலம்’ என்பதிலும் அது உறுதியாக உள்ளது. ஏற்றத் தாழ்வை உருவாக்கும் அனைத்து வழிகளையும் அது அடைத்து விடுகின்றது. சமயக் கோட்பாடுகளின் சந்து பொந்துகளில் ஒளிந்துகொண்டு பேதம் வளர்க்கும் அனைத்து முயற்சிகளையும் அது முறியடித்து விடுகின்றது.

“படைப்புகள் அனைத்தும் இறைவனின் குடும்பம் ஆகும்” (நபிமொழி)

“கருப்பரை விட வெள்ளையரோ வெள்ளையரை விட கருப்பரோ சிறந்தவர்கள் அல்லர். அரேபியரை விட அரபி அல்லாதவரோ , அரபி அல்லாதவரை விட அரேபியரோ சிறந்தவர்கள் அல்லர். இறையச்சம் உடையவரே உங்களில் சிறந்தவர்” என்றார் நபிகள் நாயகம் அவர்கள்.

ஒரே இறைவனைத் தவிர வேறு எந்தக் கடவுளும் இல்லை. அவ்வாறு இருந்திருந்தால் ஒவ்வொரு கடவுளும் தன் படைப்புகளை அழைத்துக் கொண்டு தனியே சென்றிருப்பர். மேலும் ஒருவர் மற்றவரை விட மேலோங்க முனைந்து கொண்டிருப்பர் என்ற குர்ஆன் வசனம் (23 : 91) பல கடவுள் கோட்பாடு எவ்வாறு சமூகப் பிரிவினையை உருவாக்கும் என்பதை விளக்குகிறது.

1. நம் அனைவரையும் படைத்து பரிபாலிப்பது ஒரே இறைவன்;

2. நாம் அனைவரும் வணங்குவது அதே இறைவனையே;

3. நாம் அனைவரும் இறுதியில் மீளப்போவதும் அவனிடமே

எனும் உணர்வு மனித இனங்களை இணைக்கும் தன்மை உடையது.

மனித குல சமத்துவத்திற்கு இஸ்லாம் அளித்த அடுத்த அடிப்படை, மனித இனம் முழுமையும் ஓர் ஆண் பெண்ணின் வழித்தோன்றல்கள் தான்; எனவே அனைவரும் உடன்பிறப்புகள் என்பதாகும்.

“மனிதர்களே! நாம் உங்களை ஓர் ஆணிலிருந்தும் பெண்ணிலிருந்தும் படைத்தோம். பிறகு நீங்கள் ஒருவருக்கொருவர் அறிமுகமாகிக் கொள்ளும் பொருட்டு உங்களை சமூகங்களாகவும் கோத்திரங்களாகவும் அமைத்தோம். உண்மையில், உங்கள் இறைவனிடம் அதிக கண்ணியம் வாய்ந்தவர் உங்களில் அதிக இறையச்சம் கொண்டவர்தாம்.” (குர்ஆன் 49 : 13)

இந்த இறைவசனத்தில் மூன்று விஷயங்கள் கவனிக்கத் தகுந்தவை.

1. மனித இனம் ஓர் ஆண் பெண்ணிலிருந்தே தோன்றியது. எனவே அனைவரும் உடன் பிறப்புகள். சகோதரர்களுக்கிடையில் பிறப்பின் அடிப்படையில் பேதம் உண்டாக்க முடியாது என்பது வசனத்தின் முதல் பகுதியின் கருத்தாகும்.

மனித இனம் ஓர் ஆண் பெண்ணின் வழித்தோன்றல்களாகத்தான் இருக்க முடியும் என்பதை பகுத்தறிவு உடையோர் அனைவரும் ஏற்றுக் கொள்வர். இன்று உலகின் மக்கள் தொகை 600 கோடியாக உள்ளது. இதுவே சென்ற நூற்றாண்டின் தொடக்கத்தில் 150 கோடியாக இருந்தது. இப்படியே பின்னோக்கிச் சென்றால் மக்கள் தொகை சில லட்சங்களாக, ஆயிரங்களாக, நூறாக குறைந்து இறுதியில் இரண்டாக ஆகிவிடும்.

மனித இனம் ஓர் ஆண் பெண்ணின் வழித்தோன்றல் எனும் இந்த உண்மையை நோக்கி விஞ்ஞானமும் நகர்ந்து கொண்டிருக்கிறது.


Continued ....

Dr.Anburaj said...

ஆதாம்ஏவாள் கதை ஊகமானது.படைப்பு குறித்த அவன் கற்பனையாகும்.ஆதானம்ஏவாள் தம்பதிக்கு ஒரு மகன்கள்.ஆவேல் காயின் காயின் ஆபேலைக் கொன்று விட்டாா். மீதமிருப்பது தாய் கண்வன்-தந்தை- ஒரு மகன்.விசித்திரமானது.
இது ஒரு கட்டுக்கதை.தள்ளுபடி செய்ய வேண்டியது. பழைய ஏற்பாட்டில் இடம் பெற்றதற்கான சுமக்கத் தேவையில்லை