Followers

Thursday, October 16, 2014

தமிழன் ஏக இறைவனை வணங்கினானா?

தமிழன் ஏக இறைவனை வணங்கினானா?

திரு க்ருஷ்ணகுமார்!

//தமிழன் ஒரே கடவுளைத் தான் வழிபட்டான் என்று எப்படி கூசாது உங்களால் புளுக முடிகிறது. தமிழ்ச் சங்க நூற்கள் ஐவகை நிலமும் அந்த நிலத்தில் வழிபடும் கடவுட்கள் பற்றியும் கூறுவதை எப்படி நைசாக மறைத்து அல் தக்கியா செய்கிறீர்கள்.//

ஆதாரம் இல்லாமல் நான் எதனையும் எழுத மாட்டேன். சங்க இலக்கியங்களில் ஏக தெய்வக் கொள்கை பல இடங்களில் சொல்லப்பட்டுள்ளது. ஆதாரங்களை கீழே பாருங்கள்.

தனக்குவமை இல்லாதான் தாள் சேர்ந்தார்க்கல்லால்
மனக்கவலை மாற்றல் அரிது.

அதாவது தனக்கு உவமை இல்லாத ஏக இறைவனை வணங்கினால்தான் மனக்கவலை இல்லாதிருக்க முடியும் என்று திருவள்ளுவர் கூறுகின்றார்..

முறைசெய்து காப்பாற்றும் மன்னவன் மக்கட்கு
இறையென்று வைக்கப் படும்
-குறள்: 388

நல்ல முறையில் நீதி பரிபாலனம் செய்து மக்கள் எவ்வகையிலும் துன்பப்படாமல் காப்பாற்றும் ஆட்சியாளன் இறைவனென்று வைக்கப்படும் என்கிறார் வள்ளுவர். அதாவது அந்த மன்னன் இறைவனைப் போன்று போற்றுதலுக்குரியவர் என்ற அர்த்தத்தில் வள்ளுவர் கூற பின்னால் வந்தவர்கள் அந்த மன்னனையே கடவுளாக்கி விட்டார்கள்.

“எல்லாவுலகங்களும் அரசனின்றி அச்சத்தால் எப்பக்கங்களிலும் சிதறுண்டிருக்குங்கால் அவ் வெல்லாவற்றையும் காத்தற் பொருட்டுப் பிரம்ம தேவன், இந்திரன், வாயு, இயமன், சூரியன் அக்கினி, வருணன், சந்திரன், குபேரன் ஆகிய இவர்களுடைய அழிவில்லாத கூறுகளைக் கொண்டு அரசனைப் படைத்தான்.”
-“சுக்கிர நீதி” என்ற வட மொழி நூல்

“பல்வேறு தெய்வங்களின் மனித வடிவமே மன்னன்”
-நாரத ஸ்மிருதி,- ஆ.சிவசுப்பிரமணியன்

அதாவது இறைவனுக்கு உரிய தகுதிகள் அனைத்தையும் நமது முன்னோர்களின் வேதங்கள் அரசனுக்கு தாராளமாக கொடுத்து வந்ததையே மேலே உள்ள வாக்கியங்கள் நமக்கு அறிவுறுத்துகிறது. இந்த கருத்துக்களை சாதாரண மனிதன் சொன்னதாக சொல்லாமல் இறை பக்தியை ஊட்டி வேதங்களின் மூலமாக சொன்னதால் நம் மனத்தில் பசுமரத்தாணிபோல் பதிந்து விட்டது.

இனி இந்து மத வேதங்க ள் ஏக தெய்வ கருத்தை கொண்டிருப்பதை பார்ப்போம்.
'அந்தந்த ஆசைகளால் அறிவிழந்தவர்கள் அந்தந்த நியமத்தை கைக்கொண்டு தம்முடைய இயல்புகளுக்கு கட்டுண்டு கவரப்பட்டவர்களாய் வேறு தெய்வங்களை வழிபடுகின்றனர்'
-பகவத் கீதை 7:20

'ஏகம் ஏவம் அத்விதயம்' - 'அவன் ஒருவனே: வேறு எவரும் இல்லை'
- சந்த்க்யோ உபநிஷத் 6:2:1.

'அவன் வடிவத்தை காண முடியாது. எவர் கண்ணுக்கும் புலப்படாதவன்.எவர்கள் மனதாலும் இதயத்தாலும் அவனை அறிந்திருக்கிறார்களோ அவர்களின் இதயத்தில் நிலையாக இருப்பவன்.'
-ஸ்வதேஸ் வதரா உபநிஷத் 4:20

'அன்தாதம ப்ரவிஸன்தி ஏ அசம்பூதி முபாசதே'

'எவர்கள் இயற்கை வஸ்துகளை வணங்குகிறார்களோ அவர்கள் இருளில் பிரவேசிக்கின்றார்கள்.இன்னும் எவர்கள் மனிதனால் படைக்கப்பட்ட பொருட்களை வணங்குகிறார்களோ அவர்களும் இருளில் ஆழமாக மூழ்குகின்றார்கள்' -யஜூர் வேதம் 40:9
'நண்பர்களே! தெய்வீக தன்மை வாய்ந்த அவனையல்லாது வேறு எவரையும் வணங்காதீர்கள். அவனை மட்டுமே வணங்குங்கள்'- ரிக் வேதம் 8:1:1-10

'ஏக இறைவனையே ஞானிகள் பல பெயர்கள் கொண்டு அழைக்கின்றனர்'
-ரிக்வேதம் 1:164:46

இது போன்ற எண்ணற்ற வசனங்கள் இந்து மத வேதங்களில் எங்கும் நிறைந்திருக்கிறது. எனவே நான் பொய் சொல்லுகிறேனா? அல்லது க்ருஷ்ணகுமார் பொய் சொல்லுகிறாரா என்பதை படிப்பவர்களின் கவனத்துக்கே விட்டு விடுகின்றேன்.

3 comments:

UNMAIKAL said...

இறை ஒன்று! இனம் ஒன்று! இடம் ஒன்று! PART 1.

இறை ஒன்று! இனம் ஒன்று! இடம் ஒன்று!

* பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்

* ஒன்றே குலம் ஒருவனே தேவன்

* உலகம் ஒரு குடும்பம் (வசுதைவ குடும்பகம்)

* சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் (Liberty, Equality and fraternity)

* ஜாதிகள் இல்லையடி பாப்பா

மனித குல சமத்துவம் குறித்து பல்வேறு கால கட்டங்களில் தெரிவிக்கப்பட்ட கருத்துகள் இவை. எல்லா மனிதர்களின் உள்ளங்களும் எளிதில் ஏற்றுக் கொள்ளும் ஒரு கொள்கையே சமத்துவம் எனும் கோட்பாடு. உள்ளம் உண்மையை உரைத்த போதிலும் செயலில் அதைக் காட்ட மனிதர்கள் தயாராக இல்லை. மனித குலம் ஒன்று என்பதை செயலளவில் வெளிப்படுத்தும் போது அவர்கள் பல வசதிகளையும் சலுகைகளையும் இழக்க வேண்டும். வாய்ப்புகளைப் பிறருடன் பகிர்ந்து கொள்ள வேண்டும். அடக்கி ஆள்வதற்கும் நசுக்குவதற்கும் ஆட்கள் கிடைக்காத நிலை உருவாகும்.

பேதம் ஒழிந்தால் பாதகமே என்று எண்ணி மனித குலசமத்துவத்தை எல்லா வகையிலும் எதிர்த்தே வந்திருக்கின்றார்கள். ஆதிக்காரர்கள் மட்டுமல்ல, ஒடுக்கப்பட்ட இனத்தினரும் கூட அவர்களுக்குள்ளேயே சில பிரிவினரை சிறுமைப்படுத்தி, இழிவுபடுத்தி, பேதங்களை வளர்த்துக் கொண்டிருக்கிறார்கள்.

தனது தோள்களின் மீது ஏறி நிற்பவர்களைப் பற்றி கவலைப்படாமல் தான் ஏறி நிற்பதற்கு ஒரு தோள் வேண்டும் என்பதில் உறுதியாக நிற்கின்றார்கள்.

ஒன்றே குலம் என்ற நிலையை உருவாக்க பல நூற்றாண்டுகளாய் (ஆயிரம் ஆண்டுகளாய்....?) முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. சமய வட்டத்திற்குள் நின்று சிலர் குரல் கொடுத்தனர். சிலர் சமயங்களை உதறித்தள்ளுவதே சமத்துவத்திற்கு வழிகோலும் என்றனர். இவர்களின் கடுமையான உழைப்பிற்குப் பின்னரும் பேத உணர்வுகள் நீடிக்கின்றன என்பது வேதனைக்குரியது.

சமூக அமைதிப் பயணத்தின் முதல் மைல்கல் சமத்துவமே. சமத்துவ உணர்வு இல்லாத சமூகத்தில் அமைதி என்பது ஓர் எட்டாக்கனி. எனவேதான் அமைதிமிக்க சமூகத்தை உருவாக்க விரும்பும் இஸ்லாம், மனித குல ஒருமைப்பாடு குறித்து ஓர் உறுதியான நிலையை எடுத்துள்ளது.

இறைவன் ஒருவனே என்ற கோட்பாட்டில் எவ்வித சமரசத்திற்கும் இடமின்றி எவ்வாறு உறுதியாக உள்ளதோ அது போன்றே ‘ஒன்றே குலம்’ என்பதிலும் அது உறுதியாக உள்ளது. ஏற்றத் தாழ்வை உருவாக்கும் அனைத்து வழிகளையும் அது அடைத்து விடுகின்றது. சமயக் கோட்பாடுகளின் சந்து பொந்துகளில் ஒளிந்துகொண்டு பேதம் வளர்க்கும் அனைத்து முயற்சிகளையும் அது முறியடித்து விடுகின்றது.

“படைப்புகள் அனைத்தும் இறைவனின் குடும்பம் ஆகும்” (நபிமொழி)

“கருப்பரை விட வெள்ளையரோ வெள்ளையரை விட கருப்பரோ சிறந்தவர்கள் அல்லர். அரேபியரை விட அரபி அல்லாதவரோ , அரபி அல்லாதவரை விட அரேபியரோ சிறந்தவர்கள் அல்லர். இறையச்சம் உடையவரே உங்களில் சிறந்தவர்” என்றார் நபிகள் நாயகம் அவர்கள்.

ஒரே இறைவனைத் தவிர வேறு எந்தக் கடவுளும் இல்லை. அவ்வாறு இருந்திருந்தால் ஒவ்வொரு கடவுளும் தன் படைப்புகளை அழைத்துக் கொண்டு தனியே சென்றிருப்பர். மேலும் ஒருவர் மற்றவரை விட மேலோங்க முனைந்து கொண்டிருப்பர் என்ற குர்ஆன் வசனம் (23 : 91) பல கடவுள் கோட்பாடு எவ்வாறு சமூகப் பிரிவினையை உருவாக்கும் என்பதை விளக்குகிறது.

1. நம் அனைவரையும் படைத்து பரிபாலிப்பது ஒரே இறைவன்;

2. நாம் அனைவரும் வணங்குவது அதே இறைவனையே;

3. நாம் அனைவரும் இறுதியில் மீளப்போவதும் அவனிடமே

எனும் உணர்வு மனித இனங்களை இணைக்கும் தன்மை உடையது.

மனித குல சமத்துவத்திற்கு இஸ்லாம் அளித்த அடுத்த அடிப்படை, மனித இனம் முழுமையும் ஓர் ஆண் பெண்ணின் வழித்தோன்றல்கள் தான்; எனவே அனைவரும் உடன்பிறப்புகள் என்பதாகும்.

“மனிதர்களே! நாம் உங்களை ஓர் ஆணிலிருந்தும் பெண்ணிலிருந்தும் படைத்தோம். பிறகு நீங்கள் ஒருவருக்கொருவர் அறிமுகமாகிக் கொள்ளும் பொருட்டு உங்களை சமூகங்களாகவும் கோத்திரங்களாகவும் அமைத்தோம். உண்மையில், உங்கள் இறைவனிடம் அதிக கண்ணியம் வாய்ந்தவர் உங்களில் அதிக இறையச்சம் கொண்டவர்தாம்.” (குர்ஆன் 49 : 13)

இந்த இறைவசனத்தில் மூன்று விஷயங்கள் கவனிக்கத் தகுந்தவை.

1. மனித இனம் ஓர் ஆண் பெண்ணிலிருந்தே தோன்றியது. எனவே அனைவரும் உடன் பிறப்புகள். சகோதரர்களுக்கிடையில் பிறப்பின் அடிப்படையில் பேதம் உண்டாக்க முடியாது என்பது வசனத்தின் முதல் பகுதியின் கருத்தாகும்.

மனித இனம் ஓர் ஆண் பெண்ணின் வழித்தோன்றல்களாகத்தான் இருக்க முடியும் என்பதை பகுத்தறிவு உடையோர் அனைவரும் ஏற்றுக் கொள்வர். இன்று உலகின் மக்கள் தொகை 600 கோடியாக உள்ளது. இதுவே சென்ற நூற்றாண்டின் தொடக்கத்தில் 150 கோடியாக இருந்தது. இப்படியே பின்னோக்கிச் சென்றால் மக்கள் தொகை சில லட்சங்களாக, ஆயிரங்களாக, நூறாக குறைந்து இறுதியில் இரண்டாக ஆகிவிடும்.

மனித இனம் ஓர் ஆண் பெண்ணின் வழித்தோன்றல் எனும் இந்த உண்மையை நோக்கி விஞ்ஞானமும் நகர்ந்து கொண்டிருக்கிறது.


Continued ....

UNMAIKAL said...

இறை ஒன்று! இனம் ஒன்று! இடம் ஒன்று! PART 2.

“இன்றைய மனிதன் சுமார் ஒரு லட்சத்திலிருந்து ஒரு லட்சத்து நாற்பதாயிரம் வருடங்களுக்கு முன் ஒரு ஆப்பிரிக்கக் குழுவிலிருந்து தோன்றினான். நாம் எல்லோரும் ஆப்பிரிக்காவில் வாழ்ந்த ஒரே பெண்ணின் வாரிசுகள்” என்று வாதிட்டு 1987 ஆம் ஆண்டு அமெரிக்க பெர்கிலி பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த ஆலன்வில்ஷன் என்பவர் நேச்சர் (Nature) இதழில் கட்டுரை எழுதினார். இவர் பயன்படுத்திய அறிவியல் ஆராய்ச்சி முறை மாலிக்யூலர் பயாலஜி ((Molecular Biology) என்பதாகும்.

2. திருக்குர்ஆன் வசனத்தின் இரண்டாம் பகுதி நீங்கள் ஒருவருக்கொருவர் அறிமுகமாகிக் கொள்ளும் பொருட்டு உங்களை சமூகங்களாகவும் கோத்திரங்களாகவும் அமைத்தோம் என்று கூறுகிறது.

மனிதர்களுக்கிடையே உள்ள வேறுபாடுகள் வெளித்தோற்றத்தில் மட்டுமே. உறுப்புகளின் அமைப்பு (Anotomy)). உடல் இயக்கம் (Physiology) தேவைகள், உணர்வுகள் ஆகியன அனைவருக்கும் ஒரே மாதிரியாக உள்ளன. உள்ளமைப்பில் ஒரே மாதிரியாக இருக்கும் மனித இனம் வெளித்தோற்றத்தில் மட்டும் வேறுபடுவது ஏன் என்ற கேள்வி எழுகிறது. ஒருவரை ஒருவர் அறிந்து கொள்வதற்காக, அடையாளம் கண்டு கொள்வதற்காக இறைவன் செய்த ஏற்பாடே இது என இறைவசனம் விடையளிக்கிறது.

ஆந்த்ரபாலஜி (Anthropology) எனும் மானிட இயலில் மனித ஜாதியை ஆப்பிரிக்கன், ஏசியன், ஆஸ்திரேலியன், நியூகினியன், காகேசியன் என்று ஐந்து வகைகளில் அடக்கி விடுகிறார்கள். தோலின் நிறம், கண்களின் அளவு, அமைப்பு, தலைமயிரின் சுருட்டை போன்ற வெளித்தோற்றங்களை வைத்தே இவை அறிந்து கொள்ளப்படுகின்றன.

எனவே வெளித்தோற்றத்தில் காணப்படும் வேறுபாடுகள் பரஸ்பர அறிமுகத்திற்காக படைத்தோன் செய்த ஏற்பாடு ஆகும். ஆதிக்கம் செலுத்துவதற்கான சமிக்ஞைகள் அல்ல.

3.‘உண்மையில் இறைவனிடத்தில் அதிகக் கண்ணியம் வாய்ந்தவர் உங்களில் அதிக இறையச்சம் கொண்டவர்தான்’ என்பது சமத்துவத்தை முழங்கும் இறைவசனத்தின் மூன்றாவது பகுதியாகும். பிறப்பு, இனம், நாடு, மொழி ஆகியவற்றின் அடிப்படையில் எந்த சமூகத்தினருக்கும் உயர்வு இல்லை. இறைவனை அஞ்சி வாழ்பவர்கள் மட்டுமே இறைவனிடத்தில் கண்ணியம் பெறுவர்.

பிறப்பின் அடிப்படையில் மட்டுமல்ல, வேறுபல வழிகளிலும் தங்களை உயர்த்திக் காட்ட முயல்கின்றனர் ஆதிக்கக் குடியினர்.

மனிதர்களில் சிலர் தெய்வீகத் தன்மைகள் கொண்டவர் என்றும் இறைவனுக்கு நெருக்கமானவர்கள் என்றும் கூறி உயர்வுபடுத்திக் காட்டுவது ஒருவகை.

மனிதன் தெய்வமாவதில்லை; தெய்வம் மனிதனாகப் பிறப்பதில்லை. இறைவனை நெருங்க எவரது உதவியும் பரிந்துரையும் அவசியமில்லை. பாவிகளும் இறைவனை நேரடியாக நெருங்கலாம் என்கிறது இஸ்லாம்.

எனவே இஸ்லாமிய சமயத்தில் மதகுரு, புரோகிதர் ((Priesthood) என்ற பிரிவுகள் கிடையாது. தொழுகை நடத்துகின்றவர் இமாம் தலைவர் என்று அழைக்கப்படுகிறார். சமயத்தைக் கற்றவர் மார்க்க அறிஞர்கள் (உலமா) என்று அழைக்கப்படுவர். ஆன்மிக காரணங்களைக் காட்டி ஆதிக்கம் செலுத்தும் வழிகளை இஸ்லாம் அடைத்து விட்டது.


மற்ற சமூகத்தினரை விட தங்களை உயர்த்திக் காட்ட நாடு, இனம், வட்டாரம், மொழி ஆகியவற்றின் அடிப்படையில் பேதம் கற்பிப்பது மற்றொரு வகை. தாய்நாட்டையும் தாய் மொழியையும் தன் சமூகத்தையும் நேசிப்பது இயற்கையே. ஆனால் அவற்றின் அடிப்படையில் உயர்வு தாழ்வு கற்பிப்பது, புனிதம் கொண்டாடுவது சமத்துவக் கோட்பாட்டிற்கு எதிரானது.

உலகிலுள்ள அனைத்து நாடுகளையும் மலைகளையும் நதிகளையும் கடல்களையும் படைத்தவன் இறைவனே. எப்படி மனிதர்களில் பல்வேறு தோற்றங்களை உடையவர்களைப் படைத்தானோ அது போலவே பல்வேறு நாடுகளையும் பல்வேறு சீதோஷ்ண நிலைகள், இயற்கைவளங்கள் பொருந்தியதாகப் படைத்தான். அனைத்து நாடுகளையும் அவனே படைத்திருக்க ஒரு குறிப்பிட்ட நாடு மட்டும் உயர்வானது, புனிதமானது என்று சொல்வது இன வெறிக்கு இட்டுச் செல்லும்.

நபிகள் நாயகம் ஒரு அரேபியராக இருந்தும் அரபி மொழியே சிறந்த மொழி, அரபு நாடே புண்ணிய பூமி, அரபுக்கலாச்சாரம் உயரிய கலாச்சாரம் என்று ஒருபோதும் சொன்னதில்லை. மக்காவிலுள்ள கஅபா ஆலயம் புனிதமானது. ஆனால் அரேபியாவே புனிதமானது என்று எங்கும் கூறப்படவில்லை.

“கிழக்கு, மேற்கு மற்றும் அவற்றுக்கு இடையே உள்ள அனைத்திற்கும் இறைவனே அதிபதியாவான்.” (26 : 28)

“உங்களை மண்ணிலிருந்து படைத்திருப்பதும் பின்பு மனிதர்களாக (பூமியின் பல பாகங்களில்) பரவச் சென்றதும் அவனுடைய சான்றுகளில் உள்ளவையே.... வானங்கள் பூமியைப் படைத்திருப்பதும் உங்கள் மொழிகளும் நிறங்களும் மாறுபட்டிருப்பதும் அவனுடைய சான்றுகளில் உள்ளவையே.” (திருக்குர்ஆன் 30:20,22)

மேலே குறிப்பிடப்பட்டுள்ள திருவசனங்கள் இறைவன் அகிலத்தின் அதிபதி; எல்லா நாடுகளையும் இனங்களையும் படைத்தவன் அவனே என்பதை உணர்த்துகின்றன. இஸ்லாத்தின் இந்த உலகளாவிய கண்ணோட்டத்தின் (Universal Outlook)) முன் குறுகிய வாதங்கள் தவிடு பொடியாகிப் போகின்றன.


Continued .....

UNMAIKAL said...

இறை ஒன்று! இனம் ஒன்று! இடம் ஒன்று! PART 3.

இறை ஒன்று, இனம் ஒன்று, இடம் ஒன்று எனும் கோட்பாடே மனித குலத்தை ஒருங்கிணைக்கும் மாபெரும் சக்தியாகும்.

மனித குல ஒருங்கிணைப்புப் பற்றி இஸ்லாம் தத்துவமாகப் பேசி ஏட்டளவில் நிறுத்திக் கொள்ளவில்லை. நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் 23 ஆண்டுகளுக்குள் அரபு தீபகற்பத்தில் நிலவிய தீவிர ஜாதிப் பூசல்களை ஒழித்து சமத்துவ சமூகத்தை நிறுவினார்கள். உயர்குடி பிறந்தவர் என்று தம்மை கருதிக் கொண்டிருந்தவர்களையும் ஒடுக்கப்பட்ட இனத்தவரையும் ஒரே அணியில் இணைத்து அனைவரும் உடன்பிறப்புகளே எனும் உணர்வை ஊட்டினார்கள்.

அடிமை வம்சத்தவரும் ஆட்சியாளர்களாக மாற வேண்டும் என்கிறது குர்ஆன்.

“எவர்கள் பூமியில் ஒடுக்கப்பட்டிருந்தார்களோ அவர்கள் மீது நாம் அருள் புரியவும் அவர்களைத் தலைவர்களாக்கவும் அவர்களை வாரிசுகளாக்கி பூமியில் ஆட்சி அதிகாரத்தை அவர்களுக்கு வழங்கவும் நாம் நாடி இருந்தோம்.”(குர்ஆன் 26 : 5)

குர்ஆனின் இந்தக் கட்டளையை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் செயல்படுத்திக் காட்டினார்கள். அடிமை வம்சத்தினரும் ஆட்சியாளர்களாய் மாறிய அற்புதம் இஸ்லாமிய வரலாற்றில் நடந்துள்ளது என்பதை அனைவரும் அறிவர்.

தமது அணியில் ரோமாபுரி நாட்டவரையும் பாரசீக நாட்டவரையும் அபிசீனியா நாட்டவரையும் சேர்த்து ஒரு ஐக்கிய நாடுகள் சபையை உருவாக்கி ‘யாதும் ஊரே; யாவரும் கேளிர்’ எனும் கூற்றுக்கு செயல் வடிவம் தந்தார். இஸ்லாத்தின் இந்த உலகளாவிய பார்வையை இன்றும் பார்க்கலாம். உலகிலுள்ள மொத்த முஸ்லிம்களில் 18 விழுக்காட்டினரே அரபுகள். எஞ்சியோர் அரபு அல்லாதவர்களே.

உலக முஸ்லிம்களில் 30 விழுக்காட்டினர் இந்தியா, பங்களாதேஷ், பாகிஸ்தான் ஆகிய நாடுகளில் வசிக்கின்றார்கள். 20 சதவீதம் ஆப்பிரிக்காவில்; 17 சதவீதம் தென்கிழக்கு ஆசிய நாடுகளில்; 10 சதவீதம் மத்திய ஆசியாவில் மற்றும் சீனாவில்; 10 சதவீதம் துருக்கி, ஈரான் ஆப்கானிஸ்தானில் (அரபு இல்லாத மத்திய கிழக்கு நாடுகள்)

மனித குல ஒருமைப்பாட்டுக்கு இஸ்லாம் ஆற்றிய அளப்பரிய பணியை அறிஞர்கள் பலரும் குறிப்பிட்டுள்ளார்கள்.

“If ever any religion approached to the equality in an appreciable manner, it is Islam and Islam only.” Swamy Vivekaanda (Complete Works of Vivekananda Vol.6 Para 415)

“சமத்துவத்தை பாராட்டப்பட வேண்டிய அளவுக்கு சாதித்துக் காட்டிய மதம் இஸ்லாம்தான்; இஸ்லாம் மட்டுமே.” சுவாமி விவேகானந்தா.

“No other religion whatever its theory may be has brought in to practice the essential idea of oneness of man before God as Islam has done.” (P.Ramasamy Iyer, Eastern Times, 22nd December 1944)

“இறைவனுக்கு முன்பு அனைவரும் சமம் என்ற கருத்தை இஸ்லாத்தைத் தவிர வேறெந்த மதமும் செயல்படுத்திக் காட்டவில்லை.” பி.ராமசாமி அய்யர்

“The extinction of race consciousness between Muslims is one of outstanding moral achievements of Islam and in the contemporary world there is, as it happens, a crying need for the propagation of this Islamic virtue” Arnold Toynbee, Civilization on Trial

“முஸ்லிம்களுக்கிடையே இன பேதங்கள் தலையெடுக்க விடாமல் செய்ததே இஸ்லாத்தின் மகத்தான சாதனையாகும். நவீன உலகில் இன்றும் கூட இந்த இஸ்லாமியப் பண்பு மிக மிக அதிகமாகத் தேவைப்படுகிறது.” வரலாற்றாசிரியர் ஆர்னால்டு டாயின்பீ

'None of the Muslim countries ever developed a racial caste system' Encyclipaedia Brittanica

“இன,சாதி அமைப்பை எந்த முஸ்லிம் நாடும் வளர்க்கவில்லை.” பிரிட்டிஷ் கலைக்களஞ்சியம்

“It (Islam) contrasted sharply with the oppressive laws governing the class and caste ridden societies of the Roman, Byzantine, Persion and later the Indian Empires. Islam stood for freedom and equality which as a matter of fact had long been forgotten in all the lands of the degenerated ancient civilization.” M.N.Roy, Historical Role of Islam

ரோம் சாம்ராஜ்யமாகட்டும், பைஸாந்தியப் பேரரசாகட்டும், பராசீக சாம்ராஜ்யமாகட்டும். இந்தியப் பண்பாடே ஆகட்டும் இவை எல்லாவற்றிலும் சமூகத்தைப் பல்வேறு வகுப்பு களாகவும் சாதிகளாகவும் கூறு போட்டு பகுக்கின்ற அரக்கத்தக்மான, கொடூரமான சட்டங்களே கோலோச்சின. இவற்றோடு ஒப்பிடும் போது இஸ்லாம் இவையெல்லாவற்றுக்கும் நேரெதிரே நின்றது.

இஸ்லாம் சமத்துவத்தைத் தூக்கிப்பிடித்தது. இஸ்லாம் சகோதரத்துவத்தைக் கொண்டாடியது. அதற்கு நேர்மாறாக தொன்மையான, அதே சமயம் வீழ்ச்சிப் பாதையில் வேகமாக சரிந்து கொண்டிருந்த பண்டைய பண்பாடுகள் செழித்தோங்கியிருந்த நாடுகளில் சமத்துவமும் சகோதரத்துவமும் மறக்கடிக்கப்பட்டு இருந்தன என்பது தான் உண்மை. -எம்.என். ராய் (ஹிஸ்டாரிகல் ரோல் ஆஃப் இஸ்லாம்)


THANKS:http://www.nenjodu.com/iii.htm