Followers

Tuesday, October 14, 2014

குர்ஆன் வசனங்களை குழப்பும் அப்துல் அஜீஸ்!

திரு அப்துல் அஜீஸ்!

//இந்த வசனம் அல்லாஹ்வுடன் லாத் மனாத் போன்ற தெய்வங்கள் மக்காவில் வணங்கப்பட்டபோது இறங்கியது. அந்த வசனத்தை அல்லாவை வணங்கிய அடியார்களை அல்லாவிடம் தமக்காக இறைஞ்சும்படி கேட்பதற்கு உபயோகப்படுத்தி குழப்புகிறார்கள் இந்த தீவிரவாதிகள்.//

என்னை தீவிரவாதியாக சித்தரித்தது உங்களிடம் நான் கேட்ட கேள்விக்கு பதில் இல்லை என்பதைக் காட்டுகிறது.

//தர்காவுக்கு செல்லும் எந்த முஸ்லீமும் அல்லாவுக்கு இணையாக அடியார்களை பார்ப்பதுமில்லை, வணங்குவதுமில்லை. தங்களுக்காக அல்லாவிடம் கேட்டுகொள்வதற்காவே செல்லுகிறார்கள். அது தெரிந்திருந்தும், குழப்பம் செய்வதையே ஒரே தொழிலாக செய்துவரும் ஷாலியும், சுவனப்பிரியனும் அல்லாவுக்கு இணையாக அடியார்களை வணங்குகிறார்கள் என்று எழுதுகிறார்கள். இது அவர்கள் எந்த அளவுக்கு அசிங்கமானவர்கள் என்று காட்டுகிறது.//

ரொம்பவும் உஷ்ணமாகி விட்டீர்கள் என்று நினைக்கிறேன். இறைவன் என்ன சொல்லுகிறான்?

அறிந்து கொள்வீராக! களங்கமற்ற மார்க்க (வழிபாடு யாவு)ம் அல்லாஹ்வுக்கே உரியது; இன்னும், அவனையன்றிப் பாதுகாப்பாளர்களை எடுத்துக் கொண்டிருப்பவர்கள், “அவர்கள் எங்களை அல்லாஹ்வின் அருகே சமீபமாகக் கொண்டு செல்வார்கள் என்பதற்காகவேயன்றி நாங்கள் அவர்களை வணங்கவில்லை” (என்கின்றனர்). அவர்கள் எதில் வேறுபட்டுக் கொண்டிருக்கிறார்களோ அதைப்பற்றி நிச்சயமாக அல்லாஹ் அவர்களுக்கிடையே தீர்ப்பளிப்பான்; பொய்யனாக நிராகரித்துக் கொண்டிருப்பவனை நிச்சயமாக அல்லாஹ் நேர்வழியில் செலுத்த மாட்டான். -குரஆன் 39:3

சிறு பிள்ளைக்கும் விளங்குவதுபோல் இந்த வசனத்தில் இறைவன் மற்றவர்களை துணைக்கழைப்பதை கண்டிக்கும் போது பிஎச்டி பட்டம் வாங்கிய உங்களுக்கு விளங்கவில்லையா? இறைவன் உங்களுக்கு மறுமையில் கடுமையான தீர்ப்பளிப்பதை காணும் பொது இதனை உணர்ந்து கொள்வீர்கள்!

//இவர்கள் குறிப்பிட்ட ஹதீஸ்கள் யூதர்களால் எழுதி திணிக்கப்பட்டவை. ஆகையால் இவைகளை ஒத்துகொள்ளக்கூடாது.//

நான் குறிப்பிட்ட நபி மொழிகள் அனைத்தும் ஹதீஸ் கலை வல்லுனர்களால் ஆதாரபூர்வமானவை என்று அங்கீகரிக்கப்பட்டவை. அறிவித்த நபரிலிருந்து முகமது நபி வரை அறிவிப்பாளர் வரிசை எங்கும் பிசகாது சரியாக செல்கிறது. நான் குறிப்பிட்ட நபி மொழி யூதர்களுடையது என்பதற்கு ஆதாரத்தை சமர்ப்பிக்கவும். இல்லை என்றால் பொய் சொன்னதற்காக இறைவன் முன்னால் குற்றவாளியாக்கப்படுவீர்கள்.

//பள்ளிவாசல்கள் அல்லாஹ்வுக்கே உரியன. எனவே அல்லாஹ்வுடன் வேறு எவரையும் அழைக்காதீர்கள்! குர்ஆன் 72:18
இந்த வசனம் அல்லாஹ்வுடன் லாத் மனாத் போன்ற தெய்வங்கள் மக்காவில் வணங்கப்பட்டபோது இறங்கியது. அந்த வசனத்தை அல்லாவை வணங்கிய அடியார்களை அல்லாவிடம் தமக்காக இறைஞ்சும்படி கேட்பதற்கு உபயோகப்படுத்தி குழப்புகிறார்கள் இந்த தீவிரவாதிகள்.//

லாத், மனாத் போன்ற தெய்வங்களை இந்த வசனத்தில் பெயர் குறிப்பிட்டு இறைவன் கூறவில்லையே! மற்ற எவரையும் அழைக்காதீர்கள் என்று பொதுவாகத்தானே கூறுகிறான். அந்த பொதுவில் நாகூர் ஆண்டவரும், ஏர்வாடி இப்றாகிமும், மற்ற தர்காக்களும் வருகிறதே!

இப்படி நெஞ்சறிந்து பொய்யுரைக்கலாமோ! :-)

//ஆகவே இந்த ஏமாற்றுக்காரர்களை, தீவிரவாதிகளை, பெட்ரோல் பிணந்திண்ணிகளை அடையாளம் கண்டுகொண்டு அப்புறப்படுத்துங்கள்.//

பிஎச்டி பட்டம் பெற்ற ஒரு இலக்கியவாதியின் எழுத்தாக இது தெரியவில்லையே! பொய்களை புனைந்து நீங்கள் எழுதிய கட்டுரையின் உண்மை முகத்தை தோலுரித்துக் காட்டியதற்காக எங்களை பிணந்திண்ணிகள் என்று கூறும் அளவுக்கு சென்று விட்டீர்கள். கண்டிப்பாக இதற்கான தண்டனையை வாழும் நாட்களிலேயே இறைவன் மூலம் பெற்றுக் கொள்வீர்கள். அந்த தண்டனை உங்களை வந்தடையும் நேரம் நாகூர் ஆண்டவரோ, ஏர்வாடி பாவாவோ, அல்லது நீங்கள் முரீது வாங்கியுள்ள தலைவரோ உதவிக்கு வர மாட்டார். உங்களைப் பார்த்து பரிதாபப்படுகிறேன்.

மேலும் நான் ஒரு அலுவலகத்தில் அக்கவுண்டண்டாக பணி புரிகிறேன். எனது தேவைக்கும் அதிகமாகவே இறைவன் அந்த அலுவலகத்திலிருந்து எனக்கு கொடுக்கிறான். இணையத்தில் எழுதுவதற்கு நான் யாரிடமும் எந்த காலத்திலும் பொருள் உதவி பெற்றதில்லை. அது எனக்கு அவசியமும் இல்லை.

1 comment:

UNMAIKAL said...

18:102 أَفَحَسِبَ الَّذِينَ كَفَرُوا أَن يَتَّخِذُوا عِبَادِي مِن دُونِي أَوْلِيَاءَ ۚ إِنَّا أَعْتَدْنَا جَهَنَّمَ لِلْكَافِرِينَ نُزُلًا

18:102. நிராகரிப்பவர்கள் என்னையன்றி என் அடியார்களை(த் தம் ) பாதுகாவலர்களாக எடுத்துக் கொள்ளலாம் என்று எண்ணுகிறார்களா? நிச்சயமாக இக்காஃபிர்கள் (விருந்துக்கு) இறங்குமிடமாக நரகத்தையே சித்தப்படுத்தி வைத்திருக்கின்றோம்.

18:02 Then do those who disbelieve think that they can take My servants instead of Me as allies? Indeed, We have prepared Hell for the disbelievers as a lodging.


18:103 قُلْ هَلْ نُنَبِّئُكُم بِالْأَخْسَرِينَ أَعْمَالًا

18:103. “(தம்) செயல்களில் மிகப் பெரும் நஷ்டவாளிகள் யார் என்பதை நான் உங்களுக்கு அறிவிக்கட்டுமா?” என்று (நபியே!) நீர் கேட்பீராக.

18:103 Say, [O Muhammad], "Shall we [believers] inform you of the greatest losers as to [their] deeds?18:104 الَّذِينَ ضَلَّ سَعْيُهُمْ فِي الْحَيَاةِ الدُّنْيَا وَهُمْ يَحْسَبُونَ أَنَّهُمْ يُحْسِنُونَ صُنْعًا

18:104. யாருடைய முயற்சி இவ்வுலக வாழ்வில் பயனற்றுப் போயிருக்க தாங்கள் மெய்யாகவே அழகான காரியங்களையே செய்வதாக எண்ணிக் கொண்டிருக்கிறார்களோ அவர்கள் தான்.

18:104 [They are] those whose effort is lost in worldly life, while they think that they are doing well in work."

18:105 أُولَٰئِكَ الَّذِينَ كَفَرُوا بِآيَاتِ رَبِّهِمْ وَلِقَائِهِ فَحَبِطَتْ أَعْمَالُهُمْ فَلَا نُقِيمُ لَهُمْ يَوْمَ الْقِيَامَةِ وَزْنًا

18:105. அவர்கள் தங்களுடைய இறைவனின் வசனங்களையும், அவனை (மறுமையில்) சந்திப்போம் என்பதையும் நிராகரிக்கிறார்கள்; அவர்களுடைய செயல்கள் யாவும் வீணாகும்; மறுமை நாளில் அவர்களுக்காக எந்த மதிப்பையும் நாம் ஏற்படுத்த மாட்டோம்.

18:105 Those are the ones who disbelieve in the verses of their Lord and in [their] meeting Him, so their deeds have become worthless; and We will not assign to them on the Day of Resurrection any importance.

18:106 ذَٰلِكَ جَزَاؤُهُمْ جَهَنَّمُ بِمَا كَفَرُوا وَاتَّخَذُوا آيَاتِي وَرُسُلِي هُزُوًا

18:106. அதுவே அவர்களுடைய கூலியாகும் - (அது தான்) நரகம் - ஏனென்றால் அவர்கள் (உண்மையை) நிராகரித்தார்கள்; என்னுடைய வசனங்களையும், என் தூதர்களையும் ஏளனமாகவே எடுத்துக் கொண்டார்கள்.

18:106 That is their recompense - Hell - for what they denied and [because] they took My signs and My messengers in ridicule.