Followers

Tuesday, October 14, 2014

வஹாபிய இஸ்லாமும் அரபு கலாசாரமும்!

திரு க்ருஷ்ணகுமார்!

//அராபியத்தை திணித்து தமிழ்ப் பண்பாட்டினை சுவடின்றி அழிக்க விழையும் பிற்போக்கு வஹாபியம் தமிழகத்தில் தலையெடுத்து வரும் சூழலில் இது போன்ற தமிழ்ப்பண்பாட்டு வேர் உள்ள விஷயங்களை விகஸிதமாகப் பகிர முனைவது என்பது சங்கடமான விஷயம் என்று புரிகிறது.//

இஸ்லாம் என்பது வேறு! அராபிய கலாசாரம் என்பது வேறு!

1400 வருடங்களுக்கு முன்பு அராபிய கலாசாரம் என்பது என்ன?

இஸ்லாம் வருவதற்கு முன் அராபிய தீபகற்பத்தில் 365 சிலைகளை கஃபாவில் வைத்து வழி பட்டு வந்தனர். இறைத் தூதர் ஆப்ரஹாம், அவரது மகன் இஸ்மாயில் போன்றோரின் சிலைகளையும் வைத்து அன்றைய அரபிகள் தினம் ஒரு சிலையை வழிபட்டு வந்தனர்.

பல வருடங்கள் புளிக்க வைக்கப்பட்ட மதுபானங்களை குடித்து மகிழ்ந்தனர் அன்றைய அரபிகள். யாரிடம் அதிக நாட்கள் புளிக்க வைக்கப்பட்ட மதுபானம் உள்ளதோ அவரே அன்றைய சமூகத்தில் மரியாதையாக பார்க்கப்பட்டார்.

1400 வருடங்களுக்கு முன்பு அராபியாவில் வட்டி பெரும் தொழிலாக நடந்து வந்தது. முகமது நபியின் சிறிய தகப்பனார் மிகப் பெரிய வட்டி வியாபாரியாக இருந்தார். யூதர்கள் மதினாவில் வட்டி தொழிலில் மிகப் பிரதான இடத்தைப் பெற்றிருந்தனர்.

பெண் குழந்தைகள் பிறந்தால் வறுமைக்கு அஞ்சி உயிருடன் புதைத்து விடும் பழக்கம் அன்றைய அரபு கலாசாரமாக இருந்தது. ஜனாதிபதி உமர் இஸ்லாத்தை தழுவுவதற்கு முன்னால் தனது பெண் குழந்தையை உயிரோடு புதைத்துள்ளார். பிற்காலங்களில் இதனைச் சொல்லி முகமது நபியிடம் அழுத வரலாறு உண்டு. இது அன்றைய அரபுலக கலாசாரம்.

விபசாரம் தலைவிரித்தாடியது. பலரும் ஒரு பெண்ணிடம் செல்வார்கள். அந்த பெண் கருவுற்றால் யாரை கை காட்டுகிறாளோ அவன் அந்த குழந்தைக்கு தகப்பனாக பொறுப்பெடுத்துக் கொள்வான். இது அன்றைய அரபு கலாசாரம்.

இந்த கொடுமைகள் அனைத்தும் இஸ்லாம் வந்தவுடன் பூண்டோடு ஒழிக்கப்பட்டது. ஆனால் அன்று அந்த அரபுகள் என்ன செய்தார்களோ அதனை இன்று நாம் நமது நாட்டில் அரங்கேற்றி வருகிறோம்.

பிறந்த பெண் குழந்தையை கள்ளிப்பால் கொடுத்து அல்லது அரிசியை திணித்து சேலம், உசிலம்பட்டி போன்ற ஊர்களில் இன்றும் கொன்று வருகிறோம்.

அன்றைய அரபுகளைப் போல் சாராயத்தை 10ம் வகுப்பு மாணவனுக்கும் ஊற்றிக் கொடுக்கும் கொடுமையை செய்து வருகிறோம். அரசே சாராய கடையை நடத்தி வருடா வருடம் வருமானத்தை கூட்டும் மாவட்டங்களுக்கு அரசே ஊக்கத் தொகை கொடுக்கும் அநியாயத்தை அரங்கேற்றி வருகிறோம்.

அன்றைய அரபுகளைப் போல் விபசார விடுதிகளை நடத்தி அதற்கு அரசு அனுமதி அளிக்கும் கொடுமையையும் செய்து வருகிறோம். பல பெண்களை பொட்டுக்கட்டி கோவிலுக்கு நேர்ந்து விட்டு அவர்களை தேவரடியார்கள் என்ற புனித பெயரை சூட்டி அவர்களை முடிவில் விபசாரத்தில் தள்ளுகிறோம்.

அன்றைய அரபுகளைப் போல் வட்டி தொழிலை வங்கிகள் மூலமாக அரசே நடத்துவதை நாம் அங்கீகரிக்கிறோம். அதிலும் ஒரு படி மேலே போய் கந்து வட்டி தொழில் மிக ஜோராக நடக்கும் மாநிலம் நமது மாநிலம் என்றால் அதுவும் மிகையாது.

இவ்வாறு அன்றைய அரபுகள் எதை எல்லாம் தங்கள் கலாசாரமாக கொண்டிருந்தார்களோ அவை அனைத்தையும் தமிழர்களாகிய நாம் நமது கலாசாரமாகவே மாற்றி விட்டோம்.

ஆனால் 3000 வருடங்களுக்கு முன்பு உள்ள தமிழனின் கலாசாரம் என்பது என்ன?

ஒன்றே குலமும் ஒருவனே தேவனும்
நன்றே நினைமின் நமனில்லை நாணாமே
சென்றே புகுங்கதி யில்லை நும் சித்தத்து
நின்றே நிலைபெற நீர்நினைந் துய்மினே.
-திருமூலர்

யாதும் ஊரே யாவரும் கேளிர்
தீதும் நன்றும் பிறர்தர வாரா
நோதலும் தணிதலும் அவற்றோ ரன்ன
சாதலும் புதுவது அன்றே, வாழ்தல்
இனிதென மகிழ்ந்தன்றும் இலமே முனிவின்
இன்னா தென்றலும் இலமே, மின்னொடு
வானம் தண்துளி தலைஇ யானாது
கல் பொருது மிரங்கு மல்லல் பேரியாற்று
நீர்வழிப் படூஉம் புணைபோல் ஆருயிர்
முறை வழிப் படூஉம் என்பது திறவோர்
காட்சியில் தெளிந்தனம் ஆகலின், மாட்சியின்
பெரியோரை வியத்தலும் இலமே,
சிறியோரை இகழ்தல் அதனினும் இலமே.
- (புறம்: 129)

“நட்ட கல்லைச் சுற்றி வந்து நாலு புஷ்பம் சாற்றியே;
சுற்றி சுற்றி வந்து முணு, முணுக்க சொல்லும் மந்திரம் ஏதடா!
சுட்ட சட்டி சட்டுவம் கறிச்சுவை அறியுமோ!
நட்டகல்லும் பேசுமோ; நாதன் உள்ளிருக்கையில்..!”

-சிவவாக்கிய சித்தர்

மேலே நாம் பார்த்த மூன்று பாடல்களின் அடிப்படையில்தான் அன்றைய தமிழகம் இருந்தது. 3000 ஆண்டுகளுக்கு முன் தமிழன் எவ்வாறு வாழ்ந்தானோ அந்த வாழ்கையைத்தான் இன்றைய இஸ்லாமியர்கள் அதாவது உங்கள் பாஷையில் 'வஹாபிகள்' செய்து வருகிறார்கள். எனவே அன்றைய அரேபிய கலாசாரத்தை துடைத்தெறிவதற்காக நாங்கள் அல்லும் பகலும் பாடுபடுகிறோம். திருவள்ளுவரும், கணியன் பூங்குன்றனாரும், சிவ வாக்கிய சித்தரும், திருமூலரும் இன்று உயிருடன் இருந்திருந்தால் தமிழகத்தில் மலரும் தவ்ஹீத் அதாவது ஓரிறைக் கொள்கை புரட்சியினைக் கண்டு ஆனந்த கண்ணீர் வடித்திருப்பர்.

மேலும் சொல்கிறேன் கேளுங்கள்.....

குலப்பெருமை பேசி அன்றைய அரபுகள் பல வருடங்கள் சண்டையிடுவார்கள். கொலைகளும் தாராளமாக நடக்கும். அந்த கொலைக்கு பழி வாங்க அவனது வாரிசுகள் இலக்காக்கப்படுவர். இது பல தலைமுறையாக நடந்து வந்தது. முகமது நபி அந்த மக்களிடம் இஸ்லாத்தை போதித்த பிறகுதான் பழிக்குப் பழி வாங்கும் வழக்கம் விட்டொழிந்தது.

அன்றைய அரபுகள் எதைச் செய்தார்களோ அதனை இன்று நாம் அரங்கேற்றி வருகிறோம். தருமபுரி போன்ற மாவட்டங்களில் குலப்பெருமை பேசிக் கொண்டு காதலின் பெயரால் குடிசைகளை கொளுத்திக் கொண்டிருக்கிறோம். பலரை உயிரோடு எரிக்கவும் செய்கிறோம்.

அன்றைய அரபுகளிடம் தீண்டாமைக் கொடுமை தலைவிரித்தாடியது. மனிதர்களை அடிமைகளாக வைத்து மிகப் பெரும் கொடுமையை செய்து வந்தனர். எந்த சம்பளமும் தராமல் வாழ்நாள் முழுக்க முதலாளிக்கு உழைக்க கட்டாயப்படுத்தப்பட்டனர். வணக்க வழிபாடுகளில் அவர்களுக்கென்று ஒரு நாளை நியமித்து இறை இல்லங்களுக்குள் உள்ளே அனுமதிக்காமல் தடுத்து வைத்தனர். இஸ்லாம் வந்ததற்கு பிறகு அந்த கஃபாவில் முதன் முதலாக பாங்கொலியை சொன்னவர் பிலால் என்ற ஆப்ரிக்க அடிமை. முகமது நபி இவர்தான் அதற்கு சரியான ஆள் என்று தேர்ந்தெடுத்து அந்த புனிதப்பணியை செய்ய வைத்தனர்.

அன்று அந்த அரபுகள் எவ்வளவு தீண்டாமை பாராட்டினார்களோ அதற்கு ஒரு படி மேலே போய் காலில் செருப்பணிந்து வந்தாலே குற்றமாக பார்க்கும் மனப்பான்மையை நமது இளைஞர்களிடத்திலே வளர்த்து வைத்துள்ளோம். இரண்டு நாட்களுக்கு முன்பு மதுரையில் தலித் சமுதாயத்தைச் சேர்ந்த பள்ளி மாணவர்கள் செருப்பணிந்து டீக்குடிக்க வந்ததால் சக மாணவர்களால் எச்சரிக்கப்பட்டு அடியையும் கொடுத்துள்ளனர். தலித் மாணவர்கள் தற்போது காவல் துறையை நாடியுள்ளனர்.
http://www.youtube.com/watch?v=MwfDfUGhAv4

அதற்கும் மேலாக அந்த தலித்களை கோவில்களுக்குள் அனுமதிக்காமலும், அவர்களோடு திருமண உறவு கொள்ளாமலும் ஒதுக்கியே வைத்துள்ளோம். இன்று வரை அது தொடர்கிறது. அன்றைய அரபுகளுக்கு சற்றும் நாங்கள் குறைந்தவர்களல்ல என்று ஒவ்வொரு விஷயத்திலும் அவர்களோடு போட்டி போடுகிறோம்.

அந்த அரபு கலாசாரத்தை முற்றாக ஒழிக்கவே நாங்கள் அதாவது ஏகத்துவவாதிகள் பாடுபடுகிறோம். இது தமிழகத்துக்கு நல்லதா அல்லது தீயதா என்பதை உங்களின் முடிவுக்கே விட்டு விடுகின்றேன்.

7 comments:

thamizachi said...

yappa suvanapriya.....nee vendumanal arabu kalacharathai parri kurava pesi muhammad nabi dan ellarayum thiruhinadha sollalam. aanal nabigal nayagam onnum ahimsaiya bodhikala. tannoda madahtha peruka por purinji uyirgala konnavar dhaan avaru. chinna ponnu aisha va 9 vasayula thambathiya uravuky utpadhuthana paedophile unga nabi. history ngaradu eppavume past la vaazhndha normal manushangaloda seyalgala perumaiyaga pesum avlo dan. unga nabi sagippu thanmaiya solli kuduthu irundha avar vera madangala erkara islamiyanuku marana dhandanai nu solli iruka maataru. avaroda ulagam mulusum allah vodadha aaganum adhuku neenga ellam non muslims ah konnu, bayamuruthi, pidichu , kodumaipaduthi convert pannunga nu sollalana naan otthukren neenga nabi nabi nu pugalradha.

thamizachi said...

enaku enna thonudu na unga kita irukra panbum, mozhi thiranum neenga india la tamilnaatula irukrdhala dhan ivlo nalla iruku. idhuve nee iraq, pakistan la oru muslim ah porandu irundha neenga avanungala madhiri fanatic ah dhan irundhirupeenga. onna nalla purinjokanga power, paisa ponnu idellam romba thevaipadra aalungaloda kaila islamoda nabi oda indha wrong concept maatikichu. ellarayum konnu allah vo da rule ah ulagam fulla kondu vaa. but actual ah indha terrorist o muslims o idhellam kashtapattu seiyalanalum indha ulagam allavodadhu daan. neenga allah nu kupida vakatiyum unga alla yaar epdi kupitalum yesuve bagavane guruve nu koovinalum manasara vananginalum thunai nirpaan. flawed ideals enga irundhalum adhu andha structure ah azhichidum. unga samudayathula flawed ideals ah parapuuravangala thadunga. moderate views ah parapunga unga samoogathula. unga dargah la ellarum onnu koodum bodhu idha solli parunga. appa unmai puriyum ungaluku.

UNMAIKAL said...

“எதிரிகளுக்கு -
எரிச்சல் வருகிறது என்றால்,
லட்சியவாதிகளான நாம்
சரியாக இருக்கிறோம்
என்பதற்கான அடையாளம் அது.”

- ஜென்னி மார்க்ஸ்
Posted by தமிழச்சி (Tamizachi) in Facebook.

சொன்னது நீ தானா? சொல். சொல். தமிழச்சீ.

தமிழச்சீ. ஞாபகம் வருதா?

இஸ்லாம் மார்க்கத்தின் மீது உனக்குள்ள எரிச்சல் யாவரும் அறிந்த ஒன்றே.

எரிச்சலில் நீ இஸ்லாத்தை, நபிகளை, சுவனப்பிரியனை குறை கூறுவதைப் பார்த்தால் இஸ்லாம் மார்க்கமும் நபிகளும் சுவனப்பிரியனும் குறைவற்று நிறைவாக உள்ளனர் என்றே அர்த்தம். நன்றி. மகிழ்ச்சி.

Anonymous said...

/திருவள்ளுவரும், கணியன் பூங்குன்றனாரும், சிவ வாக்கிய சித்தரும், திருமூலரும் இன்று உயிருடன் இருந்திருந்தால் தமிழகத்தில் மலரும் தவ்ஹீத் அதாவது ஓரிறைக் கொள்கை புரட்சியினைக் கண்டு ஆனந்த கண்ணீர் வடித்திருப்பர்.//
கண்டிப்பாக ரத்த கண்ணீர் வடித்திருப்பார்கள். எவ்வளவோ நல்ல விஷயங்கள் இங்கிருக்க இந்த ஈன கூட்டம் தேசத்தில் இருந்தா வாழ்க்கை நெறியை இறக்குமதி செய்ய வேண்டும் என்று. மேலும் தங்கள் ஈன மதத்தை வளர்க்க தங்கள் பெயரையும் கருத்துகளையும் இந்த சுவன கூட்டம் பயன்படுத்துவது கண்டு கோபத்தில் கொதித்து இருப்பார்கள். ஓரிறை கொள்கை இங்கே இருக்க தன்னுடைய சுய லாபத்திற்காக ஒரு மதத்தை உருவாக்கி எதோ அரசியல் இயக்கத்திற்கு ஆள் சேர்ப்பது போல் மதத்தை வியாபாரம் செய்து கொண்டிருக்கும் ஒரு மத வியாபாரி சுவன கிறுக்கனை கடித்து குதறி இருப்பார்கள். உன் அரபு மத வியாபாரத்தை செய்ய எங்கள் பெயரை ஏன் பயன்படுத்துகிறாய் ஈன ஜென்மமே என்று இருப்பார்கள்.

Anonymous said...

தகப்பன் தவறு செய்தால் அவரை திருத்தி நல்வழி படுத்துபவனே நல்ல மகன். அதை விட்டு பக்கத்துக்கு வீட்டுக்காரன் நல்லவனாக இருக்கிறான் அதனால் அவனை இனி தான் அப்பா என்று அழைக்கிறேன் என்பவன் என்ன பிறவி என்று சொல்ல தேவை இல்லை. சுவன குப்பைகள் எல்லாம் அடுத்தவனை தகப்பன் என்று அழைக்கும் ரகத்தை சேர்ந்தவர்கள். ஈன குப்பை துளுக்கனே திருவள்ளுவரையும் திருமூலரையும் அவர்கள் பெயரை பயன்படுத்தும் யோக்கியதை உனக்கு உள்ளதா.

UNMAIKAL said...

To : Anonymous

உன்னுடைய கிருஷ்ணன் கடவுள், கீதையில் சொல்லும்பொழுது, சதுர்வர்ணம் மயாசிருஷ்டம் நாலு ஜாதிகளை நானே உண்டாக்கினேன். ஜாதியை உண்டாக்குவது ஒரு கடவுளா?

அந்த ஜாதியை உண்டாக்கினான்; நாலாவது ஜாதியாக இருக்கின்ற நீ, என்ன ஜாதி? நீ உன்னுடைய ஜாதியை மிகப் பெருமையாகச் சொல்லிக் கொள்வதற்கு என்ன இருக்கிறது.

நன்றாக சிந்தித்துப் பாருங்கள்! எல்லா ஜாதியும் சேர்த்து - உன்னுடைய அண்ணன், தம்பி அத்தனை பேரையும் இவன் பிரித்தானே தவிர, நாலு ஜாதியில், நாலாவது ஜாதியாக அடக்கம் செய்து வைத்திருக்கிறான்.

சூத்திரன் என்றால் என்ன?
இதோ, அசல் மனுதர்மம்; இந்த மனுதர்மத்தில் எட்டாவது அத்தியாயத்தில் தெளிவாக இருக்கக் கூடிய சுலோகத்தில் என்ன சொல்லி யிருக்கிறான்.

எட்டாவது அத்தியாயம்; 415 சுலோகம்;

சூத்திரன் என்றால், யுத்தத்தில் ஜெயித்துக் கொண்டு வரப்பட்டவன்; பக்தியினால் வேலை செய்கிறவன். தன்னுடைய தேவடியாள் மகன். விலைக்கு வாங்கப்பட்டவன்; ஒருவனால் கொடுக்கப்பட்டவன்; குலவழியாக தொன்று தொட்டு வேலை செய்கிறவன்; குற்றத்திற்காக வேலை செய்கிறவன்.

கோவில் கட்டுபவன் தமிழன்; சிலை வடிப்பவன் தமிழன்; மானியம் கொடுப்பவன் தமிழன்; இந்த வேலைகள் எல்லாம் முடிந்தவுடன், கடைசியில் ஒரு சின்ன சொம்பினைத் தூக்கிக் கொண்டு வந்து, நகருங்கோ, நகருங்கோ, பிள்ளைவாள் நகருங்கோ, கோனார்வாள் நகருங்கோ, உடையார்வாள் நகருங்கோ என்று எல்லா ஜாதிக்காரர்களையும் நகரச் சொல்லி விட்டு, மேலே ஏறி ஒரு சொம்பை ஊற்றுகின்றவன் யாரு? பார்ப்பான்தானே! அவன்தானே கர்ப்பக்கிரகத்திற்குள் போகவேண்டும்.

உனக்கு தைரியம் இருந்தால், நேராக கோவில் கர்ப்பக் கிரகத்திற்குள் போ! பார்ப்பான் உன்னை உள்ளே விடுவானா?

நேற்று பெய்த மழையில் முளைத்த காளான்களுக்கு, முண்டங்களுக்கு இவையெல்லாம் தெரிவதற்கு வாய்ப்பே கிடையாது!

மூளை; மூளையைப் பயன்படுத்தவில்லை என்றால், முண்டம் என்று அர்த்தம்!
என்னடா, இவர் முண்டம் என்று கடுமையான வார்த்தையைச் சொல்கிறாரே என்று நினைக்கலாம்; இவர் கடுமையாகப் பேசமாட்டாரே என்று நீங்கள் நினைக்கலாம். நான் தவறாகச் சொல்லவில்லை,

தலைக்கு மேலே இருந்தால்தான் மூளை; மூளையைப் பயன்படுத்தவில்லை என்றால், முண்டம் என்று அர்த்தம்; அது தண்டம்; அதனால் சமுதாயத்திற்கு எந்தப் பயனும் கிடையாது. ஆகவே, நீங்கள் சிந்தித்துப் பார்க்கவேண்டும்! - கி.வீரமணி அவர்கள்.

ஒரு சராசரி ஹிந்து இவற்றில் எதையுமே தெரியாமல் இருக்கின்றான்.

அவன் இப்படியொரு மதத்திற்கு தான் சொந்தக்காரனாக இருப்பது அறிந்து வெட்கப்படுவான்.வேதனைப்படுவான். தலைகுனிவான். அதிலிருந்து தப்பிக்க முயற்சிப்பான்.

>>>>இங்கே சொடுக்கி தொடர்ந்து படிக்கவும்<<<<<

Dr.Anburaj said...

மனுதர்ம புத்தகத்தில உ்ளள இதுபோன்ற அக்கிரமமான கருத்துக்களுக்காக அதை நாங்கள் கொழுத்திவிட்டோம். ஆனால் யுத்தத்தில கணவனை மகனை இழந்தப் பெண்களை வைப்பாட்டியாக வைத்துக் கொள்ளுங்கள் என்று சொல்லும் குரானை என்ன செய்யலாம் ?