
ஐரோப்பிய ஒன்றியத்தில் இருக்கும் ஸ்வீடன் நாட்டில் முதன் முதலாக ஒரு முஸ்லிமுக்கு முக்கிய மந்திரி பதவி கொடுக்கப்பட்டுள்ளது. 27 வயதே நிரம்பிய அய்தா ஹெட்சியாலிக் என்ற முஸ்லிம் பெண்மணிக்கு கல்வி மந்திரி பதவி கொடுத்து அழகு பார்த்துள்ளது ஸ்வீடன் அரசு.
இந்த பெண்மணி போஸ்னியாவிலிருந்து புலம் பெயர்ந்து வந்தவர். 1987ல் பிறந்தார். 1992ல் போஸ்னிய செர்பிய போர் உச்சக்கட்டத்தை எட்டிய போது அங்கிருந்து இவரது குடும்பம் போஸ்னியாவுக்கு புலம் பெயர்ந்தது. அப்போது அவருக்கு வயது ஐந்து. அன்று நடந்த உள் நாட்டு பொரில் 200000 முஸ்லிம்கள் அநியாயமாக செர்பியர்களால் கொல்லப்பட்டனர். பிறந்த நாடை விட்டு சோகத்தோடு வெளியேறிய இந்த குடும்பத்துக்கு ஸ்வீடன் புகலிடம் அளித்தது.
சோகத்திலெல்லாம் பெரிய சோகம் சொந்த மண்ணை விட்டு பிரியும் சோகம்தானே! அந்த வலியை உணர்ந்ததாலோ என்னவோ கடுமையாக படித்து பல திறமைகளை வளர்த்துக் கொண்டு அரசியலிலும் பிரவேசித்து இன்று கல்வி மந்திரியாகவும் பதவி ஏற்றுள்ளர் இந்த இள மங்கை.
ஸ்வீடன் முழுக்க 450000 லிருந்து 500000 லட்சம் வரை முஸ்லிம்கள் உள்ளதாக 2011 ஆம் ஆண்டு அறிக்கை கூறுகிறது. பல ஐரோப்பியர்கள் தினமும் இஸ்லாத்தை ஏற்கும் செயல் அதிகரித்தவண்ணமே உள்ளது. தற்போதய கால கட்டத்தில் இஸ்லாமியரின் எண்ணிக்கை பல மடங்கு அதிகரித்திருக்கலாம் என்று அறிக்கைகள் கூறுகின்றன.
தகவல் உதவி
முஸ்லிம் மிர்ரர்
10-10-2014
No comments:
Post a Comment