Followers

Monday, November 03, 2014

நரேந்திர மோடி உதிர்த்த மற்றொரு முத்து! :-)

சர் எச்.என்.ரிலையன்ஸ் அறக்கட்டளை மருத்துவமனை மற்றும் ஆய்வு மையம் ஒன்றை கடந்த சனிக்கிழமை நரேந்திர மோடி திறந்து வைத்தார். அப்போது அவர் பேசியதாவது:

"மகாபாரதத்தில் கர்ணன் தாயின் கருவறையிலிருந்து பிறந்தவரல்ல என்று கூறப்பட்டுள்ளது. அதாவது இதிகாசம் எழுதப்பட்ட அந்தக் காலக்கட்டத்தில் மரபணு விஞ்ஞானம் இருந்து வந்துள்ளதை இது அறிவுறுத்துகிறது. நாம் விநாயகரை வணங்குகிறோம். அவரது மனித உடலில் யானையின் தலையைப் பொருத்திய பிளாஸ்டிக் சர்ஜன்கள் அப்போது இருந்திருக்க வேண்டும்” என்று பேசியுள்ளார்.

இந்த பேச்சானது பலரின் விமரிசனத்துக்கு உள்ளாகியுள்ளது. ஒரு நாட்டின் பிரதமர் ஒரு விஷயத்தை பொதுவில் பகிரும் போது அதற்கான ஆதாரங்களை சமர்ப்பிக்க வேண்டாமா? உரையை எழுதிக் கொடுக்கும் அதி புத்திசாலிகளாவது இதனை மோடிக்கு உணர்த்த வேண்டாமா? ஒருவரின் தனிப்பட்ட நம்பிக்கை என்பது வேறு. ஒரு நாட்டின் பிரதமரின் உரை என்பது வேறு. இது போன்ற புருடாக்கள் குஜராத்தில் முன்பே தொடங்கி விட்டது. அதனையும் சற்று பார்ப்போம்.

மோடியின் இத்தகைய பார்வைகள் தினாநாத் பத்ரா என்பவரின் பார்வைகளை எதிரொலிப்பதே. இவரது புத்தகங்கள் தற்போது குஜராத் மாநிலத்தில் 42,000 பள்ளிகளில் பாடத் திட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ளது. இந்தப் பாடத்திட்ட நூல்களில் குந்தி மற்றும் கவுரவர்கள் காலத்திலேயே ஸ்டெம் செல் ஆராய்ச்சி இருந்தது என்றும், மகாபாரதக் காலக்கட்டத்திலேயே தொலைக்காட்சி கண்டுபிடிக்கப்பட்டது என்றும், வேத காலத்திலேயே மோட்டார் வாகனம் இருந்தது என்றும் கூறப்பட்டுள்ளது. இது போன்ற பாடத் திட்டங்கள் இனி மோடி ஆட்சியில் முழு இந்தியாவுக்கும் விரிவுபடுத்தப்படலாம். மோடி சொல்லும் புருடாக்களை விட மிக அதிகமாக கிரேக்கத்திலும் ஈரானிலும் உள்ளது.

கிரேக்க புராணங்களில் மனித-குதிரை வடிவ புராண உயிரிகளும், மனித உடலில் எருதின் தலை உள்ள புராண உயிரிகளும், பெர்சியர்களிடத்தில் உடல், வால், பின்கால்கள் ஆகியவை சிங்கத்துடையதாகவும், தலையும், இறகுகளும் பருந்தினுடையதாகவும் உள்ள கற்பனை உருவம் உள்ளது. பிரித்தானியர்களிடத்தில் யுனிகார்ன் உள்ளது. மேலும் தேவதைக் கதைகளில் கடற்கன்னி, மனித உருவத்திலிருந்து ஓநாய் உருவத்திற்கும் பின்பு மனித உருவத்திற்கும் மாறும் உயிரிகள் இருக்கின்றன. மோடியின் நம்பிக்கை அளவுகோல்களின் படி பார்த்தால் மேற்கூறியவையும் உண்மையில் இருந்தனவென்றே ஆகும்.

சாதிக் கொடுமை பெண் கொடுமை தீண்டாமை என்று இந்தியா முழுக்க பல இந்து குடும்பங்களை இந்து மதம் சீரழித்து வருகிறது. அதனை மாற்ற மோடி முயற்சிக்கட்டும். கழிவறை இல்லாத எத்தனையோ கிராமங்கள் இந்தியா முழுக்க வியாபித்து நமது நாட்டை நாறடித்துக் கொண்டுள்ளன. இந்துக்களின் காவலன் என்று கூறி வரும் மோடி முதலில் இந்த சீர்திருத்தங்களுக்கு வழி காணட்டும். அதைவிடுத்து புராண நம்பிக்கைகளை எல்லாம் அறிவியலில் புகுத்த முயற்சித்தால் வெளி நாட்டுத் தலைவர்கள் நம் நாட்டை கேலி செய்ய ஆரம்பித்து விடுவர். அந்த நிலை மோடியால் வர வேண்டாமே!

11 comments:

tamilan said...

மகாபாரதமா / மாபாதகமா?

திரவுபதை கர்ணன் மீது ஆசைப்பட்டது ஏன்? அதற்கான காரணத்தையும் அவரே சொல்லி விடுகிறார்.

1. தருமன் _ சதா வேதாந்தம் படிப்பவன்

2. பீமன் _ உடல் பெரியவன், குண்டன், சாப்பிட்டுக் கொண்டே இருப்பவன்.

3. அர்ச்சுனன் _ ஏகப்பட்ட மனைவிகள் (ஆற்று மணலை எண்ணினாலும் அர்ச்சுனன் மனைவியரை எண்ண முடியாதாம்!)

4. நகுலன், 5. சகாதேவன் _ எனது பிள்ளைகள் மாதிரி.
எனவே கர்ணன் மீது எனக்கு ஆசை என்கிறாள் திரவுபதை.
இதுதான் பாரதத்தின் கதாநாயகி நாட்டு மக்களுக்குத் தரும் அருள்வாக்கா? வழிகாட்டும் நெறிமுறையா?

திரவுபதை என்னவென்றால், தனக்கு 5 கணவன் போதாது; ஆறாவது கணவன் கர்ணனுக்கு கண்ணடித்தாள்.

பாரதத்தின் முக்கிய கதாப்பாத்திரங்களுள் ஒருவனாகிய அர்ச்சுனன் எப்படிப்பட்டவன் என்றால், ஆற்று மணலை எண்ணினாலும் அவனின் மனைவியர்களை எண்ண முடியாதாம்!

இத்தகு நூல்தான் சிறந்த இலக்கியமா? வாழ்வியல் நூலா? சீர்தூக்கிச் சொல்லட்டும் பார்க்கலாம்!

மகாபாரதத்தின் இணைப்பாகிய கீதையோ பெண்களைப் பாவயோனியில் பிறந்தவர்கள் என்று அசிங்கப்படுத்துகிறது. (கீதை: அத்தியாயம் 9, சுலோகம் 32)

தாயைப் போற்றும் தமிழ்த் தரணியில் அந்தத் தாய்க்குலத்தை ஒரு தறுதலைபோல ஆபாசக் கண்கொண்டு அடையாளப்படுத்தும் கீதை.

புகழ்பெற்ற வரலாற்று அறிஞர் ஆர்.எஸ்.சர்மா முடிவு

மகாபாரத காலத்தில் கிருஷ்ணன் வாழ்ந்ததற்கு ஆதாரம் இல்லை என 90 வயது கடந்தவரும், பல வரலாற்று நூல் எழுதியவருமான பேராசிரியர் ராம் சரண் சர்மா எழுதியுள்ளார்.

இதிகாச காலம் உண்மையா?

11_ஆவது வகுப்புக்கான என்.சி.ஆர்.டி. வெளியிட்டுள்ள தொன்மை இந்திய வரலாறு (ஏன்சியன்ட் இண்டியன் ஹிஸ்டரி) எனும் நூலை எழுதியவர் ராம் சரண் சர்மா (ஆர்.எஸ்.சர்மா)

அந்த நூலில், கிருஷ்ணன் மகாபாரதத்தில முக்கியப் பங்கு ஆற்றியதாக இருந்தாலும், மதுரா நகரில் கி.மு.200 முதல் கி.பி.200 வரை கிடைக்கப்பெறும் சிற்பத் துண்டுகள், கிருஷ்ணன்பற்றிய தகவலைத் தரவில்லை. இதன் காரணமாக, ராமாயணம் மற்றும் மகாபாரதம் ஆகியவற்றின் அடிப்படையில் இதிகாச காலம் எனும் கருத்தைப் பற்றிப் பேசுவதைக் கைவிடவேண்டும் என எழுதப்பட்டிருக்கிறது.

அயோத்தி ராமன்

அயோத்தியாவைப் பற்றியும், ஆர்.எஸ்.சர்மாவின் நூல் ஓர் ஆய்வு முடிவைத் தருகிறது.

புராணங்களில், மிக நீண்ட குடும்பக் கால்வழி கூறப்படுகிறது. ஆனால், அவை கூறும் குடும்பக் கால்வழியை விட அகழ்வு ஆய்வு வெளிப்படுத்தும் தடயங்களையே ஏற்றுக்கொள்ள வேண்டும்.

புராண மரபுப்படி அயோத்தியில் ராமன் கி.மு.2000_இல் வாழ்ந்ததாகக் கூறப்படுகிறது. ஆனால், அயோத்தியில் விரிவான அளவில் தோண்டிப் பார்த்து, ஆய்வு நடத்திய பின்பு, அந்தக் காலத்தில் அங்கு மக்கள் வாழ்ந்ததாகவே தெரியவில்லை என்று ஆர்.எஸ்.சர்மாவின் தொன்மை வரலாறு எனும் நூல் கூறுகிறது.

tamilan said...

கிருஷ்ணனையும் கீதையையும் செருப்பால் அடிக்கத் துணியாமல் போனால் நீ சூத்திரன் தானே! பயந்தீன்னா நீ சூத்திரனாக இருந்துக்கோ!

மனிதனுடைய வாழ்வு இழிவாப் போனது எந்தக் காரணத்தினால், கடவுளால் ஏற்பட் டது. எந்தக் கடவுளால்? அந்தக் கடவுளை ஒழிக்கணும்.

நான் எத்தனை நாளைக்குச் சூத்திரனாக இருக்கிறது? நான் எத்தனை நாளைக்கு அறிவை இழந்து, கண்டவன் சொன்னதைக் கேட்டுவிட்டுத் தலை வணங்கி, கும்பிட்டுக்கிட்டு இருக்கிறது?

மத்தவன் ஆகாயத்தில் பறக்கிறான்; நாம் இங்கே பார்ப்பான் காலைக் கழுவித் தண்ணியைக் குடிக்கணுமா?

நம் மதத்தைப்பற்றிப் பேச ஆரம்பிச்சா பார்ப்பான் மட்டும் ரகளை பண்ண மாட்டான்.

அவனோட வைப்பாட்டி மகன்னு நினைச்சுக்கிட்டு, சாம்பலை அடிச்சிக்கிட்டு நாமம் போட்டுக்கிட்டு “சிவசிவ ராமா ராமா’’ னுட்டு உளறுகிறானே. அந்தப் பயல்தான் நம்ம கிட்டே சண்டைக்கு வருவான்.

இப்பக்கூட கேசைப் பத்தி ஒண்ணும் சொல்லலே நடப்புப்பத்தி சொல்றேன். சேலத்திலே இராமனைச் செருப்பாலே அடிச்சுட்டேன்னு பார்ப்பான் எவனும் பிராது போடல்ல. நம்மவன்தான் பிராது போட்டிருக்கிறான். “அவன் இராமனைச் செருப்பாலே அடிச்சான்! அந்த மாதிரி பண்ணுனா என் மனசு புண்ணாகுது!’’ அப்படிப் போட்டு இருக்கிறான். இப்ப சம்மன் வந்திருக்கிறது. பேப்பரிலே பார்த்திருக்கலாம்.

நான் ஒரு இந்துன்னு ஒத்துக்கிட்டேன்னா நான் சூத்திரன்னு ஒத்துக்கத் தானே வேணும்! அது மாத்திரமல்ல, மற்ற சாஸ்திர சம்பிரதாயங்களை ஒத்துக்கிட்டா, கடவுளை ஒத்துக்கிட்டா கடவுள் சொன்னார் என்பதற்கெல்லாம் நாம் கட்டுப்பட்டுத்தானே ஆகணும்!

சாஸ்திரம் என்ன சொல்கிறது என்பதற்கு நாம் கட்டுப்பட்டுத்தானே ஆகணும்!

யாரடா சொன்னா, உன்னைத் தேவடியா மகன்னு, சூத்திரன்னு சொன்னா? கிருஷ்ணன் சொன்னான்! எங்கடா சொன்னான்? கீதையிலே சொன்னான்! கிருஷ்ணனையும் கீதையையும் செருப்பால் அடிக்கத் துணியாமல் போனால் நீ சூத்திரன் தானே! பயந்தீன்னா நீ சூத்திரனாக இருந்துக்கோ!

----------- தந்தைபெரியார்- நூல்: "சிந்தனையும் பகுத்தறிவும்" பக்கம் 8-11

http://thamizhoviya.blogspot.sg/2008/04/blog-post_3045.html

Dr.Anburaj said...

திருமணத்திற்கு முன் முன் ..முன் கா்ணன் மீது தனி விருப்பம் கொண்டிருந்தாா் துரௌபதி என்பதுதான் உண்மை.அதில் என்னத்தவறு.

UNMAIKAL said...

மோடியின் இரண்டு முகங்கள்..
****************************

வரலாற்றுக்கு முந்திய காலங்களிலேயே 'ஜெனெடிக் என்ஜினீரிங்' முதலான துறைகளில் இந்தியர்கள் முன்னணியில் இருந்தார்களாம்.

இதை மோடி எங்கே பேசினார் தெரியுமா? ரிலையன்ஸ் ஃபௌன்டேஷன் மருத்துவமனைத் தொடக்க விழாவில்..

"கர்ணன் தன் தாயின் கருப்பையிலிருந்து தோன்றவில்லை என மகாபாரத்த்தில் சொல்லப்பட்டுள்ளது. இதன்பொருள் உயிர் அணு அறிவியல் அந்தக் காலத்தில் வளர்ந்திருந்தது என்பதுதானே?

விநாயகர் யானைத் தலையுடன் பிறந்தார் எனில் அந்தக் காலத்திலேயே ப்ளாஸ்டிக் சர்ஜன்கள் இருந்தார்கள் என்பதுதானே..."
மோடியின் அறிவார்ந்த கேள்விகள் இவை....

குளிக்கச் சென்ற இடத்தில் அங்கு குளித்துக் கொண்டிருந்த ஒரு அப்சரசைக் கண்டு பரத்வாஜ முனிவருக்கு விந்து பீறிட்டு வெளிப்பட்டது எனவும் அதை அவர் ஒரு மண்கலயத்தில் (துரோண்) ஏந்திக் கொண்டார் எனவும் அதில் முளைத்தவர்தான் பின்னாளில் ஏகலைவன் எனும் பழங்குடி வீரனின் கட்டை விரலை வாங்கிய துரோணர் என்றும் கதை சொல்லி, ஆக அந்தக் காலத்திலேயே சோதனைக் குழாய்க் குழந்தைகள் இருந்தன எனப் பாடபுத்தகங்களில் (கர்நாடக பா.ஜ.க அரசு வெளியிட்ட 9ம் வகுப்பு பாடநூல்) இளம் பிள்ளைகளுக்குப் பாடம் சொன்னவர்கள் தானே இவர்கள்.

வேத காலத்திலேயே மோட்டார் கார்கள் இருந்தன எனவும், மகாபாரதக் காலத்திலேயே ஸ்டெம் செல் ஆய்வுகளும் டெலிவிஷனும் இருந்தன எனவும் கதை அளக்கும் தீனாநாத் பத்ராவின் பாடநூல்களை குஜராத்தில் உள்ள 42,000 பள்ளிகளில் பாடமாக வைத்தவர்தானே இந்த மோடி.

ஒரு பக்கம் smart cities, புல்லட் ரயில்கள், மங்கல்யான் பெருமிதங்கள் இன்னொரு பக்கம் இத்தகைய அபத்தங்கள்..
ஒவ்வொரு ஆதிப் பண்பாடுகளிலும் இதுபோன்ற அதீத நம்பிக்கைகள் இருக்கத்தான் செய்கின்றன.

கிரேக்கப் புராணத்தில் மனித முகச் சிங்கங்கள், பாரசீகக் கதைகளில் கழுகு முகமும் இறக்கைகளும் உள்ள சிங்கங்கள், ஆங்கிலேயர்களிடம் கடற்கன்னிகள்... மோடி சொபவை உண்மையானால் அப்புறம் இவை எல்லாமும் உண்மைதானே. இப்படியெல்லாம் நம்புவது எங்கு கொண்டு விடும்?

வேதகாலத்தில் மோட்டார் கார்களும் மகாபாரதத்தில் தொலைக்காட்சிகளும் இருந்தன என்றால் பின் அவை எப்படி மறைந்தன? (ஒரு வேளை முஸ்லிம் படையெடுப்புகளால்தான் அவை மறைந்தன எனப் பாட நூல்களில் எழுதினாலும் எழுதுவார்கள்).

இப்படி அறிவுக்குப் புறம்பான அபத்தங்கள் ஒரு பிரதமரின் வாயிலிருந்து உதிர்வதையும், இதை ஊடகங்கள் கண்டுகொள்ளாமல் இருப்பதையும் என்னென்பது?

ஒவ்வொரு குடிமகளும், குடிமகனும் அறிவியல் பார்வையை வளர்த்துக் கொள்ள வேண்டும் என நமது அரசியல் சட்டத்தில் [51 (A) (h)] சொல்லவில்லையா? -Marx Anthonisamy

https://www.facebook.com/marx.anthonisamy/posts/749353855137341

Anonymous said...

//கிரேக்க புராணங்களில் மனித-குதிரை வடிவ புராண உயிரிகளும், மனித உடலில் எருதின் தலை உள்ள புராண உயிரிகளும், பெர்சியர்களிடத்தில் உடல், வால், பின்கால்கள் ஆகியவை சிங்கத்துடையதாகவும், தலையும், இறகுகளும் பருந்தினுடையதாகவும் உள்ள கற்பனை உருவம் உள்ளது. பிரித்தானியர்களிடத்தில் யுனிகார்ன் உள்ளது. மேலும் தேவதைக் கதைகளில் கடற்கன்னி, மனித உருவத்திலிருந்து ஓநாய் உருவத்திற்கும் பின்பு மனித உருவத்திற்கும் மாறும் உயிரிகள் இருக்கின்றன//
ஹ ஹ ஹ - ஆமாங்க இப்படிதான் புராக்குனு ஒரு வித்தியாசமான மிருகதுல ஒருத்தர் வானத்துல பறந்து கடவுள பார்த்து வந்ததா கொஞ்ச பேர் உளறிட்டு திரியிறாங்க. ஆனா அதை கற்பனைன்னு சொன்னங்கன்னு வைங்க அப்புறம் அவங்க மதமே பொய்னு ஆகிடுங்க.

UNMAIKAL said...

மோடியின் ஆராய்ச்சி?


இந்து மதம் என்று வந்துவிட்டால் ஆங்கே மதிக்கு என்ன வேலை? அவர் பிரதமராக இருந்தால் என்ன? அதற்கு மேலே உள்ள ஜனாதிபதி நாற்காலியில் அமர்ந்தால் தான் என்ன? அவர்களின் அறிவைப் பீடித்த மூடத்தன கிரகணம் சும்மா விட்டுவிடுமா?

இந்தியாவின் ஹைடெக் பிரதமர் நரேந்திர மோடி இருக்கிறாரே, சில நாள்களுக்கு முன் தன் அறிவியல் விஸ்தீர ணத்தை ரொம்பத்தான் காட்டியுள்ளார்.

மகாபாரதத்தில் கர்ணன் குந்தியின் கருப்பையில் உருவாகவில்லை என்று கூறப்பட்டுள்ளதால், அந்தக் காலத்திலேயே மரபணு பிறப்பியல் அறிவியல் வளர்ந்திருந்ததை அறியலாம்.

பிள்ளையார் உருவத்தைக் கொண்டு அந்தக் காலத்திலேயே பிளாஸ்டிக் நடைமுறையில் இருந்ததையும் அறியலாம் என்று திருவாய் மலர்ந்தருளியுள்ளார் பாரதப் பிரதமர் ஸ்ரீலஸ்ரீ நரேந்திர தாமோதர தாஸ் மோடி.

சரி... அந்தக் கர்ணன் பிறப்பு தான் என்ன? மகாபாரதத்தில் அப்படி என்னதான் சொல்லப் பட்டுள்ளது?

பாகவதம் 9.24.34 க்கு உலக ஹரே கிருஷ்ணா இயக்கத்தின் நிறுவனரான சுவாமி பிரபுபாத அடிகள் கொடுக்கும் விளக்கம்

TEXT 34
amoghaA deva-sandarœam
âdadhe tvayi câtmajam
yonir yathâ na ducyeta
kartâhaA te sumadhyame
amogham விளை வில்லாமல் போகாது;-deva-sandarœam-- தெய்வக் கூடுதலால்; âdadhe- என்னுடைய விந்தை விடுவேன்;
tvayi- உன்னுள் ca- அத்துடன்; âtmajam-ஒரு மகனையும்; yoni%-பிறப்புறுப்பில்- யோனியில்; yathâ na ducyeta- - குற்றம் ஏற்படாத வகையில்; kartâ-ஏற்பாடு செய்வேன்; ; ; aham-நான்; te-உனக்கு; sumadhyame- ஓ அழகிய பெண்ணே.

அதாவது:
சூரியக் கடவுள் கூறுகிறான்: ஓ அழகிய ப்ருதா (குந்தி)! நீ கடவுள்களுடன் கொள்ளும் உறவு பலனில் லாமல் போகாது. எனவே, என்னுடைய விந்தை உன்னுடைய பிறப்புறுப்பில் (யோனியில்) விட இசைவாய்; அதனால் உனக்கு ஒரு மகன் பிறப்பான். ஆனாலும், நீ திரு மணம் ஆகாதவள் என்பதால் உன்னுடைய கன்னித் தன்மை அழியாமல் பார்த்துக் கொள்வேன். (இது எப்படி இருக்கு!)

குந்தியின் கன்னித் தன்மையைக் காக்கும் வகையில் மகவைக் குந்தியின் காது வழியாகச் சூரியன் பிறக்கச் செய்தான் என்று, பிரபுபாத அடிகள் மேற்கூறிய விளக்கத்துக்குப் பிற்சேர்க்கையையும் இணைத்துள்ளார்.

அதாவது வேதப் பண்பாட்டின்படி, திருமணத்திற்கு முன் ஒரு பெண் குழந்தை பெற்றுக் கொண்டால் அவளை எவரும் மணம் முடிக்கமாட்டார்கள் என்பதால் குந்தி சூரியனுடன் உறவு கொள்ளத் தயங்கினாள். மந்திரத்தின் ஆற்றலால் தான் அவளைக் கூடியே ஆகவேண்டும் என்னும் நிலை உள்ள தால் குழந்தை கருப்பையில் உருவானாலும் காது வழியாகப் பிறக்கச் செய்வதாகச் சூரியன் கூறி, அவளை இசைய வைத்தான். அவன் கூறியவாறே காது வழியாகப் பிறந்ததால் பிள்ளை கர்ணன் என்றழைக்கப்பட்டான் என்றும் இதனால் குந்தியின் கன்னித் தன்மை காக்கப்பட்டதாம். கர்ண என்றால் சமற்கிருதத்தில் காது என்று பொருள்.

இந்துத்துவாவாதிகளுக்கும், அறிவியலுக்கும் எந்தவிதத் தொடர்பு என்பதற்கு இது ஒன்று போதும்.

பூமியிலிருந்து சூரியன் 14 கோடியே 96 லட்சம் கி.மீ. தூரத்தில் உள்ளது. அதன் வெப்பம் 5504.85 செல்சியஸ் (9940.73 பரான் ஹீட்).
இவ்வளவு தூரத்தில் இருக்கும் போதே கோடைக் காலங்களில் அதன் தாக்கத்தைப் பூமியில் தாங்கிக் கொள்ள முடியாமல் தவித்துப் போகிறோம் - சிலர் மரணம் அடைவதும் (Suns Stroke) உண்டு.

இந்த நிலையில், ஒரு பெண்ணை சூரியன் புணர்ந் தான் என்பதும், காது வழியே கர்ணன் பிறந்தான் என்பதும் கடைந்தெடுத்த கொடிய நகைச்சுவையல்லவா!

விஞ்ஞான மனப்பான்மையை வளர்க்கவேண்டும். அது ஒவ்வொரு குடிமகனின் கடமை என்று இந்திய அரசமைப்புச் சட்டம் (51-ஏ(எச்)) கூறு கிறது. ஒருக்கால் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இந்தி யக் குடிமகன் அல்லவோ!

பிரதமர் என்பவர் அந்தப் பட்டியலில்தான் வரமாட்டாரோ!
- மயிலாடன்.

http://viduthalai.in/e-paper/90558.html#ixzz3IFKywoOW

Anonymous said...

புராண நம்பிக்கைகளை எல்லாம் அறிவியலில் புகுத்த முயற்சித்தால்

hahaha look who is talking.

Anonymous said...

nit only keethai , kuran also

ADVOCATERANGARAJAN said...

பாய்,
நீங்க இந்த ப்ளாகை நடத்துறது உங்க மதத்தை பாராட்டவா அல்லது
இந்து மதத்தை இகழவா? நல்லா இருக்கு பாய், உங்க "உன்மதம் உனக்கு என் மதம் எனக்கு" பாலிசி..

Dr.Anburaj said...

புராணங்களில் தோ்வு செய்துதான் படிக்க வேண்டும். சகட்டு மேனிக்கு நம்ப வேண்டும் என அவசியம் அல்லை. இலக்கிய தரத்தில் எழுதும்போது விபரீதமான கற்பனைகளும் கைசரக்குகளும் சேர்க்கப்படுகின்றன என்பது உண்மையே. அதற்கு தகக புராணங்கள் பின்னுக்கு போய்கொண்டிருக்கின்றன. நல்ல விசயங்களை எடுத்துக் கொள்ளலாம். இந்துமதம் கற்க ஸ்ரீராமகிருஷ்ணரின் அமுத மொழிகள் ஸ்ரீமத்சுவாமி விவேகானந்தாின் புத்தகங்கள் சிறந்தவை. அதிக சிரமம் விளக்கங்கள் இன்றிப் படிக்கலாம்.

Dr.Anburaj said...

மக்களுக்கு தாம் வாழ்நது வரும் சமுதாயத்தின் மீது முன்னோா்கள் மீது நம்பிக்கை பெருமிதம் கொள்ள வேண்டும். அதற்கான இது போன்ற கதைகள் பேசுவது இசுலாமிய உலகம் இந்து உலகம கிறிஸ்தவ உலகம் எ்ங்கும் உள்ளதுதான். இதனால் பாதிப்பு வராது.