Followers

Sunday, November 30, 2014

நேபாளத்தில் ஒரே நேரத்தில் 5000 மாடுகள் பலி கொடுக்கப்பட்டுள்ளன!





காத்மாண்டு: நேபாளம், பாரா மாவட்டத்தில் உள்ள பரியார்பூர் என்ற கிராமம். இங்குள்ள காதிமை கோவிலில், ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை எருமைகளை பலியிடுவது வழக்கம். இந்த ஆண்டு, 5 ஆயிரத்திற்கும் அதிகமான எருமை மாடுகள் ஒரே நேரத்தில் பலி கொடுக்கப்பட்டன. இவ்வாறு விலங்குகளை பலி கொடுப்பதால், தங்களுக்கு நல்ல வசதியாக வாழ்க்கை கிடைக்கும் என்ற நம்பிக்கை நிலவுகிறது. இந்த விழாவில் கலந்து கொள்வதற்காக இந்தியா உள்ளிட்ட பல நாடுகளில் இருந்து ஏராளமானோர் வந்திருந்தனர். எருமை மாடுகளை பலி கொடுப்பதற்காக 400 பேர் பணியில் இருந்தனர். எருமை மாடுகள் தவிர ஆயிரக்கணக்கான ஆடுகளும், பன்றி மற்றும் கோழிகளும் இந்த விழாவில் பலி கொடுக்கப்பட்டன. விலங்குகள் பாதுகாப்பு ஆர்வலர்கள் இதில் தலையிட்டு, தடுக்க முயற்சி மேற்கொண்டனர். ஆனால், பராம்பரியமாக இந்த விழா நடத்தப்பட்டு வருவதாகவும், அதனால் நிறுத்த முடியாது என்றும் விழா ஏற்பாட்டாளர்கள் கூறி உள்ளனர். இந்த விழாவில் கலந்து கொண்ட ஒரு குழந்தை குளிர் தாங்காமல் இறந்துவிட்டது. கூட்ட நெரிசலில் சிக்கி, மூதாட்டி ஒருவர் இறந்தார்.

தினமலர்
30-11-2014

மாடுகளை தனது வயிற்றுப் பசிக்காக அறுத்து புசித்த நான்கு தலித்களை அடித்தே கொன்றது மேல் சாதி வர்க்கம். சில ஆண்டுகளுக்கு முன் வட இந்தியாவில் நடந்த இந்த சம்பவம் பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது ஞாபகம் இருக்கலாம். மாட்டுக் கறியில் புரதச் சத்து அதிகம் உள்ளது. விலையும் குறைவு. உடல் உழைப்பு சார்ந்த தொழில் செய்யும் தலித் மக்களுக்கு இந்த புரதம் அவசியம். அலுவலக வேலை மட்டுமே செய்து பழக்கப்பட்ட பார்பனர்களுக்கு இந்த புரதச் சத்தெல்லாம் தேவைப்படாது. தேவைப்படுபவர்கள் தங்களின் பொருளாதாரத்தை செலவு செய்து பெற்றுக் கொள்வதில் இவர்களுக்கு என்ன பிரச்னை என்று தெரியவில்லை.

ஒருவருக்கு மாடு தெய்வம் என்றால் அதனை அவரது வீட்டில் வைத்து அதற்கு மரியாதை செய்து கொள்வதை யாரும் தடுக்கவில்லை. பொது வெளியில் மொத்த மக்கள் தொகையில் இரண்டு சதவீதமே இருக்கும் பார்பனர்கள் 'எனது நம்பிக்கைப்படி மற்ற 98 சதமான இந்தியர்களும் மாற வேண்டும்' என்று அடம் பிடிப்பது சர்வாதிகாரம் இல்லையா?

இவர்களுக்கு அவசியம் என்றால் ஒரே இடத்தில் 5000 மாடுகளை வெட்டி யாருக்கும் பயன் படாமல் அழுக விடுவார்கள். சுற்றுப் புற சூழலை மாசுபடுத்துவார்கள் பக்தியின் பெயரால். ஆனால் வயிற்றுப் பசிக்காக அறுத்து எவரேனும் புசித்தால் அதனை பிரச்னையாக்குகிறார்கள். இதனை அறிவு ஜீவிகள் என்று சொல்லிக் கொள்வோரும் ஆதரிப்பதுதான் விந்தை.

இனி இந்து மதம் பசு பற்றி என்ன கூறுகிறது என்றும் பார்போம்.

யாதொரு மனிதன் கிரயத்திற்காவது, இலவசமாகவாவது பசுமாமிசத்தை வாங்கி தேவர் களுக்காவது அல்லது ஆத்மாக்களுக்காவது ஸ்தோத்திரம் செய்த பிறகு அம் மாமிசத்தைச் சாப்பிடுவதில் எத்தகைய பிணியும் கிடையாது. (மனு 235)

முள்ளெலி, பெருச்சாளி, ஆமை, முயல் ஆகியவைகளை இந்து மத நிபுணர்கள் உண்ணலாமென வைத்திருக்கின்றார்கள். நான்கு கால் மிருகங்களில் ஒட்டகம் ஒன்று மட்டும் நீங்கலாக ஒரு பக்கத்தில் மட்டும் பல்லிருக்கக் கூடிய மிருகங்கள் எதானாலும் சாப்பிடலாம். (மனு 185)

பசு குர்பானியின் முறை ஓர் விதமாகக் கூறப் பட்டிருக்கிறது. அதற்கு சுடப்பட்ட பசு மாமிசம் உப்புக் கண்டம் எனக் கூறப்படுகிறது. அதற்காக வேண்டி பசுக்களில் நல்ல பசுவாகவும், கொழுத்த தாகவும் இருப்பதுடன் பாதரம் நிறமாகவும் இருக்கக் கூடாது. இவ்வாறு இந்தப் பசுவுக்கு பல நிபந்தனைகளுண்டு. அவ்வாறு குர்பானி செய்யப்படும் பசுவிற்கு எத்தனை நிபந்தனைகளிட்டிருக்கின்றார்களோ அத்தனை நிபந்தனைகளும் பொருந்திய ஓர் பசுங்கன்று கிடைத்தால் வெந்நீர் கொண்டு குளிப்பாட்டி அதை ரூரா (சுவாமி)வுக்கு வேண்டுதலைசெய்து கட்டிவைத்து வளர்த்து வருகின்றார்கள். அந்தக் கன்றுக்குப் பற்கள் பூராவும் முளைத்து குறிப்பிட்ட தவணை வந்தவுடன் குர்பானியின் மந்திரம் கிரிவுக்கள் தெரிந்த புர்ஹத் பிராமணனை அழைத்து அவர் படிக்க வேண்டிய மந்திரங்களைப் படித்து நெருப்பில் போட வேண்டிய வஸ்துக்களைப் போட்டு செய்ய வேண்டிய கிரியைகள் பூராவையும் செய்து முடித்துவிட்டு புது நூதனமாக தயார் செய்யப்பட்ட ஓர் இடத்திற்கு அந்தப் பசுவைக் கொண்டுபோய் பொதுவான சட்டப்படி அறுத்து அதன் ஈரலை எடுத்து ஓர் தட்டில் வைத்து 12 தேவதைகளின் நாமங்களைச் சொல்லிக்கொண்டே அந்தத் தட்டை நெருப்பில் வைத்து விடுகிறார்! அதன் பிறகு வைக்கோல் புற்களை விரித்து கொஞ்சம் அரிசிப் பொத்தலையும் பசு மாமிசத்தையும் வைத்து ரூரோவுக்கு பூஜை செய்கின்றார்கள். பூர்வீக காலத்தில் அவ்வாறு குர்பானி செய்யப்பட்ட பசுவின் எலும்பு, ஜவ்வு, தோல் இவைகளை நெருப்பில் போட்டு எரித்து சாம்பலாக்கப்பட்டு வந்தது.

-குர்ஹீயா சூத்திரம்

தாவரங்களை கொன்று திண்பவர்கள் அது உயிர் வதையில் சேராது என்று வாதிப்பார்கலானால் அது முற்றிலும் தவறு. தாவரங்களும் உணர்கின்றன, வலியையும் உணர்கின்றன, தாவரங்களுக்கு rudimentary nerve structure என்று உள்ளது, அது தான் வலியை உணரக்கூடியதாக உள்ளது. ஒரு இலையை அதிலிருந்து எடுத்தாலோ அல்லது அதை தொட்டால் கூட அது உணரக்கூடியதாக உள்ளது. மேலும் மற்ற தாவரங்களோடு பேசுவதாக உள்ளது என்பது மேலும் ஆச்சர்யமான விஷயம்.

அது பற்றி மேலும் அறிய கீழ உள்ள சுட்டியை பார்க்கலாம்:

http://www.viewzone.com/plants.html

No comments: