Followers

Sunday, November 23, 2014

போங்கப்பூ.... போய் உங்க உங்க வேலையை பாருங்கப்பூ.....



'ஆடு மாடு மயிலு குயிலு இப்படி ஒன்னையும் விடாம கடவுளா முன்னாடி கும்பிட்டுக்கிட்டு இருந்தேன். அப்போ கூட இவ்வளவு டென்ஷனானது இல்ல..... அதெல்லாம் தப்புன்னு வெளங்கி ஏக இறைவனை இப்போ வணங்கிகிட்டு இருக்கேன். நானும் மனுஷந்தான் சில தவறுகள் நானும் பண்ணியிருக்கேன். அதற்கு இறைவனிடம் மன்னிப்பும் கேட்டுக்கிறேன். அதற்காக ஏம்பா என்னை இந்த கும்மு கும்முறீங்க....

நான் நேத்து இஸ்லாத்துக்கு வந்தவன்பா... பல பரம்பரையாக இஸ்லாத்துல இருக்கிறேன்னு வெத்து பெருமை பேசிக்கிட்டு திரியுற பல பதிவர்கள் 100 சதவீதம் இஸ்லாமியராக வாழுறீங்களாப்பா... அப்போ நான் மட்டும் 100 சதவீதம் உடன் மாறணும் என்று ஏம்பா வம்புக்கு வரிறீங்க....

போங்கப்பூ.... போய் உங்க உங்க வேலையை பாருங்கப்பூ.....

----------------------------------------------

இந்துவாக இருக்கட்டும் அல்லது முஸ்லிமாக இருக்கட்டும் அல்லது நாத்திகரகாவும் இருக்கட்டும். யாராக இருந்தாலும் ஒருவர் தவறு செய்தால் அதனை நளினமாக அவருக்கு எடுத்துக் கூறி அவரை நல் வழியின் பக்கம் கொண்டு வர முயற்சியுங்கள். அதைத்தான் இஸ்லாமும் விரும்புகிறது.

ஏமன் பிரதேசத்துக்கு தஃவாப் பணிக்காக முஆத் இப்னு ஜபல் (ரழி), அபூ மூஸா அல் அஷ்அரி (ரழி) ஆகிய இருவரையும் அனுப்பிய வேளையில் நபி (ஸல்) அவர்கள் இதனை ஞாபகமூட்டினார்கள். 'இலகுபடுத்துங்கள், சிரமப்படுத்தாதீர்கள்: ஆசையூட்டுங்கள், வெறுப்பூட்டாதீர்கள்.' (புகாரி, முஸ்லிம்)

அல்குர்ஆனும் இக்கருத்தை ஆங்காங்கே குறிப்பிட்டிருப்பதைக் காணலாம்.

'அல்லாஹ் எந்த ஓர் ஆத்மாவையும் அதன் சக்திக்கு மேல் நிர்ப்பந்திப்பதில்லை.' (பகரா 286)

'அல்லாஹ் உங்களுக்கு இலகுவாக்க விரும்புகிறானே தவிர, கஷ்டத்தைக் கொடுக்க விரும்பவில்லை.' (பகரா 185)

'நபியே! நீர் மனிதர்களை நளினமாகவும், அழகான நல்லுபதேசத்தைக் கொண்டுமே உம் இறைவனின்பால் அழைப்பீராக! அன்றி, அவர்களுடன் தர்க்கிக்க நேரிட்டால் நீர் கண்ணியமான அழகான முறையில் தர்க்கஞ் செய்வீராக!'' (16:125)

No comments: