Followers

Saturday, November 29, 2014

'ஜிஹாத்' - எனது மனம் கவர்ந்த குறும்படம்!https://www.youtube.com/watch?v=xf-e4JLd2eo

ஜிஹாத் எனும் வார்த்தை ஜுஹ்த் எனும் வேர்ச் சொல்லிலிருந்து பிறந்ததாகும். ஜுஹ்த் எனும் அரபிச்சொல்லுக்கு, "கடுமையாக முயற்சி செய்தல்" அல்லது "வெற்றி கிடைக்கும் வரை கடுமையாக போராடுதல்" அல்லது "விடாப்பிடியான எதிர்ப்பு முயற்சி (Struggle)" என்று பொருள்.ஒருவர் தன்னுடைய இலட்சியத்தை அல்லது நோக்கத்தை அடைய தன்னால் இயன்ற எல்லா வழிகளிலும் முயற்சி செய்தல் என்பது தான் இதன் அர்த்தம்.

எடுத்துக்காட்டாக சுயவிருப்பங்கள், ஆசைகளை நிறைவேற்ற வேண்டும் என்ற மனத்தூண்டுதல்கள், சமுதாய மரபுகளால் ஏற்படும் நிர்பந்தங்கள், சொத்து செல்வம் மீது உண்டாகும் பற்று, தான் எனும் அகங்காரம் ஆகிய யாவும் நற்கிரியைகளைத் தடை செய்யக்கூடியவை, தீமைகளில் ஈடுபட வழி வகுப்பவை இவற்றிலிருந்து மனதைக் கட்டுபடுத்துவதும் ஜிஹாத் ஆகும்.

இறை நம்பிக்கையாளர்கள் தங்களுக்குக் கட்டளையிடப்பட்ட விஷயங்களில் எல்லா இடையூறுகளையும் எதிர்த்து பல வழிகளில் கடுமையாக போராடி வெற்றி கொள்வதை குறிக்கும் ஒரு சொல்லாகத்தான் இஸ்லாம் "ஜிஹாத்" என்ற சொல்லை பயன்படுத்துகின்றது. "புனிதப்போர்" என்ற சொல்லுக்கு அரபியில் "ஹர்ப் முகத்தஸா" என்று வழங்கப்பெறும். அதாவது அரபியில் "ஹர்ப் முகத்தஸா" என்றாலே "புனிதப்போர்" என்று பொருள் வரும். இது திருக்குர்ஆனில் எங்குமே காணக்கிடைக்காத ஒரு சொல்லாகும். போர் என்ற சொல்லுக்கு இணையான இன்னொரு அரபுப்பதம் "கித்தால்" என்று அர்த்தம். எனவே போர் என்றாலும் புனிதப்போர் என்றாலும் ஜிஹாத் என்று அர்த்தம் கொள்ள முடியாது.

ஆனால் அமெரிக்கா போன்ற வல்லரசுகளாலும் யூதர்களாலும் வார்த்தெடுக்கப்பட்ட ஒரு சில கள்ள முல்லாக்கள் ஜிஹாதுக்கு 'புனிதப் போர்' என்று தவறாக அர்த்தத்தை கற்பித்து படிப்பறிவில்லாத இளைஞர்களை மூளை சலவை செய்து அப்பாவிகளை இலக்காக்குகிறார்கள். இதன் மூலம் மக்கள் மனதில் இஸ்லாத்துக்கு எதிரான ஒரு பிம்பத்தை ஏற்படுத்தி இஸ்லாத்தின் வளர்ச்சியை தடுக்க முயற்சிக்கின்றனர். குர்ஆனை விளங்கிய ஒரு முஸ்லிம் எந்த காலத்திலும் ஆயுதம் தூக்க மாட்டான். தனது உயிருக்கு ஆபத்து வரும் போது தற்காப்புக்காக மட்டுமே ஆயுதம் ஏந்தலாம். அதை விடுத்து ஒரு குழுவாகவோ ஒரு இயக்கமாகவோ இயங்கி ஆயுதம் ஏந்தி மக்களை கொல்வது இஸ்லாமிய நடைமுறைக்கு நேர் மாற்றமாகும். அரசுக்கு எதிராக ஆயுதம் தூக்க இஸ்லாம் தடை விதிக்கிறது. ஷியாக்கள், காதியானிகள், இந்துத்வாவாதிகள், இஸ்ரேலியர்கள், இஸ்லாத்தை உண்மையாக விளங்காத ஒரு சில முஸ்லிம்கள் என்று பலரும் இன்று இஸ்லாமிய வேடமணிந்து தீவிரவாத செயல்களில் ஈடுபடுகின்றனர். இணையத்திலும் பொய்களைப் பரப்புகின்றனர். அதில் சில இடங்களில் வெற்றியும் பெற்றுள்ளனர். மக்கள் இவர்கள் விஷயத்தில் மிகவும் ஜாக்கிரதையாக இருக்க வெண்டும்.

இவ்வாறாக வழி நடத்தப்பட்ட இளைஞர்களை குர்ஆனின் உண்மையான போதனைகளை விளக்கி நேர் வழியின் பால் கொண்டு வருவது நம் அனைவரின் மீதும் கடமையாகும்.


6 comments:

Anonymous said...

இந்த வியாக்கியானம், வேர்சொல், தலச்சொல் விளக்கம் எல்லாம் ரத்த வெறி பிடித்து துப்பாக்கியை தூக்கி கொண்டு அலையும் உமது கூமுட்டை கும்பலிடம் சொல்லி அவர்களை திருத்துமய்யா வெளக்கெண்ண. ஒரு பக்கம் அவனுக துப்பாக்கிய தூக்கி எல்லாரையும் கொல்லுவானுகளாம், இவனுக 'அது அப்பா இல்ல, இப்படி 'ன்னு விளக்கம் குடுப்பாய்ங்களாம். இது அமெரிக்கனின் வேலை என்றால் , உன் தூதனின் வாழ்வை மேற்கோள் காட்டியும் உன் வேதபுத்தக வசனத்தை சொல்லியும் தானே கொம்பு சீவுகிறார்கள். அப்டின்னா ரெண்டும் அந்த லட்சணத்துல இருக்கு. டிராமாவ கொஞ்சம் கொரச்சி போடுங்கப்பு. ரொம்ப நகைச்சுவையா இருக்கு.

சுவனப் பிரியன் said...

கூமுட்டை யாரென்பது பின்னூட்டத்திலேயே தெரிகிறதய்யா..... வேத வசனங்களை விளங்காத சில இளைஞர்களிடம் தவறாக விளக்குவதாக சொல்லியுள்ளேனே... படிக்கவில்லையா? பார்பனியத்தை தோளில் தூக்கி வைத்துக் கொண்டு அவர்களுக்கு தினமும் காவடி எடுக்கும் உம்மைப் போன்றவர்களுக்கு இதெல்லாம் விளங்காதுதான்.... :-)

Anonymous said...

யோவ் கூமுட்டை, உண்மை கசக்குதா, துப்பிருந்தால் எனது பதில்களை வெளியிட வேண்டியது தானே

Anonymous said...

பரவா இல்லை. உனக்கு கொஞ்சம் மூளை இருக்கிறது என்று நினைக்கிறேன். நான் சொன்னதை வைத்து உன் வேதம் ஒன்றும் அதிசய பொருள் அல்ல அதுவும் ஒரு குப்பை தான் என்று புரிந்து கொண்டாய் அது போதும். குப்பையில் தான் சிலருக்கு வைரம் கிடைக்கும் சிலர் அசிங்கத்தை மிதிப்பார்கள். ஆனால் உனது வேத புத்தக குப்பையில் வைரம் கிடைக்காது கண்ணாடி துண்டு தான் வைரம் மாதிரி தெரியும் அது காலை கிழித்து விடும், ஆனால் கண்டிப்பாக அசிங்கம் இருக்கும்.

Anonymous said...

எனது நாட்டை இழிவு படுத்துவதையே வேளையாக வைத்திருக்கிறாய் துலுக்க நாயே. போய் அரபு எஜமானர்களின் அசிங்கங்களை எழுதடா அரபு நாயே.

சுவனப் பிரியன் said...

அனானி!

சரக்கு உள்ளே அதிகமா போயிடுச்சோ... :-) பாத்து கிட்னி பெயிலர் வந்துடப் போவது. ஒரு அளவா சாராயத்தை உள்ளே தள்ளு..... :-)