
வரும் டிசம்பர் 18 அன்று துபாயில் ஏ ஆர் ரஹ்மானின் சூஃபி இசைக் கச்சேரி நடைபெறவுள்ளது. பாகிஸ்தான் பாடகர் ராஹத் ஃபதே அலி கான், சுனித் சௌஹானும் கலந்து கொள்கின்றனர். இந்திய பாகிஸ்தான் கலைஞர்கள் இணைந்து கலந்து கொள்ளும் நிகழ்ச்சி. இசையின் அடிப்படையில் சிறப்பாக இருக்கும் என்று நம்பலாம். ஆனால் இந்த இசையின் மூலமெல்லாம் இறைவனை அடைய முடியாது. தவறான நம்பிக்கையில் ஏ ஆர் ரஹ்மானும், ஃபதே அலி கானும் இருக்கிறார்கள். இறைவனும், நபிகளும் காட்டித் தராத எந்த வழி முறையும் நம்மை இறைவனுக்கருகில் கொண்டு செல்லாது. ஏ ஆர் ரஹ்மானின் முந்தய இசைக் கச்சேரிகளில் பெண்களை அரை குறை உடைகளை வலிந்து திணித்து ஆட விடுவதைப் பார்த்தோம்.. இசைக்கும் ஆடை குறைப்புக்கு என்ன சம்பந்தமோ தெரியவில்லை. எனவே இஸ்லாம் இசைக்கு எந்த அளவு முக்கியத்துவம் கொடுக்கிறதோ அதன் அளவை மீறாது இருப்போமாக! ஏ ஆர் ரஹ்மானும் தர்ஹாக்கள், இசை போன்ற போலிகளை விடுத்து உண்மையான ஆன்மீகத்தின் பக்கம் தனது கவனத்தைத் திருப்புவாராக!
195, 295, 395, 495, 750, 1000 திர்ஹம்கள் என்று டிக்கெட்டுகள் நவம்பர் 20லிருந்து விநியோகிக்கப்படுமாம். கஷ்டப்பட்டு உழைத்த காசை டிக்கெட் எடுத்து வீணாக்காமல் ஊருக்கு அனுப்பி விடுங்கள். ஆர்வமுள்ளவர்கள் ஒரு வாரம் கழித்து யுட்யூபில் இந்த நிகழ்ச்சியை பார்த்துக் கொள்ளலாம். :-)
ராஹத் ஃபதே அலி கானின் எனக்கு பிடித்த ஒரு பாடல்.
2 comments:
அல்லாஹ் போதுமானவன்
இஸ்லாத்தை அதன் தூய வடிவில் விளங்க முடியாமைதான் இதற்கு காரணம் இஸ்லாமிய கலாச்சாரம் இசையை வன்மையாக கண்டிக்கிறது
அல்லாஹ் அவர்களையும் எங்களையும் இசை எனும் சீர் கெட்ட கலாச்சாரத்தில் இருந்து பாதுகாப்பானாக
i missed this program
Post a Comment