Followers

Tuesday, November 25, 2014

சவுதியின் பாஹா மாகாணத்தில் பெரும் தீ!



சவுதியின் பாஹா மாகாணத்தில் பெரும் தீ!

சவுதி அரேபிய மாகாணங்களில் ஒன்றான பாஹாவில் ஒரு வேர் ஹவுஸில் நேற்று திடீரென்று தீப்பிடித்தது. தீ மளமளவென்று பரவி மூன்று கொடவுன்களை நாசப்படுத்தியது. தீப்பிடித்ததற்கான காரணம் இன்னும் தெரியவில்லை. தீப்பிடித்த சில நிமிடங்களிலேயே இளவரசர் மிஸாரி பின் சவுத் (பாஹா மாகாணத்தின் கவர்னராகவும் உள்ளார்) சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தார். மூன்று கொடவுன்கள் ஒரே நேரத்தில் தீப்பிடித்ததால் அந்த இடமே பெரும் புகை மூட்டமாக இருந்தது. அதையும் பொருட்படுத்தாது தனது முகத்தை துணியால் மூடிக் கொண்டு அந்த இடத்தை அடைந்து காயமடைந்த நபர்களை உடன் மருத்துவ மனைக்கு அனுப்ப உத்தரவிட்டார். தீப்பிடித்ததற்கான உண்மையான காரணத்தை உடன் கண்டறியுமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். மீட்பு பணிகள் சிறப்பாக நடக்கிறதா என்று அதிகாரிகளோடு கலந்து ஆலோசித்தார்.

அரப் நியூஸ்
25-11-2014

மன்னராட்சி நடக்கும் சவுதியை பலர் ஏளனமாக பார்ப்பதுண்டு. தேர்தல் இல்லாத இந்த முறை சரியா என்று விவாதிப்பவர்களும் உண்டு. தேர்தலை முழுமையாக கடை பிடிக்கும் நமது நாட்டில் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு எந்த மாதிரி செயல்படுகிறது என்று நமக்கு நன்றாக தெரியும். எனவே மன்னராட்சியோ, மக்களாட்சியோ, அல்லது கம்யூனிஷ ஆட்சியோ எந்த வகை ஆட்சியாக இருந்தாலும் அது மக்களுக்கு நன்மை பயக்கும் ஆட்சியாக இருக்க வேண்டும் என்பதே நமது அவா!

No comments: