Followers

Monday, November 24, 2014

மாற்றான் தோட்டத்து மல்லிகை!

மாற்றான் தோட்டத்து மல்லிகை!சாமியார் ராம்பாலின் கைதும் பல கோடிக்கணக்கான ஆயுதங்கள் பறிமுதலைப் பற்றியும் தமிழ் இந்து நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது. அதில் குமார் என்ற இந்து இளைஞர் தனது ஆதங்கத்தை பின்னுட்டமாக கொட்டித் தீர்த்துள்ளார். இனி அவரது பின்னூட்டம்.

காவல் துறையே? ராணுவமே உங்கள் மனசாட்சி எங்கே சென்றது? இந்த இரட்டை நிலை ஏன்? ஒரு முஸ்லிம் இளைஞன் சற்று அதிகமாக தாடிவைத்திருந்தாலே தீவிரவாத பட்டம் கட்ட துடிக்கும் பத்தி ரிக்கை மற்றும் மீடியாக்களை 12 ஏக்கர் பரப்பளவில் ராணுவம் நுழைய முடியாத அளவு ஆயுதங்களுடன் இந்திய ராணுவத்தின் மீது போர் தொடுக்கும் இவர்கள் உங்கள் பார்வையில் ஆதரவாளர்களா? இந்த பாரபட்சம் ஏன்? வெங்காய வியாபாரியை வெடிகுண்டு கடத்தல் மன் னனாக்கும் மீடியாக்க ளே இங்கு நடக்கும் அநியாத்தை வெளிக்கொணர காவி புழுதி கண்களை மறைத்துவிட்டதே ஏன்? குற்றம் நீருபிக்கபடாமல் 14 வருடங்களுக்கு மேலாக சிறைச்சாலைகளின் வாடும் அப்பாவி முஸ்லிம் இளைஞர்களை பிணையில் விட ஆயிரம் முறை மன்றாடி கேட்டும் அனுமதிக்காத நீதி துறையே இது தான் சம நீதியா? இங்கு நீதி கேள்வி குறியாகிறதே ஏன்? ஒழுக்கமும், கண்ணியமும், சகோதரத்துவமும் பயிற்றுவிக்கப்படும் மதரசாக்களை தீவிரவாத கூடாரமாக சித்தரிக்க விரும்பும் பாசிச கூட்டமே! வெடிகுண்டுகளோடு, துப்பாக்கிகளுடன் ஆசிரமத்தில் ஒளிந்து கொண்டு தாக்கும் இவர்கள் உங்கள் கண்களுக்கு தென்படவில்லையா? இப்பொழுது உங்கள் தலைவர்கள் அனைவரும் வாய்பொத்தி மெளனம் சா திப்பது ஏன்?

-குமார்
23-11-2014
தமிழ் இந்து நாளிதழ்

-----------------------------------------------------


400 கமாண்டோ வீரர்கள்

வெளியில் செல்வதற்காக குண்டு துளைக்காத புல்லட் புரூப் கார்களை ராம்பால் பயன்படுத்தியுள்ளார். அவரின் பாதுகாப்புக்காக 400 பேர் கொண்ட சிறப்பு கமாண்டோ படை இருந்துள்ளது. ஆசிரமம் முழுவதும் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. வெளி நபர்கள் ஆசிரமத்துக்குள் நுழைய முடியாத வகையில் 20 அடி உயரத்துக்கு சுற்றுச்சுவர் எழுப்பப்பட்டுள்ளது. அதில் ஆங்காங்கே கண்காணிப்பு கோபுரங்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஆசிரம வாயிலில் 4 மெட்டல் டிடெக்டர் கதவுகள் உள்ளன. அதன்வழியாகவே பக்தர்கள் உள்ளே நுழைய அனுமதிக்கப்பட்டனர்.

ரகசிய ஆயுதக் கிடங்கு

ஆசிரமத்தின் இரண்டு ரகசிய அறைகளில் ஏராளமான துப்பாக்கிகள், பெட்ரோல் குண்டுகள், கையெறி குண்டுகள், ஆசிட் குப்பிகள் என சிறிய அளவிலான போரை நடத்துவதற்கு தேவையான ஆயுதங்கள் குவித்து வைக்கப்பட்டுள்ளன.
ஹெல்மெட், கைத்தடிகள், கருப்பு நிற சீருடைகள் அலமாரிகளில் வரிசையாக அடுக்கி வைக்கப்பட்டிருந்தன. அங்குள்ள 2 டேங்க்குகளில் 800 லிட்டர் டீசல் நிரப்பி வைக்கப்பட்டிருந்தது. துப்பாக்கிகள் அனைத்திலும் தோட்டாக் கள் நிரப்பப்பட்டு தயார் நிலையில் வைக்கப் பட்டுள்ளன. அங்கு சாமியாரின் கமாண்டோ படை வீரர்கள் தங்குவதற்காக தனி அறைகளும் உள்ளன.

போலீஸார் அதிர்ச்சி

சிறிய ராணுவத்துக்கு தேவையான வகையில் ஆயுதங்கள் குவித்து வைக்கப்பட்டிருப்பது பேரதிர்ச்சி அளிப்பதாக ஹரியாணா போலீஸார் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து போலீஸார் மேலும் கூறியபோது, சாமியாரை கைது செய்யவிடாமல் தடுத்து வன்முறையில் ஈடுபட்டதாக இதுவரை 865 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர், அவர்களிடம் ரகசிய ஆயுதக் கிடங்கு குறித்து தீவிரமாக விசாரணை நடத்தி வருகிறோம், இதன்மூலம் மேலும் பல்வேறு தகவல்கள் வெளிவரும் என்று தெரிவித்தனர். தற்போது சட்லக் ஆசிரமம் தற்போது பாலைவனம்போல் காட்சியளிக்கிறது.


பதிவை முழுவதுமாக படிக்க இந்த லிங்குக்குள் செல்லுங்கள்.

http://tamil.thehindu.com/india/%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%86%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B0%E0%AE%95%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%85%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B5%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%86%E0%AE%AF%E0%AF%81%E0%AE%A4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D/article6625484.ece?homepage=true&ref=tnwn


1 comment:

Dr.Anburaj said...

சில அதீத காரியங்கள் நடைபெறுவது உண்மை. காங்கிரஸ் அரசு என்ன செய்தது ? இதற்கும் முஸ்லீம் காடையா்கள் மீது நடைபெறும் நடவடிக்கைகளை ஒப்பிட வேண்டிய அவசியம் என்ன ? ராம்பால் ஒரு காடையன். தண்டிக்கப்பட வேண்டியவன்.