Followers

Saturday, November 22, 2014

கழுவற மீனில் நழுவுற மீன் - அப்பாஸ் அலிபோன மாதம் நான் தபூக் சென்றிருந்த போது தற்போது தவ்ஹீத் ஜமாத்தை எதிர்ப்பவர்களால் பிரபலப்படுத்தப்பட்டிருக்கும் முன்னால் தவ்ஹீத் ஜமாத் தாயி சகோ அப்பாஸ் அலி அவர்களோடும் சகோ சங்கை அப்துல் அஜீஸ் அவர்களோடும் ஒரு நாள் முழுக்க சுற்றுப் பயணம் செய்யும் வாய்ப்பு கிட்டியது. இறைத் தூதர் சாலிஹ் நபியை பின்பற்றி வாழ்ந்து பின்னர் இறைவனால் தண்டனை கொடுக்கப்பட்டு அழிக்கப்பட்ட ஊரான மதாயீன் சாலிஹ் என்ற நகருக்கு சென்றோம். சகோ அப்பாஸ் அலியோடும் சகோ அப்துல் அஜீஸோடும் ஒரு நாள் முழுக்க அந்த வரலாற்று சிறப்பு மிக்க இடங்களை சுற்றிப் பார்க்க இறைவன் வாய்ப்பை வழங்கினான். தபூக்கில் வேலை முடிந்து ரியாத் வந்து ஒரு சில நாட்களில் இணையத்தில் சகோ அப்பாஸ் அலியின் கொள்கை மாற்றம் அறிந்து அதிர்ச்சி அடைந்தேன். ஒரு மனிதன் இரண்டொரு நாளில் இந்த அளவு மாற்றங்களை பெற முடியுமா என்று ஆச்சரியப்பட்டேன்.

'குர்ஆனுக்கு எந்த ஹதீஸ்களும் முரண்படாது: அவ்வாறு முரண்படுகிறது என்று சொல்பவர்கள் அறியாமையில் இருக்கின்றனர்' என்று கூறி தவ்ஹீத் ஜமாத்தை விட்டு வெளியேறி இன்று பல ஊர்களில் (அறந்தாங்கி உட்பட) பேசி வருகிறார்.

குர்ஆன் மட்டும் போதுமா? என்ற தலைப்பில் சகோதரர் பிஜே அவர்கள் எழுதிய இந்த கட்டுரையை மேலதிக விபரத்திற்காக படித்துப் பாருங்கள்.

http://www.onlinepj.com/books/quran_natum_pothuma/#.VG8Me2f4bct

தவ்ஹீத் ஜமாத் நபிகள் நாயகம் அவர்களின் ஹதீஸ்களுக்கு எந்த அளவு முக்கியத்துவம் கொடுக்கிறது என்பதை இந்த கட்டுரையைப் படித்து விளங்கிக் கொள்ளலாம்.

https://www.facebook.com/video.php?v=888967654455583

https://www.facebook.com/video.php?v=888977997787882

https://www.facebook.com/video.php?v=888985471120468

https://www.facebook.com/video.php?v=889832521035763

தனது நிலையில் எந்த அளவு தடுமாற்றத்தில் சகோ அப்பாஸ் அலி உள்ளார் என்பதில் இந்த மூன்று காணெளிகளையும் பார்த்து நாம் தெளிவடைந்து கொள்ளலாம். கழுவுற மீனில் நழுவுற மீன் என்று சொல்வார்களே அது இந்த காணொளிகளைப் பார்த்தால் தெரிந்து கொள்ளலாம். 'நபிகள் நாயகம் அவர்கள் பெயரால் சொல்லப்பட்டு வரும் எந்த ஆதாரபூர்வமான நபி மொழிகளும் குர்ஆனுக்கு முரண்படவே செய்யாது என்று நான் எங்குமே பேசவில்லை' என்றும் சொல்கிறார். ஆனால் எனது நிலைப்பாட்டை பிறகு அறிவிப்பேன் என்கிறார். ரொம்பவும் குழம்பியிருக்கிறார். மக்களையும் குழப்புகிறார்.

குர்ஆனுக்கு பல ஹதீஸ்கள் முரண்டுகிறது என்பது தனது ஆய்வில் இருக்கிறது என்பது உண்மையானால் அப்பாஸ் அலி அவர்கள் தவ்ஹீத் ஜமாத்தை விட்டு வெளியேற வேண்டிய அவசியமே இல்லை. ஏனெனில் உலக முடிவு நாள் வரையில் இந்த ஆய்வுகள் நடந்து கொண்டுதான் இருக்கும். தவ்ஹீத் ஜமாத்தில் இது போன்று மேலும் பல ஆய்வுகள் தினமும் நடந்துதான் வருகிறது. முன்பு எடுத்த முடிவுகளை வீம்புக்காக மறுக்காமல் ஆய்வுகளுக்குப் பிறகு மாற்றிக் கொண்டும் இருக்கிறார்கள். எனவே தவ்ஹீத் ஜமாத்தை விட்டு வெளியேறுவதற்கு ஏதாவது ஒரு காரணம் சொல்ல வேண்டும் என்ற ரீதியில் தான் இவரது நிலைப்பாடு இருந்துள்ளது என்பதனை இந்த மூன்று காணொளிகளைக் காண்பவர்களும் தெரிந்து கொள்ளலாம்.

தவ்ஹீத் ஜமாத்தில் இருந்தால் அதிக வருமானம் கிடைக்காது. அதே எதிர் தரப்பில் இருந்தால் சகட்டு மேனிக்கு பணம் வந்து கொண்டிருக்கும். தமிழகம் எங்கும் பிரபலமாகலாம். தவ்ஹீத் ஜமாத்தை எதிர்ப்பவர்கள் அனைவரும் இனி அப்பாஸ் அலியை தூக்கி வைத்து கொண்டாடலாம். இன்னும் வெளியில் சொல்லாத வேறு பல காரணங்களும் இருக்கலாம். இது தான் அப்பாஸ் அலி இன்று தவ்ஹீத் ஜமாத்தை விட்டு வெளியேறியதற்கான காரணமே யொழிய கொள்கை மாறுபாடு அல்ல என்பதை நாம் விளங்கிக் கொள்ளலாம். ஏனெனில் எந்த கொள்கையையும் எந்த இடத்திலும் விவாதிக்க தவ்ஹீத் ஜமாத் மறுத்ததே கிடையாது.

கடந்த இருபத்தைந்து வருடங்களாக நாம் பார்த்து வருவது என்ன? அபு அப்துல்லாஹ் இந்த ஜமாத்தை விமரிசித்தார்: அதன்பிறகு ஜவாஹிருல்லாஹ், பிறகு ஹைதர் அலி, அடுத்து முக்காடு சம்சுதீன் காசிமி, பிறகு எஸ் எம் பாக்கர், அதன் பிறகு அலீம் புகாரி தற்போது அப்பாஸ் அலி என்று வரிசையாக வருகிறார்கள். ஒவ்வொருவரும் ஒரு ஆறு மாதத்துக்கு தவ்ஹீத் ஜமாத்தின் எதிர் தரப்பினரால் கொண்டாடப்படுவார்கள். அவர்களின் வீடியோக்களை முடிந்த வரை ஷேர் பண்ணுவார்கள். தவ்ஹீத் ஜமாத்தின் வீரியத்தை முடிந்த வரை குறைக்க முயற்சிப்பார்கள். ஆனால் சில காலம் கழித்து உண்மைகள் வெளி வரும். பழையபடி தவ்ஹீத் ஜமாத்தின் உண்மை நிலை மக்களுக்கு தெரிய வரும். பழையபடி எதிர்த்தவர்கள் மக்களால் ஓரங்கட்டப்படுவார்கள். இறைவன் இது போன்ற விவாதங்களுக்குப் பிறகு தான் தவ்ஹீத் ஜமாத்தின் மேன்மையை மேலும் மேலும் மேலோங்கச் செய்கிறான். இன்றுள்ள தாயிக்களின் இறப்புக்கு பின்னாலும் இந்த ஜமாத் தொடர்ந்து தனது பணிகளை செய்து வரும். அது உலக முடிவு நாள் வரை இறைவன் உதவியால் தொடரும்.

2 comments:

magdoom said...

adirai vivathathil 4 hadeeskalai tedranru maruthal avar yanna saivar.inimalavathu hadeesai marukumpothu solittu marunga

Anonymous said...

adirai vivathathil 4 hadeeskalai tedranru maruthal avar yanna saivar.inimalavathu hadeesai marukumpothu solittu marunga