Followers

Showing posts with label நரேந்திர மோடி. Show all posts
Showing posts with label நரேந்திர மோடி. Show all posts

Tuesday, March 14, 2017

அசீமானந்தா விடுதலை - தீர்ப்பை எழுதியது மோடியா? நீதிமன்றமா?



காவி பயங்கரவாதம் மிக மூர்க்கத்தனமாக செயல்பட ஆரம்பித்து இருக்கின்றது. மோடியின் ஆட்சி முடிவதற்குள் தங்களுடைய அனைத்து சதி வேலைகளையும் நிறைவேற்றிக் கொள்ள திட்டங்கள் தீட்டி செயல்படுத்தி வருகின்றது. இந்தியா முழுவதும் மாட்டுக்கறி தின்பவர்களுக்கு எதிராக குறிப்பாக இஸ்லாமிய, தலித், கிருஸ்தவ மக்களுக்கு எதிராக அது மேற்கொண்ட வன்முறைத் தாக்குதல்கள், காவி பயங்கரவாதிகளை விமர்சனம் செய்த எழுத்தாளர்களைக் கொலை செய்தது, இந்தி பேசாத மாநில மக்கள் மீது இந்தியைத் திணித்தது, செத்த மொழியான சமஸ்கிருதத்தை திணித்தது எனத் தொடங்கிய அதன் பயங்கரவாதம் இப்போது பல்வேறு குண்டுவெடிப்புச் சம்பவங்களில் தொடர்புடைய கேடி சாமியார் அசீமானந்தா விடுதலையில் வந்து நிற்கின்றது. யார் இந்த அசீமானந்தா? ஒரு ஆர்.எஸ்.எஸ் தீவிரவாதி, ஐந்து குண்டுவெடிப்புகளுக்கு மூளையாக செயல்பட்டவன், 119 பேர் உடல் சிதறி உயிரிழக்கக் காரணமான இந்து பயங்கரவாதி. அப்படி குண்டுவைத்துப் பல பேரை கொன்றதைப் பெருமையாக ஒப்புக்கொண்டவன். அப்படிப்பட்டவனைத்தான் நீதிமன்றம் இப்போது விடுதலை செய்திருக்கின்றது.


2007 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் ராஜஸ்தானில் உள்ள ஆஜ்மீர் தர்காவில் குண்டு வெடித்து மூன்று பேர் கொல்லப்பட்டனர், 17 பேர் படுகாயம் அடைந்தனர். இந்த வழக்கு சம்மந்தமாக அசீமானந்தா உட்பட 13 பேர்மீது குற்றம் சாட்டப்பட்டது. இப்போது இந்த வழக்கில் இருந்து அசீமானந்தா உட்பட 7 பேரை ஜெய்பூர் என்.ஐ.ஏ சிறப்பு நீதிமன்றம் விடுவித்துள்ளது. 3 பேர் மீது குற்றம் உறுதி செய்யப்பட்டிருக்கின்றது. இன்னும் மூன்று பேரை பத்துவருடங்களாக தேடிக்கொண்டே இருக்கின்றது. குற்றம் உறுதி செய்யப்பட்டவர்களில் சுனில் ஜோசியும் ஒருவர் ஆவர். இவர் 2007 ஆம் ஆண்டு டிசம்பரில் மர்மமான முறையில் படுகொலை செய்யப்பட்டார். செத்துப்போனவனை குற்றவாளி என்றும், உயிரோடு இருப்பவனை குற்றமற்றவன் என்றும் நீதி மன்றம் விடுவித்துள்ளது. இது ஒன்றும் தற்செயலானது அல்ல. அசீமானந்தா விடுதலை தொடர்பாக நாம் பார்ப்பதற்கு முன்னால் ஏன் மோடி அரசால் திட்டமிட்டு அசீமானந்தா விடுதலை செய்யப்பட்டார் என்பதைத் தெரிந்துகொள்ள வேண்டும். பெரும் பரபரப்பை ஏற்படுத்திய காரவான் இதழில் வெளிவந்த அசீமானந்தாவின் பேட்டியைப் பார்த்தோம் என்றால், இதை ஒரளவு நம்மால் புரிந்துகொள்ள முடியும்.

2012 ஜனவரி 10, 2013 ஜூன் 22, 2014 ஜனவரி 9, 2014 ஜனவரி 17 ஆகிய நாட்களில் சிறையில் பத்திரிக்கையாளர் லீனா அவர்களால் எடுக்கப்பட்ட அந்தப் பேட்டியில் அசீமானந்தா ஆர்.எஸ்.எஸ் அமைப்பிற்கும், குண்டுவெடிப்புக்கும் உள்ள பல்வேறு திடுக்கிடும் பின்னணியை விளக்கியிருந்தார். மேற்குவங்கத்தில் இருக்கும் ஹூக்ளி மாவட்டத்தில் 1951 ஆம் ஆண்டு பிறந்த அசீமானந்தாவின் இயற்பெயர் நவகுமார் சர்க்கார் என்பதாகும். முதுகலை இயற்பியல் படித்தவர். சிறுவயதில் இருந்தே ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் மீது ஈடுபாடுகொண்ட அசீமானந்தவை இப்படி கொலைவெறியனாக மாற்றியது விவேகானந்தரின் சிந்தனைகள் தான். “ஹிந்துமதத்தை விட்டு வெளியே ஒருவன் செல்லும் போது ஒரு ஆள் குறைவது மட்டும் நடக்கவில்லை. எதிரிகள் எண்ணிக்கையில் ஒன்று கூடுவதும் நடக்கிறது” என்ற விவேகானந்தரின் இந்துத்துவா சிந்தனையைப் படித்த அசீமானந்தா தன்னை முழுவதுமாக ஆர்.எஸ்.எஸ் அமைப்பிற்காக ஒப்படைத்துக் கொண்டார். தன்னுடைய 31 ஆம் வயதில் சன்யாசியானர். அன்று முதல் தன்னுடைய நவகுமார் சர்க்கார் என்ற பெயரை அசீமானந்தா என்று மாற்றிக்கொண்டார்.

‘அசீமானந்தம்’ என்றால் எல்லையற்ற மகிழ்ச்சி என்று பொருளாம். ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் பழங்குடியினப் பிரிவான வனவாசி கல்யாண் ஆசிரமம் என்ற அமைப்பில் தன் வாழ்நாளில் பெரும்பகுதியைக் கழித்தவர். இதன் மூலம் பழங்குடியின மக்கள் மதம் மாறாமல் தடுத்ததாகவும், கிறித்தவ மிஷனரிகளின் செல்வாக்கை தான் குறைத்தாகவும் அவரே பெருமை பட்டுக் கொள்கின்றார். இவரின் அடிப்படையான நோக்கம் பழங்குடியின மக்களின் வாழ்க்கையை முன்னேற்றுவது கிடையாது, அவர்கள் வேறு மதம் நோக்கி செல்லக்கூடாது என்பதுதான்.

இப்படி வனவாசி கல்யாண் ஆசிரமத்தில் சேர்ந்து தீவிரமாக இயங்கிக் கொண்டிருந்த அசீமானந்தா ‘கார்வாப்சி’ செய்வதில் புகழ்பெற்றவர். ஆயிரக்கணக்கான மக்களை இவர் தாய்மதம் திரும்புதல் என்ற பெயரில் இந்து மதத்திற்கு மாற்றியிருக்கின்றார். இதனால் இவர் பெயர் ஆர்.எஸ்.எஸ் வட்டாரத்தில் மிகப்பிரபலம். வெறும் மதத்தைப் பரப்புதல் என்ற எல்லையில் இருந்து முஸ்லிம் மக்களை பழிவாங்க வேண்டும் என்ற திட்டத்துடன் லெப்டினண்ட் கர்னல் ஸ்ரீகாந்த் புரோகித், பாரதிய ஜனதா கட்சியின் மாணவர் பிரிவான அகில பாரதிய வித்யார்த்தி பரீஷத்தின் தேசிய செயற்குழு உறுப்பினர் பிரக்கியா சிங் தாகூர், இந்தூர் மாவட்ட ஆர்.எஸ்.எஸ் முன்னாள் தலைவர் சுனில் ஜோஷி ஆகியோருடன் சேர்ந்து சதித்திட்டம் செய்து குண்டுவெடிப்புகளை நிகழ்த்தியுள்ளார். இதன்படி 2007 ஆம் ஆண்டு பிப்ரவரி 18 அன்று டெல்லியில் இருந்து பாகிஸ்தான் புறப்பட்ட சம்ஜெளதா விரைவு வண்டியில் குண்டுவைத்தனர். இதில் 68 பேர் உயிரிழந்தனர். அடுத்து 2007 ஆம் ஆண்டு மெக்கா மசூதி அருகே இவர்கள் வைத்த குண்டுவெடித்து 11 பேர் உயிரிழந்தனர். அதே ஆண்டு அக்டோபர் மாதம் ராஜஸ்தான் மாநிலம் ஆஜ்மீர் தர்க்காவில் வெடித்த குண்டில் மூன்று பேர் உயிரிழந்தனர். செப்டம்பர் 2006 மற்றும் செப்டம்பர் 2008 இல் மலேகானில் நடந்த இரு தாக்குதல்களில் மொத்தம் 37 பேர் உயிழந்தனர்.

இந்தக் குண்டுவெடிப்புகள் அனைத்தும் மோகன் பகவத்தின் ஒப்புதலோடு செய்யப்பட்டது என்பதைத் தன்னுடைய பேட்டியில் அசீமானந்தா கூறியிருக்கின்றார். மோகன் பகவத் தன்னை சந்தித்து “இது நடப்பது மிக முக்கியம். ஆனால் இதில் சங்கம் சம்பந்தப்படாமல் நீங்கள் பார்த்துக் கொள்ள வேண்டும்” என்று தன்னிடம் கூறியதாக அசீமானந்தா தெரிவித்தார். இந்த வழக்கில் மிக முக்கிய குற்றவாளியான சுனில் ஜோஷி 2007 ஆம் ஆண்டு டிசம்பரில் 29 அன்று மத்தியப் பிரதேசத்தில் உள்ள அவரது அம்மா வீட்டருகே மர்ம நபர்களால் துப்பாக்கியில் சுடப்பட்டு உரியிழந்து கிடந்தார். மேலும் இந்த வழக்கு விசாரணையை நடத்திவந்த மும்பை பயங்கரவாத தடுப்புப்பிரிவின் தலைவர் ஹேமந்த் கர்காரே மும்பை பயங்கரவாதத் தாக்குதலில் நவம்பர் 26 அன்று மர்மமான முறையில் கொல்லப்பட்டார். இந்த வழக்கில் ஆரம்பம் முதல் மர்மமான பல சம்பவங்கள் நடந்துள்ளன. எப்படி மோடி, குஜராத் கலவர வழக்கில் இருந்து பல அசைக்க முடியாத வாக்குமூலங்கள் இருந்தும் மோசடியான முறையில் விடுவிக்கப்பட்டாரோ அதே போல இந்த அசீமானந்தாவும் விடுவிக்கப்பட்டுள்ளார்.

இப்படி நூற்றுக்கணக்கான பேரை படுகொலை செய்த இந்த ஆர்.எஸ்.எஸ் பொறுக்கி ஒரு கோழையைப் போல ஹரித்வார் அருகே ஒரு கிராமத்தில் பதுங்கியிருந்த போது சி.பி.ஐ ஆல் கைது செய்யப்பட்டான். மறைந்திருந்து தனக்குப் பிடிக்காதவர்களைக் குண்டுவைத்தும், துப்பாக்கியால் சுட்டும் கொலைசெய்யும் இந்தப் பயங்கரவாதக் கும்பல் கோழைகளைப் போல ஓடி ஒளிந்து கொள்கின்றார்கள். தயிர் சோத்தையும், வெண்பொங்கலையும் தின்றுவிட்டு வீரம் பேசும் பொறுக்கிகளின் உண்மையான வீரம் இதுதான். மோகன் பகவத்துக்கு மட்டுமின்றி மோடி போன்றவர்களுக்கும் அசீமானந்தாவின் குண்டுவைப்புச் சதிகள் தெரிந்தே இருந்தன. 2005 டிசம்பரில் அசீமானந்தாவிற்கு ஒரு லட்சம் ரூபாய் விருது, கோல்வாக்கார் நூற்றாண்டையொட்டி கொடுக்கப்பட்டது. இந்த விழாவில் முரளி மனோகர் ஜோஷியும் கலந்துகொண்டார். ஆனால் வழக்கம் போல இப்போது ஆர்.எஸ்.எஸ் காலிகள் அசீமானந்தாவுக்கும் தனக்கும் சம்பந்தம் இல்லை என்று சொன்னாலும் சொல்வார்கள்.

இந்திய நீதிமன்றங்களைப் பொருத்தவரை ஆர்.எஸ்.எஸ் காலிகளைத் தண்டிப்பதற்கு ஒரு அளவுகோலையும், இஸ்லாமியர்களை தண்டிப்பதற்கு ஒரு அளவுகோலையும் எப்போதும் பயன்படுத்திவருகின்றன. அப்சல் குருவுக்கும், யாக்கூப் மேமனுக்கு ஒரு சட்டப் புத்தகத்தையும், மோடி, அமித்ஷா, அசீமானந்தா போன்றவர்களுக்கு மனுவின் சட்டப் புத்தகத்தையும் வைத்துத் தீர்ப்பு வழங்குகின்றன. இந்திய சமூகத்தின் பொது மனசாட்சி எப்போதும் முஸ்லிம்களின் உயிரையும், தலித்துகளின் உயிரையும் மட்டும் தான் காவு கேட்கின்றது. அது மோடி, அமித்ஷா, அசீமானந்தா போன்றவர்களை கடவுளுக்கு நிகராக பார்க்க பழக்கப்படுத்தப்பட்டு விட்டது. அசீமாந்தா மீது குற்றம் இல்லை என என்.ஐ.ஏ சிறப்பு நீதிமன்றம் இப்போது விடுவித்துவிட்டது. என்.ஐ.ஏ, சி.பி.ஐ போன்றவற்றிற்கு ஆதாரமே இல்லாமல் ஒருவனை சிக்கவைத்து அவன் கதையை முடிக்கவும் தெரியும், அனைத்து ஆதாரங்களும் இருந்தாலும் ஒருவனை அப்பாவி என தப்புவிக்கவும் தெரியும். அதன் வேலையே ஆளும் அரசுக்கு வாலாட்டி வேலை பார்ப்பதுதான். இனிமேல் என்ன நடக்கும், மோடி தன்னுடைய ராஜகுருவுக்கு எதாவது பதவிகள் தந்து அவரை கெளரவப்படுத்தலாம். இல்லை சுனில்ஜோஷி போன்றவர்களுக்கு நிகழ்ந்தது போன்ற நிலைமையை தன்னுடைய கூலிப்படையை பயன்படுத்தி அசீமானந்தாவிற்கும் செய்து முடிக்கலாம். ஆனால் கண்டிப்பாக ஏதாவது ஒன்று நிச்சயம் நடக்கும்.

இது எல்லாம் இந்தியா இனி ஜனநாயக நாடு என்ற கிழிந்து போன முகமூடியையும் கிழித்து எறிந்துவிட்டு அம்மணமாக பார்ப்பன சனாதன தர்மத்தைச் சட்டமாக ஏற்றுக்கொண்ட நாடு என்ற நிலையை எட்டுவதற்கான முன்னோட்டங்கள் ஆகும். இனிமேல் நீதிமன்றங்கள் மூலம் வழக்காடி தங்களுடைய காவிப்படையினரை வெளியே எடுப்பதைவிட நேரடியாக சிறையைத் தகர்த்து, சினிமா படத்தில் வருவது போன்று வெளியே எடுக்கும் நிலை தொலைவில் இல்லை என்பதைத்தான் இது காட்டுகின்றது. இனி யாரை எல்லாம் நாங்கள் கொல்லப் போகின்றோம் என்பதை மோடி ‘மான் கி பாத்’ நிகழ்ச்சியில் முன்கூட்டியே சொல்லிவிட்டுப் போட்டுத்தள்ளும் காலம் நம்மை எதிர்நோக்கிக் காத்திருக்கின்றது. வலதுசாரிப் பாசிசம் எல்லாம் ஒரே அணியில் திரண்டு வருகின்றது. ஆனால் இடதுசாரி சித்தாந்தம் தங்களுக்குள் நூற்றுக்கணக்கில் பிளவுபட்டுச் சண்டையிட்டுக்கொண்டு, மறைமுகமாக பாசிச சித்தாந்தத்தின் வெற்றிக்கு துணை செய்துகொண்டு இருக்கின்றது. இந்த நிலை நீடித்தால் அசீமானந்தாக்கள் சட்டத்தின் துணையுடன் அடுத்த குண்டுவெடிப்பை நிகழ்த்தத் தயங்க மாட்டார்கள் என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும்.

- செ.கார்கி

Tuesday, December 29, 2015

மோடியைப் போல இழிவடைந்தவரை நான் பார்க்கவில்லை - ராம்ஜெத்மலானி



'ஒரு மனிதனை உயரத்திலிருந்து இவ்வளவு சீக்கிரம் தூக்கி எறியப்பட்டதை எனது வாழ்நாளில் முதன் முதலாக இப்போதுதான் பார்கிறேன். நான் திருவாளர் நரேந்திர மோடியைப் பற்றித்தான் பேசிக் கொண்டிருக்கிறேன். சிரமமான நேரத்தில் மோடியை அதிகம் ஆதரித்தவர்களில் நானும் ஒருவன். '

- ராம் ஜெத்மலானி

மோடியைப் பற்றி இந்துத்வாக்கள் கட்டிய பிம்பம் பொல பொலவென ஒரு வருடத்திலேயே உதிரத் தொடங்கி விட்டது. இனி அரசியல் வானில் மோடியின் வீழ்ச்சியை எதிர்பார்கலாம்.

Wednesday, December 23, 2015

ரஷ்யாவிலும் சென்று அவமானப்பட்ட மோடி!

ரஷ்யாவிலும் சென்று அவமானப்பட்ட மோடி!ரஷ்யா சென்ற நரேந்திர மோடிக்கு நமது நாட்டு தேசிய கீதம் இசைக்கப்பட்டது. அதை ஏற்றுக் ...

Posted by Nazeer Ahamed on Wednesday, December 23, 2015

ரஷ்யாவிலும் சென்று அவமானப்பட்ட மோடி!

ரஷ்யா சென்ற நரேந்திர மோடிக்கு நமது நாட்டு தேசிய கீதம் இசைக்கப்பட்டது. அதை ஏற்றுக் கொள்ளுங்கள் என்று சொல்ல இவர் பாட்டுக்கு தேசிய கீதம் இசைக்கப்படும் போது அதற்கு மரியாதை செய்யாமல் வேக வேகமாக போட்டோவுக்கு போஸ் கொடுக்க செல்கிறார். இவரின் கிறுக்குத் தனத்தை பார்த்த ரஷ்ய தலைவர் அவரது கையை பிடித்து வலுக்கட்டாயமாக இழுத்து தேசிய கீதத்துக்கு மரியாதை செய்ய வைக்கிறார். உலக அளவில் மஹா கோமாளி யார் என்றால் நரேந்திர மோடிதான். உலகமே சிரிக்கிறது.

Wednesday, November 18, 2015

திருமண பதிவு சான்றிதழ் இல்லையாதலால் பாஸ்போர்ட் மறுப்பு! - யசோதாபென்



The Prime Minister Narendra Modi's estranged wife Jashodaben Modi's application seeking passport has been returned by the regional Passport office in Gujarat saying its "incomplete."

The regional passport officer ZA Khan told The Hindu the application was incomplete and therefore it was not accepted.

"We have not accepted the application because there was no marriage certificate or a joint affidavit with the spouse," Mr. Khan said, adding, "marriage certificate or a joint affidavit is a required document to get the passport."

சட்டபூர்வமாக திருமண சான்றிதழ் சமர்ப்பிக்காததால் யசோதாபென் விண்ணப்பித்திருந்த பாஸ்போர்ட் விண்ணப்பம் திருப்பி அனுப்பப்பட்டுள்ளது.

மோடி அவர்களே! வருடத்தில் 320 நாட்கள் வெளி நாடுகளில் உள்ளீர்கள். ஒரு முறையாவது உங்களின் மனைவிக்கும் அந்த ஆசை இருக்கும் என்ற எண்ணமாவது வந்துள்ளதா? ஒரு பெண்ணின் வாழ்வை நிர்மூலமாக்கி இன்று வரை அவரை வெளியில் விடாமல் வைத்துள்ளீர்களே! உங்கள் மனசாட்சி உறுத்தவில்லையா?

ஏற்கெனவே மலையளவு பாவங்களை சுமந்திருக்கிறீர்கள். அதோடு இந்த பாவமும் சேர வேண்டுமா?

தகவல் உதவி
THE HINDU DAILY
08-11-2015



http://www.thehindu.com/news/national/no-passport-for-narendra-modis-wife-as-she-has-no-marriage-certificate/article7855384.ece

Sunday, November 15, 2015

இம்ரான் கானை பாராட்டிப் பேசிய நரேந்திர மோடி!



இங்கிலாந்தில் பிரதமர் நரேந்திர மோடி சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளார். லண்டனில் உள்ள வெம்ப்ளி மைதானத்தில் மோடி நேற்றுமுன்தினம் இரவு பேசுகையில், ‘‘ஆல்வாரில் உள்ள இம்ரான் கான் போன்றவர்களால்தான் என் இந்தியா நிலைத்து நிற்கிறது’’ என்று பெருமையாகப் பேசினார். அதன்பின், மோடி குறிப்பிட்ட அந்த இம்ரான் கான் யார் என்று பரபரப்பு ஏற்பட்டது.

ராஜஸ்தான் மாநிலம் ஆல்வார் பகுதியை சேர்ந்தவர் இம்ரான் கான் (34). அரசு பள்ளியில் சமஸ்கிருத ஆசிரியராக பணிபுரிகிறார். இவர் தனியாக இணையதளம் தொடங்கி உள்ளார். அதில் தன்னை, செயலி வடிவமைப்பாளர்(ஆப் டெவலப்பர்) என்று அறிமுகப்படுத்தி கொண்டுள்ளார். பள்ளி மாணவர்கள் எளிமையாக பாடங்களை புரிந்து கொள்ளும் வகையில் புதிய புதிய ‘ஆப்’களை உருவாக்கி வருகிறார்.

கணினி பற்றிய போதிய பயிற்சி எதுவும் இவருக்கு இல்லை. ஆனால், தனது சகோதரரின் பொறியியல் கல்விக்கான புத்தகங்களை நன்கு படித்து அதன் மூலம் சில விஷயங்களை கற்றுக் கொண்டுள்ளார். அதன் மூலம் தான் பணிபுரியும் பள்ளிக்காக முதலில் ஒரு ஆப் தயாரித்தார். அதன்பின், பள்ளி மாணவர்களுக்கான புதிய ஆப்களை உருவாக்குவதை பொழுதுபோக்காக செய்து வருகிறார்.

இதுவரை 52 கல்வி ஆப்களை உருவாக்கி உள்ளார் இம்ரான் கான். அவை அனைத்தையும் மாணவர்களுக்கு இலவசமாக அர்ப்பணித்துள்ளார். அவற்றில் மாணவர்களுக்காக இந்தியில் உருவாக்கி உள்ள பொது அறிவியல் ஆப் மிகவும் பிரபலமானது. இந்த ஆப் இதுவரை 5 லட்சம் முறை பதிவிறக்கம் செய்யப்பட்டுள்ளது. 1.8 கோடி பேர் பார்வையிட்டுள்ளனர். சமஸ்கிருத ஆசிரியராக உள்ள இம்ரான் கானுக்கு பணம் ஒரு முக்கிய பொருட்டே இல்லை.

இதுகுறித்து இம்ரான் கான் கூறுகையில், ‘‘வாழ்க்கையில் பணம் மட்டுமே எல்லாமாகி விடாது. ஏனெனில் யாருக்காக நான் ஆப்களை உருவாக்கினேனோ அவர்களால் பணம் கொடுத்து அவற்றை வாங்க முடியாது. எனவேதான், இலவசமாக கொடுத்து விட்டேன்’’ என்று மகிழ்ச்சியுடன் கூறுகிறார்.

இம்ரான் கானை போன்றவர்களால்தான் இந்தியா இருக்கிறது என்று பிரதமர் நரேந்திர மோடியும் தனது உரையில் குறிப்பிட்டதால், ஒரே நாளில் அவர் மிகவும் புகழ்பெற்று விட்டார். எனினும், புகழை எதிர்பார்த்து எல்லாம் இதுவரை அவர் ஆப்களை உருவாக்கவில்லை. மாணவர்களின் நலனுக்காக பிராந்திய மொழிகளில் இன்னும் பல ஆப்களை தொடர்ந்து உருவாக்குவேன் என்ற லட்சியத்துடன் இருக்கிறார் இம்ரான் கான்.

இவரது பணியை கவுரவிக்கும் வகையிலும், புதிய ஆப்களை கண்டுபிடிக்கவும் இம்ரான் கானுக்கு இலவச இணையதள இணைப்பை பிஎஸ்என்எல் நிறுவனம் வழங்கி உள்ளது குறிப்பிடத்தக்கது.

தகவல் உதவி
தமிழ் இந்து நாளிதழ்
16-11-2015

நரேந்திர மோடி அவர்களே!

இம்ரான் கானை பாராட்டிப் பேசியதால் மட்டும் உங்கள் மீது உள்ள களங்கம் சென்று விடாது. 3000 குஜராத் முஸ்லிம்கள் கொல்லப்பட்டதற்கு காரணமானவர்களை சட்டத்தின் முன் நிறுத்தி அவர்களுக்கு தண்டனை வாங்கிக் கொடுத்தாலே உங்கள் மீது உள்ள கறை அகலும். அதுவரை நீங்கள் பேசும் எந்த பேச்சுக்களுக்கும் உலக அளவில் மதிப்பிருக்காது என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.

‘‘ஆல்வாரில் உள்ள இம்ரான் கான் போன்றவர்களால்தான் என் இந்தியா நிலைத்து நிற்கிறது’’ என்று உங்கள் வாயாலேயே உண்மையை வரவழைத்த அந்த ஏக இறைவனுக்கே புகழ் அனைத்தும்.

'இன்டிபெண்டன்ட்' பத்திரிக்கையின் மோடி சம்பந்தமான கார்டூன்!





'ஒரு சிறு துளி ரத்தம் தான் என் கைகளில் உள்ளது' என்ற பொருள்பட கேமரூனிடம் மோடி சொல்வது போன்ற கார்டூனை இங்கிலாந்தின் பிரபல பத்திரிக்கை 'இன்டிபெண்டன்ட்' 13 ந்தேதி வெளியிட்டு கலாய்த்துள்ளது. இந்திய வரலாற்றில் இப்படி ஒரு கேவலத்தை எந்த பிரதமரும் சந்தித்திருக்க மாட்டார்.

இறைவன் சிலரை மட்டம் தட்டி இழிவு படுத்துவான்: இன்னும் சிலரை உயர்ந்த பதவிகளில் அமர்த்தி கேவலப்படுத்துவான். மோடிக்கு இங்கிலாந்தில் அதுதான் நடந்து கொண்டிருக்கிறது. இரவு தூக்கத்துக்கு செல்லும் போதும் இது போன்ற கார்டூன்கள் மற்றும் மக்களின் எதிர்புகள் முன்னுக்கு வந்து மோடியை பயமுறுத்தும். முன்பு செய்த பாவத்திற்கு இன்னும் எத்தனை அவமானங்களை மோடி சுமக்கப் போகிறாரோ பொறுத்திருந்து பார்போம்.

இந்த செய்திகளை எல்லாம் நம் தமிழ் ஊடகங்கள் வெளியிடுவதில்லை என்பதையும் நாம் பார்க்க வேண்டும்...

Friday, November 13, 2015

லண்டனில் மோடிக்கு கடும் எதிர்ப்பு!








ஒட்டு மொத்த இந்தியர்களுக்கும் மோடியால் தலைக் குனிவு! இனியாவது திருந்துங்கள் இந்துத்வாவாதிகளே!

Thursday, November 12, 2015

நான் இனிமேலாவது வெளியே வரலாமா? - மோடி



"சிவனேன்னு வெளி நாட்டுல ஹாய்யா சுத்திக்கிட்டு இருந்தேன். இந்தியாவுக்கு வரவழைத்து கேரளாவிலேயும் பீஹார்லயும் இப்படி அசிங்கப்படுத்திட்டீங்களேய்யா..."

"முக நூலையும் ட்விட்டரையும் திறக்க முடியல.... அந்த அளவு என்னை கலாய்க்கிறீங்க.... கலாய்த்தலெல்லாம் முடிந்ததா? இனி மேலாவது நான் வெளியே வரலாமா?"...

Thursday, September 10, 2015

இந்து - பவுத்த மாநாட்டில் நரேந்திர மோடி சொன்ன கதை!



புதுடெல்லியில் நடைபெற்ற "போராட்டத் தவிர்ப்பு மற்றும் சுற்றுச்சூழல் உணர்வுக்கான இந்து-பவுத்த முனைப்பு" என்ற மாநாட்டில் பேசிய பிரதமர் மோடி நேற்று பேசியதாவது....

இந்தியாவில் அக்காலத்தில் இப்படித்தான் பல முக்கிய பிரச்சினைகளுக்கு அறிஞர்களிடையே வாதங்கள் நடைபெற்றன என்றாலும், அவை வீதிக்கு வரவில்லை. ஆதிசங்கரரும் மண்டன மிஸ்ராவுக்கும் இடையே நடந்த வாதங்களில் சங்கரரே வெற்றி பெற்றார். இதில் மிக முக்கியமானது வாதங்கள் பற்றியது அல்ல. ஆனால், அவை எவ்வாறு நடத்தப்பட்டன என்பதுதான். மனித இனம் நினைவில் வைத்துக் கொள்ளக்கூடிய வாதங்களில் மிக உயர்ந்தவை என்பதை இந்நிகழ்ச்சி விளக்கும்.

இந்த வாதங்களில் மண்டன மிஸ்ரா தோற்றுப்போனால், அவர், இல்லறத்தை விட்டு துறவறத்தை மேற்கொள்ள வேண்டும் என்று ஒப்புக்கொள்ளப்பட்டது. ஆதிசங்கரர் தோல்வியடைந்திருந்தால், துறவறத்தை விட்டுவிட்டு இல்லறத்திற்கு அவர் மாறவேண்டும்.

மண்டன மிஸ்ரா ஒரு சிறந்த அறிஞர். அவர், ஆதிசங்கரர் இளைஞனராக இருந்ததால், தமக்கு சமமாக அவரை கருதவில்லை ஆகவே தீர்ப்பு கூற சங்கரரே முடிவெடுக்க வேண்டும் கூறினார். அப்போது மண்டன மிஸ்ராவின் மனைவியும் அறிஞருமான அவரை தீர்ப்புக்கூற அழைத்தார்.

மண்டன மிஸ்ரா தோல்வியடைந்தால் அவரது மனைவியை அவர் இழப்பார். ஆனால் என்ன நடந்தது என்று பாருங்கள். மண்டன மிஸ்ராவின் மனைவி. சங்கரரையும், மிஸ்ராவையும் புதிய மலர் மாலைகளை அணியச் சொல்லி அவர்கள் வாதத்தை துவக்குமாறு கூறினார்.

யாருடைய மலர் மாலை வாடிப்போகிறதோ அவர்களே இந்த வாதத்தில் தோற்றவர்களாக கருதப்படுவார்கள் என்றும் அவர் கூறினார். ஏன்? ஒருவருக்கு கோபம் ஏற்பட்டால் அவரது உடல் உஷ்ணம் அடைகிறது. அதனால் மலர் மாலைகள் வாடிப்போகின்ற நிலை ஏற்படும். கோபம் என்பது தோல்வியின் அடையாளம். இதன் அடிப்படையில் மண்டன மிஸ்ரா வாதத்தில் தோற்றதாக அறிவிக்கப்பட்டது. ஆகவே அவர் துறவறத்தை மேற்கொண்டு சங்கரருக்கு சீடரானார். இந்த வாதங்களிலிருந்து நமக்கு என்ன தெரிகிறது என்றால், பேச்சுவார்த்தைகளின் தன்மையும், அப்போது கோபத்திற்கு இடம்கொடுக்காமல் நடத்தப்பட வேண்டும் என்றும் தெரிகிறது.

தகவல் உதவி

தமிழ் இந்து நாளிதழ்

10-09-2015


'கோபம் என்பது தோல்வியின் அடையாளம்' என்கிறார் நரேந்திர மோடி. 2002ல் குஜஸராத்தில் இவரும் இவரது சங்பரிவாரும் கோபப்பட்டு வன்முறை இறங்கியதை இந்துத்வாவின் தோல்வி என்பதை ஒத்துக் கொள்கிறாரா?

ஊருக்கு உபதேசம் செய்யும் நரேந்திர மோடி அவர்கள் இதே பொறுமையை குஜராத் கலவரத்தில் காட்டியிருந்தால் 3000 முஸ்லிம்களின் உயிர்கள் காப்பாற்றப்பட்டிருக்கும். கோதரா ரயில் எரிப்பு ஒரு விபத்து என்பது அறிக்கை. ஆனால் தன்னை முன்னிலைப் படுத்திக் கொள்ள அந்த விபத்தை முஸ்லிம்கள் செய்ததாக கற்பனையாக ஜோடித்து நாட்டு மக்களை மோத விட்டு அன்று வேடிக்கை பார்தார் இதே நரேந்திர மோடி. அப்பாவிகளின் சாபம் யாரையும் சும்மா விடாது. இன்றில்லா விட்டாலும் என்றாவது ஒரு நாள் அதற்கான தண்டனையை இறைவன் கண்டிப்பாக கொடுப்பான்.

Saturday, August 29, 2015

குருதியை விற்றுப் பிழைக்கும் இந்துத்வா அரசு!



மோடியின் குஜராத் மாநிலத்தில் இயங்கி வரும் அரசு இரத்த வங்கி தனியாருக்கு விற்று கோடிக்கணக்கில் லாபம் பார்த்துள்ளது விசாரணையில் அம்பலமாகியுள்ளது.

1. 2011 லிருந்து 2014 வரை 10 அரசு இரத்த வங்கிகள் 52000 லிட்டர் இரத்தத்தை 6.17 கோடிக்கு தனியாருக்கு விற்றுள்ளது. தேசிய இரத்த சேமிப்பு மையமோ இவ்வாறு தனியாருக்கு விற்பதை சட்ட விரோதமாக்கியுள்ளது. ஆனால் இந்துத்வா அரசுக்கு சட்டமெல்லாம் கால் தூசுக்கு சமமல்லவா?

2. தலசீமியா, ஹீமோபிலியா நோய் தாக்கிய நோயாளிகளிடமிருந்தும் உயிர் பிரியும் தருவாயிலுள்ள அவசர கேஸ்களிடமிருந்தும் இரத்தத்திற்காக எந்த கட்டணமும் வசூலிக்கக் கூடாது என்று அரசு ஆணை உள்ளது. ஆனால் 2011 லிருந்து 2014 வரை 5747 யூனிட் ரத்தத்தை விற்று 19.61 லட்சம் பணமாக பெறப்பட்டுள்ளது. கணக்கில் வந்ததுதான் இது. கணக்கில் வராதது இன்னும் எத்தனை லட்சங்களோ!

3. 32 இரத்த வங்கிகளில் நடந்த சோதனையில் 7 ரத்த வங்கிகள் ஹெச்ஐவி நோயாளிகளிடமிருந்து நிர்ணயிக்கப்பட்ட தொகைக்கு அதிகமாக விற்கப்பட்டுள்ளது விசாரணையில் தெரிய வந்துள்ளது.

4. 82 கோடிக்கு 3.14 லட்சம் யூனிட் ரத்தத்தை அநியாய விலைக்கு விற்று காசாக்கியுள்ளனர்.

5. குஜராத்தில் உள்ள 136 இரத்த வங்கிகளில் பெரும்பாலானாவை அடிப்படை வசதிகளே இல்லாமல் உள்ளன. 73000 யூனிட் ரத்தமானது எவருக்கும் பயனளிக்காமல் வீணாக்கப்பட்டுள்ளது.

6. ஐந்து வருடத்துக்கு ஒரு முறை இரத்த வங்கிகளின் உரிமம் புதுப்பிக்கப்பட வேண்டும். கடந்த 10 ஆண்டுகளாக பல ரத்த வங்கிகள் உரிமம் இல்லாமலேயே இந்துத்வாவாதிகளின் ஆசியோடு நடந்து வருகின்றன.

மோடியின் தலைமையில் உள்ள இந்துத்வா ஆட்சி சாமான்யனுக்காக உழைக்கவில்லை. அம்பானி, அதானி போன்ற பண முதலைகள் மேலும் பணக்காரர்கள் ஆவதற்குத்தான் இந்துத்வா அரசு மறைமுகமாக வேலை செய்கிறது. நில கையகப்படுத்தும் சட்டத்திலிருந்து கேஸ் மான்யத்தை விட்டுத் தர வேண்டும் என்று மோடியே கேட்பது வரை இவர்கள் பண முதலைகளுக்காகவே உழைக்கிறார்கள்.

அப்பாவி இந்துவோ மோடியினால் தனக்கு வளமான எதிர்காலம் வந்து விட்டது என்ற தவறான பிம்பத்தில் அமர வைக்கப்பட்டுள்ளார். பல் முகம் கொண்ட நமது பாரத தேசத்தில் இந்துத்வாவின் செல்வாக்கு என்று சரிகிறதோ அன்று தான் நமது நாடு முன்னேற்ற பாதையில் அடியெடுத்து வைக்கும். அதற்கான அறிகுறிகள் தற்போது தெரிய ஆரம்பித்துள்ளன.

தகவல் உதவி
தி லாஜிகல் இந்தியன்.காம்
26-08-2015


http://thelogicalindian.com/editors-pick/blood-banks-in-gujarat-sold-blood-to-pharma-companies-for-crores-says-cag-report/

http://www.saiindia.gov.in/english/home/Our_Products/Audit_Report/Government_Wise/state_audit/recent_reports/Gujarat/2015/Report_6/Report_6.html

Sunday, August 16, 2015

பள்ளிகள் அனைத்திலும் கழிப்பறை வந்து விட்டதாம்! - மோடி



"மாநிலங்களின் ஒத்துழைப்பால் எல்லா பள்ளிகளிலும் கழிப்பறை அமைக்கும் திட்டம் கிட்டத்தட்ட முழுமையாக நிறைவேறியுள்ளது." என்று வழக்கமான பல பொய் தகவல்களோடு நரேந்திர மோடியின் சுதந்திர தின உரை நேற்று டெல்லி செங்கோட்டையில் நடைபெற்றது. மோடியின் பின்னால் கம்பீரமாக இஸ்லாமிய கட்டட கலை மற்றும் மொகலாயர்களின் நினைவுச் சின்னங்களும் உலகுக்கு இந்தியாவில் முஸ்லிம்களின் பங்களிப்பை பறை சாற்றிக் கொண்டிருக்கின்றன. இஸ்லாத்தை முற்றாக ஒழிப்பதையே சங் பரிவாரங்கள் தங்கள் கொள்கைகளாக கொண்டுள்ளன. ஆனால் சுதந்திர தின உரையிலும் இஸ்லாத்தை அவர்களால் புறந் தள்ள முடியவில்லை.

எனது நாடு இன மொழி மத சாதி மோதல்கள் அற்ற சிறந்த தேசமாக மிளிர இறைவனிடம் பிரார்த்திக்கிறேன்.

Sunday, July 12, 2015

துர்க்மெனிஸ்தானில் இஸ்லாமியர்களோடு நரேந்திர மோடி



ஒரு காலத்தில் அமீத்ஷாவோடு கை கோர்த்து கொண்டு 2000 முஸ்லிம்கள் குஜராத்தில் கொல்லப்பட காரணமாயிருந்தவர் நரேந்திர மோடி. அதே நரேந்திர மோடி இன்று துர்க்மெனிஸ்தான் சென்று அங்கு நடைபெற்ற இஸ்லாமியர்கள் நடத்தும் பிரார்த்தனையில் கலந்து கொண்டு 'ஆமீன்' போடவும் வைத்து விட்டார்கள் அங்குள்ள ஆட்சியாளர்கள். :-)

வருங்காலத்திலாவது செய்த பாவங்களுக்கு பிராயச்சித்தமாக முஸ்லிம்களை கல்வி வேலை வாய்ப்புகளில் இந்திய அளவில் முன்னுக்கு கொண்டு வர மோடி முயற்சிப்பாரா? பொறுத்திருந்து பார்போம்.

Thursday, July 02, 2015

மோடி மீது மகாராட்டிர பிஜேபி தலைவர் பகிரங்கக் குற்றச்சாட்டு





மகாராட்டிர பிஜேபி தலைவர் பகிரங்கக் குற்றச்சாட்டு

மும்பை ஜூன் 28 மோடி மற்றும் அமித்ஷா குறித்து பாஜக மகாராஷ்டிரா தலைவரும் சட்டமன்ற உறுப்பினருமான ராஜ் புரோகித் பத்திரிகையாளர் ஒருவருடன் உரையாடல் நடத்திய காணொளிக் காட்சி வெளியாகியுள்ளது. இது கட்சியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மும்பை கொலாபா தொகுதி சட்ட மன்ற உறுப்பினரும், பாஜகவின் மூத்த தலைவருமான ராஜ் புரோகித் இந்தி செய்தி தொலைக்காட்சி செய்தியாளர் ஒருவருடன் நடத்திய காணொளிக் காட்சி வெளியாகியுள்ளது. இந்த சந்திப்பின் போது அவர் கூறியதாவது: மத்தியில் மக்களாட்சி தற்போது நடைபெற வில்லை, பாஜக தலைமையில் சமத்துவமில்லாத சூழல் நிலவுகிறது. பாஜகவின் பிரபல தலைவர்கள் அனைவரும் ஓரம்கட்டப் பட்டு நேற்று வந்த சிலர் ஆட்சி அதிகாரத்தை தங்கள் கைகளில் எடுத்துக் கொண்டுள்ளனர். அதிகாரம் தனிப்பட்ட நபர்கள் கையில் இருந்தால் ஜனநாயகம் சீர் குலைந்துபோகும், இதை நாம் எமர்ஜென்சி காலத்திலேயே பார்த்து விட்டோம். தற்போது பாஜகவில் உட்கட்சி பூசல் அதிகம் உள்ளது.

இது வெளிப் படையாக தெரியத் துவங்கி விட்டது. இவ்வளவு நடந்த பிறகும் உண்மையை மறைக்கவேண்டிய அவசியமில்லை. டில்லித் தலைமை தற்போது மோடி, அமித்ஷா இருவரின் கையில் சென்று விட்டது. இவர்கள் இருவரும் வைத்தது தான் சட்டமாகிவிட்டது. மூத்த தலைவர்களுக்கு அங்கே மரியாதையில்லை.

மக்களாட்சி இல்லை

பாஜகவில் மக்களாட்சிக்கு இடமில்லாமல் போய்விட்டது. தேர்தலில் அனைவருடன் சேர்ந்து வளர்ச்சியைக் காண்போம் என மோடி கூறினார். ஆனால், தற்போது அவர் மற்றும் அமித்ஷா மாத்திரமே எல்லாம் செய்யவேண்டும். எதிர் காலத்தில் பாஜக என்றாலே தங்கள் இருவர் பெயர் மட்டும் தான் இருக்கவேண்டும் என்று நினைக்கிறார்கள்; அவர்கள் இருவரும் தங்கள் தவற்றை திருத்திக் கொள்ள வேண்டும். இது ஜனநாயக நாடு, இங்கே கருத்துப் பரிமாற்றம் மூத்தவர்களின் ஆலோசனை மற்றும் விமர்சனங்களைத் தாங்கிக் கொள்ளும் மனப்பான்மை வேண்டும். மக்கள் எதற்காக காங்கிரசை வெறுத்து நமக்கு வாக்களித்தனர்.

நாம் நல்லாட்சி கொண்டு வருவோம் என்பதற்காகத்தான். ஆனால், மோடியோ பெரும் வியாபாரிகளுக்கு மாத்திரம் நல்லது செய்கிறார். தவறுகளைத் தவிர்த்துவிட்டு மக்கள் நலப்பணிகளை செய்ய வேண்டும். பொதுமக்களும் சிறுவியாபாரிகளும் பாஜகமீது அதிக நம்பிக்கை வைத்திருந்தனர். ஆனால் இவர்கள் என்ன செய்தார்கள்? சிறு வியாபாரிகள் மற்றும் விவசாயிகளுக்கு எதிரான நடவடிக்கைகளை தொடர்ந்து எடுத்து வருகிறார்கள். கருப்புப் பணத்தைக் கொண்டுவரும் வழியைக் காணோம். ஆனால் பெரிய தொழிலதிபர்களுக்கு சலுகைகளைக் கொடுக்கிறார்கள். இதன் மூலம் பெரிய வியாபாரிகள் அதிக லாபம் பார்த்து பணத்தைப் பதுக்க முயல்வார்கள். நாட்டின் 90 விழுக்காடு சிறுவியாபாரிகள் மோடி அரசின் மோசமான நிதிக் கொள்கைகளால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மேலும் அவர் கூறியதாவது:

நாளுக்கு நாள் பாஜக வின் புகழ் அதல பாதாளத்தில் சரிந்து கொண்டு வருகிறது. ஆனால் கட்சியினர் இந்தச் செய்தியை தலைமையிடம் பேச பயப்படுகின்றனர். அப்படிப் பேசினால் தங்கள் பதவி போய்விடும் என்று அஞ்சுகின்றனர். காரணம் பதவியை வைத்து அவர்கள் பிழைக்கின்றனர். மும்பையில் இருந்து தான் பாஜகவிற்கு பெருமளவில் நிதி போய்ச் சேர்கிறது. ஆனால் மோடியோ தனது மாநிலத்தில் அதிகம் கவனம் செலுத்தி வருகிறார். பாஜக ஆளும் மாநில முதலமைச்சர்கள் கிளிப்பிள்ளைபோல் மாறிவிட்டார்கள் அவர்கள் மோடி சொல்வதையும் கட்டளையிடுவதையும் நிறைவேற்றுவதில் போட்டி போடுகிறார்கள். அவர்களுக்கு பதவிதான் முக்கியம். இது போன்ற காரணத்தால் பாஜக நாடு முழுவதும் பின்னடைவைச் சந்தித்து வருகிறது என்று கூறினார்.

கட்சியில் ஆட்சியில் ஆதிக்கம் செலுத்துவோர் யார்?

அவர் பாஜக மற்றும் சில மாநிலக் கட்சித் தலை வர்களைப் பற்றிக் கூறும்போது பிறப்பினால் அரசியல் குடும்பத்தைச் சாராத தங்களுடைய சமூகத்தில் அவரவர்களுக்கு இட்ட பணிகளைச் செய்யாமல் பலரும் அரசியலில் வந்து விட்டார்கள். இதனால் அரசியலில் பெருங்குழப்பம் நிலவுகிறது. இவர்களால் கட்சிக்கும் பெருமையில்லை, அவர்கள் சமூகத் திற்கும் பெருமையில்லை, அரசியல் நடத்த குடும்பப் பாரம்பரியம் வேண்டும், ஆனால் எந்த ஒரு அரசியல் தொடர்பும் இல்லாமல் கட்சிப்பணியில் இறங்கி மேலிடத்தில் நல்ல பெயர் வாங்கி பதவிக்கு வந்துவிடுகிறார்கள். இவர்களால் கட்சிக்கு அவப் பெயர் தான் உருவாகிறது. கட்சியில் சில தொழிலதிபர்கள் பெரிய பதவிகளை பெற்றுவிட்டனர். அவர்கள் கட்சிப்பணியை ஆற்றமாட்டார்கள், இந்தப் பதவிமூலம் தங்கள் வியாபாரத்தைப் பெருக்கிக்கொள்வார்கள், அரசியலுக்கு என்று பாரம்பரிய குணம் உள்ளது அவர்கள் மாத்திரமே அரசியலுக்கு வரவேண் டும் அப்படி இல்லாதவர்கள் அவர்களுக்கான பணிக்கு முக்கியத்துவம் கொடுத்து செய்யவேண்டும்.

இந்தக்காணொளி இன்று காலைவெளியான பிறகு மகாராஷ்டிரா பாஜக தலைவர் ஆஷிஷ் சோலார் கூறியதாவது இது ராஜ் புரோகித்திடம் இந்த விவகாரம் குறித்து விளக்கம் கேட்டுள்ளோம். அவர் என்ன மனநிலை யில் இதைக் கூறினார் என்று தெரியவில்லை என்றார்.

இருப்பினும் அவரிடமிருந்து விளக்கம் வந்த பிறகுதான் அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறினார். அரசியலில் ஜாதிச் சாயம் பூச முயலும் ராஜ் புரோகித்தின் இந்தப் பேட்டியின் காரணமாக மகராஷ்டிராவைச் சேர்ந்த பல்வேறு மாநிலக்கட்சிகள் கண்டனம் தெரிவித்துள் ளன. மும்பையில் உள்ள ராஜ் புரோகித்தின் கட்சி அலுவலகத்தை ராஜ் தாக்கரேவின் நவநிர்மாண் கட்சித் தொண்டர்கள் முற்றுகையிட்டனர். அவர் கள் கூறியதாவது அரசிய லுக்கு வரத் தகுதி வேண்டும் என்று மறைமுகமாக ராஜ்தாக்கரேவைக் குறிப் பிட்டுத்தான் பேசியுள்ளார்.

அரசியலுக்கு வர என்ன தகுதிவேண்டும் என்று அவரே விளக்கம் கொடுத்தால் நன்றாக இருக்கும், அவர்களின் பிரதமர் மோடி என்ன அரசியல் குடும்பத்தில் இருந்து வந்தவரா? அல் லது பாஜக தலைவர் அமித்ஷா அரசியல் குடும் பத்தில் இருந்து வந்தவரா? என்று கேள்வி கேட்டனர். பாஜக விரைவில் ராஜ் புரோகித் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஆர்ப்பாட் டத்தில் கலந்துகொண்ட ராஜ்தாக்கரே கட்சித் தொண்டர்கள் கூறினார்கள்.

தகவல் உதவி
டைம்ஸ் ஆஃப் இந்தியா
விடுதலை
27-06-2015

Thursday, June 04, 2015

கூகுளில் "Top Ten Criminals" பட்டியலில் மோடியின் பெயர்!



பிரபல தேடியந்திர தளமான கூகுளின் புகைப்படப் பிரிவில் 'டாப் 10 குற்றவாளிகள்' என்று ஆங்கிலத்தில் தேடினால் பிரதமர் நரேந்திர மோடியின் படம் இடம்பெறுவதற்கு அந்நிறுவனம் மன்னிப்புக் கோரியுள்ளது.

இது குறித்து கூகுள் நிறுவன செய்தித் தொடர்பாளர் ஒருவர் கூறும்போது, "இந்த தேடல் முடிவுகள் எங்களை மிகவும் பாதித்துள்ளது. இது எந்த வகையிலும் எங்கள் நிறுவனத்தின் கருத்து அல்ல. சில நேரங்களில் இதுபோன்ற குறிப்பிட்ட கேள்விகளுக்கான தேடலின் முடிவில் இத்தகைய வியப்புக்குரிய பதில்கள் கிடைக்கும்.

'டாப் 10 கிரிமினல்கள்' என்ற ஆங்கிலத் தேடலில், பிரதமர் மோடியின் படங்கள் இடம்பெற்று ஏற்படுத்திய குழப்பங்கள், தவறான புரிதல்களுக்கு நாங்கள் மன்னிப்புக் கோருகிறோம்.

இது மாதிரியான எதிர்பாராத முடிவுகள் வருவதை தடுக்க நாங்கள் எங்கள் அல்காரிதம்களை மேம்படுத்த தொடர்ந்து முயன்று வருகிறோம்" என்றார்.

மேலும் அவர் கூறும்போது, "சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள 'டாப் 10 கிரிமினல்கள்' என்ற தேடலுக்கு விடையாக மோடியின் படம் கிடைக்கக் காரணம், பிரிட்டிஷ் நாளிதழ் ஒன்று மோடியின் புகைப்படத்தையும் தவறான மெட்டா-டேட்டாவையும் பயன்படுத்தியதே ஆகும்.

அந்தப் பத்திரிகை, கிரிமினல் பின்னணி கொண்ட அரசியல்வாதிகள் குறித்த செய்திக் கட்டுரைகளில் பயன்படுத்தியிருந்த சில புகைப்படங்களும், குற்றப் பின்னணி கொண்ட அரசியல்வாதிகள் குறித்த மோடியின் பேச்சு தொடர்பான செய்திகளில் பயன்படுத்தப்பட்டிருந்த புகைப்படங்களுமே, கூகுள் தேடலில் பிரதிபலித்துள்ளது.

இருப்பினும் அந்தக் குறிப்பிட்ட பிரிட்டிஷ் செய்தித்தாள் எந்த வகையிலும் மோடியை கிரிமினல் நடவடிக்கைகளுடன் இணைந்து செய்தி வெளியிடவில்லை என்பதை தெளிவுபடுத்துகிறேன். மோடி, கிரிமினல் நடவடிக்கை என்ற வார்த்தைகள் அருகருகே இடம் பெற்றிருந்ததே இந்தக் குழப்பத்துக்கு காரணம்" என்றார் அவர்.

முன்னதாக, கூகுள் தேடியந்திர தளத்தின் புகைப்படப் பிரிவில் 'டாப் 10 குற்றவாளிகள்' (Top 10 criminals) என்று ஆங்கிலத்தில் தேடினால் கொட்டிக் கிடக்கும் படங்களில் முதன்மையாக இருப்பவை அதிர்ச்சிக்கு உரியவை. அந்தத் தேடல் முடிவின் இரண்டாவது படம் மட்டுமல்ல... முதல் 20 நபர்களின் படங்களில் மூன்றில் இடம்பெற்றிருக்கிறார் பிரதமர் நரேந்திர மோடி. இந்த விவகாரம், ட்விட்டரில் வெகுவாக விமர்சிக்கப்பட்டு ஆயிரக்கணக்கான நெட்டிசன்களால் கருத்துகள் பகிரப்பட்டது. | அதன் விவரம்: கூகுள் நெருடல்: 'டாப் 10 கிரிமினல்கள்' படத் தேடலில் மோடி |

இதன் தொடர்ச்சியாக, Top 10 criminals தேடல் முடிவுக்கு மேலே ஒரு சிறு குறிப்பை கூகுள் வெளியிட்டுள்ளது. அதில், இந்தத் தேடல் முடிவுகள் அனைத்தும் கூகுளின் கருத்து அல்லது நம்பிக்கை சார்ந்தது அல்ல என்றும், தங்களது அல்காரிதம் அடிப்படையில் இவ்வாறான தேடல் முடிவுகள் காணக் கிடைக்கின்றன என்றும் கூகுள் தெளிவுபடுத்தியுள்ளது.

தகவல் உதவி
பிபிசி
ஹிந்துஸ்தான் டைம்ஸ்
தமிழ் இந்து நாளிதழ்
04-06-2015

Friday, May 15, 2015

கூலிங் கிளாஸ் அணிவது அம்புட்டு பெரிய தவறுங்களா?





சத்தீஸ்கர் மாநிலத்தின் பஸ்தார் மாவட்ட ஆட்சியர் அமித் கட்டாரியாவுக்கு அம்மாநில அரசு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

மே, 9-ம் தேதி பிரதமர் நரேந்திர மோடி சத்தீஸ்கர் மாநிலத்துக்கு பயணம் மேற்கொண்டார், அப்போது பஸ்தார் மாவட்டம் சென்ற பிரதமரை வரவேற்ற மாவட்ட ஆட்சியர் அமித் கட்டாரியா, முறையான உடைகளை அணியாமலும், கூலிங் கிளாஸ் அணிந்து கொண்டே பிரதமருக்கு கை கொடுத்து வரவேற்றதாகவும் சத்தீஸ்கர் மாநில அரசு அவருக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

அந்த நோட்டீஸில், “பஸ்தார் மாவட்ட ஆட்சியராக நீங்கள் அன்று பிரதமரை ஜக்தால்பூரில் வரவேற்றீர்கள். ஆனால், நீங்கள் முறையான உடைகளை அணியவில்லை என்பதை அரசு கவனத்தில் கொண்டதோடு, கூலிங் கிளாஸ் அணிந்தபடியே அவரை வரவேற்றுள்ளீர்கள்.

எனவே, இத்தகைய தவறான அணுகுமுறையை இனி கடைபிடிக்க வேண்டாம் என்று மாநில அரசு உங்களை எச்சரிக்கிறது. நீங்கள் செய்தது அரசு ஊழியருக்குரிய நடத்தை விதிகளுக்கு புறம்பாக அமைந்துள்ளது.

அரசு ஊழியர்கள், குறிப்பாக சேவைத்துறையில் பணியாற்றுபவர்கள் நேர்மையையும், கடமை உணர்வையும் பராமரிப்பது அவசியம்” என்று அந்த நோட்டீஸில் கூறப்பட்டுள்ளது.

இது குறித்து கட்டாரியாவை தொடர்பு கொள்ள தி இந்து (ஆங்கிலம்) முயன்ற போது அவர் பதில் அளிக்கவில்லை.

தமிழ் இந்து நாளிதழ்
15-05-2015

மோடியை பொருத்தவரை ஐந்து ஆண்டு ஆட்சிக்கு பிறகு எந்த அதிகாரமும் அற்றவராக இருப்பார். வசிக்கும் வீட்டையும் காலி செய்ய வேண்டும். சந்தர்ப்ப வசத்தால் பிரதமரானவர்.

ஆனால் ஒரு மாவட்ட ஆட்சியர் சிரமமான ஐஏஎஸ் தேர்வு எழுதி பல திறமைகளுக்கு பிறகு மாவட்ட ஆட்சியராக பொருப்பு கொடுக்கப்படுபவர். ஓய்வு காலம் வரை அதே அதிகார வேலையில் தனது பணியை தொடருபவர். இவ்வாறிருக்க எந்த வகையில் மோடிக்கு அந்த மாவட்ட ஆட்சியர் தகுதியில் குறைந்து விட்டார். கூலிங் கிளாஸ் அணிவது அவ்வளவு பெரிய தவறா?

கூத்தாடி சல்மான் கான் என்னவொரு திமிரில் அமர்ந்து சாப்பிடுவதை பாருங்கள். ஒரு கூத்தாடிக்கு கொடுக்கும் மதிப்பையாவது படித்த மாவட்ட கலெக்டருக்கு கொடுக்கக் கூடாதா?

கோமாளிகளின் ஆட்சி.... வேறு என்ன சொல்ல....

Thursday, February 12, 2015

'ஜாடு' ஸே 'ஜாது' கராதியா! (துடைப்பத்தால் ஏற்பட்ட மாயாஜாலம்)



'ஜாடு' ஸே 'ஜாது' கராதியா! (துடைப்பத்தால் ஏற்பட்ட மாயாஜாலம்)

மக்கள் நரேந்திர மோடியின் மேல் மிகுந்த அன்பு வைத்துள்ளனர். ஏனெனில் மோடி துடைப்பத்தை ரொம்பவும் விரும்பி அதன் மூலம் தெருக்களை பெருக்கி ஆங்காங்கே பத்திரிக்கைக்கு போஸ் கொடுத்தார். துடைப்பத்தின் மேல் இவருக்குள்ள மதிப்பையும் மரியாதையையும் பார்த்து மெர்ஸலான(பரவசமடைந்த) டெல்லி மக்கள் மோடி விரும்பிய துடைப்பத்தையே தேர்ந்தெடுத்துள்ளனர். துடைப்பத்தால் ஒரு மாயாஜாலத்தையே டெல்லி மக்கள் நிகழ்த்திக் காட்டியுள்ளனர்.

அதாவது....

'ஜாடு ஸே ஜாது கராதியா' :-)

Tuesday, February 10, 2015

கிரண்பேடி அவர்களுக்கு ஷப்னம் ஆஷ்மி எழுதும் திறந்தமடல்!



கிரண்பேடி அவர்களுக்கு ஷப்னம் ஆஷ்மி எழுதும் திறந்தமடல்!

உங்களுடைய சர்வாதிகாரம் மற்றும் ஆணவத்தனம் அடங்கிய சமூக சேவையின் போக்குகளின் மீது கடுமையான அதிருப்தியடைந்த காரணத்தால் எப்போதுமே உங்களின் ரசிகையாக இருந்ததில்லை என்று கூறிக்கொண்டே ஆரம்பம் செய்கிறேன்.

உங்களுக்கு தற்போது போதிய நேரம் கிடைக்கும்போது சாவகாசமாக அசைவு நாற்காலியில் உட்கார்ந்து காபி குடித்துக் கொண்டும் களைப்படைந்திருக்கும் உங்களின் பாதங்களை இளம் வெந்நீரில் வைத்து இளைப்பாரிக்கொண்டும் உங்களை சுயபரிசீலனை செய்துகொள்ள வேண்டுகோள் விடுக்கிறேன்.

தயவுகூர்ந்து உங்களுக்கு நீங்களே இழைத்துக் கொண்டதை யோசித்துப் பாருங்கள்.

நான் தங்களுடைய ரசிகையாக இருந்ததில்லை ஆனால் தாங்கள் மிகவும் தன்னம்பிக்கையுள்ள திறமை வாய்ந்த பெண்மணியாக இருந்துள்ளீர்கள். ஒவ்வொரு மனிதருக்கும் சிறிய குறைபாடுகள் உள்ளன அதை தொடர்ச்சியாகப் போராடி சீர்செய்து கொள்கிறோம் ஆனால் ஒருவரின் குறைபாட்டை பகிரங்கமாக விமர்சிப்பது பெருத்த அவமானகரமான செயல்.

நீங்கள் நரேந்திர மோடிக்கு முன் கூனிகுறுகி நின்று எதையோ கே ட்பது போன்ற புகைப்படத்தை சமீபத்தில் பார்த்தேன். உங்களது முகபாவனை மோடியிடம் கையாலாகாதத் தனத்துடன் அனுமதி வேண்டுவது போல் இருந்தது.

இது எனக்குள் மிகுந்த வலியை ஏற்படுத்தியது. எனக்கு உங்களுடன் கருத்து வேறுபாடுகள் உண்டு ஆனால் ஒரு மனிதராகவும் ஒரு ஆர்வலராகவும் உங்களை மட்டுமின்றி எந்தவோரு திறமைவாய்ந்த பெண்மணியும் இந்த சூழ்நிலையில் ஒருபோதும் பார்க்க விரும்பவில்லை.

திரு பேடி அவர்களே, 2002ம் ஆண்டு குஜராத் மதக் கலவரத்தால் எரிந்து கொண்டிருந்தபோது கூட்டு பாலியல் வன்புணர்வால் பாதிக்கப்பட்டவர்களின் வாக்குமூலங்களை நான் பதிவுசெய்து வெளியிட்டதை நீங்கள் அறிந்திருக்கலாம். நான் அங்கு கிட்டத்தட்ட பத்து மாவட்டங்களிலுள்ள ஐம்பதுக்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு பயணம் செய்தேன். அங்கு குக்கிராமங்களிலுள்ள மருந்தகங்களில் பிரேத பரிசோதனை செய்த மருத்துவர்களை சந்தித்தபோது அங்கு வயிறு கிழிக்கப்பட்டதற்குப் பின்னர் எரிக்கப்பட்ட பெண்களின் சடலங்கள் மற்றும் இறந்த கருக்கள் அந்த சடலங்களின் மீது ஒட்டியிருந்த நிலையில் எடுக்கப்பட்ட புகைப்படங்களைப் பார்த்தேன். அங்கு ஒரு வெளியுலகம் அறிந்த ஒரு கவுஸர் பானு மட்டுமில்லை இன்னும் இவ்வுலகுக்கு தெரியாத சிதைக்கப்பட்டு இறந்த பல கவுஸர் பானுகள் இருந்தனர். மேலும் அங்கு 15 முதல் 20 பேர்கள் அடங்கிய கும்பலால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு அவர்களின் மர்மஉறுப்புகள் முற்றிலும் சிதைக்கப்பட்டதால் பல மாதங்கள் படுத்த படுக்கையாக இருந்த பல பெண்களை சந்தித்தேன் திரு பேடி அவர்களே.

திரு பேடி அவர்களே, 2002ம் ஆண்டு குஜராத் படுகொலைக்குப் பிறகு மோடி 'கவுரவ் யாத்ரா' (மரியாதைப் பயணம்) பயணத்தின்போது அங்கு அனைத்தையும் இழந்த மக்கள் வசிக்கும் நிவாரண முகாம்களை மனித்தன்மை இல்லாமல் “குழந்தைகள் உற்பத்தி செய்யும் தொழிற்சாலை” என வர்ணித்தார். கடந்த இரண்டு வருடங்களாக மோடி பேசிய விஷமத்தனமான மற்றும் இழிவான பேச்சுகள் பல யூட்யூப் இணையத்தை அலங்கரித்தன. தற்போது விஷத்தை உமிழ்ந்து வரும் ஷாக்ஷி மகாராஜ் மற்றும் சாத்வி ப்ராச்சி கூட மோடிக்கு நிகர் கிடையாது. மோடி பேசிய பேசுக்கள் அனைத்தும் இதைவிட பன்மடங்கு விஷம் தோய்ந்தவை.

திரு பேடி அவர்களே, பில்கிஸ் என்ற பெண்மணி கூட்டு வன்புணர்வுக்கு இரையாகிக் கொண்டிருக்கும்போது அவருடைய பிஞ்சு மகளின் தலையை கல்லின்மீது ஓங்கி அடித்து அந்த இடத்திலேயே துடிக்க துடிக்கக் கொன்றனர். மெதினா என்ற மற்றொரு பெண்மணி அவரது கண்ணெதிரிலேயே மகள் மற்றும் மருமகள் பாலியல் பலாத்காரம் செய்ப்பப்படுவதை பார்க்கும் நிலைமைக்கு வற்புறுத்தப் பட்டார்.

திரு பேடி அவர்களே, நீங்கள் இந்த அக்கிரமங்களுக்கு காரணகர்த்தாவான மோடியின் முன் கூனிகுறுகி நிற்பதைப் பார்க்கும் பொழுது எனக்கு மனது வலித்தது.

அவர் குற்றமற்றவர் என்று நற்சான்று பெற்றதை நீங்கள் சுட்டிக்காட்டலாம். எனக்கு இதுபோன்ற நற்சான்றுகளின் வரலாற்றைப் பற்றி கொஞ்சம் அதிகமாகவே தெரியும்.

திரு பேடி அவர்களே, இந்த மனிதர் மோசடியாக பிரதமாராக முயற்சித்த போதே நான் என்னுடைய பாதுகாப்பில் கவனமாக இருக்க அறிவுறுத்தப்பட்டேன். எனக்கு அறிவுரைகூறிய நண்பர்களிடம் அதிகபட்சம் என்னை அவதூறு சொல்லி கைது செய்யமுடியும் அல்லது கொலை செய்யமுடியும். என்னுடைய உடல் கொலை செய்யப்படுவது மனவேதனையால் உள்ளூர கொல்லப் படுவதைவிட மேலானது.

திரு பேடி அவர்களே, தனிமையில் இருக்கும்போது உங்கள் சுயமரியாதைக்கு நீங்கள் இழைத்துக் கொண்டதை நீங்களே சுயபரிசீலனை செய்து பாருங்கள். ஒரு பெண்ணாக ஒரு தாயாக யோசித்துப்பாருங்கள். மிகவும் கம்பீரத்துடன் உயர்ந்து வாழ்ந்த திறமையான பெண்ணாக யோசித்துப்பாருங்கள்.

நீங்கள் தயவுதாட்சண்யமின்றி உண்மைகளைக் கொண்டு உங்களை சுயபரிசீலனை செய்யும் தைரியத்தைப் பெறுவது மிகவும் கடினம். ஆனால் உங்களது நன்மைக்காக தயவுகூர்ந்து அதைச் செய்யவும்.

உங்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்.

ஷப்னம் ஆஷ்மி

தமிழில் மொழிபெயர்த்தது: Mohamed Hussain

அனைவரும் படித்து விட்டு பகிர்ந்துகொள்ளுங்கள்.

http://www.indiaresists.com/an-open-letter-to-ms-kiran-bedi-from-shabnam-hashmi/

Monday, February 09, 2015

ஆம் ஆத்மி டெல்லியில் ஆட்சியைக் கைப்பற்றுகிறது! வாழ்த்துக்கள்.



பெரும்பான்மை இந்துக்களின் மன ஓட்டம் இந்துத்வாவுக்கு எதிராக உள்ளதையே டெல்லி தேர்தலின் முடிவுகள் காட்டுகின்றன. இனிமேலாவது வறுமையிலும் தீண்டாமையிலும் தினம் செத்து மடியும் பெரும்பான்மை இந்துக்களை அவர்களின் உரிமைகளை பெற்றுத் தர இந்துத்வா முயலட்டும். இதை விடுத்து இஸ்லாமியரிடத்தில் தொடர்ந்து மோதல் போக்கை கடை பிடித்தால் இந்துக்களே பிஜேபியை ஒட்டு மொத்தமாக வீட்டுக்கு அனுப்புவார்கள்.

தனக்கு மிகப் பெரிய ஆதரவு இருக்கிறது என்று படம் காட்டி வந்த டெல்லி இமாமின் ஆதரவை 'வேண்டாம்' என்று திருப்பி முகத்திலடித்து இன்று அறுதி பெரும்பான்மை பெற்றுள்ள அரவிந்த் கெஜ்ரிவாலை வாழ்த்தி வரவேற்போம். இந்தியா முழுக்க இதன் தாக்கம் இனி வரும் தேர்தலிலும் ஒலிக்கட்டும். காவிகளின் கொட்டம் துடைப்பத்தால் அடக்கப்படட்டும்.

Saturday, February 07, 2015

மோடியை கடுமையாக சாடிய 'நியூயார்க் டைம்ஸ்'



பிப்ரவரி 6, 2015 தேதியிட்ட நியூயார்க் டைம்ஸ் நாளிதழில் வெளியான தலையங்கம் - முழு வடிவம்:

இந்திய தேசத்தின் சிறுபான்மையினருக்கு எதிராக நாளுக்கு நாள் பெருகிக் கொண்டிருக்கும் வன்முறைகளுக்கு எதிராக கருத்து தெரிவிக்க பிரதமர் நரேந்திர மோடிக்கு என்ன சிரமம் இருந்துவிட முடியும்? கிறிஸ்தவர்கள் வழிபாட்டுத் தலங்களில் தாக்குதல் நடத்தப்படுகிறது... ஆனால் இந்தியர்கள் அனைவரையும் போற்றி பாதுகாக்க மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதமரோ அவ்விவகாரத்திற்கு எவ்வித எதிர்வினையும் காட்டவில்லை.

சரி இதற்குத்தான் பதில் இல்லை என்று பார்த்தால், கிறிஸ்தவர்களும், முஸ்லிம்களும் கட்டாயப்படுத்தப்பட்டோ, பணம் தருவதாக வாக்குறுதி அளிக்கப்பட்டோ கொத்து கொத்தாக மறு மதமாற்றம் செய்யப்பபடுகின்றனர். அதற்கும் மவுனமே பதிலாக இருக்கிறது.

இந்தியாவில் நடைபெறும் மதவாத நிகழ்வுகளைக் கண்டும் காணாமல் திருவாளர் மோடி கடைபிடித்துவரும் மவுனமானது, இரண்டு முடிவுகளுக்கு நம்மைத் தள்ளுகிறது. ஒன்று, மோடியால் இந்துத்துவா அமைப்புகளை கட்டுப்படுத்த முடியாமல் இருக்க வேண்டும்; இல்லையேல், அவ்வாறு கட்டுப்படுத்த மோடி விரும்பாமல் இருக்க வேண்டும்.

சமீபகாலமாக இந்தியாவில் உள்ள தேவாலயங்கள் சூறையாடப்படுவதும், தீக்கிரையாக்கப்படுவதும் அதிகமாக நடைபெறுகிறது. கடந்த டிசம்பர் மாதம், கிழக்கு டெல்லியில் உள்ள புனித செபாஸ்டின் தேவாலயம் ஒன்று தீ வைத்துக் கொளுத்தப்பட்டது. அந்த தேவாலயத்தின் பாதிரியார் அளித்த புகாரில் மண்ணெண்ணெய் ஊற்றி ஆலயம் எரிக்கப்பட்டதாக கூறியிருந்தார். திங்கள்கிழமை, (பிப்ரவரி 3-ம் தேதி) புதுடெல்லியில் உள்ள புனித அல்போன்ஸா தேவாலயம் சூறையாடப்பட்டுள்ளது. அதில் விந்தை என்னவென்றால், பிரார்த்தனைக்குப் பயன்படுத்தப்படும் புனித பாத்திரங்களை சேதப்படுத்திய விஷமிகள் அங்கிருந்த காணிக்கைப் பெட்டியில் நிரம்பி வழிந்த பணத்தை சட்டை செய்யவில்லை.

இந்தத் தாக்குதல்களையடுத்து, கத்தோலிக்க பிஷப்புகள் மாநாட்டு சபையானது இந்திய அரசுக்கு ஒரு கோரிக்கை விடுத்துள்ளது. இந்திய தேசத்தின் மதச்சார்பற்ற தன்மையை பாதுகாக்கும்படியும், இங்குள்ள கிறிஸ்தவர்கள் மனங்களில் பாதுகாப்புணர்வை உறுதி செய்யுமாறும் வேண்டுகோள் விடுத்துள்ளது.

தேவாலய தாக்குதல்களுக்கு நிகராகவே மறு மதமாற்ற நிகழ்வுகளும் கவனிக்கப்பட வேண்டியவை. கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் ஆக்ரா நகரில் 200 முஸ்லிம்கள், இந்து மதத்துக்கு மாற்றப்பட்டனர். ஜனவரி மாதம், மேற்குவங்கத்தில் 100 கிறிஸ்தவர்கள், இந்து மதத்துக்கு மாற்றப்பட்டனர். இந்து மதத்தின் அடிப்படைவாத அமைப்புகளான விஷ்வ ஹிந்து பரிஷத் (வி.ஹெச்.பி) ராஷ்டிரிய சுவயம்சேவக் சங் (ஆர்.எஸ்.எஸ்) ஆகிய அமைப்புகள் மறு மதமாற்ற நிகழ்வுகளுக்கு பகிரங்கமாகவே ஆதரவு தெரிவிக்கின்றன.

வி.ஹெச்.பி தலைவர் பிரவீண் தொகாடியா கூறுகையில், "இந்தியாவில் 80% மக்கள் இந்துக்கள். எங்கள் அமைப்பின் தற்போதைய இலக்கு, இந்த தேசத்தை 100% இந்து தேசமாக மாற்ற வேண்டும் என்பதே. இதை அடைய ஒரே வழி, சிறுபான்மையினருக்கு அவர்களுடைய மத நம்பிக்கை உரிமையை வழங்காமல் இருப்பதே ஆகும்" என கூறியுள்ளார்.

இத்தகையச் சூழலில், இம்மாதம் அயோத்தியாவில் 3000 முஸ்லிம்களை, இந்து மதத்துக்கு மாற்ற விஷ்வ ஹிந்து பரிஷத் திட்டமிட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

1992-ல் பாபர் மசூதி இடிக்கப்பட்டபோது, நாடு முழுவதும் மூண்ட இந்து - முஸ்லிம் மோதலில் 2000-க்கும் மேற்பட்டோர் பலியாகினர்.

இப்போது, விஷ்வ ஹிந்து பரிஷத் மீண்டும் நெருப்புடன் விளையாடுகிறது.

திருவாளர் மோடி, இந்தியாவின் வளர்ச்சிக்கு பல நம்பிக்கைக்குரிய திட்டங்களை முன்வைத்துள்ளார். ஆனால், அமெரிக்க அதிபர் ஒபாமாவின் பார்வையில் இந்தியாவின் எதிர்காலம் குறித்த கணிப்பு "மதச்சார்புகளால் பிரிந்துகிடக்க வாய்ப்பு கொடுக்காத வரையில் இந்தியாவின் வெற்றி நீளும்" என்பதாக இருக்கிறது.

இத்தகையச் சூழலில், மத சகிப்புத்தன்மை தேய்ந்து வருவது குறித்து திரு.மோடி தனது செவியை கூராக்கி, மவுனத்தை கலைக்க வேண்டும்."

நன்றி தமிழ் இந்து நாளிதழ்
தமிழில்: பாரதி ஆனந்த்
07-02-2014