ரூபாய் நோட்டிலும்
மோடியின் திருகுதாள வேலை!
மொரேனா: ம.பி.,யில் உள்ள ஏ.டி.எம்., ஒன்றில் பணம்
எடுத்தவருக்கு, காந்தியின் படம் பிரிண்ட்
ஆகாமல் 500
ரூபாய் நோட்டுகள் கிடைத்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ம.பி., மாநிலம் மொரெனா மாவட்டத்திலுள்ள கணேஷ்பூரில் உள்ள எஸ்.பி.ஐ., வங்கியின் ஏ.டி.எம்., ஒன்றில் கோவர்தன் சர்மா என்பவர் பணம் எடுத்தார். எ.டி.எம்.,மில் எடுத்த பணத்தை கண்டவருக்கு அதிர்ச்சி காத்திருந்தது. அவரது பணத்தில் நான்கு 500 ரூபாய் நோட்டுகளில் காந்தியின் படம் பிரிண்ட் ஆகாமலேயே வந்துள்ளது. உடனடியாக வங்கி அதிகாரிகளுக்கு கோவர்தன் புகார் அளித்தார்.
இதுகுறித்து விளக்கமளித்த வங்கி அதிகாரிகள், அச்சுப்பிழை காரணமாக ரூபாய் நோட்டுகளில் காந்தியின் படம் இடம்பெறாமல் போவதற்கு வாய்ப்புள்ளது எனத் தெரிவித்தனர்.
தின மலர்
05-01-2017
ரூபாய் நோட்டு அச்சடித்து வெளி வரும் முன் பல பேரின் சரி பார்ப்புக்கு பின்பே புழக்கத்துக்கு
கொண்டு வருவார்கள். குறிப்பாக காந்தி படம் விடுபட்டுள்ளது. ஆர்எஸ்எஸீக்கும் காந்திக்கும்
ஏழாம் பொருத்தம். காந்தியை நீக்கி விட்டு வல்லபாய்
படேலை போட மறைமுக முயற்சி நடக்கிறது. அதன் முன்னோட்டமே இது போன்ற செயல்பாடுகள்.
மோடியும் அமீத்ஷாவும் மிக சாமர்த்தியமாக காய்களை நகர்த்துகின்றனர். பொது மக்கள்
இதனை வன்மையாக கண்டிக்க வேண்டும்.
No comments:
Post a Comment