Followers

Sunday, April 09, 2017

இதையே நாங்கள் சொன்னால் 'நஜாத்காரன்' என்று சொல்வார்கள். :-)

இதையே நாங்கள் சொன்னால் 'நஜாத்காரன்' என்று சொல்வார்கள். :-)


அலிகார்: ''மூன்று முறை ஒருவர், தலாக் சொல்லி விட்டால், விவாகரத்து ஆகிவிட்டதாக கருத முடியாது,'' என, துணை ஜனாதிபதி ஹமீத் அன்சாரியின் மனைவி சல்மா அன்சாரி கூறினார்.

உத்தர பிரதேசத்தில், யோகி ஆதித்யநாத் தலைமையிலான, பா.ஜ., ஆட்சி நடக்கிறது. அலிகாரில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்ற, துணை ஜனாதிபதி ஹமீத் அன்சாரியின் மனைவி, சல்மா அன்சாரி, நிருபர்களிடம் கூறியதாவது: ஒருவர், மூன்று மூறை தலாக் என சொல்வதால் மட்டும், விவாகரத்து செய்துவிட முடியாது. பெண்கள், மற்றவர்கள் சொல்வதை அப்படியே கேட்க கூடாது. குரானை முழுமையாக படிக்க வேண்டும். தலாக் தொடர்பான கேள்விகளுக்கு அதில் பதில் உள்ளது.

அரபு மொழியில் எழுதப்பட்டுள்ள குரானைதான் படிக்க வேண்டும். மொழி மாற்றம் செய்யப்பட்டதை படிக்க வேண்டாம். மவுலானா அல்லது முல்லா சொல்வதை பெண்கள் அப்படியே கேட்க தேவையில்லை. குரானை பெண்கள் படித்து, அறிவை வளர்த்து கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

தினமலர்
10-04-2017

இதையே நாங்கள் சொன்னால் 'நஜாத்காரன்' என்று சொல்வார்கள். :-) குர்ஆனை அரபு மொழியில் படித்தால் நன்மை. அதனை மொழி பெயர்த்து நமது தாய் மொழியில் படித்து அதன்படி நடந்தால் அதற்கு மேலும் நன்மை கிடைக்கும். இதை அனைவரும் உணர்ந்து குர்ஆனை தாய் மொழியில் படிக்க முயற்சிப்போம்.



No comments: