Followers

Sunday, April 02, 2017

இஸ்லாம் குறித்த 2 நாள் ஆங்கில கருத்தரங்கம்...



சேலம் மாவட்ட TNTJ வின் சார்பாக கிருஸ்துவ பாதிரியார்களுக்கான இஸ்லாம் குறித்த 2 நாள் ஆங்கில கருத்தரங்கம்
=========================

சேலம் மாவட்டம் ஏற்காட்டில் கிருஸ்துவ பாதிரியார்களை உருவாக்கும் ஞானோதயா சலேசியன் கல்லூரியில் பயிலும் மாணவர்களுக்கு ஆங்கிலத்தில் இஸ்லாம் தொடர்பான 2 நாள் கருத்துரங்கம் ஏற்பாடு செய்ய சேலம் மாவட்ட TNTJ வை கல்லூரி நிர்வாகம் அணுகியது. அதன் அடிப்படையில் கடந்த மார்ச் 2017 17, 18ம் தேதிகளில் இந்நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டது.

தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் சார்பாக சகோ: முஹம்மத் கனி கலந்துக்கொண்டு 2 நாள் நிகழ்ச்சியை நடத்தினார். முதல் நாள் காலை 9 மணிக்கு ஆரம்பான நிகழ்ச்சி இரவு 7 மணிவரையிலும், இரண்டாவது நாள் காலை 9 மணிக்கு ஆரம்பமான நிகழ்ச்சி மதியம் 1:00 மணிவரையும் நடைபெற்றது.

2 நாள் நடைபெற்ற நிகழ்ச்சியில் கீழ்காணும் பல்வேறு விஷயங்கள் குறித்து எடுத்துரைக்கப்பட்டது

முதலாவது நாள்

1. இஸ்லாம் தோன்றிய வரலாறு - ஆதம்(அலை)
2. ஈமான் இஸ்லாம் வேறுபாடு
3. ஆறு நம்பிக்கை
4. ஐந்து தூண்கள்
5. இஸ்லாம் குறித்த விளக்கம்
a. நேர்வழி
b. எளிய மார்க்கம்
c. பிறர் நலம் நாடுதல்
d. சமூக பொறுப்பு
6. நபிமார்கள்
7. நபிமார்களின் பிரதான பனி
8. நபிமார்கள் செய்த அற்புதங்கள்
9. நபிமார்களின் பண்புகள், தன்மைகள்
10. வஹி
11. வேதங்கள்
12. அல்லாஹ்வின் பண்புகள்
13. இறுதி வேதம்
14. குர்ஆன் இறைவதமே
a. முரண்பாடின்மை
b. குறைபாடுகள் இல்லை
c. முன்னறிவிப்புகள்
d. உயரிய இலக்கணம்
e. அறிவியல் அற்புதங்கள்

இரண்டாவது நாள்

1. குர்ஆன் கூறும் மரியம் (அலை) வரலாறு
2. குர் ஆன் கூறும் ஈஸா(அலை) வரலாறு
3. ஈஸா(அலை) சிலுவையில் அறையப்படவில்லை
3. திருத்துவம் (vs) ஏகத்துவம்
4. மாமனிதர் நபிகள் நாயகம்
a. பைபிளில் நபிகள் நாயகம்
b. எளிய வாழ்க்கை முறை
c. தூது செய்தியை சொன்ன பின் சந்தித்த இழப்புகள்
d. எந்த உலக ஆதாயமும் பெறவில்லை
e. வெளிப்படை தன்மை
f. அகிலத்திற்க்கோர் அருட்கொடை

இந்நிகழ்ச்சியில் சுமார் 40 மாணவர்கள் கலந்துக் கொண்டனர். ஒவ்வொரு தலைப்பின் கீழ் சொல்லப்பட்ட செய்திகளை மிக ஆர்வத்துடன் கேட்டது மட்டும் இல்லாமல் பல்வேறு சந்தேகங்களை எழுப்பி தெளிவு பெற்றனர். மேலும், தலைப்பிற்கு அப்பாற்பட்ட பொதுவான சந்தேகங்களையும் எழுப்பினார்கள். உதாரணமாக பலதார மனம், பெண்ணுரிம்மை, இஸ்லாம் தீவிரவாதத்தை போதிக்கிறதா, விதி சம்பந்தமான கேள்விகள், கடவுள் தன்மை, இறைவனுக்கு மகன் ஏன் இருக்கக்கூடாது போன்ற கேள்விகளை கேட்டு தெளிவுப்பெற்றனர்.

நிகழ்ச்சியின் இறுதியில் கலந்துக்கொண்ட மாணவர்களுக்கும், கல்லூரியின் பிற ஆசிரியர்களுக்கும் திரு குர்ஆன் தமிழாக்கம், மாமனிதர் நபிகள் நாயகம், பைபிளில் நபிகள் நாயகம் ஆகிய புத்தகங்கள் வழங்கப்பட்டது.

மேலும் நிகழ்ச்சி குறித்த கருத்துகளை பதிவு செய்த மாணவர்கள் பலரும் இஸ்லாம் குறித்த தவறான எண்ணம் இருந்ததாகவும் இந்நிகழ்ச்சியின் மூலம் இஸ்லாம் போதிக்கும் சர்வதேச சகோதரத்துவத்தை உணர்ந்ததாக மனமார்ந்த பாராட்டினார்கள்.

அல்ஹம்துலில்லாஹ்!

இவர்கள் அனைவருக்கும் நேர்வழி காட்ட எல்லாம் வல்ல அல்லாஹ்விடம் பிரார்த்திப்போம்.

-TNTJ MEDIA

No comments: