மும்பை: கல்லூரி மாணவர் ஒருவர், பேஸ்புக் பக்கத்தில் நேரடி ஒளிபரப்பு செய்தவாறு, ஓட்டல் மாடியிலிருந்து குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பெங்களூருவை சேர்ந்தவர் அர்ஜுன் பரத்வாஜ். இவர் மும்பையில் உள்ள நர்சீ மோஞ்சி கல்லூரியில் 3ம் ஆண்டு பிகாம் படித்து வருகிறார். இவர் நேற்று மாலை 6.30 மணியளவில் பந்த்ராவில் உள்ள தாஜ் ஓட்டலின் 19வது மாடியிலிருந்து கீழே குதித்து தற்கொலை செய்து கொண்டார். இதற்கு முன் தற்கொலை செய்வது எப்படி என படிக்கலாம் எனக்கூறி நேரடி ஒளிபரப்பு செய்தார். இந்த வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் வேகமாக பரவியது.
இது தொடர்பாக போலீசார் கூறுகையில், மன அழுத்தம் காரணமாக தற்கொலை செய்து கொள்வதாக பரத்வாஜ் கடிதம் எழுதி வைத்துள்ளார். ஓட்டலில் அவர் எந்தவித பிரச்னையும் செய்யவில்லை. அமைதியாக உணவு வாங்கி சாப்பிட்டதால், யாரும் சந்தேகம் ஏற்படவில்லை. அறையில் இருந்த ஜன்னல்கதவை உடைத்து தற்கொலை செய்து கொண்டார். இவர் போதை மருந்து பழக்கத்திற்கு அடிமையாகி இருந்தார். பரத்வாஜ் மரணம் குறித்து பெற்றோருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இவ்வாறு அவர் கூறினார்.
Dinamalar
4-4-2017
--------------------------------------------
“யார் தமது கழுத்தை நெறித்துத் தற்கொலை செய்து கொள்கின்றாரோ, அவர் நரகத்திலும் தமது கழுத்தை நெறித்துக்கொண்டிருப்பார். யார் தம்மைத்தாம் (ஆயுதத்தால்) தாக்கித் தற்கொலை செய்து கொள்கின்றாரோ அவர் நரகத்திலும் தம்மை ஆயுதத்தால் தாக்கிக்கொண்டிருப்பார்.”
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
நூல்: ஸஹீஹுல் புஹாரி-1365
--------------------------------------------------------
ஓரளவு அச்சத்தாலும், பசியாலும் செல்வங்கள், உயிர்கள், மற்றும் பலன்களைச் சேதப்படுத்தியும் உங்களைச் சோதிப்போம். பொறுத்துக் கொண்டோருக்கு நற்செய்தி கூறுவீராக!
(அல் குர்ஆன் 2:155)
No comments:
Post a Comment