
ஜெயலலிதாவின் வீடு பொலிவிழந்து காணப்படுகிறது!
ஜெயும் அவரது தாயார் சந்தியாவும் அங்குலம் அங்குலமாக பார்த்து கட்டிய 'வேதா இல்லம்' இன்று இருள் சூழ்ந்து காணப்படுகிறது. சமையல் அறையும் பூட்டப்பட்டுள்ளது. வேலையாட்களும் குறைக்கப்பட்டுள்ளனர். தினகரனும் அவரது உறவினர்களும் கூட தற்போது அங்கு தங்குவதில்லை. தமிழகத்தின் அதிகார மையமாக இருந்த ஒரு இடம் கால மாற்றத்தால் இருள் சூழ்ந்து காணப்படுகிறது.
இதுதான் உலகம்....
------------------------------------------------------
ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
ஒருமுறை நபிகள் நாயகம் அவர்கள், புறநகர் மதீனாவை ஒட்டியுள்ள "ஆலியா"வின் ஒரு பகுதி வழியாக ஒரு கடைத்தெருவைக் கடந்து சென்றார்கள். அவர்களுக்குப் பக்கத்தில் மக்களும் இருந்தார்கள். அப்போது அவர்கள், செத்துக் கிடந்த, காதுகள் சிறுத்த ஓர் ஆட்டைக் கடந்து சென்றார்கள்.
நபிகள் நாயகம் அவர்கள், அந்த ஆட்டை எடுத்து, அதன் சிறிய காதைப் பிடித்துக்கொண்டு, "உங்களில் யார் இதை ஒரு வெள்ளிக்காசுக்குப் பகரமாக வாங்கிக்கொள்ள விரும்புவார்?" என்று கேட்டார்கள்.
அதற்கு மக்கள், "எதற்குப் பகரமாகவும் அதை வாங்க நாங்கள் விரும்பமாட்டோம்; அதை வைத்துக்கொண்டு நாங்கள் என்ன செய்வோம்?" என்று கேட்டார்கள். நபிகள் நாயகம் அவர்கள், "இது உங்களுக்குரியதாக இருக்க வேண்டுமென நீங்கள் விரும்புவீர்களா?" என்று கேட்டார்கள்.
மக்கள், "இறைவன் மீதாணையாக! இது உயிரோடு இருந்தாலும் இது குறையுள்ளதாகும். ஏனெனில், இதன் காது சிறுத்துக் காணப்படுகிறது. அவ்வாறிருக்க, இது செத்துப் போயிருக்கும் போது எப்படி இதற்கு மதிப்பிருக்கும்?" என்று கேட்டனர்.
நபிகள் நாயகம் அவர்கள், "அவ்வாறாயின், இறைவன் மீதாணையாக! இந்தச் செத்த ஆட்டைவிட இவ்வுலகம் அல்லாஹ்வின் கணிப்பில் உங்களுக்கு அற்பமானதாகும்" என்று சொன்னார்கள்.
புஹாரி; 5664
1 comment:
5665. அப்துல்லாஹ் பின் அஷ்ஷிக்கீர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள், "மண்ணறைகளைச் சந்திக்கும்வரை அதிகமாக (செல்வத்தை)த் தேடுவது உங்கள் கவனத்தைத் திசை திருப்பிவிட்டது" என்று தொடங்கும் (102ஆவது) அத்தியாயத்தை ஓதிக்கொண்டிருந்தபோது, அவர்களிடம் நான் சென்றேன்.
அப்போது அவர்கள், "ஆதமின் மகன் (மனிதன்), எனது செல்வம்; எனது செல்வம்" என்று கூறுகின்றான். ஆதமின் மகனே! நீ உண்டு கழித்ததையும் உடுத்திக் கிழித்ததையும் தர்மம் செய்து மிச்சப்படுத்தியதையும் தவிர உனது செல்வத்தில் உனக்குரியது எது?" என்று கேட்டார்கள்.
- மேற்கண்ட ஹதீஸ் அப்துல்லாஹ் பின் அஷ்ஷிக்கீர் (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் மூன்று அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அவற்றில் "நான் நபி (ஸல்) அவர்களிடம் சென்றேன்..." என்று ஹதீஸ் ஆரம்பமாகிறது. மற்ற விவரங்கள் மேற்கண்ட ஹதீஸில் உள்ளதைப் போன்றே இடம்பெற்றுள்ளன.
Book : 53
Post a Comment