Followers

Tuesday, December 29, 2020

மத்திய பிரதேசத்தில் இந்துத்வாக்களின் மத வெறி!

 மத்திய பிரதேசத்தில் இந்துத்வாக்களின் மத வெறி!

மத்திய பிரதேசம் தோரானா, மன்சோர் என்னும் ஊரில் உள்ள பள்ளி வாசலை இந்து மத வெறியர்கள் 'ஜெய் ராம்' கோஷத்துடன் இடிக்கின்றனர். அரசும் வேடிக்கை பார்த்துக் கொண்டுள்ளது. இனி நமக்கு இந்நாட்டில் நீதி கிடைக்கப் போவதில்லை என்ற முடிவுக்கு வந்து அனைத்து முஸ்லிம்களும் ஆயுதம் ஏந்த துவங்கினால் இந்த நாடு தாங்குமா? கேவலம் ஆட்சிக் கட்டிலில் அமர்ந்து சுகம் காண சொந்த மக்களை எதிரிகளாக்கும் கயமைத்தனம் எத்தனை நாட்களுக்கு நீடிக்கிறது என்று பார்போம்.



துலாபாரம் சரிந்து குழந்தை பலி

 துலாபாரம் சரிந்து குழந்தை பலி


என்று ஒழியும் இது போன்ற மூட நம்பிக்கைகள்! :-(



Monday, December 28, 2020

தஞ்சை மருத்துவர் Dr.சுந்தர்ராஜன் சொக்கலிங்கம்

 தஞ்சை மருத்துவர் Dr.சுந்தர்ராஜன் சொக்கலிங்கம்.,M.D., அவர்களின் பதிவு

👇
இதுவரை இந்த மருத்துவ பணியில் எவ்வளவோ மனித இறப்புகளை நேராக
பார்த்ததுண்டு .
ஆனால் கடந்த வாரம் பணியின் போது கண்கூடாக கண்ட ஒரு மரணம் என்னை இரண்டு நாட்களாக தூங்க விடவில்லை.
அந்த நோயாளி அவர்கள் வீட்டில் வளர்க்கபட்ட ஒரு அல்ஷேசன் வகை நாயால் உணவு தரும் போது எதேட்சையாக கடிக்க பட்டிருக்கிறார். 40 வயது பெண் ஆகிய அந்த நோயாளி மூன்று பெண்களுக்கு தாய் ! அவரது கணவர் தஞ்சை வருமான வரித்துறையில் வேலை பார்க்கிறவர் .!!
அந்த நாய்க்கு எல்லா வகை தடுப்பூசிகளும் முறையாக போடப்பட்டிருக்கிறது.
40 நாட்களுக்கு முன்பு அவர் அந்த வளர்த்த நாயால் எதேட்சையாக கடிக்கப்பட்டு ,அவருக்கு தடுப்பூசியும் முறையாக போடப்பட்டிருக்கிறது.
இருப்பினும் தஞ்சை மருத்துவக் கல்லூரியில் உள் நோயாளியாக கடந்த செவ்வாய் அன்று ரேபிஸ் அறிகுறிகளோடு அவர் அனுமதிக்கபட்டு எனது பணியின் போது
மரணமடைந்தார் .
தனிவார்டில் அவர் அனுமதிக்கப்பட்டு அவருக்கு எல்லா சிகிச்சைகளும் கொடுக்கபட்டிருந்தன.
அவரது குழந்தைகள் ,கணவர் முன்னிலையில் முழு சுய நினைவோடு அவர் இறந்த அந்த இரவும் ,அந்த குடும்பமே கதறிய சோகமும் என்னை பெரிதும் பாதித்தது.
அதுவும் இறப்பிற்கு பின் அவரது உடல் நகராட்சியிடம் ஒப்படைக்க பட்ட போதுஅவரது மூன்று மகள்களும் கதறி அழுதது இன்றும் என் கண்களில்.
வாழ்க்கையில் இந்த மாதிரியான இறப்புகள் என்றும்,யாருக்கும் நிகழக் கூடாது.
எனது ஒரத்தநாடு கால்நடைமருத்துவ கல்லூரி பேராசிரிய நண்பரிடம் இது குறித்து பேசிக்கொண்டிருந்த போது அவர் சொன்ன தகவல் என்னை மிகவும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.
"எல்லா நாய்களின் உமிழ்நீரிலும் #ரேபிஸ் உண்டாக்கும் வைரஸ் 10 சதவீதம் கட்டாயம் இருக்கும் ,அவைகளுக்கு முழு தடுப்பூசிகள் கொடுக்கப்பட்டிருந்தாலும் "
இந்த தகவல் என்னை முழுவதும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.
என் பிரிய நண்பர்களே இனிமேலாவது வீட்டில் வளர்க்கும் கவனமாக இருங்கள் அல்லது நாய் வளர்க்காதீர்கள்
ஏனேனில் எவ்வளவோ சிகிச்சைகள் வந்து விட்டாலும் ரேபீஸ் வந்து விட்டால் மரணம் நிச்சயம் .( mortality is 99.9percentage)
இந்த வாரம் என்னை பாதித்த இந்த மரணத்தின் தாக்கம் மறைய நாட்கள் நிறைய ஆகும் போலிருக்கிறது.
முடிந்த வரை நாய்கள் வளர்ப்பதை தவிர்க்கவும்..
- அன்புமதி
நாயின் வாயோடு வாய் வைத்துக் கொஞ்சுபர்களின் முட்டாள்தனமான செயலைக் காணும்போது மனம் பதறுகிறது.
-----------------------------------------
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் :
எவர் நாய் வைத்திருக்கின்றாரோ அவரது நற்செயல்களிலிருந்து ஒவ்வொரு நாளும் ஒரு கீராத் அளவிற்கு (நன்மைகள்) குறைந்து போய் விடும்; விவசாயப் பண்ணையையோ, கால்நடைகளையோ (திருடு போய் விடாமல்) பாதுகாப்பதற்காக வைத்திருக்கும் நாய்களைத் தவிர.
அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி)
நூல் : புகாரி 2322
-------------------------
நாயின் எச்சில் கடுமையான அசுத்தம் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். எனவே அதனுடைய எச்சில் நம்மீது படாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.
அப்துல்லாஹ் பின் அல்முகஃப்பல் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள் :
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் வேட்டை நாய்களுக்கும் கால்நடைகளின் பாதுகாப்பிற்காக வைத்திருக்கும் நாய்களுக்கு மட்டும் அனுமதியளித்தார்கள். மேலும் பாத்திரத்தில் நாய் வாய் வைத்துவிட்டால் ஏழு தடவை (தண்ணீரால்) கழுவிக் கொள்ளுங்கள். எட்டாவது தடவை மண்ணிட்டுக் கழுவுங்கள் என்று கூறினார்கள்.
நூல் : முஸ்லிம் 473



Saturday, December 26, 2020

இறுக்கினால் இறுகி விடும்

 ஏமனிலிருந்து அகதியாக மலேசியாவிற்கு தனது தாயோடு வருகிறார் புகாரி. மிகவும் ஏழ்மையில் இருந்த அவர் காலணிகளை விற்கத் தொடங்குகிறார். சிறிது பணம் சேர்ந்தவுடன் தனது தாயாரிடம் கொண்டு கொடுக்கிறார். அவரது தாயோ 'புஹாரி... உனது வருமானத்தில் பாதியை ஏழைகளுக்கு கொடுத்து விடு' என்கிறார். புகாரியோ 'அம்மா... சிறிது காலம் கழித்து இன்னும் பணம் சேரட்டும். அப்போது கொடுக்கலாம்' என்கிறார்.


ஆனால் அவரது தாயாரோ 'புஹாரி...  இது இறைவன் நமக்கு அளித்த கொடை. தாமதிக்காது பாதியை தர்மம் செய்து விடு' என்கிறார். தாயாரின் வார்த்தைக்கு மதிப்பளித்து தனக்கு கிடைக்கும் லாபத்தில் பாதியை தர்மமாக செலவிடுகிறார். தற்போது இவருக்கு வயது 52. மலேசியாவின் உயரிய விருதான டான்ஸ்ரீ பட்டத்தையும் பெற்று 70 பில்லியன் டாலருக்கு சொந்தக்காரராகவும் உள்ளார். மலேசிய பணக்காரர்களில் ஒருவராகவும் இடம் பிடித்துள்ளார். தர்மம் கொடுக்க கொடுக்க குறையாது. அது பல்கிப் பெருகும் என்பதற்கு புஹாரியின் வாழ்வு ஒரு உதாரணம். 

-----------------------------------------------

சிறந்த தர்மம் எது?
"தேவை போக எஞ்சியதைத் தர்மம் செய்வதே சிறந்ததாகும். மேலும் முதலில் உமது வீட்டாரிடமிருந்து தர்மம் செய்ய ஆரம்பிப்பீராக'' என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி),
நூல்: புகாரி 1426
இறுக்கினால் இறுகி விடும்
நபி (ஸல்) அவர்கள் என்னிடம் "நீ (தர்மம் செய்யாமல்) முடிந்து வைத்துக் கொள்ளாதே! அவ்வாறு செய்தால் (இறைவனின் அருள்) உனக்கு (வழங்கப் படாமல்) முடிந்து வைத்துக் கொள்ளப்படும்'' என்று கூறினார்கள்.
அப்தாவின் அறிவிப்பில், "நீ (இவ்வளவு தான்) என்று வரையறுத்து (தர்மம்) செய்யாதே! அல்லாஹ் (உன் மீது பொழியும் அருளை) வரையறுத்து விடுவான்'' என்று கூறியதாக உள்ளது.
அறிவிப்பவர்: அஸ்மா (ரலி),
நூல்: புகாரி 1433, 1434



Thursday, December 24, 2020

குந்தவை நாச்சியார்

 குந்தவை நாச்சியார்

சோழ சாம்ராஜ்யத்தை பராந்தக சோழன் (கி.பி.907-953) ஆம் ஆண்டு சுமார் 48 ஆண்டுகள் பதவி வகித்து வருகிறான். அவனுடைய மகன் ராஜாதித்தன் தக்கோலப்போரில் கொல்லப்படுகிறான். (கி.பி.950) மகன் இறந்த வருத்தத்திலேயே பராந்தகன் ஆட்சியை கண்டராதித்தியனுக்கு கொடுக்கிறான். கண்டராதித்தன் (கி.பி-950-956) ஆறு ஆண்டுகளே ஆட்சி செய்கிறான். அதன் பிறகு அரிஞ்சயனுக்குப்பிறகு அவனுடைய மகன் சுந்தரச்சோழன் (கி.பி.956-973) பதவிக்கு வருகிறான். அவன் பதவி ஏற்ற சில காலத்தில் அவனுடைய இரு மகன்களில் ஒருவனான ஆதித்த கரிகாலன் கொலை செய்யப்படுகிறான். மகனின் இழப்பில் அதிர்ச்சியும் வருத்தமும் மனஉளைச்சலும் அடைந்த சுந்தரச்சோழன் சில மாதங்களிலேயே இறந்து போகிறான். சுந்தரசோழனுக்கு இரண்டு மகன்கள். ஒருவன் கொல்லப்பட்ட ஆதித்த கரிகாலன். இரண்டாவது மகன் ராஜராஜசோழன்.
சுந்தரசோழனுக்கும், வானவன் மாதேவிக்கும் பிறந்தவர் குந்தவை நாச்சியார். ஆதித்த கரிகாலனுடன் பிறந்தவர். அருண்மொழிவர்மன் என்ற இராஜராஜசோழனின் மூத்த சகோதரி குந்தவை நாச்சியார்.


குந்தவை என்ற சொல்லுக்கு தெலுங்கு மொழியில் லட்சுமி என்று பொருள். திருமாலை கிருஷ்ணா, முகுந்தா, முராரோ என்று போற்றி வழிபடுவதில் இருந்து இதனை அறியலாம். திருமாலுக்கு முகுந்தன் என்ற பெரும் உண்டு. திருமாலைக் குந்தன் என்றும் லட்சுமியை அதாவது குந்தனுடைய மனைவியை குந்தவை என்றும் ஆந்திராவில் அழைத்து வருகிறார்கள்.
சோழர்குல அரச மகளிரான மூன்று குந்தவைகள் பற்றி வரலாறு விரிவாக கூறுகிறது. கீழைச் சாளுக்கிய அரசகுலப் பெண்ணை சுந்தரசோழனின் தந்தையான அரிஞ்செயச்சோழன் திருமணம் செய்து கொண்டிருந்தான். இவரே வீமன் குந்தவை என்று சோழர் வரலாற்றில் குறிக்கப்படும் முதல் குந்தவையாவார்.

அரிஞ்செயச்சோழன், வீமன் குந்தவையைத் திருமணம் செய்ததைப்போன்று வைதும்ம அரசகுலத்தைச்சேர்ந்த கல்யாணி என்பவரை அடுத்ததாகத் திருமணம் செய்திருந்தான். அரிஞ்செயசோழனுக்கும், கல்யாணிக்கும் பிறந்தவனான சுந்தரச்சோழன் தனது பெரியதாயாரான வீமன் குந்தவையின் நினைவைப் போற்றியும், அவர்மீதுள்ள அன்பை வெளிப்படுத்தவும், தனது மகளுக்கு குந்தவை என்று பெயரிட்டு அழைத்து வந்தான். இரண்டாவதாக அறியப்படும் சுந்தரச்சோழனின் மகளான குந்தவைக்கு மந்தாகினி என்ற மற்றொரு பெயரும் உண்டு. சுந்தரசோழனின் மகளான இரண்டாம் குந்தவையே ஆழ்வார் பரந்தகன் குந்தவை பிராட்டியார், வல்லவைரையர் வந்தியதேவர் மாதேவர் மாதேவியார், உடையார் பொன்மாளிகையில் துஞ்சிய தேவர் திருமகளார் ஸ்ரீபராந்தகன் குந்தவை பிராட்டியார் என்று சோழர்களின் கல்வெட்டுக்களும், செப்பேடுகளும் குறித்து வருகின்றன.
சோழ அரச குடும்பத்தில் பலருக்கும் குந்தவை என்று பெயரிடுவது பொதுவான வழக்கமாக இருந்தது. குந்தவை நாச்சியாரின் மீது அளவுகடந்த மரியாதையும் அன்பையும் கொண்டிருந்த குந்தவை நாச்சியாரின் தம்பியும் சோழப் பேரரசனுமான இராஜராஜசோழன் தனது மகளுக்கு குந்தவை என்று பெயரிட்டு அழைத்து வந்தான். இவரே சோழ வரலாற்றில் மூன்றாம் குந்தவையாக குறிப்பிடப்படுகிறார்.

வரலாற்றில் இவ்வாறு குறிக்கப்பட்டு வரும் ஆழ்வார் பராந்தகன் குந்தவையும், இராஜராஜனின் தமக்கையுமான இரண்டாம் குந்தவையும் கீழைச்சாளுக்கிய அரச மரபைச்சேர்ந்த வந்தியத் தேவனுக்கு மாலை சாட்டினார். இராஜராஜனின் மகளான மூன்றாம் குந்தவையும் கீழைச்சாளுக்கிய வேந்தன் விமலாதித்தனுக்கு மாலையிட்டு மணந்தார். வரலாற்றில் வரும் சோழப்பேரரசில் குந்தவை என்போர் இருவரும் கீழைச்சாளுக்கிய அரசமரபினரையே மணம் செய்து கொண்டனர்.

இரண்டாவது குந்தவையாக வரலாறு குறிக்கும் குந்தவை நாச்சியாரின் பிறப்பை பற்றி திருச்சி மாவட்டம், லால்குடி வட்டத்தில் உள்ள பாச்சில என்கிற கோபுரப்பட்டி ஊரில் உள்ள கல்வெட்டு அறிவிக்கிறது. திருஅவிட்டம் நட்சத்திரத்தில் குந்தவை நாச்சியார் பிறந்தவர் என்பதைக் இக்கல்வெட்டு அறிவிப்பதை போலவே, இவரது பிறந்த நாளான திருஅவிட்டம் நட்சத்திரத்தில், இராஜராஜனின் 21வது ஆட்சியாண்டு (கி;.பி.1006) முதல் மேல்பாடியில் உள்ள அவனீஸ்வரர் கோயில் திருவிழாக்கள் கொண்டாப்பட்டு வந்ததை அவனீஸ்வரர் கோயில் கல்வெட்டு தெரிவிக்கிறது.


குந்தவை நாச்சியாரின் தந்தையான சுந்தரச்சோழன் செம்பியன் குடியைச்சார்ந்தவன் எனவும், இவனது மனைவி மாதேவி சங்க காலத்தில் வாழ்ந்த திருமுடிக்காரி போன்ற பெருமக்கள் வழிவந்த மலையமான குடியைச்சேர்ந்தவர் எனவும் அறியப்படுகிறது.

குந்தவை நாச்சியார் தனது தம்பியான இராஜராஜன் மீது கொண்டிருந்த அன்பைப் போலவே, இராஜராஜனும் தனது தமக்கையான குந்தவை நாச்சியாரின் மீது பெரும் மதிப்பும், அன்பும் கொண்டிருந்தான் என்பதை அவன் கட்டிய தஞ்சை ராஜராஜேஸ்வரம் கோயில் ~ நாங்கொடுத்தனவும், அக்கன்(குந்தவை) கொடுத்தனவும்~ எனக் கல்வெட்டில் இடம் பெறச்செய்துள்ளான்.மேலும் அவர் பிறந்த திருஅவிட்டம் நட்சத்திரத்தில் மிகப்பெரும் செலவில் திருவிழாக்கள் நடத்தியதில் எளிதில் அறியலாம்.
ஏறத்தாழ பல நூற்றாண்டுகள் நீடித்த பிற்காலச் சோழர்களின் ஆட்சியல் பெரும் பங்கு காலத்தைக் கண்டதோடு அதில் பெரும் பங்களிப்பும் செய்யமுடிந்த பேறுபெற்றவர் குந்தவை நாச்சியார். தன்னுடைய தனிப்பட்ட வாழ்க்கையிலும், அவர்காலத்தில் ஏற்பட்ட அரசியல் ச+ழ்நிலைகளையும் தன்னுடைய கணவன், சகோதரன் கொலைசெய்யப்பட்ட பின்பு தலைமறைவு வாழ்க்கையும் வாழ்ந்து நெருக்கடிகளை சமாளித்தவர்.


தனிப்பட்ட வாழ்க்கையில் அவர் சந்தித்த நெருக்கடிகள் மற்ற அரசிகளுக்கு ஏற்பட்டிருக்க வாய்ப்பு இல்லை என்கிறார்கள் வரலாற்று ஆய்வாளர்கள்.


குந்தவை நாச்சியாரின் வைதீக வெறுப்பு


குந்தவை நாச்சியார், அரசகுலத்தில் பிறந்தவரானாலும் மற்ற அரசகுல அரசிகளைப்போல் அரண்மனையில் அடைபட்டு சுகவாழ்வு வாழ்ந்தவர் இல்லை. இந்து மதத்தில் பெண்களின் நிலைகளாக குறிக்கப்படும் நிலைகளுக்கு எதிரான வாழ்க்கை முறையைக் கடைப்பிடிக்கவேண்டிய சூழ்நிலை பெற்றிருந்தார்.

வைதீக மதத்தின் மீது குந்தவை நாச்சியாருக்கு வெறுப்புணர்வு ஏற்பட்டதற்கு, அவரது வாழ்க்கையில் நடைபெற்ற பல்வேறு துன்பங்கள் காரணமாக இருந்தது. தனது சகோதரனான ஆதித்திய கரிகாலன் வைதீக மதத்தைச்சார்ந்த ரவிதாசனான பஞ்சவன் பிரம்மாதி ராஜன், அவனது தம்பி பரமேஸ்வரனான இருமுடிச்சோழ பிரம்மாதி இராஜன் இவர்களுடன் உத்தமச்சோழனின் தாயாரான செம்பியன் மாதேவியின் ஊரான மலையனூரைச்சேர்ந்தவர்களாலும், ரவிதாசன், பரமேஸ்வரன் ஆகியவர்களாலும், படுகொலை செய்யப்பட்ட நிகழ்ச்சியானது குந்தவை நாச்சியாருக்கு வெறுப்புணர்வு அதிகமாக இருந்தது. இதனால் வைதீக மதசடங்குகள் மற்றம் வைதீக மதத்தின் மீது வெறுப்பு ஏற்பட்டது.

ஆதித்திய கரிகாலனை படுகொலை செய்தவர்களைத் தண்டிக்க இயலாத தனது தம்பியான இராஜராஜசோழன் அரியணை ஏறும் காலம்வரை பலவித சோகமும், வேதனையும் மதத்தின் மீது வெறுப்புணர்வை தோற்றுவித்தது. இவை மட்டும் அல்லாமல் ஆதித்திய கரிகாலசோழன் படுகொலை செய்யப்பட்ட பிறகு, தனது தந்தையான சுந்தரசோழனும், தாயாரான வானவன் மாதேவியும் சிறையில் அடைக்கப்பட்டு பலவித சித்திரவதைகள் செய்யப்பட்டும், சிதையில் இடப்பட்டும் உயிரிழந்த கொடுமைகளை குந்தவை தன்னுடைய மனதிற்குள் எண்ணி புழுங்கியுள்ளார்.


ஆதித்தியகரிகாலன் படுகொலைக்குப் பிறகு தனது கணவன் வல்லவரையன் வந்தியத்தேவன் மறைவும், மறைவையடுத்து அவருக்கு ஏற்பட்ட வெறுப்பு, தனிமை என பல துன்பங்களைக் அடுக்கிக்கொண்டே போகலாம்.

மதமாற்றம்

இராஜராஜனும் அவரது தமக்கை குந்தவை நாச்சியாருக்கும் இஸ்லாம் மார்க்கம் குறித்த தொடர்புகள் அவனது தந்தையான சுந்தரச்சோழன் ஆட்சிக்காலத்தில் இருந்தே தொடர்ந்து வந்துள்ளது. இஸ்லாம் மதத்தை பரப்புவதற்காக சோழர் ஆட்சிப்பகுதிக்கு வந்த நத்தஹருடன் சிறுவயதில் இருந்து பழகும் வாய்ப்புகள் குந்தவை நாச்சியாருக்கு ஏற்பட்டிருந்தது. இதனால் வைதீக மதத்தைவிட்டு குந்தவை நாச்சியார் இஸ்லாம் மதத்திற்கு மாறினார். இஸ்லாம் மதத்திற்கு மாறிய பின்பு சோழப்பேரரசில் மிகப்பெரிய புரட்சியும், மாறுதலும் பல்வேறு குழப்பங்களும் நீடித்தது.


இவற்றிற்கு ஆதாரமாக ஸ்ரீரங்கம் கோயில் ஒழுகு உள்ள பலக்குறிப்புகளும், சமயபுரம் கோயில் வரலாறும், திருவாதவூரில் உள்ள திருமறைநாதர் கோயில் இருக்கும் புருஷா மிருகம் உருவமும், குந்தவை நாச்சியார் தாதாபுரத்தில் கட்டிய ரவிகுல மாணிக்க ஈஸ்வரம் விமானப்பகுதியில் சித்தகரிக்கப்பட்டுள்ள சுதைச்சிற்பங்களும், ஸ்ரீரங்கம் கோயிலின் இரண்டாம் பிரகாரத்தில் ஈசானிய மூலையில் இடம்பெற்றுள்ள துலுக்க நாச்சியார் சன்னதியும் இஸ்லாம் மதத்தை ஏற்றுக்கொண்ட செயலை விளக்குவதாக அமைந்துள்ளன.

சமணமும் குந்தவையும்

வடஆற்காடு மாவட்டம், போளுருக்கு அருகே உள்ள திருமலையில் குந்தவை நாச்சியார் சமணக்கோயிலையும், திருமலைப்பாடியில் அவரின் ஆதரவில் சமண நிறுவனம் இருந்ததையும், காஞ்சிபுரம் அருகில் ~திருப்பதிக்குன்றம்~ சிற்றூரில் இன்றளவும் புகழ்பெற்ற சமணக்கோயில் இருந்து வருவதும், கி.பி.10-ஆம் நூற்றாண்டில் சமணமதம் சமயப்பொறையுடைய அரசர்களால் முற்றிலும் அழிந்துவிடாமல் காப்பாற்றப்பட்டுள்ளதை இதன் மூலம் அறியலாம்.


தாதாபுரம் கல்வெட்டுக்கோயில்
உடையார் ஸ்ரீராஜராஜ தேவர் திருத்தமக்கையார்
வல்லவரையர் வந்தியத் தேவர் மகாதேவியார்
ஆழ்வார் பராந்தன் குந்தவை ஆழ்வார்
என்று தஞ்சை கல்வெட்டுக்களில் குறிப்பிடப்பட்டுள்ளது


உடையார் பொன்மாளிகையில்
துஞ்சிய தேவர் திருமகளார்
ஸ்ரீபராந்தகன் குந்தவை பிராட்டியார்
என இராசராசபுரமாகிய இன்றைய தாதாபுரத்து கோயில் கல்வெட்டுக்கள் குறிக்கிறது.

குந்தவை நாச்சியார் அறப்பணிகள்
தஞ்சாவூரில் இராஜராஜ சோழன் ஆட்சியில் இராஜேஸ்வரம் என்ற பெருங்கோயிலை கட்டியபோது குந்தவை நாச்சியார் பல கொடைகள் கொடுத்துள்ளதை கல்வெட்டுக்கள் மூலம் அறியமுடிகிறது.
தனது தந்தை சுந்தரச்சோழனுக்கும் தனக்கும் திருமேனி எழுந்தருளிவித்தத் திருமேனி என தென்னிந்திய கல்வெட்டுத்தொகுதி 2ல் குறிப்பிடப்படுகிறது.


தஞ்சாவூர் பெரியகோயிலுக்கு 7,282 கழஞ்சு பொன்னும் 3,143 முத்துக்கள், 4 பவளங்கள், 4 ராஜவர்த்தம், 7,767 வைரம் 1001 மாணிக்ககற்கடுன் கூடிய நகைகளாக 1453.5 கழஞ்சு பொன்னும் வழங்கியுள்ளார்.சமயபுரம் கோயிலில் குந்தவையின் சிலை


சமயபுரம் கோயிலின் மகாமண்டபத்தில் இன்றுமுள்ள இரண்டு தூண்களில் குந்தவை நாச்சியாரின் திருஉருவச்சிலை மிக நேர்த்தியான சிற்பமாக செதுக்கப்பட்டுள்ளது. இச்சிற்பம் மூன்றடி உயரத்தில் மண்டபத்தின் நடுவில் இடம்பெற்றுள்ள தூணில் இணைந்திருப்பது போல செதுக்கப்பட்டுள்ளது. கி.பி.11-ம் நூற்றாண்டு காலத்திய சிற்பம் என்கிறார்கள் வரலாற்று அறிஞர்கள். சமயபுரம் கோயிலுக்கு செல்லும் பெரும்பாலான பக்தர்கள் இச்சிலைக்கு உப்பை காணிக்கையாக செலுத்தி தங்கள் வேண்டுதல்களை இன்றும் நிறைவேற்றி வருகிறார்கள். குந்தவை நாச்சியார் இஸ்லாம் மதத்திற்கு மாறி இந்து மதத்தை விட்டு விலகினாலும் கூட அவரை தங்களது மதிப்பிற்குரியவராக சோழ குடிமக்கள் பலரும் தங்கள் விசுவாசத்தை காட்டுகின்றனர்.

குந்தவை நாச்சியார் இறப்பு


சிரியா நாட்டில் இருந்து இஸ்லாம் மார்க்கத்தைப் பரப்ப வந்த மார்க்க ஞானியான சையது முத்தருத்தீன் என்கிற நத்தர் என்பவர் ஹிஜ்ரி 397 ல் துல்ஹஜ் பிறை 2-ம் நாளில் பிறந்தவர் அதாவது கி.பி.939 ஆம் ஆண்டில் பிறந்தவர். அவர் ரம்ஜான் மாதம் 14-ம் நாள் வெள்ளிக்கிழமை கி.பி.1006-ம் ஆண்டு இறந்ததாக அறியவருகிறது. மேலும் நத்தர் குந்தவை நாச்சியாரை வளர்ப்புப் பிள்ளையாக பாவித்துள்ளார்.


நத்தர் இறந்த சில வருடங்களில் குந்தவை நாச்சியாரும் இறந்துள்ளார் என்றும், நத்தரை அடக்கம் செய்த இடத்திலேயே குந்தவை நாச்சியாரும், அவர் ஆசையாக வளர்த்துவந்த கிளியும் அடக்கம் செய்யப்பட்டுள்ளது குந்தவை நாச்சியார் இஸ்லாம் மதத்தைத் தழுவியபோது, அவருக்கு நத்தர்வலி ஹலிமா எனப்பெயரிட்டு அழைத்து வந்தார் எனவும், அவரை மாமாஜிகினி என்று மரியாதையுடன் அழைத்து வந்தனர் என்ற தகவலை நத்தர் தர்காவின் 1000-வது மலர் மூலம் அறியப்படுகிறது.



குந்தவை அடக்கம் செய்யப்பட்டுள்ள தர்காவில் உள்ள திருவிளக்கு.






இந்துத்வாக்கள் இந்த சம்பவத்தை நினைவு கூறட்டும்!

முஸ்லிம்களை கொன்று குவிக்க தினமும் திட்டமிடும் இந்துத்வாக்கள் இந்த சம்பவத்தை நினைவு கூறட்டும்!


 தமிழகத்தை சேர்ந்த ஆதி முத்துவும், கேரளாவை சேர்ந்த அப்துல் வாஜிதும் குவைத்தில் ஒரே கம்பெனியில் பணியாற்றினர்.


அப்துல் வாஜிதை ஆதி முத்து கொலை செய்து விட்டார்.


இதனால் ஆதி முத்துவுக்கு குவைத் நீதிமன்றம் மரண தண்டனை விதித்தது.


இஸ்லாமிய சட்டப்படி மரண தண்டனையிலிருந்து ஒருவரை காக்க வேண்டுமென்றால் கொலை செய்யப்பட்டவரின் குடும்பத்தினர் மன்னித்தால் மரண தண்டனையிலிருந்து விடுவிக்க முடியும்.


இதன் அடிப்படையில் அப்துல் வாஜித் குடும்பத்தினருடன் ஆதி முத்து குடும்பத்தினர் பேச்சு வார்த்தையில் ஈடுபட விரும்பினர்.


இதனால் ஆதி முத்துவின் மனைவி மாலதி இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் காதர் மொகிதீன் உதவியை நாடினார்.


மாலதி தமது மகளுக்கு 15 வயது ஆவதாகவும், தம்முடைய குடும்பத்தை காப்பாற்ற தம்முடைய கணவர் விடுதலை பெற வேண்டும் என்றும் கண்ணீரோடு கூறினார்.


நிர்கதியாக நிற்கும் மாலதி, 15 வயது மகளின் வாழ்வு ஆகியவற்றை மனிதாபிமான அடிப்படையில் கவனத்தில் கொண்ட காதர் மொகிதீன் மாலதிக்கு  உதவும் பொருட்டு கேரளா மாநில முஸ்லிம் லீக்கை நாடினார்.


அப்துல் வாஜித் குடும்பத்தினருடன் பேச்சு வார்த்தை நடத்தப்பட்டது. ஆதி முத்துவின் குடும்ப சூழலை விளக்கப்பட்டது. இஸ்லாத்தின்படி மரண தண்டனை கொடுப்பதற்கும் அனுமதி உள்ளது, மன்னிப்பது அதை விட சிறந்தது என்ற குர்ஆன் வசனத்தை மேற்கோள் காட்டப்பட்டது.


அப்துல் வாஜித் குடும்பத்தினர் மிகவும் ஏழ்மையான நிலையில் அப்துல் வாஜிதை பறிகொடுத்துள்ளதால் ஆதி முத்துவை மன்னிக்க ரூ. 30 லட்சம்  இழப்பீடு கோரினர்.  


ஆதி முத்துவின் குடும்பத்தினரும் ஏழ்மை நிலையில் உள்ளதால் அவர்களால் இந்த தொகையை கொடுக்க முடியவில்லை. 


என்ன செய்வதென்று பார்த்த முஸ்லிம் லீக்கினர் தாங்களே ரூ 30 லட்சத்தை திரட்டி இப்பிரச்சினைக்கு முடிவு கண்டுள்ளனர்.


கொலை செய்தவர் இந்து. கொல்லப்பட்டவர் முஸ்லிம். அப்படியிருந்தும் அப்துல் வாஜித் குடும்பத்தினர் மன்னித்தனர். இந்துவுக்கு மனிதாபிமான அடிப்படையில் ரூ 30 லட்சம் நிதி திரட்டி உதவி செய்தது முஸ்லிம் அமைப்பு.


இதுதான் இஸ்லாம் கற்றுத்தந்த வாழ்வியல் முறை..! எல்லாப் புகழும் ஏக இறைவன் ஒருவனுக்கே..!


நம்பிக்கை கொண்டோரே! சுதந்திரமானவனுக்காக (கொலை செய்த) சுதந்திரமானவன், அடிமைக்காக (கொலை செய்த) அடிமை, பெண்ணுக்காக (கொலை செய்த) பெண், என்ற வகையில் கொல்லப்பட்டோருக்காகப் பழி வாங்குவது உங்களுக்குக் கடமையாக்கப்பட்டுள்ளது. கொலையாளிக்கு (கொல்லப் பட்டவனின் வாரிசாகிய) அவனது (கொள்கைச்) சகோதரன் மூலம் ஏதேனும் மன்னிக்கப்படுமானால் நல்ல விதமாக நடந்து அழகிய முறையில் (நஷ்ட ஈடு) அவனிடம் வழங்க வேண்டும். இது உங்கள் இறைவன் எளிதாக்கியதும், அருளுமாகும். இதன் பிறகு யாரேனும் வரம்பு மீறினால் அவருக்குத் துன்புறுத்தும் வேதனை உள்ளது.

அறிவுடையோரே! பழிக்குப் பழி வாங்கும் சட்டத்தில் உங்களுக்கு வாழ்வு உள்ளது. (இச்சட்டத்தினால் கொலை செய்வதிலிருந்து) விலகிக் கொள்வீர்கள்.

அல்குர்ஆன் 2:178, 179


படித்ததில் நெகிழ்ந்தது.

அழகிய குரலில் பாங்கு ஓதும் இளைஞர்!

 


சைவம் அசைவம் - ஓர் அலசல்!

 


Wednesday, December 23, 2020

பெரியார் #periyarforever

 "யார் சொல்லியிருந்தாலும் எங்கு படித்திருந்தாலும் நானே சொன்னாலும் உனது புத்திக்கும் பொது அறிவுக்கும் பொருந்தாத எதையும் நம்பாதே"

-பெரியார் #periyarforever



Tuesday, December 22, 2020

இந்த பிஞ்சுகளின் குரல் மோடி அவர்களுக்கு கேட்டிருக்குமா?

 படம் 1: காஷ்மீர் பத்திரிக்கையாளர் ஆஷிஃப் சுல்தான் சிறையில் இரண்டு வருடமாக விசாரணைக் கைதியாக!

படம் 2: காஷ்மீரின் காலித் ஷைஃபி விசாரணைக் கைதியாக 300 நாட்களாக...
பல்கலைக் கழகத்தில் உரையாற்றிய மோடி இஸ்லாமிய பெண்களின் முன்னேற்றம் பற்றியும் பேசினார். இந்த பிஞ்சுகளின் குரல் மோடி அவர்களுக்கு கேட்டிருக்குமா?




என்னை கவர்ந்த இஸ்லாம்

 


Saturday, December 19, 2020

நெஞ்சைப் பிழிகின்ற மரணம்..!

நெஞ்சைப் பிழிகின்ற மரணம்..!
அஸ்ஸாமிலிருந்து வந்த செய்தி அது..!
சொந்த நாட்டில் அந்நியராக முத்திரை குத்தப்பட்டு கடுமையான மன உளைச்சலுக்கு ஆட்படுத்தப்பட்ட 104 வயது முதியவர் சந்திரதர் தாஸ் டிசம்பர் 14 அன்று இறந்துபோனார்.
2018-இல் அந்நியர் என்று டிரிபியூனால் தீர்ப்பளிக்கப்பட்டு டிடென்ஷன் சென்டராக மாற்றப்பட்ட சில்சார் ஜெயிலில் அடைக்கப்பட்டார் சந்திரதர் தாஸ்.
அப்போது பிறர் உதவியின்றி நடக்க முடியாதவராக பரிதாபமான நிலையில் இருந்தார் சந்திரதர் தாஸ். ஆறு மாதங்களுக்கு முன்னால்தான் அவருடைய நிலைமை கண்டு மனம் இரங்கி நீதிபதி ஒருவரால் விடுதலை செய்யப்பட்டார் அவர்.
என்னுடைய அப்பாவுக்கு ஒரே ஒரு ஆசைதான் இருந்தது. இந்திய நாட்டு குடிமகன் என்கிற அறிவிக்கப்பட்ட நிலையில் இறக்கத்தான் அவர் விரும்பினார் என்று கூறுகின்றார் அவருடைய மகளாரான நித்யா தாஸ்.

சிஏஏ சட்டம் எத்துணை கொடூரமானது என்பதை உணர்த்துவதாக இருக்கின்றது 104 வயது இந்தியரின் மரணம். 


https://www.thehindu.com/news/national/man-who-was-declared-foreigner-passes-away-at-104-in-assam/article33335018.ece?fbclid=IwAR36XnfCD6VUNA5LggyLF33e7qbqh1uMJyvFzf0lOfEVCUkuS9zVj7f9Wiw




உபி கோசோலைகளின் நிலை!

 உபி கோசோலைகளின் நிலை!


உபியின் லலித்பூர் கோசோலையில் டிசம்பர் 17 அன்று பல பசுக்கள் இறந்து கேட்பாரற்று கிடக்கின்றன. பசுவை வளர்த்தவன் அதனை கறிக்கு விற்றிருந்தால் அதனை வளர்த்தவனும் பயன் பெற்றிருப்பான்.  கோடிக்கணக்கில் அரசு செலவு செய்து கோசோலைகளை பராமரித்து அதிலும் வரிசையாக பசுக்கள் இறக்கின்றன. இந்துத்வாவாதிகளின் திட்டங்கள் எல்லாமே கோமாளித் திட்டங்களாகவே மாறிப்போகின்றன.




யோகி ஆதித்யநாத்தின் கேடு கெட்ட ஆட்சியிள் அவலங்கள்!

 யோகி ஆதித்யநாத்தின் கேடு கெட்ட ஆட்சியிள் அவலங்கள்!


இந்து பெண்ணை காதலித்து அந்த இளைஞன் மோசம் செய்யவில்லை. திருமணம் முடித்து கண்ணியமாக வைத்துள்ளான். அந்த இந்து பெண்ணோ 'அவரில்லாமல் எனக்கு வாழ்க்கை இல்லை' என்று கதறுகிறார்.


திருமணம் முடிக்காது சந்நியாசியாக வாழ்ந்து குடித்து கும்மாளமடித்துக் கொண்டிருக்கும் கிரிமினலான யோகிக்கு இதெல்லாம் தெரிய வாய்ப்பில்லை. இந்து மதத்தை முற்றாக அழிக்க வந்தவர்கள் இந்த மோடிக்களும் யோகிக்களும்.




Sunday, December 13, 2020

பாஜக எம்பி பிரக்யா தாக்கூர்

 பிராமணர்களை பிராமணர் என்று சொன்னாலோ, சத்திரியர்களை சத்திரியர்கள் என்று சொன்னாலோ, வைசியர்களை வைசியர் என்று சொன்னாலோ அவர்கள் தவறாக எடுத்துக்கொள்வது இல்லை. ஆனால் சூத்திரர்களை சூத்திரர் என்று சொன்னால் அவர்களுக்கும் கோபம் வருகிறது!!


- பாஜக எம்பி பிரக்யா தாக்கூர்


| Kshatriya ko kshatriya keh do, bura nahi lagta. Brahmin ko brahmin keh do, bura nahi laga. Vaishya ko vaishya keh do, bura nahi lagta. Shudra ko shudra keh do, bura lag jata hai. Kaaran kya hai? Kyunki samajh nahi paate: BJP MP Pragya Singh Thakur in Sehore, MP






Tuesday, December 08, 2020

இறைவா! எங்களை நீ நேர்வழியில் செலுத்துவாயாக!..

 269. தான் நாடியோருக்கு ஞானத்தை (அல்லாஹ்) வழங்குகிறான். ஞானம் வழங்கப்பட்டவர் ஏராளமான நன்மைகள் வழங்கப்பட்டு விட்டார். அறிவுடையோரைத் தவிர (யாரும்) சிந்திப்பதில்லை.

திருக்குர்ஆன் 2:269
இறைவா! எங்களை நீ நேர்வழியில் செலுத்துவாயாக!..



Wednesday, December 02, 2020

ராவுத்தர் குமாரசாமி கோயில்

 ராவுத்தர் குமாரசாமி கோயில்


செய்நன்றி என்பது அரிதாகிப்போன இந்த உலகத்தில் நூற்றாண்டுகளுக்கு முன்பு செய்த உதவிக்காக, முஸ்லிம் மக்களுக்கு நன்றி சொல்லும் விதமாய் கோயில் கட்டி கும்பிட்டுவருகிறது கொங்குச் சமூகம்.

கொங்கு நாட்டின் ஈரோடு மாவட்டத்தில் மொடக்குறிச்சி வட்டத்தில் சிவகிரி அருகே இருக்கிறது காகம் என்ற கிராமம். இந்தக் கிராமத்தில் கொங்கு வேளாள கவுண்டர் சமூகத்தினர் இன்றளவும் வழிபட்டுவரும் தெய்வத்தின் பெயர் ராவுத்தர் குமாரசாமி. மசூதியா, கோயிலா என்று பிரச்சினை நடந்துவரும் நமது நாட்டில்தான் இப்படியோர் இணக்கத் தலம் காகம் கிராமத்தில் உள்ளது. எப்போதோ தங்களது மூதாதையர் பட்ட நன்றிக் கடனுக்காக இப்போதும் முஸ்லிம்களைத் தெய்வமாக வழிபட்டு வருகிறார்கள் கொங்குச் சமூகத்தினர்.

திருமுருகன்பூண்டி சிற்பங்கள், மருதமலை முருகன், திருமூர்த்திமலை சிவன் எனக் கொங்கு மண்டலத்தின் பெருமையை நினைவுகூரும் வகையில் பல ஆன்மிகத் தலங்கள் இருந்தாலும் அவற்றையெல்லாம்விட ஒருபடி மேலாகத்தான் தெரிகிறது மத நல்லிணக்கத்துக்கு அடையாளமாக விளங்கும் ராவுத்தர் குமாரசாமி கோயில்.

பொதுவாகத் தமிழகக் கோயில்களில் முக்கியமாகக் கருப்பையா, சுடலை மாடன், அய்யனார் போன்ற சிறு தெய்வக் கோயில்களில் வண்ணமயமான குதிரைகள் மீது தெய்வங்கள் காவலுக்குச் செல்லும் வகையிலான சிற்பங்கள் அமைந்திருக்கும். குதிரைகள் மீது அமர்ந்திருப்பது அய்யனார் உள்ளிட்ட தெய்வங்கள் மட்டுமே. ஆனால் காகம் என்னுமிடத்தில் அமைந்துள்ள ராவுத்தர் குமாரசாமி கோயிலில் உள்ள குதிரையின் மீது முஸ்லிம் ராவுத்தர் கத்தியை ஏந்தியவாறு அமர்ந்திருப்பது மத நல்லிணக்கத் தன்மையை வெளிப்படுத்துகிறது.

காகம் பகுதியில் அமைந்துள்ள இந்த ஆலயம், கொங்கு வெள்ளாள கவுண்டர் சமுதாயத்தின் கண்ணன் கூடத்தைச் சேர்ந்த ஒரு பகுதி. இந்தக் கோயிலில் சிறு சிறு தூண்களும் ஒரு கோபுரமும் விமானமும் இருக்கின்றன. நுழைவாயிலில் தொடங்கிக் கோயில் முழுவதும் ராவுத்தர்களின் சிற்பங்களும் அமைக்கப்பட்டுள்ளன.

இந்தக் கோயிலில் கருவறையின் வாயிற்கதவு மீது லுங்கி உடுத்திய ராவுத்தர் சிலை ஒன்று புகைபிடிப்பது போல் உள்ளதைக் காண முடியும். கருவறையில் உள்ள குமாரசாமி சிலைக்கு அருகே ராவுத்தர் சிலையும் அமைக்கப்பட்டுள்ளது.

ஸ்ரீரங்க கோயிலில் துலுக்க நாச்சியார், ஐயப்பன் கோயிலில் வாவர் சாமி, மேலச்சூர் திரௌபதி அம்மன் கோயிலில் முத்தல ராவுத்தர் எனத் தொன்மை காலம் தொட்டே இந்துக் கடவுள் ஸ்தலங்களில் முஸ்லிம் காவல் தெய்வங்களைக் கொண்டாடும் கலாச்சாரம் உள்ளது.

தமிழ் முஸ்லிம்களான குதிரை வியாபாரம் செய்துவரும் ராவுத்தர்கள், கொங்கு வெள்ளாள கவுண்டர் சமுகத்தின் காவல் தெய்வமாக எப்படி ஆனார்கள் என்று காகம் கிராமத்திலேயே சில பெரியவர்களிடம் விசாரித்தோம்.

“முந்நூறு, நானூறு ஆண்டுகளுக்கும் முன்னாடி எங்க மூதாதையர் கூட்டம் அரவக்குறிச்சி பக்கத்துல இருக்குற கன்னிவாடியில வாழ்ந்துக்கிட்டிருந்தாங்க. இப்ப அது கரூர்ல இருக்குங்க. அப்ப அங்கே ஏதோ பெரிய சண்டை வந்து எங்க மூதாதையரெல்லாம் ஆபத்துல இருந்தாங்களாம். அங்க இருந்த முஸ்லிம் ராவுத்தர்களாம் சேர்ந்து எங்க மூதாதயர்களை உசுரைக் காப்பாத்தி வெளியூருக்கு அனுப்பி வெச்சாங்களாம். அப்போ கன்னிவாடியிலேர்ந்து கிளம்பினவங்க ஈரோடு பக்கம் சிவகிரி வந்து செட்டிலாயிட்டாங்க. உசிரைக் காப்பாத்தி வாழ்க்கை கொடுத்த நன்றிக் கடனுக்காகத்தான் இங்க குலதெய்வக் கோயிலோடயே ராவுத்தருக்கும் சிலை வெச்சிருக்காங்க.

எங்க மூதாதையர்களோட உசிரைக் காப்பாத்தினாலதான் இன்னிக்கும் நாங்க தலைமுறை தலைமுறையாக இங்க வாழ முடியுது. அப்படிப்பட்ட நல்ல காரியத்தை செஞ்ச ராவுத்தர்களுக்கு நாங்க நன்றி செலுத்தணும் இல்லீங்களா? அதனாலதான் பரம்பரை பரம்பரையா நானூறு, ஐந்நூறு வருசமா இந்த ராவுத்தர் வழிபாட்டை விட்டுடாம வெச்சிருக்கோமுங்க’’ என்று சொல்லி நம்மை ஆச்சரியப்படுத்தினார்கள்.

வெள்ளையம்மாள் காவியத்தில் கவிஞர் கண்ணாடி பெருமாள் இந்தத் தகவலை குறிப்பிட்டுள்ளார் என்பதையும் அவர்கள் பெருமையோடு நினைவுகூர்கிறார்கள்.

“15ஆம் நூற்றாண்டில் தமிழ் புலவர் அருணகிரி நாதர் முருகனை ராவுத்தர் முருகன் என்று வர்ணிக்கிறார். ராவுத்தராக மாறிய முருகன் சுறா என்ற அசுரரைக் கொன்றதாகக் கூறப்படுகிறது, அசுரரைக் கொன்ற ராவுத்தர் என்றும் அழைக்கப்படுகிறார். அதன் பின்னர் அவர் மயில் ஏறிச் செல்வதால் மாமயிலேறும் ராவுத்தர் என்றும் அழைக்கப்படுகிறார்.

கண்ணன் கூட்டத்தினர் முருகனை அபிஷேக மூர்த்தி என்று அழைக்கின்றனர். பத்து ஆண்டுகளுக்கு முன்பு அவருக்காகப் பாரம்பரிய முறையில் கோயில் கட்டப்பட்டது. கோயில் கட்டுவதற்கு முன்பு ராவுத்தர் குமாரசாமி ஒரு கூரையின் அடியில் வைக்கப்பட்டிருந்தார். அங்கு வைக்கப்பட்ட ராவுத்தர் சிலைகள் வேங்கை மரத்தால் செதுக்கப்பட்டவை.. வேங்கை போர்க்குணம் மிக்க வன விலங்காகும். அபிஷேக மூர்த்தியின் கோபத்தைக் குளிர்விக்க வேண்டும் என்பது அவசியமாக இருந்தது. எனவே வேங்கை மரத்தால் சிலைகள் வடிவமைக்கப்பட்டன” என்று கண்ணன் கூட்டத்தைச் சேர்ந்தவரும் கோயிலின் பூசாரியுமான மகாலிங்கம் தெரிவித்தார்.

இந்தக் கோயிலின் வழிபாட்டு முறைகளைப் பற்றி விசாரித்தபோது மேலும் சில சுவாரஸ்யமான தகவல்கள் கிடைத்தன.

“திங்கட்கிழமை வெள்ளிக்கிழமைன்னு வாரத்துக்கு ரெண்டு நாள் பூசைங்க. அமாவாசையான பூசை விசேஷமா இருக்கும். மூணு வருசத்துக்கு ஒருமுறை திருவிழா வரும். அப்ப ராவுத்தருக்குப் பொங்க வெச்சு குறைஞ்சது 500 கிடா வெட்டுவோமுங்க. இப்பல்லாம் அப்பப்ப எங்க கூட்டத்துலேர்ந்து வெளியூர்ல செட்டிலானவங்க வந்து ஆடு வெட்டி பூசை நடத்திட்டும் போறாங்க’’ என்கிறார்கள் ஊர்க்காரர்கள்.

கோயில் சந்நிதியில் பொதுவாகப் பழங்களும் மலர்களும் மட்டுமே தெய்வங்களுக்குப் படைத்துவந்த நிலையில், ஆடு வெட்டி, மது வகைகளை வைத்துப் படைப்பது கிராமிய சிறுதெய்வ வழிபாட்டு முறையின் தாக்கமாகவே கருதப்படுகிறது.

காகம் கோயிலைப் பற்றி அலைபேசியில் விசாரித்த நம்மிடம், “ஈரோடு பக்கம் வந்தீங்கன்னா சொல்லுங்க. நாங்களே வந்து உங்களை அழைச்சு வர்றோம். நம்ம கோயிலுக்கு நீங்கள் வாரோணுமுங்க’’ என்று அன்பைக் கொட்டுகிறார்கள் கிராமத்தினர்.

ஒருமுறை விசாரித்ததற்கே இப்படி அன்புகாட்டும் இவர்கள், மூதாதையர்களின் உயிர்களைக் காப்பாற்றிய ராவுத்தர்களுக்குக் கோயில் கட்டிக் கும்பிடுவதில் ஆச்சரியம் இல்லைதான்.

இந்து ஆங்கில நாளிதழில் வந்த கட்டுரையை மொழி பெயர்த்தவர் ஃபைசல் பின் முஹம்மத்!

https://www.thehindu.com/society/history-and-culture/a-secular-temple-in-the-heart-of-kongu-nadu/article24103046.ece?fbclid=IwAR2K0d8qG82MNs6Dg7ZBRLKEfjdLnFKfM7OhDs-hmCfonIMvppCwGVKlQIs





எளியவரின் நேர்மை

 #எளியவரின்_நேர்மை

சென்னை தாம்பரம் ரயில் நிலையத்தில் ரயிலை பிடிக்க ஒருவர் ஓடி வருகிறார் அந்த நேரத்தில் இடம் பிடிப்பதற்காக பையை ரயிலில் வீசிவிட்டு அவர் ரயிலின் சக்கரங்களில் சிக்கி மரணமடைந்து விடுகிறார்

அதே ரயிலில் அந்த‌பெட்டியில் ஏறிய பல்லாவரம் காதர் பாஷா அவர்கள் அந்த பையை பத்திரமாக எடுத்து அவரும் ஒரு முக்கிய வேலையாக திருச்சிக்கு சென்று விட்டு மறுபடியும் சென்னை வந்து அந்த பையை பல்லாவரம் காவல் நிலையத்தில் ஒப்படைக்கின்றார் அதில் பல்வேறு முக்கிய ஆவணங்கள் மற்றும் நான்கு லட்ச ரூபாய் மதிப்புள்ள காசோலைகள் இருந்திருக்கின்றது அதை சம்பந்தப்பட்டவர்களிடம் உரிய முறையில் வரவழைத்து ஒப்படைத்திருக்கிறார்
அதன்பிறகு கொரனா காலத்தில்‌ முக்கியமான ஐடி கார்டுகள் மற்றும் 3 ஆயிரத்து 500 ரூபாய் பணத்துடன் ஒரு மணிபர்ஸ் அவருக்கு கிடைத்திருக்கின்றது அதையும் அவர் காவல் நிலையத்தில் ஒப்படைத்து உரியவரிடம் சேர்த்து இருக்கின்றார்

மற்றொரு சம்பவத்தில் ஒரு பெண் முக்கியமான கல்வி சான்றிதழ்கள் மற்றும் தனது மகளின் சான்றிதழ்கள் ஆகியவற்றை விட்டுச் சென்றிருக்கிறார் அதையும் அவர் போலீசாரிடம் ஒப்படைத்து அவரை வரவழைத்து தந்துள்ளார்

மேலும் இதுபோன்ற பல்வேறு சேவைகள் கொரனா காலத்தில் மரணித்தவர்களை அடக்கம் செய்யும் சேவைகள் இன்னும் பல்வேறு சேவைகள் செய்ததை பாராட்டும் வகையில் தனியார் நிறுவனம் இவருக்கு கௌரவ சமூக சேவைக்கான டாக்டர் பட்டம் வழங்கியது அதை காவல்துறை உயர் அதிகாரிகளிடம் பெறும் காட்சியை நீங்கள் காண்கிறீர்கள்

இவர் மிகவும் வசதியான வரும் அல்ல சாதாரண ஆட்டோ டிரைவர் தான் பணத்தேவைகள் நிறைய உள்ளவர் தான் இருந்தாலும் இறைவனுக்கு அஞ்சி நேர்மையான முறையில் நடந்து கொண்டது. மிகவும் பாராட்டுக்குரியது



Tuesday, December 01, 2020

எல்லாம் பதவி வெறி....

 தங்களின் சுய நலத்துக்காக இளைஞர்களை வன்முறையில் தள்ளி விடும் இவர்கள் எல்லாம் தலைவர்களா? மருத்துவ படிப்பில் வன்னியர்களின் ஒதுக்கீட்டில் மேல்சாதியினரை நுழைத்தபோது வாய் மூடி மவுனமாக இருந்தது ஏன்? எல்லாம் பதவி வெறி....