ஆட்சி
பொறுப்பேற்பதற்கு 10 ஆண்டுகளுக்கு முன்பே யோகி அதித்தியாநாத்தின் ‘இந்து யுவ
வாகினி’ என்ற இளைஞர் அமைப்பு இந்து இளைஞர்களை ஒன்று திரட்டி ஒரு இணை இராணுவத்தை
உருவாக்கி முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறையைக் கட்டவிழ்க்கத் தொடங்கியிருந்தது.
எங்கெல்லாம் யோகி கூட்டம் நடத்தி முஸ்லிம்களுக்கு எதிரான வெறுப்பு பேச்சைப் பேசி
முடிக்கிறாரோ அதன் நீட்சியாக அங்கெல்லாம் அப்பகுதியில் உள்ள முஸ்லிம் கடைகளை யுவ
வாகினி அமைப்பு அடித்து நொறுக்கும்.
இதை
ஆதித்தியநாத் தொடர்ந்து செய்த போதும் யுவ வாகினி அமைப்பைச் சேர்ந்தவர்களைக் கைது
செய்த அப்போதிருந்த முலாயம் சிங் யாதவின் காவல்துறை, ஒரே ஒரு முறை மட்டுமே யோகி ஆதித்தியாநாத்தை
கைது செய்தது.
2007-ம் ஆண்டு
கோரக்பூரில் நடந்த ஒரு கூட்டத்தில் “வருங்காலத்தில் ஒரு இந்து இரத்தம் சிந்தினான்
என்றால் அரசாங்கத்தை FIR பதிவு செய்ய வைக்கமாட்டோம். அதற்குப் பதிலாக அவன் 10 உயிர்களைக் கொல்வதை உறுதி
செய்வோம்.” என்ற புகழ் மிக்க அந்த வாசகத்தைப் பேசினார். அதன் பின் முஸ்லிம்களின்
கடைகள் தரைமட்டமாக்கப்பட்டு, கோடிக்கணக்கான சொத்துகள் அழிக்கப்பட்டன. 2
பேர் கொல்லப்பட்டனர். மாநிலம் முழுக்க மதக்கலவரம் வெடிக்கும் அபாயத்தில்
இருந்ததைத் தடுக்கவே யோகி கைது செய்யப்பட்டார்.
அதற்கே 'இந்து
மதத்துக்காக வாழ்வையே அர்ப்பணித்துக்கொண்ட, குடும்பத்தைத் துறந்த என்னைக் கைது செய்து
சித்ரவதை செய்தார்கள்.' என
நாடாளுமன்றத்தில் அழுதார் யோகி.(அப்போது அவர் கோரக்பூரின் எம்பி). உபியின்
மேல்சாதி இந்துக்களான தாகூர்களை அக்கண்ணீர் அசைத்துத்தான் பார்த்தது. தாகூர்கள்
யோகியின் தீவிர ஆதரவாளர்களாகத் தொடக்கம் முதலே இருந்துவருகிறார்கள்.
இந்த வாக்கு
வங்கியை இழந்து விடுவோம் என்ற அச்சத்தின் காரணமாகவே யோகியின் வெறுப்பு
பிரச்சாரத்துக்கு எதிராக எந்த வித தீவிர நடவடிக்கையும் எடுக்காமலிருந்தார்
முலாயம். அதற்கு அடுத்த 10 ஆண்டுகளிலேயே யோகி ஆதித்தியநாத் ஆட்சியைப் பிடித்தார்.
யோகி
ஆட்சியைப் பிடித்ததிலிருந்து தொடர்ந்து முஸ்லிம்களுக்கு உபியில் நடந்த கொடுமைகளை
நாமும் செய்திகளில் பார்த்து வந்துள்ளோம். ஆட்சி முழுவதும் இந்துக்கள் மத்தியில், உங்களுக்கு
எதிராக ஒரு மிகப் பெரிய சூழ்ச்சியை இந்த முஸ்லிம் சமுதாயம் செய்து வருகிறது என்பது
போன்ற தோற்ற மாயையை வலுவாக உருவாக்கிய வண்ணம் முஸ்லிம்கள் மீதான படுகொலைகளை
வன்முறைகளை அடக்குமுறைகளை நியாயப்படுத்திக்கொண்டே இருந்ததுதான் யோகி ஆட்சியின்
முக்கிய ‘வெற்றி’.
முஸ்லிம்களை
இவ்வளவு பாடுபடுத்தியவர் இந்துக்களுக்காவது எதாவது செய்திருக்கிறார் என்றால்
அதுவும் கிடையாது. இந்த ஐந்தாண்டுக் கால ஆட்சியில் இந்துக்கள் எந்த பலனையும்
அடையவில்லை. குறிப்பிட்டுச் சொல்லும்படியான வளர்ச்சியும் அச்சமுதாயம் காணவில்லை.
இருந்தும் யோகி எப்படி
மீண்டும் ஆட்சிக்கு வந்தார் என்றால்? உபி மண்ணை முஸ்லிம்களுக்கு நரகமாக்கியதன்
மூலம் மட்டுமே.
Saravana
Siddharth பதிவு
1 comment:
வழக்கம் போல் அண்டப்புளுகு அகாயப்புளுகு . . .அதுதான் சுவனப்பிரியன்.
யோகி ஆட்சியைப் பிடித்ததிலிருந்து தொடர்ந்து முஸ்லிம்களுக்கு உபியில் நடந்த கொடுமைகளை நாமும் செய்திகளில் பார்த்து வந்துள்ளோம். ஆட்சி முழுவதும் இந்துக்கள் மத்தியில், உங்களுக்கு எதிராக ஒரு மிகப் பெரிய சூழ்ச்சியை இந்த முஸ்லிம் சமுதாயம் செய்து வருகிறது என்பது போன்ற தோற்ற மாயையை வலுவாக உருவாக்கிய வண்ணம் முஸ்லிம்கள் மீதான படுகொலைகளை வன்முறைகளை அடக்குமுறைகளை நியாயப்படுத்திக்கொண்டே இருந்ததுதான் யோகி ஆட்சியின் முக்கிய ‘வெற்றி’.
முஸ்லிம்களை இவ்வளவு பாடுபடுத்தியவர் இந்துக்களுக்காவது எதாவது செய்திருக்கிறார் என்றால் அதுவும் கிடையாது. இந்த ஐந்தாண்டுக் கால ஆட்சியில் இந்துக்கள் எந்த பலனையும் அடையவில்லை. குறிப்பிட்டுச் சொல்லும்படியான வளர்ச்சியும் அச்சமுதாயம் காணவில்லை. இருந்தும் யோகி எப்படி மீண்டும் ஆட்சிக்கு வந்தார் என்றால்? உபி மண்ணை முஸ்லிம்களுக்கு நரகமாக்கியதன் மூலம் மட்டுமே
--------------------------------------------------------------------------
மதத்தை முன் வைத்து அவா் ஏதும் செய்யவில்லை. முஸ்லீம்கள்தான் ஒட்டுமொத்தமாக சாமாஜ்வாடிக்கு வாக்கு அளித்து அவருக்கு அதிக சட்டமன்ற உறுப்பினா்களை கொடுத்துள்ளனா். 35 முஸ்லீம் ச.உ உபி சட்டசபைக்கு சமாஜவாடி அனுப்புகிறது. பாரதிய ஜனதாக கட்சி . .காபீர்களின் . .கட்டி. . .முஹம்மது சொன்னபடி கஸ்வாத்-இ-ஹிந்த யை நிறைவேற்ற தடையாக இருக்கும் கட்சி. எனவே அதை தொலைத்து கட்ட பொய்பிரச்சாரம் செய்வது தொடா்கதை. தொடரட்டும். இந்தியா முஸ்லீம்களுக்கு சொர்க்கப்புரியாக உள்ளது.
Post a Comment