Followers

Saturday, March 26, 2022

கோவை ரஹ்மதுல்லா

 



கோவை ரஹ்மதுல்லா கைது பற்றி ஒரு சிலர் 30 வருடங்களுக்கு முன்பு இந்து மதத்தவரிடையே சகோதரத்துவத்துடன் பழகி வந்ததாகவும் தவ்ஹீத் ஜமாத் வந்துதான் அதனை கெடுத்து விட்டதாகவும் ஒரு பொய்யுரை சில இஸ்லாமியர்கள் பரப்பி வருகின்றனர்.

 

உண்மையில் 30 வருடங்களுக்கு முன்பு ராம கோபாலனால் மிக திட்டமிட்டு விஷ விதை தமிழக இந்துக்களிடையே விதைக்கப்பட்டது. பல இந்துக்கள் அதனை உண்மை என்றும் நம்பினர். அந்த நேரத்தில்தான் 'இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம்' என்ற நிகழ்ச்சி தமிழகத்தின் பட்டி தொட்டிகளெல்லாம் நடத்தப்பட்டு ராம கோபாலனின் ஒவ்வொரு கேள்விக்கும் அறிவு பூர்வமாகபதில் வைக்கப்பட்டது. தமிழகத்தில் கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக இரத்ததானத்தில் முதலிடம் வகிப்பது தவ்ஹீத் ஜமாத். அதே போல் ஊருக்கு ஊர் ஆம்புலன்ஸ் சேவைகளை மத பாகுபாடின்றி வழங்கி அந்த மக்களின் அன்பை பெற்றது.

 

அது மட்டுமல்லாமல் புயல் வெள்ளம் போன்ற இயற்கை பேரிடர்களில் தங்களின் உயிரை பணயம் வைத்து பல இந்து குடும்பங்களை காப்பாற்றியது தவ்ஹீத் ஜமாத். பள்ளிவாசல்களை இந்துக்களுக்கு தங்க இடம் கொடுத்து நெகிழ்வை ஏற்படுத்தியது. கலைஞரிடமும், ஜெயலலிதாவிடமும் அழுத்தம் கொடுத்து இஸ்லாமியருக்கென்று தனியாக இட ஒதுக்கீடு பெற்று தந்தது. முஸ்லிம்களை கல்விச் சாலையின் பக்கம் ஆர்வத்தை கொண்டு வர பல முயற்சிகளையும் எடுத்தது தவ்ஹீத் ஜமாத்.

 

தட்டு, தாயத்து, முரீது, முன்றாம் நாள் ஃபாத்திஹா, ஏழாம் நாள் ஃபாத்திஹா, சந்தனக் கூடு, தர்ஹா வழிபாடு என்று சீரழிந்துக் கொண்டிருந்த சமூகத்தை குர்ஆனின் மகிமையை விளக்கி ஐந்து வேளை தொழக் கூடிய சமூகமாக மாற்றிய பெருமை தவ்ஹீத் ஜமாத்துக்கு உண்டு.

 

இது போன்ற ஒரு கட்டமைக்கப்பட்ட அமைப்பு வட மாநில முஸ்லிம்களிடம் இல்லாததால்தான் உபி பீஹாரில் சங்கிகளின் பொய் பிரசாரம் எடுப்பட்டு இஸ்லாமிய வெறுப்பு வளர்க்கப்பட்டுள்ளது. இதனை நாம் கண் கூடாக பார்த்துக் கொண்டே ஒரு சிலரால் தவ்ஹீத் ஜமாத் மீது வன்மத்தை கக்குவது ஏன் என்று புரியவில்லை.

 

இதனால் கோவை ரஹ்மதுல்லா பேசிய பேச்சை ஆதரிக்கவில்லை. உணர்ச்சிவசப்பட்டு பேசிய பேச்சில் எனக்கு உடன்பாடில்லை என்பதை முன்பே விளக்கியுள்ளேன்.

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

No comments: