தாஜூல் பள்ளிவாசல் - போபால்
உலகின் மிகப் பெரிய பள்ளிகளில் இதுவும் ஒன்று. முதல் தளத்தில் தொழுகை நடைபெறுகிறது. கீழ் தளத்தில் 1000 க்கும் மேற்பட்ட கடைகள் பள்ளி நிர்வாகத்தால் வாடகைக்கு விடப்பட்டுள்ளன. இங்குள்ள கடைகளில் 90 சதவீதம் இந்துக்களும், ஜெயின்களும் கடைகள் வைத்துள்ளனர். இது நான்கைந்து தலைமுறைகளாக தொடர்கிறது. இங்கு கடை வைத்துள்ள பல இந்துக்களும் காலையில் கடையை திறந்தவுடன் தங்கள் மத நம்பிக்கைபடி பூஜைகள் செய்து விடடே வியாபாரத்தை தொடங்குகின்றனர். எந்த நேரமும் கூட்டம் அதிகமாக இருக்கும். வியாபாரமும் சிறந்த முறையில் நடைபெறுகிறது.
இரண்டு நாட்களுக்கு முன்பு கர்நாடகாவில் கோவில் விழா ஒன்றில் தற்காலிக கடைகளை வைத்த முஸ்லிம்களை கடையை காலி பண்ணச் சொல்லி மிரட்டும் ஒரு இந்துத்வா கும்பலை கண்டோம். போபாலில் நடந்தும் வரும் மத நல்லிணக்கத்தை கர்நாடகாவில் ஏன் காண முடியவில்லை? முஸ்லிம்களிடம் உள்ள பரந்த மனப்பான்மை ஏன் இந்து வெறியர்களுக்கு இல்லை? பெரும்பான்மை இந்துக்கள் யாரும் இதனை கண்டிக்காமல் மவுனமாக இருந்தால் நாளை அவர்களையும் இந்த கும்பல் மாமூல் கேட்டு துன்புறுத்தும். அதை நோக்கித்தான் நமது நாடு சென்று கொண்டுள்ளது.
1 comment:
மனதளவில் அரேபியனாக வாழ்வது முஸ்லீம்களின் நிலை.
அரேபிய வாழ்க்கை முறை அவர்களில் கடுமையான பாதிப்பை ஏற்படுத்தியள்ளது.
மதங்களுக்குள் போட்டியை உருவாக்குவது மதமாற்றம், ஆதிக்க போா் நடத்தும் அமைப்புக்கள். அரேபியமதம் பிறமதங்களை ஏற்பதில்லை.காபீர்கள் . ..என்று இழிவு செய்வதை தாங்கள் என்றும் குறைவாக பதிவிடவில்லை. தூய்மையான வாகாபி இசுலாமிய இயக்கங்கள் பெரிதும் வன்முறைக்கு காரணமாக உள்ளன.
இந்த பரந்த உலகில் எந்த ஒரு சமூதாயமும் தனித்து இயங்க முடியாது.
Post a Comment