Followers

Saturday, May 26, 2012

விவாகரத்தில் முதல் 10 இடத்தை பெற்ற நாடுகள்!

சமீபத்திய இந்த செய்தியை பார்த்து நான் அதிர்ச்சியடைந்தேன். 30 சதவீதம் 40 சதவீதம் சில நாடுகள் 50 சதவீதம் விவாகரத்தால் அவதிப்படும் நாடுகளாக உள்ளது கவலை தரும் விஷயம். இதனால் மனதால் பாதிக்கப்படும் குழந்தைகளின் எதிர்காலம் என்ன ஆவது? ஒன்றுபட்ட கூட்டு குடும்பம் சிதைந்து மனிதர்களை நேசிக்கும் மனோபாவமும் குறைந்து விட்டது. நானும் சம்பாதிக்கிறேன்: நீயும் சம்பாதிக்கிறாய். உனக்கு நான் ஏன் கட்டுப்பட வேண்டும். உன் பேச்சை நான் எதற்கு கேட்க வேண்டும் என்ற ஈகோ தான் இன்று உலகின் பல குடும்பங்களை பிடித்து ஆட்டுகிறது.

-------------------------------------------



'இனி உன் பேரு மலர்விழி இல்லே! கூகுள்'

'என் பேரை எதுக்கு மாத்துரீங்க!'

'நான் எங்கே போனாலும் கண்டுபிடிச்சுடுரியே! அதான்.'

------------------------------------------

கணவன்:- என்னடி இது பெட்ஷீட் கனத்துல புடவை எடுத்து இருக்கே
மனைவி:- கட்டிக்க போறது நாந்தானே
கணவன்:- அதை துவைக்கிறது நான்தானே! எனக்குல்லே வலி தெரியும?

------------------------------------------


முதல் இடம் ரஷ்யா:
லெனினும் ஸ்டாலின் தங்களின் கனவு தேசமாக உருவாக்கிய ரஷ்யாதான் இன்று குடும்பங்களில் நடக்கும் விவாகரத்தில் உலகின் முதல் இடத்தை தக்க வைத்துக் கொண்டுள்ளது. 5.30 சதவீத மக்கள் ரஷ்யாவில் விவாகரத்துப் பெற்றுக் கொள்கின்றனர். மேற்கத்திய கலாசாரமும் நாத்திகமும் இதற்கான முக்கிய காரணங்களாக விளங்குகின்றன. ஊழலால் விளைந்த பொருளாதார தேக்க நிலையும் மக்களை தனியாக பிரிந்து செல்ல தூண்டுகிறது.



இரண்டாவது இடம் அருபா:

கரிபியன் பகுதியைச் சேர்ந்த அரூபா என்ற இந்த தீவு விவாகரத்தில் உலகின் இரண்டாம் இடத்தைப் பெற்றுள்ளது. 5.27 சதவீத மக்கள் இங்கு விவாகரத்தைப் பெற்றுக் கொள்கிறார்களாம். வறுமை இதற்கு முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது.

மூன்றாம் இடம் அமெரிக்கா:

நம்ம பெரியண்ணன் அமெரிக்கா விவாகரத்தில் மூன்றாவது இடத்தில் இருக்காக! :-) அண்ணாச்சி 4.19 சதவீதம் பெற்று சிறந்த இடத்தை பிடித்துள்ளார். இன்னும் சில ஆண்டுகளில் முதல் இடத்தை பெற்றாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. தனது மக்களுக்கு நிம்மதியான வாழ்வை தர லாயக்கற்ற அரசு உலகைக் கட்டுப்படுத்தப் போகிறதாம். மக்களின் மன நிம்மதியின்மையே விவாகரத்துக்கு முக்கிய காரணமாக சொல்லப்படுகிறது.



நான்காவது இடம் பனாமாவுக்கு:

நான்காவது இடத்தை பெற்றுள்ள பனாமா பெற்ற புள்ளி விபரம் 3.80. கிட்டத்தட்ட அமெரிக்காவை நெருங்கி வருகிறது. முன்பெல்லாம் இது போன்ற விவாகரத்துக்கெல்லாம் சர்ச் அனுமதி கொடுப்பதில்லை. கலாசார மாற்றங்களின் விளைவாக இன்று மிகப்பெறும் அச்சுறுத்தலாக விவாகரத்து இந்நாட்டை உலுக்கி எடுக்கிறது.

ஐந்தாவது இடம் உக்ரைனுக்கு:

ஐந்தாவது இடத்தில் உள்ள உக்ரைன் பெற்ற புள்ளி விபரங்கள் 3.79. ரஷ்யாவோடு ஒன்றாக இருந்த போது குடும்பங்களும் ஓரளவு ஒன்றாக இருந்தன. ரஷ்ய குடியரசிலிருந்து பிரிந்தவுடன் மேற்கத்திய கலாசாரம் இங்கும் குடும்பங்களை பிரித்து விட காரணமாகிறது. பல பெற்றோர்கள் குழந்தை பெறுவதையே தவிர்க்கின்றனர். அதற்கு காரணமாக நாட்டின் பொருளாதாரத்தைச் சுட்டிக் காட்டுகின்றனர். குழந்தை பிறக்காததும் விவாகரத்துக்கு முக்கிய காரணமாக அமைகிறது.

ஆறாவது இடத்தில் இருப்பது பெலாருஸ்:

ரஷ்ய குடியரசுக்கு உட்பட்ட பெலாருஸ் நாடு ஆறாவது இடத்தைப் பெற்றுள்ளது. பொருளாதார தேக்கமும் மேற்கத்திய கலாசாரம் இந்நாட்டில் புகுந்ததும் இதற்கு முக்கிய காரணமாகிறது.

ஏழாவது இடத்தில் இருப்பது மால்டோவா:

பொருளாதார தேக்க நிலையும் மக்களின் வாழ்க்கைத் தரம் மேம்பட்டதும் காரணமாக சொல்லப்படுகிறது.

எட்டாவது இடம் கியூபாவுக்கு:

கியூபாவில் நடக்கும் விவாகரத்தின் சதவீதம் 3.16 ஆக உள்ளது. இங்கு திருமணத்தை தங்களின் பொரளாதாரத்தை உயர்த்திக் கொள்ளும் ஒரு மார்க்கமாகப் பார்க்கின்றனர். பல மொழிகள் கலந்திருப்பதும் இது போன்ற விவாகரத்துகள் அதிகரிக்க காரணமாகின்றன.

ஒன்பதாவது இடம் செக்கோஸ்லோவாகியா:

விவாகரத்துகள் 3.11 சதவீதம் நடந்து உலகின் ஒன்பதாவது இடத்தைப் பெற்றுள்ளது.

பத்தாவது இடத்தில் இருப்பது தென் கொரியா:

சுனு என்ற தென் கொரியாவின் திருமண வரன் தேடும் ஏஜன்சியின் தலைவர் நியூயார்க் டைம்ஸூக்கு பேட்டி கொடுக்கும் போது சொன்னதாவது: 'இதற்கு முன்பு இவ்வாறான மோசமான நிலை ஏற்பட்டதில்லை. வருடா வருடம் விவாகரத்துகள் அதிகமாகிக் கொண்டே வருகின்றன. எங்களுக்கென்று தனி பாரம்பரிய பெருமை உண்டு. அதை நாங்கள் இழந்து வருகிறோம்' என்கிறார்.

நம் பாரத நாட்டிற்கென்று தனிப் பாரம்பரியம் பெருமை உண்டு. ஆனால் மேற்கத்திய மோகத்தால் அதனை கொஞ்சம் கொஞ்சமாக இழந்து வருகிறோம். ஆங்கில மொழி மோகமும் ஆங்கில கலாசாரத்தை சுவீகரித்துக் கொள்வதிலும் மேற்கண்ட நாடுகளோடு போட்டி போடுகிறோம். நமது நாட்டிலும் விவாகரத்து தினம் தினம் அதிகரித்து வருவது கவலைக்குரிய விஷயம்.

இதில் மற்றொரு ஆச்சரியமான விஷயம் இஸ்லாமியர்கள் தலாக் தலாக் தலாக் என்று அநியாயத்துக்கு பெண்களை விவாகரத்து பண்ணி கொடுமைபடுத்துகிறார்கள் என்று கூறுவோர் உண்டு. அதிசயமாக இந்த பட்டியலில் ஒரு முஸ்லிம் நாடு கூட வராததை பார்த்து ஆச்சரியப்பட்டேன். விவாகரத்தை சிரமாக்கிய ஒரு சமூகம் சதவீதத்தில் அதிகமாக இருக்கிறது. விவாகரத்தை மிக இலகுவாக்கிய இஸ்லாமியர்களிடம் விவாகரத்து குறைந்துள்ளதை இந்த நேரத்தில் நாம் எண்ணிப் பார்க்க வேண்டும்.

http://www.siliconindia.com/news/general/10-Countries-With-the-Highest-Divorce-Rates-nid-117138-cid-1.html


--------------------------------------------------------------------------

(இத்தகைய) தலாக் இரண்டு முறைகள் தாம் பின் (தவணைக்குள்)முறைப்படி கணவன், மனைவியாகச் சேர்ந்து வாழலாம் அல்லது நேர்மையான முறையில் பிரிந்து போக விட்டுவிடலாம் அவ்விருவரும் இறைவனின் வரம்புகளை நிலை நிறுத்த முடியாது என்று அஞ்சும் போது தவிர. நீங்கள் மனைவியருக்கு கொடுத்தவற்றிலிருந்து யாதொன்றையும் திருப்பி எடுத்துக் கொள்ளுதல் கூடாது - இன்னும் நீங்கள் இறைவனின் வரம்புகளை அவர்களால் நிலை நிறுத்த முடியாது என்று அஞ்சினால், அவள் (கணவனுக்கு) ஏதேனும் ஈடாகக் கொடுத்து(ப் பிரிந்து) விடுவதில் குற்றமில்லை. இவை இறைவன் ஏற்படுத்தியுள்ள வரையறைகளாகும். ஆகையால் அவற்றை மீறாதீர்கள். எவர் இறைவனின் வரையறைகளை மீறுகிறார்களோ, அவர்கள் அக்கிரமக்காரர்கள் ஆவார்கள்.
-குர்ஆன் (2:229)

மீட்ட முடியாதபடி (அதாவது இரண்டு தடவை தலாக் சொன்ன பின்னர் மூன்றாம்) தலாக் சொல்லிவிட்டால் கணவன் அப்பெண்ணை மறுமணம் செய்து கொள்ள முடியாது. ஆனால் அவள் வேறு ஒருவனை மணந்து அவனும் அவளை தலாக் சொன்னால் அதன் பின் (முதற்) கணவன் மனைவி சேர்ந்து வாழ நாடினால் - அதன் மூலம் இறைவனின் வரம்புகளை நிலைநிறுத்த முடியும் என்று எண்ணினால், அவர்கள் இருவரும் (மறுமணம் செய்து கொண்டு மணவாழ்வில்) மீள்வது குற்றமல்ல. இவை இறைவனின் வரையறைகளாகும்டி இவற்றை அல்லாஹ் புரிந்து கொள்ளக்கூடிய மக்களுக்குத் தெளிவாக எடுத்துக் காட்டுகிறான்.
-குர்ஆன்(2:230)

இன்னும், பெண்களை நீங்கள் தலாக் செய்து, அவர்களும் தங்களுடைய இத்தா தவணையைப் பூர்த்தி செய்து விட்டால், அவர்கள் தாங்கள் விரும்பி ஏற்கும் கணவர்களை முறைப்படித் திருமணம் செய்து கொள்வதைத் தடுக்காதீர்கள். உங்களில் யார் இறைவனின் மீதும், இறுதி நாள் மீதும் நம்பிக்கை கொண்டுள்ளார்களோ, அவர்களுக்கு இதைக் கொண்டு உபதேசிக்கப்படுகிறது. இ(தன்படி நடப்ப)து உங்களுக்கு நற்பண்பும், தூய்மையும் ஆகும் (இதன் நலன்களை) இறைவன் அறிவான் நீங்கள் அறிய மாட்டீர்கள்.
-குர்ஆன்(2:232)


ஆம் முஸ்லிம்களிடம் விவாகரத்தின் சதவீதம் குறைவாக இருக்க காரணம் அவர்களிடம் உள்ள இறைபக்தி என்றால் மிகையாகாது. அநியாயமாக ஒரு பெண்ணை தலாக் சொன்னால் அதன் பலனை மறுமையில் தண்டனையாக பெறுவான்: அதே போல் மனைவியும் பெறுவாள் என்று பெரும்பாலான முஸ்லிம்கள் மறுமையை நம்புவதும் மேற்கத்திய கலாசாரத்துக்கு அடிமையாகாமல் இருப்பதும் கூட காரணமாக இருக்கலாம்.



21 comments:

Barari said...

இதென்ன பிரமாதம் அண்டார்டிக்காவில் விவாகரத்து இல்லை பெர்முடாவில் இல்லை எவரெஸ்ட்டில் இல்லை இப்படியான
பின்னூட்டம் சிங்கை மகாராஜாவிடம் இருந்து எதிர்ப்பார்க்கலாம்

'பசி'பரமசிவம் said...

விவாகரத்துக்கு ஆத்திகத்தையும் நாத்திகத்தையும் காரணங்கள் ஆக்குவதைவிட.................

அதிக சுதந்திரமும் சுய சம்பாதனையும் உள்ள பெண்கள் அதிகம் வாழுகிற நாடுகளில் விவாகரத்துப் பெறுவோர் எண்ணிக்கை அதிகம்; சுய சம்பாதனை இல்லாமல், அடிமைகளாக நடத்தப் படுகிற பெண்கள் அதிகம் உள்ள நாடுகளில் விவாகரத்து குறைவு என்று சொன்னால் அது தவறாகுமா?

எதைப் பேசினாலும் சுற்றி வளைத்து மதப் பிரச்சாரத்தில் வந்து நிற்கிறீர்கள்.

செய்துவிட்டுப் போங்கள். அது உங்கள் உரிமை.

ஒரு கணவனும் மனைவியும் மனம் விட்டுப் பழகி, ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டு அன்பு வாழ்க்கை வாழ்வதை நாத்திகம் [சோவியத் நாட்டில்] தடுக்கிறதா என்ன???


உங்களிடம் விவாதம் செய்ய என்னால் முடியாது. ஏனென்றால், மதம் சார்ந்த விவாதத்தில் என்னையும் இழுத்துவிடுவீர்கள். அதை நான் விரும்புவதில்லை. உங்கள் பதிலுக்குப் பதில் தருவதிலும் எனக்கு நாட்டம் இல்லை...அது எனக்குப் பின்னடைவு [தோல்வி] என்று பிறர் கருதினாலும்....

இதை வெளியிடுவீர்கள் என்ற நம்பிக்கையில் நன்றி சொல்லி விடை பெறுகிறேன்.

மிக்க நன்றி.

suvanappiriyan said...

முனைவர் பரமசிவம் ஐயா!

//எதைப் பேசினாலும் சுற்றி வளைத்து மதப் பிரச்சாரத்தில் வந்து நிற்கிறீர்கள்.//

மதம் அல்லது மார்க்கம் இந்த இரண்டையும் நம் வெறுத்து ஒதுக்கினாலும் அது நம்மை விடுவதில்லை. நீங்கள் நாத்திகர் உங்களை சொல்லிக் கொண்டாலும் இந்து மதத்துக்கு உள்ளேதான் கொண்டுவரப் படுவீர்கள். எனவே விசுவரூபமெடுக்கும் இந்த விவாகரத்துக்கு முக்கிய காரணமாக ஆடம்பர வாழ்க்கை அமைகிறது. தனி மனித ஒழுக்கம் சீர்கெடுகிறது. மனம் போன போக்கில் வாழ்வதும் திருமண வாழ்வை கசக்கச் செய்கிறது. இந்துவோ கிறித்தவரோ முஸ்லிமோ யாராக இருந்தாலும் இறைவனுக்கு பயந்து வாழும் ஒரு சமூகம் இது போன்று தொட்டதெற்கெல்லாம் விவாகரத்தை நாட விரும்பாது என்பதையே சொல்ல வந்தேன்.

வருகைக்கும் கருத்தக்கும் நன்றி ஐயா!

suvanappiriyan said...

சகோ பராரி!

//இதென்ன பிரமாதம் அண்டார்டிக்காவில் விவாகரத்து இல்லை பெர்முடாவில் இல்லை எவரெஸ்ட்டில் இல்லை இப்படியான
பின்னூட்டம் சிங்கை மகாராஜாவிடம் இருந்து எதிர்ப்பார்க்கலாம்//

ஹா..ஹா..சிங்கை மஹாராஜாவிடமிருந்து வரும். ஆனால் வராது.:-)

'பசி'பரமசிவம் said...

நன்றி சுவனப்பிரியன்.

‘ரஷ்யா’ என்பதைத் தவறுதலாக, ‘சோவியத் நாடு’ என்று குறிப்பிட்டுவிட்டேன்.

தாங்கள் குறிப்பிட்டுள்ள விவாகரத்துக்கான மற்ற காரணங்களையும் நான் மறக்கவில்லை.

விவாகரத்துக்கு நாத்திகம் காரணம் என்பதற்கான என் மறுப்பை வெளியிடுவது மட்டுமே என் நோக்கம்.

என் கருத்தை வெளியிட்டதற்கு நன்றி.

தாங்கள் தந்த விளக்கத்திற்கும் நன்றி.

ராஜ நடராஜன் said...

இன்னும் ஜனநாயக தேர்தலோட வாதமே முடியலை.அதுக்குள்ள இங்கெ ஓடி வந்திட்டீங்களாக்கும்?சரி அப்படியே வந்தீங்க படிக்கிறவங்களுக்கு கண் மங்கலாயிடும்ன்னுட்டு குண்டாயிட்டீங்க கடைசியில்:)

நீங்க எந்த ஊர்(நாடு) இஸ்லாமியர்களிடம் விவாகரத்து குறைவுன்னு முதலில் தெளிவுபடுத்துங்க.நான் அப்புறமா வாரேன்.

முனைவர் பரமசிவம்!சகோ.சு.பி மிட்டாய்க்குள்ள மருந்து தடவிக்கொடுக்கிறார்.நாம் மிட்டையை மட்டும் சாப்பிட்டு விட்டு ஓடிவிடலாம்:)

மருந்தும் கிக்கா ஒரு மார்க்கமா இருக்குதுன்னு நினைப்பவர்கள் ருசிக்கட்டும்.

suvanappiriyan said...

சகோ ராஜ நடராஜன்!

//இன்னும் ஜனநாயக தேர்தலோட வாதமே முடியலை.அதுக்குள்ள இங்கெ ஓடி வந்திட்டீங்களாக்கும்?//

நாட்டாமை சகோ சிடிஷன் வந்து தீர்ப்பு சொன்னதற்கு பிறகு அப்பீல் ஏது? அதான் ஓடி வந்துட்டேன். :-)

//சரி அப்படியே வந்தீங்க படிக்கிறவங்களுக்கு கண் மங்கலாயிடும்ன்னுட்டு குண்டாயிட்டீங்க கடைசியில்:)//

அனுமதிக்கப்பட்ட ஒன்றில் தலாக் விடுவது எவ்வளவு சட்ட நுணுக்கமான ஒன்று என்பதை தெரியாதவர்கள் தெரிந்து கொள்ளவே சற்று குர்ஆன் வசனத்தை சற்று போல்டாக்கிக் காடடினேன்.

//நீங்க எந்த ஊர்(நாடு) இஸ்லாமியர்களிடம் விவாகரத்து குறைவுன்னு முதலில் தெளிவுபடுத்துங்க.நான் அப்புறமா வாரேன்.//

அரபு நாடுகளிலும் இது போன்று விவாகரத்து அதிகரித்திருப்பதை மறுக்கவில்லை. ஆனால் மேற்கத்திய நாடுகளோடு ஒப்பிடும்போது சதவீதம் குறைவாகவே உள்ளது.

மேலும் அரபு நாடுகளில் நடக்கும் விவாகரத்துகள் அதிகம் படித்த மேற்கத்திய கல்வி பயின்ற குடும்பங்களிலேயே நடக்கிறது.

இஸ்லாத்தை முற்றிலுமாக பின்பற்றும் குடும்பங்களில் இத்தகைய விவாகரத்துகள் நடப்பதில்லை என்பதையும் கவனிக்க வேண்டும்.

//முனைவர் பரமசிவம்!சகோ.சு.பி மிட்டாய்க்குள்ள மருந்து தடவிக்கொடுக்கிறார்.நாம் மிட்டையை மட்டும் சாப்பிட்டு விட்டு ஓடிவிடலாம்:)//

மிட்டாயை மட்டும் அதிகமாக சாப்பிட்டா உடம்பு என்னத்துக்கு ஆகிறது. அவ்வப்போது மருந்துகளையும் உட்கொண்டு உடலை சீராக்கிக் கொள்வது நமக்கு நல்லதுதானே!

Seeni said...

GOOD MSG!

ராஜ நடராஜன் said...

//அரபு நாடுகளிலும் இது போன்று விவாகரத்து அதிகரித்திருப்பதை மறுக்கவில்லை. ஆனால் மேற்கத்திய நாடுகளோடு ஒப்பிடும்போது சதவீதம் குறைவாகவே உள்ளது.//

நடுநிலைமையான வாதம்!நோ அப்பீல் மை லார்ட்:)

அதிரை சித்திக் said...

மால்ட்டோவா ..என்ற நாட்டில் ..

தன்னிறைவு அடைத்தும் ஏதோஒரு மன நிலை

அங்கும் விவாக ரத்து..வறுமை அங்கும் விவாக ரத்து

ரஷ்ய ..சுற்றியுள்ள பிரிந்த மாநிலங்கள் அங்கும் விவாக ரத்து

இதில் இரண்டு விசயங்கள் நாம் கண்கூடாக பார்க்க வேண்டும்

இந்திய நாடு மதத்திற்கு அப்பால் ..கலாசாரம் ..தியாக தன்மை

இவை இரண்டும் ரத்தத்தோடு பின்னி பிணைந்து உள்ளது ..

இதனால் மனைவி கணவன் .பிள்ளைகளுக்காக படும் கஷ்டத்தினை

சுகமாக ஏற்கிறாள் ..அதே போன்று கணவன் தனது மனைவி மக்களுக்காக

படும் கஷ்டத்தை சுகமாக ஏற்கிறான் ..இப்படி மாறி மாறி தியாகத்துடன்

அன்பை பொழியும் போது மன முறிவுக்கு ஏது நேரம் ..மற்றொன்று

மத நம்பிக்கை இறைவன் நம்மை மறு உலக வாழ்வில் கேள்வி கேட்பான்

அதற்கு நம்மிடம் தகுந்த காரணமில்லை எனில் பெரிய தண்டனை கிடைக்கும்

என்ற அற்புதமான நம்பிக்கையும் ஒரு காரணமாகும் .இதுவும் ஒரு காரணம் .இது தொடபாக

பெரிய ..தொடரே எழுதலாம் ..இந்தியா நாடு என் நாடு .. இஸ்லாம் எங்களின்

வழிபாடு ,,என்று சொல்லிகொள்வதில் ..பெருமை படுகிறேன்

suvanappiriyan said...

சகோ அதிரை சித்திக்!

//பெரிய ..தொடரே எழுதலாம் ..இந்தியா நாடு என் நாடு .. இஸ்லாம் எங்களின்

வழிபாடு ,,என்று சொல்லிகொள்வதில் ..பெருமை படுகிறேன்//

உண்மைதான் சகொ. இந்த வகையில் நம் நாட்டைப் பற்றி பெருமைபட்டுக் கொள்ளலாம். தனது தாய் தந்தையை காப்பதில் ஆகட்டும் தனது குழந்தையை படிக்க வைப்பதில் ஆகட்டும் பெற்றோர் காட்டும் அன்பு அளப்பரியது. ஆனால் தற்போது மேற்கத்திய கலாசார மோகத்தினால் அது கொஞ்சம் கொஞ்சமாக மாறி வருகிறது. இது வருத்தப்பட வேண்டிய விஷயம்.

Nasar said...

** முனைவர் பரமசிவம் ஐயா! ** // சுய சம்பாதனை இல்லாமல், அடிமைகளாக நடத்தப் படுகிற பெண்கள் அதிகம் உள்ள நாடுகளில் விவாகரத்து குறைவு என்று சொன்னால் அது தவறாகுமா? //
தவறாகாது.....இது உண்மையும் கூட ...ஆனால் தாங்கள் குறிப்பிடும் சுய சம்பாதனை இல்லாமல் இருக்கும் பெண்கள் அடிமைகளா ?? என்பதே என் கேள்வி....அப்படி பார்த்தால் நாம் நாட்டில் பெரும்பான்மையான பெண்கள் சுய சம்பாதனை இல்லாமல் தான் இருக்கிறார்கள் மேலும் அவர்கள் தன் கணவனின் சம்பாதனையை சார்ந்தே இருப்பதால் அடிமைகளா ?? லாஜிக் எங்கோ உதைக்குதே ...!!!
உண்மையாக சொல்லப்போனால் இப் பதிவின் நோக்கமே உலகத்தில் அதிகமாக இருக்கும் முஸ்லிம் நாடுகளில், மற்றைய நாடுகளைவிட டைவர்ஸ் சதவிகிதம் குறைவு .. காரணம் என்னவென்றால் இறைவன் மேலுள்ள பயம் ...

suvanappiriyan said...

சலாம் சகோ நாசர்!

//உண்மையாக சொல்லப்போனால் இப் பதிவின் நோக்கமே உலகத்தில் அதிகமாக இருக்கும் முஸ்லிம் நாடுகளில், மற்றைய நாடுகளைவிட டைவர்ஸ் சதவிகிதம் குறைவு .. காரணம் என்னவென்றால் இறைவன் மேலுள்ள பயம் ...//

பதிவின் நோக்கத்தை சரியாக சொல்லியுள்ளீர்கள். இங்கு சவுதி அரேபியாவிலும் விவாகரத்துகள் நடக்காமல் இல்லை. பணம் பகட்டு என்று செல்வத்தில் புரளும் இந்த மக்களிடமும் சிலரிடம் இஸ்லாமிய நடைமுறை குறைந்து மேற்கத்திய கலாசாரம் புகுந்துள்ளது. அத்தகைய நபர்களின் குடும்பங்களிலும் விவாகரத்து நடைபெறத்தான் செய்கிறது. அவர்கள் இஸ்லாத்தை கைவிட்டதே அதற்கான மூல காரணம். இதற்கு என்ன மாதிரியான நடவடிக்கை எடுக்கலாம் என்று சவுதி அரசும் தற்போது ஆலோசித்து வருகிறது.

கோவி.கண்ணன் said...

சும்மா இறை அச்சம் குறை அச்சம் என்ற பீலா விட வேண்டாம். பாவம் சார் நீங்க. ரொம்பவே குழம்பிப் போய் இஸ்லாமிய புரோமசனுக்கு 'அல்லா'டுறிங்க. ஆனாலும் நாங்க எதிர்ப்புகளை தடுத்து வளர்ந்து வருகிறோம் என்று அடிக்கடி சுய பட்சாதாபம் வேறப்படுறிங்க பாவமாக இருக்கு. 21 ஆம் நூற்றாண்டிலும் நிரந்தர சொர்க்கம் என்னும் அழுகிய வாழைப்பழ ஆசையில் உங்க கடை விற்பனைக்கான விளம்பரத்திற்கு மட்டும் கொறைச்சலே இல்லை.

*****

மணவிலக்கு என்பது மனித உரிமை, ஒத்துவராத வாழ்க்கையை யாரும் விரும்ப மாட்டார்கள், அதையும் தாண்டி சகித்துக் கொள்பவர்கள் குழந்தைகள் நலனுக்கு அன்றி வேறு எந்த ஒரு காரணமும் இல்லை. இதற்கும் இறை அச்சத்திற்கும் என்ன தொடர்பு.

உங்களுக்கு உங்கள் மதத்தில் இருந்தே உதாரணம் சொல்ல ஜைனப் தான் மீண்டும் கை கொடுக்கிறார். ஜனைப்புக்கு இறை அச்சம் இல்லைன்னு நீங்க சொல்வதாக இந்தப் பதிவை வைத்து எடுத்துக் கொள்ளலாமா ?

மருமகளுக்கு இறை அச்சம் இல்லாததால் இறை அச்சம் பெற வேண்டி மணவிலக்கு செய்யச் சொல்லி மாமனாருக்கு அல்லா மணமுடித்து வைத்தார் என்று சொல்லுங்களேன் சார்.

இந்தப் பதிவுக்கு பின்னூட்டம் போடவோ, தனிப்பதிவு போடவோ ஒர்த் எதுவும் இல்லை. உங்கள் பதிவுக்கு பின்னூட்டம் போடுவது கூட நேர விரயம் என்பது தெரிந்தவை தான், உங்கள் கருத்துகளில் மக்கள் நலம் பாதிக்கப்படும் என்று உணரும் போது நான் தனிப்பதிவுகள் போட்டு இருக்கிறேன்.

உங்களுக்கு ஒரு தகவல்.

Malaysian Muslim Divorce Rate Up: Muslim Couple Splits Every 15 Minutes

http://www.huffingtonpost.com/2011/04/27/malaysian-muslim-divorce-_n_854457.html

முடிந்தால் இவர்கள் முஸ்லிம்களும் இல்லை, இவர்களுக்கு இறை அச்சமும் இல்லைன்னு சொல்லி ஒரு பதிவு போட்டு உங்கள் நேர்மையை பறைசாற்றுங்கள்.

suvanappiriyan said...

திரு கோவி கண்ணன்!

//அதில் கூட இறை அச்சம் இல்லாதால் ஜைனப் மணவிலக்கு பெற்று முகமதுவை மணந்து கொண்டார் என்று சொல்லபடவில்லை, பிறகு எப்படித்தான் சுவனப்பிரியர் மணவிலக்கிற்கும் இறையச்சத்திற்கும் முடிச்சுப் போடுகிறார் என்றே தெரியவில்லை, இதை ஒத்து ஓத நான்கு வகாபிகளின் பின்னூட்டம் அதில் என்னை இழுத்து நக்கல் வேறு அடித்து இருக்கிறார்கள்.//

தலாக் என்பது ஒருவர் மண வாழ்வு ஒருவரோடு சரியாக நாம் எதிர்பார்த்த அளவு அமையாத போது நல்லவிதமாக பிரிந்து விடுவது. 'கல்லானாலும் கணவன் புல்லானாலும் புருஷன்' என்று நடைபிணமாக அவனொடு வாழ்க்கையை நடத்தச் சொல்லி இஸ்லாம் சொல்லவில்லை. அந்த வகையில் அன்னை ஜைனபுக்கு தனது கணவன் பிடிக்கவில்லை யாதலால் தலாக் விடுகிறார். அதன் பிறகு முகமது நபியை மணந்து கொள்கிறார். அந்த வாழ்க்கை அவர்கள் இருவருக்குமே இன்பமாகத்தானே கழிந்தது!

பிரச்னை எங்கு வருகிறதென்றால் தனது மனைவி வீட்டில் இருக்க பிற பெண்களை நாடும் போதும் அதே போல் நல்ல ஆண் துணை இருக்க பிற ஆண்களை ஒரு மனைவி நாடுவதும் கலாசார சீரழிவால் ஆங்காங்கு நடைபெறுகிறது. அடுத்து மன நிமம்தி இன்மை. இதனாலும் பல விவாகாரத்துகள் நடைபெறுகிறது. விவாகரத்து வாங்குவதற்காக பொய்யான காரணங்களை துணிந்து இட்டுக் கட்டி பல குடும்பங்களை பிரித்து விடுகின்றனர். இதற்க் கெல்லாம் காரணம் இறை நம்பிக்கை அற்று போய் சுதந்திர பறவைகளாக திரிவதே முக்கிய காரணம் என்பதை நாம் மறுக்க முடியாது.

//பட்டப் பகலில் பூனை கண்ணை மூடாவிட்டாலும் பூளோகத்தின் மறுபகுதி இருட்டாகத்தான் இருக்கும்,

Malaysian Muslim Divorce Rate Up: Muslim Couple Splits Every 15 Minutes//

நான் முன்பு கோலாலம்பூர் ஒரு வாரம் சுற்றுலாவுக்கு வந்திருந்தபோது நிலைமைகளை நேரிலேயே பார்த்தேன். எனது குடும்ப பெண்களோடு பயங்கர வாக்குவாதத்திலும் ஈடுபட்டேன். ஏனெனில் அந்த நாடு கொஞ்சம் கொஞ்சமாக இஸ்லாமிய சூழலை இழந்து கொண்டிருந்தது. பெண்கள் ஆண்களை போல் உடைகளை அணிந்து கொண்டு இஸ்லாத்தை தூரமாக்கினார்கள். ஆணும் பெண்ணும் அவசியமில்லாமல் அனைத்து இடங்களிலும் ஒன்றாக்கப்பட்டார்கள். இதன் பாதிப்பு இன்னும் பத்து வருடங்களில் தெரிய வரும் என்று அப்போதே சொன்னேன். அது இன்று நிறைவேறி வருகிறது. அந்த மக்கள் என்று இஸ்லாத்தை தூரமாக்கினார்களோ அன்றிலிருந்தே பிரச்னைகள் தலைஎடுக்க ஆரம்பித்து விட்டது. தற்போதுதான் அரசு விழித்துக் கொண்டு இஸ்லாமிய சட்டங்களை நடைமுறைப்படுத்த யோசித்து வருகிறதாம். 'கண் கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம்';

எனவே விவாகரத்து மலேகியாவில் அதிகமானதற்கு காரணம் இஸ்லாத்தை தூரமாக்கியதே!

இங்கு சவுதியிலும் தற்போது விவாகரத்துகள் அதிகரிக்கத் தொடங்கியுள்ளன. இதற்கு முக்கிய காரணம் சவுதிகள் கல்வி கற்க வெளிநாடு சென்று அந்த கலாசாரத்தை இங்கு கொண்டு வந்ததே என்று கண்டறியப்பட்டு தற்போது அதுபோன்ற தரம்வாய்ந்த கல்விக் கூடங்களை சவுதியில் நிறுவ பிரிட்டனோடு பேச்சு வார்த்தை நடந்து வருகிறது.

எனவே இங்கு தவறு இஸ்லாத்தில் அல்ல: அதை சரி வர பின்பற்றாத முஸ்லிம்களே காரணமாகின்றனர்!

suvanappiriyan said...

சகோ ஸ்மிதா!

//He has defended the murder of a class teacher by a student in this same site. He calls himself a teacher. God save the students.//

இதற்கு இஸ்லாம் அனுமதிக்கிறதா? கடுமையாக எதிர்க்கவல்லவா செய்கிறது?

'கொலைக்கு பதிலாகவோ, பூமியில் செய்யும் குழப்பத்திற்குப் பதிலாகவோ இல்லாமல் ஒருவர் மற்றொருவரை கொலை செய்தால் அவர் எல்லா மனிதர்களையும் கொலை செய்தவர் போலாவார்' என்றும் 'ஒரு மனிதரை வாழ வைத்தவர் எல்லா மனிதர்களையும் வாழ வைத்தவர் போலாவார்' என்றும் இஸ்ராயீலின் மக்களுக்கு இதன் காரணமாகவே விதியாக்கினோம்.
-குர்ஆன் 5:32

//If the islamists say that in the hazratbal mosque, there is a strand of hair that belongs to the prophet, we must agree. Kavya & his ilk will not dare question that.//

குர்ஆனை முழுமையாக விளங்கிய முஸ்லிம்கள் இதை ஒத்துக் கொள்ள மாட்டார்கள். ஏனெனில் முகமது நபியின் முடியோ, செருப்போ, சட்டையோ எந்த புனிதத்துவமும் பெறுவதில்லை. மக்களை சுரண்டி வயிறு வளர்க்கும் சில முல்லாக்களின் வேலை இது. முகமது நபியின் அடக்க தலத்தில் ஒரு காவல்காரர் எப்போதும் நிற்பார். யாராவது முகமது நபியிடம் கைகளை ஏந்தி பிரார்த்தித்தால் அவரை தடுத்து 'இறைவனிடம் கேளுங்கள்' என்று மசூதிக்கு செல்ல வழி காட்டுவதை மதினாவில் நாம் பார்க்க முடியும். அடக்கம் பண்ணிய இடத்திலேயே ஏதும் கெட்கக் கூடாது என்கிறபோது அந்த முடிக்கு ஏதும் புண்ணியத்தவம் இருக்கிறதா? சரியான டுபாக்கூர் வேலை இது.

//But if a hindu claims that Lord Rama was born in Ayodhya, kavya will ask for his birth certificate.//

அவரை நீங்கள் தெய்வமாக மட்டும் வணங்கி வந்திருந்தால் கேட்டிருக்க மாட்டார். ஒரு அரசனின் மகனை தெய்வமாக்கி பல ஆண்டுகள் முஸ்லிம்கள் தொழுது வரும் ஒரு இடத்தில்தான் பிறந்தார் என்று கூறி நாட்டில் ரத்த ஆறு ஓட விட்டால் அது உண்மைதானா என்று தெரிந்து கொள்வதற்காக பிறந்த தேதியைக் கேட்பார். நியாயம்தானே! உங்களுக்கு தெரிந்திருந்தால் நீங்களாவது சொல்லுங்களேன்.

suvanappiriyan said...

கோவி கண்ணன்!

//புள்ளைக் குட்டிங்களை மதராச பள்ளியில் மட்டுமே படிக்கவைக்காமல் மற்ற பள்ளிகளிலும் படிக்க வைங்க சார். சொந்த காலில் நிற்கப் பழகுவாங்க.//

உளறல்களிலேயே உச்சகட்ட உளறல் இதுதான். எனது மூத்த பையன் மெகானிகல் இன்ஜினியரிங் முதலாம் ஆண்டு. இளையமகன் இந்த வருடம் முதலாம் ஆண்டு பிகாம். நாங்களும் கோதாவுல இறங்கிட்டோம்ல....

இளைய மகன் விடுப்பை வீணாக்காமல் மதரஸா சென்று அரபி எழுத படிக்க கற்று வருகிறார். நான் சொல்லாமலேயே தவ்ஹீத் (அதாவது உங்கள் பாஷையில் வஹாபியம்) கூட்டங்கள், அதிலும் பிஜெ கூட்டங்களில் நண்பர்களோடு கலந்து கொள்கிறார். ஆக உலக கல்வி மார்க்க கல்வி இரண்டையும் ஒன்றாக எனது குழந்தைகள் கற்று வருகின்றனர். பெரும்பாலான இஸ்லாமிய குடும்பங்களின் நிலை தற்போது இதுதான். கவலை வேண்டாம். இனி பிராமணர்களுக்கு சமமாக படிப்பில் போட்டியிடும் சமூகமாக இன்னும் 10 ஆண்டுகளில் இஸ்லாமியர்களை நீங்கள் தமிழகத்தில் பார்க்கலாம்.

suvanappiriyan said...

சலாம்!

// ஹாஜாவின் போர்வையில் இறைவன் செல்வ செழிப்பை தந்தான்//.

ஹாஜாவின் போர்வையிலெல்லாம் ஒண்ணும் இல்லே பாய்!

அப்போ நீங்க படிச்ச படிப்புக்கோ தெரிந்த தொழிலுக்கோ முக்கியத்துவம் இல்லை என்று சொல்கிறீர்களோ!

எனது திறமைக்கேற்ற வேலையை கொடுத்து செல்வத்தை அதிகரிக்க வைத்த அந்த இறைவனுக்கே புகழ் அனைத்தும் என்று வர வேண்டும்.

//என் பெரியம்மா வின் கனவில்
என் தாய்க்கு ஆண் குழந்தை தான் (நான்)
பிறக்கும் என்று முன்னரே
அறிவித்தது அஜ்மீர் நாயகத்தின்
கராமத் என்னவென்று சொல்வது//

அப்படியா! அப்போ இத்தனை பேர் டாக்டர் தொழில் பண்றது படிக்கிறது எல்லாம் தேசையில்லாததது என்கிறீர்களாக்கும். நல்லது.

Anonymous said...

Kavya says:
May 26, 2012 at 12:52 am

நான் ஒரு கருத்தை அவர் எழுதியிருக்கிறார்; இவர் எழுதியிருக்கிறார் என்றால் நான் அவருக்கு ஜால்ரா; இவருக்கு ஜால்ரா என்ற பொருள கிடையாது. இராஜாஜி சொன்னது சரி; நாகசாமி சொன்னது சரி என்று நான் சொல்லவில்லை. அப்படிச்சொன்னார்கள் என்றது அப்படியும் மாறுபட்டக்கருத்துக்கள் வரும்போது, அவற்றை எழவிடாமல் தாக்குகிறார்கள் என்றே சொல்கிறேன். நாகசாமி சொன்னதை மறுத்துவிட்டோம். இராஜாஜி சொன்னதை ஆதாரத்தை வைத்துப்பொய்யாக்கினோம். உங்களிடம் ஆர் கேட்டது?

அது கிடக்க. சேக்கிழார் புராணம் ஆரால் எப்போது எழுதப்பட்டது? முதலில் அதைத்தேடுங்கள். எழுதியவர் எந்த ஆதாரத்தை வைத்து எழுதினார் ? அதையும் தேடுங்கள்.

தெரியாவிட்டால் நான் திண்ணையில் போட்ட ‘கொற்றங்குடி உமாபதி சிவாச்சாரியார்’ படிக்கவும். தமிழ்ச்சைவர்களில் பொழுதுபோக்கு என்ன தெரியுமா? தமிழ் வைணவம் ஒரு டுபாக்கூர் மதம் எனச் சொல்ல எதையாவது எழுதுவதுதான். என் இரண்டாவது கட்டுரை இன்னும் திண்ணைக்கனுப்ப்படவில்லை;. அப்போது தெரியும் இந்த சிவம் சைவத்தைத்தூக்க என்ன செய்தார் என்று. நினவிற்கொள்க: இதே திண்ணையில் உங்கள் தமிழ்ஹிந்து.காம் சகா களிமுகு கணப்தி சேக்கிழார் புராணம் ஒன்று இருப்பதைத் தெரியாமல் நான் பொய் சொல்கிறதாக எழுதியிருக்கிறார். அவருக்காகவே நான் போட்ட கட்டுரையது.

அதுவும் கிடக்க. ‘கற்றறிந்தோர் சபை’ என்றால் என்ன சாரங்கன்? திண்ணை அப்படிச் சொல்ல முடியாது. பின்னர் எப்படிச்சொல்லலாம்? இது ஒரு பல்லரங்கம். இங்கு எந்தப்பொருள் பற்றி எவரும் எழுதலாம். ஒரு கல்லாதவனுக்குத்தெரியும் விசயங்கள் உங்களுக்குத்தெரியுமா? கல்லா விவசாயிக்குத்தான் எப்போது நாற்று நடவேண்டும்; எப்போது அதைப்பிடுங்கி நட வேண்டும் ? என்று தெரியும். உங்களுக்குத் தெரியுமா? அவ்விவசாயி சொல்ல நான் ஒரு கட்டுரையைப்போடுகிறேன். அதையும் திண்ணைப்போட்டுத்தான் ஆக வேண்டும். இல்லையென்றால், ராகவன் சொன்னமாதிரி, குதிரைக்குத்தான் திண்ணை. கழுதைக்கில்லை போ போ என்பது போல ஆகி விடும்.

கற்றறிந்தோர் சபையென்பது, இலக்கிய ஆராய்ச்சி, விஞ்ஞான ஆராய்ச்சி, வரலாற்று ஆராய்ச்சி என்றால், பல்கலைக்கழக பண்டிதர்கள்,. விஞ்ஞானிகள், வரலாற்றிறிஞர்கள் குறிப்பிட்ட துறையில் வல்லுனர்கள் கூடி விவாதிக்கும் அரங்குகள், உலகாளவியதாகவும் இருக்கலாம். வரலாற்றறிஞர்கள் கூடம் சபையில் தமிழ்ஹிந்து காமில் சொன்னார்கள் என்று மேற்கோள் காட்டுவது உண்டா? ஆர் எஸ் எஸ் சார்புடை வரலாற்றரறிஞர்கள் கூடினால் மட்டுமே நடக்கும். முன்முடிபுகளோடுக்கூட பரவாயில்லை. உள்ளோக்கத்தோடு எழுதப்படுகிற கட்டுரைகள் குப்பைத்தொட்டிகளில்தான் போடப்படும். இதில் மாற்றுக்கருத்துக்கு இடமில்லை.

But I do agree that the said internet site has a liberal policy of allowing comments on their essays which sometimes are so unnerving i.e harshly controverting it. My comments often appeared there and they were very harsh.
Reply

Anonymous said...

குவஹாத்தி:”மனப்பூர்வமாகவே இஸ்லாத்தை ஏற்றேன்! யாரும் என்னை நிர்ப்பந்திக்கவில்லை!” -2-வது திருமணம் புரிந்த அஸ்ஸாம் எம்.எல்.ஏ டாக்டர் ருமிநாத் தெரிவித்துள்ளார். அவர் தனது பெயரை ராபியா சுல்தானா என மாற்றியுள்ளார்.

அஸ்ஸாம் மாநிலம் போர்க்கோலா தொகுதியைச் சேர்ந்த காங்கிரஸ் எம்.எல்.ஏ டாக்டர் ருமிநாத். இவரது கணவர் பெயர் ராகேஷ் குமார் சிங். இவர்களுக்கு 2 வயதில் மகள் உள்ளாள்.

இந்த நிலையில், பேஸ்புக் மூலம் ஜாக்கி ஸாக்கிர் என்பவர் அறிமுகமானார் என கூறப்படுகிறது. இருவருக்கும் இடையே நட்புறவு ஏற்பட்டதாம். இந்த நிலையில் ருமிநாத் இஸ்லாத்தை தனது வாழ்க்கை நெறியாக ஏற்றுக்கொண்டு ஜாகிரை திருமணம் புரிந்ததாக பரபரப்பான செய்தி வெளியானது.
முன்னதாக இதுகுறித்து ராகேஷ் குமார்சிங் போலீஸில் புகார் கொடுத்திருந்தார். அதில், மருத்துவப் பரிசோதனைக்காக ருமி சில்சார் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்குப் போயிருந்த போது அவரை கடத்தி விட்டதாக கூறியிருந்தார். ஆனால் விசாரணையில் ருமி ஜாகிரை மணம்புரிந்து கொண்டதாககூறப்படுகிறது.

இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இருபிரிவினர் இடையே வன்முறை வெடித்துவிடாமல் தடுப்பதற்காக சில்சார் பகுதியில் சிஆர்பிஎப் போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.
தனது திருமணம் குறித்து ராபியா சுல்தானா என்ற ருமி நாத் கூறியது: ஸாகிர்தான் எனது சட்டப்பூர்வமான கணவர். எனக்கும், ராகேஷ் சிங்குக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. விரைவில் நான் விவாகரத்து கோரவுள்ளேன்.
அரசியல் காரணங்களுக்காகத்தான் எனது 2வது கல்யாணத்தை நான் முன்பு மறுத்தேன். சுய விருப்பத்தின் பேரில்தான் நான் இஸ்லாத்தை ஏற்றேன். அதன் பின்னரே திருமணம் புரிந்தேன். நான் இஸ்லாத்தை ஏற்றுக்கொள்வதற்கோ, ஸாக்கிரை நான் திருமணம் புரியவோ யாரும் என்னை நிர்ப்பந்திக்கவில்லை. எனவே இந்து திருமணச் சட்டம் எனக்குப் பொருந்தாது. விரைவில் எனது மகளை நான் எனது பொறுப்பில் சட்டப்படி எடுப்பேன். அமைச்சர் சித்தீக்ஜி அவர்கள் எங்கள் திருமணத்திற்கு இரண்டு காழிகளை(திருமணத்தை நடத்தி வைப்பவர்) ஏற்பாடுச் செய்தார். நான் அவருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். நான் எனது கணவருடன் மாநிலத்திற்கு வெளியே சென்றதால் தலைமறைவாகிவிட்டதாக கூறுகிறார்கள்.” இவ்வாறு ருமி கூறியுள்ளார்.

ருமி இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டதை சாக்காக வைத்து ஹிந்துத்துவா தீவிரவாத குழுக்கள் சில்சார் பகுதியில் கலவரத்தை தூண்டலாம் என அஞ்சப்படுகிறது. சில ஹிந்துத்துவா அமைப்புகள் போராட்டம் நடத்தவும் திட்டமிட்டுள்ளனவாம். ஹிந்துத்துவா அமைப்பைச் சார்ந்த கைரி பாரத் என்பவன் ருமி இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து அவரது உருவத்தை எரித்ததாக ஸீ நியூஸ் கூறுகிறது.
ஸாக்கிர், கரீம் கஞ்ச் மாவட்டத்தில் உள்ள பதர்பூரில் க்ளர்க்காக பணியாற்றி வருபவர். அவரது தந்தை ரஹ்மான் முன்னாள் போலீஸ் அதிகாரி ஆவார். ஸாக்கிரின் தந்தை கூறுகையில், ருமியை தனது மருமகளாக ஏற்றுக்கொள்ள மாட்டேன் என தெரிவித்துள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது. அவரும் தனது மகனை காணவில்லை என போலீஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

ஸாக்கிர் பங்களாதேஷைச் சார்ந்தவர் என்றும், ருமி பங்களாதேஷுக்கு அவருடன் ஓடிவிட்டதாகவும் அவதூறு செய்தி பரப்பப்படுகிறது. தமிழில் பிரசித்திப்பெற்ற செய்தி இணையதளம் ஒன்றும் இந்த அவதூறுச் செய்தியை வெளியிட்டுள்ளது. ஆனால், ஸாக்கிர் அஸ்ஸாம் மாநிலத்தைச் சார்ந்த இந்திய குடிமகன் ஆவார்.

Anonymous said...

http://tvrk.blogspot.com/2012/05/blog-post_29.html