'இறைவன் என்ற ஒருவனைப் பற்றி முழுமையாக எனக்கு விளங்காத வரை அதாவது யாராலும் படைக்கப்படாமல் எவ்வாறு தோன்றினான் என்ற உண்மை விளங்காத வரை இறைவன் என்ற ஒருவனை நான் ஒப்புக் கொள்ள மாட்டேன் என வாதிடுவது உயிர் என்றால் என்னவென்று முழுமையாக எனக்குப் புரியாத வரை அப்படி ஒன்று எனக்குள் இருப்பதை நான் ஒப்புக் கொள்ள மாட்டேன் எனக் கூறுவதற்கு ஒப்பானதாகும்'
Followers
Saturday, May 05, 2012
சானா அராபிய சுருள்களும் தருமியின் அறியாமையும்!
சானா அராபிய சுருள்களும் தருமியின் அறியாமையும்!
இஸ்லாத்தைப் பற்றி சிறிதளவு அறிந்துகொண்ட மாற்று மதத்தவர்களால் கேட்கப்படும் கேள்விகள்:
இஸ்லாத்தின் மூன்றாவது கலிபா உஸ்மான் (ரலி) அவர்கள் காலத்தில் ஒன்றுக் கொன்று முரண்பட்ட பல குர்ஆனின் பிரதிகளை தொகுத்து ஒரே குர்ஆனாக உருவாக்கப் பட்டதுதான் இன்றைய அருள்மறை என்பது, குர்ஆனை பற்றி உலவுகின்ற கட்டுக்கதைகளில் ஒன்று.
எந்த அருள்மறை முஹம்மது நபி (ஸல்) அவர்களுக்கு அல்லாஹ்வால் இறக்கியருளப்பட்டதோ அதே அருள்மறைதான், இஸ்லாமிய உலகத்தினரால் பெரிதும் போற்றி மதிக்கப்படும் அல்லாஹ்வின் வேதமாக இன்றும் இவ்வுலகில் திகழ்கின்றது. இன்றைக்கு இருக்கும் அருள்மறை குர்ஆன் அல்லாஹ்வின் தூதர் முஹம்மது நபி (ஸல்) அவர்களின் நேரடி கண்காணிப்பில் தொகுக்கப்பட்ட ஒன்று. கட்டுக்கதைக்கான ஆணிவேர் எது என்று நாம் இப்போது ஆய்வு செய்வோம்.
1. அல்லாஹ்வின் தூதர் முஹம்மது நபி (ஸல்) அவர்களின் நேரடி கண்காணிப்பின் கீழ் தொகுக்கப்பட்டு, அவர்களால் சரிபார்க்கவும் பட்டதுதான் இன்றைக்கு நம்மிடையே எழுத்து வடிவில் இருக்கும் அருள்மறை குர்ஆன்.
அல்லாஹ்வால் அருள்மறை குர்ஆனின் வசனங்கள்; அண்ணல் நபி முஹம்மது (ஸல்) அவர்களுக்கு இறக்கியருளப்பட்டவுடன், அதனை அவர்கள் மனனம் செய்து கொள்வார்கள். பின்னர் இறக்கியருளப்பட்ட குர்ஆன் வசனங்களை தனது தோழர்கள் அனைவருக்கும் தெரிவித்து, தனது தோழர்களையும் மனனம் செய்து கொள்ளச் செய்வார்கள். அத்துடன் அல்லாஹ்வால் இறக்கியருளப்பட்ட குர்ஆன் வசனங்களை தனது தோழர்களை கொண்டு எழுதிக்கொள்ளவும் செய்வார்கள். எழுதிக்கொண்ட வசனங்களை சரியானதுதானா என்று மீண்டும் பலமுறை உறுதி செய்து கொள்வார்கள். அல்லாஹ்வின் தூதர் அண்ணல் நபி (ஸல்) அவர்கள் (ருஅஅi) எழுதவும், படிக்கவும் தெரியாதவர்கள். எனவேதான் இறைவனால் அருள்மறை வசனங்கள் இறக்கியருளப்பட்டதும் – அந்த வசனங்களை தனது தோழர்களுக்கு தெரிவிப்பார்கள். அண்ணல் நபி (ஸல்) அவர்களின் தோழர்களும் நபிகளால் தெரிவிக்கப்பட்ட இறைமறை வசனங்களை எழுதிவைத்துக் கொள்வார்கள். தம் தோழர்களால் எழுதிவைக்கப்பட்ட வசனங்களை மீண்டும் அண்ணல் நபி (ஸல்) அவர்கள் – தம் தோழர்களை வாசிக்கக் சொல்லி கேட்டு சரியானதுதானா என்பதை உறுதிசெய்து கொள்வார்கள். அவ்வாறு எழுதப்பட்டதில் தவறுகள் ஏதேனும் இருந்தால் அதனை உடனயடியாக திருத்தி எழுதச் சொல்லி – அந்த தவறுகளையும் திருத்திக் கொள்வார்கள். அதேபோன்று தம் தோழர்களால் மனனம் செய்யப்பட்ட வசனங்களும் – தம் தோழர்களால் எழுதப்பட்ட வசனங்களும் சரியானது தானா என்பதை – மேற்படி வசனங்களை மனனம் செய்த தம்; தோழர்களை ஓதச் சொல்லி அதனைiயும் உறுதி செய்து கொள்வார்கள். இவ்வாறாக அல்லாஹ்வின் தூதர் அண்ணல் நபி முஹம்மது (ஸல்) அவர்களின் நேரடி கண்காணிப்பின் கீழ் அல்லாஹ்வால் இறக்கியருளப்பட்ட அருள்மறை குர்ஆனின் வசனங்கள் அருள்மறை குர்ஆனாக தொகுக்கப்பட்டது.
2. அருள்மறை குர்ஆனின் அத்தியாயங்களும் அத்தியாயத்தின் வசனங்களும், அல்லாஹ்வால் அண்ணல் நபி (ஸல்) அவர்களுக்கு அருளப்பட்டது.
அருள்மறை குர்ஆன் அண்ணல் நபி (ஸல்) அவர்களுக்கு இருபத்து இரண்டரை ஆண்டு காலங்களில் அவசியம் ஏற்படும் போதெல்லாம் சிறிது, சிறிதாக இறக்கியருளப்பட்டது. குர்ஆனிய வசனங்கள் அது இறக்கியருளப்பட்ட கால வரிசைப்படி தொகுக்கப்படவில்லை.
அருள்மறை கும்ஆனின் அத்தியாயங்களும் அந்த அத்தியாயங்களுக்கு உண்டான வசனங்களும் அல்லாஹ்வால் – வானவர் கோமான் – ஜிப்ரில் (அலை) அவர்கள் மூலம், அண்ணல் நபி (ஸல்) அவர்களுக்கு அறிவிக்கப்பட்டது. அல்லாஹ்வால் இறக்கியருளப்பட்ட குர்ஆனிய வசனங்களை எப்போதெல்லாம் நபி (ஸல்) அவர்கள் தனது தோழர்களுக்கு அறவிக்கிறார்களோ, அப்போதெல்லாம் அந்த குர்ஆனிய வசனம் எந்த அத்தியாயத்தைச் சார்ந்தது, அந்த அத்தியாயத்தின் எந்த வசனத்திற்கு அடுத்துள்ள வசனம் என்பதையெல்லாம் நபி (ஸல்) அவர்கள் தனது தோழர்களுக்கு அறிவிப்பார்கள்.
அண்ணல் நபி (ஸல்) அவர்கள்.வருடத்தின் ஒவ்வொரு ரமலான் மாதத்திலும், அந்த வருடம் முழுவதும் இறக்கியருளப்பட்ட வசனங்களை வானவர் கோமான் – ஜிப்ரில் (அலை) அவர்களிடம் – வசனங்களின் வரிசைக்கிரமங்களையும், சரியான வசனங்கள் தானா என்பதையும் உறுதிபடுத்திக் கொள்வார்கள். நபி (ஸல்) அவர்கள் உயிரோடிருந்த கடைசி ஆண்டில் அருள்மறை குர்ஆன் முழுவதும் சரியானதுதானா என்று இரண்டு முறை சரிபார்க்கப்பட்டது.
மேற்குறிப்பிட்ட முறைகள் மூலம் அண்ணல் நபி (ஸல்) உயிரோடிருந்த காலத்திலேயே – அருள்மறை குர்ஆனின் எழுத்து வடிவமும்- அருள்மறை குர்ஆனை மனனம் செய்த தோழர்களின் மனப்பாட வடிவமும் – நபிகளாரின் நேரடி கண்காணிப்பின் கீழ் சரிபார்க்கப்பட்டு – தொகுக்கவும் பட்டது என்பதற்கு மேற்கண்ட விளக்கங்கள் சான்றாக அமைந்துள்ளன.
3. அருள்மறை குர்ஆன் ஒரு பொதுவான வடிவில் பிரதியெடுக்கப்பட்டது.
அண்ணல் நபி (ஸல்) அவர்களின் அண்ணல் நபி (ஸல்) அவர்களின் காலத்தில் அருள்மறை குர்ஆனின் வசனங்கள் அதன் சரியான வரிசைக் கிரமப்படி இருந்தது. ஆனால் அருள்மறை குர்ஆனின் வசனங்கள் துண்டு துண்டான தோல்களிலும், தட்டையான கல் துண்டுகளிலும், மரப் பட்டைகளிலும், பேரீத்த மரத்தின் கிளைகளிலும், மற்றுமுள்ள மரக் கிளைகிலும் தனித்தனியாக எழுதப்பட்டிருந்தது. அண்ணல் நபி (ஸல்) அவர்களின் மரணத்திற்குப் பிறகு ஆட்சி பொறுப்பேற்றுக் கொண்ட முதல் கலீஃபா அபூபக்கர் (ரலி) அவர்கள், பல பொருட்களிலும் தனித்தனியாக எழுதப்பட்டு இருந்த அருள்மறை குர்ஆனின் வசனங்களை, ஒரே இடத்தில் இருக்கும்படியாக தாள் (ளூநநவள) போன்ற ஒரு பொதுவான பொருளில் – எழுதும்படி பணித்தார்கள். அவ்வாறு பல பொருட்களில் எழுதப்பட்டு இருந்த அருள்மறை குர்ஆனின் வசனங்களை தாள் போன்ற பொருளில் எழுதி – அருள்மறை குர்ஆனின் மொத்தத் தொகுப்புகள் எதுவும் – சிதறிப்போய் விடக்கூடாது என்பதற்காக அதனைக் கட்டியும் வைத்தார்கள்.
4. உஸ்மான் (ரலி) அவர்கள் ஒரே பொருளில் தொகுத்து எழுதப்பட்டிருந்த அருள்மறை குர்ஆனை பிரதி எடுக்கும் பணியை மேற்கொண்டார்கள்.
அருள்மறை குர்ஆனின் வசனங்களை அண்ணல் நபி (ஸல் ) அவர்கள் தம் நாவால் மொழியும் போதெல்லாம், அண்ணல் நபி (ஸல்) அவர்களின் தோழர்கள் அதனை தாமாகவே எழுதி வைத்துக் கொள்வார்கள். அவ்வாறு தோழர்களால் எழுதி வைக்கப்பட்ட வசனங்களில் நபி (ஸல் ) அவர்களால் சரிபார்க்கப்படாத வசனங்களும் உண்டு. அவ்வாறு நபி (ஸல்) அவர்களால் சரிபார்க்கப்படாத வசனங்களில் தவறுகள் இருக்க வாய்ப்புகள் இருக்கலாம் . தவிர அண்ணல் நபி (ஸல்) அவர்கள் சொன்ன அருள்மறை வசனங்கள் எல்லாவற்றையும் – எல்லா நபித்தோழர்களும் நேரடியாக கேட்டிருக்கக் கூடிய வாய்ப்புகள் குறைவு. ஆதலால் சில நபித் தோழர்கள் – சில வசனங்களை தவற விடக் கூடிய சந்தர்ப்பங்கள் ஏற்ப்பட்டிருக்கலாம் என்பன போன்ற விவாதங்கள், இஸ்லாமிய அரசின் மூன்றாவது கலீஃபா உஸ்மான் (ரலி) அவர்கள் காலத்தில் வாழ்ந்திருந்த இஸ்லாமியர்களிடையே உருவானது.
மேற்படி விவாதங்களுக்கு முற்றுப் புள்ளி வைக்க விரும்பிய உஸ்மான் (ரலி) அவர்கள், அண்ணல் நபி (ஸல்) அவர்களால் சரிபார்க்கப்பட்ட அருள்மறை குர்ஆனை, அப்போது உயிரோடிருந்த அண்ணல் நபி (ஸல்) அவர்களின் அன்பு மனைவியார் ஹஃப்ஸா (ரலி) அவர்களிடமிருந்து பெற்றுக் கொண்டார்கள். பெற்றுக் கொண்ட அருள்மறை குர்ஆனை – நபி (ஸல்) அவர்கள் குர்ஆனிய வசனங்கள் அருளப்பட்ட பொதெல்லாம் தம் தோழர்களுக்கு சொல்லும் பொழுது – அதனை எழுதி வைத்துக் கொண்ட தோழர்களில் நான்கு பேரை தேர்வு செய்து – தேர்வு செய்யப்பட்டவர்களில் ஸெய்த் பின் தாபித் (ரலி) அவர்களின் தலைமையில் அருள்மறை குர்ஆனை இன்னும் சிறந்த முறையில் பிரதியெடுக்கச் செய்தார்கள். அவ்வாறு பிரதியெடுக்கப்பட்ட அருள்மறை குர்ஆன் உஸ்மான் (ரலி) அவர்களால் இஸ்லாமிய மையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
தவிர அண்ணல் நபி (ஸல்) அவர்களின் காலத்தில் வாழ்ந்த நபித்தோழர்கள் தங்களிடம் சிலர் அருள்மறை குர்ஆனின் வசனங்களை வைத்திருந்தார்கள். அவ்வாறு வைத்திருந்த வசனங்களில் சில முற்றிலும் பூர்த்தியாகத வசனங்களும் – எழுத்துப்பிழையுள்ள வசனங்களும் இருக்கலாம். இதன் காரணத்தால் உஸ்மான் (ரலி) அவர்கள், நபி (ஸல்) அவர்களின் நேரடி கண்காணிப்பில் தொகுக்கப்படாத வசனங்கள் எதுவும் மக்களிடம் இருந்தால், அதனை அழித்துவிடும்படி மக்களுக்கு வேண்டுகோள் விடுத்தார்கள். அண்ணல் நபி (ஸல்) அவர்களின் நேரடி கண்காணிப்பில் தொகுக்கப்பட்ட அருள்மறை குர்ஆனின் பிரதிகள் இரண்டு இப்போதும் பல நாடுகளாக சிதறுண்டு போன உஸ்பெஸ்கிஸ்தான் தலைநகர் தாஷ்கண்டில் உள்ள அருங்காட்சியகத்திலும், துருக்கி நாட்டின் தலைநகர் இஸ்தான்புல்லில் உள்ள அருங்காட்சியகத்திலும் பொதுமக்களின் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது.
5. அரபி மொழியை சரியான முறையில் உச்சரிக்க வேண்டி அரபி மொழி அல்லாதவர்களுக்காக பிரித்தறியக் கூடிய குறியீடுகள் சேர்க்கப்பட்டது.
அண்ணல் நபி (ஸல்) அவர்களின் நேரடி கண்காணிப்பில் தொகுக்கப்பட்ட அருள்மறை குர்ஆனில் – அரபி மொழி அல்லாதவர்களும் – அரபி மொழியை சரியான முறையில் உச்சரிக்க வேண்டி – பிரித்தறியக் கூடிய குறியீடுகள் சேர்க்கப்படாமல் இருந்தது. இக்குறியீடுகளை – ஃபத்ஆ – தம்மா – கஸ்ரா என்று அரபி மொழியிலும், ஸபர் – ஸேர் – பேஷ் என்று உருது மொழியிலும் அழைப்பார்கள். அரபி மொழி அரபியர்களின் தாய்மொழி என்பதால் – அருள்மறை குர்ஆனின் வசனங்களை சரியான முறையில் உச்சரித்து ஓதுவதற்கு – அரபியர்களுக்கு மேற்படி குறியீடுகள் தேவையில்லை. ஆனால் அரபி மொழியைத் தாய் மொழியாக கொண்டிராதவர்களுக்கு – குர்ஆனின் வசனங்களை சரிவர ஓத வேண்டுமெனில் மேற்படி குறியீடுகள் அவசியம். மேற்படி குறியீடுகள் ஹிஜ்ரி 66-86 வரை (கி;. பி. 685 முதல் 705 வரை) ஆட்சி புரிந்த – உமையாத் – காலத்தின் ஐந்தாவது கலீஃபா – மாலிக் அர்-ரஹ்மான் என்பவரால் அல்-ஹஜ்ஜாஜ் என்பவர் ஈராக்கில் கவர்னராக இருந்த காலத்தில் அருள்மறை குர்ஆனில் இணைக்கப்பட்டது.
தற்போது நம்மிடையே இருக்கும் அருள்மறை பிரித்தறியக் கூடிய குறியீடுகளை கொண்டிருக்கிறது. ஆனால் அண்ணல் நபி (ஸல்) அவர்களின் நேரடி கண்காணிப்பில் தொகுக்கப்பட்ட அருள்மறையில் இவ்வாறான குறியீடுகள் இல்லை என்ற காரணத்தால் குர்ஆனில் வேறுபாடுகள் இருக்கின்றது என்று சிலர் வாதிடலாம். அவ்வாறு வாதிடுவோர்கள் ‘குர்ஆன்’ என்ற வார்த்தைக்கு ‘ஓதுதல்’ என்ற பொருள் உண்டு என்பதை அறியாhதவர்கள். எனவே குர்ஆனை அதன் வசனங்களின் உச்சரிப்பு மாறாமல் ஓதுவதுதான் இங்கு முக்கியமேத் தவிர, எழுத்துக்களோ அல்லது பிரித்தறியக் கூடிய குறியீடுகளோ அல்ல. அரபி வார்த்தைகளின் உச்சரிப்பு சரியானதாக இருக்கும் பட்சத்தில், அதன் அர்த்தங்களும் சரியானதாகத்தான் இருக்கும்.
6. அருள்மறை குர்ஆனை பாதுகாப்பதாக அல்லாஹ் வாக்குறுதியளிக்கிறான்:
அருள்மறை குர்ஆனின் பதினைந்தாவது அத்தியாயம் ஸுரத்துல் ஹிஜ்ரின் ஒன்பதாவது வசனத்தில் அல்லாஹ் அருள்மறை குர்ஆனை அவனே பாதுகாப்பதாக கூறுகின்றான்:
‘நிச்சயமாக நாம் தான் (நினைவூட்டும்) இவ்வேதத்தை (உம்மீது) இறக்கி வைத்தோம். நிச்ச்யமாக நாமே அதன் பாதுகாவலனாகவும் இருக்கிறோம்.‘ (அல்-குர்ஆன் 15 : 9)
மூல நூல்: டாக்டர். ஜாகிர் நாயக் அவர்களுடன் அனைத்து மதத்தவர்களும்
ஆங்கில மூலம்: டாக்டர் ஜாகிர் நாயக்
குர்ஆன் இந்த அளவு தெளிவாக பாதுகாக்கப்பட்டிருக்க தருமி தனது பதிவில் வழக்கமான திரிதல் வேலையில் ஈடுபட்டுள்ளார். அதையும் பார்ப்போம்.
//புயின் மேலும் தொடர்கிறார்: “ குரானின் வார்த்தைகள் மட்டுமல்ல; முகமதுவின் காலத்திற்கு முன்பே எழுதப்பட்ட சமயக் கருத்துக்கள் மீண்டும் தொடர்ந்து எழுதப்பட்டன”.//
குர்ஆனின் பிரதிகள் முகமது நபி காலத்திலேயே சரிபார்க்கப்பட்டு உஸ்மான் காலத்தில் அது பல பிரதிகள் எடுக்கப்பட்டு உலகின் பல நாடுகளுக்கும் அனுப்பப்பட்டன. அவற்றில் இரண்டு இன்றும் தாஷ்கண்டிலும, துருக்கியிலும் அருங்காட்சியகத்தில் பாதுகாக்கப்பட்டு வருகிறது. இப்பொழுது இவர்கள் எடுத்த குர்ஆனின் பிரதிகள் உஸ்மான் காலத்துக்கு பிறகு எழுதப்பட்டவையாக சில அறிவிப்புகள் கூறுகிறது. இன்னும் சில அறிவிப்புகள் முகமது நபி காலத்துக்கு முன்பு எழுதப்பட்டவை இந்த பிரதிகள் என்கின்றன. நமது இறைத் தூதர் முன்னால் சரிபார்க்கப்பட்டு பிரதி எடுக்கப்பட்ட குர்ஆனின் பிரதிகளே இன்று நம் கை வசம் உள்ளது. ஒலி வடிவமாக மனனம் செய்த பல ஹாஃபில்கள் அந்த குர்ஆனை சரிபார்த்துள்ளனர். இவ்வளவு தெளிவான ஆதாரங்கள் இருக்க ஒரு பழைய மசூதியில் கிடைத்த சுருள்கள் இஸ்லாமிய நம்பிக்கையை ஆட்டம் காண செய்யப் போகிறது என்று தருமி குதூகலப்படுவதை பார்க்க நமக்கோ அது ஹாஸயமாகப் படுகிறது.
இந்தப் பிரச்சாரகர்களின் பயனற்ற முயற்சிகளைக் கண்டு இவர்கள் மேல் பரிதாபம்தான் மேலிடுகிறது. பொய் சொன்னாலும் பொருந்தச் சொல்ல வேண்டுமல்லவா? இயேசு கிருஸ்துவின் காலத்திற்குப்பின், அதாவது கி.பி.யில் தோன்றியவரே முஹம்மது (ஸல்) அவர்கள். அவர்களின் 40 வயதிலிருந்து சுமார் 23 ஆண்டு காலக்கட்டத்தில் சிறு சிறு பகுதிகளாக இறக்கப் பட்டது குர்ஆன். இது சரித்திர உண்மை. ஆனால் மேற்கண்ட தகவலின் படி கி.மு. 700லிருந்து குகைக்குள் பூட்டி வைக்கப் பட்டிருந்த குரான்களை ஜெர்மனிய ஆராய்ச்சியாளர்கள் கண்டு பிடித்தார்களாம். கி.பி-யைச் சேர்ந்த குர்ஆன் எப்படி கி.மு-வுக்கு சென்றது? குகையை எப்படி பூட்டுவார்கள்? 1972-ல் இதைக் கண்டுபிடித்த ஜெர்மானிய ஆராய்ச்சியாளர்கள் 35 ஆண்டுகளாகியும் இன்னும் அவர்களது கண்டுபிடிப்புகளை வெளியிடாதது ஏன்? அவர்களின் கண்டுபிடிப்புகளுக்கும் இன்றைய குர்ஆனுக்குமிடையில் என்னென்ன வித்தியாசங்களை அவர்கள் கண்டு பிடித்தார்கள்? இந்தக் கேள்விகளுக்கெல்லாம் அந்த வலைப்பதிவில் விடையில்லை.
இஸ்லாத்துக்கு எதிராக ஒரு துரும்பு கிடைத்தாலும் ஊதிப் பெரிதாக்கி விடுபவர்கள் இன்று வரை வாய் திறக்காமல் இருப்பது அந்த சுருள்கள் தற்போதய குர்ஆனை இறை வேதம்தான் என்று உறுதிப்படுத்தி விடும் என்ற அச்சத்தின் காரணத்தினாலேயே ஆகும்.
http://onlinepj.com/buhari_thamizakam/athiyayam66/
இந்த குர்ஆன் முகமது நபியின் தோழர்களால் எவ்வாறு பாதுகாக்கப்பட்டது என்பதை இந்த லிங்கில் சென்றும் பார்த்துக் கொள்ளுங்கள்.
முஸ்லிம்களுக்கு மத்தியில் குழப்பத்தை உண்டு பண்ண அன்றைய யூதர்கள் பல முயற்சிகளை மேற் கொண்டனர். ஹதீதுகளிலும் குர்ஆனிலும் குழப்பத்தை உண்டு பண்ண முயற்ச்சித்தனர். முகமது நபி அவர்களால் சரிபார்க்கப்பட்டு மூலப் பிரதி நம் வசம் இருந்ததால் அந்த முயற்சி முறியடிக்கப்பட்டது. அப்படி யூதர்களால் எழுதப்பட்ட பிரதியாகக் கூட சானாவில் கண்டெடுக்கப்பட்ட சுருள்கள் இருக்கலாம். இறைவனே அறிந்தவன். அது அந்த ஆராய்ச்சியாளர்களுக்கும் தெரிந்ததால்தான் இன்று வரை அந்த அராபிய சுருள்களை வெளி உலகுக்கு அறிவிக்காமல் தயக்கம் காட்டுகிறார்கள். அதைத்தான் நமது தருமியும் பதிவாக இட்டு குதூகலப் பட்டுக் கொள்கிறார்.
Subscribe to:
Post Comments (Atom)
22 comments:
அஸ்ஸாலாமு அலைக்கும் (வரஹ் )
குர் ஆனில் தவறு இருந்திருந்தால் அப்போதே நிறைய பேர் அதை சுட்டிக்காட்டி இருந்திருப்பார்கள் . ஆனால் இது வரை அதுப்போல எந்த செய்தியும் கிடைக்க வில்லை என்பதிலிருந்து .குர் ஆன் தொகுப்பப்பட்டதில் எந்த சந்தேகமும் இல்லை :-)
//பல நாடுகளாக சிதறுண்டு போன ரஷ்யாவின் தலைநகர் தாஷ்கண்டில்// கஜகஸ்தான் தலைதகர் தாஷ்கண்டில் என்று இருக்க வேண்டும்.
அஸ்ஸலாமு அலைக்கும் சகோ..
சரியான நேரத்தில் சரியான விளக்கங்களைக்கொடுத்து,முஸ்லிம்கள் மத்தியிலும்,பிற மதத்தார் மத்தியில் ஏற்படவிருந்த குழப்பங்களை போக்கியமைக்கு நன்றி.. ஜஸாக்கல்லாஹ்..
குழப்பம் கொலையைவிடக் கொடியது.. அதை செய்யும் இது போன்ற தருமிக்கள் இதனைகொண்டு எதையும் சாதித்துவிடுவதில்லை... முட்ட்டி முட்டி மண்டை வீங்கியதுதான் மிச்சம்..
தருமிசார்...தேச்சுவிட்டுக்கோங்க..வயசான காலத்துல..ஏன் :)
அன்புடன்
ரஜின்
சலாம் சகோ ஜெய்லானி!
//அஸ்ஸாலாமு அலைக்கும் (வரஹ் )
குர் ஆனில் தவறு இருந்திருந்தால் அப்போதே நிறைய பேர் அதை சுட்டிக்காட்டி இருந்திருப்பார்கள் . ஆனால் இது வரை அதுப்போல எந்த செய்தியும் கிடைக்க வில்லை என்பதிலிருந்து .குர் ஆன் தொகுப்பப்பட்டதில் எந்த சந்தேகமும் இல்லை :-) //
அது மட்டுமல்லாது குர்ஆனை மனனமிட்ட நபித் தோழர்கள் நூற்றுக்கு மேற்பட்டவர்கள் நபிகள் உயிரோடு இருக்கும் போதே வாழ்ந்திருக்கிறார்கள். மனதில் மனமிட்டது இறப்பு ஞாபக மறதி இந்த இரண்டைத் தவிர வேறு எந்த இயற்கை பேரிடர்களாலும் அழிய வாய்ப்பில்லை. அந்த தோழர்களில் எவருமே உஸ்மான் அவர்கள் தொகுத்த குர்ஆனில் சந்தேகம் கொள்ளவில்லை. ஆட்சேபணையும் தெரிவிக்கவில்லை. இதையும் நாம் இங்கு கவனத்தில் கொள்ள வேண்டும்.
சகோ ராசின்!
//கஜகஸ்தான் தலைதகர் தாஷ்கண்டில் என்று இருக்க வேண்டும்.//
சுட்டிக் காட்டியமைக்கு நன்றி. மாற்றி விட்டேன்.
சலாம் சகோ ரஜின்!
//சரியான நேரத்தில் சரியான விளக்கங்களைக்கொடுத்து,முஸ்லிம்கள் மத்தியிலும்,பிற மதத்தார் மத்தியில் ஏற்படவிருந்த குழப்பங்களை போக்கியமைக்கு நன்றி.. ஜஸாக்கல்லாஹ்..//
சில அறிவிப்புகளின் படி இந்த அரபு சுருள்கள் முகமது நபி காலத்துக்கு முந்தியனவாக உள்ளது என்ற அறிவிப்பும் வருகிறது. அப்படி பார்த்தால் தோராவோ பைபிளோ அரபி மொழியில் எழுதப்பட்டு அந்த பள்ளியில் பாதுகாக்கப் பட்டிருக்கலாம். அந்த சுருள்களில் உள்ள வாசகங்கள் தற்போதய கிறித்தவ நம்பிக்கைகளின் ஆதாரங்களையே அசைக்கும் விதமாகவும் இருக்கலாம். எனவே தான் இதுவரை அந்த சுருள்களின் உண்மை நிலையை உலகுக்கு தெரிவிக்காமல் மறைத்து வருகிறது மேற்குலகு.
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!
ஹா ஹா ஹா, என்னது கசக்ஸ்தானா ? எங்கிருந்து வந்திருக்கீங்க அறிவுக்கொழுந்துகளா ?
அஸ்ஸலாமு அலைக்கும்
சகோதரர் சுவனப்பிரியன்,
அந்த புராதனகால விஷயத்தை தூசி தட்டி மீண்டும் போட்ட பதிவை பார்த்துவிட்டு அவருக்கு, அந்த பிரச்சினையில் ஏற்கனவே பதில் அளிக்கப்பட இரண்டு சுட்டிகளோடு கமெண்ட் போட்டேன். ஆனால் இப்போது வரை காணவில்லை. சில நாட்கள் கழித்து வெளியிட எண்ணம் போலும்.
Was there something wrong with early Qur'anic fragments/specimens found in the great mosque of Sanaa in Yemen?
http://www.answering-christianity.com/karim/mosque_of_sanaa.htm
இந்த 1972 ஆம் ஆண்டு நடந்த இந்த சம்பவத்துக்கு அப்புறம்,
மிக அண்மையில் பிபிசி தளமே 2006 இல் அறிவித்து விட்டது, எது உண்மையான புராதன குர்ஆன் என்று.
அதாவது தாஷ்கண்ட் பிரதிதான் பழமையானது என்று.
அந்த சுட்டி இதோ.
http://news.bbc.co.uk/2/hi/asia-pacific/4581684.stm
In an obscure corner of the Uzbek capital, Tashkent, lies one of Islam's most sacred relics - the world's oldest Koran.
கோமாவில் இருந்து வெளிவந்தாரா? இல்லை, அப்பட்டமாக பொய் சொல்கிறார். இவர்போன்ற பொய்யர்களை என்ன செய்வது?
"பொய் சொல்லி வாழ்ந்தவர் இல்லை!"
http://payanikkumpaathai.blogspot.com/2012/05/blog-post.html
தாஷ்கந்து (طاشقند) என்பது உஸ்பெகிஸ்தான் நாட்டின் தலைநகரம். இதோ விக்கிப்பீடியாத் தொடுப்பு:
http://tawp.in/r/134b
- வள்ளுவன்
திரு வள்ளுவன்!
//தாஷ்கந்து (طاشقند) என்பது உஸ்பெகிஸ்தான் நாட்டின் தலைநகரம். இதோ விக்கிப்பீடியாத் தொடுப்பு://
இவ்வளவு குழப்பம் ஏற்படுவதற்கு பதில் ரஷ்யா ஒன்றாகவே இருந்திருக்கலாம். :-) நீங்கள் கொடுத்த சுட்டியின் படி திரும்பவும் மாற்றி விட்டேன். :-)
அலைக்கும் சலாம் யுஎப்ஓ!
//அந்த புராதனகால விஷயத்தை தூசி தட்டி மீண்டும் போட்ட பதிவை பார்த்துவிட்டு அவருக்கு, அந்த பிரச்சினையில் ஏற்கனவே பதில் அளிக்கப்பட இரண்டு சுட்டிகளோடு கமெண்ட் போட்டேன். ஆனால் இப்போது வரை காணவில்லை. சில நாட்கள் கழித்து வெளியிட எண்ணம் போலும்.//
சிலர் தூங்குவது போல் நடிப்பார்கள். அப்படியாவது ஒரு சில முஸ்லிம்களை நாத்திகர்களாக மாற்றி விட மாட்டோமா என்ற நப்பாசைதான் தருமி அவர்களுக்கு. பாவம். மீண்டும் தோல்வி தருமிக்கு!
அன்புடன் சுவனப்பிரியன்,
இஸ்லாத்தின் மீது காழ்ப்புணர்வு கொண்டோரைப் பற்றி நீங்கள் கணக்கெடுக்க வேண்டாம். துருக்கியிலும் உஸ்பெகிஸ்தானிலும் உள்ளவை மாத்திரமன்றி இன்னும் ஏராளமான கையெழுத்துப் பிரதிகள் இருக்கின்றன. இறைத்தூதர் முஹம்மது நபியவர்களின் மருமகன் அலீ (ரலி) அவர்களும் இன்னொரு நபித்தோழரும் சேரந்து எழுதிய திருக்குர்ஆனின் கையெழுத்துப் பிரதியொன்றும் சன்ஆவின் பெரிய பள்ளிவாசலில் இருக்கின்றது. சவூதியைச் சேர்ந்த ஒருவரிடம் ஆயிரத்து முந்நூறு ஆண்டுகள் பழைய கையெழுத்துப் பிரதியொன்று உள்ளதாகக் கேள்விப்பட்டேன். இன்னுமொருவரிடம் எழுநூறாண்டுகள் பழைய பிரதியொன்று உள்ளதாம். கடந்த ஒன்பது ஆண்டுகளாக என்னிடமும் திருக்குர்ஆனின் முந்நூறு ஆண்டுகள் பழைய கையெழுத்துப் பிரதியொன்று உள்ளது.
- வள்ளுவன்
அன்புடன் சுவனப்பிரியன், கி.மு. 700 ஆம் ஆண்டளவில் எழுதப்பட்ட கையெழுத்துப் பிரதி என்பது திருக்குர்ஆனினுடையதென்று தருமி தவறாக விளங்கியுள்ளார். அல்லது வேண்டுமென்றே அப்படிக் கூறுகிறார். அது சாக்கடல் ஏட்டுச் சுருள்கள் (Dead Sea Scrolls) என அழைக்கப்படும் தௌராத்தின் பிரதி. ஜோர்தான் நாட்டின் குகையொன்றிலிருந்து பெறப்பட்டது. அதனை வாச்சித்தவர்கள் அதைப் பற்றித் தெளிவாக எழுதியுள்ளனர். நானும் ஐந்தாறு ஆண்டுகளுக்கு முன்னர் அது பற்றிய நூலொன்றை வாங்கினேன். அதன் உள்ளடக்கம் குர்ஆனுடைய கருத்துக்களுடன் ஒத்துப்போவதால் அதனை முழுமையாக வெளியிடாதுள்ளனர். அத்துடன் அதனைப் பலரும் பார்வையிட அனுமதிக்கப்படுவதில்லை. - வள்ளுவன்
அனானி!
//ஹா ஹா ஹா, என்னது கசக்ஸ்தானா ? எங்கிருந்து வந்திருக்கீங்க அறிவுக்கொழுந்துகளா ? //
பல நாடுகளாக துண்டு துண்டுகளாக சிதறிய ஒரு நாட்டின் தலைநகரை தவறாக குறிப்பிட்டு அதை திருத்திக் கொள்வதில் என்ன தவறு? இது ஒன்றுதான் உங்களுக்கு அறிவின் அளவு கோலா! ஹா...ஹா...:-)
இவர்களின் அற்ப சந்தோசத்திற்காக இஸ்லாத்திற்கு எதிராக இவர்களால் கட்டவிழ்த்து விடபடுகின்ர கட்டுகதைகளால் இஸ்லாத்தினை பற்றிய சரியான புரிதல் இல்லாத முஸ்லிம்களை மட்டுமல்ல இஸ்லாம் அல்லாத பிற சகோதரர்களையும் சேர்த்து இஸ்லாம் பற்றிய தெளிவான சிந்தனைகளை தேடி கற்கின்ற ஆவலை ஏற்படுத்தி கொடுக்கின்றனர் . உதரணத்திற்கு சகோதரர் தருமியின் பதிவிற்கு பின்னே திருக் குர்ஆன் தொகுக்கப்பட்ட வரலாற்றினை எனக்கு அறிந்துகொள்ள கிடைத்தது சகோதர் தருமி அவர்களுக்கு மிக்க நன்றிகள்
//
பல நாடுகளாக துண்டு துண்டுகளாக சிதறிய ஒரு நாட்டின் தலைநகரை தவறாக குறிப்பிட்டு அதை திருத்திக் கொள்வதில் என்ன தவறு? இது ஒன்றுதான் உங்களுக்கு அறிவின் அளவு கோலா! ஹா...ஹா...:-)
//
உங்களுக்காகத்தான் எங்க அய்யன் சொன்னாரு 'எப்பொருள் எத்தன்மைத் தாயினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பது அறிவு'.
ஒரு பின்னூட்டம் அனுப்பினேனே .. என்ன ஆச்சு?
http://suvanathendral.com/portal/?p=3114 என்றொரு பதிவில்
ஆங்கிலத்தில் டாக்டர் ஜாகிர் நாயக் எழுதி, அபூ இஸாரா தமிழாக்கம் செய்ததை அப்படியே எடுத்துப் போடும்போது - அதுவும் முதல் பத்தியில் இரண்டு முறை ஒரே விஷயத்தைச் சொல்லியுள்ளதைப் - போட்டிருக்கிறீர்கள்; நல்லது. நானும் நீங்களே இப்படி உடனே எழுதி விட்டீர்களே என்று ஆச்சரியப்பட்டேன். கடைசி பத்தி மட்டும் உங்கள் வரிகள் போலும்.
முதல் பத்தியில் நீங்கள் டபுளாகச் சொன்ன அந்தப் ‘பாடங்களை’ பத்து வயதுப் பிள்ளைக்கு சொன்னால் நன்றாக கேட்டுக்கொள்ளும். மனசுக்குள்ளும் பூட்டி வைத்துக் கொள்ளும். பின் வளர்ந்த பின்னும் அதையே தெய்வ வாக்காகக் கொள்ளும். ஆகவே அது மதராசாவுக்கு சரி; எல்லோருக்குமில்லை. சின்ன பிள்ளைக்கு சொல்வது போல் memorizing, editing, re-editing, writing, correcting … இப்படியே சின்ன பிள்ளை பாடமாகப் போகிறது. No way for matured intellectuals. கடவுளுக்கு இதை விட நல்ல வழி ஏதும் தெரியாமல் போச்சே!
//மேற்கண்ட தகவலின் படி கி.மு. 700லிருந்து குகைக்குள் பூட்டி வைக்கப் பட்டிருந்த குரான்களை ஜெர்மனிய ஆராய்ச்சியாளர்கள் கண்டு பிடித்தார்களாம்.//
மறுபடி சரியாக வாசியுங்கள்.
//இன்னும் அவர்களது கண்டுபிடிப்புகளை வெளியிடாதது ஏன்? //
மறுபடி சரியாக வாசியுங்கள்.
//என்னென்ன வித்தியாசங்களை அவர்கள் கண்டு பிடித்தார்கள்?//
மறுபடி சரியாக வாசியுங்கள்.
//அப்படி யூதர்களால் எழுதப்பட்ட பிரதியாகக் கூட சானாவில் கண்டெடுக்கப்பட்ட சுருள்கள் இருக்கலாம்.//
பின்னீட்டீங்க ... உங்கள் ஆய்வா இது?
//அந்த ஆராய்ச்சியாளர்களுக்கும் தெரிந்ததால்தான் இன்று வரை அந்த அராபிய சுருள்களை வெளி உலகுக்கு அறிவிக்காமல் தயக்கம் காட்டுகிறார்கள்.//
பத்வா தான் ...! ஆக விஷயம் இன்னும் வெளிவரவில்லை என்பது உங்களுக்கும் தெரிகிறது.
//இஸ்லாத்துக்கு எதிராக ஒரு துரும்பு கிடைத்தாலும் //
அப்டியா?
பல வசனங்கள் 691-ல் கட்டப்பட்ட ஜெருசலேம் Dome of Rock of Jerusalem மேல் பொறிக்கப்பட்டுள்ளன. அவை இன்றுள்ள வசனங்களிலிருந்து வெகுவாக மாறுபட்டிருக்கின்றன. இது பற்றி தங்கள் கருத்து ..?
தருமி சார்!
//மறுபடி சரியாக வாசியுங்கள்.//
//பல வசனங்கள் 691-ல் கட்டப்பட்ட ஜெருசலேம் Dome of Rock of Jerusalem மேல் பொறிக்கப்பட்டுள்ளன. அவை இன்றுள்ள வசனங்களிலிருந்து வெகுவாக மாறுபட்டிருக்கின்றன. இது பற்றி தங்கள் கருத்து ..?//
எத்தனை முறை வாசித்தாலும் பல பள்ளிகளில் வித்தியாசமாக பொறிக்கப்பட்டுள்ளது உங்களுக்கு கிடைத்தாலும் அதை முஸ்லிம் உலகம் கேட்கவில்லையே! முகமது நபி கண் பார்வையில் மற்றவர்களால் எழுதப்பட்டு அவரது தோழர்கள் மனதில் பாதுகாத்த குர்ஆன் பிரதிகள் பிரதி எடுக்கப்பட்டு உஸ்மான் அவர்கள் காலத்திலேயே பல நாடுகளுக்கும் அனுப்பப்பட்டது. அதை தவிர்த்து நீங்கள் எந்த ஆதாரத்தை கொண்டு வந்தாலும் அது முஸ்லிம் உலகால் தள்ளுபடி செய்யப்படும்.
அல்லது நீங்கள் காட்டும் பிரதி முகமது நபியால் சரி பார்க்கப்பட்டது என்பதற்கான ஆதாரத்தை கொடுங்கள்.
http://suvanathendral.com/portal/?p=3114 என்றொரு பதிவில் ஆங்கிலத்தில் டாக்டர் ஜாகிர் நாயக் எழுதி, அபூ இஸாரா தமிழாக்கம் செய்ததை அப்படியே எடுத்துப் போடும்போது - அதுவும் முதல் பத்தியில் இரண்டு முறை ஒரே விஷயத்தைச் சொல்லியுள்ளதைப் - போட்டிருக்கிறீர்கள்; நல்லது. நானும் நீங்களே இப்படி உடனே எழுதி விட்டீர்களே என்று ஆச்சரியப்பட்டேன். கடைசி பத்தி மட்டும் உங்கள் வரிகள் போலும்.
முதல் பத்தியில் நீங்கள் டபுளாகச் சொன்ன அந்தப் ‘பாடங்களை’ பத்து வயதுப் பிள்ளைக்கு சொன்னால் நன்றாக கேட்டுக்கொள்ளும். மனசுக்குள்ளும் பூட்டி வைத்துக் கொள்ளும். பின் வளர்ந்த பின்னும் அதையே தெய்வ வாக்காகக் கொள்ளும். ஆகவே அது மதராசாவுக்கு சரி; எல்லோருக்குமில்லை. சின்ன பிள்ளைக்கு சொல்வது போல் memorizing, editing, re-editing, writing, correcting … இப்படியே சின்ன பிள்ளை பாடமாகப் போகிறது. No way for matured intellectuals. கடவுளுக்கு இதை விட நல்ல வழி ஏதும் தெரியாமல் போச்சே!
//மேற்கண்ட தகவலின் படி கி.மு. 700லிருந்து குகைக்குள் பூட்டி வைக்கப் பட்டிருந்த குரான்களை ஜெர்மனிய ஆராய்ச்சியாளர்கள் கண்டு பிடித்தார்களாம்.//
மறுபடி சரியாக வாசியுங்கள்.
//இன்னும் அவர்களது கண்டுபிடிப்புகளை வெளியிடாதது ஏன்? //
மறுபடி சரியாக வாசியுங்கள்.
//என்னென்ன வித்தியாசங்களை அவர்கள் கண்டு பிடித்தார்கள்?//
மறுபடி சரியாக வாசியுங்கள்.
//அப்படி யூதர்களால் எழுதப்பட்ட பிரதியாகக் கூட சானாவில் கண்டெடுக்கப்பட்ட சுருள்கள் இருக்கலாம்.//
பின்னீட்டீங்க ... உங்கள் ஆய்வா இது?
//அந்த ஆராய்ச்சியாளர்களுக்கும் தெரிந்ததால்தான் இன்று வரை அந்த அராபிய சுருள்களை வெளி உலகுக்கு அறிவிக்காமல் தயக்கம் காட்டுகிறார்கள்.//
பத்வா தான் ...! ஆக விஷயம் இன்னும் வெளிவரவில்லை என்பது உங்களுக்கும் தெரிகிறது.
//இஸ்லாத்துக்கு எதிராக ஒரு துரும்பு கிடைத்தாலும் //
அப்டியா?
//பல வசனங்கள் 691-ல் கட்டப்பட்ட ஜெருசலேம் Dome of Rock of Jerusalem மேல் பொறிக்கப்பட்டுள்ளன. அவை இன்றுள்ள வசனங்களிலிருந்து வெகுவாக மாறுபட்டிருக்கின்றன. //
இது பற்றி தங்கள் கருத்து ..?
திரு தருமி!
//கடவுளுக்கு இதை விட நல்ல வழி ஏதும் தெரியாமல் போச்சே!//
ஏதாவது ஒரு வழியில்தான் இறை வேதம் அருளப்பட முடியும். எந்த முறையில் அருளினாலும் 'ஏன் அப்படி கொடுக்கவில்லை?' என்ற கேள்வியை இறை மறுப்பாளர் கேட்பார்கள் என்று குர்ஆனிலேயே ஒரு வசனம் வருகிறது. எனவே நீங்கள் இப்படி எல்லாம் பின்னாளில் கேட்பீர்கள் என்பதனால்தான் முன்பே இறைவன் வசனங்களைக் கொடுத்து விட்டான்.
'அவரே (ஜிப்ரீலே) இறைவனின் விருப்பப்படி இந்த குர்ஆனை முஹம்மதே! உமது உள்ளத்தில் இறக்கினார்'
-குர்ஆன் 2:97
நீங்கள் சானாவிலிருந்து ஜெருசலம் வரைக்கும் போனாலும் எங்களுக்கு கவலை இல்லை. குர்ஆனை இறைவன் முகமது நபியின் உள்ளத்தில் பாதுகாத்ததாக சொல்கிறான்.
முகமது நபியின் தோழர்களில் நூற்றுக்கு மேற்பட்டவர்களின் உள்ளங்களில் இந்த குரஆன் பாதுகாக்கப்பட்டது. இன்று உலகம் முழுக்க கோடிக்கணக்கான முஸ்லிம்களின் உள்ளங்களில் இந்த குர்ஆன் பாதுகாக்கப்பட்டு வருகிறது. எனவே உலக முடிவு நாள் வரையில் இந்த குர்ஆனை இந்த பூமியிலிருந்து எந்த ஆட்சியாளனாலும் அழிக்க முடியாது என்பது தெளிவு.
//நீங்கள் சானாவிலிருந்து ஜெருசலம் வரைக்கும் போனாலும் எங்களுக்கு கவலை இல்லை. குர்ஆனை இறைவன் முகமது நபியின் உள்ளத்தில் பாதுகாத்ததாக சொல்கிறான்.//
நல்ல மதராசா பையன்! உங்கள் முயலுக்கு மூன்று கால்தான்.
வாழ்க .. ஆமீன்!
Post a Comment