Followers

Thursday, May 24, 2012

ஜனநாயகம் என்ற பெயரில் நடக்கும் கேலிக் கூத்து!

நமது நாட்டு ஜனநாயக முறையை நாம் எப்போதும் புகழ்ந்த வண்ணமே உள்ளோம். நமது அண்டை நாடுகளில் ராணுவ ஆட்சியும் சர்வாதிகார ஆட்சிகளும் நடந்து வரும் போது 100 கோடிக்கும் மேல் மக்கள் தொகையைக் கொண்ட நம் நாடு இன்று வரை மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு வருவதை நானும் நீங்களும் பெருமிதத்தோடே சொல்லிக் கொள்கிறோம். ஆனால் நம்நாட்டு தற்போதய தேர்தல் முறை சரியானதுதானா! இதில் உள்ள குறைகளை எவ்வாறு நீக்குவது என்பதை அலசுவதே இந்தப் பதிவு.

வழமையாக நமது தேர்தலில் போட்டியிடும் சட்டமன்ற வேட்பாளர் ஒரு தொகுதியில் 100000 லட்சம் வாக்கு பெறுவதாக வைத்துக் கொள்வோம். இவரை எதிர்த்து போட்டியிட்ட எதிரணி வேட்பாளர் 99999 வாக்குகளே பெறுகிறார். நமது நாட்டு சட்டத்தின்படி 100000 வாக்குகள் பெற்றவர் வெற்றி பெற்று சட்டமன்றத்துக்கும் சென்று விடுகிறார். மற்றொரு வேட்பாளருக்கு 99999 வாக்குகளை கிடைத்ததால் அவர் தோல்வியுறுகிறார். 99999 பேர் போட்ட வாக்குகளுக்கு எந்த மதிப்பும் இல்லாமல் அவர்களின் எண்ணங்கள் சட்டமன்றத்தில் ஒலிக்காமலும் நீர்த்து விடுகிறது. இது ஜனநாயகமா? 99999 பேரின் எதிர் வாக்குகளைப் பெற்றவர் எவ்வாறு மக்கள் பிரதிநியாக சட்ட மன்றம் செல்ல முடியும்?

அதேபோல் ஒரு மாநிலத்தில் 100 தொகுதிகள் உள்ளதாக வைத்துக் கொள்வோம். ஒவ்வொரு தொகுதியிலும் ஆயிரம் வாக்காளர் என்றும் வைத்துக் கொள்வோம். இந்த அனைத்து தொகுதிகளிலும் அதிமுக 501 ஓட்டுகளும் திமுக 499 ஓட்டுகளும் பெறுவதாகக் கொள்வோம். இப்போது நூறு தொகுதிகளிலும் அதிமுக வெற்றி பெற்றதாக அறிவிக்கப்படுகிறது. திமுக ஒரு தொகுதியில் கூட வெற்றி பெறவில்லை என்றும் அறிவிக்கப்படுகிறது. இது நாம் பின்பற்றும் பிரிட்டனின் ஜனநாயக முறை. அதாவது அதிமுகவுக்கு 100 எம்எல்ஏக்கள் கிடைக்க திமுகவுக்கு ஒரு எம்எலஏ கூட கிடைக்கவில்லை. இரண்டு கட்சிகளும் பெற்ற மக்களின் வாக்குகளைக் கூட்டிப் பார்த்தால் மொத்தமாக 200 வாக்குகள்தான் வித்தியாசம் வருகிறது.

அதிமுக நூறு தொகுதிகளில் வாங்கிய ஓட்டுக்கள் 50100. திமுக நூறு தொகுதிகளில் வாங்கிய ஓட்டுக்கள் 499900. மொத்தமாக 200 வாக்குகளை மட்டுமே பெற்ற அதிமுக வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டு ஆட்சியும் அமைத்து விடுகிறது. இது நியாயமான தேர்தலாகுமா? மக்களின் எண்ண ஓட்டத்தை இந்த முடிவு பிரதிபலிக்கிறதா? கண்டிப்பாக இல்லை.


“கவலைப் படாதீங்க! உங்களுக்கு சிரமம் கொடுக்கப்படாதுன்னுதான் நாங்களே உங்களைத் தேடி வந்துட்டோம். வாங்க வந்து ஓட்டை போடுங்க!”

இந்த தேர்தல் முறையில் உள்ள குளறுபடிகள் தற்போது நமக்கு விளங்கியிருக்கும். சரி இதற்கு மாற்று ஏற்பாடு உண்டா? அதைப் பற்றியும் சிறிது பார்ப்போம்.

ஜெர்மன் ஜனநாயக முறை:

இந்த தேர்தல் முறையில் ஆட்கள் போட்டியிட மாட்டார்கள். சங்கம் அல்லது கட்சி போன்றவைதான் போட்டியிட முடியும். ஒவ்வொரு ஆயிரம் ஓட்டுக்கும் ஒரு சட்டமன்ற உறுப்பினர் அந்த கட்சிக்கு என்று நிர்ணயிக்கப்படும்.

நூறு தொகுதியில் அதிமுக மேலே சொன்னது போல் 50100 வாக்குகள் பெற்றால் ஆயிரத்துக்கு ஒரு உறுப்பினர் என்ற அடிப்படையில் அதிமுகவுக்கு ஐம்பது உறுப்பினர்கள் அரசால் ஒதுக்கப்படும். உறுப்பினர்களை அந்தக் கட்சியே தேர்ந்தெடுத்துக் கொள்ளும். அதே போல் 49900 வாக்குகள் பெற்ற திமுக 49 சட்டமன்ற உறுப்பினர்களைப் பெற்றுக் கொள்ளும். திமுகவும் தனது வேட்பாளர்களை தேர்ந்தெடுத்துக் கொள்ளும். இதனால் வாக்களித்த மக்களுக்கு உரிய பிரதிநிதித்துவம் கிடைக்கிறது. இந்த முறையினால் எம்எல்ஏக்களையும் எம்பிக்களையும் விலைக்கு வாங்கும் குதிரை பேரமும் கட்டுக்குள் வரும். அடுத்து வானளாவிய அதிகாரம் தனக்கு இருப்பதாக நினைப்பவர்களுக்கும் இந்த முறை ஆப்பு வைக்கும்.

அதேபோல் சிறு சிறு லெட்டர்பேட் கட்சிகளெல்லாம் எங்களுக்கு இவ்வளவு வாக்கு வங்கி இருக்கிறது என்று மிரட்டி அதிக எம்பிக்களையும் எம்எல்ஏக்களையும் பெறும் போக்கு மாறும். ஒவ்வொரு தேர்தலிலும் அந்த கட்சி எத்தனை ஆயிரம் ஓட்டுக்கள் பெற்றுள்ளது என்பது தெளிவாகத் தெரிந்து விடும். மக்களுக்கு நல்லது செய்யவில்லை என்றால் அடுத்த தேர்தலில் மக்கள் நம்மை வீட்டுக்கு அனுப்பி விடுவார்கள் என்ற உண்மையான பயம் இருக்கும். இதற்கு முன் நடந்த இடைத் தேர்தலில் எந்த அளவு ஓட்டுக்கள் விலை பேசப்பட்டன என்பதை பார்த்தோம். தற்போது புதுக்கோட்டையிலும் இந்த நாடகம் அரங்கேறப் போகிறது.


நேற்று மதுரை ஆட்சியர் திரு சகாயம் எந்த காரணமும் சொல்லப்படாமல் வேறு இடத்துக்கு மாற்றப்பட்டுள்ளார். கோஆப்டெக்ஸ் நிறுவனத்துக்கு மாற்றப்பட்டுள்ளாராம். கண்டிப்பானவர். ஊழல் செய்யாதவர். கிரானைட் குவாரிகளில் சோதனையிட்டு பல வரி ஏய்ப்புகளையும் கண்டு பிடித்து அரசுக்கு லாபம் பார்த்தவர். விடுவார்களா நம் அரசியல்வாதிகள். எங்கு கவனிக்க வேண்டுமோ அங்கு செம்மையாக கவனித்தவுடன் நேர்மையான அதிகாரி இன்று பிரச்னையில்லாத கோஆப்டெக்ஸூக்கு மாற்றப்பட்டுள்ளார். இது நான் நம் நாட்டு ஜனநாயகம். எந்த கேள்வியும் இல்லை. ஊழல் செய்ய மறுத்ததால் இன்று தடாலடியாக மாற்றப்பட்டுள்ளார். கட்டுக்கடங்காமல் அதிக எண்ணிக்கையை அரசு பெற்றதால்தான் இத்தகைய மோசடிகளை எவரும் தட்டிக் கேட்பதில்லை. விகிதாச்சார அடிப்படையில் கணக்கு பண்ணி பார்த்தோமானால் ஜெயலலிதாவுக்கு 60 அல்லது எழுபது எம்எல்ஏக்கள் கிடைப்பதே சிரமம். எல்லா அரசியல் கட்சிகளின் நிலையும் இதே லெவலில்தான் இருக்கும்.

அடுத்து பல மொழிகள் பல மதங்களைக் கொண்ட தமிழகம் இலங்கை போன்ற இடங்களுக்கும் ஜெர்மனைப் போன்ற ஜனநாயக தேர்தலே சிறப்பானதாக இருக்க முடியும். உதாரணத்துக்கு இலங்கையை எடுத்துக் கொள்வோம். தனி ஈழம் கிடைக்கும் என்பது ஒருபுறம் இருக்கட்டும். அப்படி கிடைத்து அந்த மக்கள் சுபிட்சமாக வாழ நாமும் வாழ்த்துவோம். அது அல்லாமல் சிங்களமக்கள், தமிழ் மக்கள் இந்த இரு சாராரும் தங்களின் எண்ணிக்கைக்கு தக்கவாறு பிரதிநிதிகள் அமைத்துக் கொள்ள ஜெர்மன் தேர்தல் முறை மிக உதவிகரமாக இருக்கும். இனத்தாலும் மொழியாலும் ஒன்றுபட்ட தமிழ் முஸ்லிம்கள் கலாசாரத்தால் முற்றிலுமாக இந்து சகோதரர்களிடமிருந்து வேறுபடுகிறார்கள். இவர்களும் தங்களின் கட்சிகள் பெறும் வாக்குகளின் அடிப்படையில் பிரதிநிதிகளைப் பெற்றுக் கொள்வார்கள். இந்த முறையில் எவரையும் குறை சொல்லவும் வாய்ப்பு ஏற்படாது. ஒட்டு மொத்த இலங்கை தமிழர்களும் பாதிக்கு மேல் தனி ஈழத்தை ஆதரிக்காதபோது அதிலும் பிரச்னைகள் வெடிக்க வாய்ப்பிருக்கிறது. ஒட்டு மொத்த இலங்கை தமிழ் மக்களும் தனி ஈழத்துக்கு ஆதரவு தெரிவிக்கும் வரை இந்த ஜெர்மன் ஜனநாயக முறையை பின் பற்றினால் தற்கால பிரச்னைகள் ஓய வாய்ப்பிருக்கிறது.

எதையோ சொல்ல வந்து பதிவின் சாரம் எங்கெங்கோ சென்று விட்டது. எனது புரிதலில் இப்பொழுது உள்ள தேர்தல் முறையை நீக்கி விட்டு ஜெர்மன் மாடலில் விகிதாச்சார அடிப்படையில் ஆட்சி அமைந்தால் தற்போதய குளறுபடிகள் குறைய வாய்ப்பிருப்பதாகவே எண்ணுகிறேன். இதைப்பற்றி நமது அரசியல்வாதிகள் என்ன சொல்கிறார்கள் என்பதையும் தெரிந்தவர்கள் சொல்லுங்கள்.




38 comments:

Anonymous said...

மிக‌ச்சிற‌ப்பான‌ ப‌திவு....வாழ்துக்க‌ள் !

ஜெய்லானி said...

//இதைப்பற்றி நமது அரசியல்வாதிகள் என்ன சொல்கிறார்கள் என்பதையும் தெரிந்தவர்கள் சொல்லுங்கள்.//

அவங்க வேலைக்கு ஆப்பு வைக்கும் உங்களை இனி பதிவே எழுதாத படி செய்து விடுவார்கள் ஹா..ஹா.. :-)

வவ்வால் said...

சு.பிரியன்,

//அதிமுகவுக்கு ஐம்பது உறுப்பினர்கள் அரசால் ஒதுக்கப்படும். உறுப்பினர்களை அந்தக் கட்சியே தேர்ந்தெடுத்துக் கொள்ளும். அதே போல் 49900 வாக்குகள் பெற்ற திமுக 49 சட்டமன்ற உறுப்பினர்களைப் பெற்றுக் கொள்ளும். திமுகவும் தனது வேட்பாளர்களை தேர்ந்தெடுத்துக் கொள்ளும். //

நீங்க சொல்லி இருக்கும் ஜெர்மன் முறை அப்படியல்ல, ஆனால் அப்படி வைத்துக்கொண்டாலும், நீங்க சொல்லி இருக்கும் உதாரணத்தின் மூலமே இம்முறை வெற்றிகரமாக அமையாது.

கட்சி தலைமை சர்வாதிகாரம் பெற்று விடும், அவங்களுக்கு வேண்டியவர்கள் எம்.எல்.ஏ ஆக்கிவிடும், அதிமுகவில் சசிகலா சொந்தங்கள் எல்லாம் தேர்தலை சந்திக்காமலே பதவிக்கு வந்துவிடுவார்கள்.

திமுகவில் குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் பதவிக்கு வந்துவிடுவார்கள்,இப்போதாவது ஆளைப்பார்த்து மக்கள் புறக்கணிக்கலாம், விகிதாச்சாரத்தில் அப்படி செய்ய முடியாது.

மேலும் ஜெர்மன் தேர்தலைப்பற்றி சொல்லி இருப்பதும் சரியல்ல,

அங்கே ஒவ்வொருவருக்கும் இரண்டு ஓட்டு, முதல் ஓட்டில் அனைத்து தொகுதிக்கும் நேரடியாக வேட்பாளர்கள் நிறுத்தப்பட்டு நம்ம ஊரைப்போல தேர்ந்தெடுப்பார்கள்.

இரண்டாவது ஓட்டு கட்சிக்கு, அதில் கிடைக்கும் ஓட்டுக்கு தான் விகிதாச்சார அடிப்படையில் உறுப்பினர்கள், பின்னர் கட்சி நியமனம் எல்லாம். இரண்டு முறையிலும் கிடைத்த உறுப்பினர்களின் எண்ணிக்கையை வைத்து மெஜாரிட்டி அடிப்படையில் சான்சிலர் தேர்வு செய்யப்படுவார்.

இந்த சுட்டியைப்பார்க்கவும்..

http://www.germanculture.com.ua/library/facts/bl_electoral_system.htm

அதிரை சித்திக் said...

அருமையான் சிந்தனை ..ஆனால் பாசிச எண்ணம்

கொண்ட இந்திய அரசியல் வாதிகள் ..ஒருபோதும்

அனுமதிக்க மாட்டார்கள் ..சிறிய எடுத்து காட்டு

பழைய தஞ்சை மாவட்டத்தில் முஸ்லீம்கள் கணிசமாக

உள்ளனர் பல சட்டமன்ற உறுப்பினர்களை தீர்மானித்து

தேர்தெடுக்கும் அளவிற்கு சிறு ஊர்களாக இருந்தது

தாலுகா வேறு சட்ட மன்ற தொகுதி வேறாக ..வேண்டுமென்றே

பக்கத்தில் உள்ள ஊரை வெகு தூரத்தில் உள்ள சட்டமன்ற

தொகுதியோடு சேர்த்து எந்த தொகிதியிலும் முஸ்லீம் மக்களால்

ஒரு M .L A வை கூட தன்னகத்தே பெற முடியாமல் செய்து விட்டனர்

1964 லில் அதிராம் பட்டினம் ஒரு சட்டமன்ற தொகுதி கடைசி

MLA மறைந்த சனாதிபதி ஆர் வெங்கட் ராமன் தான் பிறகு

பட்டுகொட்டைக்கு மாற்ற பட்டது ..எல்லாம் ஓர வஞ்சனை தான் ...

ராஜ நடராஜன் said...

சகோ.சுவனப்பிரியன்!ஜெர்மன் முறை நன்றாக இருக்கிற மாதிரி தோன்றுகிறதே.இயக்க ரீதியாக பங்களிப்பு அனைவருக்கும் என்பதே சரியான ஜனநாயக முறையாக இருக்க முடியும்.ஆனால் இங்கே என்ன பிரச்சினையென்றால் இந்திய சட்டவரைவு நம்மையெல்லாம் ஆண்டு விட்டு ஆட்டயப் போட்டு விட்டுப் போன பிரிட்டிஷ் அரசின் மறுவெளியீடே.பல மசோதா சீர்திருத்தங்கள் உருவாகியிருந்தாலும் அடிப்படை மாறவில்லை.மேலும் இயக்க ரீதியாக என்று வைத்துக்கொள்வோம்.இப்ப உங்க பக்கம் 40 பேர் இருக்குறாங்க.என் பக்கம் இதுவரைக்கும் நாலைந்து பேர் தேறுவாங்க போல இருக்குது:)அடுத்த முறை நான் எப்படி இயக்க ரீதியாக ஆட்சியைப் பிடிக்க முடியும்?எனவே ஜெர்மன் முறையும் தேங்கிய குட்டை மாதிரிதான் எனக்கு தோன்றுகிறது.

வக்கீலுக்குப் படிக்காமல் இங்கே வந்து ஒட்டகம் மேய்க்க விட்டுட்டாங்களே:)

ராஜ நடராஜன் said...

நான் முந்தைய பின்னூட்டம் போடும் போது ஒருத்தர்தான் எனக்கு முன்னாடி நின்று கொண்டிருந்தார்.பின்னூட்டம் இணைத்து விட்டுப் பார்த்தால் எனக்கு முன்னாடி நாலைந்து பேர் நின்று கொண்டிருக்கிறார்கள்.

வவ்வால் எனக்கு சாதகமாக எப்படி எடுத்துக்கொடுக்கிறாரென்று பாருங்கள்!

suvanappiriyan said...

திரு வவ்வால்!

//கட்சி தலைமை சர்வாதிகாரம் பெற்று விடும், அவங்களுக்கு வேண்டியவர்கள் எம்.எல்.ஏ ஆக்கிவிடும், அதிமுகவில் சசிகலா சொந்தங்கள் எல்லாம் தேர்தலை சந்திக்காமலே பதவிக்கு வந்துவிடுவார்கள்.

திமுகவில் குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் பதவிக்கு வந்துவிடுவார்கள்,இப்போதாவது ஆளைப்பார்த்து மக்கள் புறக்கணிக்கலாம், விகிதாச்சாரத்தில் அப்படி செய்ய முடியாது.//

ஆளைப் பார்த்து ஓட்டளித்து இது வரை வென்றவர் யார்? நம் தமிழகத்தில் கலைஞரோ அல்லது ஜெயலலிதாவோ தெருவில் போகிறவனை கூப்பிட்டு வேட்பாளராக்கியாலும் வேலை செய்ய உடன் பிறப்புகளும் ரத்தத்தின் ரத்தங்களும் தயாராகவே உள்ளனர். ஓட்டளிக்க நாமும் தயாராகவே இருக்கிறோம். போன முறை தேர்தலில் அனைத்து வேட்பாளர்களையும் தேர்ந்தெடுத்தது சசிகலாவே என்பதும் நமக்குத் தெரியும். அதே போல் திமுக வில் வேட்பாளர் தேர்வும் மு க அழகிரி மற்றும் மு க ஸ்டாலின் கனிமொழி முன்னிலையிலேயே நடைபெற்றதையும் அறிவோம். எனவே நீங்கள் கூறும் அபாயம் ஏற்கெனவே பழைய தேர்தல் முறையிலேயே இருந்து வருகிறது

நான் சொல்லும் புதிய முறை மூலம் எம் எல் ஏக்கள் எம்பிக்களை விலைக்கு வாங்கும் கூத்து நடைபெறாது. 100 அல்லது 120 எம்எல்ஏக்களை வெறும் 30 சதவீத ஓட்டின் மூலம் பெறும் கூத்தும் நடைபெறுவதை தடுக்கமுடியும்.

suvanappiriyan said...

சகோ ஜெய்லானி!

//அவங்க வேலைக்கு ஆப்பு வைக்கும் உங்களை இனி பதிவே எழுதாத படி செய்து விடுவார்கள் ஹா..ஹா.. :-)//

ஹா..ஹா...ஹா..

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

Anonymous said...

கொடு்மை கொடு்மை

ஹுஸைனம்மா said...

இந்த ‘எதிர் வாக்குகளின்’ அடிப்படையில்தான் வேட்பாளர் தேர்ந்தெடுக்கபப்ட வேண்டும் என்பது என் விருப்பமும். ஒருவரை இத்தனைபேர் ஆதரிக்கிறார்கள் என்பதைவிட, இத்தனைபேர் எதிர்க்கிறார்கள் என்பதும் கவனத்தில் எடுக்கப்பட வேண்டியதே!!

suvanappiriyan said...

சகோ ராஜநடராஜன்!

//இப்ப உங்க பக்கம் 40 பேர் இருக்குறாங்க.என் பக்கம் இதுவரைக்கும் நாலைந்து பேர் தேறுவாங்க போல இருக்குது:)அடுத்த முறை நான் எப்படி இயக்க ரீதியாக ஆட்சியைப் பிடிக்க முடியும்?எனவே ஜெர்மன் முறையும் தேங்கிய குட்டை மாதிரிதான் எனக்கு தோன்றுகிறது.//

மக்களின் நன்மதிப்பை நீங்கள் பெற வேண்டும். ஏற்கெனவே ஆட்சியில் உள்ளவர்கள் செய்த ஊழல்களை அம்பலப்படுத்த வேண்டும். உங்கள் பிரச்சாரம் சரியான முறையில் மக்களை சென்றடைந்தால் அடுத்த முறை மக்கள் உங்களுக்குத்தானே வாக்களிப்பார்கள்!

//வக்கீலுக்குப் படிக்காமல் இங்கே வந்து ஒட்டகம் மேய்க்க விட்டுட்டாங்களே:)//

ஹா..ஹா..ஹா...

//வவ்வால் எனக்கு சாதகமாக எப்படி எடுத்துக்கொடுக்கிறாரென்று பாருங்கள்!//

இரண்டு முறைக்கும் அதிக வித்தியாசம் இல்லாவிட்டாலும் விகிதாச்சாரத்தில் குறைவான வாக்குகளைப் பெற்றவர் வானளாவிய அதிகாரம் செலுத்தி ஆட்சியில் அமர்வதை தடுக்க முடியும். பல தவறான முடிவுகளை அவர் எடுப்பதை விட்டும் தடுக்க முடியும்.அனைத்து இன மக்களும் தங்களின் விகிதாச்சாரத்தின் படி சட்டமன்றத்தையோ பாராளுமன்றத்தையோ நெருங்க முடியும்.

suvanappiriyan said...

சலாம் சகோ அதிரை சித்திக்!


//பக்கத்தில் உள்ள ஊரை வெகு தூரத்தில் உள்ள சட்டமன்ற

தொகுதியோடு சேர்த்து எந்த தொகிதியிலும் முஸ்லீம் மக்களால்

ஒரு M .L A வை கூட தன்னகத்தே பெற முடியாமல் செய்து விட்டனர்//

இவை எல்லாம் திட்டம் போட்டு வேண்டுமென்றே அன்றைய காமராஜ் ஆட்சியில் நடந்ததாக படித்திருக்கிறேன். அன்று இது போல் உறுதியான இயக்கங்கள் முஸ்லிம்களிடம் இல்லாததால் அவர்களுக்கு இது சாத்தியமானது.

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!

~முஹம்மத் ஆஷிக் citizen of world~ said...

சகோ.சுவனபிரியன்,

மிக அருமையான இடுகை..! நன்றி சகோ..!

இவ்விஷயம் மக்களுக்கு தெரியாமல் வேண்டுமானால் இருக்கலாம்..! ஆனால் அரசிய வாதிகளுக்கு...?
மிக முக்கியமாக 1947 இல் இருந்த அரசியல்வாதிளுக்கு நிச்சயமாக தெரிந்திருக்கும் என்றே நம்புகிறேன்.
ஏனெனில், 'இந்திய முஸ்லிம்கள் பெரும்பாண்மைக்கு சற்று அருகில் வரும் அளவுக்கு பலம் பெற்று விடக்கூடாது... மிக மிக சிறுபான்மையாக இறுகக வேண்டும்.. எனவே, நாடே பிரிந்தாலும் நல்லதுதான்' என்றுதான் பாகிஸ்தான் பிரிவினையை வேடிக்கை பார்த்தனர்..! (ஒரு சிலரை தவிர்த்து)

இந்த எண்ணம் தான் இபோதும் உள்ளது..! ஒரு முறை கூட நாடாளுமன்றத்தில்... சட்டமன்றத்தில் இருபது சதவீதம் முஸ்லிம் உறுப்பினர்கள் வந்ததில்லை..!

ஏதோ, அம்பேத்கர் போன்றவர்கள் அரசியல் அமைப்பு சட்டம் எழுதும் இடத்தில் இருந்ததால்... ஆதிக்க சாதியினர் என்று தம்மை சொல்லிகொள்வோரால்... ஒடுக்கப்பட்டவர்களுக்கு இடஒதுக்கீடு... தனித்தொகுதி... என்றல்லாம் கிடைக்கப்பெற்றது..! பிரிவினையின் போது.. தம் தேசப்பற்றை நிரூபித்து பாகிஸ்தான் போகாமல் 'நான் இந்தியன்' என்று சொல்லி இலவச கராச்சி ரயிலில் ஏறாத காரணத்தினால் அடிக்கப்பட்டு மிதிக்கப்பட்டு இரத்தம் ஒழுகப்பட்டு... ஒடுக்கப்பட்ட முஸ்லிம்களுக்கு தனித்தொகுதியும் இல்லை.. தனி இடஒதுக்கீடும் இல்லை..!

நீங்கள் சுட்டிக்காட்டிய இந்த தேர்தல் முறை முஸ்லிம்களுக்கு மட்டுமில்லை.. ஒடுக்கப்பட்ட அனைவருக்கும் விகிதாச்சாரா அடிப்படையில் நாடாளுமன்றத்திலும் சட்டமன்றத்திலும் உரிமையும் இடமும் கிடைதடு விடுமே..!?

அதெப்படி விடுவார்கள் சகோ..? :-((

முதலில்...
ஸ்ரீ கிருஷ்ணா கமிஷன்,
கோகுலகிருஷ்ணன் கமிஷன்,
மிஸ்ரா கமிஷன்,
சச்சார் கமிஷன்,
லிபரான் கமிஷன்,
சஞ்சீவ் பட்-ஸ்ரீ குமார் வாக்குமூலங்கள்,
தெஹல்கா வீடியோ ஆதாரம்...
---ஆகிய இவை எல்லாம் முதலில் உயிர்பெறட்டும்..! சமநீதி வெல்லட்டும்..!

முதலில் எட்டாத இடத்தில் வைத்திருக்கும் எட்டாவதை பாஸ் பண்ண நம்மை விடட்டும்..!

அப்புறமா...

பல்கலைக்கழகத்தில் பாடம் நடத்த நாம் அனுமதி கேட்போம்..!

ஜெர்மன் தேர்தல் முறை நடப்பு தேர்தல் முறையை விட பன்மடங்கு சிறப்பானது..! இந்த தேர்தல் முறையை எதிர்ப்போர்... மறுப்போர்... அனைவருக்கும் நிச்சயம் உள்நோக்கம் இருக்கிறது என்பது எனது அவதானிப்பு..!

Anonymous said...

அற்ப்புதமான பதிவு சுன்னப்பிரியன்.

suvanappiriyan said...

சகோ ஹூசைனம்மா!

//இந்த ‘எதிர் வாக்குகளின்’ அடிப்படையில்தான் வேட்பாளர் தேர்ந்தெடுக்கபப்ட வேண்டும் என்பது என் விருப்பமும். ஒருவரை இத்தனைபேர் ஆதரிக்கிறார்கள் என்பதைவிட, இத்தனைபேர் எதிர்க்கிறார்கள் என்பதும் கவனத்தில் எடுக்கப்பட வேண்டியதே!!//

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!

suvanappiriyan said...

சலாம் சகோ முஹம்மது ஆஷிக்!

//முதலில்...
ஸ்ரீ கிருஷ்ணா கமிஷன்,
கோகுலகிருஷ்ணன் கமிஷன்,
மிஸ்ரா கமிஷன்,
சச்சார் கமிஷன்,
லிபரான் கமிஷன்,
சஞ்சீவ் பட்-ஸ்ரீ குமார் வாக்குமூலங்கள்,
தெஹல்கா வீடியோ ஆதாரம்...
---ஆகிய இவை எல்லாம் முதலில் உயிர்பெறட்டும்..! சமநீதி வெல்லட்டும்..!

முதலில் எட்டாத இடத்தில் வைத்திருக்கும் எட்டாவதை பாஸ் பண்ண நம்மை விடட்டும்..!

அப்புறமா...

பல்கலைக்கழகத்தில் பாடம் நடத்த நாம் அனுமதி கேட்போம்..!//

ஆம் நீங்கள் சொல்வது போல் ஏற்கெனவே கிடப்பில் போடப்பட்ட பல சட்டங்களை அமுல் படுத்தட்டும். பிறகு பல்கலைக் கழகத்தில் பாடம் நடத்த நாம் அனுமதி கேட்போம்.

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோ!

வவ்வால் said...

திரு.சு.பிரியன்,

மத்தவங்கக்கிட்டே பேசுறாப்போலவே பாதிக்கதையை மறைச்சுட்டு என்கிட்டேயும் பேசினா எப்படி :-))

நான் போட்டப்பின்னூட்டத்திலவே பாதிய கவனமா விட்டுட்டிங்க. நீங்க சொன்ன முறையில் தேர்தல் இல்லைனு சொல்லிட்டேன்,அப்புறமும் அதையே சொல்லிக்கிட்டு, மேலும் சுட்டியும் போட்டாச்சு என்னமோ நீங்க என்ன சொன்னாலும் யோசிக்காம தலையை ஆட்டுற ஆஷிக்க்கிட்டே சொல்றத எல்லாம் என்கிட்டே சொல்றீங்க ;-))

ஆங்க்கிலத்தில் இருப்பதை யாரோ உங்களுக்கு தவறா மொழிப்பெயர்த்து கொடுத்து இருக்காங்க நானே தெளிவா சொல்லிடுறேன்,

358 மொத்த தொகுதிகள் என நினைக்கிறேன்(எண்ணிக்கையை சரிப்பார்க்கணும்) அதுக்கு வழக்கம் போல எல்லாக்கட்சிகளும் வேட்பாளார்கள் நிறுத்துவாங்க, ஜெர்மனியில் மக்களுக்கு இரண்டு ஓட்டு உண்டு.மக்களும் முதல் ஓட்டு போடுவாங்க. அதன் மூலம் நேரடியாக எம்.பிக்கள் தேர்வு செய்யப்படுவாங்க.

, பின்னர் இரண்டாவது ஓட்டை கட்சிக்கு எனப்போடுவாங்க, இதில் கிடைக்கும் ஓட்டுக்களின் சதவீதத்திற்கு ஏற்ப மீண்டும் ஒரு 358 எம்பிக்கள் உருவாக்கி அதனை ஓட்டின் அடிப்படையில் பிரிச்சுப்பாங்க.

அதாவது மொத்த உறுப்பினர்கள் 358+358 என இருப்பார்கள். முதலில் நேரடி வாக்கில் தேர்வான எம்பிக்கள், பின்னர் விகிதாச்சார அடிப்படையில் உருவான எம்பிக்கள் ,மொத்தமாக எந்தக்கட்சிக்கு பெரும்பான்மை கிடைக்கிறதோ அவர்கள் சான்சலரை தேர்வு செய்வார்கள். பெரும்பான்மை இல்லாத போது இந்தியா போல கூட்டணி ஆட்சி தான்.

அங்கும் சிறிய கட்சிகள், சுயேச்சை எல்லாம் உண்டு.சிறிய கட்சி குறைந்தது 5% ஓட்டு வாங்கினால் விகிதாச்சார அடிப்படையில் 3 எம்பிக்கள் கிடைக்கும் அல்லது 4 நேரடி எம்பிக்கள் வாங்கினால் 3 விகிதாச்சார எம்பிக்கள் கிடைக்கும். விகிதாச்சார எம்பிக்கள் என்பது நம்ம ஊரு ராஜ்ய சபா எம்பி போல ஆனால் ,எல்லாரும் அங்கே சமம் அவ்வளவு தான்.

அப்புறம் எல்லாம் ஆள் பார்த்து தேர்வு செய்வது தான் சொல்றிங்க ,அப்போ சசிகலா, திவாகரனுக்கு சீட் கொடுகிறது ,ஏன் கொடுக்கவில்லை, கொடுத்தா தொண்டர்கள் தேர்தல் வேலை செய்யாமல் போகலாம் அல்லது கட்சி உடையக்கூட செய்யலாம்.பல வேட்பாளர்களை மாற்ற சொல்லி போராட்டம் எல்லாம் செய்துள்ளார்கள் என்பதை கவனித்தது இல்லையா.

விகிதாச்சார எம்பி,எம்.எல்.ஏ வை இப்போதைய ராஜ்ய சபா எம்பி போல விலைப்பேசி வித்தாலும் விப்பாங்க. அண்ணாமலைகழக இணைவேந்தர் எம்.ஏ.எம்.ராமாசாமி ,கார்நாடகாவில் இருந்து தேவகவுடா கட்சி சார்பா ராஜ்யசபா எம்பி ஆனார்,எப்படி? எல்லாம் பணம் தான்!

ஆனால் வெற்றிப்பெற்ற பிறகு எம்பி,எம்.எல்.ஏ ஆக்கிடலாம்னா எளிதாக செய்துடுவாங்க.

அன்புமணிய எல்லாம் ஏன் ராஜ்யசபா எம்பி ஆக்க துடிக்கிறார் ராமதாசு எளிதாக பதவிக்கு வரலாம்னு தானே. அதே நிலைமை ஆகிடும்.

-----

ஆஷிக் என்னமோ ஜெர்மன் முறை வந்தால் சரி ஆகிடும்னு சொல்கிறாரே, இஸ்லாமிய கட்சியிலும் அவங்களுக்கு வேண்டிய ஆட்களைத்தான் கொண்டுவந்துப்பாங்க, இது கொள்ளைப்புற வழிப்போல. எனவே கட்சியின் தலைமை தன்னலம் இல்லாமல் இருந்தால் தான் சரியாக வரும், இந்தியாவில் தன்னலமில்லா தலைவர்கள் இருந்தால் ஏன் இந்த பிரச்சினை :-))

வவ்வால் said...

திரு.சு.பி,

முக்கியமான ஒன்றை சொல்ல மறந்துட்டேன், ஜெர்மனில ஒரு எம்.பி பதவிக்காலத்திலேயே இறந்துவிட்டால் இடைத்தேர்தல் எல்லாம்ம் இல்லை அடுத்த வாங்கு வாங்கிய வேட்பாளர் ,அவர் எக்கட்சியாக இருந்தாலும் எம்.பி ஆகிடுவார். அப்படி ஒன்றை இந்தியாவுக்கு கொண்டு வர சொல்லுங்க நல்லா இருக்கும், அதை விட்டு ,திருடன் கையில சாவி குடுக்க சொல்லுறிங்க, ஜெர்மனிய அரசியல்வாதிங்க நல்லவங்க போல ,அது போலவா நம்மாளுங்க, முழிச்சுக்கிட்டு இருக்கும் போதே வேட்டிய உருவிடுவாங்க :-))

யாராவது மண்டபத்தில எழுதிக்கொடுத்தாங்களோ :-))

suvanappiriyan said...

திரு வவ்வால்!

//என்னமோ நீங்க என்ன சொன்னாலும் யோசிக்காம தலையை ஆட்டுற ஆஷிக்க்கிட்டே சொல்றத எல்லாம் என்கிட்டே சொல்றீங்க ;-))//

முதலில் உங்களை அதி மேதாவியாகவும் மற்றவர்களை அறிவில் குறைந்தவர்களாகவும் நினைக்கும் பாங்கை விடுங்கள். ஆஷிக்கின் அறிவுத்திறனும், அவரது வாதத்திறமையையும் எங்கள் குழுமத்தில் நடக்கும் விவாதங்களில் கண்டு ஆச்சரியப்பட்டுள்ளேன். அதை எல்லாம முதலில் உள் வாங்கிக் கொள்ளும் திறன் பலருக்கு (முக்கியமாக உங்களுக்கு) இருக்குமா என்பதே சந்தேகம்.

//ஆங்க்கிலத்தில் இருப்பதை யாரோ உங்களுக்கு தவறா மொழிப்பெயர்த்து கொடுத்து இருக்காங்க நானே தெளிவா சொல்லிடுறேன்,//

எனக்கு ஆங்கிலம் தெரியாது என்று உங்களிடம் யார் சொன்னது? :-) அது ஒரு மொழி. அப்படியே ஆங்கிலம் தெரியாததால் அவரது அறிவுத் திறனில் ஏதேனும் மாற்றம் வந்து விடுமா? உங்களின் பல வாதங்களையும் பார்த்தால் 'குறை குடம் தளும்பும்' என்ற பழமொழிதான் ஞாபகம் வந்தது.

முன்பு ஒரு பதிவில் 'பிரபஞ்சம் விரிவடையவில்லை' என்று சாதித்தீர்கள். அதற்கான ஆங்கில சுட்டியைக் கொடுத்தவுடன் தத்து பித்து என்று உளறினீர்கள். இதனால் உங்களின் ஆங்கில அறிவில் குறை இருப்பதாக நான் கமெண்ட் கொடுக்கவில்லை.

//முக்கியமான ஒன்றை சொல்ல மறந்துட்டேன், ஜெர்மனில ஒரு எம்.பி பதவிக்காலத்திலேயே இறந்துவிட்டால் இடைத்தேர்தல் எல்லாம்ம் இல்லை அடுத்த வாங்கு வாங்கிய வேட்பாளர் ,அவர் எக்கட்சியாக இருந்தாலும் எம்.பி ஆகிடுவார். அப்படி ஒன்றை இந்தியாவுக்கு கொண்டு வர சொல்லுங்க நல்லா இருக்கும், அதை விட்டு ,திருடன் கையில சாவி குடுக்க சொல்லுறிங்க, ஜெர்மனிய அரசியல்வாதிங்க நல்லவங்க போல ,அது போலவா நம்மாளுங்க, முழிச்சுக்கிட்டு இருக்கும் போதே வேட்டிய உருவிடுவாங்க :-))//

மாற்று ஏற்பாட்டிலாவது இவர்கள் திருந்துவார்களா என்ற ஏக்கம்தான். :-)

//அன்புமணிய எல்லாம் ஏன் ராஜ்யசபா எம்பி ஆக்க துடிக்கிறார் ராமதாசு எளிதாக பதவிக்கு வரலாம்னு தானே. அதே நிலைமை ஆகிடும்.//

மகனோ மருமகளோ யார் வந்தாலும் நேர்மையான ஆட்சியைக் கொடுத்தால் போதும். அதைத்தான் மக்கள் எதிர்பார்ப்பது. நேர்மையற்றவர்களையும் ஊழல் பேர்வழிகளையும் கொல்லைப்புறமாக கொண்டு வந்தால் அடுத்த தேர்தலில் மக்கள் எதிராகத் திரும்ப மாட்டார்களா?

//யாராவது மண்டபத்தில எழுதிக்கொடுத்தாங்களோ :-))//

உங்களை சொல்லிக்கிறீங்களோ! இருக்கலாம். :-))))))))))))

வவ்வால் said...

திரு.சு.பி,

நீங்களே பாராட்டிக்க வேண்டியது தான் :-))

நீங்க அப்போ சொன்னது உலகமும்,பிரபஞ்சமும் ஒன்று என்று,நான்,ராதாகிருஷ்ணன் எல்லாம் அதைத்தான் மறுத்தோம்,இன்னும் என் பின்னூட்டம் அதில் இருக்குமானால்,அறிவியல் தெரிந்த யாரிடம் வேண்டுமானாலும் காட்டிக்கேட்கலாம்,சார்வாகன் கூட உங்கள் புளுகுமூட்டையை வெளிச்சம் போட்டுக்காட்டிப்பதிவும் போட்டார்.

அப்புறம் நீங்கள் எப்போதும் பாதியை மறைத்துவிட்டே பேசுவது ஏன். இந்திய அரசியல் மோசமாக இருப்பதை அனைவருமே ஏற்றுக்கொண்டு மாற்றம் விரும்பும் நிலையில். முழு உண்மையை சொன்னால் உங்களை யார் தண்டிக்கப்போகிறார்கள்.ஆனால் நீங்களோ வழக்கம் போல பாதியை மறைக்கிரீர்கள்.முழுசாக எழுதி இருந்தால் முதலில் பாராட்டுவதும் நானாக இருப்பேன்.

நம்மக்கிட்டே அரைக்குடமாவது சரக்கு இருக்கு ,காலிக்குடமல்ல ,காலிக்குடம் வெறும் சத்தம் போடும், சு.பி நான் உங்களை சொல்லவில்லை :-))

மண்டபத்தில எழுதி வாங்கலைனா ஏன் ஒன்னுமே புரியலை உங்களுக்கு.நாம எல்லாம் 1000 பேருக்கு சப்ளை செய்ய கூடியவர்கள். வேண்டும்னா சொல்லுங்க அடுத்த முறை கச்சிதமா எழுதி தரேன் :-))

suvanappiriyan said...

திரு வவ்வால்!

//அப்புறம் நீங்கள் எப்போதும் பாதியை மறைத்துவிட்டே பேசுவது ஏன். இந்திய அரசியல் மோசமாக இருப்பதை அனைவருமே ஏற்றுக்கொண்டு மாற்றம் விரும்பும் நிலையில். முழு உண்மையை சொன்னால் உங்களை யார் தண்டிக்கப்போகிறார்கள்.ஆனால் நீங்களோ வழக்கம் போல பாதியை மறைக்கிரீர்கள்.முழுசாக எழுதி இருந்தால் முதலில் பாராட்டுவதும் நானாக இருப்பேன்//.

எனக்கு மறைக்க வேண்டிய அவசியம் என்ன வந்தது? இரட்டை வாக்குரிமையில் ஒரு வாக்கு நாம் ஏற்கெனவே பயன்படுத்தி வருவது. அதைப் பற்றி இங்கு பேசுவதால் புதிய செய்தி என்ன கிடைத்து விடப் போகிறது? அவர்களுக்கு கிடைக்கும் மற்றொரு வாக்கைப் பற்றித்தான் இந்த பதிவே பேசுகிறது. வாங்கிய வாக்கின் அடிப்படையில் ஆட்சி யமைப்பதுதான் ஜனநாயகத்துக்கு ஏற்ற ஒன்று என்பதைத்தான் நான் சொல்ல வந்தேன். அதை நம் நாட்டில் பயன்படுத்தினால் தற்போதய ஆட்சியை விட சிறப்பாக இருக்கும் என்பது எனது நிலைப்பாடு. உங்கள் நிலைப்பாடு அதற்கு மாற்றமாக இருந்தால் அதையும் நான் சீர்தூக்கி பார்ப்பேன். அதுவல்லாது 'என்னை விட பெரிய அறிவாளி இந்த உலகில் யாருமே இல்லை' என்று எனக்கு நானே பட்டம் கொடுத்துக் கொள்ள மாட்டேன். :-)

//நம்மக்கிட்டே அரைக்குடமாவது சரக்கு இருக்கு ,காலிக்குடமல்ல ,காலிக்குடம் வெறும் சத்தம் போடும், சு.பி நான் உங்களை சொல்லவில்லை :-))//

//நாம எல்லாம் 1000 பேருக்கு சப்ளை செய்ய கூடியவர்கள். வேண்டும்னா சொல்லுங்க அடுத்த முறை கச்சிதமா எழுதி தரேன் :-))//

நீங்கள் என்னையே சொன்னாலும் அதற்காக கோபப்பட மாட்டேன். இன்றும் கல்வியை தேடுவதில் நான் மூன்றாம் கிளாஸ் நான்காம் கிளாஸ் மாணவன்தான். அதாவது காலி குடம்தான்.

அடக்கம் அமரருள் உய்க்கும் அடங்காமை
ஆரிருள் உய்த்து விடும்.

எல்லார்க்கும் நன்றாம் பணிதல் அவருள்ளும்
செல்வர்க்கே செல்வம் தகைத்து.

பல்லார் முனியப் பயனில சொல்லுவான்
எல்லாரும் எள்ளப் படும்.

இந்த குறள்களை உங்களுக்காக நான் எழுதவில்லை. சபை ஒழுக்கம் எப்படி இருக்க வேண்டும் என்று மற்றவர்கள் தெரிந்து கொள்வதற்காகவே!:-)

வவ்வால் said...

திரு.சு.பி,

//எனக்கு மறைக்க வேண்டிய அவசியம் என்ன வந்தது? //

அப்படி இல்லையெனில் நான் முதல் பின்னூட்டத்தில் சொன்னப்போதே அதனை சொல்லியிருக்க வேண்டும்,ஆனால் செய்யவில்லை.ஜெர்மனியிலேயே இரண்டும் கலந்து செய்தால் தான் நேர்மையான முறையில் தேர்தல் நடக்கும் என வைத்துள்ளார்கள்,ஆனால் ஊழல் மிகுந்த இந்தியாவில் அதில் பாதியை கொண்டு வருவது தேர்தல் சீர் திருத்தம் ஆகாது,சீரழிவுக்கே வழிக்காட்டும், அது புரியாமல் பேசுவது நீங்கள், இதில் என்னை குறை சொல்லிக்கொண்டு :-))

பாதி சொன்னதும் இந்தியாவுக்கு சற்றும் பொறுந்தாத ஒன்று மேலும் விலைக்கு விற்கக்கூடிய பதவிகளையே இந்தியாவில் உருவாக்கும் என்பதையும் தெளிவாக சொன்னதால் நீங்கள் சொன்ன பாதியும் வீணாகப்போச்சு என்பதை உங்கள் மனம் ஏற்க மறுக்கக்கிறது,நாம் சொன்னதை சரியில்லை என சொல்லிவிட்டார்களே என்ற ஆதங்கத்தில் உண்மையை ஏற்காமல் இப்படியெல்லாம் பேசுகிறீர்கள்.

//நீங்கள் சுட்டிக்காட்டிய இந்த தேர்தல் முறை முஸ்லிம்களுக்கு மட்டுமில்லை.. ஒடுக்கப்பட்ட அனைவருக்கும் விகிதாச்சாரா அடிப்படையில் நாடாளுமன்றத்திலும் சட்டமன்றத்திலும் உரிமையும் இடமும் கிடைதடு விடுமே..!?

அதெப்படி விடுவார்கள் சகோ..? :-((//
சரி நீங்க சொல்லியிருப்பது என்ன கட்சிகளுக்கு வாக்கு விகிதாச்சாரத்தில் எம்பி/எம்.எல்.ஏ ,ஆனால் ஆஷிக் என்ன சொல்கிறார் உடனே ஜாதி,மத ரீதியாக வாக்கு விகிதாச்சாரத்தில் உறுப்பினர்கள் கிடைப்பார்கள் இம்முறையில் என்கிறார். நீங்க சொன்ன முறையில் ஜாதிக்கு,மதத்துக்குனு ஓட்டுப்பதிவாகுதா என்ன? சம்பந்தமேயில்லாமல் உங்களுக்குள்ளாக பேசிக்கொண்டு ஆஹா,பலே என உங்களுக்குள்ளாக பாராட்டிக்கொள்வதே அறிவிற் சிறந்தோர் செய்யும் செயலோ ;-))

கான முயலாட கண்டிருந்த வான்கோழி
தானும் அது போல பாவித்து
தன் பொல்லா சிறகை விரித்தாடியதாம் :-))

வான்ன்கோழி பிரியாணி நல்லா இருக்கும்னு கேள்விப்பட்டேன் :-))

வவ்வால் said...

hi..hi...one correction,that is "mayilada " not muyalada as earlier mentioned.

sorry now no tamil typing available ,thats why english

திருவாளப்புத்தூர் முஸ்லீம் said...

அஹமது தீதாத் -கிறிஸ்தவர்களின் சிம்மசொப்பனம்,ஷேர் மார்க்கெட் ஹலாலா? ஹராமா?
14,000 மக்களின் இஸ்லாமிய வருகை-திகைக்கும் இங்கிலாந்த்,இஸ்லாமிய எதிர்ப்புக்கு பதிலடி-சூடான விவாதம் என்ற தலைப்பில் பெண்களை பற்றிய மாற்று மதத்தாரின் இஸ்லாமிய பொய் பிரசாரத்திற்கு தக்க பதிலடி, ஆக்கபூர்வமான இன்னும் பலகட்டுரைகள்.அந்த தளத்தில் இணையுங்கள்,வாருங்கள் உங்கள் கருத்தை உலகறிய தெரிவியுங்கள்,உங்கள் நண்பர்களுக்கு அறிமுகம் செய்யுங்கள்.....www.tvpmuslim.blogspot.com

ராஜ நடராஜன் said...

சுபி & வவ்வால்!

ஆஹா!சரியான போட்டி.எனக்கு வான் கோழி பிரியாணி சாப்பிட்டுகிட்டே இந்த மாதிரி ஆக்கபூர்வமான சண்டை பார்க்குறதுன்னா கொள்ளைப்பிரியம்:)

ஸ்டார்ட் மீஜிக்!

ராஜ நடராஜன் said...

சகோ.சு.பி!ஜெர்மன் தேர்தல் முறை சரியென்றால் ஏன் புதியதாக பிறந்த நாடுகளோ அல்லது புரட்சி ஏற்பட்ட துனிசியா எகிப்து போன்ற நாடுகள் இந்த முறையை பின்பற்றவில்லையென்பதையும் விளக்கவும்.

suvanappiriyan said...

சகோ வவ்வால்!

//hi..hi...one correction,that is "mayilada " not muyalada as earlier mentioned.//

இதில உங்க தப்பே கிடையாது. சில்லுன்னு பீர் உள்ளே இறங்கி மப்பில் பார்க்கும் போது மயில் கூட முயலாகத்தான் தெரியும். எனவே மப்பு இறங்கியவுடன் பின்னூட்டம் இட்டால் தப்பு வராது.

உலக மகா அறிவாளி இப்படி எல்லாம் பின்னூட்டம் இட்டால் உலகம் முழுக்க படிப்பவர்கள் என்ன நினைப்பார்கள்? ஆட்டத்தைப் பார்க்காமல் அதை பிரியாணி பண்ணுவதிலேயே குறியாக இருந்ததும் தவறு நடக்க ஒரு காரணம். :-))))

'நுணலும் தன் வாயால் கெடும்'

இந்த பழமொழி உங்களை நினைத்து எழுதவில்லை. பின்னூட்டத்தை முடிக்கும் போது மனதில் உதித்தது. எழுதி விட்டேன். :-(

suvanappiriyan said...

சகோ ராஜநடராஜன்!

//சகோ.சு.பி!ஜெர்மன் தேர்தல் முறை சரியென்றால் ஏன் புதியதாக பிறந்த நாடுகளோ அல்லது புரட்சி ஏற்பட்ட துனிசியா எகிப்து போன்ற நாடுகள் இந்த முறையை பின்பற்றவில்லையென்பதையும் விளக்கவும்.//

ஒரு நாட்டின் தேர்தல் முறையை வகுத்துக் கொள்வது அந்த நாட்டு மக்களின் மற்றும் அந்த நாட்டு ஆட்சியாளர்களின் விருப்பமல்லவா! இதில் நாம் தலையிட முடியாதே! மன்னர் ஆட்சியோ, கலீபா ஆடசியோ, ராணுவ ஆட்சியோ, மக்களாட்சியோ எப்படி இருந்தாலும் அது மக்களுக்கு நன்மை பயக்கக் கூடியதாக இருக்க வேண்டும். இப்படித்தான் ஆட்சி முறை இருக்க வேண்டும் என்று இஸ்லாம் எந்த கட்டுப்பாட்டையும் விதிக்கவில்லை. ஆனால் இஸ்லாமிய நாட்டில் இஸ்லாமிய ஆட்சியாளர் குர்ஆனுக்கு முரணில்லாது ஆட்சி அமைக்க வேண்டும் என்று எதிர் பார்க்கிறது. அதில் சிறுபான்மையினரின் நலனும் பாதுகாக்கப்பட வேண்டும் என்ற கட்டளையும் வருகிறது.

//ஆஹா!சரியான போட்டி.எனக்கு வான் கோழி பிரியாணி சாப்பிட்டுகிட்டே இந்த மாதிரி ஆக்கபூர்வமான சண்டை பார்க்குறதுன்னா கொள்ளைப்பிரியம்:) //

இது சண்டை அல்ல. கருத்துப் பரிமாற்றமே! :-)

suvanappiriyan said...

‘காட்டுவழிதனிலே அண்ணே கள்ளர் பயம் இருந்தால்?

எங்கள் வீட்டுக்குல தெய்வம் வீரம்மை காக்குமடா!’

‘நிறுத்து வண்டியென்றே கள்ளர் நெருங்கிக் கேட்கையிலே?

எங்கள் கருத்தமாரியின் பெயர் சொன்னால் காலனும் அஞ்சுமடா!”

-வண்டிக்காரன் பாட்டு

கிராமிய பாட்டு. கேட்க நல்லா இருக்குல்லே!

வவ்வால் said...

திரு.சு.பி,

உண்மையாவே நான் பிரியாணியை நினைச்சுக்கிட்டே தான் அந்த பின்னூட்டம் போட்டேன், இதை சொன்னா நம்பவா போறிங்க?

வாத்து பிரியாணி,முயல் பிரியாணி,வான்கோழி பிரியாணி லாம் இருக்குனு ஹோட்டெல்ல சொல்வாங்க ,ஆனால் ஒரு நாளும் சாப்பிட்டது இல்லை, ஏன் அத முயற்சி செய்து பார்க்கவே இல்லைனு மனசுக்குள்ள நினைச்சுக்கிட்டே போட்டேன், அப்படியே வந்திடுச்சு :-))

இதுல இருந்து என்ன தெரியுதுன்னா எனக்கு உள் ஒன்று வைத்து புறம் ஒன்று பேசத்தெரியாது என்பது தெரியுதா :-))

எழுத்து பிழை வரலாம் ,ஆனால் கருத்து பிழை தான் வரக்கூடாது, இதுவும் உங்களை சொல்லவில்லை :-))

அது என்ன சு.பி சாரே ஜெர்மனிலவே விகிதாச்சார ஓட்டு முறை சரியா வராதுனு தானே ரெட்டை ஓட்டு வச்சு இருக்கான், அப்படி இருக்கும் போது சுயநல அரசியல்வாதிகள் இருக்கும் இந்தியாவுக்கு ஜெர்மனி முறைல பாதிய மட்டும் பரிந்துரைக்கிறிங்க,இதுல உங்க நுண்ணரசியல் தான் என்ன ,அதையாவது சொல்லுங்க தெரிஞ்ச்சுப்போம் :-))

ஜப்பான்,சீனாவுக்கு எல்லாம் தவளையோட கால்கள் மட்டும் வெட்டி பதப்படுத்தி இந்தியாவில இருந்து ஏற்றுமதி செய்றாங்களாம், அங்கே சிக்கன் லெக் பீஸ் போல தவளைக்கால் , டின்ல கிடைச்சா வாங்கி சாப்பிட்டுப்பாருங்க :-))

வழக்கமா திரிசமன் செய்து எழுதுவிங்க அதே பழக்க தோஷத்தில இந்த அரசியல் கட்டுரையையும் எழுதிட்டீங்க போல :-))

தொட்டில் பழக்கம் சுடுகாடு மட்டும் :-))

பொதுவா சொன்னேன்!

-------

இங்க பாருங்கப்பா ராஜ நடைக்கும் இருக்க ஆசைய, எப்போ சண்டை நடக்கும் ,கைத்தட்டி விசில் அடிக்கலாம்னே வண்டிக்கட்டிக்கிட்டு வந்திருக்கார் போல :-))

அதான் சு.பியே சொல்லிட்டாருள்ள கருத்து பரிமாற்றம்னு ,சண்டைலாம் வராது,வேற இடம் பாருங்க, எங்கே சண்டை நடக்குதுனு எனக்கும் சொல்லுங்க நானும் வேடிக்கைப்பார்க்க வாரேன் :-))

------

அடடா சு.பி பாரதியார் கவிதைலாம் படிக்க ஆரம்பிச்சுட்டாரே. பாரதியார் இது போல நிறைய நாட்டுப்புறப்பாட்டும் எழுதி இருக்கார் படிச்சுப்பாருங்க(நான் பாட்டுக்கு பாரதினு சொல்லுறேன், வேற யாராவது எழுதி இருக்கப்போறாங்க, எல்லாம் ஒரு நினைவில் சொல்வது தான்)

கருத்தாமாரின்னு சொன்னதுக்கு உங்களை அடிக்க வரப்போறாங்க மார்க்க பந்துக்கள் :-))

ராஜ நடராஜன் said...

//ஒரு நாட்டின் தேர்தல் முறையை வகுத்துக் கொள்வது அந்த நாட்டு மக்களின் மற்றும் அந்த நாட்டு ஆட்சியாளர்களின் விருப்பமல்லவா! இதில் நாம் தலையிட முடியாதே! //

என்னங்க சகோ!ரிவர்ஸ் கியர் போடுறீங்க:)பதிவின் அடிப்படைக் கருத்தே அடிபட்டுப்போகிறதே!அப்ப இந்திய முறையையும் மக்களும் ஆட்சியாளர்களே தீர்மானித்துக்கொண்டிருக்கும் போது ஜெர்மனி முறை சிறந்தது என்று நீங்கள் எப்படி வாதிக்க முடியும்.

யுவர் ஹானர்!எதிர்க்கட்சிக்காரர் தனது வாதத்தில் குழம்புகிறார் என்று சொல்லி நீதி வழ்ங்கும்படி கேட்டு உட்கார்கிறேன்:)

ஓய்!வவ்வால்!வான் கோழி பிரியாணியோட நான் ஆக்கபூர்வமான சண்டைன்னு சொன்னேன்:)

ராஜ நடராஜன் said...

அதென்ன கச்சேரி நடுவுல வண்டிக்காரன் கிராமிய வில்லுப்பாட்டு?

suvanappiriyan said...

திரு தருமி!

//"We have indeed created man in the 'best of moulds'." (Qur'an 95:4)//

"You will not see any flaw in what the Lord of Mercy creates." (Qur'an 67:3)

இதை வைத்துதான் என் கேள்வி: எப்படி அல்லா தப்பு பண்ணிட்டார்னு “தைரியமா” இஸ். சகோ.சொல்றாங்கன்னு தெரியலையே!
என்ன கண்ணன் .. என் கேள்விக்கும் யாராவது பதில் சொல்லுவாங்களான்னு எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறேன்.//

'ஏதேனும் வசனத்தை நாம் மாற்றினால் அல்லது அதை மறக்கச் செய்தால் அதை விடச் சிறந்ததையோ அதற்குச் சமமானதையோ தருவோம். இறைவன் அனைத்துப் பொருட்களின் மீதும் ஆற்றலுள்ளவன் என்பதை நீர் அறியவி;லலையா?'
-குர்ஆன் 2:106

'ஒரு வசனத்தின் இடத்தில் மற்றொரு வசனத்தை நாம் மாற்றினால் 'நீர் இட்டுக் கட்டுபவர்' எனக் கூறுகின்றனர். எதை அருள வேண்டும் என்பதை இறைவன் நன்கறிந்தவன். மாறாக (தருமி போன்றோர்) அவர்களில் அதிகமானோர் அறிய மாட்டார்கள்.'
-குர்ஆன் 16:101

ஒரு தாய் இரண்டு வயதுப் பாலகனுக்குச் சில உணவுகளை மறுப்பாள். சாப்பிடக் கூடாது என்று தடுப்பாள். அதே குழந்தை 10 வயதை அடையும் போது முன்பு தடுத்த உணவை உண்ணுமாறு கூறுவாள். இவ்வாறு கூறும் நிலை ஏற்படும் என்பது அவளுக்கு ஏற்கெனவே தெரியும். இங்கு குழந்தையின் நிலைதான் மாறியதேயொழிய தாயின் அறிவில் எந்த மாற்றமும் ஏற்படவில்லை. அது போல் படைத்த இறைவனே தனது அடியானுக்கு நன்மையைக் கருதி சில மாற்றங்களை செய்ய பணிக்கிறான். அவனது கட்டளையை நாம் பின்பற்றுகிறோமா என்று சோதிப்பதற்கும் இது போன்ற கட்டளைகளை இறைவன் கொடுக்கலாம்.

சட்டம் போட்டவனே அந்த சட்டத்தை மாற்றும் உரிமையும் பெறுகிறான். இது பற்றி ஏற்கெனவே விளக்கியுமிருக்கிறேன். திருப்பி...திருப்பி...திருப்பி....எத்தனை முறை சார்.

suvanappiriyan said...

சகோ ராஜ நடராஜன்!


//என்னங்க சகோ!ரிவர்ஸ் கியர் போடுறீங்க:)பதிவின் அடிப்படைக் கருத்தே அடிபட்டுப்போகிறதே!அப்ப இந்திய முறையையும் மக்களும் ஆட்சியாளர்களே தீர்மானித்துக்கொண்டிருக்கும் போது ஜெர்மனி முறை சிறந்தது என்று நீங்கள் எப்படி வாதிக்க முடியும்.//

நம் நாட்டின் தற்போதய ஜனநாயக முறையில் எந்த குழப்பமும் இல்லாமல் சீராக சென்று கொண்டிருந்தால் இது போன்ற கேள்விகளுக்கே இடமில்லையல்லவா?. நான்கைந்து எம் எல் ஏக்களையும் எம்பிக்களையும் சில கோடிகளுக்கு ஸ்வாகா பண்ணி ஆட்சியையே மாற்றி விடுகின்றனரே! விகிதாச்சார அடிப்படையில் இவ்வாறு எம்பிக்களை விலை கொடுத்து வாங்க முடியாதல்லவா? மக்களின் வாக்குகளுக்கு ஏற்ப அந்த கட்சியும் தனது பிரதிநிதிகளை அனுப்புகிறது. இவை எல்லாம் தற்போதய நம் நாட்டு ஜனநாயக முறையில் சாத்தியமில்லாமல்தானே இருக்கிறது?

//அதென்ன கச்சேரி நடுவுல வண்டிக்காரன் கிராமிய வில்லுப்பாட்டு?//

இணையத்தில் மேயும் போது இந்த கிராமிய பாடலில் சொல்லாடல் கிராமியத் தன்மையாக இருந்தது. எனவே இடையில் அதையும் பதிந்தேன்.

~முஹம்மத் ஆஷிக் citizen of world~ said...

///யுவர் ஹானர்!எதிர்க்கட்சிக்காரர் தனது வாதத்தில் குழம்புகிறார் என்று சொல்லி நீதி வழ்ங்கும்படி கேட்டு உட்கார்கிறேன்:)///

ஓகே., வழங்கிடுவோம்..!

டியர் பப்ளிக் ப்ரோசிக்யுட்டார் சகோ.ராஜ நடராஜன்..!
என்ன சொன்னார் சகோ.சுவனப்பிரியன்...?

/////ஒரு நாட்டின் தேர்தல் முறையை வகுத்துக் கொள்வது அந்த நாட்டு மக்களின் மற்றும் அந்த நாட்டு ஆட்சியாளர்களின் விருப்பமல்லவா! இதில் நாம் தலையிட முடியாதே! /////

ம்ம்ம்... அப்படீன்னா.....
இந்திய பாஸ்போர்ட் வைத்துக்கொண்டு, ரேஷன் கார்டில் பெயர் இருந்து.. வாக்காளர் அடையாள அட்டை வைத்துக்கொண்டு ஓட்டளித்து இந்தியனாக இருக்கும் சகோ.சுவனப்பிரியன்... அவர் சொன்ன..//நாட்டு மக்களின்//..என்றதில் நாட்டு மக்களில் ஒருவராக அவர் வரமாட்டாரா..? அதனால்.. அவரின் விருப்பத்தை சொல்லி இருக்கார்..! ஜனநாயகம் என்றால்... மெஜாரிட்டி விருப்பமே சட்டம்..! இவர் கருத்து மெஜாரிட்டி இந்தியர்களால் ஏற்றுக்கொள்ளப்படால் அதுதான் சட்டம்..!

சகோ.சுவனப்பிரியன் தெளிவாகத்தான் இருக்கிறார்..! நீங்கள் தான் குழம்பி உள்ளீர்கள்... டியர் பப்ளிக் ப்ரோசிக்யுட்டார்..!

:-)))

Anonymous said...

உண்மையாவே நான் பிரியாணியை நினைச்சுக்கிட்டே தான் அந்த பின்னூட்டம் போட்டேன், இதை சொன்னா நம்பவா போறிங்க?

வாத்து பிரியாணி,முயல் பிரியாணி,வான்கோழி பிரியாணி லாம் இருக்குனு ஹோட்டெல்ல சொல்வாங்க ,ஆனால் ஒரு நாளும் சாப்பிட்டது இல்லை, ஏன் அத முயற்சி செய்து பார்க்கவே இல்லைனு மனசுக்குள்ள நினைச்சுக்கிட்டே போட்டேன், அப்படியே வந்திடுச்சு :-))

அட இதகூட நம்பலனா எப்படி.ஆனா நீங்க முயற்சி பண்ண salmon மீன் பிரியாணி,வவ்வால் பிரியாணிய விட்டுட்டீங்களே.அப்படியே நம்ப நடராஜெனுக்கும் கொடுத்துடுங்க கோவிச்சிக்க போறாரு?
சுபி சாரு மண்டபத்தில் எழுதி கொடுத்தத இங்கு பதிவிடுறாரு.(உங்கள் மேதாவித்தனத்தை கண்டு பெருமைபடுகிறேன்).ஆனா நீங்க 4000 கிமீ salmon மீன் பின்னாடியே போய் ஆராய்ச்சி செய்து பதிவிட்டதை சொன்னா சுபி நம்பவா போறாரு. அவ்வ்.

ராஜ நடராஜன் said...

//ஓகே., வழங்கிடுவோம்..!//

சகோ.சிட்டிசன்!நீங்களா நாட்டாமை?அவ்வ்வ்வ்வ்வ்:)

நம்ம சகோ.சிராஜ் எங்கே போயிட்டாரு?பேட்டையிலேயே காணோம்!

தீர்ப்பையல்ல முதல்ல நாட்டமைய மாத்துங்க!அப்புறமா பேசிக்கலாம்:)

நீங்க முன்னாடியே தீர்ப்பை சொல்லியிருந்தீங்கன்னா கூட்டம் கலையறதுக்குள்ளேயே வாக்கெடுப்பு நடத்தியிருக்கலாம்.எல்லாரும் ஆட்டம் முடிஞ்சிடுச்சுன்னு துண்டை உதறிட்டு ஓடிட்டாங்களே!அதனால் பின்னூட்ட அடிப்படையில் பார்த்தால் வவ்வால்தான் அதிகம் பின்னூட்டம் போட்டிருக்கார்.எனவே தீர்ப்பை அவர் சார்பாகவே முடிச்சிடலாம்:)

யாரது அண்ணன் அனானி?
பரவாயில்லையே!வவ்வால் சால்மன் மீன் புடிக்கிறதையெல்லாம் கூட வேடிக்கை பார்க்கிறீங்களே!

வவ்வால் said...

ராஜ்,

அது என்ன ஆக்க பூர்வ ஆக்காத, பூர்வ சண்டை, சைவ முட்டைப்போலவா :-))

நரிக்கு நாட்டாமை கிடைச்சா நடு துண்டு எனக்குன்னு சொல்லுமாம், வந்திருக்க நாட்டாமையை பாருங்க, விளங்கிடும் :-))

நிறைய பின்னூட்டம் மட்டும் இல்லை ,எனது கேள்விகளுக்கு மழுப்பும் போதே ,நான் சொன்னது சரினு தெரிய வேண்டாமா?

இப்போ வரைக்கும் ஏன் ஜெர்மன் தேர்தலில் பாதி ய மட்டும் இந்தியாவுக்கு, அதன் பாதகத்தினை, எம்.ஏ.எம்.ராமசாமி கூட ராஜ்யசபா எம்பி ஆனதையும் உதாரணம் சொன்னேன்.தெளிவா சொன்னப்பிறகும் ,இனிமே எடுபடாதுனு எஸ்கேப் ஆகிட்டார் சு.பி :-))

அனானிகளுக்கு இதே பொழப்பா போச்சு, வந்து மீன் பிடிக்கிறத பார்த்தோமா ரெண்டு துண்ட கேட்டு வாங்கி சாப்பிட்டு போனோமானு இருக்கணும் ;-))

அனானி என்ன சொல்ல வரார்னா, சு.பி.ஜெர்மனிக்கே தேர்தல் பார்வையாளரா போய் எல்லாம் பார்த்துட்டு பதிவ போட்டு இருக்கார்னு ,அதானே :-))

நீங்க சொன்னாப்போல ஆட்டம் முடிஞ்சு தான் போச்சு...அடுத்த ஆட்டத்துக்கு டிக்கெட் கிழிக்க போயிட்டார் போல சு.பி :-))