Followers

Thursday, May 31, 2012

உடலுக்கு ஒன்பது வாசல் - ஆரோக்கியம்.



'நர்ஸ் கொடுத்த மருந்தை மட்டும் சாப்பிடாம ஸ்பூனையும் சேர்த்து ஏன்யா முழுங்குனே! கொஞ்சம் இருய்யா! எடுத்துர்ரேன்'

'ஐயோ டாக்டர்'

---------------------------------------------------------------------

நம் உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்வது நம் கையில்தான் இருக்கிறது. சிறிய தலைவலி, சிறிய தும்மல், சிறிய காய்ச்சல் என்று எது நம்மை தாக்கினாலும் உடன் ஒரு சாரிடானையோ, கால்பாலையோ போட்டு அந்த நேரத்துக்கு சுகமாகிக் கொள்கிறோம். எனது பாட்டி 'எந்த வியாதியுமே மூன்று நாட்கள் தான். பிறகு அதுவே நம் உடலை விட்டு சென்று விடும்' என்று சொல்லி கடைசி வரை மருத்துவ மனையை நாடாமலேயே இருந்து விட்டார். அவர் சிறு வயதில் சொன்ன ஆலோசனையை இன்று வரை கடைபிடித்து வருகிறேன். சவுதி வந்து இருபது வருடம் ஆகிறது. மூன்று அல்லது நான்கு முறைதான் மருத்துவமனைக்கே சென்றுள்ளேன். ஒரு முறை எலியை அடிக்க ஆக்ரோஷமாக ஓடி மேலிருந்து தவறி விழுந்து கையை முறித்துக் கொண்டேன். ஒரு மாதம் கையில் கட்டுடனே! ஒரு சாதாரண எலி என்னை அந்த சிரமத்துக்கு ஆளாக்கி விட்டது. :-) மற்றபடி ரத்த தானம் கொடுப்பதற்காக இரண்டு முறை மருத்துவமனை சென்றுள்ளேன். இவ்வளவு நாளும் ஆரோக்கியமாக எனது உடலை கொண்டு செல்ல சக்தி தரும் அந்த இறைவனுக்கே புகழ் அனைத்தும்.

எனக்கும் அவ்வப்போது சிறு சிறு தொந்தரவுகள் வருவதுண்டு. தலைவலி தொடர்ந்து இருந்தால் வலுக்கட்டாயமாக வாந்தி எடுத்து சில நிமிடங்களில் சகஜ நிலைக்கு வந்து விடுவேன். தும்மல் தொடராக வந்தால் ஐஸ் தண்ணி குடிப்பதை நிறுத்தி விடுவேன். எக்காரணத்தை முன்னிட்டும் தும்மலை நிறுத்த மருந்தோ மாத்திரைகளோ உட் கொள்ள மாட்டேன். தும்மல் வந்து சில நிமிடங்களில் உடல் புத்துணர்ச்சி ஏற்படுவதை நான் உணர்ந்துள்ளேன். எனவே தும்மல் நம் உடலில் நமக்கு நாமே பார்த்துக் கொள்ளும் மருத்துவம். அதனை தடுக்காமல் தொடர்ந்து தும்மி உடலை சகஜ நிலைக்கு கொண்டு வாருங்க்ள.

ஆனால் பன்றிக் காய்ச்சல் இது போன்று தொற்று வியாதிகள் பரவி வரும் நேரங்களில் நமக்கு தும்மலோ இருமலோ வந்தால் உடன் மருத்துவரை அணுக வேண்டும். குறைந்த பட்சம் துணிகளை கொண்டு தும்மும் போது அழுத்தி காற்றில் கிருமிகள் பரவாமல் தடுக்க முயற்ச்சிக்க வேண்டும். நமக்கு வரும் தும்மல் எந்த மாதிரியான தும்மல் என்பதை நாமே அறிவோம்.

அதே போல் காய்ச்சலும் மூன்று நாட்கள் முடிந்தும் தொடர்ந்தால் உடன் மருத்தவரை அணுக வேண்டும். எனவே நான் சொல்லும் காய்ச்சலும் தும்மலும் சாதாரண நாட்களில் நம்மைத் தாக்கும் போது அது போக்குக்கே விட்டு விடுவதே சரியானதாகும். மேலும் வயிற்றுப் போக்கு எப்போதாவது ஏற்பட்டால் வயிறு காலியாகும் வரை எதையும் சாப்பிட மாட்டேன். வெறும் தண்ணீர் அல்லது மோர்தான்: ஓரளவு வயிற்றுப் போக்கு நின்றவுடன் பழங்கள் தயிர்சாதம்தான் எனது மூன்று வேளை உணவாக இருக்கும். இரண்டு நாளில் அனைத்தும் சரியாகி விடும்.

மேலும் பசித்தால் சாப்பிடுங்கள். அதையும் அளவோடு சாப்பிடுங்கள். உப்பு, புளிப்பு, எரிப்பு, இனிப்பு இந்த நான்கையும் அளவுக்கதிமாக அதிகரிப்பது தப்பு. எனவே குறைத்துக் கொள்ளுங்கள். அடுத்து சாப்பிட்டவுடன் குறட்டை விட ஆரம்பித்து விடுகின்றனர். மதியம் சாப்பிட்டு உடன் படுக்கைக்கு செல்பவர்களை பார்த்துள்ளேன். இது தவறு. ஒரு மணி நேரம் நன்றாக தூங்கி விட்டு ஒரு குளியலை போட்டு விட்டு பிறகு சாப்பிடுங்கள். நன்கு பசியும் எடுக்கும். உடன் வேலைக்கும் சென்று விடுங்கள். சாப்பாடும் உடன் செரித்து விடும். தொப்பையும் வராது.

சமீபத்தில் ஒரு நண்பர் எனக்கு அனுப்பிய மெயிலில் திரு பாஸ்கரின் மருத்துவ குறிப்புகள் அடங்கிய ஒரு காணொளியை அனுப்பியிருந்தார். கிட்டத் தட்ட இன்று வரை நான் எவ்வாறு எனது உடலை பராமரிக்கிறேனோ அவை அனைத்தையும் உள்ளடக்கிய ஒரு பொக்கிஷமாக இந்த விளக்கவுரை அமைந்திருந்தது. நீங்களும் பார்த்து பயன் பெறுங்கள்.




தும்மலில் பல வகைகள். எவ்வளவு சுகமாக தும்முகிறார்கள். :-)




-----------------------------------------------------------------

உடல் ஆரோக்கியத்தைப் பற்றி இஸ்லாம் என்ன சொல்கிறது என்பதையும் பார்ப்போம்:


இறைவன் தும்மலை விரும்புகிறான்.கொட்டாவியை வெறுக்கிறான். (உங்களில்ஓருவர்) தும்பி அல்ஹம்துலில்லாஹ் (எல்லாப்புகழும் இறைவனுக்கே! ) என்று கூறினால்அவருக்கு எர்ஹமுக்கல்லாஹ் (இறைவன் உங்களுக்கு அருள்புரிவானாக)என்று கூறுவது அதை கேட்ட ஓவ்வொரு முஸ்லிமின் மீதும் கடமையாகும்.கொட்டாவி ஷைத்தானிடமிருந்த தான் ஏற்படுகிறது. முடிந்த அளவு அதை அவர்அடக்கிக்கொள்ளட்டும். ஏனெனில் கொட்டாவியால் ஹா என்று அவர் சப்தமிடும்போது அவரைக் கண்டு ஷைத்தான் சிரிக்கின்றான்.
அறிவிப்பாளர் : அபூஹுரைரா (ரலி), நூல் : புகாரி 6223

உங்களில் ஒருவர் தும்பினால் அல்ஹம்துலில்லாஹ் (எல்லாப்புகழும்அல்லாஹ்வுக்கு) என்று கூறட்டும். அவருடைய சகோதரர் அல்லது அவரதுநண்பர் அவருக்கு எர்ஹமுக்கல்லாஹ் (இறைவன் உங்களுக்குஅருள்புரிவானாக) என்று கூறட்டும். எர்ஹமுக்கல்லாஹ் என்று அவர் கூறினால்(தும்பியவர்) அவருக்கு யஹ்தீகுமுல்லாஹு வயுஸ்லிஹு பாலகும் (இறைவன் உங்களுக்கு நேர்வழி காட்டுவானாக. உங்கள் நிலையை சீர்செய்வானாக.) என்றுகூறட்டும்.
அறிவிப்பாளர் : அபூஹுரைரா (ரலி), நூல் : புகாரி 6224

ஒரு முஸ்லிம் (இன்னொரு முஸ்லிமுக்கு செய்ய வேண்டிய கடமைகள் ஐந்து.
1. சலாமிற்கு பதில் சொல்லுதல்.
2. நோயாளியை நலம் விசாரித்தல்.
3. இறந்த உடலை பின்தொடர்ந்து செல்லுதல்.
4. விருந்தின் அழைப்பை ஏற்றுக்கொள்ளுதல்.
5. தும்பியவருக்கு எர்ஹமுக்கல்லாஹ்(இறைவன் உங்களுக்கு அருள் புரிவானாக) என்று கூறுதல்.
அறிவிப்பாளர் : அபூஹுரைரா (ரலி), நூல் : புகாரி (1240)

இறைவனின் தூதர் சொன்னார்கள்:"மனிதன் தன் வயிற்றைவிட மோசமான எப்பாத்திரத்தையும் நிரப்புவதில்லை. ஆதமின் மகன் தன் முதுகை நிமிர்த்தி வைத்துக்கொள்ள சில கவளங்களே போதுமானவை. இதைவிட அதிகமாக உண்ண வேண்டியிருந்தால் மூன்றிலொரு பாகம் உணவும், மூன்றிலொரு பாகம் தண்ணீரும் உட்கொண்டு மீதி மூன்றிலொரு பாகத்தைக் காற்றாக (காலியாக) விட்டு விடட்டும். (நூல்: மஸ்னத்)

"வருமுன்னர்க் காவாதான் வாழ்க்கை எரிமுன்னர்
வைத்தூறு போலக் கெடும்" (குறள்)
நோய் வந்த பின் சிகிச்சைக்காக போவதை விட வராமல் வழிமுறைகளை முதலில் தெரிந்து கொள்ள வேண்டும்.


20 comments:

கோவி.கண்ணன் said...

ஒன்பது வாசலில் பின்வாசல் வழியாக வாயுபிரிதல் பற்றி கூட குரானோ நபிமொழியோ இருக்கிறதா ?

:)

suvanappiriyan said...

//ஒன்பது வாசலில் பின்வாசல் வழியாக வாயுபிரிதல் பற்றி கூட குரானோ நபிமொழியோ இருக்கிறதா ?//

‘உங்களில் ஒருவருக்கு ‘ஹதஸ்’ ஏற்பட்டால் (மறு) ஒளூ செய்யாதவரை அவரது தொழுகையை அல்லாஹ் ஏற்றுக் கொள்ள மாட்டான்’ என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். இதை அபூஹுரைரா(ரழி) அவர்கள் எடுத்துச் சொல்லும் போது, ‘ஹலரமவ்து’ என்ற ஊரைச் சேர்ந்த ஒரு மனிதர் “அபூஹுரைராவே! ஹதஸ் என்றால் என்ன?” என்று கேட்டார். அதற்கு அபூஹுரைரா(ரழி) அவர்கள், “ஓசையுடனோ, ஓசையின்றிவோ (பின் துவாரத்திலிருந்து) வெளிப்படும் காற்று” என விளக்கம் தந்தார்கள்.
நூல்கள் : புகாரி, முஸ்லிம். அஹ்மத்

உங்களில் ஒருவர் தொழுது கொண்டிருக்கும் போது தனது வயிற்றுக்குள் இறைச்சலை உணர்ந்து தான் ஹதஸ் ஆகிவிட்டோமா அல்லது ஹதஸ் ஆகவில்லையா என்று சந்தேகம் கொண்டால் அவர் சப்தத்தை கேட்கின்ற வரை அல்லது நாற்றத்தை உணர்கின்ற வரை தொழுகையை முறிக்க வேண்டாம் என்று அல்லாஹ்வின் திருத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) அவர்கள். ஆதாரம் : அபூதாவுத்

2119. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
"உங்களில் ஒருவர் ஜமாஅத்துடன் தொழுவது அவரின் வீட்டிலோ கடைவீதியிலோ தனியாகத் தொழுவதை விட இருபதுக்கும் அதிகமான மடங்கு சிறந்ததாகும்! ஏனெனில், அவர் உளூச் செய்து, அதை அழகுறச் செய்து, பிறகு பள்ளிவாசலுக்கு வருகிறார். தொழுகையைத் தவிர வேறு எதையும் அவர் நாடவில்லை; தொழுகையைத் தவிர வேறு எதுவும் அவரை (பள்ளி வாசலுக்கு) எழுந்து செல்ல வைக்கவில்லை! அவர் எடுத்து வைக்கும் ஒவ்வொரு காலடிக்கும் ஒரு படித்தரம் (அந்தஸ்து) அவருக்கு உயர்த்தப்படுகிறது; அல்லது ஒரு தவறு அவரைவிட்டு நீக்கப்படுகிறது! மேலும், உங்களில் ஒருவர் தொழக்கூடிய இடத்தில் அமர்ந்திருக்கும் வரை வானவர்கள் அவருக்காக பிரார்த்திக்கின்றனர்! அங்கே, அவரின் காற்றுப்பிரிந்து, உளூ நீங்கிவிடாமலிருக்கும் வரை (பிறருக்குத்) துன்பம் தரும் எதையும் அவர் செய்யாமலிருக்கும் வரை. 'இறைவா! இவர் மீது கருணை செய்வாயாக! இவருக்கு இரக்கம் காட்டுவாயாக!' என்று வானவர்கள் பிரார்த்திக்கிறார்கள்! உங்களில் ஒருவர் தொழுகைக்காகக் காத்திருக்கும் வரை அவர் தொழுகையிலேயே இருக்கிறார்!"
என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
Volume :2 Book :34

திருவாளப்புத்தூர் முஸ்லீம் said...

அவசியம் படிக்கவேண்டிய பதிவு......

//ஒன்பது வாசலில் பின்வாசல் வழியாக வாயுபிரிதல் பற்றி கூட குரானோ நபிமொழியோ இருக்கிறதா ?// -அது எப்படி சுவனபிரியன் மதகட்டுரை எழுதினாலும் பொது கட்டுரை எழுதினாலும் எல்லாம் தெரிந்த லாடு லபகுதாஸ் மாதிரி வாய விடுறீங்க கோ.கண்ணன் ...எப்படியாவது உங்க ப்ளாக் famous ஆகணும் அதானே ...

ராஜ நடராஜன் said...

உஷ்1ன்னு ஒரு சத்தம் போட்டா எலி ஓடிடப் போகுது.அது கூடவெல்லாமா வடிவேலு மாதிரி ஓடிப்பிடிச்சு விளையாடறது:)

நம்ம ஊர்ல மண்ணை வாரி தூற்றும் பெண்கள் மாதிரி இங்கே மண்ணே மனுசன் மீது வாரி அடிக்கும் குப்பைக்கும் கூட எனக்கு தும்மல் வருவதில்லை.

உங்கள் தொடர் பாணியோடு கலந்து நீங்க முன்பு ஒரு முறை தொழுகை பற்றி சொல்லியது நினைவுக்கு வருகிறது.ஐந்து வேளை தொழுகை கூட ஒரு வித உடற்பயிற்சியே என்பதால் மண் வாரித்தூற்றும் இந்த தேசங்களின் சரியான சுவாச முறைக்கு தொழுகை முறை அவசியமான ஒன்று.

ஆனால் இவற்றையும் மீறி பணக்கார நாடுகளின் பணக்கார நோய்கள் இங்கே நிறைந்தே கிடக்கின்றன.முக்கியமாக அதிக எடை பருமன் உடல்,சர்க்க்ரை,கொழுப்பு,குடலில் கல் என்பவை சர்வசாதாரணமாக நிலவுவதை எனக்கு உடல் சீர்கேடு இல்லாவிட்டாலும் உடல் நோய்வாய்ப்பட்டவர்களை காண செல்லும் போது காண நேரிடுகிறது.

தேநீர்,துருக்கிய காபி போன்றவை தேசிய பானம் மாதிரியே தோன்றுகிறது.எத்தனை விதமான சாக்லெட் மற்றும் உணவுப்பொருட்கள்.இவற்றிலிருந்து நோய் வாய்படாமல் இயங்குவதென்பது சவாலே.

நம்ம ஊர்ப்பக்கம் கிடைக்கும் கறிமசால் பட்டை,துளசி,ரோஸ் வாட்டர் இன்னும் பல நீராக பாட்டிலில் விற்கிறார்கள்.இவற்றையெல்லாம் பால்,மோர்,பழரசங்கள்,தேநீர் என்று யாரும் கலந்து குடிப்பதில்லை.நான் அப்படித்தான் பருகுகிறேன்.நீங்களும் முயற்சி செய்யலாம்:)

suvanappiriyan said...

சகோ திருவாளப்புத்தூர் முஸ்லிம்!

//அது எப்படி சுவனபிரியன் மதகட்டுரை எழுதினாலும் பொது கட்டுரை எழுதினாலும் எல்லாம் தெரிந்த லாடு லபகுதாஸ் மாதிரி வாய விடுறீங்க கோ.கண்ணன் ...எப்படியாவது உங்க ப்ளாக் famous ஆகணும் அதானே ...//
நான் பிளாக் எழுத தொடங்கிய காலம் முதல் கோவி கண்ணனோடு நட்பு தொடர்கிறது. கொள்கையில் நேர் எதிராக இருந்தாலும் ஒருவரையொருவர் கருத்தை கண்ணியமான முறையில் பரிமாறிக் கொண்டே வந்துள்ளோம்.

மேலும் அவரது பிளாக் ஏற்கெனவே பிரபலமாகத்தன் உள்ளது. எல்லோரும் படிப்பதற்குத்தானே பதிவு எழுதுகிறோம். சிலர் நகைச்சுவையாக கேட்பர். சிலர் சீரியஸாக கேட்பர். தருமி போன்றவர்கள் நாத்திகக் கருத்துகளோடு கேட்பர். அனைத்துக்கும் பதில் இருக்கிறது. கோபத்தை காட்டாமல் அவர்கள் வைக்கும் வாதங்களுக்கு கண்ணியமான முறையில் பதிலளிப்போம்.

வருகைக்கு; கருத்துக்கும நன்றி!

suvanappiriyan said...

சகோ ராஜநடராஜன்!

//உஷ்1ன்னு ஒரு சத்தம் போட்டா எலி ஓடிடப் போகுது.அது கூடவெல்லாமா வடிவேலு மாதிரி ஓடிப்பிடிச்சு விளையாடறது:)//

ஹா...ஹா...அதுபாட்டுக்கு அது வழியிலே போயிருந்தா நான் ஏன் அடிக்க போரேன். நன்றாக தூங்கிக் கொண்டிருக்கும் போது 'டொக்....டொக்....டொக்' என்று ஒரு மரத்தை நன்கு சத்தத்தோடு கடித்து ஓட்டைப் போடும்போது தூக்கம் கெடுகிறதல்லவா? அந்த வேகத்தில் பாதி தூக்கத்தில் சென்று வம்பில் மாட்டிக் கொண்டேன். :-)

//உங்கள் தொடர் பாணியோடு கலந்து நீங்க முன்பு ஒரு முறை தொழுகை பற்றி சொல்லியது நினைவுக்கு வருகிறது.ஐந்து வேளை தொழுகை கூட ஒரு வித உடற்பயிற்சியே என்பதால் மண் வாரித்தூற்றும் இந்த தேசங்களின் சரியான சுவாச முறைக்கு தொழுகை முறை அவசியமான ஒன்று.//

ஒத்துக் கொள்கிறேன்.

//நம்ம ஊர்ல மண்ணை வாரி தூற்றும் பெண்கள் மாதிரி இங்கே மண்ணே மனுசன் மீது வாரி அடிக்கும் குப்பைக்கும் கூட எனக்கு தும்மல் வருவதில்லை.//

அப்போ உடம்பு நல்ல கண்டிஷனில் இருக்கிறது. சந்தோஷப்படுங்கள்.

//நம்ம ஊர்ப்பக்கம் கிடைக்கும் கறிமசால் பட்டை,துளசி,ரோஸ் வாட்டர் இன்னும் பல நீராக பாட்டிலில் விற்கிறார்கள்.இவற்றையெல்லாம் பால்,மோர்,பழரசங்கள்,தேநீர் என்று யாரும் கலந்து குடிப்பதில்லை.நான் அப்படித்தான் பருகுகிறேன்.நீங்களும் முயற்சி செய்யலாம்:)//

ஆலோசனைக்கு நன்றி! எவ்வளவோ செலவு பண்ணும் நாம் பழங்களை வாங்க ஏனோ யோசிப்போம். இயற்கையான பழங்கள் உடல் ஆரோக்கியத்துக்கு மிக நல்லது.

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!

அதிரை சித்திக் said...

சரியாக சொன்னீர்கள் ..சகோ ,சுவனபிரியன் ..

நண்பர் கோபி .கண்ணன் அவர்களின் குறும்பான

கேள்விக்கு சரியான பதில் தந்தீர்கள் ..மார்க்க விசயத்தில்

ஒருவர் கேட்கும் கேள்விக்கு ..உணர்ச்சி வசப்படாமல்

கேள்வி கேட்பவர் மனம் தெளிவு பெறும்விதமாக பதில் கூறி ..,

நாம் இன்னும் கொஞ்சம் நாகரீகமாக கேட்டுஇருக்கலாமே

என்றுகேள்வி கேட்டவர் விக்கித்து போகும் அளவிற்கு பதில் இருக்க வேண்டும்

அதனை சுவன பிரியன் மிகவும் அற்புதமாக கையாண்டு இருக்கிறார் ,,

திரு பாஸ்கரின விளக்கம் அற்புதம் ..சர்க்கரை வியாதி பற்றி

திரு பாஸ்கரின் உரை கிடைக்குமாயின் ஒரு ஆக்கம் வெளியிட்டால்

என் போன்றவர்களுக்கு பயனுள்ளதாக அமையும் ...நன்றி வாழ்த்துக்கள் ..,

suvanappiriyan said...

சகோ அதிரை சித்திக்!

//நண்பர் கோபி .கண்ணன் அவர்களின் குறும்பான

கேள்விக்கு சரியான பதில் தந்தீர்கள் ..மார்க்க விசயத்தில்

ஒருவர் கேட்கும் கேள்விக்கு ..உணர்ச்சி வசப்படாமல்

கேள்வி கேட்பவர் மனம் தெளிவு பெறும்விதமாக பதில் கூறி ..,//

முகமது நபியிடத்திலும் பலர் குதர்க்கமாக கேள்வி கேட்டும் அமைதியாகவே உணர்ச்சி வசப்படாமல் பதிலளித்திருக்கிறார்கள். இந்த வழிமுறையை ஏனோ பலரும் கடைபிடிப்பதில்லை.

//திரு பாஸ்கரின விளக்கம் அற்புதம் ..சர்க்கரை வியாதி பற்றி

திரு பாஸ்கரின் உரை கிடைக்குமாயின் ஒரு ஆக்கம் வெளியிட்டால்

என் போன்றவர்களுக்கு பயனுள்ளதாக அமையும் ...நன்றி வாழ்த்துக்கள் ..,//

கிடைத்தால் வெளியிடுகிறேன் இன்ஷா அல்லாஹ்!

Anonymous said...

சிறந்த இடுகை! கார்ட்டூனைப் பார்த்து உடன் சிரித்து விட்டேன். :-)))))))))))))))))

-அன்வர்-ரியாத்.

suvanappiriyan said...

சகோ அன்வர்!

//சிறந்த இடுகை! கார்ட்டூனைப் பார்த்து உடன் சிரித்து விட்டேன். :-)))))))))))))))))//

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!

kamalakkannan said...

நண்பர் சுவனப்ரியன் எந்த கட்டுரை எழுதினாலும் பிரிக்க முடியாதது ஒன்று "இஸ்லாம் மார்க்கம் சம்பந்தமான கருத்துக்கள் " இரண்டு "கோவி " அண்ணன் கருத்துக்கள் :)

Anonymous said...

"ஒன்பது வாசலில் பின்வாசல் வழியாக வாயுபிரிதல் பற்றி கூட குரானோ நபிமொழியோ இருக்கிறதா?"
இப்பதிவில் பல நல்லவிசயங்கள் இருக்கும்போது இப்படி ஒரு கேள்வி கேட்க சாதாரண சிந்திக்கும் திறன் உள்ளவர்களுக்கு தோன்றாது. கோவி போல உள்ள அதிமேதாவிகளுக்கு மட்டும் தான் தோன்றும் என நினைக்கிறேன்.எப்படி குதர்க்கமாக கேள்வி கேட்டாலும் அருமையான முறையில் பதில் தந்துள்ளீர்கள்.சகோ சுவனப்பிரியன் உங்களின் இப்பணி மேலும் சிறக்க இறைவன் உங்களுக்கு துணை புரிவானாக.
kalam.

suvanappiriyan said...

நண்பர் கமல கண்ணன்!

//நண்பர் சுவனப்ரியன் எந்த கட்டுரை எழுதினாலும் பிரிக்க முடியாதது ஒன்று "இஸ்லாம் மார்க்கம் சம்பந்தமான கருத்துக்கள் " இரண்டு "கோவி " அண்ணன் கருத்துக்கள் :)//

மார்க்கமோ அல்லது மதமோ நமது வாழ்வில் பிரிக்க முடியாத ஒன்று. நீங்கள் அதை விட்டு விலகி ஓடினாலும் அது உங்களைத் துரத்திக் கொண்டே வரும். எனவே பல சமூகங்கள் கலந்த இந்திய சூழலில் ஒவ்வொரு செயலையும் மார்க்கத்தோடும் மதத்தோடும் ஒப்பீடு செய்வது அவசியமாகிறது. நாம் செல்வது சரியான பாதைதானா? அல்லது மூடப்பழக்கங்களை பின்பற்றுகிறோமா? என்பதை எல்லாம் சீர் தூக்கிப் பார்த்து நமது வாழ்க்கையை அமைத்துக் கொள்ள இது போன்ற சம்பவங்கள் நமக்கு உதவுகின்றன.

கோவிக் கண்ணன் சில நேரம் ஹாஸ்யமாக கேட்பார்: சில நேரம் சீரியஸாகக் கேட்பார்: அதற்கு தக்கவாறு நானும் பதில் சொல்கிறேன். இந்த கேள்விகளினால் நானும் சில விபரங்களைத் தெரிந்து கொள்கிறேன்.:-)

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!

suvanappiriyan said...

சகோ கலாம்!

//எப்படி குதர்க்கமாக கேள்வி கேட்டாலும் அருமையான முறையில் பதில் தந்துள்ளீர்கள்.சகோ சுவனப்பிரியன் உங்களின் இப்பணி மேலும் சிறக்க இறைவன் உங்களுக்கு துணை புரிவானாக.//

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!

suvanappiriyan said...

வினவு தளத்தில் சில நேரங்களில் அருமையான இடுகைகள் வந்து விடுவதுண்டு. அவற்றில் இதுவும் ஒன்று.

http://www.vinavu.com/2012/06/02/conversion-15/

suvanappiriyan said...

தருமி சார்!

//ரஷ்யர்கள், யூதர்கள் - இவர்களைத் தாண்டி இவர் வென்றிருப்பது பெரிய விஷயம்.//

ஆனந்த் பிராமணர் ஆச்சே! யூதர்களின் ஒரு பிரிவுதான் தாங்கள் என்றும் தங்களின் பூர்வீக உறவுகள் இஸ்ரேலியர்கள் என்றும் முன்பு திரு டோண்டு ராகவன் பதிவிட்டதாக ஞாபகம். எனவே பரிசு சேரும் இடம் நோக்கியே சென்றுள்ளது.

Nasar said...

அஸ்ஸலாம் அலைக்கும்...சுவன் (ஐ ..!!பேரு நல்லாயிருக்கில்ல)
சகோ:அதிரை சிதிக்கின் கமெண்டை வழிமொழிகிறேன் ....
சகோ: சுவன், போன குளிர்காலத்தில் வியாபாரம் கம்மி அதலாலே அதிகமாக பதிவுகள் எழுதறேன்னு சொன்னிங்க இப்ப வெயில் காலமாச்சே வியாபாரம் அதிகமாக இருக்குமே ..!! எப்படி தொடர்ந்து பதிவுகள எழுதுறிங்க ??!! வியப்பாக இருக்கிறது... எனக்கு வாரத்தில் இரண்டு நாட்கள் லீவு அப்படியிருந்தும் நேரமே பத்தவில்லை (பொறாமை ??!! ஆஹா ஆஹா ..)
சென்ற பதிவின் முதல் கமெண்டும்,இந்த பதிவின் முதல் கமெண்டும் ஒருவரே ..அன்னாருக்கு கோவம்படாமல் பொறுமையாக, அழகாக பதில் சொல்லும் விதம் SUPER..

suvanappiriyan said...

வஅலைக்கும் சலாம்! சகோ நாஸர்!

//சகோ: சுவன், போன குளிர்காலத்தில் வியாபாரம் கம்மி அதலாலே அதிகமாக பதிவுகள் எழுதறேன்னு சொன்னிங்க இப்ப வெயில் காலமாச்சே வியாபாரம் அதிகமாக இருக்குமே ..!!//

இப்போ பரீட்சை நடந்து பள்ளிகள் விடுமுறை விட ஆரம்பித்து விட்டதே! வழக்கம்போல் சவுதிகள் குடும்பத்தோடு வெளிநாடுகளுக்கு சுற்றுப் பயணம் செல்வதால் மறுபடியும் வியாபாரம் சுமார்தான். :-) அடுத்து வியாபாரம் நன்றாக நடந்தாலும் எனது வேலை ஐந்து பிராஞ்சுகளின் கணக்குகளை கணிணியில் ஏற்ற வேண்டும். அது ஒரு நாளில் மூன்று மணி அல்லது நான்கு மணி நேரத்தில் முடிந்து விடும். பிறகு சம்பளம் போடும் போது கொஞ்சம் வேலை பெண்டு எடுக்கும். மற்ற நாட்களில் நேரம் கிடைக்கும் போது சினிமாக்களை பார்க்காமல் பதிவு எழுத உட்கார்ந்து விடுவேன்.

//எனக்கு வாரத்தில் இரண்டு நாட்கள் லீவு அப்படியிருந்தும் நேரமே பத்தவில்லை (பொறாமை ??!! ஆஹா ஆஹா ..) //

வாரத்தில் இரண்டு நாள் லீவா? கொடுத்து வைத்தவர். எனக்கு வெள்ளிக் கிழமை ஒரு நாள்தான்.

//சென்ற பதிவின் முதல் கமெண்டும்,இந்த பதிவின் முதல் கமெண்டும் ஒருவரே ..அன்னாருக்கு கோவம்படாமல் பொறுமையாக, அழகாக பதில் சொல்லும் விதம் SUPER..//

பதில் இல்லாவிட்டால்தான் கோபம் வரும். பதில் இருக்கும் போது தருவதுதானே சிறப்பு.

வருகைகக்கும் கருத்துக்கும் நன்றி!

கோவி.கண்ணன் said...

சுவனப்பிரியர், உங்க கருத்துகளில் 99.99 விகிதம் உடன்பாடுகள் இல்லாவிட்டாலும் உங்க கார்டூன்கள் ரசிக்கத் தக்கதாக இருக்கிறது என்று பாராட்டுகிறேன், வரையும் திறமை 100ல் ஒருவருக்கு வாய்ப்பதே கொடுப்பினை, படங்கள் மிகவும் சிறப்பாக உள்ளது என்று சொல்ல முடியாவிட்டாலும், அதில் உங்கள் திறன் நன்றாகத்தான் இருக்கிறது, பயிற்சி எடுத்தால் நல்ல கார்டூனிஸ்டாக வர உங்களால் முடியும். உங்க திறமை போற்றத் தக்கது. மீண்டும் பாராட்டுகள், மேலும் திறமையை மெருகூட்டுக.

suvanappiriyan said...

//சுவனப்பிரியர், உங்க கருத்துகளில் 99.99 விகிதம் உடன்பாடுகள் இல்லாவிட்டாலும் உங்க கார்டூன்கள் ரசிக்கத் தக்கதாக இருக்கிறது என்று பாராட்டுகிறேன், வரையும் திறமை 100ல் ஒருவருக்கு வாய்ப்பதே கொடுப்பினை, படங்கள் மிகவும் சிறப்பாக உள்ளது என்று சொல்ல முடியாவிட்டாலும், அதில் உங்கள் திறன் நன்றாகத்தான் இருக்கிறது, //

ஆஹா...கோவிக் கண்ணனிடம் இருந்து பாராட்டா.... திருநாவுக்கரசு என்ற தமிழ் வாத்தியார்தான் எனது கார்ட்டூன்கள் வரையும் திறமைக்கு ஊக்கம் கொடுத்தவர். தற்போது சிங்கையில்தான் தமிழ் ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.

பாராட்டுக்கு நன்றி!