'வான்நோக்கி வாழும் உலகெல்லாம் மன்னவன்
கோல்நோக்கி வாழும் குடி.
-குறள் 55:542
என்கிறார் வள்ளுவர். அதாவது உலகில் எல்லா உயிர்களும் வானத்திலிருந்து பொழியும் மழையை நம்பி வாழ்கின்றனர். அதே போல் அரசனது நடுவுநிலையான நீதி நெறியை நம்பிக் குடி மக்கள் வாழ்கிறார்கள். மழை இல்லாவிட்டால் வாழ்க்கை இல்லை. அரசனது செங்கோல் சரியில்லை என்றால் குடி மக்கள் துன்பத்தை அனுபவிப்பர் என்கிறார் வள்ளுவர்.
தனது அரசின் ஓராண்டு கால சாதனையை விளக்கி ஜெ அரசு இந்தியா முழுக்க பத்திரிக்கை விளம்பரம் கொடுத்ததில் அரசுக்கு செலவு 25 கோடி ரூபாயாம். சென்னை டெல்லி மும்பை போன்ற பெரு நகரங்களில் வெளியாகும் தேசிய பத்திரிக்கைகளுக்கு முழு பக்க விளம்பரத்தைக் கொடுத்து பிரமாதப் படுத்தியிருக்கிறார் ஜெயலலிதா. அடுத்த பிரதமராக டெல்லியில் உட்காரும் ஆசை அம்மையாருக்கு வந்து விட்டதோ என்னமோ தெரியவில்லை. :-(.
இவர் ஆட்சிப் பொறுப்பேற்றவுடன் செய்த முதல் சாதனை புதிய சட்டமன்றத்தை மாற்றி பழைய சட்டமன்றத்துக்குள் குடியேறியது. இதில் எத்தனை கோடி வீணாக்கப்பட்டிருக்கும் என்று சொல்லத் தேவையில்லை. பால் உயர்வு, பேரூந்து கட்டண உயர்வு, மின் தடை, விலைவாசி உயர்வு, ரவுடிகள் ராஜ்ஜியம், என்று இவரது சாதனை பட்டியல் தொடர்ந்த வண்ணமாகவே உள்ளது. நேற்று கூட நமது மரியாதைக்குரிய நித்தியானந்த சுவாமிகளும் அம்மாவின் ஆசியோடுதான் தான் மதுரை ஆதீனமாக பதவி ஏற்றுள்ளேன் என்று அம்மாவின் அடுத்த சாதனையையும் பட்டியலிடுகிறார்.
மற்றொரு சாதனையாக இலவசங்களை வாரி வழங்குகிறார். இதனால் அரசு கஜானா அபாயத்தை நோக்கி சென்று கொண்டிருக்கிறதே என்ற கவலை எல்லாம் இவருக்கு இல்லை. காலியான கஜானாவை நிரப்ப நமது குடி மகன்கள் தயாராகவே இருக்கின்றனர். ஒரு தலைமுறையே குடிக்கு அடிமையாகி சமூகத்தை சின்னாபின்னமாக்கிக் கொண்டிருக்கிறது.
இன்று வந்த பத்திரிக்கை செய்தியை பாருங்கள்:
விழுப்புரம்: குடிபோதையில் டிரைவர் லாரியை ஓட்டியதால் 2 மாணவர்கள் பலியானார்கள். விழுப்புரம் அருகே டி என் 27 இ 7565 என்ற பதிவெண் கொண்ட லாரி அதிவேகத்தில் சென்று டிரான்ஸ்பார்மர்கள் மீது உரசியது. பின் நிற்காமல் தறி கெட்டு சென்ற லாரி யமஹா வாகனத்தில் சென்று கொண்டிருந்த வேல்முருகன் என்ற பாலிடெக்னிக் மாணவன் மீது மோதி விட்டு சென்றது. இதில் சம்பவ இடத்தில் வேல்முருகன் பலியானார். சிறிது தொலைவு சென்ற லாரி நடந்து கொண்டிருந்த நெல்லையை சேர்ந்த சிவ வடிவேல் என்ற ஐ.டி.ஐ., மாணவன் மீது மோதியது. வடிவேலுவும் சம்பவ இடத்திலேயே பலியானார். இதனால் ஆத்திரமடைந்த பொது மக்கள் லாரியை நிறுத்த முயற்சி செய்தனர். இருந்தபோதிலும் அங்கிருந்து தப்பி சென்ற லாரி பள்ளத்தில் கவிழ்ந்து நின்றது. டிரைவர் தப்பியோட முயற்சி செய்தார். ஆனால் பொது மக்கள் அவரை பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். போலீசார் விசாரணையில் டிரைவர் காங்கேயத்தை சேர்ந்த மணி என்பதும், அவர் குடிபோதையில் இருந்ததும் தெரியவந்தது. வில்லியனூர் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இறந்த அந்த மாணவச் செல்வங்களின் பெற்றோர் பெற்ற அந்த இழப்பை எத்தனை லட்சம் கொடுத்தாலும் ஈடு செய்ய முடியுமா?
டாஸ்மார்க் கடைகளை இன்னும் எந்த அளவு லாபத்தில் இயக்கலாம் என்று தற்போது அரசு யோசித்து வருகிறதாம். ரேஷன் கடைகளிலும் இனி சாராயம் கிடைத்தாலும் ஆச்சரியப்படுவதற்க்கில்லை.
வறுமைக் கொட்டுக்கு கீழ் உள்ள மக்களை அதிகமாகக் கொண்ட ஒரு மாநிலத்தின் ஆட்சியாளர் இவ்வாறு ஊதாரித் தனமாக செலவுகள் செய்யலாமா என்றும் சாராயக் கடைகளை இந்த அளவு பெருக விடலாமா என்றும் கேட்க வேண்டியவர்கள் சட்டமன்றத்தில் கேட்கட்டும். இது தான் நம்மால் முடிந்தது.
ஊதாரித் தனமாகச் செலவுகளை செய்து விட்டு துண்டு விழும் பட்ஜெட்டுக்கு உடன் உலக வங்கியில் வட்டிக்கு பணம் வாங்கி சரி கட்டும் நமது அரசுக்கு எச்சரிக்கையாக வருகிறது இந்தக் கட்டுரை.
திவாலாகும் யூரோ தேசங்கள்!
இந்த நிலை நீடித்துக் கொண்டே போனால் இன்னும் ஒரு 20 அல்லது 30 ஆண்டுகளில் வட நாட்டு பாலை நிலங்கள் போல் நமது தமிழ்நாடும் மாறினாலும் ஆச்சரியப்படுவதற்க்கில்லை. அந்த நிலை நான் பிறந்த மண்ணான தமிழகத்துக்கு வராது இருக்க எல்லோருக்கும் பொதுவான அந்த ஏக இறையிடம் பிரார்த்திக்கிறேன்.
இறைத்தூதர் அவர்கள் கூறினார்கள்’ “நீங்கள் ஆட்சிப் பதவியை அடைய பேராசைப்படுகின்றீர்கள். ஆனால், மறுமை நாளில் அதற்காக வருத்தப்படுவீர்கள். பாலூட்டும் சுகங்களிலேயே பதவிப் பால் தான் இன்பமானது. பாலை மறக்க வைப்பதன் துன்பத்திலேயே பதவிப் பாலை நிறுத்துவதுதான் மோசமானது.”
- (அறிவிப்பாளர்: அபூ ஹுரைரா, புகாரி 7148)
11 comments:
ஆட்சி மாறினாலும் ..,காட்சி மாறவில்லை ..
25 கோடி விளம்பரத்திற்கு செலவிட பட்டது
அதிசயதக்க விஷயம் ஒன்றும் இல்லை இவர்கள்
நூறு ரூபாய் நல திட்டத்திற்கு .ஆயிரம் ரூபாய் க்கு
விளம்பரம் செய்வார்கள் ..இந்தியாவிற்குள் மட்டும்
விளம்பரம் செய்ததை எண்ணி சந்தோஷ படுவோம்
விட்டால் அம்மா உலகம் முழுவதும் நாளிதழ்களில்
விளம்பரம் செய்து அரசு பணத்தினை அள்ளி இறைத்து விடும்
சகோ அதிரை சித்திக்!
//விட்டால் அம்மா உலகம் முழுவதும் நாளிதழ்களில்
விளம்பரம் செய்து அரசு பணத்தினை அள்ளி இறைத்து விடும்//
நீங்கள் சொல்வதும் நடந்தாலும் நடக்கும்.
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!
படங்கள் பல கதைகள் சொல்கின்றன.மிச்சம் மீதியை நீங்கள் சொல்லிவிட்டீர்கள்!
சகோ ராஜ நடராஜன்!
//படங்கள் பல கதைகள் சொல்கின்றன.மிச்சம் மீதியை நீங்கள் சொல்லிவிட்டீர்கள்!//
வருங்கால இளைய தலைமுறையையும் நமது அரசியல்வாதிகளையும் நினைத்தால் மிகுந்த கவலையாக இருக்கிறது. மாற்றம் எப்படி வரும் என்றும் தெரியவில்லை.
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!
இந்தியாவின் நாணயமான ரூபாயின் மதிப்பு அமெரிக்க டாலருக்கு எதிராக தொடர்ச்சியாக சமீபகாலமாக வீழ்ச்சியை சந்தித்து வருகிறது.
இன்று புதன்கிழமை இந்திய நாணயச் சந்தையில் டாலருக்கெதிரான இந்திய ரூபாயின் மதிப்பு ஒரு கட்டத்தில் ஒரு டாலருக்கு 54.46 என்ற அளவுக்கு வீழ்ந்து, பின்னர் இந்திய ரிசர்வ் வங்கியின் தலையீட்டால் சற்று மீண்டது.
இந்த மாதிரியான வீழ்ச்சிக்கு, இந்தியாவின் ஏற்றுமதிகளில் ஏற்பட்டிருக்கும் சரிவும், இறக்குமதிகள் தொடர்பான செலவு அதிகரித்திருப்பதும் ஒரு காரணம் என்று பொருளாதாரப் பகுப்பாய்வாளர் பேராசிரியர் ஸ்ரீநிவாசன் தமிழோசையிடம் கூறினார்.
பேராசிரியர் ஸ்ரீநிவாசன்
'இந்திய அரசின் பொருளாதார நிர்வாகத்தில் தவறு'
இந்திய ரூபாயின் வீழ்ச்சிக்கு அரசின் பொருளாதார நிர்வாகத்தில் இருக்கின்ற தவறே முக்கிய காரணம் என்று சுட்டிக்காட்டுகிறார் பேராசிரியர் ஸ்ரீநிவாசன்
ஏற்றுமதிகள் சரிவுக்கு ஐரோப்பிய பொது நாணய நாடுகளிடையே (யூரோ வலயம்) நிலவும் பொருளாதாரப் பிரச்சினைகளும் ஒரு பகுதிக் காரணம் என்று அவர் குறிப்பிட்டார்.
'ஆனால் ஏற்றுமதியைப் பொறுத்தவரை, இந்தியாவில் உற்பத்திச் செலவுகள் அதிகமாகிவிட்டதே காரணம். உதாரணமாக, ஆயத்த ஆடைகள் ஏற்றுமதியில் பங்களாதேஷ் போன்ற அண்டை நாடுகளிடம் இந்தியா சந்தைகளை இழந்துவருவதற்கு பங்களாதேஷில் உற்பத்திச் செலவுகள் இந்தியாவைவிட குறைவு என்பதே காரணம்' என்று பேராசிரியர் ஸ்ரீநிவாசன் கூறினார்.
இறக்குமதிகளைப் பொறுத்தவரை, இந்தியாவின் எண்ணெய் இறக்குமதிகள் பெரும் செலவை ஏற்படுத்திவருகின்றன-இந்த நிலைமையை தவிர்க்கமுடியாது என்று அவர் கூறினார்.
ஆனால் ரூபாயின் மதிப்பு குறையும் போது இந்த இறக்குமதிகள் மேலும் செலவு பிடிக்கும் ஒரு பிரச்சினையாக மாறிவிடுகின்றது என்றும் சுட்டிக்காட்டினார் ஸ்ரீநிவாசன்.
இதேவேளை, இந்தியாவின் மத்திய அரசு பொருளாதாரத்தை சரியாக நிர்வகிக்காதது ரூபாயின் மதிப்பில் ஏற்பட்டிருக்கும் வீழ்ச்சிக்கு முக்கிய காரணம் என்றும் அவர் குறிப்பிட்டார்.
பல முக்கிய பொருளாதார முடிவுகளை இந்தியாவை ஆளும் கூட்டணி அரசால் எடுக்க முடியவில்லை. இனி பொதுத் தேர்தல் நெருங்கும் நிலையில், இந்திய அரசால் இது போன்ற கடினமான பொருளாதார முடிவுகளை எடுக்கவேண்டிய அரசியல் மனோதிடம் இருக்காது என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
-BBC
nalla pakirvu!
.
.
CLICK >>>> இதுதான் இந்தியா. இது யார் தவறு.? Real faces of our india. இதுதான் இன்றைய இந்தியாவின் நிலை. படங்கள். காணொளிகள். . TO READ
.
.
சகோ சீனி!
//nalla pakirvu!//
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!
அன்புடன் சுவனப்பிரியன்,
ஜெயாவினால் ஏற்பட்ட ஓராண்டு வேதனை என்று தலைப்பிட்டிருந்தால் மேலும் பொருத்தமாயிருக்கும்.
- வள்ளுவன்
சகோ வள்ளுவன்!
//ஜெயாவினால் ஏற்பட்ட ஓராண்டு வேதனை என்று தலைப்பிட்டிருந்தால் மேலும் பொருத்தமாயிருக்கும்.//
ஹா...ஹா.. உண்மையிலேயே அருமையான தலைப்பு.
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!
திருநெல்வேலி : டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு இதுவரை 29 பேர் பலியாகி உள்ள நிலையில் தூத்துக்குடி, கன்னியாகுமரி உள்ளிட்ட மாவட்டங்களிலும் நோய் பரவி வருகிறது. நெல்லை மாவட்டம் லட்சுமியூரைச் சேர்ந்த கிருத்திகா என்ற 6 மாத குழந்தையும், ரவனசமுத்திரம் பகுதியைச் சேர்ந்த கோபால் மனைவி மீனா(35) ஆகிய இருவரும் இன்று பலியாகி உள்ளனர். இதே போன்று தூத்துக்குடியில் 2 பேரும், கன்னியாகுமரியில் 2 பேரும் டெங்கு காய்ச்சலுக்கு பலியாகி உள்ளனர். இதனால் பலி எண்ணிக்கை 35 ஆக உயர்ந்துள்ளது.
-Dinamalar 21-05-2012
Post a Comment