Followers

Thursday, May 17, 2012

சூரியன் வெளிச்சங்களாகவும் சந்திரன் ஒளியாகவும் மாறிய விநோதம்!

சூரியன் வெளிச்சங்களாகவும் சந்திரன் ஒளியாகவும் மாறிய விநோதம்!

ஆண்டுகளின் எண்ணிக்கையையும் காலக் கணக்கையும் நீங்கள் அறிந்து கொள்வதற்காக அவனே சூரியனை வெளிச்சமாகவும் சந்திரனை ஒளியாகவும் அமைத்தான். சந்திரனுக்கு பல நிலைகளை ஏற்படுத்தினான். தக்க காரணத்துடன் இறைவன் இதைப் படைத்துள்ளான்.அறிகிற சமுதாயத்திற்கு வசனங்களை அவன் தெளிவாக்குகிறான்.

-குர்ஆன் 10:5


என்ன அழகிய ஒரு இறைவனின் வார்த்தை!. 'லியா அன்' என்ற அரபிச் சொல்லை அரபு இலக்கணத்தின் படி மொழி பெயர்த்தால் 'வெளிச்சம்' என்றும் பன்மையில் 'வெளிச்சங்கள்' என்றும் இரண்டையுமே ஒரே வார்த்தையில் அரபு அகராதி குறிப்பதை பார்க்கலாம்.

அரபு மொழியில் நல்ல பாண்டித்தியம் உள்ளவர்களிடம் நாம் இதைப்பற்றிய தெளிவை அடையலாம். இணையத்திலும் கூகுளில் தேடினால் ஒருமையும் பன்மையும் ஒரே வார்த்தையில் குறிப்பிடப்படுவதை நாம் அறிய முடியும்.

சூரியனின் சாதாரண வெந்நிற ஒளி மாறுபட்ட அதிர்வெண்களையும் மாறுபட்ட நிறங்களையும் கொண்ட ஒளிகளின் கலவை என நியூட்டன் தனது சோதனைகள் மூலம் நிரூபித்தார். அவர் சூரிய ஒளியை ஒரு முப்பட்டைக் கண்ணாடிக்குள் செலுத்தி ஒளிப் பிரிகையை செய்து காட்டினார். அவற்றை மாறுபட்ட நிறங்களை உடைய ஒளிக் கற்றைகளாக வெளிப்படுத்திக் காட்டினார். அதன் பிறகு அந்த மாறுபட்ட வர்ணங்களை உடைய ஒளிக் கற்றைகளை ஒன்று குவித்து வெண்ணிறமுள்ள ஒரே ஒளிக் கற்றையாக மீண்டும் மாற்றிக் காட்டினார். இந்த முப்பட்டைக் கண்ணாடியும் அதன் துணைக் கருவிகளும் இணைந்த கருவியையே நாம் 'நிறமாலை' (spectrascope) நோக்கி என்கிறோம்.

இங்கு சூரியன் பல ஒளிகளை உமிழ்ந்து ஒரு ஒளியாக நமது கண்ணுக்கு தெரிகிறது. சூரியனை நாம் சாதாரணமாக பார்த்தால் அதில் ஏழு வர்ணங்களை உள்ளடக்கிய ஒரே வெளிச்சத்தை நாம் காணக் கூடியதாக இருக்கிறது. அதாவது ஏழு வெளிச்சங்களை சுருக்கி நம் கண்ணுக்கு ஒரு வெளிச்சமாக தருகிறது. எனவே 'லியாஅன்' என்ற இந்த வார்த்தை பிரயோகம் ஒருமைக்கும் பொருந்தி வருகிறது. ஏழு வண்ணங்களின் கூட்டுக்கும் பொருந்தி வருகிறது.

குர்ஆனில் பயன்படுத்தப் பட்டிருக்கும் 'அஸ்ஸ்ம்ஸ லியாஅன்' என்ற அரபி வார்த்தையை அரபு மொழியும், ஒளிப்பிரிகையையும் நன்கு அறிந்த ஒருவர் ஆழ்ந்து சிந்தித்தாரானால் இது இறைவனின் வார்த்தைதான் என்பதில் எந்த சந்தேகமும் கொள்ள மாட்டார். ஏனெனில் 'நூர்' என்ற வார்த்தையும் 'லியாஅன்' என்ற வார்த்தையும் மேலோட்டமாக பார்க்கும் போது ஒரே பொருளையே தரும். சந்திரனுக்கு போட்ட 'நூர்' என்ற வார்த்தையை சூரியனுக்கு குர்ஆன் பயன்படுத்தியிருந்தால் பொருளே மாறி விடும்.

ஆனால் எந்தக் குழப்பமும் இல்லாமல் சூரியனுக்கு எந்த வார்த்தையை பயன் படுத்த வேண்டும். சந்திரனுக்கு எந்த வார்த்தையை பயன்படுத்த வேண்டும் என்று நிதானித்து வார்த்தைகள் கையாளப்பட்டிருக்கிறது. இயற்பியலை ஓரளவு அறிந்த எந்த மனிதரும் இந்த வார்த்தை பிரயோகத்தை பார்த்து ஆச்சரியப் படாமல் இருக்க முடியாது. எழுதப் படிக்கத் தெரியாத முகமது நபி இப்படி ஒரு வார்த்தையை இந்த இடத்தில் பயன்படுத்தியிருக்க முடியுமா என்று சிந்திக்கக் கடமைப்பட்டுள்ளோம்.




இனி குர்ஆன் சந்திரனுக்கு 'நூர்' என்ற வார்த்தையை ஏன் பயன்படுத்தியது என்பதையும் பார்ப்போம். அதற்கு முன்பாக எதிரொளிப்பு என்பதற்கு விக்கி பீடியா தரும் விளக்கத்தையும் பார்ப்போம்.

எதிரொளிப்பு அல்லது ஒளித்தெறிப்பு (Reflection) என்பது ஒளிக்கதிரானது சென்று ஒரு பொருளில் பட்டு எதிர்வது ஆகும்.
நாம் கண்ணாடியில் பார்க்கும் பொழுது நம் முகம் நமக்கு எவ்வாறு தெரிகின்றது? இருட்டான ஓர் அறையிலே கண்ணாடியில் நம் முகம் தெரியுமா? ஏன் தெரியவில்லை? வெளிச்சமான ஓரிடத்தில் நாம் கண்ணாடி முன்னர் நின்றால், நம் முகத்தில் ஒளிக்கதிர்கள் பட்டு எதிருவுற்று பின்னர் அவ்வொளி அலைகள் சென்று கண்ணாடியில் பட்டு கண்ணாடியால் எதிர்வுற்று நம் கண்களில் வந்து சேர்வதால் நாமே நம் முகத்தைப் பார்க்க இயலுகின்றது. இப்படி கண்ணாடியிலும், பிற பொருள்களிலும் ஒளி பட்டு எதிர்வது (தெறிப்பது) ஒளியெதிர்வாகும்.

இனி 'நூர்' என்ற அரபி வார்த்தைக்கு அரபு அகராதியில் வரும் சில ஆங்கில வார்த்தைகளைப் பார்ப்போம்.
Illumination- ஒளியூட்டுதல்
Glow- ஒளிர்வு, பிரகாசம்
Gleam - பிரதிபலிக்கும் ஒளி
Flare – வெளிப்பாடு




சந்திரனின் ஒளியானது அதன் சொந்த ஒளியல்ல. சூரியனிடமிருந்து பெறப்பட்ட ஒளியையே பிரதிபலிக்கிறது. இங்கு நூர் என்ற வார்த்தைக்கு கிடைக்கும் அநேக விளக்கங்களும் பிரதிலிப்புக்கு கையாளப்படும் வார்த்தைகளாகவே உள்ளதை எண்ணி வியக்கிறோம். முந்தய காலங்களில் சந்திரன் தனது ஒளியையே பிரதிபலிப்பதாகத்தான் நம்பி வந்தோம். சூரியனின் ஒளியையே சந்திரன் பிரதிபலிக்கிறது என்ற உண்மை சமீப காலமாகத்தான் அறியப்பட்டது.

'அவற்றில் சந்திரனை ஒளியாக அமைத்தான்: சூரியனை விளக்காக அமைத்தான்'
-குர்ஆன் 71;16


திருக்குர்ஆனில் சூரியனுக்கு பயன்படுத்தப்படும் அரபுச் சொல் ‘ஷம்ஸ்’ இதனை ‘ஸிராஜ்’ (ஒளிவிளக்கு) ‘வஹ்ஹாஜ்’ (பிரகாசிக்கும் விளக்கு) ‘தியா’ (ஒளிரும் மகிமை) என்றும் திருக்குர்ஆனில் கூறப்பட்டுள்ளது. சூரியன் தனக்குள் எரிந்துகொண்டே இருப்பதால், அது கடுமையான உஷ்ணத்தையும் வெளிச்சத்தையும் உண்டு பண்ணிக்கொண்டே உள்ளது.

சந்திரனை குறிக்கும் அரபுச் சொல் ‘கமர்’ என்பதாகும். குர்ஆன் இந்த சந்திரனை ‘முனீர் என்றும் வர்ணிக்கிறது. ‘முனீர்’ என்றால் ஒளியை (நூர்) வழங்கும் கோளம் என்று பொருள். எந்த இடத்திலும் சந்திரனை குறித்திட ‘வஹ்ஹாஜ்’ ‘தியா’ ‘ஸிராஜ்’ ஆகிய சொற்கள் பயன்படுத்தப்படவே இல்லை. அதே போல் சூரியனை குறித்திட ‘நூர்’ அல்லது ‘முனீர்’ என்ற சொற்களும் பயன்படுத்தப்படவில்லை. இரண்டு கோள்களும் ஒளியை உமிழ்ந்தாலும் அதன் தன்மைகள் மாறுபடுவதால் அங்கு வார்த்தைகளும் மிக துல்லியமாக தேர்ந்தெடுத்து பயன்படுத்தப்படுகிறது. இந்த அறிவை எல்லாம் முகமது நபி தனது கற்பனையால் யூகித்து குர்ஆனை உருவாக்கியிருக்க முடியுமா என்பதை படிப்பவர்களின் சிந்தனைக்கே விட்டு விடுகின்றேன். மேலும் தற்போது நம் வசதிக்கேற்ப குர்ஆனில் மாற்றி விட்டோம் என்றும் சொல்ல முடியாது. ஏனெனில் முகமது நபியால் சரி பார்க்கப்பட்டு உஸ்மான் அவர்களால் பிரதி எடுக்கப்பட்ட குர்ஆனின் இரண்டு பிரதிகள் இன்றும் நம் கைவசம் உள்ளது. அதை வைத்து உறுதி செய்து கொள்ளலாம்.

இறைவனே அறிந்தவன்.

11 comments:

~முஹம்மத் ஆஷிக் citizen of world~ said...

ஸலாம் சகோ.சுவனப்பிரியன்..!

///எந்தக் குழப்பமும் இல்லாமல் சூரியனுக்கு எந்த வார்த்தையை பயன் படுத்த வேண்டும். சந்திரனுக்கு எந்த வார்த்தையை பயன்படுத்த வேண்டும் என்று நிதானித்து வார்த்தைகள் கையாளப்பட்டிருக்கிறது. இயற்பியலை ஓரளவு அறிந்த எந்த மனிதரும் இந்த வார்த்தை பிரயோகத்தை பார்த்து ஆச்சரியப் படாமல் இருக்க முடியாது.///

---படைத்தோனுக்கே படைப்பினங்களின் குணாதிசியம் தெரியும்..! அதனால், எந்த வார்த்தையை எதற்கு எங்கே எப்படி எவைக்கு யாருக்கு கையாள்வது என்றும் தெரியும்..! நாத்திகர்கள் இதை விளங்கி படித்தால் ஆச்சர்யப்படத்தான் செய்வார்கள்..!ஆச்சர்யப்பட்டோரில் உண்மையாளர்கள் இறைவனை ஏற்றுக்கொள்வார்கள்..!

தங்களுக்கு மென்மேலும் கல்வி அறிவை இறைவன் விரிவாக்கி வைக்க வேண்டுகிறேன். மீண்டும் ஒரு சிறப்பான பதிவுக்கு நன்றி சகோ..!

Flavour Studio Team said...

மாஷா அல்லாஹ் அருமையான பதிவு...
ஜசாக்கல்லாஹ் சகோ.... :)

Flavour Studio Team said...

மாஷா அல்லாஹ்... அருமையான பதிவு... ஜசாக்கல்லாஹ் சகோ... :)

suvanappiriyan said...

சலாம் சகோ ஷர்மிளா ஹமீத்!

//மாஷா அல்லாஹ்... அருமையான பதிவு... ஜசாக்கல்லாஹ் சகோ... :)//

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!

suvanappiriyan said...

சலாம் சகோ ஆஷிக்!

//---படைத்தோனுக்கே படைப்பினங்களின் குணாதிசியம் தெரியும்..! அதனால், எந்த வார்த்தையை எதற்கு எங்கே எப்படி எவைக்கு யாருக்கு கையாள்வது என்றும் தெரியும்..! நாத்திகர்கள் இதை விளங்கி படித்தால் ஆச்சர்யப்படத்தான் செய்வார்கள்..!ஆச்சர்யப்பட்டோரில் உண்மையாளர்கள் இறைவனை ஏற்றுக்கொள்வார்கள்..!//

ஆம் சகோ.. ஒவ்வவொரு முறை குர்ஆனை படிக்கும் போதும் அதன் சொல்லாட்சி நிரூபிக்கப்பட்ட அறிவியலோடு மோதாத தன்மை என்று நம்மை ஆச்சரியப்பட வைக்கிறது.

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!

அதிரை சித்திக் said...

ஒவ்வொரு நபி மார்களுக்கும்தனது வாழ்நாளில்

அற்புதங்களை நிகழ்த்த இறைவன் வாய்ப்பு கொடுத்தான் ..

முஹம்மது நபி அவர்களுக்கு குர் ஆண் தான் அற்புதம்

அது உலகம் முடிவு வரை வழிகாட்டிக் கொண்டே இருக்கும்

மனித வாழ்வுக்கும்.., மனிதன் வாழ உதவும் அனைத்திற்கும் தீர்வு

அதில் உள்ளது .. நம்பிக்கையுடன் அதில் தேடினால் .தேடலுக்கான

விடை குர் ஆனில் உண்டு ..நல்ல ஆக்கம்..., நல்ல சிந்தனை

சுவனபிரியன் வாழ்த்துக்கள்

suvanappiriyan said...

சலாம் சகோ அதிரை சித்திக்!

//மனிதன் வாழ உதவும் அனைத்திற்கும் தீர்வு

அதில் உள்ளது .. நம்பிக்கையுடன் அதில் தேடினால் .தேடலுக்கான

விடை குர் ஆனில் உண்டு ..நல்ல ஆக்கம்..., நல்ல சிந்தனை //

வருகைக்கும் கருத்தைப் பதிந்தமைக்கும் நன்றி!

suvanappiriyan said...

/உங்களுக்கு கார் வாங்க வேண்டும் என்ற எண்ணம் இருந்தால் நீங்கள் அதை மனதில் பதிவு செய்யுங்கள். அடிகடி அதை ஞாபக படுத்தி கொள்ளுங்கள். காலப்போக்கில் நீங்கள் கார் வாங்கும் நிலைக்கு உயருவீர்கள் என்பது ஒரு மனோதத்துவம்.//

நானும் 20 வருடமாக மாளிகை போன்ற வீட்டை கட்ட வேண்டும்: பல அடுக்கு மாடி குடியிருப்புகளை கட்டி வாடகைக்கு விட வேண்டும். வயதான காலத்தில் சிரமமில்லாமல் வாழ்க்கை ஓட வேண்டும். என்ற நினைப்பில் உழைத்து வருகிறேன்: இது ஏதும் கை கூட வில்லை என்றால் புரட்சி மணியிடம் வந்து நிற்பேன்: சரியா :-(

Anonymous said...

சென்னை: ரோம் நகரம் பற்றி எரியும் பொழுது நீரோ மன்னன் பிடில் வாசித்த கதையைப் போலத்தான் தமிழகத்தில் ஜெயா அரசின் நிலையும் அமைந்துள்ளது. தனது அரசின் ஓர் ஆண்டு நிறைவையொட்டி ஒரே நாளில் 25 கோடி ரூபாய்க்கு விளம்பரம் செய்து சாதனைப் படைத்துள்ளார் புரட்சி தலைவி.
ஒட்டுமொத்தமாக ஓர் ஆண்டு நிறைவு விளம்பரத்திற்கு ஒதுக்கப்பட்ட மொத்த தொகை 25 கோடி ஆகும். சென்னை, டெல்லி, மும்பை உள்ளிட்ட நகரங்களின் தேசிய பத்திரிகைகளில் நேற்று முன்தினம் முதல் பக்க முழு நீள விளம்பரம் வெளியானது.
ஒருவருட சாதனைகள் தாம்(சாதனையா? வேதனையா? என்பது வேறு விஷயம்) பல மொழி விளம்பரங்களின் உள்ளடக்கம். விளம்பரத்திற்கு இந்தியாவில் செலவழிக்கப்பட்ட மிகப்பெரிய தொகை இதுவே. பெரும் நிறுவனங்களோ, கார்ப்பரேட்டுகளோ இதுவரை இவ்வளவு தொகையை விளம்பரத்திற்காக செலவிட்டதில்லை.
டைம்ஸ் ஆஃப் இந்தியாவின் பெரும்பாலான இந்திய பதிப்புகள், ஹிந்துஸ்தான் டைம்ஸ், த ஹிந்து, எக்கணாமிக் டைம்ஸ், ஏசியன் ஏஜ், இந்தியன் எக்ஸ்பிரஸ், ஃபினான்சியல் எக்ஸ்பிரஸ், பிசினஸ் லைன், மிண்ட், பிசினஸ் ஸ்டாண்டர்ட்ஸ் ஆகிய பத்திரிகைகளில் நாட்டின் பெரும் நகரங்களின் அனைத்து பதிப்புகளிலும் விளம்பரம் வெளியிடப்பட்டது.
http://www.sinthikkavum.net/2012/05/blog-post_18.html

முஹம்மத் ஷஃபி BIN அப்துல் அஜீஸ் said...

அஸ்ஸலாமு அலைக்கும் சகோ
அருமையான விளக்கத்தை தந்துள்ளீர்கள் மாஷாஅல்லாஹ்.இவ்வளவு பணிகளுக்கும் மத்தியில் சோர்வடையாமல் சத்தியத்தை அழகிய முறையிலும் எடுத்துவைக்கின்றீர்கள்.உங்களின் பணி மென்மேலும் சிறக்கவேண்டுமாய் அல்லாஹ்விடம் பிரார்த்திக்கிறேன்.

suvanappiriyan said...

சலாம் சகோ முஹம்மது ஷஃபி!


//அருமையான விளக்கத்தை தந்துள்ளீர்கள் மாஷாஅல்லாஹ்.இவ்வளவு பணிகளுக்கும் மத்தியில் சோர்வடையாமல் சத்தியத்தை அழகிய முறையிலும் எடுத்துவைக்கின்றீர்கள்.உங்களின் பணி மென்மேலும் சிறக்கவேண்டுமாய் அல்லாஹ்விடம் பிரார்த்திக்கிறேன்.//

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!