Followers

Friday, May 11, 2012

இந்தப் பறவை நம்மிடம் பேசினால்!





மரத்தின் வலுவை நம்பி நான்

அந்தக் கிளையில் உட்காரவில்லை.

எனது இறக்கையின் வலுவை நம்பி

அந்தக் கிளையில் உட்கார்ந்தேன்.

கிளை முறிந்து விட்டதே என்ற

கவலை எனக்கில்லை. அந்த

கிளை முறிந்தால் தான் என்ன?

என் இறக்கை எனக்கு உதவிடும்

என்றுதான் நான் நினைப்பேன்.

மனிதா! கை கால்கள் இருந்தும்

நாடு பல திட்டங்களை கொடுத்தும்

கல்வியை இலவசமாக்கி கொடுத்தும்

பிச்சை எடுத்து பொய் சொல்லி

திருடி வாழ்கிறாயே! என்னிடமிருந்து

கற்றுக் கொள்ளக் கூடாதா?

சிந்தனா சக்தி என்ற ஒன்று

உனக்கு இருந்தால்.....




--------------------------------------------



என்ன கண்ணுங்களா! கூட்டமா வந்தா பயந்துடுவேனா? ரஜினி, எம்ஜிஆர் படங்கள் எல்லாம் பார்த்ததில்லையா! ஒருத்தரே அத்தனை பேரையும் பறந்து பறந்து அடிச்சதை நான் பார்த்திருக்கேன்ல... மோதிப் பார்த்துருவமா?


ப்

11 comments:

VANJOOR said...

.
.
சொடுக்கி >>> PART 14.இதுதான் இந்தியா. இந்த ஆட்டுக்கும் நம்ம‌நாட்டுக்கும் கூட்டு மற்றும் ….
மற்றும் ….
<<<<< பார்க்கவும்.
.
.

VANJOOR said...

.
.
CLICK >>>>
இஸ்லாமிய பெண்ணுரிமைக்காக போராடும் என் மாற்றுமத சகோதரர்களின் அன்பான கவனத்திற்கு!!!! பெண்களும் கட்டாயம் கல்வி கற்க வேண்டுமாம்..!!! :( என்ன ஒரு ஆணாதிக்கம் பார்த்தீங்களா?? :( இதை எல்லாம் கேட்டு நீங்க பொங்கி எழணும்!!!
<<<<< TO READ
.
.

VANJOOR said...

.
.
CLICK >>>>>
காஷ்மீர் என்றாலே தீவிரவாதம் முஸ்லிம் என்றாலே தீவிரவாதம் என்று சொல்பவர்கள் கவனிக்கவும்.
தன்னை துன்புறுத்திய படையில் உள்ள ஒருவனுக்கு உதவும் இதயம் எத்தனை பேருக்கு உண்டு? காஷ்மீர் முஸ்லிம் வாலிபனும்,படை வீரனும்...
<<<<<<< TO READ

.

suvanappiriyan said...

சலாம் வாஞ்சூர் பாய்!

அருமையான பல சுட்டிகளைத் தந்தமைக்கு நன்றிகள். ஆனால் இந்தியாவின் குறைகளை பட்டியலிட்டுள்ளீர்கள். இதே போன்ற கொடுமைகள் பல நாடுகளிலும் நடந்து கொண்டுதான் இருக்கிறது. நாம் பிறந்த பூமி இந்த அவலங்களிலிருந்தெல்லாம் வெளியேற வேண்டும் என்ற ஆதங்கத்தில் இந்த பதிவுகளை தொடராக வெளியிடுகிறீர்கள். நம் நாடு இந்த அநாச்சாரங்களில் இருந்து விடுபட உழைப்போம்.

Seeni said...

nalla kavithai!

nalla video clip!

suvanappiriyan said...

சகோ சீனி!

//nalla kavithai!

nalla video clip! //

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!

Anonymous said...

Kavya says:
May 11, 2012 at 6:51 am

ஜெயபாரதன்!

நீங்கள் திரும்பதிரும்ப இதை எழுதிவருகிறீர்கள். ‘பகுத்தறிவுப்பட்டாளங்களினாலேயே’ தமிழ்நாட்டில் மக்களுக்கு ஜாதிவெறி ஊட்டப்படுகிறதென்று.

இது ஒரு முற்றிலும் ஆராயாத கருத்தாகும்.

நான் எழ்தியதைப்படியுங்கள். சாதிகளின் அவசியம் என்பது இருதளங்களில் வழிவருவது: 1. மதவாழ்க்கை 2. மதம்சேரா வாழ்க்கை.

இந்துமதம் பணம்படைத்தோரையும் ஆதிக்கசக்திகளையும் சார்ந்து தன்னைக்காப்பாற்றிக்கொண்டே வந்திருக்கிறது எனப்து தமிழக வரலாறு. இன்றும் கள்ளழகர் அவர்களிடம்தான் பிச்சை கேட்கிறார். அச்சக்திகள் உயர்ஜாதிகளே. ஜாதிகள் இருந்தால் உயர்ஜாதிகள் எப்படி வரும்? கீழ்ஜாதிகள் இருந்தால் மட்டுமே. ராமன் நல்லவன் என்பதை எப்படி கண்டுகொள்வது, ராவணன் கெட்டவனாக இருந்தால் மட்டுமே. ஒப்பீடுகளினாலே உயர்வும் தாழ்வும் உண்டாகும்.

ஆக, கீழ்ஜாதிகள் அவசியம் மேற்சாதிகள் தன்னைப்பற்றி கர்வம் கொள்ள. கீழ்ஜாதிகள் தங்களை அடிமைகளாக உணரும்போது தங்களை மேற்சாதிகளுக்கு ஏவல் செய்யும் மனப்பாங்கைப்பெறுகிறார். அப்பாங்கை மேற்சாதிகள் பன்னெடுங்காலமாக சுரண்டித் தம்மை வலிமப்படுத்தி வந்திருக்கிறது.

மேற்சாதிகளே தமக்கு வேண்டுமெனபதால், சாதிகள் அவசியம்; சாதிகளின் அவசியம் என்பது அவர்களுக்கு வீசப்படும் சாமரமாகும். மலர்மன்னன் செய்யக்காரணம் தம் மதம் வாழவைப்பதற்காக. But Malarmannan attempts a clever trick of making the two into one in his essay. He says he wd clean the toilets and share table with scavengers, but the caste difference will continue; and should continue. Thus, he means a Brahmin will be a brahmin; and a chakkiliyar will be a chakkiliyar. This helps him to get two mangos at one strok: To get the caste system intact. To make a show of equality.

இப்போது பகுத்தறிவு பட்டாளத்துக்கு வருவோம். இது இரண்டு வகைகளில் செயல்படுகிறது. 1. மலர்மன்னனின் மதவாழ் செய்யப்படும் சாதிப்பிரச்சாரத்தைக் கண்டுகொண்டு தாக்குகிறது. அதே சமயம். அவர் அப்படிச்செய்யாமல் அதாவது மதம் சாதிகளினால் வாழாமல் போயிருந்தால், பகுத்தறிவு பட்டாளம் வேறவழியைத்தேடியிருக்கும் இந்துமதத்தைத்தாக்க.

2. வாழ்க்கையில் தமிழர்கள் சாதிவாரியாக வாழ்தல். இங்கு மதம் தன் செயலை இழக்கிறது. எனவே தலித் கிருத்துவர்கள் என்று ஜாதி கண்க்கெடுப்பாளரிடம் தெரிவியுங்கள் என்று தலித் அமைப்புக்களும், பிசிக்கள் என்று தெரிவியுங்கள் (அவர்கள் ஒரு உள் ஜாதிப்பேரைச்சொன்னத் எனக்கு நினைவுக்கு வரமாட்டெனெகிறது) என்று மனித நேயக்கட்சியும் அறிக்கை விட்டிருக்கின்றன. அதாவது மதங்களைத்தாண்டி நிற்கும் சாதிகள். இவை சமூகதளத்தில் நிலவுகின்றன. சமூக, மற்றும் அரசியல் ஆதாயங்களுக்காகவே இவை நிலவுகின்றன. இன்றைய் தினத்தந்தியில் நிறைய சாதியமைப்புக்கள் அறிக்கை விட்டிருக்கின்றன.

ஜெயபாரதினின் கோரிக்கை இந்த இரண்டாவதைப்பற்றியா? முத்லாவதைப்பற்றியதா? முதலாவதைப்பற்றியிருக்க முடியாது. ஏனெனின் அது ஏற்கன்வே தாக்கபப்ட்டு விட்டது.

இரண்டாவதை தாக்க வேண்டும். முடியுமா? முடியுமென்றால் எப்படி? ஏனெனில் தலித்து அமைப்புக்களும் அறிக்கை விடுகின்றன ஜாதிகணக்கெடுப்பாளரிடம் எப்படிச்சொல்வதென்று.

இரண்டவதை எதிர்க்க எவராலும் முடியாது. எதிர்த்தால் அது நிழல் யுத்தம் மட்டுமே. அது கலாச்சாரத்திலிருந்து வருவது. கலாச்சாரம் மாறும் போது அவை நீர்க்கும். காலத்தில் கையில்தான் இருக்கிறது கலாச்சார மாற்றம்.

நான் மதுரையில் வருமுன் சென்னையில் இருந்தேன். இருவூர்களுக்கும் உள்ள பெரிய வேறுபாடு: சென்னையில் மக்கள் சாதிகளை வெறியுணர்வோடு அணுகுவதில்லை. சாதிகள் இருக்கின்றன. ஆனால் அவை வேண்டுமென்றால் தள்ளி வைக்கப்படும். சாதித்தலைவர்களும் அங்கு தங்களை அடக்கிக்கொள்கிறார்கள். ஆனால் மதுரையில் எல்லாம் தலைகீழ். மக்களே சாதியுணர்வை வெறியாக வளர்த்துவருகிறார்கள். இதற்கு என்ன காரணம்? 600 மைலகளால் மட்டுமே பிரிக்கப்படும் இரு தமிழ்நாட்டு நகரங்களுக்குள் ஏன் இந்த கலாச்சார வேறுபாடு.? பதிலைததேடினால் நான் சொன்னது பிறக்கும். அது: Blame it on Culture. In Madurai, tribal culture. In Chennai, Cosmopolitan culture (not yet complete though, but it will be complete)

Anonymous said...

punai peyaril says:
May 11, 2012 at 2:59 pm

இந்துமதம் பணம்படைத்தோரையும் ஆதிக்கசக்திகளையும் சார்ந்து தன்னைக்காப்பாற்றிக்கொண்டே வந்திருக்கிறது –> எந்த மதம், பணம்படைத்தோர், ஆதிக்க சக்திகள் சாராமல் இருக்கிறது என்று காவ்யா சொல்லலாம்… வாடிகனின் செல்வ செழிப்பும், சௌதி மன்னரின் செல்வ செழிப்புனின்றி அவ்விரு மதங்கள் கிடையாது. ஆனால், இந்து மதத்தை ஆண்டிகளும், யோகிகளும், ஏகாந்த நிலை கொண்டோருமே தாங்கி பிடித்து காலச் சக்கிரத்தில் இவ்வளவு தூரம் எதேச்சிகார வந்தேறிகளையும் மீறி கொண்டு வந்துள்ளனர். மதம் மாறிய கீழ்ஜாதியினர், மனோரீதியாக எவ்வளவு தூரம் அம்மதங்களில் சமநிலை கொண்டுள்ளனர் என்று சொன்னால் நலம். கிறிஸ்டீன் நாடார் கிறிஸ்துவ தலித்தை காவ்யா தலைமையில் மணம் செய்து காட்டினால் காவ்யா சொல்வதை கேட்கலாம்.

-----------------------

smitha says:
May 11, 2012 at 7:58 am

Kavya,

//சேரிகளில் மாரியம்மன் கோயில்களைப்பார்த்திருப்பீர்கள். அஃதுஆண்டுமுழுவதும் மூடித்தான் கிடக்கும். அதன்பூஜாரி அன்றாடம் கூலி வேலை செய்ய தம்மின மக்களோடு காலை சென்று மாலை திரும்புவர்தான். கொடை விழாக்களில் போதுமட்டுமே அக்கோயில் நடை திறந்திருக்கும். அந்நாட்கள் அப் பூஜாரி வேலைக்குச்செல்வதில்லை. மற்ற ஏதாவது விசேசமென்றிருந்தால் மட்டுமே நடை திறக்கப்படும்.//

There are scores of other temples in tamilnadu where brahmin priests are like this. What you have mentioned are only a few, that too temples under the endowment borad. In chennai, I can point out many temples where the temple priest hardly gets anything. They earn a pittance of 500 & utmost 1000 rs per month.
ok, will you be satisfied if a dalit becomes a mutt head?
U have accused malarmannan of defending castes. What are U doing?
Portraying that hindu religion is only the religion of brahmins & attacking it.
As can be seen from my posts, Ur thalaivar EVR did it.
U are doing the same now.

Anonymous said...

பொது சேவை செய்து வரும் ரஞ்சிதா ஜெயேந்திரர் மேல் மான நஷ்ட வழக்கு!

நடிகை சார்பில், வழக்கறிஞர் முருகையன் பாபு தாக்கல் செய்த மனு: சென்னை தி.நகர் அபிபுல்லா சாலையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பை சேர்ந்த அசோக்குமார் என்பவரின் மகள் நடிகை ரஞ்சிதா,38. இந்து மதத்தை சேர்ந்த ரஞ்சிதா, தமிழ் கலாசாரத்தை பின்பற்றி வாழ்ந்து வருகிறார். தொடர்ந்து, 20 ஆண்டுகளாக, தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் "டிவி' சீரியல்களில் நடித்து வருகிறார். அவருடைய கணவர் ராகேஷ் ராமச்சந்திர மேனன், ராணுவ அதிகாரி. அவரின் கணவருக்கு பணி மாறுதல் வரும் போது, எந்த இடத்திற்கு மாறுதல் செய்யப்படுகிறாரோ, அந்த இடங்களுக்கு சென்று, கணவருடன் வாழ்ந்து வந்தார். சமுதாய சிந்தனை உடையவர். ஏழைகளுக்கு சேவை செய்து வருகிறார். இந்து மத கொள்கைகளில் நம்பிக்கை உடையவர். அந்த தாக்கத்தினால், ஆன்மிக சொற்பொழிவுகளைக் கேட்டு வந்தார். தமிழகத்தில், நித்யானந்தா நடத்திய சொற்பொழிவு நிகழ்ச்சிகளில் பங்கேற்றார். கடந்த 9ம் தேதி, ஜெயேந்திரர், "மதுரை இளைய ஆதீனமாக முடி சூட்டப்பட்ட நித்யானந்தா மொட்டை அடிக்கவில்லை. ருத்ராட்ஷம் அணியவில்லை. நித்யானந்தாவுடன் ரஞ்சிதா என்ற பெண் உடன் இருக்கிறார்' என, பேட்டியில் குறிப்பிட்டிருந்தார். அந்த செய்தி, ஊடகங்களிலும் வெளியாகியது. ரஞ்சிதாவின் தனிப்பட்ட வாழ்க்கையில், புகழுக்கு களங்கம் ஏற்படும் வகையில், அந்த பேட்டியில் கூறப்பட்டுள்ளது. நித்யானந்தாவுக்கும், ரஞ்சிதாவுக்கும் உறவு இருப்பது போல் சித்தரிக்கப்பட்டுள்ளது. ஊடகத்தில் வெளியான செய்தி குறித்து, நடிகை ரஞ்சிதாவின் தங்கை ஜோதி விசாரித்தார். அவரின் நண்பர்களும் அதுபற்றி அவரிடம் விசாரித்துள்ளனர். அதனால், ரஞ்சிதா மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளார்.

நடிகை பற்றிய செய்தி, இந்தியாவில் மட்டுமின்றி, உலக அளவில் பரவியிருக்கிறது. ரஞ்சிதாவை பற்றி பேசுவதற்கு ஜெயேந்திரருக்கு அருகதை இல்லை. அவர் மீது, 499, 500 இந்திய தண்டனை சட்டப் பிரிவின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு, மனுவில் கூறப்பட்டுள்ளது.

Anonymous said...

தனிச்சுடுகாடு, இரட்டைக்குவளை எனத் தெளிவாகத் தெரியும்வண்ணம் தாழ்த்தப்பட்டோர் மீது ஏவப்படும் தீண்டாமைக் கொடுமை, பல புதிய வடிவங்களை எடுத்தவண்ணம் உள்ளது. புதுக்கோட்டை மாவட்டம், கருவடத்தெரு சிற்றூரில் இந்த ஆண்டு குடியரசு தினத்தன்று அது அரங்கேறியுள்ளது. கருவடத்தெருவின் ஊராட்சித் தலைவராக இருக்கும் தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த கலைமணி அண்ணாதுரை, குடியரசு தினத்தை முன்னிட்டு, ஊராட்சி அலுவலகம், ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி அமைந்துள்ள வளாகத்தில் தேசியக் கொடியை ஏற்ற முற்பட்டார். அப்போது அங்கே ஊராட்சிமன்றத் துணைத் தலைவரின் மகனான குமார் தலைமையில் வந்த இருபதுக்கும் மேற்பட்ட கள்ளர் சாதி வெறியர்கள் அவரைக் கீழே தள்ளிவிட்டனர். ‘பல ஆண்டுகளாக பள்ளி அலுவலகத்தோடு நெருங்கிய தொடர்பில்’ இருக்கும் தாங்கள்தான் கொடியேற்றுவோம் எனக் கூறி கலைமணியைக் கொடியேற்றவிடாமல் தடுத்தனர்.


இது ஜனநாயக நாடென்று அரசு செய்து வரும் பிரச்சாரம், கொடிக்கம்பத்தின் கீழேயே கிழிந்து தொங்கியது. ஊராட்சிமன்றத் தலைவராகவே இருந்தாலும், கள்ளர் சாதியினர் இருக்க தாழ்த்தப்பட்டவர் கொடியேற்றுவதா எனத் தெனாவெட்டாகத் தீண்டாமையை அனுசரித்த அக்கும்பலை வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தில் உள்ளே தள்ளவேண்டிய போலீசோ இருதரப்பினருக்குமிடையே கட்டப்பஞ்சாயத்து பேசி, பள்ளித் தலைமை ஆசிரியரைக் கொடியேற்ற வைத்துள்ளது. மொத்தத்தில், கள்ளர்சாதிக் கும்பலும் போலீசுதுறையும், தாழ்த்தப்பட்டோர் ஒருவர் தேசியக் கொடியை ஏற்றவிடாமல் பார்த்துக் கொண்டனர். கோயில் திருவிழா போன்ற நிலப்பிரபுத்துவ ஊர் மரபுகளில் மட்டுமே கடைப்பிடிக்கப்பட்டு வந்த தீண்டாமை, குடியரசு தின விழாவுக்கும் நீட்டிக்கப்பட்டிருக்கிறது. இல்லாத கடவுளுக்கு ஏற்றப்படும் கோயில் திருவிழா கொடிக்கும், இல்லாத ஜனநாயகத்தை இருப்பது போலக் காட்டுவதற்காக ஏற்றப்படும் குடியரசு தினவிழாக் கொடிக்கும் எந்த வேறுபாடும் இல்லை என்பதும் நிரூபிக்கப்பட்டிருக்கிறது.

http://www.vinavu.com/2012/03/30/untouchability

suvanappiriyan said...

துபாய்:கேரளாவை சேர்ந்த ஊழியர், சவுதி அரேபியாவில் மற்றொரு இந்தியரால் குத்தி கொல்லப்பட்டார்.கேரளாவை சேர்ந்தவர் ஷாஸ்திதரன், 45. கடந்த 85ம் ஆண்டு முதல் ஷாஸ்திதரன் ரியாத்தில் வசித்து வந்தார். ஒன்றரை மாதங்களுக்கு முன் தான் விடுமுறையில் கேரளா வந்து சென்றார். ரியாத்தில், பாதா நகரில் இவருடன் குடியிருந்தவர் சுனில். கடந்த 8ம் தேதி, தனது அறையில் ஷாஸ்திதரன் தூங்கி கொண்டிருந்தார். அப்போது அவரது அறைக்கு வந்த சுனில், ஷாஸ்திதரனை சமையலறை கத்தியால் பல முறை குத்தி கொன்றார். சம்பவத்தை கேள்விப்பட்ட போலீசார், சுனிலை கைது செய்தனர். இந்த கொலைக்கான காரணம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். இந்த கொலையில் இன்னும் சிலருக்கு தொடர்பு இருப்பதாகவும், அவர்களையும் தேடி வருவதாகவும், போலீசார் தெரிவித்துள்ளனர். ஷாஸ்திதரன் கொலை குறித்து, கேரளாவில் உள்ள அவரது மனைவி சவுமினிக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.