Followers

Wednesday, June 06, 2012

என் மகனுக்கு பேய் புடிச்சிருக்கு(சிறுகதை)

எல்லோர் முகத்திலும் சோகம்! இறப்பு என்பது எத்தகைய சோகத்தை கொடுக்கும் என்பதை அந்த வீடு உணர்த்திக் கொண்டிருந்தது. இப்றாகிம் பாய் என்று அனைவராலும் அன்போடு அழைக்கப்பட்டவர் இன்று இறந்த சடலமாக கட்டிலில் படுக்க வைக்கப்பட்டிருந்தார். வயதும் ஐம்பத்தைந்தை தாண்டியிருந்தது. சில காலம் நோய்வாய்பட்டிருந்தவர் நேற்று இரவு இந்த உலகுக்கு விடை கூறி விட்டு மறு உலக பயணத்துக்கு ஆயத்தமாகி விட்டார்.

எல்லோரும் சவுதியில் இருக்கும் இவரது மகன் ரஹீமின் வரவுக்காக காத்திருந்தனர். வந்தவுடன் உடலை அடக்கம் செய்ய தூக்க வேண்டியதுதான். சொந்தங்கள் ஒவ்வொருவராக வந்து துக்கம் விசாரித்துக் கொண்டிருந்தனர். இப்றாகிம் பாயின் மனைவி ஜீனத் சோகமே உருவாகி கணவனின் தலைமாட்டில் அமர்ந்திருந்தார். இறந்தவுடன் அந்த உடலை தண்ணீரால் கழுவி கட்டிலில் வைத்திருந்தனர். மறு குளிப்பாட்டு பையன் வந்தவுடன் வைத்துக் கொள்ளலாம் என்று சொந்தங்கள் சொல்லவே மகன் ரஹீமின் வரவை எதிர் நோக்கி அனைவரும் காத்திருந்தனர்.

இப்றாகிம் பாய்க்கு ஒரே பையன். பையனை நன்கு படிக்க வைத்திருந்தார். ரஹீம் துடிப்பான இளைஞன். கல்லூரி படிப்பை முடித்த கையோடு தாய் நாட்டிலேயே வேலை செய்ய விருப்பப்பட்டு பல இடங்கள் ஏறி இறங்கியும் ஒன்றும் சரிபட்டு வராததால் இணைய தொடர்பு மூலம் சவுதியில் வேலை கிடைத்து தற்போது மாதம் 50000 அனுப்பி வருகிறான். ஊருக்கு வந்து திருமணம் முடிக்கும் எண்ணத்தில் வர இருந்தவனுக்கு தகப்பனாரின் இறப்பு செய்தி இடியாக வந்திறங்கியது. கம்பெனியில் நிலைமையை விளக்கிச் சொல்லி தற்போது 15 நாள் விடுப்பில் தாயகம் திரும்பிக் கொண்டிருக்கிறான் ரஹீம்.

இதோ ஊருக்குள் வாகனம் நுழைந்து விட்டது. தனது வீட்டின் முன் சொந்தங்கள் அனைவரும் குழுமியிருப்பதை தூரத்திலிருந்தே பார்த்த ரஹீமுக்கு துக்கம் தொண்டையை அடைக்க மௌனமாக அழுதான். வீட்டின் முன் வாகனம் நின்றது.

சொந்தங்கள் சோகத்தோடு ரஹீமை வீட்டிற்குள் அழைத்துச் சென்றனர். அதுவரை துக்கத்தை அடக்கி வைத்திருந்த ஜீனத் மகனைப் பார்த்தவுடன் 'அப்பா போய்ட்டாருப்பா...' என்று மகனை கட்டி அணைத்து அழத் தொடங்கினார். ரஹீமும் தாயாரோடு சேர்ந்து சிறிது நேரம் அழுது விட்டு தகப்பனாரின் முகத்தை பார்த்தான். அமைதி தவழும் முகம். ஒரு வேளை தொழுகையைக் கூட பிறபடுத்தாதவர். நல்ல உழைப்பாளி. இறைவன் சற்று சீக்கிரமே அழைத்துக் கொண்டு விட்டான் என்று நினைத்தவனாக தகப்பனாரை குளிப்பாட்ட ஆயத்தமானான்.

இறந்தவரை குளிப்பாட்டுதல் என்பது ஹஜ்ரத் என்று சொல்லப்படும் மார்க்க அறிஞரை அழைத்து செய்வதுதான் ஊர் வழக்கம். அதன்படி அவரின் வருகைக்காக பலரும் காத்திருந்தனர். ரஹீம் தனது மாமாவிடம் 'ஏன் ஹஜ்ரத்துக்காக காத்திருக்க வேண்டும். நான் இறந்தவரை குளிப்பாட்டுதலைப் பற்றிய செய்முறை விளக்கம் படித்திருக்கிறேன். எனது தகப்பனாருக்கு நானே கழுவதுதான் சிறந்தது' என்று பைப்பை திறந்து தண்ணீர் பிடிக்க ஆரம்பித்தான் ரஹீம்..

ரஹீமின் மாமா குத்தூஸ் வேகமாக வந்து 'தம்பி! அததற்கென்று ஆட்கள் இருக்கிறார்கள். நாமே செய்தால் பின்னால் அவரை பகைத்துக் கொண்டதாக ஆகும்' என்றார்.

'"என்ன மாமா! இறந்தவருக்கு குளிப்பாட்டும் உரிமை அவரது நெருங்கிய சொந்தத்துக்குத்தான் உண்டு என்ற ஹதீதை நீங்கள் பார்த்ததில்லையா? யார் தடுத்தாலும் நான்தான் குளிப்பாட்டுவேன்'". என்று கூறியவனாக பைப்பில் தண்ணீர் பிடிக்க ஆரம்பித்தான். உதவிக்கு ரஹீமின் நண்பர்களும் வந்தனர். வந்திருந்த பெரியவர்கள் ஆச்சரியத்தோடு ரஹீமை பார்த்துக் கொண்டு நின்றிருந்தனர்.

இறந்த உடலை சற்று சரிவாக உட்கார வைத்து தேங்கிய மலம் சிறுநீர் போன்றவை வெளியேற தோதுவாக வயிற்றை மெதுவாக அமுக்கினான். கையில் உறை இருந்ததால் அசுத்தங்களை எல்லாம் துடைத்து விட்டு பன்னீர் மற்றும் சோப்பு நுரை கலந்த தண்ணீரால் உடலை கழுவ ஆரம்பித்தான். அவனுக்கு உதவியாக இப்போது அவனது மாமாவும் வந்தார். அவனது நண்பர்களும் உதவினர். இறந்தவுடன் உடல் மிருதுவாகி விடும் ஆகையால் தோல்களுக்கு சிராய்ப்பு ஏற்படாமல் மிக மிருதுவாக தனது தந்தையை கழுவிக் கொண்டிருந்தான் ரஹீம்.

அடுத்தாக கற்பூரம் கலந்த தண்ணீரினால் இறந்த உடலை கழுவி விட்டனர். கழுவும் போது மூக்கிலும் வாயிலும் தண்ணீர் செல்லாமல் பார்த்துக் கொண்டனர். ஏனெனில் அந்த தண்ணீர் திரும்பவும் வயிற்றுக்குள் சென்றால் பிறகும் அசுத்தங்கள் வெளியாக வாய்ப்பிருக்கிறது. கழுவி முடிந்து ஒரு மெல்லிய துணியால் உடலை துடைக்க ஆரம்பித்தனர்.

அடுத்து அவனது மாமா வெள்ளை துணியை கொண்டு வந்தார். தலைப் பக்கமும் கால்பக்கமும் ஒரு அடி விட்டு இறந்த உடலின் மேல் போர்த்தினர். கால் பக்கமும், உடல் பக்கமும், தலைப் பக்கமும் துணியினால் முடிச்சு போட்டு நெருங்கியவர்கள் கடைசியாக பார்க்க அழைக்கப்பட்டனர். ஜீனத் கடைசி முறை தனது கணவனை பார்த்து விட்டு மகனைக் கட்டிக் கொண்டு சத்தம் போட்டு அழ ஆரம்பித்தார். 'வேண்டாம்மா! சத்தம் போட்டு அழாதீங்க...மனசுக்குள்ள அழுதுக்கோங்க...' என்று சொல்லி விட்டு வந்திருந்த அனைவரும் சேர்ந்து இறந்த உடலை தூக்க ஆயத்தமாகினர்.

சவப் பெட்டி வந்தது. உடலை அதனுள் பவ்யமாக வைத்து நான்கு பேர் சேர்ந்து தூக்க ஆரம்பித்தனர். பெண்கள் புறத்திலிருந்து அழுகுரல் அதிகமாகவே அவர்களை ரஹீம் ஆசூவாசப்படுத்தி தனது தந்தையின் உடலுக்கு தனது தோளையும் கொடுத்தான். இறந்த உடல் பள்ளிவாசலை நோக்கி சென்றது. இறந்தவருக்காக செய்யப்படும் பிரார்த்தனை என்ற ரீதியில் இந்த தொழுகை நடத்தப்படுகிறது. தொழுகை நடக்கும் இடத்தில் உடலை வைத்து விட்டு எல்லோரும் கை கால்களை அலம்பச் சென்றனர்.

எல்லோரும் இறந்த உடலுக்கு முன்னால் வரிசையாக நின்றனர். 'தொழ வைக்க ஹஜ்ரத் எங்கே?' என்ற கேள்வியை ஒரு சிலர் கேட்க ஆரம்பித்தனர். இறந்த உடலை கழுவ தன்னைக் கூப்பிடாமலும் பிறகு உடலை வீட்டிலிருந்து எடுத்து வரும் போது ஓத வேண்டிய பாத்திஹாவையும் ஓதாமல் எடுத்து வந்ததால் சற்றே கடுப்பான ஹஜ்ரத் 'ஏன் அதையும் அந்த பையனையே செய்ய சொல்லிடுங்களேன்' என்றார். கூட்டத்தில் சிறு சலசலப்பு.

"நான் அப்பவே சொன்னேன்பா...இப்போ பார் ஹஜ்ரத் கோபத்தில் இருக்கிறார்"

"இந்த பையனுக்கு ஏன் இந்த தேவையில்லாத வேலை. ஹஜ்ரத்தையே அனைத்து காரியத்தையும் செய்ய சொல்லியிருக்கலாம்ல. இப்ப பார் தொழுக வைப்பதிலும் பிரச்னை"


"சிறு பிள்ளை வெள்ளாமை வீடு வந்து சேராதுன்னு சும்மாவா சொன்னாங்க... அப்போ நம்ம அப்பன் பாட்டன் எல்லாம் செஞ்சது தப்பு. ரஹீம் சொல்றதுதான் சரியா!"

"எல்லாம் இந்த 25 வருஷமாத்தான்யா பிரச்னைக்ள். முன்னாடில்லாம் இது மாதிரி பள்ளி வாசலில் எந்த குழப்பமோ சண்டையோ வந்ததில்லை."

"நான் அப்பவே சொன்னேன்ல...இப்ப பார் யார் தொழ வைக்கிறது? போய் ஹஜ்ரத்திடம் மன்னிப்பு கேட்டுக் கொண்டு அவரை தொழ வைக்க கூப்பிடு" -ரஹீமின் மாமா.

பொறுமையாக எல்லாவற்றையும் கேட்டுக் கொண்டிருந்த ரஹீம் தொழுகைக்காக நின்றவர்களைப் பார்த்து பேச ஆரம்பித்தான் : "அஸ்ஸலாமு அலைக்கும்! பாத்திஹா ஓதாததோ என் தந்தைக்கு நானே குளிப்பாட்டியதோ நானாக செய்ததல்ல. முகமது நபி நெருங்கிய உறவினர்கள்தான் குளிப்பாட்ட வேண்டும் என்று சொன்னதால்தான் நான் செய்தேன். பாத்திஹா ஓதுவதற்கு எந்த ஆதாரமும் இல்லை. எனவே நான் பாத்திஹாவும் ஓதவில்லை. இறந்தவருக்காக நடத்தப்படும் தொழுகையும் இமாமாக(தலைவராக) நிற்பதற்கு இறந்தவரின் உறவினர்களே முதல் தகுதியாக நான் ஹதீதுகளில் படித்துள்ளேன். எனவே நானே எனது தகப்பனாருக்காக தொழ வைக்கிறேன்."

என்று கூறியவனாக தொழுகைக்கு தலைவனாக நிற்க ஆரம்பித்தான். இதை சற்றும் எதிர்பாராத ஹஜ்ரத் 'தம்பி..எனக்கு கோபமெல்லாம் இல்லே! நானே தொழ வைக்கிறேன்.' என்றார்..

"இல்லை ஹஜ்ரத். பள்ளியில் மற்ற நேர தொழுகைகளை நீங்கள் தொழ வையுங்கள். இது எனது தகப்பனாரின் இறப்புக்காக நடத்தப்படும் தொழுகை. இதை நானே தொழ வைக்கிறேன்" என்று சொல்லிக் கொண்டே 'அல்லாஹூ அக்பர்' என்று சொல்லி நெஞ்சில் கையை கட்டிக் கொண்டான். பலர் அதிர்ச்சியிலிருந்து மீள்வதற்கு முன்பே தொழுகை ஆரம்பமாகி விட்டது. வந்திருந்த பலரும் வேக வேகமாக வந்து வரிசையில் நின்று தொழ ஆரம்பித்தனர். ஹஜ்ரத்தும் வேறு வழி இல்லாமல் வரிசையில் நின்று ரஹீமை பின்பற்றி தொழ ஆரம்பித்தார்.

தொழுகை முடிந்தது. எப்போதும் தொழுகை முடிந்தவுடன் ஃபாத்திஹா ஓதுவது வழக்கம். ஆனால் அதற்கும் இடம் கொடுக்காமல் சவப் பெட்டியை தனது நண்பர்களின் உதவியோடு தூக்கிக் கொண்டு இறந்தவர்கள் அடக்கம் செய்யும் மைய வாடியை நோக்கி நடக்க ஆரம்பித்தான் ரஹீம். மக்களும் பின் தொடர்ந்தனர். தான் தொடர்ந்து புறக்கணிக்கப்படுவதை உணர்ந்த ஹஜ்ரத் 'இதற்கு ஏதாவது செய்தாக வேண்டும்' என்று மனதுக்குள் நினைத்தவராக தனது வீட்டை நோக்கி நடந்தார்.

பள்ளி வாசலை ஒட்டியே அடக்கஸ்தலும் இருந்தது. உடலை குழிக்குப் பக்கத்தில் இறக்கினர். குழியினுள் முதல் ஆளாக ரஹீம் இறங்கி தனது தகப்பனாரின் உடலை நண்பர்கள் உதவியோடு வாங்கினான். உதவிக்கு அவனது நண்பர்களும் வந்தனர். மண் வெட்டியின் துணை கொண்டு மண்ணை சிறிது சிறிதாக இழுத்து உடலை மூட ஆரம்பித்தனர். அனைத்து வேலைகளையும் ரஹீமே செய்வதை அவனது கல்லூரி தோழன் ராகவன் தூரத்திலிருந்து ஆச்சரியத்துடன் பார்த்துக் கொண்டிருந்தான்.

உடலை மூடியவுடன் அங்கு நின்ற ஏழைகளுக்கு சில பண முடிப்புகளை ரஹீம் கொடுத்துக் கொண்டிருந்தான். பிறகு அனைவரும் கலைந்து சென்றனர். ரஹீமும் அவனது நண்பர்களும் உறவினர்களும் வீட்டை நோக்கி நடந்தனர்.

ரஹீமின் மாமா "தம்பி! சாப்பாடு ஆக்குவதற்கு நெய் ஆடு முதலான அனைத்துக்கும் நீ வருவதற்கு முன்பே சொல்லி விட்டேன். இன்னும் கொஞ்ச நேரத்தில் வந்து விடும்" என்றார்.

"சாப்பாடு...ஆடா...என்ன மாமா கல்யாணமா நடக்குது. என் தகப்பனார் இறந்த இந்த நாளில் விருந்தா. எதுவும் வேண்டாம் எல்லாவற்றையும் கேன்சல் பண்ணுங்கள். எனது நண்பன் தாஹீர் வீட்டிலிருந்து சாப்பாடு ஆக்கி அம்மாவுக்கும் நம் குடும்பத்தவருக்கும் கொடுக்க சொல்லுகிறேன்"


"இங்க வந்திருக்கிறர்களுக்காவது சாப்பாடு கொடுக்க வேண்டும். தடுக்காதே ரஹீம்" - தாயார் ஜுனத்.

'"இல்லம்மா! நபிகள் இவ்வாறு இறந்த வீட்டில் சமைப்பதை தடுத்துள்ளார்கள். பக்கத்து வீடுகளிலிருந்து சாப்பாடு கொடுப்பதுதான் நபி வழி".

"என்னடா தம்பி! புதுசு புதுசா சொல்லுறே! இறந்த வீட்டில் அன்று சாப்பாடு ஆக்குவதும் ஏழாம் நாள் நாற்பதாம் நாள் வருடம் என்று நெய் சோறு ஆக்குவது நம் ஊர் பழக்கமாச்சே!"

"அம்மா! நம் ஊர் பழக்கத்தை நான் கேட்கவில்லை. முகமது நபி தடுத்ததனால் என்னால் செய்ய முடியாது. தயவு செய்து என்னை புரிந்து கொள்ளுங்கள்"

"ஏண்டா! என்னையே எதிர்த்து பேசிறியா"

"மார்க்கத்துக்கு முரணாக பேசினால் எதிர்க்கத்தான் செய்வேன் அம்மா! மன்னித்துக் கொள்ளுங்கள்"

"சவுதி போவதற்கு முன்னால் நல்லாதாணடா இருந்தே! பேய் கீய் புடுச்சுருச்சோ! ஹஜ்ரத்து கிட்டே சொல்லி உனக்கு நூல் முடிஞ்சு போடனும்" என்று சொல்லிக் கொண்டே வீட்டிற்குள் சென்றார் ஜீனத்..

தனது தாயார் இன்னும் இஸ்லாத்தின் அடிப்படையையே சரியாக விளங்க வில்லையே என்று தனக்குள் சிரித்துக் கொண்டவனாக நண்பர்கள் ராகவன் தாஹீரோடு வெளியில் சென்றான்.

ராகவன்: ஏண்டா...ரஹீம். புரோகிதர் செய்யற வேலையை எல்லாம் நீ ஏண்டா செய்யறே!

ரஹீம்: எங்கள் மார்க்கத்தில் அனைவருமே புரோகிதர்கள்தான். அனைத்து காரியங்களையும் அனைவரும் செய்ய வேண்டும். குறிப்பிட்ட நபர்கள்தான் செய்ய வேண்டும் என்று சம்பளத்துக்கு ஆட்களை நியமிப்பது முகமது நபி சொன்னதற்கு நேர்மாறான ஒன்று.

ராகவன்: என்னவோ போப்பா...நீ சொல்றது எல்லாம் நல்லாதான் இருக்கு. இப்படி பாத்திஹா எல்லாம் இல்லை என்றால் பாவம் அவர் குடும்பம் நடத்த பணத்துக்கு என்ன பண்ணுவார்?


ரஹீம்: அதற்கு அவரது சம்பளத்தை அதிகப்படுத்த வேண்டும். தொழுகை நேரம் போக மற்ற நேரங்களில் வேறு வேலைகள் செய்து தனது குடும்பத்தைக் காப்பாற்றலாமே!
ரஹீம் சொல்வதில் உள்ள நியாயத்தைப் புரிந்து கொண்டவர்களாக நண்பர்கள் கலைந்தனர்.


(தொடரும்)

ஜஃபர் பின் அபீதாலிப் (ரழி)அவர்கள் மரணித்தபோது ஜஃபருடைய குடும்பத்தாருக்குஉணவு தயார்செய்து கொடுங்கள் அவர்கள் கவலையில் இருக்கிறார்கள் என்று நபி(ஸல்) அவர்கள்கூறினார்கள்(முஸ்லிம்).
எனவே நபிவழியைப் பின்பற்றி மரணம் சம்பவித்த வீட்டாருக்கு சமைத்துக் கொடுக்க வேண்டுமே தவிர. அந்த வீட்டில் இறைச்சியும் சோறும் சமைப்பது வேதனைக்குரிய விஷயமாகும். இறந்தவர் வீட்டில் சாப்பாடு தயாரிக்கச் சொல்லி அங்கு சென்றவர்களெல்லாம் சாப்பிடுவதையும் அவர்களுக்கு ஆறுதல் சொல்கிறோம் என்ற பெயரில் அடிக்கடி அந்த வீட்டில் கூட்டம் கூடுவதையும் நாங்கள் மார்க்கத்தில் ஹராமாக்கப்பட்ட ஒப்பாரி யின் வகைகளில் ஒருவகையாகவே கருதினோம் என்று நபித்தோழர்கள் கூறுகின்றார்கள் (அபூதாவூத்)

25 comments:

UNMAIKAL said...

இதுதான் இந்தியா!!!.

ரூ.35 லட்சத்தில் 2 கழிப்பறைகளை புதுப்பித்த திட்டக்குழு

புதன்கிழமை, ஜூன் 6, 2012, 13:47


டெல்லி: தினமும் ரூ.28 செலவு செய்ய முடிபவர்கள் வறுமை கோட்டுக்கு மேல் உள்ளவர்களாகிவிடுவார்கள் என்று கூறிய திட்டக் குழு தற்போது ரூ.35 லட்சம் செலவில் 2 கழிப்பறைகளை புதுப்பித்துள்ளது.

டெல்லி யோஜனா பவனில் உள்ள திட்டக் குழு அலுவலகத்தில் உள்ள 2 கழிப்பறைகள் ரூ.35 லட்சம் செலவில் புதுப்பிக்கப்பட்டுள்ளது.

சுபாஷ் சந்திர அகர்வால் என்பவர் தகவல் அறியும் சட்டத்தின்கீழ் விண்ணப்பித்து இந்த தகவலை பெற்றுள்ளார்.

தினமும் ரூ.28 செலவு செய்ய முடிபவர்கள் வறுமை கோட்டுக்கு மேல் உள்ளவர்களாகிவிடுவார்கள் என்று திட்டக் குழு கூறியது சர்ச்சையை எழுப்பியது.

இந்நிலையில் திட்டக் குழு அலுவக கழிப்பறையை புதுப்பிக்க ரூ.35 லட்சம் செலவு செய்யப்பட்டுள்ளது என்ற தகவல் அனைவரையும் அதிர்ச்சி அடையச் செய்துள்ளது.

அந்த 2 கழிப்பறைகளை புதுப்பிக்க ரூ.30,00,305ம், கதவில் பாதுகாப்பு கருவி பொருத்த ரூ. 5,19,426ம் செலவு செய்யப்பட்டுள்ளது.

இந்த 2 கழிப்பறைகளை ஆக்சஸ் கார்டு உள்ளவர்கள் மட்டுமே பயன்படுத்த முடியும்.

தற்போது 60 பேருக்கு இந்த ஆக்சஸ் ஸ்மார்ட் கார்டு கொடுக்கப்பட்டுள்ளது.

அந்த கழிப்பறைகளில் சில திருட்டு சம்பவங்கள் நடந்துள்ளதால் அதை தடுக்கும் வகையில் அவற்றுக்கு செல்லும் வழியில் சிசிடிவி கேமராக்கள் பொருத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாம்.

மேலும் திட்டக் குழு தலைவர் மான்டக் சிங் அலுவாலியா கடந்த ஆண்டு மே மாதம் முதல் அக்டோபர் வரையில் வெளிநாட்டு பயணங்கள் மேற்கொண்டபோது அவரது ஒரு நாள் செலவு ரூ.2.02 லட்சம் என்று தெரிய வந்துள்ளது.

கடந்த 2004ம் ஆண்டு ஜூன் மாதம் முதல் 2011ம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் அலுவாலியா 42 முறை அலுவல் நிமித்தமாக வெளிநாடு சென்றுள்ளார். அதற்கான செலவு ரூ.2.34 கோடி ஆகும்.

அலுவல்களை முடிக்க வெளிநாட்டுப் பயணம் அவசியமானது என்று அலுவாலியா தெரிவித்துள்ளார்.

SOURCE: thatstamil.

இதுதான் இந்தியா!!!.

Anonymous said...

masha allaah arumaiyaana kathai bhai.jazakumullaahu khayr. rajagiri sambavathai vaithu eluthiyatho ?? :)

aanaal oru chinna santhegam. nammil yaarukku quran athigamaaga therigiratho avanga imaam aaga irukka vendum endruthaan naan padithullen. athanaal janaza tholugaiyil imaamath patri theriyavillai. vilakka mudiyumaa please?

suvanappiriyan said...

சலாம் சகோ!

//masha allaah arumaiyaana kathai bhai.jazakumullaahu khayr. rajagiri sambavathai vaithu eluthiyatho ?? :)//


ஒரு மாதத்துக்கு முன்பே எழுதி போல்டரில் தூங்கிக் கொண்டிருந்தது இந்தக் கதை. ராஜகிரி சம்பவம் நடந்ததும் கதையை தூசி தட்டி இன்று பிரசுரித்தேன்.

//aanaal oru chinna santhegam. nammil yaarukku quran athigamaaga therigiratho avanga imaam aaga irukka vendum endruthaan naan padithullen. athanaal janaza tholugaiyil imaamath patri theriyavillai. vilakka mudiyumaa please?//


'எந்த மனிதரின் குடும்பபத்தினர் விஷயத்திலும் அவரது அதிகாரத்திலும் அவருக்கு நீ இமாமாக தலைவனாக ஆகாதே!' என்று நபிகள் நாயகம் சொல்லக் கேட்டேன்.

அறிவிப்பவர்: அபு மஸ்ஊத்
முஸ்லிம் 1079,1078

இந்த நபி மொழிப்படி வாரிசுதாரர் அனுமதி கொடுத்தாலே மற்றவர்கள் தொழ வைக்க முடியும். ஐந்து வேளை தொழுகை பள்ளியில் தொழ வைக்க வேண்டுமானால் வயதில் மூத்தவர்களையும் சிறப்பாக ஓதத்தெரிந்தவர்களையும் முன்னிலைப் படுத்தலாம்.

இறைவனே அறிந்தவன்.

ஜாஹிர் ஹுஸைன் said...

மாஷா அல்லாஹ் ,அருமையான சிறுகதை


http://onlinepj.com/books/janasa-thozukai/
.

அதிரை சித்திக் said...

உண்மையான இஸ்லாத்தினை ..புரிய வைக்க

இது போன்ற சிறுகதைகள் அவசியம் ..சாமணிர்களிடமும்

சென்றடைய வழிவகை செய்ய வேண்டும் ...கணனிக்கு முடங்கி

விடாமல் வெளியில் கொண்டுவந்தால் நலமாக இருக்கும்

தங்களின் படைப்புகளை புத்தக வடிவில் கொண்டு வர வேண்டும்

ஒரே நபராக செயல் படுவது கடினம் கூட்டு முயற்சி செய்யலாம்

எனக்கு நீண்ட நாள் ஆசை ..பகிர்வு பதிப்பகம் என்ற பெயரில்

எழுத்திலும் பணத்திலும் பகிர்ந்துகொண்டு விற்பனையிலும் தனது பங்கினை

ஆற்ற வேண்டும் .எழுத்தாளர்கள் ஒன்று கூடி நல்ல விசயங்களை

பகிர்ந்து கொள்ளல் வேண்டும்..,

suvanappiriyan said...

சகோ அதிரை சித்திக்!

//பகிர்வு பதிப்பகம் என்ற பெயரில்

எழுத்திலும் பணத்திலும் பகிர்ந்துகொண்டு விற்பனையிலும் தனது பங்கினை

ஆற்ற வேண்டும் .எழுத்தாளர்கள் ஒன்று கூடி நல்ல விசயங்களை

பகிர்ந்து கொள்ளல் வேண்டும்.., //

சிறந்த எண்ணம். பலரும் சேர்ந்து முயற்சித்தால் புத்தக வடிவில் கொண்டு வரலாம். பலரது படைப்புகளையும் ஒன்றாக்கியும் கொடுக்கலாம். நேரம் கனிந்து வரும் போது இன்ஷா அல்லாஹ் உங்கள் எண்ணம் நிறைவேறும்.

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!

suvanappiriyan said...

சகோ ஜாகிர்!

//மாஷா அல்லாஹ் ,அருமையான சிறுகதை//

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!

Barari said...

ஒரு கட்டுரையை அழகான கதையாக மாற்றி அனைவரும் உணரும்படி செய்து இருக்கிறீர்கள் .நல்ல முயற்சி .வாழ்த்துக்கள்

suvanappiriyan said...

சகோ பராரி!

//ஒரு கட்டுரையை அழகான கதையாக மாற்றி அனைவரும் உணரும்படி செய்து இருக்கிறீர்கள் .நல்ல முயற்சி .வாழ்த்துக்கள்//

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!

சிராஜ் said...

சலாம் அண்ணன்....

இப்ப தான் பதிவ படிச்சேன்.. இவ்வளவு அருமையான கதையை தாமதமாக படித்ததை நினைத்து வெட்கப்படுகிறேன்... இறந்தவர் வீட்டில் இஸ்லாமிய முறையில் என்னன்ன செய்ய வேண்டும் என்பதை அழகாக விளக்கி உள்ளீர்கள்... தொடரட்டும் உங்கள் பணி சகோ...

~முஹம்மத் ஆஷிக் citizen of world~ said...

சலாம் சகோ.சுவனப்பிரியன்,

தலைப்பை பார்த்துவிட்டு.. ஏதோ பேய்-பிசாசு சிறுகதைதானே... மெதுவா படிச்சிக்கலாம்னு இருந்துட்டேன். இப்ப தான் படிச்சேன். இவ்வளவு அருமையான விஷயத்தை தாமதமாக படித்ததை நினைத்து வருந்துகிறேன்..! (தலைப்பு என்னை தள்ளி வைத்து விட்டது..:-))

சொல்ல வந்த அருமையான விஷயத்தை இப்படியும் இலகுவாக படிப்போர் உள்ளத்திலே கொண்டு போய் சேர்க்கலாம் என்று உங்களிடம்தான் கற்றுக்கொள்ள வேண்டும்..! மாஷாஅல்லாஹ்.. தெளிவான பதிவு..!

இறந்தவர் வீட்டில் இஸ்லாமிய முறையில் என்னன்ன செய்ய வேண்டும் என்பதை அழகாக விளக்கி வருகிறீர்கள். தொடரும் போட்டு உள்ளீர்கள். தந்தையின் மக்களுக்கான இம்மை கடனை நிறைவேற்றுவது... அவரின் மறுமை கடனை நிறைவேற்றுவது... சொத்து பிரித்தல்... மூன்று... ஏழு... நாப்பது... இன்னும் நிறைய இருக்கின்றன... இன்ஷாஅல்லாஹ் தொடருங்கள்... உங்கள் பணியை சகோ.சுவனப்பிரியன்..!

suvanappiriyan said...

சலாம் சகோ சிராஜ்!

//இப்ப தான் பதிவ படிச்சேன்.. இவ்வளவு அருமையான கதையை தாமதமாக படித்ததை நினைத்து வெட்கப்படுகிறேன்... இறந்தவர் வீட்டில் இஸ்லாமிய முறையில் என்னன்ன செய்ய வேண்டும் என்பதை அழகாக விளக்கி உள்ளீர்கள்... தொடரட்டும் உங்கள் பணி சகோ...//

தாமதமாக வந்தாலும் வருகை புரிந்து கருத்தைப் பதிந்தமைக்கு நன்றி!

suvanappiriyan said...

சலாம் சகோ ஆஷிக்!

//இறந்தவர் வீட்டில் இஸ்லாமிய முறையில் என்னன்ன செய்ய வேண்டும் என்பதை அழகாக விளக்கி வருகிறீர்கள். தொடரும் போட்டு உள்ளீர்கள். தந்தையின் மக்களுக்கான இம்மை கடனை நிறைவேற்றுவது... அவரின் மறுமை கடனை நிறைவேற்றுவது... சொத்து பிரித்தல்... மூன்று... ஏழு... நாப்பது... இன்னும் நிறைய இருக்கின்றன... இன்ஷாஅல்லாஹ் தொடருங்கள்... உங்கள் பணியை சகோ.சுவனப்பிரியன்..!//

திருமணத்திலும் இறப்பிலும் இஸ்லாமியர்கள் செய்து வரும் சடங்குகள் சம்பிராதயங்கள் மிக அதிகம். வீணாக்கப்படும் பொருளாதாரமும் கணக்கிலடங்காது. ஆனால் தற்போது குறைந்து வருவது மகிழ்ச்சிக்குரிய விஷயம்.

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோ.

திருவாளப்புத்தூர் முஸ்லீம் said...

அஸ்ஸலாமு அலைக்கும்,,

இஸ்லாமிய முறையில் இறந்தவர்களுக்கு என்ன செய்யவேண்டும் என்று விளக்கமாக கதை வடிவில் விளக்கி உள்ளது அருமை சகோ.

//"என்னடா தம்பி! புதுசு புதுசா சொல்லுறே! இறந்த வீட்டில் அன்று சாப்பாடு ஆக்குவதும் ஏழாம் நாள் நாற்பதாம் நாள் வருடம் என்று நெய் சோறு ஆக்குவது நம் ஊர் பழக்கமாச்சே!"// அன்று உலகிற்கே புத்தி புகட்டிய நம் சமுதாயம் இன்று புத்தி இன்றி மாற்று மதத்தவர்களை தோற்கடிக்கும் வகையில் வீண் விரயம் செய்யும் செயல்களில் ஈடுபடுவது வருத்தத்திற்குரிய செயலாக உள்ளது......

ஹுஸைனம்மா said...

அருமையான பதிவு. முஸ்லிம்கள் அனைவரும் அறிந்துகொள்ள வேண்டிய கருத்துகள்.

இறப்பு, இறந்தவருக்கான வழிமுறைகள் பற்றி அநேகம் பேருக்குத் தெரிவதில்லை (எனக்கும்). அடுத்த பதிவில் இன்னும் பல விளக்கங்களை எதிர்பார்க்கிறேன்.

இறந்தவரை விரைவாக அடக்கம் செய்வதும் நபிமுறைதானே.

Nizam said...

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) சகோரே. முதலில் தலைப்பில் "என் மகனுக்கு பேய் புடிச்சிருக்கு" எதிர்பாரத அதிர்ச்சி உங்களுக்கு பேய் நம்பிகைன்னு, படிக்கும் போதுதான் அதன் அழகு தெரிகிறது.

Unknown said...

super story

suvanappiriyan said...

வஅலைக்கும் சலாம்! சகோ திருவாளப்புத்தூர் முஸ்லிம்!

//அன்று உலகிற்கே புத்தி புகட்டிய நம் சமுதாயம் இன்று புத்தி இன்றி மாற்று மதத்தவர்களை தோற்கடிக்கும் வகையில் வீண் விரயம் செய்யும் செயல்களில் ஈடுபடுவது வருத்தத்திற்குரிய செயலாக உள்ளது......//

குர்ஆனும் நபி மொழிகளும் நம்முடைய தாய் மொழியில் மொழி பெயர்க்காமலேயே இருந்து விட்டோம். அதுதான் முக்கிய காரணம்.

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!

suvanappiriyan said...

சலாம் சகோ ஹூசைனம்மா!

//அடுத்த பதிவில் இன்னும் பல விளக்கங்களை எதிர்பார்க்கிறேன்.//

இன்ஷா அல்லாஹ் முயற்ச்சிக்கிறேன்.

//இறந்தவரை விரைவாக அடக்கம் செய்வதும் நபிமுறைதானே.//

ஆம். இறந்த உடலை அதிக நேரம் வைத்திருக்காமல் சீக்கிரம் அடக்கம் செய்வது நபி வழியே!

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!

suvanappiriyan said...

வஅலைக்கும் சலாம் சகோ நிஜாம்!

//எதிர்பாரத அதிர்ச்சி உங்களுக்கு பேய் நம்பிகைன்னு, படிக்கும் போதுதான் அதன் அழகு தெரிகிறது.//

ஹா..ஹா.. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!

suvanappiriyan said...

சகோ அஜாதீர்!

//super story//

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!

இஸ்லாமிய மாணவன் said...

ஸலாம்

//
/இறந்தவரை விரைவாக அடக்கம் செய்வதும் நபிமுறைதானே.//

ஆம். இறந்த உடலை அதிக நேரம் வைத்திருக்காமல் சீக்கிரம் அடக்கம் செய்வது நபி வழியே!//

உங்களுடைய புரிதல் தவறு ... யாரு சொன்னாங்களாம் உங்களுக்கு இறந்தவரை வேமா அடக்க சொல்லி ... தெரியாடிக்க விற்றனும் ..அரை குறையா உளற கூடாது ...

உங்கள் பதிவுகள்ல நிறைய தவறான ஹதீஸ் லாம் இடம் பெருது ... இஸ்லாத்தை நன்கு படிக்கவும் ...

mujahidh ali said...

சலாம் சகோ.சுவனப்பிரியன்,

துன்பமான நேரங்களில் பொறுமை காத்தல் குடும்பத்தில் ஒருவர் இறந்து விட்டால் எல்லாமே முடிந்துவிட்டது என்று எண்ணி பொறுமை இழந்து ஒப்பாரி போன்ற கூப்பாடு போடுதல்.,

ப்ரோகிதர்களுக்கு இடம் கொடுக்காமல் பிள்ளைகள் பெற்றோருக்கு இறுதி நேரத்திலும் செய்ய வேண்டிய கடமைகளை நிறைவேற்றல்,

இறந்தவர் வீட்டில் மூன்றாம் நாள், ஏழாம் நாள் நாற்பதாம் நாள் வருடம் என்று இறந்தவர் வீட்டாருக்கு தேவையற்ற வீண் செலவுகளை ஏற்படுத்துதல்.

ஊர் வழக்கத்திற்கு முக்கியத்துவம் கொடுக்காமல் நபிவழிக்கு முக்கியத்துவம் கொடுத்தல்.

இது கதை போன்று அமைக்கப்பட்டாலும், ஒவ்வொருவரின் வாழ்க்கையிலும் நடந்தேரக்கூடிய நிகழ்வு.

ஒவ்வொரு சந்தரப்பங்களிலும் நம்மிடைய இஸ்லாமிய பண்புகள் வெளிப்பட வேண்டுமென்ற உணர்வை ஏற்படுத்தும் நல்லதொரு கதை(பதிவு.).

///"சிறு பிள்ளை வெள்ளாமை வீடு வந்து சேராதுன்னு சும்மாவா சொன்னாங்க... அப்போ நம்ம அப்பன் பாட்டன் எல்லாம் செஞ்சது தப்பு. ரஹீம் சொல்றதுதான் சரியா!"///

காலங்காலமா இதை சொல்லியே உண்மையை ஏற்க மறுக்கின்றனர். அல்லாஹ் தான் நேர்வழியில் செலுத்தணும்.

suvanappiriyan said...

சலாம் சகோ முஜாஹித் அலி!

//இது கதை போன்று அமைக்கப்பட்டாலும், ஒவ்வொருவரின் வாழ்க்கையிலும் நடந்தேரக்கூடிய நிகழ்வு. //

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!

suvanappiriyan said...

எனது தந்தை (இஸ்லாத்தை ஏற்று விட்டு ஊருக்கு) வந்ததும் ''அல்லாஹ்வின் மீது ஆணையாக நான் அண்ணல் நபி (ஸல்) அவர்களிடமிருந்து வந்துள்ளேன். இன்னின்ன நேரத்தில் இந்த இந்த தொழுகைகளைத் தொழுங்கள். தொழுகை நேரம் வந்ததும் உங்களில் ஒருவர் தொழுகைக்கு அழைக்கட்டும். மேலும் உங்களில் குர்ஆனை அதிகம் ஓதத் தெரிந்தவர் தொழுகை நடத்தட்டும்'' என்று கூறினார்கள். அப்போது அவர்கள் (அத்தகுதியுடைய ஒருவரை தேடிப் பார்த்தார்கள்) நான் ஒட்டக வியாபார கூட்டத்தாரிடமிருந்து ஓதத் தெரிந்து கொண்டிருந்ததால் என்னை விட அதிகமாக குர்ஆன் ஓதத் தெரிந்தவர் யாருமில்லை. எனவே தொழுகை நடத்த என்னை முன்னிருத்தினர். அப்போது நான் ஆறு வயதுடையவனாக அல்லது ஏழு வயதுடையவனாக இருந்தேன்.

என் மீது ஒரு போர்வை இருந்தது. நான் ஸஜ்தா செய்யும் போது அது என்னை விட்டு விலகி ( எனது பித்தட்டு தெரிந்து) விடும். அப்போது கூட்டத்தில் உள்ள ஒரு பெண் உங்கள் இமாமின் பித்தட்டை மூட (ஒரு துணி கொடுக்க) வேண்டாமா? என்று கேட்டார். உடனே அவர்கள் எனக்கு ஒரு சட்டையை அளித்தனர். அந்த சட்டையைக் கொண்டு நான் அடைந்த சந்தோஷத்தைப் போன்று வேறு எதைக் கொண்டும் சந்தோஷம் அடைந்ததில்லை.

அறிவிப்பவர்: அம்ரு பின் ஸலமா (ரலி)
நூல் : புகாரி 4302