Followers

Sunday, June 10, 2012

விஸ்வரூபம் – விவகாரம் - கமலஹாசன்!



“ரொம்பவுமதான் கஷ்டப்படறார் பாவம்! இந்த முறையாவது ஆஸ்கார் இவருக்கு கிடைக்குமா?”

----------------------------------------

அடுத்த சர்ச்சை ஆரம்பமாகி விட்டது. சினிமாவைப் பொறுத்த வரை எனக்கு நல்ல அபிப்ராயம் கிடையாது. இன்று சமூகத்தை சீரழித்து வருவதில் குறிப்பாக இந்தியாவில் அதிலும் குறிப்பாக தமிழகத்தில் முக்கிய பங்கு வகிப்பதில் இந்த கூத்தாடிகளுக்கு முக்கிய பங்குண்டு. விஜயகாந்தும் அர்ஜூனும் தங்கள் படங்களில் தொடர்ந்து வில்லன்களாகவும் தேச துரோகிகளாகவும் முஸ்லிம்களை திட்டமிட்டு காண்பித்து தங்கள் அரிப்பை தீர்த்துக் கொண்டனர். கமலஹாசனும் அவ்வப்போது முஸ்லிம்களை ஆதரித்தும் சிலபோது முஸ்லிம்களை எதிர்த்தும் கதைக் கருவை அமைப்பார். தொலைக்காட்சியில் வரும் சீரியல்களும் சினிமாவில் வரும் கதைகளும் நமது சமூகத்தை வெகுவாகவே பாதிக்கின்றன. ஒரு செய்தி சமூகத்தின் மேல் தட்டு மக்களிலிருந்து அடி தட்டு மக்கள் வரை வெகு சீக்கிரம் சென்றடைவதில் சினிமாவின் பங்கு அளப்பரியது. எனவே இந்த சினிமாவை நாம் விரும்பா விட்டாலும் நமது வாழ்வில் நமது அனுமதி இல்லாமலேயே சில நேரங்களில் வந்து அமர்ந்து கொள்கிறது.




அந்த வகையில் தற்போது கமலின் கதை, டைரக்ஷன், தயாரிப்பில் வெளி வரவிருக்கும் விஸ்வரூபத்தின் ஸ்டில்களில் அரபி மொழியை அழகாக உருவகப்படுத்தியிருக்கிறார். இதன் மூலம் இந்த படத்தில் இஸ்லாத்தைப் பற்றி முஸ்லிம்களைப் பற்றி கதையினூடாக ஏதோ சொல்லப் போகிறார் என்பது தெளிவாகிறது. ஆஸ்கார் கனவு கண்டு வரும் கமல் அதைப் பெறுவதற்காக இஸ்லாமியர்களை தீவிரவாதிகளாகவும் அமெரிக்க உளவு அதிகாரியாக வந்து அந்த தீவிரவாதத்தை முறியடிக்கும் முகமாகவும் கதை அமைக்கப்பட்டிருக்கலாம். அல்லது முஸ்லிம்களின் மேல் அநியாயத்துக்கு பொய் கூறி அவர்கள் அனைவரையும் தீவிரவாதிகளாக்கி விட்டனர் என்ற ரீதியில் முஸ்லிம்களை நல்லவர்களாகவும் காட்டலாம். படம் வந்தவுடன்தான் கதையின் போக்கு தெரியும். "விஸ்வரூபம்" படத்தை கேன்ஸ் பட விழாவுக்கு அனுப்பும் விருப்பத்தில் இருக்கிறார் கமல். படப்பிடிப்பு தற்போது இறுதிக் கட்டத்தில் உள்ளது. ஓரிரு வாரத்தில் படத்தை முடித்துவிட்டு படவிழாவுக்கு அனுப்பும் வேலையை துவங்கவிருக்கிறார்.




நான் கமலஹாசனுக்கு சொல்லிக் கொள்வது: நீங்கள் படத்தின் கதையை எப்படி வேண்டுமானாலும் கொண்டு செல்லுங்கள். ஆனால் அதில் உண்மையை சொல்லுங்கள். குண்டு வெடிப்பு நிகழ்த்தியவர்கள் யார் என்பதையும் இதனால் பயன் பெற்றவர்கள் யார் என்பதையும் ஒளிக்காமல் மக்கள் மன்றத்துக்கு முன் கொண்டு வாருங்கள். கோவாவில் மர்கோவாவில் தீபாவளியன்று குண்டு வெடிப்பில் ஈடுபட்ட சில இந்துத்வவாதிகள் தவறாக குண்டு வெடித்ததால் அவர்களிலேயே சிலர் இறக்கின்றனர். மற்றும் சிலர் தப்பியோடி தமிழகம், கேரளம், கர்நாடகாவில் பதுங்கியிருப்பதாக நம்பத்தகுந்த செய்திகள் வெளியாயின. தீபாவளியன்று வெடிக்கச் செய்தால் சிறுபான்மை மக்களின் மீது இந்துக்களின் கோபம் திரும்ப வேண்டும் என்பது அந்த கயவர்களின் நோக்கம். ஆனால் அதில் அவர்களே பலியாகி சிலர் தலைமறை வாயிருக்கின்றனர். இதை இணைய தளங்களில்தான் காண முடிந்தது.

Police in Margao, Goa, have arrested a man with alleged links to a Hindu right-wing group ''Sanatan Sanstha'' in connection with the recent blasts in the area in which two persons were killed.
The man, who is yet to be identified, was picked up from the outfit's office by sleuths of Maharashtra's Anti-Terrorism Squad (ATS) and Goa Police.

A search of the Sanstha office in Nesai near Margao town was conducted, police confirmed. They said the outfit was suspected to have links with 2008 Malegaon blast accused Sadhvi Pragya Singh Thakur.
In an attempt to crack the case quickly, the state government has formed a Special Investigating Team (SIT) to probe

http://www.indianexpress.com/news/margao-blast-goa-police-arrest-one-hindu-rightwinger/530511/

தமிழகத்தின் முன்னணி பத்திரிக்கைகளான தினமலரோ தினமணியோ குற்றவாளிகள் மறைந்துள்ள செய்தியைப் பற்றி ஒரு வரி கூட எழுதவில்லை. குற்றவாளிகள் தமிழகத்தில் மறைந்துள்ள விபரத்தை சாமர்த்தியமாக கண்டு கொள்ளாமல் விட்டுள்ளனர். நம்மவன் செய்தால் கண்டு கொள்ளாமல் இருப்போம் என்ற மனோ பாவமே பலரை தைரியமாக குற்றச் செயல்களில் ஈடுபடச் செய்கிறது. அப்பாவிகளை கொல்லவும் வழி வகை செய்கிறது. இந்த நிலை முதலில் நம்மிடமிருந்து மாற வேண்டும். தேச துரோக செயலில் ஈடுபடுபவன் நம் சொந்த சகோதரனேயானாலும் அவனை சட்டத்தின் முன் நிறுத்தும் மனோ பாவம் நம் அனைவருக்கும் வர வேண்டும். முஸ்லிம் தவறு செய்திருந்தாலும், இந்து தவறு செய்திருந்தாலும், கிறித்தவனோ அல்லது கம்யூனிஸ்டோ, ஆர்எஸ்ஸோ, இந்து முண்ணனியோ யார் குற்ற செயலில் ஈடுபட்டாலும் பாரபட்சமின்றி செய்திகளை வெளியிடுபவையாக நமது ஊடகங்கள் மாற வேண்டும. அதை இந்த படம் பூர்த்தி செய்கிறதா என்று பார்ப்போம்.

--------------------------------------

அடுத்து சுதந்திர போராட்டக் காலத்தில் சிறையில் இருந்த கமலின் தந்தைக்கும் அதே செல்லில் சிறையில் இருந்த ஹாஸன் என்ற முஸ்லிமுக்கும் நட்பு வளர்கிறது. ஹாஸனின் நற்பண்புகளால் கவரப்பட்ட கமலின் தந்தை தனது குழந்தைகளுக்கு சந்திர ஹாஸன், சாரு ஹாஸன், கமல ஹாஸன் என்ற பெயரை வைக்கிறார். இந்த பெயர்க் காரணம் பற்றி கமல் கூறுவதைக் கேட்போம்.

"அமெரிக்காவில் ஷாரூக்கானுக்கு நடந்ததைப் போன்ற அனுபவம் எனக்கும்தான் ஏற்பட்டது. அதற்காக நான் வருத்தப்படவில்லை. அந்த பிரச்சினையை நான் ரசிக்கிறேன். சொல்லப்போனால் என் பெயரையே Qamal Hassan என்று மாற்றப் போகிறேன்", என்கிறார் கமல்!

இந்தி நடிகர் ஷாருக்கானை அமெரிக்கர்கள் விமான நிலையத்தில் தடுத்து நிறுத்தி விசாரணை நடத்தினார்கள் அல்லவா. இதுபற்றி கமலிடம் கருத்து கேட்டபோது, "ஷாரூக்கானை மட்டுமா... என்னையும் கூடத்தான் சந்தேகமா பார்க்கிறார்கள் அமெரிக்கர்கள். அங்கு இது சகஜம்தான். இதுக்காக ஏன் டென்ஷனாகனும்," என்றார்.

அவர் மேலும் கூறுகையில், "எனது பெயரை உச்சரிக்கும்போது முஸ்லிம் பெயர்போல் தோன்றும். எனது தந்தை பெயர் வைக்கும் போதே இதுபோன்ற சந்தேகங்கள் வரும் என்று தெரிந்துதான் வைத்தார்.

அடிக்கடி என்னிடம் உனது பெயரை பற்றி யாரேனும் விசாரித்தார்களா? முஸ்லிம் என்று நினைத்தார்களா? என்று கேட்பார் அப்பா.

நான் அமெரிக்கா போகும்போதெல்லாம், எனது பெயரும் அமெரிக்கர்களுக்கு குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. ஷாருக்கானுக்கு விமான நிலையத்தில் நிகழ்ந்த சம்பவம் எனக்கும் ஏற்பட்டது. கனடா விமான நிலையத்தில் என்னைத் தடுத்து நிறுத்தினார்கள். அரை மணி நேரம் என்னிடம் கேள்விகள் கேட்டார்கள். இப்படியெல்லாம் குழப்பம் வரும் என்று தெரிந்தே எனக்கு இப்பெயரை என் தந்தை வைத்துள்ளார்.

எனது சகோதரர்களுக்கு சந்திரஹாசன், சாருஹாசன் என பெயர் வைத்து விட்டு எனக்கு மட்டும் குறும்புத்தனமாக இந்த பெயரை சூட்டியுள்ளார். எனது பெயரை இதுபோல் சந்தேகமாக பார்த்து குழம்புவதை ஒருவிதத்தில் நான் ரசிக்கிறேன். சந்தோஷமாகவும் இருக்கிறது.

என் பெயரே கியூ என்ற ஆங்கில எழுத்தை முதலில் வரும் வகையில் மாற்றப்போகிறேன். அப்படி பெயர் வைப்பதன் மூலம் பிரச்சினைகள் வரவேண்டும். அவற்றை கண்டு நான் ரசிக்க வேண்டும்.

அமெரிக்காவின் இரட்டை கோபுரம் தகர்க்கப்பட்ட சம்பவத்தினால் அங்குள்ளவர்கள் எச்சரிக்கையாக இருக்கின்றனர். அதனால்தான் ஷாருக்கானை தடுத்து நிறுத்தியுள்ளார்கள். அது இயல்புதானே. இன்னொன்று அதுபற்றி ஷாருக்கானே கவலைப்படவில்லை. அதற்குள் ஆயிரம் கருத்துகள்.

இதுபோன்ற விஷயங்களுக்கு இந்தியாவிலிருந்து அவசரப்பட்டு கருத்து தெரிவிப்பதை முதலில் நிறுத்த வேண்டும்.

ஆப்கானிஸ்தான் மாணவர்கள் நமது நாட்டில் எளிதாக ரூம் எடுத்து தங்கிவிட முடியுமா? இதை யாரும் யோசிக்கிறீர்களா... இதற்கு தீர்வு என்ன என்றாவது யோசிக்கிறோமா... அதனால் நம்மிடம் உள்ள மூடத்தனத்தை முதலில் அகற்றப் பார்க்க வேண்டும்," என்றார்.

-----------------------------------------

உங்களின் தந்தை ஹாஸனின் நினைவாக வைத்த அந்த பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் திருமணம் ஆகாமலேயே உறவு வைத்துக் கொள்ளலாம் என்ற கருத்தை வெளியிட்டு அதன்படி வாழ்ந்தும் வருகிறீர்கள். இது சமூகத்தில் எவ்வளவு பெரிய பாதிப்பை ஏற்படுத்தும் என்பதை அறியாதவரல்ல நீங்கள். உங்கள் ரசிகர்கள் உங்களை முன்னுதாரணமாகக் கொண்டு அவர்கள் வாழ்விலும் கடைபிடிக்கும் அபாயம் உண்டு. பிறக்கும் குழந்தைகள் தன்னுடைய தகப்பன் யார் என்பதை அறியாமல் மனநோய்க்கு ஆளாவதை எந்த பெற்றோராவது விரும்புவாரா? பண்பாடு கலாசாரம் அனைத்தும் சீரழிக்கப்படும் என்பதை நீங்கள் உணரவில்லையா? உங்கள் படங்களில் ஆண் பெண் நெருக்கமான காட்சிகளையும் புகுத்தி அதிலும் முத்தக் காட்சிகளையும் தவறாமல் இடம் பெறச் செய்கிறீர்கள். இவை எல்லாம் சமூக அக்கறை உள்ள ஒரு கலைஞன் செய்யும் செயல்கள் அல்ல என்பதை உணராதவர் அல்ல நீங்கள். அல்லது நான் இரட்டை வேடம் போடுகிறேன் என்று பொதுவில் அறிவித்து விடுங்கள்.

படிக்கும் காலங்களில் இருந்து உங்கள் படங்களை தொடர்ந்து பார்த்து வந்தவன். சில ஆண்டுகளாக சினிமா பார்ப்பதையும் விட்டு விட்டேன். முன்பு ஒரு முறை சென்னை விமான நிலையத்தில் உங்களை சந்தித்து கைகுலுக்கி பேசியுமிருக்கிறேன். நீங்கள் மறந்திருக்கலாம். :-) நான் மறக்கவில்லை :-(. முன்பு என்னுள் அந்த அளவு பாதிப்பை ஏற்படுத்திய நீங்கள் குடும்ப வாழ்விலும் சமூக அக்கறையிலும் சிறந்து விளங்க வேண்டும் என்று விருப்பப் படுகிறேன்.

-----------------------------------------

“நம்மவர் என்ற படத்தில் நான் வரலாற்று ஆசிரியராக நடித்தேன். வரலாற்றுக் குளறுபடிகளைப் பற்றி நான் செய்த விமர்சனத்தை என்ன காரணத்திற்காகவோ சென்சாரில் வெட்டி விட்டார்கள். அதைச் சேர்க்க வேண்டுமென்று நான் வாதாடிய போதும் அவர்கள் ஏற்கவில்லை. அந்தப்பகுதி இதுதான்.

முகலாயர் படையெடுப்பு என்றும், வெள்ளையர் வருகை என்றும் நாம் பாடம் சொல்லித்தருகிறோம். முகலாயர்கள் இங்கு வந்து இங்குள்ள பெண்களையே திருமணம் செய்து கொண்டு இங்கேயே அரண்மனையைக் கட்டி ஆட்சி செய்தார்கள். இந்த நாட்டை அவர்கள் வளப்படுத்தினார்களே தவிர, இங்கு சுரண்டி ஆப்கானிஸ்தானுக்கு கொண்டு போய் சேர்க்கவில்லை.


ஆனால் ஆங்கிலேயர்கள் இங்குள்ள வளங்களை சுரண்டி பிரிட்டனில் சேர்த்து வைத்தார்கள். அவர்கள் இந்த நாட்டை தம் நாடாக ஒருபோதும் கருதியதே இல்லை. ஆனால் முகலாய மன்னர் பகதூர்ஷா ''இந்த நாட்டில் என் உடலை புதைக்க ஆறுகெஜம் நிலம் கிடைக்கவில்லையே என்று கண்ணீர்க் கவிதையை பர்மா சிறையிலிருந்து எழுதினார்'' என்று கூறியிருகிறார்.

இந்த நாட்டை வளப்படுத்தியவர்களை படையெடுத்தவர்கள் என்றும், சுரண்டியவ்ர்களை வருகை தந்தவர்கள் என்றும் எப்படி சொல்லலாம் என்பது நான் வைத்த விவாதம்"

சிங்கப்பூர் ஐஃபா கலை விழாவில் கமலஹாசன்

-----------------------------------------


நாத்திகர்களுக்கு இஸ்லாத்தின் மேல் எப்போதுமே ஒரு பாசம் இருக்கும். ஊர் முழுதும் நாத்திகத்தை பரப்பிய பெரியார் இஸ்லாத்தை பொறுத்தவரை மென்மையான போக்கையே கடை பிடிப்பார். அதே போல் தன்னை நாத்திகர் என்று சொல்லிக் கொள்ளும் கமல் தனக்கு முஸ்லிம் பெயர் இருப்பதை பெருமையாகக் கூறிக் கொள்கிறார். இஸ்லாத்தின் ஆணி வேரே ஓரிறைக் கொள்கை. அது எவ்வாறு ஆரம்பமாகிறது? 'லாயிலாஹா' அதாவது 'இறைவன் இல்லை': 'இல்லல்லாஹ்' அதாவது 'ஏகஇறைவனைத் தவிர'. ஆக நாத்திகக் கருத்தின் மூலமாகவே இஸ்லாத்தின் உறுதி மொழி ஆரம்பமாகிறது. எனவேதான் நாத்திகர்களுக்கு எப்போதும் ஒரு ஈர்ப்பு இஸ்லாத்தின் மேல் உள்ளதோ!




10 comments:

Anonymous said...

நித்தியானந்தாவை கைது செய்ய உத்தரவு; ஆசிரமத்துக்கு சீல் வைத்தது கர்நாடக அரசு

http://www.tamilmirror.lk/ஏனையவை/pirapalankal/42592-2012-06-11-09-39-07.html

- வள்ளுவன்

திருவாளப்புத்தூர் முஸ்லீம் said...

கமல் பற்றிய உங்களது கருத்தில் நான் உடன்பட்டாலும் சற்று விலகியே உடன்படுகின்றேன்..அதாவது கமல் சிலப்போது முஸ்லிம்களுக்கு ஆதரவாக சினிமா எடுப்பார் என்று கூறியுள்ளீர்கள் என்னை பொறுத்தவரை அது தவறு எதிர்மறையான விசயங்களையும் வியாபாரம் செய்வதில் கமல் வல்லவர் அதாவது ஒரு படத்தில் முஸ்லிம்களுக்கு ஆதரவாக 2 சீன் வருகிறது என்றால் 15 சீன்களில் முஸ்லிம்களை தவறாக சித்தரிப்பார் உதாரணமாக ஹேராம்,உன்னைப்போல் ஒருவன் ஆகியபடங்கள்...உன்னைப் போல் ஒருவனில் கதை கருவை முஸ்லிம்களுக்கு ஆதரவாக சொல்லிவிட்டு படம் முழுக்க முஸ்லிம்களை தீவிரவாதியாகவும்,ஒழுங்கில்லாத,நேர்மை இல்லாத போலிஸ் அதிகாரியாகவும் காட்டி இருப்பார்.கமலின் சில நேர முஸ்லிம் ஆதரவு போக்கு கூட வியாபாரம் தான்..... மற்றப்படி சில முஸ்லிம்கள் எண்ணுவது போல தன் படங்களில் கமல் முஸ்லிம்களை நல்லவர்கலாகவெல்லாம் காட்டுவதில்லை.

புதிய வரவுகள்:
மவ்லித் சாப்பாடு கொடுத்தால் சுவர்க்கம்,இறைவன் நாடினால் என்றால் என்ன அர்த்தம் தெரியுமா

suvanappiriyan said...

சகோ வள்ளுவன்!

//நித்தியானந்தாவை கைது செய்ய உத்தரவு; ஆசிரமத்துக்கு சீல் வைத்தது கர்நாடக அரசு//

இத்தனை காலத்திற்குப் பிறகாவது விழித்துக் கொண்டார்களே! தமிழக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கக் காணோம். ஆச்சரியமாக உள்ளது.

suvanappiriyan said...

சகோ திருவாளப்புத்தூர் முஸ்லிம்!

//அதாவது கமல் சிலப்போது முஸ்லிம்களுக்கு ஆதரவாக சினிமா எடுப்பார் என்று கூறியுள்ளீர்கள் என்னை பொறுத்தவரை அது தவறு எதிர்மறையான விசயங்களையும் வியாபாரம் செய்வதில் கமல் வல்லவர்//

அவர் முஸ்லிம்களை பல இடங்களில் தீவிரவாதிகளாகக் காட்டியிருப்பதையும் மறுக்கவில்லை. விஜயகாந்த் அர்ஜூன் அளவுக்கு மோசமில்லை என்றுதான் சொல்ல வந்தேன்.

Anonymous said...

//தமிழக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கக் காணோம். ஆச்சரியமாக உள்ளது.//

இதில் என்ன வியப்பு? கொன்ற கொலைகாரர்களுக்கே தமிழக அரசு வக்காலத்து வாங்குகிறது. ஜெயலலிதா அரசின் நடவடிக்கையைப் பார்த்தால் அவர்களும் பங்கெடுத்தது போலத் தோன்றுகிறது. அப்படியிருக்க நித்தியானந்தா எம்மாத்திரம்?

Asalamsmt said...

யாரையும் புண் படுத்தாமல் இருந்தால் சரிதான். வியாபார நோக்கமாக, இப்படி எடுத்தால் தான் படம் ஓடும் என்று நினைத்து, குறிப்பிட்ட சமுதாயத்தை குறி வைத்து எடுக்கும் போது, அவரும் அப்படித்தான் என்று நினைக்க தோன்றும்!

suvanappiriyan said...

சகோ அஸ்லம்!

//யாரையும் புண் படுத்தாமல் இருந்தால் சரிதான். வியாபார நோக்கமாக, இப்படி எடுத்தால் தான் படம் ஓடும் என்று நினைத்து, குறிப்பிட்ட சமுதாயத்தை குறி வைத்து எடுக்கும் போது, அவரும் அப்படித்தான் என்று நினைக்க தோன்றும்!//

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!

Anonymous said...

திருவண்ணாமலை அருகிலுள்ள அடையூர் கிராமத்தில் இரண்டு தலித் மாணவர்களை உள்ளுர் பஞ்சாயத்து நடுநிலைப்பள்ளியில் சேர்த்ததைக் கண்டித்து சாதி இந்துக்கள் தங்கள் பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்பாமல் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

வருவாய்த்துறை அதிகாரி வி.பூபதி தலைமையில் நடந்த அமைதி பேச்சுவார்த்தைக்கு பிறகு சாதி இந்து மாணவர்கள் மதியத்திற்கு மேல் பள்ளிக்குத் திரும்பியுள்ளனர். இது குறித்து அதிகாரிகள் கூறும்பொழுது, தலித்துகள் தங்கள் பிள்ளைகளை அக்கிராமத்தில் உள்ள ஆதிதிராவிடர் நல நடுநிலைப்பள்ளிக்குத்தான் அனுப்புவது வழக்கம். முதன்முறையாக இப்பொழுதுதான் குமார் என்ற வேறுஊரிலிருந்து இங்கு வந்த தலித் தொழலாளியின் பிள்ளைகள் முத்துராஜ் மற்றும் சதிஸ் ஆகியோர் ஒன்று மற்றும் நான்காம் வகுப்பில் ஜூன் 6ம் தேதி பஞ்சாயத்து நடுநிலைப்பள்ளியில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, சாதி இந்து பெற்றோர்கள் திங்கள் காலை பள்ளி முன்பு கூடி தலித் மாணவர்களை வெளியேற்ற தலைமையாசிரியர் முகமது யுஸ்மானிடம் சண்டையிட்டுள்ளனர். அவர் மறுத்துள்ளார். வருவாய்த்துறை அதிகாரி வி.பூபதி, தாசில்தார் ரவிச்சந்திரன் மற்றும் காவல்துறை ஆய்வாளர் பூஞ்சோலை ஆகியோர் விரைந்து வந்து இரு வகுப்பு பிரதிநிதிகளுடனும் கூட்டம் நடத்தியுள்ளனர். திரு. பூபதி அக்கூட்டத்தில் பெற்றோர் தான் தங்கள் குழந்தைகள் எங்கு படிக்கவேண்டும் என்பதை முடிவுசெய்யவேண்டும் மற்றவர்கள் அல்ல எனக் கூறியுள்ளார்.

“யாரேனும் பிள்ளைகளை சேர்ப்பதற்காக அரசு பள்ளிகளுக்கு வருவார்களேயானால், நாங்கள் அதனை சாதியைக் காரணம் காட்டி தடுக்க முடியாது. நமது சட்டங்கள் பள்ளி சேர்ப்பில் இதுபோன்ற பாகுபாடுகளை அனுமதிப்பதில்லை. நானுாறுக்கும் குறைவான மாணவர்களுக்காக இரண்டு நடுநிலைப்பள்ளிகளை ஒரு கிராமத்தில் நடத்தத் தேவையில்லை. இது போல நடந்து கொண்டிருந்தால் நாங்கள் இரு பள்ளிகளையும் இணைப்பது குறித்து சிந்திக்க வேண்டியிருக்கும்” என எச்சரித்தார்.

சில சாதி இந்துப் பெண்கள் தங்கள் பெண் பிள்ளைகளை தலித் மாணவர்கள் தொந்தரவு செய்கிறார்கள் என வாதிட்டதற்கு, இது இப்பிரச்சினைக்கு சம்பந்தமில்லாத வேறொரு பிரச்சினை, அது குறித்து குறிப்பான குற்றச்சாட்டுகள் கொடுத்தால் அவை குறித்து கண்டிப்பாக நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

சாதி இந்துக்களின் பிரதிநிதியாக வந்த தேமுதிகவைச் சேர்ந்த எம். சீனிவாசன் என்பவர், “இது வரை எந்த தலித் மாணவரும் பஞ்சாயத்து நடுநிலைப்பள்ளியில் சேர்க்கபட்டதில்லை, அவர்கள் ஆதிதிராவிடர் நடுநிலைப்பள்ளியில் தான் சேர்ந்துள்ளனர். இதுதான் கடந்த 50 வருடங்களாக நடைமுறையில் உள்ளது, அப்படியிருக்க இப்பொழுது மட்டும் இங்கு வருவானேன்?” என்றார்.

அதற்கு திரு. பூபதி “நம் நாடு 300 ஆண்டுகளாக அடிமைப்பட்டுத்தானே இருந்தது, ஏன் நாம் சுதந்திரம் கேட்டோம்?” என பதிலளித்தார்.

பஞ்சாயத்து தலைவரும், சாதி இந்துவுமாகிய ஆர். ராமமூர்த்தி தலித் மாணவர்களை சேர்க்கக்கூடாது என்பதற்கு எதிராக வாதிட்டார். இப்பகுதியில் பிற அனைத்து கிராமங்களிலும் தலித் மற்றும் சாதி இந்து மாணவர்கள் சேர்ந்துதான் பள்ளிகளில் படிக்கிறார்கள் என்ற விசயத்தை குறிப்பிட்டார்.

மேலும் “இந்த கிராமத்து பிள்ளைகளும் ஒன்பதாம் வகுப்பிலிருந்து தலித்துக்களோடு சேர்ந்துதான் பள்ளிக்குப் போகவேண்டும்” எனக் கூறி பிள்ளைகளைப் பள்ளிக்கு அனுப்பும்படி பெற்றோர்களை வலியுறுத்தினார். சாதி இந்து பெற்றோர் கோபம் தணிந்து சென்றனர்.

இன்றைய “The Hindu” பக். 9 “Caste Hindus raise objection to admission of dalit boys in school
Officials intervene and restore amity”

மேற்கண்ட செய்தியைப் படிக்கும் பொழுது ஹிந்துவில் வரும் “வரலாறு அன்று” பகுதியை படிக்கிறோமா அல்லது நடப்புச் செய்தியைத்தான் படிக்கிறோமா என்ற குழப்பம் ஏற்பட்டது. சமீபகாலமாக தொடர்ச்சியாக அயோத்திதாசர் பற்றியும் தமிழக வரலாறு பற்றியும் படித்துக் கொண்டிருப்பதால் நடப்புச் செய்திகள் நாம் வரலாற்றின் அக்காலகட்டத்தை விட்டு இன்னும் வெளியேறவில்லை என்கிற உணர்வை ஏற்படுத்துகிறது. அதிகாரிகள், நிர்வாகிகள், தலைவர்கள் எல்லோரின் பேச்சும் சதிகள் நிறைந்ததாகவும் உள்நோக்கம் கொண்டதாகவும் இருக்குமோ என்ற அவநம்பிக்கை மனதில் ஏற்படுவதை தவிர்க்க முடியவில்லை. நம்ப பெரும் தயக்கம் ஏற்படுத்தக் கூடியதாகவும் உள்ளது.

எது எப்படியோ இரு குழந்தைகளின் மனதில் நம்மீதான நம்பிக்கையை இழந்துவிட்டோம். முன்னூறு குழந்தைகளின் மனதில் விஷத்தைக் கலந்துவிட்டோம்.

http://naatkurippugal.wordpress.com/2012/06/12/dalitandcastehindus/

Anonymous said...

லாஸ் ஏஞ்சல்ஸ்: அமெரிக்காவில், தந்தையால் சுடப்பட்ட இந்திய முன்னாள் ராணுவ அதிகாரியின் மகன், கவலைக்கிடமாக உள்ளான்.இந்திய ராணுவத்தின் ராஷ்டிரிய ரைபிள் பிரிவில், மேஜராக இருந்தவர் அவதார் சிங்,47. கடந்த 1996ம் ஆண்டு, காஷ்மீரில் இவர் பணியில் இருந்த போது, மனித உரிமை அமைப்பை சேர்ந்த ஜலீல் ஆன்ட்ரபி என்ற வழக்கறிஞரின் சடலம், ஜீலம் நதியில் மிதந்தது. ஜலீல் உட்பட ஐந்து பேர் கொலைக்கு, அவதார் சிங் தலைமையிலான ராணுவத்தினர் தான் காரணம் என, புகார் கூறப்பட்டது.இந்த புகார் கூறப்பட்டதை தொடர்ந்து, அவதார் சிங், அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள செல்மா என்ற இடத்தில் குடியேறி விட்டார். அங்கு, லாரி வாடகைக்கு விடும் தொழிலை செய்து வந்தார்.ஐந்து பேர் கொலை வழக்கில், அவதார் சிங்கை ஒப்படைக்கும்படி, இந்தியா கோரியது. இதையடுத்து, கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம், அவதார் சிங் கைது செய்யப்பட்டார்.

எனினும், சர்வதேச "வாரண்ட்' ஏதும் இல்லாததால், அவர் விடுவிக்கப்பட்டு விட்டார்.இந்நிலையில், கடந்த 9ம் தேதி, அவதார் சிங் மனைவி, மூன்று வயது மற்றும் 15 வயது மகன்கள் சுட்டுக் கொல்லப்பட்டு கிடந்தனர். அவதார் சிங்கும் துப்பாக்கியால், தன்னைத் தானே சுட்டுத் தற்கொலை செய்து கொண்டது கண்டுபிடிக்கப்பட்டது.மற்றொரு அறையில், 17 வயது மகன் கிரிஸ் சிங், பலத்த காயத்துடன் மயக்கமடைந்து கிடந்தான். அவனை, மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.அவனுக்கு, அங்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. இருப்பினும், கிரிஸ் சிங் உயிர் பிழைப்பது சிரமம் என, டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.

dinamalar
12-06-2012

suvanappiriyan said...

kamal-haasan-barrie-m-osborne-12-06-12
Jun 12, 2012

“I’m happy to officially announce this collaboration, as it’s an important moment in my career”, started off Kamal Haasan, revealing that he is joining hands with the Oscar winning Hollywood producer Barrie M Osborne. The producer while talking about Kamal said, “It’s such an honour to know him, because his knowledge on history, literature and film is encyclopedic.” On what brought them together, he said, “I was privileged to have been invited to watch Vishwaroopam and I was so impressed to see what he had accomplished. So we just started talking about the possibility of working together, and he came up with a brilliant idea, which I felt so compelling that I couldn’t resist.”

About Osborne, Kamal said, “He is a champion and has worked with all the heroes I have always looked upon. I’m honoured he liked one of my ideas.” About the film the actor said, “It’s an idea, which means we are still on the page, we can’t let you read it. It’s an idea which is international. It is not going to be Mahabharata or Ramayana; it will be about the whole world and will be much deeper.” Adding to the plot Osborn said, “It is a universal project that will deal about who we are in this world.”

The film will be a Hollywood project. Kamal Haasan has confirmed that he will be acting in the film. He will also be writing the script for the film, and will be joining another Hollywood writer, if necessary. Though Osborne wants Kamal to direct the film, the actor hasn’t decided on it.