Followers

Monday, June 18, 2012

கோவில் கட்டுவதை அனுமதிக்க மாட்டேன்!

ரசிகர்கள் எனக்கு கோவில் கட்டுவதை கண்டிப்பாக நான் அனுமதிக்க மாட்டேன் என்று நடிகை ஹன்சிகா‌ மோத்வானி கூறியுள்ளார். சினிமாவில் வந்த குறுகிய காலத்திற்குள்ளேயே ரசிகர்கள் கோவில் கட்டும் அளவுக்கு அவர்கள் மனதில் குடி கொண்டு இருக்கிறார் ஹன்சிகா. சின்ன குஷ்பு என்ற பட்டத்துடன் வலம் வந்து கொண்டு இருக்கும் ஹன்சிகாவிற்கு மதுரை அருகே ரசிகர்கள் கோவில் கட்டட தயாராகி வருகிறார்கள். இதற்காக இடமெல்லாம் பார்த்து, கோவில் கட்ட நன்கொடையும் கூட வசூலித்து வருகின்றனர். கோவிலுக்குள் ஹன்சிகாவின் உருவச்சிலை மற்றும் அவரது படங்களை வைக்க உள்ளனர்.




இந்நிலையில் இதுகுறித்து நடிகை ஹன்சிகா கூறும்போது, ஒரு சில மாதங்களுக்கு முன் மதுரை ரசிகர்கள் என்னை சந்தித்து கோவில் கட்ட அனுமதி கேட்டனர். இப்படி அவர்கள் சொன்னதும் என் மீது அவர்கள் வைத்துள்ள அன்பு புரிந்தது. ஆனால் அதற்காக கோவில் எல்லாம் கட்ட நான் அனுமதிக்க மாட்டேன். அதில் எனக்கு உடன்பாடு கிடையாது. மனிதனை கடவுளுக்கு சமமாக ஒப்படுவது தவறான செயல் என்று கூறியுள்ளார்.

-தின மலர்

17-06-2012

இறைவனுக்குரிய இலக்கணம் என்னவென்று தெரியாததால்தான் அந்த இளைஞர்கள் இது போன்ற காரியத்தை செய்யத் துணிந்திருக்கின்றனர். ஒரு நடிகை கதாநாயகியாக நட்சத்திரமாக மின்னுவதற்கு எவ்வளவு பெரிய தியாகஙகளை எல்லாம்:-) செய்ய வேண்டும் என்பதை அறியாதவர் அல்ல நாம். கோவில் கட்ட முனைந்திருக்கும் அந்த இளைஞர்களுக்கும் இது நன்றாகவே தெரியும். இருந்தும் கடவுள் என்றால் யார்? யாரைத்தான் கடவுளாகக் கொள்ள வேண்டும்! யாரை கடவுளாக்கக் கூடாது என்ற சட்ட திட்டங்கள் வரையறுக்கப்படாததால் அந்த இளைஞர்கள் இது போன்ற காரியத்தை தங்கள் கையிலெடுத்திருக்கிறார்கள். அந்த ஊர் பெரிய மனிதர்களும் இதற்கு எந்த எதிர்ப்பும் தெரிவிக்காமல் இருப்பதுதான் அதிசயம். ஏற்கெனவே குஷ்புவுக்கு கோவில் கட்டி மந்திரங்கள் சொல்லி வழிபாடு நடந்ததால் இதனையும் சாதாரணமாக எடுத்துக் கொண்டிருக்கலாம்.

இன்று நம்மிடையே தெருவுக்கு ஒரு கடவுள் எவ்வாறு வந்தது? அதே போல் ஊருக்கு ஒரு தர்ஹா எவ்வாறு வந்தது? அந்த ஊரில் தலைவரக இருந்தவர் பண வசதி படைத்தவர் இறந்து போனால் அவருக்காக தங்களின் வசதியை முன்னிட்டு சமாதிகளை அழகிய முறையில் கட்டி வைப்பார்கள். அதோடு அவர்களின் படங்களையும் சிலைகளையும் ஞாபகத்துக்காக வைப்பது அன்றைய வழக்கம். அது நாளடைவில் மரியாதை பக்தியாக பரிணமிக்கும் போது அங்கு கோவிலோ தர்ஹாவோ உண்டாகி விடுகிறது. தமிழகத்தின் அல்லது இந்தியாவின் அநேக கோவில்களின் தர்ஹாக்களின் வரலாறுகளை நீங்கள் தோண்டிப் பார்த்தால் மேற் சொன்ன உண்மைகள் வெளி வருவதைக் காணலாம்.

இப்படி சினிமா நடிகைகளுக்கெல்லாம் கோவில் கட்டுவதை பல வட நாட்டவர் பார்த்து விட்டு நம்மிடம் வந்து ஹாஸ்யமாக இதைப் பற்றி விசாரிக்கும் போது நமக்கு வெட்கமாக இருக்கிறது. அரசாங்கம் ஒரு சட்டம் இயற்றி யாருக்குத்தான் கோவில் கட்டலாம், ஏன் தர்ஹா கட்டக் கூடாது என்ற விபரங்களை மக்கள் மத்தியில் விநியோகித்தால் சட்டத்தின் மூலம் தடுக்க வசதியாக இருக்கும்.

கோவலன் கண்ணகி கதை கூட எகிப்தில் மக்களால் பேசப்பட்டு வந்த ஒரு கதையை இளங்கோவடிகள் நம் தமிழ்நாட்டு சூழலில் கையாண்டுள்ளார் என்பதை விளக்கும் பதிவு இது. படித்துப் பாருங்கள் சுவாரஸ்யமாக இருக்கும்.

-----------------------------

நாகர்கோவில்: காதல் திருமணம் செய்தவர் கொலை செய்யப்பட்டதைத் தொடர்ந்து மோதல் ஏற்பட்டதால், நாகர்கோவில் அருகே இடலாக்குடியில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். நாகர்கோவில் அருகே பறக்கை செட்டித்தெருவை சேர்ந்தவர் ரமேஷ்,25. லோடு ஆட்டோ ஓட்டுனர். இவர், இடலாக்குடி பகுதியை சேர்ந்த நிஷா,20, என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்தார். இருவரும் வெவ்வேறு சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால், பகை இருந்து வந்தது. இந்நிலையில், ரமேஷை சவாரிக்கு அழைத்து சென்ற சிலர், அவரை கடுமையாகத் தாக்கினர். இதில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு ரமேஷ் இறந்தார். இது தொடர்பாக நிஷா கொடுத்த புகாரின் பேரில், அவரது சகோதரர் செய்யது அலி மற்றும் ஹவுசி, ஆசீப்கனி உட்பட ஏழு பேர் மீது கோட்டார் போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். ரமேஷின் கொலையை தொடர்ந்து, இடலாக்குடியில் ஒரு சமுதாயத்தினர் வீடுகள் மீது மற்றொரு தரப்பினர் கல்வீசி தாக்கினர். இதில், வீடுகளின் ஜன்னல் கண்ணாடிகள் உடைந்தன. இதனால், பதட்டம் ஏற்பட்டது. வீடுகள் மீது தாக்கியவர்கள் மீது, நடவடிக்கை எடுக்க கோரி, எதிர் தரப்பினர் ரோடு மறியலில் ஈடுபட்டனர். பாஸ்கரன் டி.எஸ்.பி., தலைமையில் போலீசார் குவிக்கப்பட்டு, மறியலில் ஈடுபட்டவர்கள் அப்புறப்படுத்தப்பட்டனர். மேலும், மோதல் ஏற்படாமல் இருக்க, கூடுதல் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

--தின மலர்
16-06-2012

ஒரு குடும்பம் செய்யும் தவறால் தற்போது இரண்டு சமூகங்கள் மோதிக் கொள்ளும் நிலையை உண்டாக்கியிருக்கிறது. வேறு மதத்தவருக்கு தனது தங்கையை தர விருப்பமில்லை என்றால் தங்கையை கண்டித்து வளர்த்திருக்க வேண்டும். திருமணம் செய்தவுடன் அந்த பெண்ணை உங்கள் குடும்பத்திலிருந்து விலக்கி விட்டீர்கள். அதோடு பிரச்னை முடிந்தது. அவர்கள் தங்களின் வாழ்க்கையை எப்படியாவது ஓட்டிக் கொள்ளட்டும் என்று விட்டு விட வேண்டியதுதானே! ஒன்றாக வாழ்ந்து கொண்டிருக்கும் ஒரு குடும்பத்தின் தலைவனை வெட்டி கொலை செய்வது கண்டிக்கத் தக்கது. கொலையாளிகளுக்கு யாரும் துணை போகாமல் காவல் துறை வசம் அவர்களை ஒப்படைக்க வேண்டும். இதற்கு மாறாக குற்றவாளிகளை மறைத்து வைப்பதும் குற்றவாளிகளுக்கு ஆதரவாக செயல்படுவதும் கண்டிக்கத்தக்கது.


அதே போல் கொலையுண்ட குடும்பத்தினர் கொலை செய்த நபரை சட்டத்தின் பிடியிலோ அல்லது அவர்களின் விருப்பத்தின்படியோ ஏதாவது செய்து கொள்ளட்டும். அதை விடுத்து அவர் சார்ந்த மதத்தை சேர்ந்த சிலரது வீடுகளை சேதப்படுத்துவதும் அவர்களின் வியாபாரத் தலங்களை சேதப்படுத்த முயல்வதும் கண்டிக்கத் தக்கது. இதைத்தான் சமூக விரோதிகள் எதிர்பார்க்கிறார்கள். உணர்ச்சி வசத்தால் சிலர் செய்யும் தவறு பலரது உயிருக்கும் உடைமைக்கும் ஊறு விளைவித்து விடுகிறது. நாட்டு நலனில் அக்கறை உள்ள எவரும் இதுபோன்ற கலவரங்களை விரும்ப மாட்டார். பல மொழிகள் பல இனங்கள் பல மார்க்கங்கள் உள்ள நமது நாடு பல கலாசாரங்களையும் உள் வாங்கி அமைதியாக சென்று கொண்டிருக்கிறது. அந்த அமைதி தொடர வேண்டும் என்பதே நாட்டு நலனில் அக்கறை உள்ளவர்களின் விருப்பம்.

-----------------------------

நமது நாட்டின் வட மாநிலங்களில் தக்காபூர் எனும் கிராமத்தில் மழை வர வேண்டி ஒரு விசித்திரமான பழக்கத்தை கையாள்கின்றனர். இரண்டு தவளைகளை பிடித்து வந்து மாலை மரியாதை எல்லாம் செய்து அவைகளுக்குள் திருமணம் செய்து வைத்தால் மழை பெய்யும் என்பது அவர்களது நம்பிக்கை. இறைவன் அருளால்தான் மழை பெய்கிறது என்பதை விளங்கி அந்த மக்கள் படைத்த கடவுளிடம் முறையிடுவதே சரியான வழி முறை. எப்படியோ மழை பெய்து அந்த மக்கள் சந்தோஷமாக இருந்தால் நமக்கும் மகிழ்ச்சியே!





15 comments:

தமிழ்மகன் said...

வர இருக்கும் தொழில் நுட்ப மாற்றங்கள் ----- http://mytamilpeople.blogspot.in/2012/06/future-of-computer-technology.html

suvanappiriyan said...

திரு சாதிக்!

ஆதாரமில்லாத செய்திகளை நான் பப்ளிஸ் செய்ய மாட்டேன்.

பிஜே உண்மையிலேயே ஏதேனும் தவறுகள் செய்திருந்தால் அதற்கு பதிலை இறைவனிடம் அவர் கூறிக் கொள்வார். முதலில் உங்கள் நிலையை நினைத்து பாருங்கள். நான் என் நிலையை நினைத்து பார்க்கிறேன். :-(

பதிவுக்கு சம்பந்தமாக ஏதும் பின்னூட்டம் இடுங்கள். வெளியிடுகிறேன்.

அன்புடன் மலிக்கா said...

இதெல்லாம் காலத்தின் கோலம். இல்லையில்லை மோகத்தின் கோலம்..

NKS.ஹாஜா மைதீன் said...

அஸ்ஸலாமு அலைக்கும் சகோ....

இந்த பதிவை போலவே நீங்களும் நலமாக இருப்பீர்கள் என்று நம்புகிறேன்....

ஷர்புதீன் said...

இது உலக / மார்க்க ( இஸ்லாம் என்பதாக மட்டுமில்லை) / கல்வி அறிவில்லாததே
காரணம்

Anonymous said...

நீங்க உண்மையான மனிதரா இருந்தால் ???? என்னோட எல்லா கமென்ட பப்ளிஷ் பண்ணி பதில் சொல்லுங்க வலிமார்கள் பற்றி எழுத நீங்க என்ன ஆதாரம் வைச்சு இருக்கீங்க அல்லா உங்களுக்கும் உங்க தலைவனுக்கும் தனியா வகி அனுப்பி சொன்னாரா இல்ல பதிவு எழுதறத நிப்பாட்டுங்க.

pj இவன் எல்லாம் ஒரு ஆளு இவன் ரொம்ப நல்லவனாமா ?? வலிமார்கள் ரொம்ப கெட்டவர்கலாமா விஞ்ஞானி சுவன் கண்டு புடிச்சிட்டாரு வலிமார்கள் பற்றி பேசுவதற்கு pj மற்றும் அவரை பின் பற்றும் உங்களை போன்றவர்கள் அருகதை இல்லாதவர்கள்.

suvanappiriyan said...

சகோ அன்புடன் மல்லிகா!

//இதெல்லாம் காலத்தின் கோலம். இல்லையில்லை மோகத்தின் கோலம்..//

சரியாக சொன்னீர்கள். வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!

suvanappiriyan said...

சலாம் சகோ ஹாஜா மைதீன்!

//இந்த பதிவை போலவே நீங்களும் நலமாக இருப்பீர்கள் என்று நம்புகிறேன்....//

வாழ்த்துக்கும் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!

suvanappiriyan said...

சகோ ஷர்புதீன்!

//இது உலக / மார்க்க ( இஸ்லாம் என்பதாக மட்டுமில்லை) / கல்வி அறிவில்லாததே
காரணம்//

படித்தவர்களும் கூடத்தான் மூடப் பழக்கங்களிலே மூழ்கியிருக்கிறார்கள். சிந்தனையோடு அமைந்த கல்வியே வாழ்க்கையை மேம்படுத்தும்.

நீண்ட நாட்களாக இணையத்தின் பக்கம் காணோமே! தொடர்ந்த வேலையோ!

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!

suvanappiriyan said...

சகோ சாதிக் என்ற புனை பெயரில் எழுதும் அனானிக்கு!

//அல்லா உங்களுக்கும் உங்க தலைவனுக்கும் தனியா வகி அனுப்பி சொன்னாரா இல்ல பதிவு எழுதறத நிப்பாட்டுங்க.//

ஹா..ஹா.. நல்ல மனநல மருத்துவரை அணுகவும். நிலைமை இப்படியே போனால் விபரீதமாகி விடும். நல்ல எண்ணங்களையும் உண்மையான இஸ்லாத்தையும் அறிந்து கொள்ளும் பக்குவத்தை இறைவன் உங்களுக்கு வழங்க பிரார்த்திக்கிறேன். வஸ்ஸலாம்.

UNMAIKAL said...

கோயில்களுக்கும் தகவல் உரிமை பெறும் சட்டம் பொருந்தும் - நீதியரசர் சந்துரு தீர்ப்பு

இந்து கோயில்கள் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் வரக்கூடியவையே என்றும் இது தொடர்பாக இந்து அறநிலையத் துறை பிறப்பித்த சுற்றறிக்கை செல்லத்தக்கதே என்றும் உயர்நீதிமன்ற நீதிபதி கே. சந்துரு மற்றொரு சிறப்பான தீர்ப்பை வழங்கியுள்ளார்.

“கோயில்களில் நடக்கும் செயல்பாடுகளை ரகசியமாக்கிவிட்டால்,கோயில் நிர்வாகம் சீரழிந்துவிடும்.

கோயிலில் நடக்கும் செயல்பாடுகள் தனி நபர் தொடர்புடையது என்று கருதிட முடியாது.

கோயில் ஒரு பொது நிறுவனம். பரம்பரை அறங்காவலர்களின் நிர்வாகத்தின் கீழ் இருப்பதால் மட்டுமே கோயில் பொது நிறுவனம் இல்லை என்றாகிவிடாது.

கோயில்கள் அனைத்தும் அறநிலையத் துறையின் கீழ் திட்டவட்டமாகக் கொண்டு வரப்பட்டுள்ளன.

இதற்கு அரசுப் பணமும் ஒதுக்கப்படுகிறது.

கோயில் சடங்குகள் உட்பட பல்வேறு நடவடிக்கைகளுக்கு பொது மக்களிட மிருந்து நன்கொடைகள் திரட்டப்படுகின்றன.

இந்த நிலையில் கோயில்களும் தகவல் உரிமை சட்டத்துக்குக் கட்டுப்பட்டவையே” என்று நீதிபதி கே.சந்துரு தீர்ப்பில் கூறியுள்ளார்.

சென்னை வடபழனியிலுள்ள வெங்கீசுவரர் அழகர் பெருமாள் மற்றும் நாகாத்தம்மாள் கோயில் தேவஸ்தானம் பரம்பரை அறங்காவலராக உள்ள பிரேம் ஆனந்த் என்பவர் இந்த வழக்கை தொடர்ந்தார்.

இந்து அறநிலையத் துறை கோயிலுக்கு தகவல் தரும் அதிகாரி நியமித்ததை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு இது.

கோயில்கள் ஒரு நிர்வாக அமைப்போ அல்லது பொது நிறுவனமோ அல்ல என்று அவர் தாக்கல் செய்த மனுவை நீதிபதி தள்ளுபடி செய்து மேற்கண்ட தீர்ப்பை வழங்கினார்.

நமது கருத்து:

“தெய்வாதீனம் ஜகத் சர்வம்
மந்த்ரா தீணம்து தெய்வதம்
தன்மந்த்ரம் பிராமண தீனம்
பிராமணோ மம தேவதாவநா’

- என்று ரிக்வேதம் 62வது பிரிவு 10வது சுலோகம்

இதன் பொருள்: “இந்த உலகம் முழுதும் கடவுளுக்குக் கட்டுப்பட்டது. கடவுள் மந்திரங்களுக்குக் கட்டுப்பட்டது. மந்திரம் பிராமணர்களுக்கு கட்டுப்பட்டது” என்பதாகும்.

இப்படி மந்திரங்களுக்கும் ‘பிராமணர்’களுக்கம்கட்டுப்பட்ட கடவுள் உள்ள கோயில்கள் தகவல் உரிமை பெறும் சட்டத்துக்குக் கட்டுப்பட முடியாது என்ற அடிப்படையிலேயே இந்த அறங்காவலர் வழக்கைத் தொடர்ந்தார்.

கோயில்கள் பார்ப்பனர்களுக்கும் மந்திரங்களுக்கும் கட்டுப்பட்டவை என்று கூறிக் கொண்டாலும் அரசுப் பணத்திலும் பொது மக்கள் நன்கொடையிலும் நடைபெறும் பொது நிறுவனம் என்பதால் கோயில் பற்றிய தகவல்களைக் கேட்க விரும்பும் எவருக்கும் தகவல் தந்தாக வேண்டும் என்று உயர் நீதிமன்ற நீதிபதி கே.சந்துரு தீர்ப்பு உணர்த்துகிறது.

எனவே, இத் தீர்ப்பு வேதங்களுக்கும் வேதங்களின் அடிப்படையில் விதிகளையும் தண்டனைகளையும் எழுதி வைத்துள்ள மனுதர்மத்துக்கும் எதிரான தீர்ப்பாகும்.

மனுதர்மத்தைக் காப்பாற்றவே பார்ப்பனர்கள் இப்போதும் துடிக்கிறார்கள் என்பதற்கு இந்த வழக்கும் ஒரு சான்று!

SOURCE: http://www.chelliahmuthusamy.com/2012/06/blog-post_20.html

UNMAIKAL said...

ஈரோட்டிலும் ஒரு தீண்டாமை சுவர்?

புதன்கிழமை, ஜூன் 20, 2012, 13:29

ஈரோடு: ஈரோடு மாவடத்தில் உள்ள நகப்பாளையத்தில் தீண்டாமை சுவர் கட்டப்பட்டுள்ளது.

ஈரோடு மாவட்டம் கொடுமுடி அருகே உள்ள நகப்பாளையம் என்னும் கிராமத்தில் தீண்டாமை சுவர் கட்டப்பட்டுள்ளது. 100 அடி நீளமும், 4 அடி உயரமும் கொண்ட இந்த சுவரின் மீது கண்ணாடிகள் பதிக்கப்படு யாரும் இதைத் தாண்டி செல்ல முடியாதவாறு செய்யப்பட்டுள்ளது.

இதனால் சுவருக்கு இந்த பக்கம் உள்ளவர்கள் அந்தப் பக்கம் 10 அடி தூரத்தில் உள்ள கோயிலுக்கும், பள்ளிக்கூடத்திற்கும் செல்ல கிலோ மீட்டர் நடக்க வேண்டியுள்ளது.

இந்த தீண்டாமை சுவரை உடனே அகற்றாவிட்டால் வரும் ஜூலை 2ம் தேதி நாங்களே இடிப்போம் என்று தாழ்த்தப்பட்ட மக்கள் அறிவித்துள்ளனர்.

இந்நிலையில் நேற்று தாழ்த்தப்பட்ட மக்கள் ஒன்று கூட சாதிக்காரர்களுக்கு எதிராக கோஷமிட்டனர்.

இது குறித்து தகவல் அறிந்த காவல் துறை அங்கு வந்து கூட்டம் கூடக் கூடாது என்று கூறி அவர்களை கலைந்து போகச் செய்தது.

இந்த பிரச்சனைக்கு சாதிக்காரர்களுடன் பேசி ஒரு முடிவு எடுக்கப்படும் என்று தாசில்தாரும், வருவாய்த்துறையினரும் தெரிவித்துள்ளனர்.

ஆனால் வாக்குறுதி கொடுத்து 2 மாதமாகியும் எதுவும் நடக்கவில்லை என்று புகார் கூறப்படுகிறது.

இந்நிலையில் அப்பகுதியில் உள்ளது சாதிச் சுவரே இல்லை என்றும் அந்த சுவர் அங்கே 20 ஆண்டுகளாக இருப்பதாகவும் சாதிக்காரர்கள் தெரிவித்துள்ளனர்.

கடந்த 2 மாதங்களுக்கு முன்பு சுவர் இடிந்ததால் அதை திரும்பக் கட்டியதாக அவர்கள் மேலும் தெரிவித்துள்ளனர்.

SOURCE: http://tamil.oneindia.in/news/2012/06/20/tamilnadu-what-is-that-wall-erode-big-issue-156101.html

Issadeen Rilwan said...

இந்திய மக்கள் பாவம்,
சாமி வேசத்தில் வந்தாலும் சினிமா துறையில் வந்தாலும் கோவிலும் கட்டுவார்கள் கும்பிடும் போடுவார்கள்.

அரசாங்கள் விழிப்புணர்வுடன் இல்லாமையும் மக்களின் அறியாமை அறிந்த சிலரின் கைங்கரியங்களும் தான் இவைகள்.

இப்படியான பல பதிவுகள் எப்போதும் தேவை நம் சமூகத்திற்கு..

நன்றி
http://changesdo.blogspot.com/

ஷர்புதீன் said...

//நீண்ட நாட்களாக இணையத்தின் பக்கம் காணோமே! தொடர்ந்த வேலையோ!//

கடந்த இரண்டு மாதமாக சில அடிப்படை ( தவ்ஹீத்) இஸ்லாமிய வாதிகளால் மிக மிக அதிகமாக , என் வாழ்வின் அதிகபட்ச மன உளைச்சலால் பாதிக்க பட்டேன், ( குடும்ப விஷயம்) தற்போது அவர்கள் சொல்லிய குறைகள் தவறு என்று உணர்ந்துவிட்டார்கள், ஆனால் எனது காயதிர்க்குதான் அவர்களிடம் மருந்தில்லை, பலகீனமானவர்கல்தானே நாம் என்று ஆறுதல் எனக்கும் / அவர்களுக்கும் சொல்லிகொண்டிருக்கிறார்கள்! தொங்கி விடலாமா என்று கூட நினைக்கவைத்தார்கள், இதனை சொல்ல நான் வெட்க படனும் என்று நினைக்கும் உங்களை போன்றவர்கள் அவர்கள் சொல்லிய அந்த கடுமையான வார்த்தைகளுக்கு... என்னை பதில் வைத்திருக்கிறீர்கள் ?

இதனை வெளியிடலாமா என்று யோசித்து பார்த்துவிட்டு வெளியிடுங்கள், உங்களிடம் இது குறித்து சொல்லணும் என்று தோன்றியது, சொல்லிவிட்டேன்.!

suvanappiriyan said...

சகோ ஷர்புதீன்!

//தொங்கி விடலாமா என்று கூட நினைக்கவைத்தார்கள், இதனை சொல்ல நான் வெட்க படனும் என்று நினைக்கும் உங்களை போன்றவர்கள் அவர்கள் சொல்லிய அந்த கடுமையான வார்த்தைகளுக்கு... என்னை பதில் வைத்திருக்கிறீர்கள் ?//

வாழ்க்கையில் ஏற்ற தாழ்வுகள் வசைகள் எல்லாம் வந்து கொண்டுதானிருக்கும். இதை எல்லாம் எதிர்த்து எதிர் நீச்சல் போட பழகிக் கொள்ள வேண்டும். எனக்கு மன உளைச்சல் ஏற்பட்டால் பள்ளியில் சென்று அமர்ந்து விடுவேன். குர்ஆனின் மொழி பெயர்ப்பை வாசிக்க ஆரம்பித்து விடுவேன். கவலைகள் மன அழுத்தங்கள் தானாக அகன்று விடுவதை உணர்ந்திருக்கிறேன். நீங்களும் முயற்ச்சித்துப் பாருங்கள்.

உங்கள் குழப்பங்கள் நீங்கி தெளிவடைய நானும் இறைவனிடம் பிரார்த்திக்கிறேன்.