'இறைவன் என்ற ஒருவனைப் பற்றி முழுமையாக எனக்கு விளங்காத வரை அதாவது யாராலும் படைக்கப்படாமல் எவ்வாறு தோன்றினான் என்ற உண்மை விளங்காத வரை இறைவன் என்ற ஒருவனை நான் ஒப்புக் கொள்ள மாட்டேன் என வாதிடுவது உயிர் என்றால் என்னவென்று முழுமையாக எனக்குப் புரியாத வரை அப்படி ஒன்று எனக்குள் இருப்பதை நான் ஒப்புக் கொள்ள மாட்டேன் எனக் கூறுவதற்கு ஒப்பானதாகும்'
Followers
Saturday, June 09, 2012
கேரளாவில் அழிந்து கொண்டிருக்கும் அமைதி!
'தொழிலாளர்கள் நலன் குறித்து காரல் மாக்ஸ் சொன்னாஹோ! லெனின் சொன்னாஹோ! ஸ்டாலின் சொன்னாஹோ'
'எல்லாம் நான் நல்லாயிருக்கணும் என்று தானே சொன்னாஹோ! அதுக்கு முதல்ல நான் உயிரோட இருக்கணுமுல்ல...!அதுக்கு ஒரு வழியை சொல்லுங்கப்பு...'
-----------------------------------------
நான் கேரளாவைப் பற்றி பல நேரங்களில் ஆச்சரியமாக சிந்திப்பதுண்டு. அவர்களின் படிப்பு. அவர்களின் சம்பாத்திய திறன். பணம் சம்பாதிப்பதற்காக மற்றவர்களையும் முடிந்தால் குழி பறிப்பது: மூன்று மதங்களை சேர்ந்தவர்களும் 'நாங்கள் மலையாளிகள்' என்று ஒன்று கூடுதல்: அந்த நாட்டின் இயற்கை அழகு: என்று பல முறை கேரளாவைப் பற்றி சிந்தித்த வண்ணம் இருப்பேன்.
120 வருடங்களுக்கு முன்னால், சுவாமி விவேகானந்தர், திருவாங்கூர் சமஸ்தானத்தின் வழியே செல்லும்போது, இங்கே இருந்த ஜாதி ஏற்றத்தாழ்வை கண்டு கடும் அதிர்ச்சியடைந்தார். சுயமாக தங்களுக்குத்தாங்களே பட்டம் சூட்டிக்கொண்ட “மேல்ஜாதிகள்” பிற்பட்ட ஜாதிகள் மீது நடத்தும் கொடுமையை கண்டு கேரளாவுக்கு ஒரு அடைமொழி கொடுத்தார். அது “பைத்தியக்கார விடுதி” என்பது. அவர் சொன்னதை மெய்ப்பிக்கும் வண்ணமாக தற்போது கேரளா அமைதியிழந்து தவிக்கிறது. தற்கொலைகளில் இந்தியாவிலேயே முதல் மாநிலமாக வந்திருப்பது அந்த மக்களிடையே அமைதி எந்த அளவு பறி போயிருக்கிறது என்பதை தெளிவாக்குகிறது.
கம்யூனிஸ்ட் தோழர் மணி அவர்கள் எந்த அளவு தோழமையோடு தனது கட்சி விசுவாசத்தை காட்டுகிறார் என்பதை இந்த காணொளியைப் பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்.
“ஆமாம். நாங்கள்தான் சிபிஎம் எதிரிகளை கொன்றோம். நாங்கள் சுட்டோம். கத்தியால் குத்தினோம். அடித்தே சாகடித்தோம். கட்சி எதிரிகளை பற்றி லிஸ்டு போட்டு ஒவ்வொன்றாக தீர்த்து கட்டினோம். யார் யாரெல்லாம் கொல்லப்பட வேண்டுமோ அவர்களை எல்லாம் சிபிஎம் கட்சி கொல்லும்” என்று எம் எம் மணி முழங்குகிறார்..
அய்யப்பதாஸ் என்ற சிபிஎம் கட்சி உறுப்பினரில் ஒருவர் கொல்லப்பட்டதற்கு பழி வாங்க பாலு என்ற காங்கிரஸ் ஆளை கொன்றது நாங்களே என்று எம் எம் மணி கூறினார். 13 பேர்களை கொண்ட எதிரிகள் லிஸ்டிலிருந்து ஒருவர் சுட்டுகொல்லப்பட்டார், ஒருவர் குத்தி கொல்லப்பட்டார், மற்றொருவர் அடித்தே கொல்லப்பட்டார்.
நினைவில் வைத்துகொள்ளுங்கள். கொலை செய்வதற்கு காசு வாங்கிகொண்டு கொலை செய்தவன் போலீஸிடம் மூடிய கதவுகளுக்கு பின்னே கொடுத்த ஒப்புதல் வாக்குமூலம் அல்ல. காங்கிரஸ் சிபிஎம் கட்சி மீது வைத்த குற்றச்சாட்டும் அல்ல. கம்யூனிஸ்டான பினாரயி விஜயனின் தீவிர ஆதரவாளர் ஒருவரால் மேடையில் செய்யப்பட்ட பகிரங்க பேச்சு.
சிபிஎமை விட்டு வெளியேறிய டி பி சந்திரசேகரனை கொலை செய்தது எந்த அளவுக்கு அழுகியிருக்கிறது என்பதை இந்த வெறித்தனமான பேச்சுகாட்டியிருக்கிறது. ஆகவே, மணி அதனை விளக்கியது யாருக்கும் ஆச்சரியமாக இல்லை. 1980களில் அரசியல் எதிரிகளை தீர்த்துக்கட்டியதை சுட்டிக்காட்டி, ’சிபிஎம்முக்கு துரோகம் செய்த’ சந்திரசேகரனை கொன்றதை நியாயப்படுத்தியிருக்கிறார்.
ஒரு நாட்டில் கட்டுங்கடங்காத சுதந்திரம் இருந்தால் மேடைப் பேச்சு எப்படி இருக்கும் என்பதற்கு மணி அவர்களின் பேச்சே ஒரு உதாரணம். இதை எப்படி அரசு அனுமதித்தது? காவல் துறை இவருக்கு எதிராக என்ன நடவடிக்கை எடுத்துள்ளது? நமது நாட்டின் ஸ்திர தன்மையை விரும்பும் அனைவரும் இது போன்ற வன்முறைப் பேச்சுக்களை முளையிலேயே கிள்ளி எறிய கட்சி வேறுபாடு இன்றி ஒன்றிணைய வேண்டும்.
அரசியல் சீர்திருத்தத்துக்கு முன்னோடியாக, முன்னாள் முதலமைச்சர் வி.எஸ் அச்சுதானந்தன் பகிரங்கமாக மணிக்கு எதிராக வெளிவந்திருக்கிறார். டெல்லியில் இருக்கும் கட்சி தலைமைக்கு இப்படிப்பட்ட செயல்களை நியாயப்படுத்தும் ஒழுக்கமுறையை கேள்வி கேட்டு கடிதம் எழுதியிருக்கிறார். ஜூன் இரண்டாம் வாரத்தில், இதன் மீது ஏகேஜி பவனில் விவாதம் நடக்கும் என்று எதிர்பார்க்கலாம்.
பினாரயி விஜயனின் தீவிர ஆதரவாளராக இருக்கும் மணி, இறந்த டிபி சந்திரசேகரன் மரண ஊர்வலத்தில் கலந்துகொண்டதற்காக வி.எஸ் அச்சுதானந்தனை விமர்சித்தார். இரங்கல் கூட்டத்தில் கலந்து கொள்வதிலும் கட்சி விசுவாசம் பார்க்க வேண்டுமா? கட்சியை விட்டு விலகுபவர்கள் எப்போதுமே நல்ல கம்யூனிஸ்டாக இருக்கமுடியாது என்று வேறு அங்கலாய்க்கிறார். ஒரு காலத்தில் எம் எம் மணி அச்சுதானந்தன் பக்கத்தில் இருந்தவர்தான்.
அக்டோபர் 22, 2006இல் தலசேரியில் முகம்மது பைஸல் என்பவர் சிபிம்மிலிருந்து விலகிய சில நாட்களிலேயே கொலை செய்யப்பட்டார். ஒரு அமைப்பிலிருந்து விலகுவது என்பது கொலை செய்யும் அளவுக்கு இமாலய தவறா என்பதை கம்யூனிஸ ஆதரவாளர்கள்தான் விளக்க வேண்டும். CBI இந்த கொலையில் கரயி ராஜன் என்ற சிபிஎம் கன்னூர் மாவட்ட கமிட்டி உறுப்பினரும், திருவாங்காடு லோக்கல் கமிட்டி உறுப்பினர் கரயி சந்திரசேகரனும் சம்பந்தப்பட்டுள்ளார்கள் என்று கூறுகிறது.
மேற்குவங்காளத்தில் 20000 பேர்கள் அரசியல் காரணங்களுக்காக கொல்லப்பட்டார்கள் என்று மத்திய அரசாங்கம் புள்ளிவிவரம் தெரிவிக்கிறது. இவர்களில் பெரும்பாலானவர்கள் கொல்லப்பட்டது கம்யூனிஸ்டுகள் ஆட்சியிலிருந்த முப்பதாண்டு காலத்தில். கேரளாவில் 200 பேர்கள் அரசியல் காரணங்களுக்காக கொல்லப்பட்டிருக்கிறார்கள் என்று மதிப்பிடப்பட்டிருக்கிறது. கண்ணூரில் சிபிஎம்முக்கும் ஆர்.எஸ்.எஸுக்கும் முடிவே இல்லாமல் நடந்து வரும் பலிக்கு பலி கொலைகளால் அந்த மாவட்டமே ரத்தத்தால் சிவந்து கிடக்கிறது.
---------------------------------
மோகன்லால் தனது வலைப் பக்கத்தில் எழுதியதை பார்ப்போம்.
கோழிக்கோடு:கேரளாவில் வசிப்பதற்கே தனக்கு பயமாக இருப்பதாகவும், அம்மாநிலம், பைத்தியக்காரர்களின் வாழ்விடமாக மாறி வருகிறதோ என, பிரபல மலையாள நடிகர் மோகன்லால் அச்சம் தெரிவித்துள்ளார்.
கோழிக்கோடு அருகே ஒஞ்சியம் பகுதியைச் சேர்ந்த புரட்சிகர மார்க்சிஸ்ட் கம்யூ., கட்சியைச் சேர்ந்த, டி.பி.சந்திரசேகரன் என்பவர் நடுரோட்டில் வெட்டிக் கொல்லப்பட்டார். இந்த சம்பவம், மாநிலத்தில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது.இதனால், மே 21 ல், தன், 52வது பிறந்த நாளை மோகன்லால் கொண்டாடவில்லை.
அதற்கு அவர், "த கம்ப்ளீட் ஆக்டர்' என்ற வலை தளத்தில், தன் கைப்பட எழுதிய கடிதத்தில் கூறியிருப்பதாவது: "எனக்கு ஒரு கஷ்டம் வந்தால், என் தாயின் மனது துடிப்பதை என்னால் உணரமுடியும். சிறிய காயம்பட்டாலும், துடித்துப்போகும் என் தாயைப் போலத்தானே, உடலில் பல வெட்டுக்காயங்களை பெற்று கொலையான சந்திரசேகரனின் தாயின் மனதும் துடித்துப் போயிருக்கும்.
அந்தத் தாயின் கண்ணீர் கடலில், என் பிறந்தநாள் கொண்டாட்டம் மூழ்கி விட்டது. சந்திரசேகருடன் எனக்கு பழக்கமில்லை. இருந்தாலும், அவர் தற்போது உயிருடன் இருந்திருந்தால், கிட்டத்தட்ட என்னுடைய வயது தான் அவருக்கும் இருந்திருக்கும். அவருடைய தாய்க்கும் எனது தாயின் வயது தான் இருக்கும்.கொலை செய்ய தூண்டுபவர்களும், கொலை செய்பவர்களும் அதிகரித்து வரும் கேரளாவில் வசிப்பதற்கே எனக்கு தயக்கமாகவும், அச்சமாகவும் உள்ளது. பைத்தியக்காரர்களின் மாநிலமாக, கேரளா மாறி வருகிறதோ என, எண்ணத் தோன்றுகிறது". இவ்வாறு மோகன்லால் வலை தளத்தில் குறிப்பிட்டுள்ளார்.
கம்யூனிஸ்ட் கட்சிகளின் தொண்டன் கட்சி சொல்லுவதற்கு தனது உடலையும் ஆன்மாவையும் அடிமையாக்கி கொண்டிருக்கிறான். கட்சியின் ஆணைக்கு முன்பு மனிதநேயம் கரைந்துவிடுகிறது. கூடவே, மிகவும் ஆழகாக சமூகம் அரசியல் படுத்தப்பட்டிருப்பதும், அரசாங்கத்தின் ஒவ்வொரு முகத்திலும் அரசியலே ஆணை செலுத்துவதும் முக்கிய காரணங்களாகின்றன.
தொழிலளர்களின் நலனுக்காக உண்டாக்கப்பட்ட இந்த உன்னத இயக்கம் அதன் முகவரி இழந்து வன்முறைக்கு துணை போகும் ஒரு இயக்கமாக பரிணமித்துள்ளது. கம்யூனிஸ்ட் தோழர்கள் தங்களை சுய பரிசோதனை செய்து கொள்ளும் கால கட்டத்தில் இருக்கின்றனர். இந்த நண்பர்களால் பல நன்மைகள் உழைக்கும் வர்க்கத்துக்கு இன்று வரை கிடைத்து வருவதை மறுக்க முடியாது. அந்த நல்ல நோக்கம் சிதைந்து விடக் கூடாதே என்பதுதான் நமது ஆதங்கமும்.
Subscribe to:
Post Comments (Atom)
19 comments:
சகோ.சுவனப்பிரியன்!இங்கே முதன் முதலாக தற்போது வந்துள்ள எஃப் எம் ரேடியோவின் குரல்களாக திகழ்பவர்கள் கேரளத்தை சார்ந்தவர்களே.மைட்டி மார்னிங்க் ஷோ என்று காலையில் ஒலிக்கும் செய்தியில் மணியென்ற பெயரும்,கொலையென்ற பெயரும் ஒலிக்கும்.அது என்னமோ கேரளத்தின் உள்ளூர் அரசியல் என நினைத்தேன்.உங்கள் பதிவு நிகழ்வின் சாரத்தை புரிய வைக்கிறது.
கேரளாவில் வளர்ந்துவரும் இஸ்லாமிய தீவிரவாதத்தைப் பற்றி எழுத மறந்துவிட்டீர்கள்.
ராபினு,
நீங்க இப்படித்தான் எப்போதுமா?? இல்ல எப்போதுமே இப்படித்தானா??? அது என்ன கேரளாவில் மட்டும் இஸ்லாமிய தீவிரவாதம்னு சொல்லி, இஸ்லாமிய தீவிர வாதத்த சுருக்குறிய...இந்த கதைலாம் இங்க வேணாம்.... இஸ்லாமிய தீவிரவாதம் உலகளாவியது...அப்படித்தான் இனி நீங்க சொல்லனும்..அப்ப தான் எங்களுக்கு பெருமை....
சலாம் அண்ணன்,
ஒரு கட்சியின் முக்கிய உறுப்பினர் இப்படி பேசியது உண்மைலே எனக்கு அதிர்ச்சியா இருக்கு.... காவல் துறைக்கு இந்த பேச்சே ஆதாரம் தான்...இதை வைத்து நடவடிக்கை எடுக்குமா??? இல்லாட்டி சட்டம் ஒழுங்குன்னு நாம பேசுறது எல்லாம் கேலிக்கூத்து தான்....
சகோ ராஜ நடராஜன்!
//மைட்டி மார்னிங்க் ஷோ என்று காலையில் ஒலிக்கும் செய்தியில் மணியென்ற பெயரும்,கொலையென்ற பெயரும் ஒலிக்கும்.அது என்னமோ கேரளத்தின் உள்ளூர் அரசியல் என நினைத்தேன்.உங்கள் பதிவு நிகழ்வின் சாரத்தை புரிய வைக்கிறது.//
படித்த சமூகத்தில் இது போன்ற அவலங்கள் நிகழ சாத்தியமில்லை என்ற நிலைபாடுதான் பலருக்கும் இருக்கிறது. அது தவறு என்பதும் ஒழுக்கம் சார்ந்து மனித நேயம் சார்ந்த கல்வியை தருவது தற்காலத்துக்கு முக்கியம் என்பதை இந்த நிகழ்வுகள் நமக்குத் தெரிவிக்கின்றன.
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!
சகோ ராபின்!
//கேரளாவில் வளர்ந்துவரும் இஸ்லாமிய தீவிரவாதத்தைப் பற்றி எழுத மறந்துவிட்டீர்கள்.//
எந்த இடத்தில் யார் செய்தது என்று ஆதாரத்தோடு விபரங்களைத் தர முடியுமா? முஸ்லிம்களிடம் தவறு இருந்தால் அதை எதிர்த்து பதிவு போடும் முதல் ஆளாக நான் இருப்பேன். கல்வி வேலை வாய்ப்புகளில் சிறந்த இடத்தை அரசு கொடுத்து வருகிறது. கேரள முஸ்லிம்கள் மற்ற சமூகத்தோடு சுமூகமாகவே வாழ்கின்றனர். அங்கு நடக்கும் கொலைகள் அதிகம் அரசியல் சார்ந்ததே. மதம் சார்ந்தவை அல்ல.
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!
SuvanaPriyan this is the firsut useful article you ever posted.
I hope you didn't post this in context of Islamists vs Communists war
அனானி!
//SuvanaPriyan this is the firsut useful article you ever posted.
I hope you didn't post this in context of Islamists vs Communists war //
கேரளாவைப் பொறுத்த வரை ஐந்து வேளை தொழுது கொண்டு இஸ்லாமிய கடமைகளை முழுவதும் பின்பற்றும் ஒருவன் கம்யூனிஸ்டாக இருக்க முடியும். பல கம்யூனிஸ்டுகள் இஸ்லாமியர்களாக உள்ளதை நான் பார்த்துள்ளேன். அங்கு நடப்பது அரசியல் கொலைகள்.எனவே இங்கு நான் மதத்தை சம்பந்தப்படுத்தவில்லை. ஆர்எஸ்எஸ் கொஞ்சம் கேரளாவில் அடக்கி வாசிப்பதே கம்யூனிஸ்டுகளால்தான்.
சலாம் சகோ சிராஜ்!
//ஒரு கட்சியின் முக்கிய உறுப்பினர் இப்படி பேசியது உண்மைலே எனக்கு அதிர்ச்சியா இருக்கு.... காவல் துறைக்கு இந்த பேச்சே ஆதாரம் தான்...இதை வைத்து நடவடிக்கை எடுக்குமா??? இல்லாட்டி சட்டம் ஒழுங்குன்னு நாம பேசுறது எல்லாம் கேலிக்கூத்து தான்....//
நான் இந்த மேடைப் பேச்சைப் பார்த்து விட்டு அதிர்ந்து விட்டேன். ஒரு அரசியல் தலைவர் பேசும் பேச்சா இது. சட்டம் இன்னும் கடுமையாக்கப்பட வேண்டும் என்பதைத்தான் இது போன்ற பேச்சுக்கள் நமக்கு உணர்த்துகின்றன.
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!
Robin said...
//கேரளாவில் வளர்ந்துவரும் இஸ்லாமிய தீவிரவாதத்தைப் பற்றி எழுத மறந்துவிட்டீர்கள்.//
I hope, Pope is supplying weapon for all terrorist
“நம்மவர் என்ற படத்தில் நான் வரலாற்று ஆசிரியராக நடித்தேன். வரலாற்றுக் குளறுபடிகளைப் பற்றி நான் செய்த விமர்சனத்தை என்ன காரணத்திற்காகவோ சென்சாரில் வெட்டி விட்டார்கள். அதைச் சேர்க்க வேண்டுமென்று நான் வாதாடிய போதும் அவர்கள் ஏற்கவில்லை. அந்தப்பகுதி இதுதான்.
முகலாயர் படையெடுப்பு என்றும், வெள்ளையர் வருகை என்றும் நாம் பாடம் சொல்லித்தருகிறோம். முகலாயர்கள் இங்கு வந்து இங்குள்ள பெண்களையே திருமணம் செய்து கொண்டு இங்கேயே அரண்மனையைக்கட்டி ஆட்சி செய்தார்கள். இந்த நாட்டை அவர்கள் வளப்படுத்தினார்களே தவிர, இங்கு சுரண்டி ஆப்கானிஸ்தானுக்கு கொண்டு போய் சேர்க்கவில்லை.
விஸ்வரூபம் புதிய புகைப்பட தொகுப்புக்கள்
ஆனால் ஆங்கிலேயர்கள் இங்குள்ள வளங்களை சுரண்டி பிரிட்டனில் சேர்த்து வைத்தார்கள். அவர்கள் இந்த நாட்டை தம் நாடாக ஒருபோதும் கருதியதே இல்லை. ஆனால் முகலாய மன்னர் பகதூர்ஷா ''இந்த நாட்டில் என் உடலை புதைக்க ஆறுகெஜம் நிலம் கிடைக்கவில்லையே என்று கண்ணீர்க்கவிதையை பர்மா சிறையிலிருந்து எழுதினார்'' என்று கூறியிருகிறார்.
இந்த நாட்டை வளப்படுத்தியவர்களை படையெடுத்தவர்கள் என்றும், சுரண்டியவ்ர்களை வருகை தந்தவர்கள் என்றும் எப்படி சொல்லலாம் என்பது நான் வைத்த விவாதம்"
சிங்கப்பூர் ஐஃபா கலை விழாவில் கமலஹாசன்-
ஸலாம் சகோ.சுவனப்பிரியன்,
"கொல்லவும் வைக்கும் கம்யூனிசகட்சிவெறி..!"
கேரளாவில் உள்ளது போன்றேதான்... மேற்கு வங்கத்திலும்..!
நான் கல்கத்தா அருகே ஒன்றரை வருடம் (2000-2001)பணியாற்றிய போது கண்முன்னே கொலைவெறி கும்பலை கண்டு இருக்கிறேன்..!
அந்த வங்காள அரசின் HPL கம்பெனி ஊழியர்கள் திடீர் வேலைநிறுத்தம் செய்தார்கள்..! அங்கே, Commissioning contract எடுத்து இருந்த எங்கள் தமிழக ஸ்பிக் கம்பெனி எங்களை வேலைக்கு செல்ல கட்டளை இட்டது..! இல்லையேல் சம்பளம் கட்... சார்ஜ் ஷீட்.. என்றனர்..!
ஸ்ட்ரைக் செய்ய நாங்கள் ஒண்ணும் அவர்களின் யூனியனிலும் இல்லை. நாங்கள் எங்கள் கம்பெனியிடமிருந்து தான் ஊதியம் பெறுகிறோம்..!
அப்படி, அன்று காலை பஞ்ச் அடித்து விட்டு உள்ளே சென்ற என்னுடன் பணியாற்றிய தமிழகத்தை சேர்ந்த இருவரை (பவுல்ராஜ்&மோகன்) தொழிற்சங்க ஆட்கள் கடத்தி கொண்டு போய் எங்கோ அடைத்து வைத்து விட்டனர்..! மூன்று நாள் எங்கே என்னாச்சு என்ற எந்த செய்தியும் இல்லை..!
இதனால் நாங்களும் உயிரே பிரதானம் என்று பயந்து மூன்று நாள் பணிக்கு செல்ல வில்லை..!
அவர்களின் தொழிற்சங்க கோரிக்கை வென்றது..!
ஆனால், மூன்று நாள் ஒரு வெளிச்சம் இல்லாத குடோனில் கைதியை விட கேவலமான முறையில் அடைபட்டு கிடந்த எங்கள் நிறுவன ஊழியர்கள் பாவம்... சரியான சாப்பாடு போட வில்லை... படுக்க வசதி இல்லாமல் தூங்கவும் இல்லை...!
இதெல்லாம் நம் தமிழகத்தில் நடந்து இருந்தால் தலைப்பு செய்தி..! அங்கே செத்தால் மட்டுமே தினசரி நடுவில் ஏதோ ஒரு மூலையில் துணுக்கு செய்தியாகுமாம்..!
மார்க்சிஸ்ட் கம்யூனிச ஆட்சி..! அரசின் கம்பெனி..! புத்தாதேவ் பட்டாச்சார்யா புதிய சிஎம்., அப்போது..!
இந்த பதிவு எனது பழைய நியாகத்தை கிளறி விட்டுவிட்டது..!
சலாம் சகோ ஆஷிக்!
//மார்க்சிஸ்ட் கம்யூனிச ஆட்சி..! அரசின் கம்பெனி..! புத்தாதேவ் பட்டாச்சார்யா புதிய சிஎம்., அப்போது..!
இந்த பதிவு எனது பழைய நியாகத்தை கிளறி விட்டுவிட்டது..!//
இந்த பதிவால் கம்யூனிஸம் சம்பந்தமான உங்களின் பழைய நிகழ்வை நாங்களும் தெரிந்து கொள்ள வைத்ததற்கு நன்றி சகோ.
nalla pakirvu!
சகோ சீனி!
//nalla pakirvu!//
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!
திரு மருதன்!
//குரான் எல்லா காலங்களுக்கும் ஏற்புடையதாக இருந்தால், அது அடிமைகளை எவ்வாறு நடத்த வேண்டும் என்பதை பற்றி கூறியிருக்கக்கூடாது, அடிமை முறையே கூடாது என கூறியிருக்க வேண்டும்.//
போரில் பிடிபட்ட கைதிகள் விஷயத்தில் நான்கு விதமான நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்தனர்.
1. பிடிபட்டக் கைதிக்குப் பகரமாக பணயத்தொகைப் பெற்றுக்கொண்டு அந்த கைதியை விடுதலை செய்தார்கள்.
2. போர் கைதிக்கு பகரமாக போர்கைதியை மாற்றிக்கொண்டார்.
3. போர் கைதிகளை அடிமைகளாக – அடிமைச் சந்தையில் விற்று விடுவார்கள்.
4. போர் கைதிகளிடம் வேலையை வாங்கிக்கொண்டு அதற்கு பகரமாக அவர்களை பராமறித்துக் கொண்டார்கள்.
இதுதான் அன்றையப் போர்களில் பிடிபட்ட கைதிகளின் நிலையாக இருந்தது. இதில் முஸ்லிம்கள் மட்டும் பிடிபட்ட போர் கைதிளை .//யாரும் யாருக்கும் அடிமை இல்லை, அனைவரும் சம உரிமை படைத்தவர்கள், அடிமை முறை ஒழிக்கப்பட வேண்டும்// என்று சொல்லியிருக்க வேண்டும் என்பது கதைக்குதவாத, வாதமட்டுமல்ல, முஸ்லிம்களை கருவறுக்கச் செய்யும் வழியுமாகும்.
எதிரிகள் மட்டும் போர் கைதிகளை அடிமையாக்கிக் கொள்ளலாம், ஆனால் முஸ்லிம்கள் பிடிபட்டப் போர் கைதிகளை ”நீயும் நானும் சமம்” என்று விடுதலை செய்தால், விடுதலைப் பெற்றவன் மீண்டும் போருக்கு வரத்தான் செய்வான். இப்படி ஒரு படுபாதக நிலை இருப்பதோடு, ”நீயும் நானும் சமம்” என்று போர் கைதிகளை உட்கார வைத்து விருந்தும் போட முடியாது. இப்படி நியாயமான காரணங்களால் போர் கைதிகளை அடிமையாக்கிக் கொள்வதை மட்டும் இஸ்லாம் அனுமதிக்கிறது.
சுதந்திரமான தனி மனிதனின் உரிமையில் தலையிட்டு, அவனின் உரிமையை நசுக்கி அடிமையாக்கி தொழில் செய்வதை இஸ்லாம் ஒரு போதும் அனுமதிக்கவில்லை மாறாக, அதை வன்மையாகக் கண்டிக்கிறது.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
”மறுமை நாளில் மூவருக்கெதிராக நான் வழக்காடுவேன்’ என்று அல்லாஹ் கூறுகிறான். ஒருவன் என் பெயரால் சத்தியம் செய்து விட்டு அதில் மோசடி செய்தவன். இன்னொருவன்,
சுதந்திரமான ஒருவரை விற்று அந்தக் கிரயத்தைச் சாப்பிட்டவன்.. மூன்றாமவன் ஒரு கூலியாளிடம் வேலை வாங்கிக்கொண்டு கூலி கொடுக்காமல் இருந்தவன்” (நபிமொழி புகாரி 2227)
யாருக்கும் நஷ்டம் இல்லாமல் எவ்வாறு அடிமைகள் ஒழிக்கப்பட்டார்கள் என்பதையும் பார்ப்போம்.
9:60 (ஜகாத் என்னும்) தானங்கள் தரித்திரர்களுக்கும், ஏழைகளுக்கும், தானத்தை வசூல் செய்யும் ஊழியர்களுக்கும், இஸ்லாத்தின் பால் அவர்கள் உள்ளங்கள் ஈர்க்கப்படுவதற்காகவும், அடிமைகளை விடுதலை செய்வதற்காகவும் கடன் பட்டிருப்பவர்களுக்கும், அல்லாஹ்வின் பாதையில் (போர் புரிவோருக்கும்), வழிப்போக்கர்களுக்குமே உரியவை. (இது) அல்லாஹ் விதித்த கடமையாகும் – அல்லாஹ் (யாவும்) அறிபவன்; மிக்க ஞானமுடையோன்.
இதுவன்றி, ஒருவர் அல்லாஹ்வின் மீது சத்தியம் செய்து விட்டு அதை முறித்தாலோ, அல்லது நோன்பை முறித்தாலோ இது போன்ற குற்றங்களுக்குப் பரிகாரமாக வசதியுள்ளவர்கள் அடிமைகளை விடுதலை செய்ய வேண்டும் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஆர்வமூட்டினார்கள்.
ஒப்பந்த அடிப்படையில் அடிமைகள் விடுதலையாவதற்கும் ஏற்பாடு செய்தார்கள். உன்னை நான் விடுதலை செய்கிறேன். நீ உழைத்து சிறிது சிறிதாக எனது கடனை அடைக்க வேண்டும் என்று எஜமானர்கள் அடிமைகளிடம் உடன்படிக்கை செய்து விடுக்க ஆர்வமூட்டினார்கள்.
யாரேனும் அடிமையை விடுதலை செய்தால் அந்த அடிமை பிற்காலத்தில் சம்பாதிப்பவைகளுக்கு அவனது எஜமான் வாரிசாவார் என்று சட்டம் கொண்டு வந்து அடிமைகளை விடுவிக்கத் தூண்டினார்கள்.
பொதுவாக மனிதன் செய்யும் நல்லறங்களில் அடிமைகளை விடுவித்தல் சிறப்பானது எனவும் ஆர்வமூட்டினார்கள். தமது வாழ் நாளில் கணிசமான அளவுக்கு அடிமைகளின் எண்ணிக்கையைக் குறைத்தார்கள். (பார்க்க திருக்குர்ஆன் 4:3, 4:24,25, 4:36, 16:71, 23:6, 24:31, 24:33, 24:58, 33:50, 33:52, 33:55, 70:30)
திரு மருதன்!
//இதை வாதத்துக்காக ஏற்றுக்கொண்டாலும், பெண்களை ஏன் அடிமையாக்க வேண்டும்?//
பெண்கள் மட்டும் அல்ல ஆண்களும் அங்கு அடிமைகளாக இருந்தனர். இரு பாலாருக்கும் பொதுவான தொல்லையாகவே இது இருந்தது.
//இதைத்தான் நானும் கேட்டேன், குரான் அன்றைய சூழலுக்கு மட்டுமே ஏற்றதா என. இப்போது போர்க்களங்களில் யாரும் யாரையும் அடிமையாக்க தேவையில்லை என்பதை ஏற்றுக்கொள்கிறீர்களா? அப்படியானல் அடிமைகளை நடத்தும் முறை பற்றிய குரான் வசனங்கள் காலாவதியாகிவிட்டன சரியா?//
இதை ஒத்துக் கொள்வதில் என்ன தயக்கம்? மது கூடாது என்று ஒரு சட்டம் இருக்கிறது. ஒரு ஊரில் மதுவை அனைவரும் தொடுவதில்லை. 'பார்த்தீர்களா? குர்ஆனின் சட்டம் இங்கு செல்லுபடியாகவில்லை' என்று யாராவது கூறினால் அவருக்கு நாம் என்ன பதில் கொடுப்போம். எனவே ஒரு தவறு சமூகத்திலிருந்து முழுவதுமாக நீங்கி விட்டால் அங்கு அந்த சட்டத்தை எவர் மீதும் அமுல்படுத்த முடியாதல்லவா?
தொழிலளர்களின் நலனுக்காக உண்டாக்கப்பட்ட இந்த உன்னத இயக்கம் அதன் முகவரி இழந்து வன்முறைக்கு துணை போகும் ஒரு இயக்கமாக பரிணமித்துள்ளது. கம்யூனிஸ்ட் தோழர்கள் தங்களை சுய பரிசோதனை செய்து கொள்ளும் கால கட்டத்தில் இருக்கின்றனர். இந்த நண்பர்களால் பல நன்மைகள் உழைக்கும் வர்க்கத்துக்கு இன்று வரை கிடைத்து வருவதை மறுக்க முடியாது. அந்த நல்ல நோக்கம் சிதைந்து விடக் கூடாதே என்பதுதான் நமது ஆதங்கமும்.//
எங்களுடைய ஆதங்கமும் அதுதான்
அனைவரும் அவசியம் படிக்க வேண்டிய அருமையான
தெளிவூட்டும் பதிவு.பகிர்வுக்கு நன்றி
தொடர வாழ்த்துக்கள்
சகோ ரமணி!
//எங்களுடைய ஆதங்கமும் அதுதான்
அனைவரும் அவசியம் படிக்க வேண்டிய அருமையான
தெளிவூட்டும் பதிவு.பகிர்வுக்கு நன்றி
தொடர வாழ்த்துக்கள் //
முதல் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!
Post a Comment