Followers

Saturday, June 02, 2012

सत्यमेव जयते – SATYAMEV JEYATE – வாய்மையே வெல்லும் - அமீர்கான்!



'வாய்மையே வெல்லும்' என்ற பொருள் பொதிந்த இந்த 'சத்யமேவ ஜயதே' என்ற தொலைக்காட்சித் தொடர் பலரையும் திரும்பிப் பார்க்க வைத்துள்ளது. வெகுஜன ஊடகங்களில் தொலைக்காட்சியின் தாக்கத்தை நாம் அவ்வளவாக ஒதுக்கி விட முடியாது. பொழுது போக்கு சாதனங்கள் மூலமாகவும் சில நல்லவைகளை நடத்திக் காட்ட முடியும் என்பதற்கு உதாரணமாக இந்த நிகழ்ச்சி அமைந்துள்ளது. திரைப்படங்கள் மூலம் பல தேச பக்தி படங்களை எடுத்து வரும் அமீர்கான் தொலைக்காட்சியிலும் தனது முத்திரையை இந்த நிகழ்ச்சியின் மூலம் பதித்துள்ளார். இந்த தொடரில் ஒரு பிரிவாக வரும் குழந்தைகள் பாலியல் முறைகேட்டைப் பற்றிய தொடரைப் பற்றி சிறிது அலசுவோம்.

நாம் நமது குடும்பத்தில் நமது குழந்தைகளுக்கு உடை, படிப்பு, விளையாட்டு போன்ற அனைத்திலும் எந்த குறையையும் வைப்பதில்லை. அந்த குழந்தை மனரீதியாக சந்தோஷமாக இருக்கிறதா? அது பாதுகாப்பாக இருக்கிறதா என்று நாம் என்றாவது சிந்தித்திருக்கிறோமா? என்றால் இல்லை என்ற பதிலே பலரிடத்திலிருந்தும் வரும்.

அமீர்கான்: இங்கு வந்திருப்பவர்களில் தங்களின் கருத்தைக் கூறலாம். குழந்தைகள் வலுக்கட்டாயமாக சமூகத்தில் பாலியல் தொந்தரவுக்கு எத்தனை சதவீதம் உள்ளாக்கப்படுகிறார்கள்?

பார்வையாளர் 1: இரண்டு சதவீதம்

பார்வையாளர் 2: பத்து சதவீதம்

பார்வையாளர் 3: நான்கிலிருந்து ஐந்து சதவீதம்

அமீர்கான்: நான் சொல்லும் தற்போதய உண்மை நிலவரம் என்னையும் உங்களையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கும். 53 சதவீத குழந்தைகள் பாலியல் ரீதியாக துன்புறுத்தப்படுவதாக அறிக்கை கூறுகிறது. இதில் பலாத்காரமாக குழந்தைகளை பாலியல் தொல்லைக்கு ஆளாக்குதல்: அவர்களை கண்ட இடங்களில் முத்தமிடுதல்: அவர்களின் உடைகளை களைதல் என்று இந்த தொல்லைகள் நீள்கிறது. ஆனால் பெற்றோர்களான நாம் நமது குழந்தை எந்த பிரச்னையும் இல்லாமல் சந்தோஷமாக இருப்பதாக நினைக்கிறோம். சில பேர் நினைப்பது போல் குழந்தைகள் வீட்டில் சந்தோஷமாகவும் பாதுகாப்பாகவும் இருப்பதாக பலரும் நம்பிக் கொண்டிருக்கிறோம். அது எந்த அளவு தவறான வாதம் என்பதை விளக்குவதற்காக உத்தர பிரசேத்தைச் சேர்ந்த அனாமிகாவை அழைக்கிறேன்.

(அனாமிகா வந்து அமர்கிறார். தனது அனுபவத்தைக் கூற ஆரம்பிக்கிறார்.)

அனாமிகா: எனக்கு ஆறு வயதாக இருக்கும் போது எனது படிப்பில் அதிக ஆர்வம் எடுத்துக் கொண்ட எனது பெற்றோர் எனக்கு ஒரு டியூஷன் வாத்தியாரை ஏற்பாடு செய்தனர். எனது அறைக்கு ஆசிரியர் வந்தவுடன் அறையின் கதவை எனது தாயார் சாத்திவிட்டு சென்று விடுவார். குழந்தைக்கு படிப்பு நன்றாக வரட்டும் என்று. ஆனால் அந்த ஆசிரியரோ என்னை பாலியல் தொல்லைக்கு ஆளாக்கினார். இது தொடர்கதையாகவே எனக்கு வாழ்க்கையே சில சமயம் வெறுத்தது. நான் எதற்கும் லாயக்கில்லாதவள் என்று எண்ணத் தொடங்கினேன். என் குடும்பத்தாரிடம் அந்த ஆசிரியர் மிகுந்த நம்பிக்கையை வளர்த்து வைத்திருந்தார். இது பற்றி எனது பெற்றோரிடம் சொன்னால் அது எனக்கு எதிராக திரும்பி விடுமோ என்று பயந்தேன். ஏழு வருடம் இந்த நரக வேதனையை படிப்பு என்ற போர்வையின் மூலம் அனுபவித்தேன்.

அமீர்கான்: தோழர்களே! நாம் நினைக்கிறோம் நமது குழந்தை வீட்டில் பாதுகாப்பாக இருக்கிறது என்று. இது சிலர் மேல் வைத்த அதீத நம்பிக்கையினால் நிகழ்ந்த தவறு. ஆசிரியர்களை நாம் அந்த அளவு மதிக்கிறோம். ஆனால் உண்மையோ வேறு விதமாக இருக்கிறது.

(நம் தமிழகத்தில் கூட மாதா, பிதா, குரு, தெய்வம்: என்று வரிசைப் படுத்தி தெய்வத்தை கடைசியில் கொண்டு வைத்து விட்டோம். ஆனால் உண்மை நிகழ்வு என்ன? வாத்தியாரும் ஒரு மனிதர்தான். ஒரு பெண்ணை தனியாக அறையில் பார்க்கும் போது 'நான் ஒரு ஆண்: நீ ஒரு பெண்' என்ற உறவு மேலோங்கி 'ஆசிரியர், மாணவி' என்ற உறவு பின்னுக்குத் தள்ளப்படுகிறது. எல்லோரும் வந்து போகும் ஹாலில் தனது மகளுக்கு டியூஷன் ஏற்பாடு செய்திருந்தால் இந்த தவறு நடக்க வாய்ப்பு ஏற்பட்டிருக்குமா? வயது வந்த குழந்தைக்கு டியூஷன் எடுக்க பெண் ஆசிரியைகள் யாரும் கிடைக்கவில்லையா? எனவே இங்கு தவறு செய்தது பெற்றோர்களே என்பேன்.)

தனது சொந்தங்களில் ஒருவரால் சீரழிக்கப்பட்டதை சொல்ல வருகிறார் சஞசய்லா:

சஞ்சய்லா: படிப்பு, விளையாட்டு என்று அனைத்திலும் முதலிடத்தில் வருவேன். சங்கீதமும் வரும். எனது பாடலை நானே ரெகார்ட் செய்து ரசித்து மகிழ்வேன். பம்பாய் எங்களது சொந்த ஊர்.எனது அண்ணன் அமெரிக்காவில் மேல் படிப்பு படிக்கிறார். அம்மா இறந்து விட்டார். எனது குடும்பத்தில் பல உறவினர்களும் சகஜமாக வந்து போவர். எனது அப்பாவுக்கு டயாலஸிஸ் பண்ண அடிக்கடி மருத்துவமனை செல்லும் போது நான் சில நேரம் வீட்டில் தனியாக இருக்கும் சூழல் ஏற்படும். இதை நோட்டமிட்ட எனது தாத்தா வயமையொத்த ஒருவர் நான் தனியாக வீட்டில் இருக்கும் போது என்னோடு தகாத முறையில் நடந்து கொண்டார். அப்போது எனக்கு 11 அல்லது 12 வயதிருக்கும். இதை நான் சற்றும் எதிர்பார்க்கவில்லை. எனது அம்மா அவரை 'அப்பா..அப்பா' என்றுதான் அழைப்பார். அந்த அளவு குடும்பத்தில் சிறந்த இடத்தை பிடித்த இவர் நடந்து கொண்டவிதம் என்னை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. எனது குடும்பத்தினர் குடும்ப நிகழ்ச்சி எதையுமே இவரைக் கேட்டுத்தான் செய்வது வழக்கம். அந்த அளவு நம்பிக்கையை பெற்றிருந்தார். சில நேரம் அவர் வீட்டிற்குள் வந்தாலே நான் எங்காவது ஓடி விடுவேன். சில நேரங்களில் தனிமையில் அமர்ந்து நிறைய அழுதிருக்கிறேன். இப்பொழுதும் கூட எதுவும் நடவாததது போல் வீட்டுக்கு வந்து கொண்டுதானிருக்கிறார்.

அமீர்கான்: இது பற்றி உங்கள் பெற்றோரிடம் எப்போது சொன்னீர்கள்?

சஞசய்லா: நான்கு வருடங்கள் முன்பு. 'இதைப் பற்றி ஏன் நீ முன்பே சொல்லவில்லை' என்று அப்பா கடிந்து கொண்டார். என் அப்பா மீது எந்தக் குறையும் இல்லை. இப்படி ஒரு மிருகம் இவருக்குள் இருப்பது அவருக்கு எப்படித் தெரியும்? இதை எல்லாம் அப்போதே சொன்னால் டயாலஸிஸூக்கு அப்பா போவது தடை படுமோ என்றும் பயந்தேன். இன்று வரை அந்த சம்பவங்களை நினைத்து அழுகாத நாட்கள் இல்லை. கோபம் அவர் மேல் வந்தும் என்னால் ஒன்றும் செய்ய முடியாத நிலை.

அமீர்கான்: இது போன்ற சம்பவங்கள் யாருக்கும் நடந்தால் அவர்கள் வெட்கப்படக் கூடாது. இதில் உங்கள் தவறு எதுவும் இல்லை. உங்களுக்கு வெட்கம் வருவதை விட அந்த அரக்கர்களுக்கு வெட்கம் வரும்படி உங்களின் செய்கைகள் அமைய வேண்டும்.

சஞசய்லா: நான் எழுதுவதில் ஆர்வம் உடையவள். அதை பாடலாகவும் வடித்திருக்கிறேன்.

அமீர்கான்: கொஞ்சம் பாடிக் காட்ட முடியுமா?

(பாடுகிறார். தனது சிறு வயதில் இவரது இயலாமையை பயன்படுத்தி தான் துன்பப்பட்டதை பாடலாக வடிக்கிறார்.)

அமீர்கான்: இவ்வளவு ஓபனாக பேசுகிறீர்கள்: இன்னும் திருமணமும் ஆகவில்லை. இது உங்களின் வாழ்க்கையை பாதிக்காதா?

சஞ்சய்லா: இத்தனை நடந்தாலும் இது எனது விருப்பத்தில் நடந்ததல்லவே. எனது சகோதரிகள் யாரும் என்னைப் போல் பாதித்து விடக் கூடாது என்பதற்காகத்தான் இந்த நிகழ்ச்சிக்கே வந்தேன். இதை எல்லாம் உணர்ந்து என்னை எவராவது திருமணம் செய்து கொள்ள விரும்பி வந்தால் ஏற்றுக் கொள்வேன்.

அமீர்கான்: கண்டிப்பாக உங்களுக்கு நல்ல வாழ்க்கை அமையும். பல குடும்பத்து குழந்தைகள் உங்களால் விழிப்புணர்வு பெறுவார்கள். வாழ்த்துக்கள்.

(கரகோசம். அடுத்து வருகிறார் ஹரீஸ்)

ஹரீஸ்: மும்பையில் வசிக்கிறேன். கூட்டுக் குடும்பம். எனது தாய் வழி உறவினர் ஒருவரால் நான் சீரழிக்கப்பட்டேன். அவர் மட்டும் அல்ல. அவரது நண்பர்களையும் அழைத்து வருவார். சில நேரங்களில் இது ஓவராகப் போய் மலத் துவாரத்தின் வழியாக ரத்தம் வர ஆரம்பித்தது. அம்மா அப்பாவிடம் சொன்னால் கொன்று விடுவேன் என்று சொன்னார். நீ சொன்ன ஆளையும் கொன்று விடுவேன் என்று மிரட்டினார். ஒரு முறை தைரியத்தை வரவழைத்துக் கொண்டு என் அம்மாவிடம் ரத்தம் வருகிறது என்று கூறினேன். உறவினர் தவறாக நடந்து கொள்வதைப் பற்றியும் கூறினேன். அதற்கு அம்மா 'இப்படி எல்லாம் தவறாக பேசக் கூடாது. மாம்பழம் அதிகம் சாப்பிடாதே! அதனால்தான் ரத்தம் வருகிறது' என்று என்னை அம்மா சமாதானப்படுத்தினார். இந்த தொல்லைகள் எனக்கு ஏழு வயதிலிருந்து 18 வயது வரை தொடர்ந்தது.

ஒரு முறை எனது அறைக்குள் அந்த ஆள் அதற்காக நுழைந்த போது வேகமாக கத்தினேன். காலால் உதைத்தேன். அன்றிலிருந்து இந்த நரக வேதனையிலிருந்து விடுதலை பெற்றேன். இந்த தைரியம் எனக்கு வருவதற்கு 11 வருடம் பிடித்தது.

அமீர்கான்: நண்பர்களே! யாருக்கும் இது போன்ற தொந்தரவு எற்பட்டால் பயப்படாது சத்தம் போடுங்கள்.எதிர்த்து சண்டையிடுங்கள். ஹரீஸின் தாயாரும் இங்கு வந்திருக்கிறார். அவரையும் அழைப்போம்.

ஹரீஸின் தாயார்: என் மகன் கூறும் போது அதிர்ச்சியடைந்தேன். என் தங்கையின் குடும்ப உறவு பாதிக்கப்படுமோ என்று பயந்தேன். அன்று என் மகன் சொன்னதை நம்பவில்லை. அது என் தவறு. உங்கள் குழந்தை இது போன்று ஏதாவது ஒரு செய்தியைக் கொண்டு வந்தால் அவர்கள் சொல்வதை நம்புங்கள்.அவனது சூழ்நிலையை மாற்றுங்கள். நான் செய்த தவறைப் போல வேறு எந்தப் பெற்றோரும் செய்து விட வேண்டாம்.

அமீர்கான்: பத்மாஜி சொன்னதை ஒவ்வொரு பெற்றோரும் கடை பிடிப்போம். குழந்தைகள் இது போன்று வித்தியாசமாக ஏதேனும் செய்திகளைக் கொண்டு வந்தால் நம்புவோம்.

(பத்மாஜி செல்கிறார் மனநல மருத்துவர் ரஜப் மித்ரா வந்தமர்கிறார்)

அமீர்கான்: டாக்டர்! இது போன்று குழந்தைகளை இம்சைபடுத்தும் நபர்களை எவ்வாறு கண்டறிவது?

ரஜப் மித்ரா: கண்டுபிடிப்பது சிரமம். யாரையும் இவர்தான் என்று குறிப்பாக சொல்வது சிரமம். சந்தர்ப்பம் கிடைத்தால் இந்த விஷயத்தில் எவரையும் நம்ப முடியாது. பெரியவர்களுக்கு மரியாதை தர வேண்டும் என்று குழந்தைகளுக்கு நாம் கற்றுக் கொடுக்கிறோம். இது தவறு. வயதானாலும் நல்ல குணமுள்ள நல்ல பழக்கமுள்ள பெரியவர்களையே மதிக்க வேண்டும். என்ற பாடத்தை நாம் பிள்ளைகளுக்கு சொல்லிக் கொடுக்க வேண்டும். ஒரு தாத்தா தனது பேத்தியிடம் தவறாக நடந்து கொண்ட கேஸ் கூட எங்களிடம் வந்திருக்கிறது. எனவே இந்த விஷயத்தில் நாம் வெகு ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்.

சமூக சேவகி அனுஜா குப்தா: குழந்தை பேசாது: தனக்கு என்ன நடக்கிறது என்பதை புரியாத போது எவ்வாறு தனது பெற்றோரிடம் வந்து புகார் கொடுக்கும்? எனவே பெற்றோரான நாம் தான் குழந்தைகளை யாரிடம் நம்பி விடுவது? எந்த சூழ்நிலையில் விடுவது? என்பதை தீர்மானிக்க வேண்டும். 1098 என்ற நம்பருக்கு போன் செய்தால் அரை மணி நேரத்தில் நாங்கள் குறிப்பிட்ட இடத்தில் வந்து குழந்தைகளுக்கு உதவ தயாராக இருக்கிறோம். எனவே பாதிக்கப்படும் எவரும் எங்களை தொடர்பு கொள்ளலாம்.

நிகழ்ச்சியின் முடிவில் குழந்தைகளுக்கு சில தற்காப்பு கலைகளையும் அமீர்கான் கற்றுக் கொடுக்கிறார். வேறு சிலரின் பேட்டிகளோடு நிகழ்ச்சி இனிதே நிறைவுறுகிறது.

எனது கருத்து: ஆண்களையும் பெண்களையும் ஒன்றாக படிக்க வைப்பது: ஒன்றாக வேலை செய்ய அனுமதிப்பது என்ற காரணங்கள் கூட இது போன்ற தவறுகள் நடக்க காரணமாகி விடுகின்றது. வயது வந்த பெண்ணுக்கு டியூஷன் எடுக்க பெண் ஆசிரியைகள் கிடைக்க மாட்டார்களா? வயது வந்த ஆணையும், வயது வந்த பெண்ணையும் பல வருடங்கள் தனி அறையில் பாடம் எடுக்க அந்த பெற்றோர் எப்படி சம்மதித்தனர்? உறவினர்கள் என்று மாமா சித்தபபன் பெரியப்பன் ஒன்று விட்ட உறவுகள் என்று சகஜமாக குடும்பத்தில் பழக விடுகிறோம். இரவில் படுக்கையையும் சில இடங்களில் ஒன்றாக்குகிறோம். இதெல்லாம் தவறுகள் நடக்க நாமே வாசல்களை திறந்து விடுகிறோம். பெண் உரிமை என்று பேசக் கூடியவர்கள் அனாமிகா சஞ்சயாலாவுக்கு என்ன பதிலை வைத்திருக்கின்றனர்? இன்று அவர்கள் நடை பிணங்களாக வாழ்க்கையை ஓட்டுவதற்கு யார் பொறுப்பேற்பது? பெண் உரிமை அல்லது பெண் விடுதலை என்பது என்ன என்பதை நாம் சரியாக விளங்காததே இத்தனை குளறுபடிகளுக்கும் காரணம்.

'ஹாங்....இதெல்லாம் ஜீன்கள் மூலமாக பரம்பரையாக வரும் வியாதி' என்று அலட்சியமாக தட்டிக் கழித்துப் போகாமல் இதற்கு என்ன தீர்வு வைத்திருக்கிறோம் என்பதை நாம் ஒவ்வொருவரும் சிந்திப்போமாக!

24 comments:

முஹம்மத் ஷஃபி BIN அப்துல் அஜீஸ் said...

அஸ்ஸலாமு அலைக்கும் சகோ
சமூகத்தை சீரழிக்கும் எத்தணையோ நிகழ்ச்சிக்கு மத்தியில் இதுபோன்ற சமூகத்துக்கு தேவையான அற்புதமான விழ்ப்புணர்வு நிகழ்ச்சிகள் இருப்பதை நினைக்கும்பொழுது மனம் ஆறுதலாக இருக்கின்றது.

suvanappiriyan said...

வஅலைக்கும் சலாம் சகோ முஹம்மது ஷஃபி!

//சமூகத்தை சீரழிக்கும் எத்தணையோ நிகழ்ச்சிக்கு மத்தியில் இதுபோன்ற சமூகத்துக்கு தேவையான அற்புதமான விழ்ப்புணர்வு நிகழ்ச்சிகள் இருப்பதை நினைக்கும்பொழுது மனம் ஆறுதலாக இருக்கின்றது. //

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!

~முஹம்மத் ஆஷிக் citizen of world~ said...

ஸலாம் சகோ.சுவனப்பிரியன்,

நல்ல விஷயத்தை முன்னெடுத்து செய்கிறார் அமீர்கான்.

பணத்துக்காக எதையும் செய்யக்கூடிய சினிமா நடிகர்தான் இவர் என்றாலும், ஓரளவுக்கு சமூக அக்கறை உள்ளவர் போல இருக்கிறார்..! இந்த டிவி நிகழ்ச்சியே கூட டி.ஆர்.பி ரேட்... அப்புறம், அதன் மூலம் வரும் வியாம்பர வருவாய்... ஆகிய இவற்றுக்குத்தான் முக்கியத்துவம் தந்து அதுவரைதான் ஓடும் என்றாலும், இவர்கள் எல்லாம் சேர்ந்து சமூகத்துக்கு அவசியமான நல்ல சிந்தனையை & படிப்பினையை ஊட்டினால்... மகிழ்ச்சிதான்..!

சிறப்பான மொழிபெயர்ப்புக்கு மிகப்பெரிய சபாஷ்..! மாஷாஅல்லாஹ்..! நேரில் பார்த்த உணர்வை தந்திருக்கிறீர்கள் உங்கள் எழுத்தின் மூலம்... சகோ.சுவனப்பிரியன்..!

suvanappiriyan said...

சலாம் சகோ ஆஷிக்!

//பணத்துக்காக எதையும் செய்யக்கூடிய சினிமா நடிகர்தான் இவர் என்றாலும், ஓரளவுக்கு சமூக அக்கறை உள்ளவர் போல இருக்கிறார்..! இந்த டிவி நிகழ்ச்சியே கூட டி.ஆர்.பி ரேட்... அப்புறம், அதன் மூலம் வரும் வியாம்பர வருவாய்... ஆகிய இவற்றுக்குத்தான் முக்கியத்துவம் தந்து அதுவரைதான் ஓடும் என்றாலும், இவர்கள் எல்லாம் சேர்ந்து சமூகத்துக்கு அவசியமான நல்ல சிந்தனையை & படிப்பினையை ஊட்டினால்... மகிழ்ச்சிதான்..!//

குடிசையிலும் தொலைக்காட்சி வந்து விட்ட இந்த நாளில் இந்த நிகழ்ச்சி பலரையும் விழிப்படைய செய்யும் என்பதில் சந்தேகமில்லை.

//சிறப்பான மொழிபெயர்ப்புக்கு மிகப்பெரிய சபாஷ்..! மாஷாஅல்லாஹ்..! நேரில் பார்த்த உணர்வை தந்திருக்கிறீர்கள் உங்கள் எழுத்தின் மூலம்... சகோ.சுவனப்பிரியன்..!//

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!

Seeni said...

nalla thakaval!

suvanappiriyan said...

சகோ சீனி!

//nalla thakaval! //

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!

அதிரை சித்திக் said...

யாரையும் நம்பக்கூடாது ..

இதுபோன்ற நிகழ்ச்சி சாமான்ய மக்களிடம்

சென்றடைவதன் மூலம் இளந்தளிர்கள் பாது காக்க படுவார்கள்

நல்ல ஆக்கம் வாழ்த்துக்கள் ..

suvanappiriyan said...

சகோ அதிரை சித்திக்!

//யாரையும் நம்பக்கூடாது ..//

உண்மைதான் சகோ. மணமாகாத ஒரு ஆணும் ஒரு பெண்ணும் தனித்து இருக்க வேண்டாம் என்று நாம் சொன்னால் பழமைவாதி என்கின்றனர். பாதிக்கப்பட்டவர்களுக்கு என்ன பதிலை அவர்கள் தரப் போகிறார்கள்.

//நல்ல ஆக்கம் வாழ்த்துக்கள் ..//

தொடர்ந்து கருத்துக்களை வழங்கி ஊக்கப்படுத்தி வரும் உங்கள் வருகைக்கு நன்றி!

நட்புடன் ஜமால் said...

இதுக்கும் ‍மைனஸ் ஓட்டு போட்டு இருக்காங்களே, என்ன காரணமோ ???

Good Share :)

Anonymous said...

மக்களின் சிந்தனையை மழுங்கடித்து,சீரழிக்கும் சினிமாக்களில் பணத்திற்காகவும் புகழுக்காகவும் மட்டும் நடிக்கும் அமீர் வெருக்கப்படவேண்டியவர் என்றாலும் இது போன்ற சமூக நலன் கருதி விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்துவதை பாராட்டத்தான் வேண்டும்.
பெற்றோர்களும் குழந்தைகளின் பயங்களை போக்கி அவர்கள் கூறும் சிறிய பிரச்சனை என்றாலும் செவிமடுக்கவேண்டும்.
மிகமிக அவசியமான,அருமையான பதிவு சகோ. இறைவன் உங்களுக்கு மேன்மேலும் அருள்புரிவானாக
kalam

suvanappiriyan said...

சகோ ஜமால்!

//இதுக்கும் ‍மைனஸ் ஓட்டு போட்டு இருக்காங்களே, என்ன காரணமோ ???

Good Share :) //

அதானே! :-(

போட்டவர் அதன் காரணத்தை சொன்னால் எல்லோரும் தெரிந்து கொள்ளலாம.

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!

suvanappiriyan said...

சகோ கலாம்!

//மிகமிக அவசியமான,அருமையான பதிவு சகோ. இறைவன் உங்களுக்கு மேன்மேலும் அருள்புரிவானாக//

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!

suvanappiriyan said...

அஸ்ஸலாமு அலைக்கும்!

இன்ஷா அல்லா வரும் 10.6.12 சண்டே அன்று இந்திய நேர படி 9;30 காலை (நியூ யார்க் நேர படி 1pm) இஸ்லாம் ஒரு எளிய மார்க்கம் நடை பெற உள்ளது கலந்து கொள்ள விரும்பும் நியூ யார்க் சகோதர்கள்
001917939392622 தாகிர் அவர்களை தொடர்பு கொள்ளவும் மேலும் LIVE TELECAST @ www.onlinepj.com

nadinarayanan said...

இது போன்ற நிகழ்சிகள் தான் மக்களுக்கு தேவை ..சும்மா TRB ரேட்டிங் ஏறனும்ரதுக்காக கட்டி பிடுச்சு கூத்தடிக்கிற நிகழ்ச்சியல யாருக்கு என்ன பயன் ..satyamev jeyate எல்லா episodeum தவறாமல் பாருங்கள் ..எவ்வலு அமைதியாக ,நளினமாக ameerkhan நிகழ்ச்சியை தொகுத்து வழங்குகிறார ..அதில் பேசப்படும் சமூக பிரச்சனைக்கள் ..அதை தீர்க்கும் வழிமுறைகள் ..என்று ஒரு தேர்ந்த தொலைநோக்கு புத்தகத்தை போல அந்த நிகழ்ச்சி அமைந்துள்ளது

suvanappiriyan said...

திரு நாராயணன்!

//இது போன்ற நிகழ்சிகள் தான் மக்களுக்கு தேவை ..சும்மா TRB ரேட்டிங் ஏறனும்ரதுக்காக கட்டி பிடுச்சு கூத்தடிக்கிற நிகழ்ச்சியல யாருக்கு என்ன பயன் ..satyamev jeyate எல்லா episodeum தவறாமல் பாருங்கள் ..எவ்வலு அமைதியாக ,நளினமாக ameerkhan நிகழ்ச்சியை தொகுத்து வழங்குகிறார//

சினிமா துறையில் சமூக அக்கறையோடு உள்ள அமீர்கானை எத்தனை பாராட்டினாலும் தகும். பிரபலமானவர்கள் ஒரு கருத்தைச் சொல்லும் போது அடி தட்டு மக்கள் வரை சென்றடைகிறது.

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!

Muthu said...

பயனுள்ள விழிப்புணர்வு நிகழ்சி பற்றிய பயனுள்ள இடுகை.

//(நம் தமிழகத்தில் கூட மாதா, பிதா, குரு, தெய்வம்: என்று வரிசைப் படுத்தி தெய்வத்தை கடைசியில் கொண்டு வைத்து விட்டோம்.//

கடைசியில் சொன்னதால் கடைசியில் ”கொண்டு வைத்த”தாகாது. பலரும் இவ்வாறு தவறாகப் புரிந்து கொள்கின்றனர். இந்தச் சொல் வழ்க்கை சரியாகப் புரிந்து, வாழ்க்கைக்கு உதவும் சொல்லாகப் புரிந்து கொள்ள இங்கு பார்க்கவும்: http://www.thangameen.com/Archieves/contentdetails.aspx?tid=294&iid=35

suvanappiriyan said...

திரு முத்து!

//பயனுள்ள விழிப்புணர்வு நிகழ்சி பற்றிய பயனுள்ள இடுகை.//

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!

Anonymous said...

sirippukavingan.blogspot.com

Anonymous said...

நல்ல பதிவு ! சிறார் பாலியல் துன்புறுத்தல் உலகிலயே இந்தியாவில் தான் அதிகம் நடைப் பெறுகின்றது எனலாம், ஆனால் இவை பெரும்பாலும் வெளியில் வருவதே இல்லை ... !

சிறார் பாலியல் துன்புறுத்தல் என்றதும் ... ஒரு ஆண் பெண்ணை பாலியல் துன்புறுத்தல் செய்வது மட்டுமே என்ற தொனியில் இப்பதிவு எழுதப்பட்டுள்ளது.

உண்மையில் சிறார் பாலியல் துன்புறுத்தலைப் பார்த்தோமானால் பலவகையாக பிரிக்கலாம்.

குறிப்பாக - இரத்த சம்பந்தப்பட்டவரே ஈடுபடல், இரத்த சம்பந்தம்ப் படாதவர் ஈடுபடல் ... !

அத்தோடு மட்டுமில்லாமல், ஒரே பாலினத்தவரே ஈடுபடல், எதிர்ப்ப் பாலினத்தவர் ஈடுபடல் எனவும் பிரிக்கலாம்.

குறிப்பாக ஆணையும் பெண்ணையும் பிரித்து வைத்தால் சிறார் பாலியல் துன்புறுத்தல் நின்றுவிடுமா என்றால் ? இல்லை நிற்க வாய்ப்பில்லை, ஓரளவு குறையலாம்.

காரணம் ஒரு ஆண் இன்னொரு ஆண் குழந்தையையே பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கக் கூடும்... அதே போல் ஒரு பெண் பெண் குழந்தையையே பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கக் கூடும் ...

அப்போது என்ன செய்ய ! பள்ளிகளை எல்லாம் மூடிவிடலாமா .. இல்லை அனைவரும் மறைந்து ஒருவர் கண்ணில் இன்னொருவர் படாமல் வாழலாமா?

சரி ! அந்நியர் மாத்திரமே இப்பாலியல் துன்புறுத்தலில் ஈடுபடுகின்றனரா என்ன ? பெற்ற தந்தை, தாயே கூட ஈடுபட்டு உள்ளனர். அந்நிலையில் என்ன செய்ய ...

சிறுவர் பாலியல் துன்புறுத்தலைத் தடுக்க .. நாம் அனைவருமே பொறுப்பேற்றுக் கொள்ள வேண்டும் ... பெற்றோர் தம் பிள்ளைகளுக்கு நல்ல தொடுதல், கெட்ட தொடுதலைச் சொல்லிக் கொடுக்க வேண்டும். பெற்றோர் மட்டுமல்ல ஆசிரியரும் அதனைச் சொல்லித் தரவேண்டும்.

ஏனெனில் பெற்றோர் கெட்டத் தொடுதல் செய்தால் அவர்கள் ஆசிரியரிடமும், ஆசிரியர் செய்தால் பெற்றோரிடமும் அதனைக் கொண்டு செல்ல வழி செய்ய வேண்டும். எதுவேண்டுமானாலும் நடக்க வாய்ய்புண்டு. ஆசிரியரோ, இன்ன பிறரோ தவறிழைத்தால் பெற்றோரும், சமூகமும் அதனை கடுமையாக எதிர்த்து தண்டனைப் பெற வழி செய்ய வேண்டும். ஒரு வேளை பெற்றோரோ, குடும்பத்தாரோ பாலியல் துன்புறுத்தல் செய்தால் அந்நிலையில் ஆசிரியர்களும், சமூகமும் அக்குழந்தைகளை காக்கவும், சம்பந்தப்பட்டவர்களையும் தண்டிக்க வழிவகை செய்தல் வேண்டும்.

சுவனப்பிரியன் சிறுவர் பாலியல் துன்புறுத்தல்கள் நடைப்பெறுவதற்கு பெண்ணுரிமை தான் காரணம் என்ற தொனியில் எழுதியுள்ளது நகைப்புக்குரியது. பெண்ணுரிமைக்கும், பாலியல் துன்புறுத்தல்களுக்கும் முடிச்சுப் போட்டு மதத்தினை உள்ளேத் திணிக்கப் பார்க்கின்றார் என்றே நினைக்கின்றேன்.

மற்றப்படி வாய்மையே வெல்லும் நிகழ்ச்சி நல்லதொரு தொடக்கம். வரவேற்கலாம் !

மேலும் பேசுவோம் .. !நல்ல பதிவு ! சிறார் பாலியல் துன்புறுத்தல் உலகிலயே இந்தியாவில் தான் அதிகம் நடைப் பெறுகின்றது எனலாம், ஆனால் இவை பெரும்பாலும் வெளியில் வருவதே இல்லை ... !

சிறார் பாலியல் துன்புறுத்தல் என்றதும் ... ஒரு ஆண் பெண்ணை பாலியல் துன்புறுத்தல் செய்வது மட்டுமே என்ற தொனியில் இப்பதிவு எழுதப்பட்டுள்ளது.

உண்மையில் சிறார் பாலியல் துன்புறுத்தலைப் பார்த்தோமானால் பலவகையாக பிரிக்கலாம்.

குறிப்பாக - இரத்த சம்பந்தப்பட்டவரே ஈடுபடல், இரத்த சம்பந்தம்ப் படாதவர் ஈடுபடல் ... !

அத்தோடு மட்டுமில்லாமல், ஒரே பாலினத்தவரே ஈடுபடல், எதிர்ப்ப் பாலினத்தவர் ஈடுபடல் எனவும் பிரிக்கலாம்.

குறிப்பாக ஆணையும் பெண்ணையும் பிரித்து வைத்தால் சிறார் பாலியல் துன்புறுத்தல் நின்றுவிடுமா என்றால் ? இல்லை நிற்க வாய்ப்பில்லை, ஓரளவு குறையலாம்.

Anonymous said...

காரணம் ஒரு ஆண் இன்னொரு ஆண் குழந்தையையே பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கக் கூடும்... அதே போல் ஒரு பெண் பெண் குழந்தையையே பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கக் கூடும் ...

அப்போது என்ன செய்ய ! பள்ளிகளை எல்லாம் மூடிவிடலாமா .. இல்லை அனைவரும் மறைந்து ஒருவர் கண்ணில் இன்னொருவர் படாமல் வாழலாமா?

சரி ! அந்நியர் மாத்திரமே இப்பாலியல் துன்புறுத்தலில் ஈடுபடுகின்றனரா என்ன ? பெற்ற தந்தை, தாயே கூட ஈடுபட்டு உள்ளனர். அந்நிலையில் என்ன செய்ய ...

சிறுவர் பாலியல் துன்புறுத்தலைத் தடுக்க .. நாம் அனைவருமே பொறுப்பேற்றுக் கொள்ள வேண்டும் ... பெற்றோர் தம் பிள்ளைகளுக்கு நல்ல தொடுதல், கெட்ட தொடுதலைச் சொல்லிக் கொடுக்க வேண்டும். பெற்றோர் மட்டுமல்ல ஆசிரியரும் அதனைச் சொல்லித் தரவேண்டும்.

ஏனெனில் பெற்றோர் கெட்டத் தொடுதல் செய்தால் அவர்கள் ஆசிரியரிடமும், ஆசிரியர் செய்தால் பெற்றோரிடமும் அதனைக் கொண்டு செல்ல வழி செய்ய வேண்டும். எதுவேண்டுமானாலும் நடக்க வாய்ய்புண்டு. ஆசிரியரோ, இன்ன பிறரோ தவறிழைத்தால் பெற்றோரும், சமூகமும் அதனை கடுமையாக எதிர்த்து தண்டனைப் பெற வழி செய்ய வேண்டும். ஒரு வேளை பெற்றோரோ, குடும்பத்தாரோ பாலியல் துன்புறுத்தல் செய்தால் அந்நிலையில் ஆசிரியர்களும், சமூகமும் அக்குழந்தைகளை காக்கவும், சம்பந்தப்பட்டவர்களையும் தண்டிக்க வழிவகை செய்தல் வேண்டும்.

சுவனப்பிரியன் சிறுவர் பாலியல் துன்புறுத்தல்கள் நடைப்பெறுவதற்கு பெண்ணுரிமை தான் காரணம் என்ற தொனியில் எழுதியுள்ளது நகைப்புக்குரியது. பெண்ணுரிமைக்கும், பாலியல் துன்புறுத்தல்களுக்கும் முடிச்சுப் போட்டு மதத்தினை உள்ளேத் திணிக்கப் பார்க்கின்றார் என்றே நினைக்கின்றேன்.

மற்றப்படி வாய்மையே வெல்லும் நிகழ்ச்சி நல்லதொரு தொடக்கம். வரவேற்கலாம் !

மேலும் பேசுவோம் .. !

suvanappiriyan said...

வாங்க இக்பால் செல்வன்!

முதலில் நீண்ட நாட்களுக்குப் பிறகு இணையத்தின் பக்கம் வருவதற்கு வாழ்த்துக்கள். உடல் நிலை சரியாகி விட்டதா? முன்பு போல் அதிக நேரம் இணையத்தில் கழிக்காமல் உடல் ஓய்வுக்கும் நேரத்தை செலவிடுங்கள்.

//அதே போல் ஒரு பெண் பெண் குழந்தையையே பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கக் கூடும் ...

அப்போது என்ன செய்ய ! பள்ளிகளை எல்லாம் மூடிவிடலாமா .. இல்லை அனைவரும் மறைந்து ஒருவர் கண்ணில் இன்னொருவர் படாமல் வாழலாமா?//

அதற்குத்தான் இந்த புரோக்ராமின் கடைசியில் ஒரு நிகழ்ச்சியை குழந்தைகளை வைத்து அமீர்கான் நடத்துகிறாரே பார்க்கவில்லையா? எவ்வளவு நெருங்கிய உறவினராக இருந்தாலும் கட்டியணைக்கும் போதோ, முத்தமிடும்போதோ என்ன வகையானது இது என்று பிரித்துப் பார்க்கும் அறிவை குழந்தைகள் பெற நாம் பாடம் எடுக்க வேண்டும். மாதம் ஒரு தடவை இப்படி ஒரு பாடத்தை எடுத்தால் காலப் போக்கில் குழந்தைகள் எது காமத்தால் நடப்பது எது அன்பால் நடப்பது என்பதை புரிந்து கொள்வார்கள்.

//சுவனப்பிரியன் சிறுவர் பாலியல் துன்புறுத்தல்கள் நடைப்பெறுவதற்கு பெண்ணுரிமை தான் காரணம் என்ற தொனியில் எழுதியுள்ளது நகைப்புக்குரியது. பெண்ணுரிமைக்கும், பாலியல் துன்புறுத்தல்களுக்கும் முடிச்சுப் போட்டு மதத்தினை உள்ளேத் திணிக்கப் பார்க்கின்றார் என்றே நினைக்கின்றேன்.//

பாலியல் துன்புறுத்தல் நடைபெறுவதற்கு அதிகமாக நாம் சமூகத்தில் கொடுத்து வைத்திருக்கும் பெண்களின் உடையும் ஒரு காரணம் என்பதை மறுக்க முடியாது. நீங்களோ நானோ வெளியில் செல்லும் போது தலைப் பாகத்தைத் தவிர மற்ற அனைத்தையும் உடைகளால் மூடிக் கொண்டுதான் செல்கிறோம். ஆனால் பெண்கள் அதுபோல் வருகிறார்களா? தங்களின் கவர்ச்சி பாகங்களை எந்த அளவு வெளிக் காட்ட முடியுமோ அந்த அளவு வெளியில் தெரியும் படி உடைகளை அணிகின்றனர். இதுதான் பெண் விடுதலையா? முழு உடம்பையும் மறைத்து வெளியில் வரும் ஆண்கள் முன்னேறவில்லையா? எனவே பெண் விடுதலை என்பதன் உண்மையான அர்த்தத்தை நாம் விளங்காததே முக்கிய காரணம்.

ஆணும் பெண்ணும் ஒன்றாக தனிமையில் வேலை நிமித்தமாக தங்கும் போது பல தவறுகள் பாலியல் துன்புறுத்தல்கள் நடைபெறுவதை அறிக்கைகள் சுட்டிக் காட்டுகின்றன.

----------------------------

-31 டிசம்பர் 2009 தினத் தந்தி

வேலைக்குப் போகும் பெண்கள் சந்திக்கும் பிரச்சினைகளை மூன்று விதமாகச் சொல்லலாம். வீட்டில் சந்திக்கும் பிரச்சினை, அலுவலகத்துக்குச் செல்லும் வழியில் ரோட்டில் நடந்து செல்லும் போது, பஸ் ஏற காத்திருக்கும் போது, பஸ்களில், ரெயில்களில் பயணம் செய்யும் போது ஏற்படும் உடல், உள்ள ரீதியான மற்றும் பாலியல் ரீதியான தொல்லைகள், அலுவலகத்தில் தனக்கு மேலும், கீழும் வேலை பார்க்கும் ஆண் அதிகாரிகள் கொடுக்கும் `செக்ஸ்' தொல்லைகள் என்று மூன்று வகையாகப் பிரிக்கலாம்.

வேலைக்கு பெண்கள் புறப்படும் போது நன்றாக ஆடை அணிந்து, அலங்காரம் செய்து சென்றால் சில கணவர்கள் பொறாமையோடு பார்க்கிறார்கள். இன்னும் சில கணவர்கள் சந்தேகப் பார்வை பார்க்கிறார்கள். இதனால் கணவர்களோடு வீட்டில் கடும் பிரச்சினைகளைச் சந்திக்கும் நிலை ஏற்படுகிறது. பையைத் தோளில் தொங்கப் போட்டுக் கொண்டு வீட்டுக்கு வெளியே வந்துவிட்டால் பலரும் ஒவ்வொரு விதமாகப் பார்க்கிறார்கள். ரோட்டில் தனியாக நடந்து செல்லும் போது எதிரில் வருபவர் சேட்டை பார்வை வீசுவார். பஸ் ஏற பஸ் நிலையத்தில் காத்திருக்கும் போது, வயதானவர்கள் முதல் இளைஞர்கள் வரை கிண்டல் பாட்டு பாடுகிறார்கள். பஸ்சில் ஏறிவிட்டால் போதும் இடிமன்னர்களின் தொல்லை தாங்க முடியவில்லை. பஸ் டிரைவர் `பிரேக்' போட மாட்டாரா என்று பல காமுகர்கள் ஏக்கத்தோடு நிற்கிறார்கள்.

`பிரேக்' அடித்தால் போதும் அந்தச் சாக்கில் பெண்கள் மீது சாய்ந்து அற்ப சுகம் காண்கிறார்கள்.

வெட்கத்தை விட்டுச் சொல்கிறோம், அவ்வாறு சாய்கிறவர்கள் முதலில் மார்பை குறி வைத்துத் தான் பிடிக்கிறார்கள். நாங்கள் அவர்களோடு சண்டை போடுவதா, எச்சரிக்கை செய்வதா, கன்னத்தில் அறைவதா என்பது புரியாமல் சில நேரங்களில் இடி மன்னர்களின் தாக்குதலைத் தாங்கிக் கொண்டு மவுனமாக அழுதுவிட்டுத் தான் வருகிறோம்.

suvanappiriyan said...

……..மிரட்டல்

ஒரு வேளை எதிர்த்துச் சண்டை போட்டால், சிலர் பிளேடால் கீறி விட்டு ஓடிவிடுகிறார்கள்.
இன்னும் சிலர் கேவலமாகத் திட்டுகிறார்கள். இதையெல்லாம் சந்திக்க முடியாமல் நாங்கள் தவிக்கிறோம்.

அலுவலகத்துக்குச் சென்று விட்டால் உயர் அதிகாரிகளும், கீழ் அதிகாரிகளும் செய்யும் பாலியல் தொல்லைகள் சொல்லிமாளாது. இப்போது காணாத குறைக்கு செல்போனில் வேறு `ஓடிப் போகலாம் வர்றீயா' என்று கூப்பிடுகிறார்கள். செல்போன்களில் ஆபாசப் படங்களையும் அனுப்புகிறார்கள். எம்.ஜி.ஆர். ஒரு சினிமா படத்தில் `இப்படித் தான் இருக்க வேண்டும் பொம்பளை' என்ற பாடலை பாடினார். அந்தக் காலம் எல்லாம் இப்போது மலை ஏறிவிட்டது.

பெண்களாகிய நாங்கள் எங்களைப் பாதுகாத்துக் கொள்ள ஏதாவது செய்ய வேண்டிய நிலையில் உள்ளோம். போலீசார் எங்களுக்கு உற்ற துணையாக இருந்து பாதுகாப்பு கொடுக்க வேண்டும்.

இருட்டான இடங்களில்...

பெண்கள் சில நேரங்களில் வேலைக்குப் போய்விட்டு இரவு வெகு நேரம் கழித்து வீடு திரும்ப
வேண்டிய நிலை உள்ளது. அப்போது அவர்கள் ரோடுகளில் தனியாக நடந்து செல்ல வேண்டிய நிலை உள்ளது. இவ்வாறு பெண்கள் தனியாக நடந்து செல்லும் இருட்டான பகுதிகளில் போலீசாரை ரோந்து பணியில் ஈடுபடுத்த வேண்டும். சுப்ரீம் கோர்ட்டு சொல்லியபடி, பெண்களின் சுய பாதுகாப்புக்காக `விசாகா' கமிட்டிகளை அனைத்து பகுதிகளிலும் பலமாக நிறுவுவதற்கு போலீசார் உரிய ஏற்பாடு செய்ய வேண்டும்.

போலீஸ் நிலையத்துக்குப் புகார் கொடுக்க சென்றால் புகார்களை வாங்காமல் இழுத்தடிப்பார்கள்,
உடனடியாக எப்.ஐ.ஆர். போட மாட்டார்கள் என்ற தவறான எண்ணம் பெண்கள் மத்தியில் உள்ளது. அதைப் போக்கும் வகையில் பெண்கள் கொடுக்கும் புகார்கள் மீது உடனடியாக வழக்குப் பதிவு செய்து உரிய நடவடிக்கை எடுக்க ஆவன செய்யவேண்டும்.

பஸ்களில்

தற்போது பெண்கள் செல்லுவதற்கு தனி ரெயில் விடப்பட்டுள்ளது. அது போல, பெண்கள் பயணம் செய்வதற்காக அதிகளவில் மகளிர் பஸ்களை விட வேண்டும். பொதுவான பஸ்களில் பெண்களை முன்பக்கத்தில் ஏறுவதற்கும், ஆண்களை பின்பக்கத்தில் ஏறுவதற்கும் விசேஷ ஏற்பாடு செய்ய வேண்டும். அதோடு பொதுவான பஸ்களில் பெண் கண்டக்டர், ஆண் கண்டக்டர் என்று இரண்டு கண்டக்டர்களை நியமிக்க வேண்டும். தைரியமாக புகார் கொடுக்க வருவதற்கு பெண்கள் மத்தியில் இது போன்ற கூட்டங்களை நடத்தி போலீசார் விழிப்புணர்வு பிரசாரம் செய்ய வேண்டும்.

அலுவலகங்களில், பெண்களுக்கு `செக்ஸ்' தொல்லை கொடுப்பவர்களுக்கு என்ன தண்டனை வழங்கப்படும் என்பதையும், பாலியல் தொல்லைக்கு ஆளாகும் பெண்கள் தைரியமாக புகார் கொடுக்க முன் வர வேண்டும் என்ற வாசகத்தையும் எழுதி போட வேண்டும்.

நாங்கள் பஸ்சில் பயணம் செய்யும் போது பல்வேறு தந்திரங்களைக் கையாண்டு தான் இடிமன்னர்களிடமிருந்து எங்களைக் காப்பாற்றிக் கொள்கிறோம். சில நேரங்களில் முக்கியமான போலீஸ் அதிகாரிகளின் பெயரைச் சொல்லி, அவர்கள் எங்கள் உறவினர்கள் என்று சொல்லி இடிமன்னர்களை மறைமுகமாகப் பயமுறுத்துகிறோம்.

பெங்களூரில் ஆட்டோ டிரைவர்கள் தங்களது பேட்ஜ், உடை போன்றவற்றை அணிந்துகொண்டு நாகரிகமாக நடந்து கொள்கிறார்கள். ஆட்டோவிப் போட்டு இருக்கிறார்கள். சென்னை நகரிலும் ஆட்டோ டிரைவர்களை இது போல் நடப்பதற்கு போலீசார் அறிவுறுத்த வேண்டும்.
இவ்வாறு பெண்கள் தங்களது உள்ளக் குமுறல்களை கொட்டி பேசினார்கள்.

-31 டிசம்பர் 2009
Dina thandi

Anonymous said...

திருநெல்வேலி: நெல்லையில், சிறுமியை கொலை செய்து தாமிரபரணி ஆற்றில் வீசிய நபருக்கு, இரட்டை ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. திருநெல்வேலி, கொக்கிரகுளம் மாரியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த, சுப்பிரமணியன் மகள் முருகம்மாள்,9. அங்குள்ள பள்ளியில் நான்காம் வகுப்பு படித்து வந்தாள். கடந்த, 2010 அக்டோபர் 2ம் தேதி, முருகம்மாள், பக்கத்துத் தெருவில் விளையாடச் சென்றிருந்தாள். அதே பகுதியில், தொல்காப்பியர் தெருவில் வசிக்கும், வேலு 52 என்பவர், சிறுமியை அழைத்து மிட்டாய் கொடுத்துள்ளார். பின், சிறுமியிடம் பலாத்காரத்தில் ஈடுபட்டுள்ளார். நடந்ததை பெற்றோரிடம் கூறிவிடுவதாக, சிறுமி சத்தம்போட்டு அழுததால், கழுத்தை நெரித்து கொலை செய்தார். பின், சிறுமியின் உடலை கொக்கிரகுளம் தாமிரபரணி ஆற்றுப்பாலத்தின் கீழே பாறையில், ஒரு சாக்குப்பையில் சுருட்டி போட்டுவிட்டார். சிறுமி கொலை குறித்து விசாரித்த போலீசார், வேலுவை கைது செய்தனர்.

வழக்கு, நெல்லை மகளிர் கோர்ட்டில் நடந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி தேவசகாயம், குற்றவாளி வேலுவிற்கு இரட்டை ஆயுள்தண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.

dinamalar-07/06/2012

suvanappiriyan said...

கோபிசெட்டிபாளையம்: காதலி பேச மறுத்ததால், சந்தேகம் அடைந்த காதலன், காதலியின் தாடையை உடைத்தார். கோபி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற காதலி, காதலனை கட்டி அணைத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

ஈரோடு மாவட்டம், கோபி அருகே கரட்டடிபாளையம், பண்டிதர் வீதியைச் சேர்ந்தவர் பிரபு,24; சொந்தமாக கார் வைத்து வாடகைக்கு ஓட்டி வருகிறார். அதே பகுதியைச் சேர்ந்த சரவணன் மகள் வினோதினி, பிளஸ் 2 படித்துள்ளார். பிரபுவும், வினோதினியும், நான்கு ஆண்டுகளாக காதலித்து வந்தனர். மொபைல்போனில் இருவரும், தினசரி மணிக்கணக்கில் பேசி வந்தனர். வினோதினிக்கு, அதே பகுதியைச் சேர்ந்த வாலிபர் ஒருவருடன், பழக்கம் ஏற்பட்டது. போனில் பிரபு தொடர்பு கொண்டால், வினோதினி "கட்' செய்தார். பல நாட்களாக, பிரபுவுடன் பேசுவதை தவிர்த்தார். ஆத்திரம் அடைந்த பிரபு, நேற்று முன்தினம் வினோதினி வீட்டுக்குச் சென்றார். "போன் செய்தால் ஏன் "கட்' செய்கிறாய்?' எனக் கேட்டு தகராறில் ஈடுபட்ட பிரபு, திடீரென வினோதினியை தாக்கியதில், அவரது தாடை உடைந்து, ரத்தம் வடிந்தது. கோபி அரசு மருத்துவமனையில் வினோதினி சிகிச்சைக்கு சேர்ந்தார். நேற்று காலை, ""பிரபுவை மட்டுமே காதலிக்கிறேன்; அவரைப் பார்க்க வேண்டும்,'' எனக் கூச்சலிட்டவாறு, அரசு மருத்துவமனையில் தரையில் புரண்டு அழுதார் வினோதினி. சிகிச்சைக்கு வந்தவர்கள் அங்கு திரண்டதால், பரபரப்பு ஏற்பட்டது. மருத்துவமனையில் இருந்த கோபி போலீசார், பிரபுவுக்கு தகவல் தெரிவித்தனர். பிரபு, தன் பெற்றோருடன் அரசு மருத்துவமனைக்கு வந்தார்.

பிரபுவை பார்த்த வினோதினி ஓடிச் சென்று, கட்டி அணைத்துக் கொண்டார். இருவரும் மெய் மறந்ததை பார்த்த போலீசாரும், மருத்துவமனைக்கு வந்தவர்களும், சிரிப்பை வெளிக்காட்ட முடியாமல், முகத்தைத் திருப்பிக் கொண்டனர். இருவரையும், போலீஸ் ஸ்டேஷனுக்கு அழைத்துச் சென்ற போலீசார், இருவரும் மேஜராகி விட்டனரா என விசாரித்து, அறிவுரை கூறி, இருவரையும் வீட்டுக்கு அனுப்பி வைத்தனர்.
DinaMalar
07-06-2012

:-)