Followers

Tuesday, June 26, 2012

விளக்கை அணைக்காததால் மூன்று உயிர்கள் பலி!

விளக்கை அணைக்காததால் மூன்று உயிர்கள் பலி!

நாமக்கல் : நாமக்கல் அருகே உள்ள எருமப்பட்டியைச் சேர்ந்தவர் சசிகலா(28). இவரது மகன்கள் ஸ்ரீகாந்த்(8), பிரேம்நாத்(6). நேற்று இரவு வீட்டில் மின்சாரம் இல்லாததால் சிமில் விளக்கு ஏற்றி வைத்துள்ளனர். விளக்கு தவறி விழுந்ததில் சசிகலாவின் உடையில் தீப்பற்றியது. அவர் வீட்டில் அங்கும் இங்கும் ஓடியதால் வீடு முழுவதும் தீ பரவி உள்ளது. இதில் சசிகலாவும், அவரது இரு மகன்களும் தீக்காயம் அடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். சிகிச்சை பலனளிக்காமல் சசிகலாவும், ஸ்ரீகாந்தும் நேற்று இரவு உயிரிழநதனர். இந்நிலையில் பிரேம்நாத்தும் இன்று காலை உயிரிழந்தார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
-தினமலர்
27-06-2012

சிறிய அலட்சியம் எந்த அளவு சோகத்தை தந்து விடுகிறது என்பதை இந்த நிகழ்வு நமக்கு எடுத்துக் காட்டுகிறது. இரவு படுக்கப் போகும் முன் எரியும் திரிகளை அணைத்து விட்டு படுப்பதால் என்ன சிரமம் வந்து விடப் போகிறது? இதற்கு சோம்பல் பட்டு படுதது விடுவதால் மூன்று உயிர்களை அந்த குடும்பம் இழந்துள்ளது. அந்த குடும்பத்துக்கு நம்முடைய ஆழ்ந்த அனுதாபங்கள்.

இது போன்ற தனி மனித பாதுகாப்பில் கூட இஸ்லாம் சில கட்டளைகளை மனிதனுக்கு இடுகிறது. கீழ் வரும் நபி மொழிகள் மனிதர்கள் படுக்கப் போகும் முன் என்னவெல்லாம் செய்ய வேண்டும் என்பதை அழகாக நமக்கு சொல்லித் தருகிறது.

'இரவில் தாமதமாகி வருவதை தவிர்ந்து கொள்ளுங்கள், இரவு என்பது நிசப்தமானது, உங்களைச் சுற்றி எந்த வகையான விலங்கை இறைவன் அனுப்பியுள்ளான் என்பதை உங்களால் அறிந்து கொள்ள முடியாது. கதவுகளைத் தாழிட்டுக் கொள்ளுங்கள், தண்ணீர் பாத்திரத்தை மூடி விடுங்கள், உணவுப்பாத்திரத்தை மூடுங்கள், விளக்கை அணைத்து விடுங்கள்' என்று நபி அவர்கள் கூறினார்கள்.

ஜாபிர் பின் அப்துல்லாஹ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்:
(நூல்: புஹாரி - 6295,6296, புஹாரியின் அதபுல் முப்ரத்)

கதவை தாழிடுதல்:

முதன்முதல் அறிவுரை தூங்கச் செல்லு முன் கதவை தாழிட்டுக் கொள்வதாகும். இப்பொழுதெல்லாம் திருட்டு பல இடங்களில் சர்வசாதாரணமாகி விட்டது. அதனால் கதவை தாழிட்டுக் கொள்வதை சொல்லாமலேயே செய்து விடுவார்கள். திருட்டு பயம் இல்லாதிருந்தாலும் கதவை இரவில் தாழிட்டுக் கொள்ளத்தான் வேண்டும்.
மேலும் தூங்கிக் கொண்டிருக்கும் போது மனிதர்களுக்கு தீங்கு விளைவிக்கும் விலங்குகள் வீட்டுக்குள் நுழைந்து விடாமல் இருக்க கதவை தாழிடத்தான் வேண்டும்.
கதவை மூடி தாழிட்டுக் கொள்வது பாதுகாப்பு நடவடிக்கையாகும்.

தண்ணீர் பாத்திரத்தை மூடுதல்:

அந்த காலத்தில் குடிப்பதற்கும் வீட்டு உபயோகத்திற்கும் போதுமான தண்ணீர் கிடைக்காத காலம். போதுமான தண்ணீரை தேக்கி வைத்துக் கொள்ள வேண்டிய கட்டாயம். குடிநீர் தண்ணீர் பைகளிலே சேகரித்து வைத்துக் கொள்வார்கள். தண்ணீர் பைகளாகட்டும் தண்ணீர் உள்ள பாத்திரமாகட்டும் தண்ணீர் பைகளின் வாய் கட்டப்படவும் தண்ணீர் பாத்திரங்கள் மூடிவைக்கப்படவும் வேண்டும் என்று நபி அவர்கள் கூறியுள்ளார்கள்.
அப்போது தான் மனிதர்களுக்கு கேடு விளைவிக்கும் பொருட்களோ பூச்சிகளோ அதில் விழுந்து விடாமல் பாதுகாக்க முடியும்.

உணவுப் பாத்திரத்தை மூடுதல்:

இதே முறை மற்ற உணவுப் வைத்திருக்கும் பாத்திரத்திற்கும் குழம்பு வைத்திருக்கும் பாத்திரத்திற்கும் பொருந்தும். மனிதனுக்கு தீங்கு விளைவிக்கக் கூடிய பூச்சிகள் அதற்குள் சென்று விடலாம். தூசியோ தீங்கு விளைவிக்கும் பொருளோ அதில் விழுந்து விடலாம். அது உடலுக்கு சக்தி கொடுக்கும் உணவாக இருப்பதற்கு பதிலாக தீங்கு விளைவிக்கும் உணவாக மாறி விடலாம்.

விளக்கை அணைப்பது:

இங்கே சொல்லப்பட்டிருப்பது அகல்விளக்கு அல்லது அது போன்று திறந்த நிலையில் எண்ணெய் ஊற்றி திரியின் மூலம் எரிக்கப்படும் விளக்காகும். இப்படிப்பட்ட விளக்குகள் காற்று கூறுதலாக வீசும் போது அதன் தீப்பிளம்பு கூடும், அல்லது பூனை போன்ற விலங்குகளால் தீ விபத்து ஏற்பட முடியும்.

அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அறிவிக்கிறார்கள்:

'நீங்கள் உறங்கச் செல்லும் போது உங்கள் வீட்டில் உள்ள நெருப்பை அணைக்காமல் விட்டுவிடாதீர்கள்' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (நூற்கள்: புஹாரி - 6293, முஸ்லிம், அபூதாவூத், திர்மிதி - 1873, இபுனுமாஜா)

அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அறிவிக்கிறார்கள்:
'உங்கள் வீடுகளில் விளக்கை திறந்திருக்கும் நிலையில் விட்டு விடாதீர்கள், அது உங்களது பகைவனாகும்' நபிமொழி. (நூல்: புஹாரியின் அதபுல் முஃப்ரத்)

முஸ்லிமல்லாத மக்களில் சிலர் தங்களது சில பண்டிகையின் போது அதிநவீன மின்சார விளக்குகள் இருந்தும் பெருவாரியான அகல்விளக்குகளை பயன்படுத்துகிறார்கள். குறிப்பாக கார்த்திகை தீபம் அன்று இவ்வாறு அகல்விளக்கை பயன்படுத்துகிறார்கள். அப்போது குறைந்தது விபத்துக்கள் ஏற்படும் போது அதிலிருந்து தவிர்ந்து கொள்வதற்கு அதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்வது அவசியம்.


9 comments:

~முஹம்மத் ஆஷிக் citizen of world~ said...

ஸலாம் சகோ.சுவனப்பிரியான,
அந்த நியுசை படிக்கும் போதே அந்த ஹதீஸ்தான் நியாபகத்துக்கு வந்தது. இஸ்லாம் ஒரு வாழ்வியல் மார்க்கம். ஆனால், வாழ்வில் உள்ள அனைத்தும் கற்றுத்தரும். வாழ்க்கை வேறு மதம் வேறு... என்ற கொள்கை கொண்டோருக்கான நல்லதொரு விளக்கப்பதிவு. நன்றி சகோ.

suvanappiriyan said...

சலாம் சகோ ஆஷிக்!

//அந்த நியுசை படிக்கும் போதே அந்த ஹதீஸ்தான் நியாபகத்துக்கு வந்தது. இஸ்லாம் ஒரு வாழ்வியல் மார்க்கம். ஆனால், வாழ்வில் உள்ள அனைத்தும் கற்றுத்தரும். வாழ்க்கை வேறு மதம் வேறு... என்ற கொள்கை கொண்டோருக்கான நல்லதொரு விளக்கப்பதிவு. நன்றி சகோ.//

எல்லாவற்றிலும் இஸ்லாம் ஏன் மூக்கை நுழைக்க வேண்டும் என்று கேட்பவர்களுக்கு பதிலாக அமைந்துள்ளது இந்த சம்பவம். எங்கள் வீட்டில் கூட ஒவ்வொரு இரவும் படுக்கைக்கு போகும் முன் தாழ்ப்பாளை சரிபார்ப்பது, கேஸை அடைத்துள்ளதா என்று பரிசோதிப்பது, போன்ற முன்னெச்சரிக்கைகளை செய்து விட்டே படுப்பர். இதற்கு ஆதாரமாக இந்த ஹதீதையும் சொல்வார் எனது தாயார். ஒரு சமூகத்தின் முன்மாதிரியானவர் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு உதாரணமாக திகழ்கிறார் முகமது நபி. சாதாரணமாக இது எல்லோருக்கும் தெரிந்த விடயம்தான். அதையும் கூட ஒரு நபி சொல்லும் போது அது மார்க்க கடமையாக மாறி விடுகிறது.

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

suvanappiriyan said...

திரு தங்கமணி!

//மெக்காவே ஒரு தர்ஹாதான் என்ரு சொல்கிறார்களே? அது இஸ்மாயிலின் கல்லறை என்று சொல்கிறார்களே?//

“நபி அவர்கள் (மக்காவுக்கு) வந்த போது கஃபாவில் சிலைகள் இருந்ததால் உள்ளே நுழையமறுத்து அவற்றை அப்புறப்படுத்துமாறு கட்டளையிட்டார்கள். உடனே அவை அப்புறப்படுத்தப்பட்டன. அச்சிலைகளில் (குறிபார்ப்பதற்குரிய) அம்புகளை கையில் தாங்கியவாறு நபி இப்றாஹீம் நபி இஸ்மாயீல் ஆகியோரின் உருவங்களும் இருந்தன. அவற்றையும் வெளியேற்றினார்கள். (இவ்விரு நபிமார்களுக்கும் சிலை கட்டியதற்காக) அல்லாஹ் இவர்களை அழிப்பானாக! இவ்விரு (நபிமார்களு)ம் அம்புகள் மூலமாகக் குறி பார்ப்பவர்களாக ஒருபோதும் இருந்ததில்லை என்பதை இதைச் செய்தவர்கள் அறிந்தே வைத்திருக்கிறார்கள்”, என்று கூறிவிட்டு நபியவர்கள் கஃபாவிற்குள் நுழைந்தார்கள். அதன் ஓரங்ளில் நின்று தக்பீர் சொன்னார்கள். அதில் தொழவில்லை.
அறிவிப்பவர்: நபித் தோழர் இப்னு அப்பாஸ் - நூல் புகாரி(1601)

இந்த நபி மொழி மூலம் கஃபாவுக்குள் நபி ஆப்ரஹாம் மற்றும் நபி இஸ்மாயீல் போன்றவர்களின் சிலைகள்தான் இருந்தது. அதை வைத்து வழி பட்டு வந்தனர். அந்த சிலைகளை அப்புறப்படுத்தி அதை இறைவனை மட்டுமே வணங்கும் இடமாக மாற்றியது நபிகள் நாயகம் ஆவார்கள். உங்களுக்கு தவறாக யாரோ சொல்லியிருக்கின்றனர். அங்கு தர்ஹா எதுவும் முன்பு கிடையாது.

//அநியாயமாக கொல்லக்கூடாது என்று யூதர்களுக்குச் சொன்னதாகத்தானே குரான் சொல்கிறது? முஸ்லீம்களிடம் கழுத்தை அறு என்றும் குரான் சொல்வதாலா?//

'வாருங்கள்! உங்கள் இறைவன் உங்களுக்குத் தடை செய்ததைக் கூறுகிறேன்' என்று முஹம்மதே கூறுவீராக! அது 'நீங்கள் இறைவனுக்கு எதையும் இணையாக்கக் கூடாது' என்பதே. பெற்றோருக்கு உதவுங்கள். வறுமையின் காரணமாக உங்கள் குழந்தைகளைக் கொல்லாதீர்கள். உங்களுக்கும் அவர்களுக்கும் நாமே உணவளிக்கிறோம். வெட்கக் கேடான காரியங்களில் வெளிப்படையாகவும் இரகசியமாகவும் நெருங்காதீர்கள்.இறைவன் தடை செய்துள்ளதால் எவரையும் அதற்கான உரிமை இருந்தால் தவிர கொல்லாதீர்கள். நீங்கள் விளங்கிக் கொள்வதற்காக இதையே அவன் உங்களுக்கு வலியுறுத்துகிறான்.

-குர்ஆன் 6:151

இந்த வசனத்தில் நேரிடையாக முகமது நபியிடமே மக்களுக்கு கூறுமாறு இறைவன் சொல்வதை பார்க்கவில்லையா? அநியாயமாக கொலை செய்வதை இறைவன் தடுத்துள்ளதாக இந்த வசனம் கூறுகிறது. இதை விட சிறப்பாக வேறு வசனங்கள் இருந்தாலும் அது யூதர்களுக்கு சொல்லப்பட்டது என்று நீங்கள் சொல்வதால்தான் இந்த வசனத்தை தருகிறேன்.

//குரானை கொடுத்தாயிற்று. அவரவருக்கு எழுத படிக்க சொல்லிக்கொடுத்து அவரவர் குரானை படித்து புரிந்துகொள்ளுங்கள் என்று சொல்லிவிட்டுவதுதானே சரியான பரிட்சை? பிட்டு கொடுத்து பாஸ் பண்ண வைப்பது மாதிரி இத்தனை இமாம்கள் என்னோட பிட்டை யூஸ் பண்ணு என்னோட பிட்டை யூஸ் பண்ணு என்று அலைவது தவறுதானே?//

கல்லூரியில் மாணவர்களுக்கு புத்தகங்களை கொடுத்தாகி விட்டது. விளங்காத சில சப்ஜெட்டுகளை விளக்க கல்லூரியில் பேராசிரியர்கள் அவரவர் திறமைக்கு ஏற்ப பாடங்களை எடுக்கின்றனர். சில மாணவர்கள் லெக்சர்களைக் கேட்காமலேயே பரீட்சை எழுதி விடுவதும் உண்டு. சில மாணவர்களுக்கு பேராசியர்கள் பாடம் எடுத்தால்தான் விளங்கும். அப்படி பட்டவர்களுக்கு லெக்சர் தேவைதானே! அதைத்தான் மார்க்க அறிஞர்கள் செய்து கொண்டிருக்கிறார்கள்.

பிட் அடிப்பது என்பது உலகில் நடக்கலாம். நித்தியானந்தா, மீர்ஸா குலாம் அஹமது, சாய்பாபா மாதிரி போலி ஆன்மீக வாதிகள் மக்களை பிட் அடித்து ஏமாற்றலாம். படைத்த இறைவனுக்கு யார் படித்து பரிட்சை எழுதுகிறார்கள். யார் பிட் அடித்து பரிட்சை எழுதுகிறார்கள் என்பது நன்றாகவே தெரியும். எனவே இறைவனை ஏமாற்ற முடியாது.

suvanappiriyan said...

திரு க்ருஷ்ணகுமார்!

//ஜெனாப் சுவனப்ரியன்,

மிக மிகத் தவறான ஒப்புமை. காயிதே மில்லத் மற்றும் காமராஜர் மணிமண்டபம் எல்லாம் புதியதாகக் கட்டப்பட்டவை. பாமியான் புத்தர் சிலைகள் நூற்றுக்கணக்கான ஆண்டுகளாக காந்தாரத்தின் கலாசாரச் சின்னங்களாக அங்கிருந்தவை.//

எந்த கலாசார சின்னமும் மனித நேயத்துக்கு பிறகுதான். ரஷ்யாவோடு பல ஆண்டுகள் போர்நடத்தி உருக்குலைந்து ஒரு நாடு பரிதவிக்கிறது. அங்குள்ள மக்களுக்கு அத்தியாவசியத் தேவைகளை அளிக்காமல் சிலைகளை காக்க பல மில்லியன் தருகிறோம் என்று சொன்னால் யாருக்குத்தான் கோபம் வராது? மேலும் ஆப்கானிஸ்தானத்தில் பவுத்தர்கள் எவருமே இல்லை. அங்கு சிதிலமடைந்த பவுத்த சிலைகள் இருப்பதால் யாருக்கு நன்மை?

http://www.greenspun.com/bboard/q-and-a-fetch-msg.tcl?msg_id=005AZw

பொருளாதார தடைகளால் அடிப்படை வசதிகள் சீர்குலைந்து நூற்றுக்கணக்கான குழந்தைகள் ஊட்டச்சத்துக்குறைவினால் மரணித்துக்கொண்டிருக்கும் தேசத்தில் பாமியான் புத்தச்சிலையை புதுப்பிக்கிறோம் என்ற பெயரில் ஐ.நாவின் யுனெஸ்கோ முயற்சி மேற்கொண்டது.குழந்தைகள் பட்டினியால் வாடும் பொழுது தங்களது தேசம் வறுமையில் உழலும் போது அதைப் பற்றி யெல்லாம் கவலைப்படாமல் உயிரற்ற சிலைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கின்றீர்களா? என்ற ஆதங்கமும், ஆத்திரமும் ஆப்கான் மக்களை புத்தர் சிலை உடைக்க காரணமானது.ஆனால், சர்வதேச முஸ்லிம் அறிஞர்களின் தலைவரான டாக்டர்.யூசுஃப் அல் கர்ழாவி ஆப்கானுக்கு நேரடியாக சென்று சிலைகளை உடைக்க வேண்டாம்.அருங்காட்சியகத்தில் கொண்டு செல்லுங்கள் என்று உபதேசித்தார்.

கண்ணதாசன் பாடினார் ' தெய்வம் என்றால் அது தெய்வம், சிலை என்றால் வெறும் சிலைதான் '. பார்வையில்தான் எல்லாம் இருக்கிறது. இன்னும் நான் பாமியான் புத்தச் சிலைகள் உலகத்தின் பாரம்பரியச் சொத்து என்று கூறுவதைக் கூட நான் ஒப்புக்கொள்ளவில்லை. அவை ஆப்கானியச் சொத்துக்கள். அவ்வளவுதான். பல கிராமங்களில் அய்யனார் சிலைகள் இருக்கின்றன. பெரிய குதிரை சிலைக்குப் பக்கத்தில் அய்யனார் வீரமாக சிமிண்டினால் செய்யப்பட்டு நின்று கொண்டிருக்கிறார். அவைகள் கிராமத்துச் சொத்து. அவைகளை உருவாக்குவதோ, உடைப்பதோ, மீண்டும் உருவாக்குவதோ, எல்லாம் அந்த கிராமத்தவரின் உரிமை. உலகச்சொத்து உரிமையாளர்கள் என்று கூறிக்கொண்டு யாரும் அவர்கள் ஊரில் வந்து அவர்களைத் தடுப்பதை விரும்பமாட்டோம். தாலிபான் உடைக்கும் சிலைகள் பெரியவையாக இருக்கலாம், மிகப்பழமையானவையாக இருக்கலாம். இருந்தால் என்ன ? பல கிராமங்களில் அய்யனார் சிலைகள் கவனிப்பாரற்று இடிந்து விழும் நிலையில் உள்ளது. அதுபோல் பவுத்தர்களே இல்லாது கவனிப்பாரற்று பழுதடைந்த சிலைகளை இடிப்பதால் யாருக்கு என்ன நஷ்டம் வந்து விடப் பொகிறது. வேண்டுமானால் அதை விட பெரிய சிலைகளை சீனாவிலோ, ஜப்பானிலோ, தாய்லாந்திலோ கட்டிக் கொள்ளட்டுமே? யார் தடுத்தது?
ஆகவே தாலிபானைத் திட்டவேண்டிய அவசியம் என்ன ? நான் அவர்களது கொள்கைகளை ஒப்புக்கொள்ளவில்லை. ஆனால் அவர்களது கொள்கைகளை வைத்துக்கொள்ள அவர்களுக்கு முழு உரிமை இருக்கிறது. அவை அவர்களது கொள்கைகள். அவர்களது சிலைகள். அவர்களது கலாச்சாரம். அவர்களது வரலாறு. உங்களுக்கு அவர்களது கொள்கைகள் பிடிக்கவில்லை என்றால், நீங்கள் அவர்களைப்போல ஆகாமலிருங்கள்.

enrenrum16 said...

மாஷா அல்லாஹ்... முதன்முறையாக இந்த ஹதீஸ்களைக் கேள்விப்படுகிறேன்... பகிர்ந்தமைக்கு நன்றி. எந்த ஒரு சிறிய விஷயத்தையும் இஸ்லாம் விட்டுவைக்கவில்லை என்பதற்கு இந்த ஹதீஸ்களே சாட்சி.

சிறிய கவனக்குறைவால் உயிரை இழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த அனுதாபங்கள்.இறைவன் நம் அனைவரையும் பாதுகாப்பானாக.

suvanappiriyan said...

சகோ சார்வாகன்!

சிறந்த அறிவியல் பதிவு!

இது சம்பந்தமாக நான் முன்பு இட்ட பதிவு!

'வானங்களையும், பூமியையும் படைத்திருப்பதும் உயிரினங்களை அவ்விரண்டிலும்
பரவச் செய்திருப்பதும் அவனது சான்றுகளில் உள்ளவை.' - குர்ஆன் 42:29

பூமியிலேயே வாழ்வீர்கள்! பூமியிலேயே மரணிப்பீர்கள்! அதிலிருந்தே பிறகு வெளிப் படுத்தப் படுவீர்கள்' - குர்ஆன் 7;175

பூமியில் உங்களை நாம் வாழச் செய்திருக்கிறோம். உங்களுக்கு வசதி வாய்ப்புகளையும் ஏற்படுத்தி இருக்கிறோம். (ஆனால்) குறைவாகவே நன்றி செலுத்துகிறீர்கள். குர்ஆன் 7;10

மேற்கண்ட குர்ஆன் வசனங்களிலிருந்து நமக்கு தெரிய வருவது மனித இனமும் மற்ற பூமியில் உள்ள உயிரினங்களும் பூமியில் மாத்திரமே உள்ளன. வேற்று கிரகங்களிலும் உயிரினங்கள் உள்ளன. ஆனால் அவை பூமியை ஒத்த உயிரினங்களாக இருக்க வாய்ப்பில்லை. அந்த கோள்களின் தட்ப வெப்ப நிலைக்கு ஏற்ப அங்குள்ள உயிர்களின் உடல்வாகு அமைக்கப்பட்டிருக்கும். இனி வருங்காலத்தில் செவ்வாயிலோ, புதனிலோ, வியாழனிலோ உயிரினங்கள் கண்டுபிடிக்கப்பட்டால் அவை பூமியில் உள்ள உயிரினங்களை ஒத்து இருக்காது என்பது மட்டும் நிச்சயமாக தெரிகிறது. நம் காலத்திலேயே அந்த உயிரினங்கள் கண்டு பிடிக்கப்படலாம். இறைவன் நாடினால் நாமும் அந்த உயிரினங்களை பார்க்கலாம்.

http://suvanappiriyan.blogspot.com/2011/04/blog-post_20.html

suvanappiriyan said...

சகோ சார்வாகன்!

//இயற்கைச் சூழலுக்கு ஏற்ற உயிரின‌ங்கள் மட்டுமே வாழும் என்றால் பரிணாமக் கொள்கை [அதுவும் குறிப்பாக டார்வின் தாத்தாவின் இயற்கைத் தேர்வு]வந்து விடும் இது ஹராம்!!!. அதனால் தீர்ப்பை[கருத்தை] மாற்றிச் சொல்லுங்கள்.//

ஹா..ஹா..நீங்கள் சொல்லும் அந்த இயற்கையை அதாவது செவ்வாய், புதன், போன்ற கிரகங்களின் தட்ப வெப்ப நிலை இவ்வாறுதான் இருக்க வேண்டும் என்று நிர்ணயிப்பதே உங்களையும் என்னையும் படைத்த இறைவன் அல்லவா! டார்வின் தாத்தாவுக்கும் ஆத்திகத்துக்கும் கொஞ்சம்தான் வித்தியாசம் உள்ளது. சரியான புரிதலுக்கு வந்து விட்டால் நீங்க நம்ம பக்கம் வந்துடுவீங்க..கோவி கண்ணனும் ஓடி வந்து விடுவார்:-)

suvanappiriyan said...

சலாம் சகோ என்றென்றும் பதினாறு! (பல வருடங்களாகவே வயது பதினாறுதானா! சந்தோஷம்.

//மாஷா அல்லாஹ்... முதன்முறையாக இந்த ஹதீஸ்களைக் கேள்விப்படுகிறேன்... பகிர்ந்தமைக்கு நன்றி. எந்த ஒரு சிறிய விஷயத்தையும் இஸ்லாம் விட்டுவைக்கவில்லை என்பதற்கு இந்த ஹதீஸ்களே சாட்சி.

சிறிய கவனக்குறைவால் உயிரை இழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த அனுதாபங்கள்.இறைவன் நம் அனைவரையும் பாதுகாப்பானாக.//

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!

suvanappiriyan said...

திரு தங்கமணி!

//ஷியா கொள்கைதான் சரி என்று சுன்னிகளை கொல்வதும், சுன்னி கொள்கைதான் சரி என்று ஷியாக்களை கொல்வதும், அஹ்மதியா கொள்கை தவறு என்று அவர்களை இருவரும் கொல்வதும், இவர்கள் எல்லோரும் சேர்ந்து கிறிஸ்துவர்களை கொல்வதும் சரியா? ஏனென்றால், எந்த கொள்கையுமே உறுதியாக சரியான கொள்கை என்று உயிரோடு இருக்கும் யாராலும் நிச்சயமாக சொல்லமுடியாது. எல்லோருமே யூகத்தின் அடிப்படையில்தானே சொல்கிறார்கள்? வெற்று யூகத்தின் அடிப்படையில் இப்படி வன்முறையும் பிரச்சாரமும் தேவையா?//

'இணை கற்பிப்போரில் உம்மிடம் அடைக்கலம் தேடுவோர் இறைவனின் வார்த்தையை செவியுறுவதற்காக அவர்களுக்கு அடைக்கலம் அளிப்பீராக! பின்னர் அவர்களை பாதுகாப்பான இடத்தில் சேர்ப்பீராக! அவர்கள் அறியாதக் கூட்டமாக இருப்பதே காரணம்.'
-குர்ஆன் 9:6

இங்கு மாற்று மதத்தவர்களைக் கூட சிரமப்படுத்தாமல் அவர்களை பத்திரமான இடங்களில் அபயமளிக்க வேண்டும் என்று இறைவன் கட்டளையிடுகிறான். அவர்கள் விளங்காமல் இருக்கிறார்கள் என்று பரிதாபமும் படுகிறான்.

'முஹம்மதே! உமது இறைவன் நாடியிருந்தால் பூமியில் உள்ள அனைவரும் ஒட்டு மொத்தமாக நம்பிக்கை கொண்டிருப்பார்கள். நம்பிக்கை கொண்டவர்களாக ஆவதற்காக மக்களை நீர் நிர்பந்திக்கிறீரா?
-குர்ஆன் 10:99

இங்கு சிலரை இஸ்லாத்தை ஏற்க வற்புறுத்தியமைக்காக முஹமது நபியை இறைவன் கடிந்து கொள்வதை பாருங்கள். எனவே இஸ்லாத்தில் இணைய எவரையும் நிர்பந்திக்கக் கூடாது என்று விளங்குகிறோம்.

'நம்பிக்கை கொண்ட ஆண்களும் பெண்களும் ஒருவர் மற்றவருக்கு உற்ற நண்பர்கள். அவர்கள் நன்மையை ஏவுவார்கள்: தீமையைத் தடுப்பார்கள்.'
-குர்ஆன் 9:71.

இந்த வசனத்தின் மூலம் நல்ல விஷயங்களை எடுத்துச் சொல்வது அனைவருக்கும் கடமை என்பதை விளங்குகிறோம்.

////சில மாணவர்கள் லெக்சர்களைக் கேட்காமலேயே பரீட்சை எழுதி விடுவதும் உண்டு. சில மாணவர்களுக்கு பேராசியர்கள் பாடம்////
//அப்படியென்றால் ”இந்த இறைவன்” எல்லோரையும் சமமாக படைக்கவில்லையா?//

'அறிந்தோரும் அறியாதோரும் சமமாவார்களா? என்று கேட்பீராக! அறிவுடையோர்தான் நல்லறிவு பெறுவார்கள்'
-குர்ஆன் 39:9

'உங்களில் நம்பிக்கைக் கொண்டோருக்கும் கல்வி வழங்கப்பட்டோருக்கும் இறைவன் பல தகுதிகளை உயர்த்துவான்'
-குர்ஆன் 58:11

இந்த வசனங்களின் மூலம் மனிதன் தனது அறிவை மேம்படுத்தி நேர் வழியில் சென்றால் அவர்களின் தகுதியை உயர்த்துவதாக இறைவன் கூறுகிறான். நான் சவுதி வந்த புதிதில் சினிமா பைத்தியமாக இருந்தேன். எதேச்சையாக இணையத்தில் நேசகுமார் என்ற ஒருவர் இஸ்லாத்தை தாறுமாறாக விமரிசித்து பதிவு எழுதியிருந்ததை படித்தேன். அவர் சொல்வது உண்மையா? நாம் பின்பற்றும் மார்க்கம் இப்படித்தான் இருக்கிறதா? என்று தேடலில் இறங்கினேன். நான் மதரஸா சென்று அரபி மற்றும் இஸ்லாத்தை படித்தவன் கிடையாது. ஓய்வு நேரங்களை குர்ஆனை ஆராய்வதில் செலவிட்டேன். பி.ஜெய்னுல்லாபுதீன் என்ற அறிஞரின் அறிமுகமும் கிடைத்தது. பிறகு எனது ஆர்வங்கள் அனைத்தும் சினிமாவில் இருந்து குர்ஆனை நோக்கி பரிணமித்தது. நானாக ஆர்வத்தில் இவற்றை கற்றுக் கொண்டேன். இன்று ஓரளவு விளக்கம் தரும் அளவுக்கு தேர்ச்சி பெற்றுள்ளதற்கு எனது ஆர்வத்தை திருப்பி விட்டதே காரணம். இல்லை என்றால் நானும் சினிமா மோகத்தில் வாழ்க்கையை தொலைத்திருப்பேன்.

சிறந்த குடும்பம்: சிறந்த மனைவி: சிறந்த குழந்தைகள்: சிறந்த வேலை: யாரிடமும் கையேந்தாத அளவுக்கு ஓரளவு பொருளாதாரம்: சொந்த ஊரிலும், வேலை செய்யும் இடத்திலும் சிறந்த மதிப்பு: என்று அமைதியாக வாழ்வு சென்று கொண்டிருக்கிறது. இதை எல்லாம் தேர்ந்தெடுத்துக் கொள்வது நம் கையில்தான் இருக்கிறது. மனிதர்களை இறைவன் படைக்கும் போது சகலரையும் சமமாகவே படைக்கிறான். நல்லவனாகவும் கெட்டவனாகவும் மாறுவது நமது கையில்தான் உள்ளது.