Followers

Tuesday, June 12, 2012

வசதியுள்ளவர்கள் இவருக்கு உதவலாமே!

அன்பின் தமிழ் நெஞ்சங்களே,

ரியாத்தில் வேலைசெய்யும்பொழுது மிகவும் மோசமான நிலையில் பாதிக்கப்பட்ட ஒரு தமிழரின் துயர்துடைக்கும் நோக்கில் இம்மடல் உங்களை வந்தடைகிறது.



மருத்துவ அறிக்கை


திருநெல்வேலி மாவட்டம், மேலப்பாளையத்தைச் சேர்ந்த மெளலவி.ஹபீபுர் ரஹ்மான் தனது ஆலிம் படிப்பை மேலப்பாளையம் உஸ்மானியா அரபிக்கல்லூரியில் முடித்து விட்டு, ஏழ்மை குடும்பச் சூழ்நிலைக் காரணமாக, வேலைக்காக வேண்டி ரியாத் வந்து பணி செய்துக் கொண்டிருந்தார்.

லிப்ஃட்டில் செல்ல தேவைப்படும் கட்டி முடிக்கப்பட்ட ஸ்டீல் ரூம்(அறை) ஒன்றை இணைப்பதற்காக முயற்சித்துக் கொண்டிருக்கையில் லிப்ஃட் ரூமுக்கு மேல் சம்மணம் போட்டு உட்கார்ந்த நிலையில், இணைப்பு வேலை நடந்துக் கொண்டிருந்த சம‌யம், க‌ட்டப்பட்டிருந்த கயிறு தீடீரென்று அறுந்து விட்டதால், மூன்றாம் தளத்திலிருந்து, அதனுடன் இணைக்கப்பட்ட ரோலர்வீலோடு, மிகவும் வேகமாக, நேரடியாக அந்த ஸ்டீல் ரூம் தரை தளத்தை மோதியது. இந்த கடும் அதிர்ச்சியின் எதிர்வினையால் (அதிர்ச்சியில் மேலே நோக்கி சென்ற ஒரு கணத்தில்), ரூமிற்கு மேலை உட்கார்ந்திருந்த‌ சகோதரரின் நடு முதுகெலும்பு பகுதியின், குமிழ் எலும்புகள் ஒன்றோடொன்று மோதி, பெரிய பாதிப்பை ஏற்படுத்தி விட்டன.

அதன் விளைவாக, தலை முதல் வயிற்றுக்கு சற்று மேல்பகுதி வரை உணர்வுகளோடும், மறுபாதியான, அதற்கும் கீழே உணர்வுகளே இல்லாமலும் இருந்த நிலையில், ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு முதலுதவி சிகிச்சைக்கான அத்தியாவசிய அறுவை சிகிச்சை முடிந்தவுடன், ஆஸ்பத்திரி நிர்வாகம் வெளியே அனுப்பி விட்டது.

முழு லிப்ஃட் பணி எடுத்த பெரிய கம்பெனி, "என் கம்பெனியில் வேலை செய்யவில்லை" என்று தட்டிக்கழித்து விட்ட பின்பு, அவர் வேலை பார்த்த கம்பெனியும், "சின்ன கம்பெனி, நாங்கள் என்ன செய்ய முடியும், முடிந்தவரை ஆயிரம் இரண்டாயிரம் தருகிறோம்" என்று சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்.

சிறிய‌ கான்ட்ராக்ட்க‌ள் எடுத்து ந‌ட‌த்தும் க‌ம்பெனியாத‌லால், எந்த‌ பெரிய‌ உத‌வியும் அவ‌ர்க‌ளிட‌மிருந்து கிடைக்க‌வில்லை.

கேர‌ளாவின் கோட்ட‌ய‌த்தில் உள்ள‌ ஒரு ஆஸ்ப‌த்திரியில் அவ‌ரை சேர்த்து, சிகிச்சை அளிக்க‌ அவ‌ரின் உற‌வின‌ர்களும், ந‌ண்ப‌ர்க‌ளும் முய‌ற்சி செய்துக்கொண்டிருக்கிறார்க‌ள்.

ரியாத் பத்தா - ஷிஃபா அல்‍ஜஜீரா ஆஸ்பத்திரி கட்டிடத்தின் மூன்றாவது தளத்தில், ரியாத் சமுதாய சேவகர் ஷிஹாப் மற்றும் கேரள சமூக‌ சேவை அமைப்பின் உதவியுடன் ஒரு அறையில் தங்கியிருந்து, ஊருக்கு போகும் நாளை எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருக்கிறார்.

மிகவும் பின் தங்கிய குடும்பத்தைச் சேர்ந்த சகோதரர் ஹபீப் ரஹ்மான் அவர்களுக்கு மூன்று சகோதரிகள் உள்ளனர். அவ‌ர்க‌ளை திருமணத்திற்காக‌ க‌ரைசேர்க்கும், மிக‌ப்பெரிய‌ பொறுப்புட‌ன் வ‌ந்த‌ அவ‌ருக்கு நேர்ந்த‌ க‌தி, மிக‌வும் க‌வ‌லைப்ப‌ட‌க்கூடிய‌தாக‌ உள்ள‌து.

ஏழ்மையான அந்த சகோதரருக்கு, உத‌வ‌ வேண்டி ந‌ல்லுள்ள‌ம் ப‌டைத்த‌ உங்க‌ளிட‌ம் வேண்டுகோள் விடுக்கிறோம். விமான‌த்தில், ஸ்ட்ரெச்ச‌ர‌ர் வ‌ச‌தியுள்ள‌ சீட்டில் தான் அவ‌ர் த‌ற்போதுள்ள‌ நிலையில் ப‌ய‌ண‌ம் செய்ய‌ முடியும். ஏர் இந்தியா விமான‌த்தில், கொச்சினிற்கு நேர‌டியாக‌த் தான் ப‌ய‌ணித்து, கோட்ட‌ய‌ம் செல்ல‌ திட்ட‌மிட்டிருக்கிறார்க‌ள். இத‌ற்கு நிறைய‌ செல‌வு ஆகும்.

தங்களால் இயன்ற உதவியை imthias@imthias.com என்ற முகவரிக்கு அனுப்பினால், உங்களிடம் நேரடியாக வந்தோ அல்லது வங்கிமாறலோ பெற்று உரியவரிடம் சேர்ப்பித்து அவரின் உறுதிப்பத்திரம் பெற்று அனுப்புகிறோம்.

அவரின் புகைப்படம், வீடியோ மற்றும் மருத்துவ ரிப்போர்ட்டுக்கு ஏற்பாடு செய்துள்ளோம்.

அன்புடன்,
இம்தியாஸ்
செயலாளர் : ரியாத் தமிழ்ச் சங்கம் மற்றும் சவூதி தமிழ்ச் சங்கம்
தலைவர் : தஃபர்ரஜ்
தொலைபேசி - 0540753261

May Allah accept all our good deeds,

The following the correct account details got from his father.

Name: Mohamed Sheikh Farook
Account Number: 1109101037051
Bank:Canara Bank, Melapalayam Branch



InshaAllah I shall handover the money to the concerns.


Best Regards,
Ahmed Imthias
imthias@imthias.com
+966540753261

----------------------------------------

HELP WANTED FROM KIND-HEARTED PEOPLE :

This letter is in regard to one of a Tamilian who was severely injured while working in Riyadh and is seeking all of our help.

Habibur Rahman from Melappalayam Tirunelveli District after completing his alim course from Usmaniyya arabic college , had to go to Riyadh to work and thereby support his family in poverty .

In his work , while he was trying to attach a built steel room onto the elevator , the rope that was tied with the rollerwheel , got cut , and fell right onto the steel room floor base and he was severely injured , his spine bones collapsed . . He wasn't able to feel anything from below his ribs. He was taken to the hospital for first aid treatment ...After a short treatment , the hospital administration sent him out.Don't know why !

The company that was in charge of the entire lift project declined that Habirur Rahman worked for them and they cannot offer help. The sub-contract company that he worked for, gave only Saudi Riyals 1000 or 2000 and said they can't do more. So his family and friends are trying to get him to a hospital in Kottayam in Kerala for further treatment. Meanwhile he is staying in a Riyadh baddha - aljazeera hospital room with the help of Br.Shihab and Kerala association

Br.Habib Rahman has three sisters. His family , being poor ,he took the responsibility of three sisters' wedding and everything .Now he himself is in a very bad condition.

So please if you could help with anything ,Allah SWT will reward you immensely. His family is trying to fly him in Air India ( with wheel chair assistance because he cannot sit ) to Cochin and then to Kottayam. It is definitely going to cost a lot.

So whatever your help would be , send them to imthias@imthias.com. We'll send them to concerned person as soon as possible.


Regards,
Imtiaz
Secretary
Riyadh and Saudi Tamil Sangam
Chairman: Taffaraj
Phone - 0540753261

May Allah accept all our good deeds, Kindly find below the bank details, you may transfer the bank below;

The following is the account details got from his father.

Name: Mohamed Sheikh Farook
Account Number: 1109101037051
Bank:Canara Bank, Melapalayam Branch


InshaAllah I shall handover the money to the concerns.
Best Regards,
Ahmed Imthias
imthias@imthias.com
+966540753261

Contact Person in India:
Mohamed Sheikh Farook : 0091-9952247585 (Patient’s father)
Account Number: 1109191937051,
Canara Bank, Melapalayam, Tirunelveli-627005
Tamil Nadu, INDIA.

டிஸ்கி:

அன்பின் நல்லுள்ளங்களே!

அனைவர் மீதும் இறைவனின் சாந்தியும் சமாதானமும் நிலவட்டுமாக!

பாதிக்கப்பட்ட ஒரு தமிழருக்கு வேண்டி உதவிகோரி மின்னஞ்சல் அனுப்பியதில் பல பகுதிகளிலிருந்தும் அனைவரும் தாராளமாக உதவி செய்ததில் இறைவனின் உதவியால் இதுவரை 13,900ம் ரியாலும் 25,000ம் ரூபாயும் வசூலாகியுள்ளது.

இன்னும் சிலர் எனது வங்கிகணக்கிற்கு அனுப்புவதாக தெரிவித்துள்ளார்கள்.

அவரை இந்தியாவிற்கு அனுப்புவது குறித்த நடவடிக்கைகள்:-

· அவரை அனுப்புவதற்கு ஏற்பாடு செய்திருந்த தினத்தன்று ஏர்-இந்தியா விமானத்தின் வேலைநிறுத்தத்தால் அனுப்ப முடியாமல் போனது.

· சவூதியா விமானத்தில் பன்மடங்குத் தொகை கட்டவேண்டியிருந்ததால் ஆரம்பத்தில் யோசித்தாலும் பின்னர் வேறுவழியின்றி அனுப்பலாம் என நெருங்கி முயற்சி செய்தபொழுது இருக்கைகள் இல்லை. ஸ்டெச்சரில் வைத்து அனுப்ப குறைந்தது 4 இருக்கைகள் மேலும் அவருடன் ஒரு ஆள் செல்ல வேண்டிய நிர்பந்தம்.

· இருப்பினும் பல முயற்சிகள் இருக்கைகளுக்காக நடந்து கொண்டுள்ளது, கிடைத்துவிட்டால் இன்னும் சிலதினங்களில் நேரடியாக கேரளத்தில் உள்ள மருத்துவமனைக்கே அனுப்ப ஏற்பாடுகள் நடக்கிறது.

· அவரின் முதற்கட்ட மருத்துவ செலவிற்கு நீங்கள் செய்த உதவியில் ஒரு லெட்சம் ரூபாய்க்குண்டான காசோலையை அவருடன் அனுப்புகிறோம், மருத்துவம் தொடங்கியவுடன் பாக்கியுள்ள தொகையை கொடுக்க ஏற்பாடு செய்துள்ளோம், மெளலவி. ஹபீப்ரஹ்மான் அவர்களின் வேண்டுகோளின்படி அவருடைய தகப்பனாருக்கு காசோலை வழங்கப்பட்டுள்ளது.

-----------------------------------------

ராகிங் புகாருக்கு தனி இ-மெயில் முகவரி காவல்துறை ஏற்பாடு

ராகிங் புகார்களுக்காக தனி இ-மெயில் முகவரியை காவல்துறை உருவாக்கியுள்ளது.
கலை, அறிவியல் மற்றும் தொழிற்கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை தொடங்கியுள்ளது. கல்லூரிகள் மற்றும் இதர கல்வி நிறுவனங்களில் கேலி செய்தல் மற்றும் பெண்களைக் கேலி செய்தல் ஆகியவற்றைத் தடுப்பதற்கு அனைத்து மாவட்டங்களிலும் தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.
ழ்ஹஞ்ஞ்ண்ய்ஞ்ஸ்ரீர்ம்ல்ப்ஹண்ய்ற்ள்ஃஞ்ம்ஹண்ப்.ஸ்ரீர்ம் என்ற இ-மெயில் முகவரியில் பெறப்படும் புகார்கள் தலைமையிடத்திலிருந்து கண்காணிக்கப்பட்டு சம்பந்தப்பட்ட ஆணையர், காவல் கண்காணிப்பாளர்கள் மூலமாக உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும்.
தமிழ்நாடு காவல்துறையின் இணையதளத்திலும் ராகிங் மற்றும் பெண்களைக் கேலி செய்தல் தொடர்பான புகார்களைத் தெரிவிக்கலாம். புகார் தெரிவிப்பவர்கள் குறித்த விவரங்கள் வெளியிடப்படாது.
இந்தப் புகார்களைப் பெறுவதற்காக காவல் கண்காணிப்பாளர்கள், ஆணையர்களுக்கு தனி செல்போன் எண்கள் அளிக்கப்படும். இதுதொடர்பான விழிப்புணர்வை அதிகரிக்க கல்வி நிறுவனங்களின் தலைவர்கள்,பணியாளர்கள், மாணவர்களுடன் போலீஸ் அதிகாரிகள் கலந்துரையாடுவர்.
கல்வி நிலையங்களில் ராகிங்குக்கு எதிரான குழுக்கள் மற்றும் படைகளை அமைக்க வேண்டும் என்று உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. இந்தக் குழுக்களுடன் அதிகாரிகள் தொடர்பு வைத்துக்கொள்வர்.
ஒவ்வொரு கல்வி நிலையத்திலும் காவல்துறை சார்பில் புகார் பெட்டிகள் வைக்கப்பட வேண்டும். எஸ்.எம்.எஸ். மூலம் தகவல் அனுப்பினாலும் நடவடிக்கை எடுக்கப்படும்.
ராகிங், பெண்களைக் கேலி செய்தல் போன்ற குற்றங்களுக்கு கடுமையான தண்டனை அளிக்கப்படும் என்ற விழிப்புணர்வை கல்வி நிறுவனங்கள் மாணவர்களிடம் ஏற்படுத்த வேண்டும் என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

-------------------------------------------


மின் திருட்டு நடக்கிறதா : தகவல் தர புதிய ஏற்பாடு

மின் திருட்டு குறித்த ரகசிய தகவல்கள் பாதுகாக்கப்பட்டு, மின் திருட்டுகள் கண்டுபிடிக்கப்படும் என, தமிழக மின் வாரியம் அறிவித்துள்ளது. தமிழக மின் வாரியம், 53 ஆயிரம் கோடி ரூபாய் கடனில் தவிக்கிறது. கடன் நிலைமை மேலும் அதிகரிக்காமல் இருக்க, கூடுதல் நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன. தமிழக மின் துறை சார்பில், மின் திருட்டை தடுக்க, 17 பறக்கும் படைகளும், 40க்கும் மேற்பட்ட முன்னாள் ராணுவ வீரர்களை கொண்ட மின்சார பாதுகாப்பு படைகளும், தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றன.

சிபாரிசு ஏற்கப்படாது : இந்த நிலையில், மின் திருட்டு தொடர்பாக, தமிழக மின் வாரியம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: மின் வாரிய அமலாக்கப் பிரிவினர் மற்றும் பறக்கும் படையினர், தீவிர ஆய்வு மேற்கொண்டு, 8,563 மின் திருட்டுகளை கண்டுபிடித்து உள்ளனர். இதில், சமரசத் தொகை மற்றும் இழப்பீட்டுத் தொகையாக, 60.66 கோடி ரூபாய் வசூலிக்கப்பட்டு உள்ளது. முன்னாள் ராணுவ வீரர்களை கொண்ட குழுக்கள், கடந்த மார்ச் வரை, 8,254 மின் திருட்டுகளை கண்டுபிடித்து, 19.74 கோடி ரூபாய் அபராதத் தொகை வசூலிக்கப்பட்டுள்ளது. கடந்த 2011-12ம் ஆண்டில் விற்பனை செய்யப்பட்ட மின்சார யூனிட்டுகளை கணக்கீடு செய்து, கண்டுபிடிக்கப்பட்ட மின் திருட்டுகளின் இழப்பீடு யூனிட் அளவு, 0.076 சதவீதமாக உள்ளது. மின் திருட்டு கண்டுபிடிக்கப்பட்டால், அதை தவிர்ப்பதற்காக அமலாக்கப் பிரிவினர், எந்தவித சிபாரிசையும் ஏற்றுக் கொள்வதில்லை. மின் திருட்டு சம்பந்தப்பட்ட ரகசிய தகவல்கள் பாதுகாக்கப்பட்டு, மின் திருட்டுகள் கண்டுபிடிக்கப்படுகின்றன. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

தகவலுக்கு... : மின் திருட்டு குறித்து, பொதுமக்கள் புகார் தர விரும்பினால், தகவல் கொடுக்க வேண்டிய தொலைபேசி எண்கள்: பறக்கும் படை: 94440 18955, மேற்பார்வை பொறியாளர் (பறக்கும் படை): 044-2852 0928, 94444 06928. செயற்பொறியாளர்: 94458 56455, உதவி செயற்பொறியாளர்கள்: 94458 56456, 94458 56460

9 comments:

தஞ்சை தேவா said...

Help to him plz

suvanappiriyan said...

சகோ தஞ்சை தேவா!

//Help to him plz//

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!

suvanappiriyan said...

திருநெல்வேலி மாவட்டம், மேலப்பாளையத்தைச் சேர்ந்த மெளலவி. ஹபீபுர் ரஹ்மான் ரியாத் வந்து ஒரு சிறு நிறுவனத்தில் லிஃப்ட் டெக்னீஷியனாக பணி புரிந்து வந்த இந்த சகோதரர் – கடந்த மாதம், லிஃப்ட் அறை ஒன்றை லிஃப்டோடு இணைக்கும் பணியில், அறைக்கு மேலே அமர்ந்து வேலை செய்து கொண்டிருந்தபோது, இணைக்கப்பட்ட கயிறு இணைப்பு அறுந்து, கீழ் தளத்தில் மோதியதால், மேலே அமர்ந்திருந்த அவரது முதுகெலும்பு பகுதியின் குமிழ் எலும்புகள் நொறுங்கி இடுப்புக்குக் கீழே உணர்வற்று போய் விட்டது.
அவரது உறவினர்கள் மூலம் உடனடியாக, “நேஷனல் கார்டு மருத்துவமனையில்” அனுமதிக்கப்பட்ட அவருக்கு, அவசர சிறப்பு அறுவை சிகிச்சையும் செய்யப்பட்டது.

தகவல் அறிந்தவுடன் ரியாத் மண்டல தலைவர் சகோ. ஃபெய்ஸல் மற்றும் ரியாத் மண்டல செயலாளர் சகோ. ஹாஜா மைதீன் ஆகியோர் மருத்துவமனை சென்று சந்தித்து ஆறுதல் கூறி, தக்க ஆலோசனைகள் கூறினர் .

தொடர் சிகிச்சைக்காக பத்தாவில் உள்ள ஷிஃபா அல் ஜஸீரா மருத்துமனையில் தங்கி உள்ள அவரை மண்டல துணைச் செயலாளர் சகோ. நூருல் அமீனும் சந்தித்தார்.

நிறுவனத்தினரிடமிருந்து ஈடு பெறுதல், மருத்துவ ஆலோசனை முதலானவை வழங்கப்பட்டன. இன்னும் குணமடையாத காரணத்தால், விரைவில் நாடு திரும்பி சிகிச்சையை தொடர வேண்டியுள்ளதால், அவருடைய மருத்துவ உதவிக்காக ரூ 20,000 மதிப்பிலான சவூதி ரியால்களை ஹபீபுர் ரஹ்மானின் உறவினரினர் வசம், ரியாத் TNTJ மண்டல அணிச் செயலாளர் சகோ. மோமீன் அவர்கள் கடந்த 08.06.2012 அன்று ரியாத் மர்கஸில் வழங்கினார்.

மேலும், சகோ. ஹபீபுர் ரஹ்மான் மருத்துவமனையில் பயனுள்ள வகையில் நேரத்தை கழிப்பதற்காக, TNTJ அறிஞர்களின் ஆய்வு புத்தகங்கள் வழங்கப்பட்டன.

-http://www.tntj.net/90694.html

ஹுஸைனம்மா said...

The following is the correct account details got from his father.

Name: Mohamed Sheikh Farook
Account Number: 1109101037051
Bank:Canara Bank, Melapalayam Branch

suvanappiriyan said...

சலாம் சகோ!

//The following is the correct account details got from his father.

Name: Mohamed Sheikh Farook
Account Number: 1109101037051
Bank:Canara Bank, Melapalayam Branch//

வருகைக்கும் பகிர்வுக்கும் நன்றி!

கோவி.கண்ணன் said...

மனிதவளத்துறை பொறுப்பாக இல்லாததால் தான் இது போன்று பாதிக்கப்படுபவர்களுக்கு போதிய இழப்பீடு கிடைப்பதில்லை, சிங்கப்பூருக்கு ஒப்பந்த வேலைக்கு வரும் ஒவ்வொருவருக்கும் நிறுவனம் சார்பில் 5000 வெள்ளிகள் அரசுக்கு கட்டுவார்கள், எதேனும் விபத்து பாதிக்கப்பட்டவர் வாழ்நாள் முழுவதும் உழைக்க முடியாது என்ற நிலையில் 1 லட்சம் வெள்ளிவரை வெளிநாட்டு ஊழியருக்கு நட்ட ஈடு கொத்து அனுப்புவார்கள்.

ஹூம், அதற்கெல்லாம் நேர்மையான நிறுவனங்களும், ஊழியர்கள் மீது அக்கரைக் கொண்ட அரசும் இருக்க வேண்டுமே அங்கே.

suvanappiriyan said...

திரு கோவி கண்ணன்!

//ஹூம், அதற்கெல்லாம் நேர்மையான நிறுவனங்களும், ஊழியர்கள் மீது அக்கரைக் கொண்ட அரசும் இருக்க வேண்டுமே அங்கே. //

நமது சென்னை நகரை விட சிறிதே பெரிதான சிங்கப்பூரையும் சவுதியையும் எப்படி ஒப்பிடுகிறீர்கள்? சிறிய நாடுகளில் அனைவரையும் சட்டத்தின் பிடியில் கொண்டு வருவது சுலபமான காரியமே!

மேலும் ஒப்பந்த அடிப்படையில் சிறு சிறு கம்பெனிகளை வெளி நாட்டவர்களே நடத்துவது இங்கு சர்வ சாதாரணம். அவ்வாறு செயல்படும்போது எதிர்பாராத விபத்துகளில் முறையான இழப்பீடு கிடைப்பதில் சிறிய கம்பெனிகள் அவ்வளவாக ஆர்வம் காட்டுவதில்லை. கொடுப்பதற்கு அவர்களிடமும் ஏதும் இருப்பதில்லை. நாம் வேலையில் சேரும்போதே அனைத்தையும் உறுதி செய்து கொண்டு சேர்ந்தால் இது போன்ற இழப்புகளை சந்திக்க நேராது.

Anonymous said...

ஹிப்னோடிசம் மூலம் பெண் வசிய வழக்கு; நீதிமன்றில் சரணடைந்தார் நித்தியானந்தா

http://tamilmirror.lk/ஏனையவை/pirapalankal/42737-2012-06-13-10-53-13.html

- வள்ளுவன்

கோவி.கண்ணன் said...

//நமது சென்னை நகரை விட சிறிதே பெரிதான சிங்கப்பூரையும் சவுதியையும் எப்படி ஒப்பிடுகிறீர்கள்? சிறிய நாடுகளில் அனைவரையும் சட்டத்தின் பிடியில் கொண்டு வருவது சுலபமான காரியமே!//

இது உதவி கேட்கும் பதிவு என்பதால் வளர்த்த விரும்பவில்லை, சவுதியில் நடைபெறுவது அல்லாவின் நேரடி ஆட்சி என்றும் தேனாறு பாலாறு சவுதியில் ஓடுவதாக எழுதும் நீங்கள் இப்படி சொல்லி இருக்கும் பதில் உங்களுக்கே ஏற்பாக இருந்தால் சரி தான்.

மற்ற நாடுகளுக்கு எந்த வழிகாட்டலும் இல்லை, அவர்கள் அதை பின்பற்றுவது இல்லை என்று நம்பும் நீங்கள், சவுதியில் என்ன தான் சிறப்பாக இருக்கிறது என்றாவது எண்ணிப்பார்கலாம், நீங்கள் உட்பட எந்த ஒரு வெளிநாட்டுக்காரருக்கும் எந்த ஒரு பாதுகாப்பும் சவுதியில் இல்லாத சூழலில் நான் அதை சிங்கப்பூருடன் ஒப்பிட்டதாக நினைப்பது கொஞ்சமும் அபத்தமாக இல்லையா உங்களுக்கு ?