Followers

Thursday, June 28, 2012

பாலஸ்தீனத்திற்கு ஓட்டளித்து வெற்றி பெற செய்வோம்!

பாலஸ்தீனத்திற்கு ஓட்டளித்து வெற்றி பெற செய்வோம்!

இஸ்லாமியர்கள் போல் உலகெங்கும் உள்ள கிறித்தவர்க‌ளும் பெத்லகேம் புனிதப் பயணம் செல்வது கடந்த சில வருடங்களில் அதிகரித்து வருகிறது.அப்படி செல்பவர்கள் இயேசு பிறந்த பெத்லகேம்,வசித்த ,பயணம் செய்த பல பகுதிகள் இபோதைய ஜோர்டான், பாலஸ்தின மேற்கு கரைகளில் வருவதால் இபபகுதிகளை சுற்றிப் பார்க்கின்றனர்.

இதில் இயேசு பிறந்தாக கூறப்படும் நேட்டிவிட்டி சர்ச்,ஒரு குகையாக இருந்து ஆலயமாகப்பட்டது விக்கிபிடியா குறிப்புகளில் இருந்து அறிய முடிகிறது.இது ரோம பேரரசன் கான்ஸ்டன்டைனால் பொ.ஆ 327ல் தொடங்கி பொ.ஆ 333 ல் கட்டி முடிக்கப்பட்டது.இந்த ஆலயம் இல்லாமல் இன்னும் பல பழமையான் கிறித்தவ தேவாலயங்கள் பெதலகேம்,பாலஸ்தீனத்தில் உண்டு.

http://en.wikipedia.org/wiki/Church_of_the_Nativity

இபோது இந்த ஆலயம் உள்ளிட்ட சில இடங்களை யுனெஸ்கோ அமைப்பின் உலகின் தொன்மையான இடங்கள் என அங்கீகாரம் பெற பாலஸ்தீன அரசு முயற்சிக்கிறது.இதற்கான வாக்கு இரஷ்யாவில் பீட்டர்ஸ்பர்க் நகரில் நாளை 29 ஜூன் நடக்கிறது.

இதில் பாலஸ்தீனர்களுக்கு இரு விடயங்கள் இலாபம்

1. யுனஸ்கோவின் அங்கீகாரம் இன்னும் அதிக சுற்றுலா பயணிகள்,அது சார்ந்த வேலை வாய்ப்பு,பொருளாதாரம் வலுப்படும்.

2.இந்த ஆலயத்தை நகரை சுற்றி ஆக்கிரமிப்பு அமைக்க முயலும் இஸ்ரேலை தடுத்து விடலாம்.


பாலஸ்தினர்களில் கிறித்தவர்கள் பலர் உண்டு.இவர்கள் 10% இஸ்ரேலிலும்,4% சதவீதம் மேற்கு கரையிலும்,1% காசா பகுதியிலும் வாழ்கின்றனர்.பால்ஸ்தீன கிறித்த‌வ ,இஸ்லாமியர்களிடையே மண உறவு மிக இயல்பான ஒன்று.இந்த ஆலயத்தில் நடை பெறும் கிறிஸ்துமஸ் விழாவில் அனைவரும் பங்கு கொள்வர்.

http://en.wikipedia.org/wiki/Palestinian_Christians

நன்றி: http://aatralarasau.blogspot.com/2012/06/blog-post_28.html



10 comments:

.RAHMANFAYED said...

Assalam alikum brother,
thanks for sharing this news..
I add my vote for our society,
ur brother
rahmanfayed./...
Rko.

.RAHMANFAYED said...
This comment has been removed by the author.
.RAHMANFAYED said...

Assalam alikum brother,
thanks for share important news.
I add my vote for my society.
Ur brother
rahmanfayed./...
Rko.

suvanappiriyan said...

திரு தங்கமணி!

//2) மெக்கா தர்ஹா அல்ல என்று அவர் சொன்னதற்கு, மெக்காவில் இஸ்மாயீலும் அவரது தாயாரும அடக்கம் செய்யப்பட்டிருப்பதை இஸ்லாமிய பக்கங்களே சொல்கின்றன என்றால், மெக்கா தர்ஹா தானே? அதற்கு பதில் எங்கே?//

இஸ்லாமிய பக்கங்கள் எல்லாம் இஸ்லாமிய வரலாறு ஆகி விடாது. ஒன்று குர்ஆன் சொல்லியிருக்க வேண்டும். அல்லது நபியின் ஹதீதுகள் ஆதாரபூர்வமானது நமக்கு கிடைக்க வேண்டும். இவைதான் இஸ்லாமிய வரலாறுகள் ஆக முடியும்.

உங்கள் வாதப்படி அது நபி இஸ்மாயில் அவர்களின் தர்ஹாவாகவே இருக்கட்டுமே! அதற்கென்ன இப்போ! முகமது நபிக்கே தர்ஹா கட்டியாலும் அதை இடிக்க சொல்கிறது இஸ்லாம். எந்த நபிக்கும் தர்ஹா கட்ட சொல்லி இஸ்லாம் சொல்லவில்லை. நபிகளை கண்ணியப்படுத்தவது அவர்கள் சொன்ன நல்லவைகளை கடைபிடிப்பதால் மட்டுமே! அவருக்கு தர்ஹா எடுத்து அவர் சொன்னதுக்கு மாற்றமாக வணக்க வழிபாடுகள் அமைத்துக் கொள்வது அல்ல.

//3) 33:33. நீங்கள் உங்கள் வீடுகளிலேயே தங்கியிருங்கள்; முன்னர் அஞ்ஞான காலத்தில் (பெண்கள்) திரிந்து கொண்டிருந்ததைப் போல் நீங்கள் திரியாதீர்கள்; என்று குரானே சொல்லும்போது, முனாவர் அவர்கள் சொல்வது போல ஹதீஸை வைத்து குரானை பொய் என்று சொல்லுவது ஏன்?//

யார் பொய் என்று சொன்னது? முனாவர் என்ற இஸ்லாமிய பெயரில் உளறும் ஒருவரின் கூற்றை நீங்கள் எப்படி ஆதாரமாக்குகிறீர்கள்?

'நீங்கள் பெண்களில் எவரையும் போன்றோர் அல்லர்" '

என்ற வசனத்தை இருவரும் வசதியாக மறைத்து விட்டு பேசுவது ஏன்? அதே போல் மற்ற பெண்கள் மறுமணம் செய்து கொள்ளலாம். நபிகளின் மனைவியர் முஸ்லிம்களான அனைவருக்கும் அன்னை ஆதலால் அவர்கள் மறுமணம் செய்து கொள்ள முடியாது. இப்படி விசேஷ கட்டளைகள் அவர்களுக்கு உண்டு..

அந்த வசனத்தை தொடர்ந்து பொதுவாக முஸ்லிமான ஆண் பெண்களுக்கு இறைவன் கூறும் கட்டளையையும் பாருங்கள்.

'"முஸ்லிமான ஆண்களும் பெண்களும், நம்பிக்கை கொண்ட ஆண்களும் பெண்களும், கட்டுப்பட்டு நடக்கும் ஆண்களும் பெண்களும், உண்மை பேசும் ஆண்களும் பெண்களும், பொறுமையை மேற்கொள்ளும் ஆண்களும் பெண்களும், அடக்கமாக நடக்கும் ஆண்களும் பெண்களும், தர்மம் செய்யும் ஆண்களும் பெண்களும், நோன்பு நோற்கும் ஆண்களும் பெண்களும், தமது கற்பைக் காத்துக் கொள்ளும் ஆண்களும் பெண்களும், இறைவனை அதிகம் நினைக்கும் ஆண்களும் பெண்களும், ஆகிய அவர்களுக்கு இறைவன் மன்னிப்பையும் மகத்தான கூலியையும் தயாரித்துள்ளான்".'
-குர்ஆன் 33:35

இந்த வசனத்தில் உலகில் உள்ள அனைத்து முஸ்லிமான ஆண் பெண்கள் எப்படி நடந்து கொள்ள வேண்டும்: எப்படி நடந்து கொண்டால் சொர்க்கத்தை அடையலாம் என்று அழகாக சொல்லியிருக்கிறான் இறைவன். வசனம் 33:32 ல் சொன்ன கட்டளை நபி அவர்களின் மனைவிக்கு: வசனம் 33:35 ல் இறைவன் விடும் கட்டளை உலக முஸ்லிம் ஆண் பெண் அனைவருக்குமானது. எனவே இதில் குழப்பமோ பொய்யோ எதுவும் இல்லை.

எனவே முனாவர் என்ற போலி பெயரில் எழுதுபவரே இறைவனுக்கு பயந்து உண்மையான பெயரில் எழுதவும்..

அடுத்து பெண்களுக்கு எந்த உரிமை இருக்கிறது என்பதை விளக்கும் குர்ஆன் வசனங்களையும் பார்ப்போம்...

'அவர்கள் உங்களுக்கு ஆடை: நீங்கள் அவர்களுக்கு ஆடை'
-குர்ஆன் 2:187

'பெண்களுக்கு கடமைகள் இருப்பது போல அவர்களுக்கு உரிமைகளும் சிறந்த முறையில் உள்ளன.'
-குர்ஆன் 2:228

'சிலரை மற்றும் சிலரை விட இறைவன் மேன்மைபடுத்தியுள்ளதில் பேராசை கொள்ளாதீர்கள். ஆண்களுக்கு அவர்கள் பாடுபட்டதில் பங்குண்டு: பெண்களுக்கு அவர்கள் பாடுபட்டதில் பங்குண்டு.
குர்ஆன் 4:32

இந்த வசனங்களெல்லாம் பெண்கள் அடிமைகள் அல்ல.அவர்களுக்கும் உரிமைகள் உண்டு என்பதை விளக்குகின்றன.

Anonymous said...

நல்ல விடயங்களை வரவேற்கலாம். பாலஸ்தீனியர்கள் பொருளாதார சுதந்திரம் அடைவதில் மகிழ்ச்சியே !!!

காலப் போக்கில் கிறித்தவ வழிப்பாட்டுத் தளங்களையும் மசூதிகளாக மாற்றமல் இருந்தால் சரி !

suvanappiriyan said...

இக்பால் செல்வன்!

//காலப் போக்கில் கிறித்தவ வழிப்பாட்டுத் தளங்களையும் மசூதிகளாக மாற்றமல் இருந்தால் சரி !//

பாலஸ்தீனியர்களைப் பொறுத்த வரை யார் முஸ்லிம் யார் கிறித்தவர் என்று அடையாளம் காண்பது அரிது. இருவருமே தொப்பி அணிய மாட்டார். இருவருக்குமே கர்த்தர் அல்லாஹ் என்ற பொதுப் பெயரே. எனவே இங்கு உள்நாட்டு பிரச்னை வர வாய்ப்பு இல்லை.

suvanappiriyan said...

வஅலைக்கும் சலாம் சகோ பைஜ் ரஹ்மான்!

//Assalam alikum brother,
thanks for sharing this news..
I add my vote for our society,
ur brother
rahmanfayed./...//

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!

khaleel said...

உடனடியாக ஒட்டு அளித்து விட்டேன் பாலஸ்தீனத்திற்கு.

suvanappiriyan said...

//உடனடியாக ஒட்டு அளித்து விட்டேன் பாலஸ்தீனத்திற்கு.//

நன்றி சகோ கலீல்.

Anonymous said...

Google not conducting this poll