Followers

Showing posts with label விவாதம். Show all posts
Showing posts with label விவாதம். Show all posts

Friday, February 02, 2018

நண்பர்களோடு நடந்த விவாதத்தை இப்பதிவில் பார்போமா?




நண்பர்களோடு நடந்த விவாதத்தை இப்பதிவில் பார்போமா?

சென்ற வியாழக்கிழமை எங்கள் ஊர் வாட்ஸ் அப் குழுமத்தில் இயக்கங்கள் சம்பந்தமாக நடந்த ஒரு விவாதத்தை சில மாற்றங்களோடு இங்கு பதிகிறேன். பதிவு நீண்டதாக இருந்தாலும்  படித்துப் பாருங்கள்.... சுவாரஸ்யமாக இருக்கும். :-)

------------------------------------------------------------------------------------

-நண்பரின் கேள்வி :

என் அன்பு இஸ்லாமிய இளைஞர்களே ...

தயவு செய்து இயக்கம் அமைப்பு என்று எதிலும் இனைந்து உங்களின் வாழ்க்கையை
தொலைத்துக்கொள்ளாதீர்கள் இயங்கங்களால் உங்களுக்கு எந்த விதத்தியிலும் நம்மைகள் கிடைக்காது
உங்களால் வேண்டும் என்றால் இயக்கங்களுக்கு நன்மை இருக்கிறது
இயக்கங்களின் சொல் கேட்டுத்தான்
 நம் சகோதரர் இன்றும் சிறையில் இருக்கிறார்கள் சிறையில் இருக்கும் சகோதரர்கள் யாரும் தன் சுய லாப்பத்துக்காக சிறையில் இல்லை
என்பதே உண்மை இயக்கங்களின் சொல் கேட்டு நம்மை எப்படியும் வெளியில் எடுத்து விடுவார்கள் என்ற நம்பிக்கையில் இருந்தவர்கள் தான் கடைசியில் என்ன நடந்தது மற்றவர்களை காட்டி கொடுத்து விட்டு போலிஸ் பாதுகாப்பில் சொகுசு வாழ்க்கை வாழ்கிறார்கள் இயக்கத்த தலைவர்கள்
சிறையில் இருக்கும் நம் சகோதர்கள் போதும் இனியும் இந்த நாதாரிகளுக்கு பின்னால் சொல்லாதீர்கள்
நல்ல முறையில் படித்து நல்ல.வேலைகளை
தேடிக்கு கொள்ளுங்கள் அதுவே உங்களின் வாழ்க்கையையும் உங்களின் குடும்ப வாழ்வையும்  உயர்த்தும்

விழித்துக் கொள்ளுங்க




இஸ்லாமிய இளைஞர்களே!

சினிமா, பாட்டு, தாளம் என்று எனது வாழ்வு சென்று கொண்டிருந்தது. அறுபது அடி பாவாக்கள், ஆலிம்கள் செய்த குளறுபடிகள், மவுலூது கிதாபு, நூர் மசாலா, தர்ஹா வழிபாடுகள் போன்றவற்றால் இஸ்லாத்தை வெறுத்து ஒதுங்க ஆரம்பித்தேன்.

அந்த நேரத்தில்தான் பிஜே அவர்களின் 10 ஆடியோ கேசட்டுகள் கமால் பாய் மூலமாக 1986 ஆம ஆண்டு எனக்கு கிடைக்கப் பெற்றது. எனது நண்பர்கள் மூவரும் இஸ்லாத்தை விட்டு வெளியேறி விட்டதாகவும் இந்த கேசட்டுகளை கேளுங்கள் என்றும் கொடுத்து விட்டு சென்றார். வேலை முடிந்து இரவு படுக்கைக்கு போகும் முன் தினம் ஒரு கேசட் கேட்க ஆரம்பித்தேன். இறைவன் எனது வாழ்வை அந்த ஆடியோ கேசட்டுகள் மூலம் புரட்டிப் போட்டான். அதன் பின் குர்ஆன் தமிழாக்கம் தினம் ஒரு பக்கம் படிக்க ஆரம்பித்தேன். அதன் பிறகு குர்ஆன் என்னோடு பேச ஆரம்பித்தது. என்னுள் இருந்த பல கெட்ட எண்ணங்கள் ஒவ்வொன்றாக விலக ஆரம்பித்தது. இன்று இறைவனின் கிருபையால் தெளிந்த மனதோடு நிம்மதியான வாழ்க்கையோடு ஏகத்துவ பாதையில் காலத்தை கழித்துக் கொண்டுள்ளேன். இயக்கங்களினால் வழி கெட்டவர்களும் உண்டு: வாழ்வை சீராக்கியவர்களும் உண்டு.

எனவே சிறந்த தன்னலமற்ற இயக்கங்களை தேர்ந்தெடுப்பது உங்களின் கைகளில் இருக்கிறது. இம்மைக்கும் மறுமைக்கும் சிறப்பான முறையில் எந்த இயக்கம் செயல்படுகிறதோ குர்ஆனுக்கும் நபி மொழிகளுக்கும் மாற்றமில்லாமல் எந்த அமைப்பு செயல்படுகிறதோ அதனை தேர்வு செய்து உங்கள் வாழ்வை வளமாக்கிக் கொள்ளுங்கள்.  இறைவன் நம் அனைவரையும் நேர் வழியில் செலுத்துவானாக!

-நண்பரின் கேள்வி :
கேள்வி ...கேட்பவர் ஒரு சிறுமி .....பதில் பிஜே ....
"சுன்னத் என்றால் என்ன?????
"""செய்தால் நல்லது செய்யாவிட்டாலும் பாவமில்லை உதாரணமாக தொப்பி அணிவது ஆண்கள் குறிகளை வெட்டிக் கொள்வது ..........,இப்படியாக சென்றபதில் .....இஸ்லாமியர்கள் சுன்னத் செய்வதால் முன் தோல் நீக்கப்பட்ட  ஆண் குறி கைலியில் உரசி உரசி சிறிது உணர்ச்சியற்று இருக்கும் அதனால் அவர்கள் உறவு நீண்டநேரம் கொள்வார்கள் என்று முடிகிறது???????
கேள்வி கேட்டவர் நிலை என்னவாகும் அறிவுக்கு பொருத்தமான பதிலா!!!!!
இம்மை மறுமை???!!? இம்மை வாழ்வுக்கு ததஜ செய்ததென்ன????? முதலில் ஒற்றுமை அதை சீர்குலைத்தது எப்போதும் பட்டி மன்றத்தின் பக்கம் கவனத்தை திருப்பி பொன்னான நேரத்தை கால விரயம் செய்தது குழப்பங்களால் சூழ்ந்த ஜமாத்துகள் போலிஸ் கோர்ட் என அலைய வைத்தது குடும்பங்கள் உறவுகள் தகர்ந்தன எந்நேரமும் இதே சிந்தனையில் நான் தான் Isoஅக் மார்க் முஸ்லீம் என எல்லோருக்கும் காபிர் பட்டம் கொடுத்தது ....ஆக அரசியல் ஆரோக்கியம் அரசு வேலை வாய்ப்பு என்ற எந்த கொள்கையும்மற்று வானத்துக்கும் மேலே பூமிக்கும் கிழே என பேசிப்பேசி நம்முடைய நிலை??????!!??



//இம்மை மறுமை???!!? இம்மை வாழ்வுக்கு ததஜ செய்ததென்ன?????//

இஸ்லாம் ஒரு அரேபிய மார்க்கம். அரேபியர்களுக்கு சொந்தமான ஒரு மார்க்கம். தமிழகத்தில் உள்ள முஸ்லிம்களெல்லாம் அரபு நாட்டு இறக்குமதி என்ற எண்ணமே பல இந்து நண்பர்களுக்கு இருந்தது.

கடந்த 25 ஆணடுகளாக பட்டி தொட்டிகளெல்லாம் 'இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம்' என்ற நிகழ்ச்சியை நடத்தி அங்கு இந்து நண்பர்களையும், கிறித்தவ நண்பர்களையும் அழைத்து வந்து கேள்வி கேட்க வைத்தோம். ஆர்வமாக பங்கு பெற்று பல கேள்விகளை வைத்தார்கள். அவர்கள் வைத்த அத்தனை கேள்விகளுக்கும் சளிக்காமல் தவ்ஹீத் ஜமாத் சார்பாக பதில்கள் வைக்கப்பட்டது. லட்சக்கணக்கான மக்கள் இந்நிகழ்ச்சியை தொலைக் காட்சியிலும் பார்த்தனர். இஸ்லாத்தைப் பற்றி அவர்களுக்கிருந்த பயம், சந்தேகம் அனைத்தும் தீர்க்கப்பட்டது. இன்று சாரை சாரையாக அவர்களாகவே விரும்பி இஸ்லாத்தை ஏற்ற வண்ணம் உள்ளனர்.

ஒரு முறை நான் எங்கள் ஊர் பள்ளியில் மாலை நேர தொழுகையை முடித்து விட்டு வெளியேறும் போது ஒரு 30 வயது மதிக்கத்தக்க எங்கள் ஊர் இந்து இளைஞரும், அவரது மனைவி மற்றும் கைக்குழந்தையோடு ஒரு ஓரத்தில் நின்று கொண்டிருந்தனர். 'என்ன விஷயம்' என்று வினவப்பட்டது. 'நாங்கள் குடும்பத்தோடு இஸ்லாத்தை ஏற்க விரும்புகிறோம்' என்றார் அந்த இளைஞர். ஊர் பெரியவர் முன் வந்து 'தம்பி.... ஏற்கெனவே ராமகோபாலனால் எங்கள் ஊரில் சிறிய பிரச்னை. எனவே நீ வெளியூரில் சென்று மாறிக் கொள்ளப்பா' என்றார். அந்த நபரோ 'நான் இஸ்லாத்தை விளங்கி வந்துள்ளேன். ஏன் இப்படி பயப்படுகிறீர்கள். எனது சுய விருப்பத்தில் வருகிறேன் என்று எழுதி கொடுக்கிறேன்' என்றார்.

இருந்தும் ஊர் பெரிய மனிதர்கள் ஒத்துக் கொள்ளவில்லை. எனக்கும் அந்த நேரத்தில் 25 வயதுதான். என்னாலும் அந்த இந்து நபருக்கு எந்த உதவியும் செய்ய முடியவில்லை. பிறகு அவர் தஞ்சை தவ்ஹீத் ஜமாத்தை தொடர்பு கொண்டு அவர்கள் மூலம் சென்னை சென்று முறையாக இஸ்லாத்தை கற்று இன்று சிறந்த முஸ்லிமாக வாழ்ந்து வருகிறார். சொந்த ஊரான எங்கள் ஊருக்கு தனது தாய் தந்தையரை பார்க்க விடுமுறையில் வரும் போது அவரை பார்த்து ஆச்சரியப்படுவேன். என்ன ஒரு மாற்றம். எல்லா புகழும் இறைவனுக்கே!

https://www.youtube.com/watch?v=3cSlcHqIruo


-நண்பரின் கேள்வி :
சிரிப்த்தான் வருகிறது!!!! இஸ்லாம் ஒரு இனிய மார்க்கம்????? பின் ஏன் அது காபிர்களின் பள்ளிவாசல் அங்கே தொழாதீர்கள் என்று பயான் செய்யப்படுகிறது??? ஏதோ 25 வருடங்களுக்கு முன்பு வரை இஸ்லாம் என்றால் பயங்கர சந்தேகம் இருந்ததா??? பயமிருந்ததா??? யாருமே இஸ்லாத்தைப் பற்றி சொல்லவேயில்லையா???? இஸ்லாம் ஒரு இனிய மார்கமென்று சொல்லித்தான் தெரிய வேண்டுமா?????
[6:28 PM, 1/31/2018] +60 14-314 8564: முறையாக இஸ்லாத்தை கற்று!!!!!! ததஜ வை தவிர யாரும் முறையான முஸ்லீம் இல்லை அப்படித்தானே????

-நண்பரின் கேள்வி :


//இம்மை மறுமை???!!? இம்மை வாழ்வுக்கு ததஜ செய்ததென்ன?????//

1.முஸ்லிம் என்றாலே தீவிரவாதி என்ற எண்ணத்தை களைந்தெடுத்தது இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம்.

2.கலைஞரோடும் ஜெயலலிதாவுடனும் மாறி மாறி பேசி 3.5 சதவீதம் இட ஒதுக்கீடு பெற்றுத் தந்தது. இதில் பலன் அடைவது அனைத்து முஸ்லிம்களுக்கும்தான்.

3. கல்வி வழி காட்டி நிகழ்ச்சி கிராமங்கள் தோறும் நடத்தி படிப்புக்கு ஊக்கம் அளித்தது. கல்வி உதவிப் பணங்களும் கொடுத்தது.

4.கடந்த 12 வருடங்களாக தமிழகத்தில் ரத்த தானத்தில் முதலிடத்தில் உள்ளது தவ்ஹீத் ஜமாத். பல விருதுகளும் பெற்றுள்ளது. சகோதர சமயத்தவர் நம்மை வாஞ்சையோடு தற்போது சகோதரத்துவம் பாராட்ட இந்நிகழ்வும் ஒரு காரணம்.

5. கோடைக் காலத்தில் சிறுவர் சிறுமிகளை மர்கஸூக்கு அழைத்து நல்லொழுக்க பயிற்சி அளிப்பது. இதன் மூலம் அவர்கள் தவறான வழிகளுக்கு செல்வதை தடுத்தது.

6.தமிழக முஸ்லிம்களுக்கு போராட்ட குணத்தை ஏற்படுத்திக் கொடுத்தது. தற்போது சங்பரிவாரங்கள் பயப்படுவது தவ்ஹீத் ஜமாத்தைப் பார்த்துதான். வட நாடுகளில் வாலாட்டும் இந்துத்வா தமிழகத்தில் வாலை சுருட்டிக் கொண்டிருப்பது இங்குள்ள கட்டமைப்பைப் பார்த்துதான்.

வரதட்சணைக்கு எதிராக பல கூட்டங்கள் நடத்திய வாங்கிய வரதட்சணையை திருப்பி கொடுக்கும் நிகழ்வை ஏற்படுத்தியதும் தவ்ஹீத் ஜமாத்தான்.

அதே நேரம் இந்த வரதட்சணையை பள்ளியிலேயே வாங்கிக் கொண்டு பள்ளிவாசலுக்கும் பங்கு கேட்டவர்கள் ஊர் முத்தவல்லிகள் மற்றும் ஆலிம்சாக்கள்.

நேரம் கிடைக்கும் போது இன்னும் வரும்.


 //வானத்துக்கும் மேலே பூமிக்கும் கிழே என பேசிப்பேசி நம்முடைய நிலை??????!!??//

இறை மறுப்பாளர்களுக்கு வானத்துக்கு மேலே பூமிக்கு கீழே உள்ளதைப் பற்றி கவலையில்லை.

ஆனால் ஒரு முஸ்லிமுக்கு அந்த கவலை எந்நேரமும் இருக்க வேண்டும். நம்மை இறைவன் படைத்ததே அந்த இறைவனை வணங்கி அவன் அளித்த சட்டதிட்டங்களை பேணி நடக்க வேண்டும் என்பதற்காகத்தான்.
[6:54 PM, 1/31/2018] +966 55 914 5986: //முறையாக இஸ்லாத்தை கற்று!!!!!! ததஜ வை தவிர யாரும் முறையான முஸ்லீம் இல்லை அப்படித்தானே????//

யார் முஸ்லிம் என்பதை இறைவனே அறிவான்.

ஆனால் ஏகத்துவவாதிகள் வருவதற்கு முன்பு இஸ்லாம் என்றால் தமிழகத்தில் என்ன நிலை?

1.திருப்பந்துருத்தி கபீரின் நூர் மசாலா.

2. அய்யம்பேட்டை ஜியாவுதீன் ஹஜ்ரத்தின் விரசம் கலந்த நகைச்சுவை பயான்.

3.பெண்கள் மிக பக்தியாக படித்தது சுன்து சுப்யான், விறகு வெட்டி கிசா, பப்பரத்தியார் அம்மாணை, சீறாப்புராணம்....

4.முத்துப் பேட்டையில் 60 அடி பாவா. நானும் அப்துல் ரஷீதும், ஷெரீஃபும் நேரிடையாக பார்த்து வேதனையடைந்தோம். ஏதும் சொன்னால் இறை குற்றமாகி விடுமோ என்று பயந்தோம்.

5.  தர்ஹாவில் இரவில் தங்கிய ஒரு பெண் கர்பமானாள். யார் காரணம் என்றதற்கு 'பாவா கொடுத்தது என்றாள். தமிழக தர்ஹாக்களில் பெரும்பாலும் இதுதான் நிலை. இதனை எவராவது தட்டிக் கேட்டார்களா,? தர்ஹாக்கள் இடித்து தரை மட்டமாக்கப்பட் வேண்டியவை என்பதை மார்க்க அறிஞர்கள் என்றாவது சொல்லியிருக்கிறார்களா?

-----------------------------------------------------------------------------------
ரோஹிங்கியாமுஸ்லீம்களுக்குஆஸ்திரேலியாதவ்ஹீத்ஜமாஅத்தின்நிவாரணஉதவி!

மியான்மரில் அகதிகளாக்கப்பட்ட  ரோகிங்ஞியா முஸ்லிம்களுக்கு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நான்காவது கட்டமாக உதவி..

பங்களாதேஷ் எல்லை டெக்னாஃப் பகுதி அகதி முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ள ரோஹிங்ஞியா முஸ்லிம்களுக்கு ஆஸ்திரேலியா தவ்ஹீத் ஜமாஅத் மண்டல துனை தலைவர் முனவர் இஸ்மாயில் தலைமையில் நேற்று 26.1.2018. அன்று பாதிக்கப்பட்ட மக்களுக்கு நான்காம் கட்டமாக நேரில் சென்று குளிர்காலம் என்பதால் ரூ12 லட்சம் மதிப்பிலான பெட்சீட், போர்வை, பாய், உள்ளிட்டவைகள் வழங்கப்பட்டன.

இதுவரை 65 லட்ச ரூபாய் மதிப்பிலான நிவாரணப் பொருட்கள் வழங்கப்பட்டுள்ளது.

அல்ஹம்துலில்லாஹ்.


-நண்பரின் கேள்வி :

இட ஒதுக்கீடு!!!!! எப்போது யாரால் தரப்பட்டது????? இதில் ததஜ வுக்கு என்ன பங்கு????? ஏதாவது ஆதாரம் தர முடியுமா????
ஜியாவுதீன் ஹஜ்ரத் பேசியது ஆபாசமென்றால்!!!!! மேலே நான் நான் குறிபிட்டுள்ள பிஜேயின் பேச்சு படு ஆபாசமல்லவா!!!
குண்டு வெடிப்பு வழக்குகளில் சிறையில் உள்ளவர்கள் சொல்வார்கள் பிஜேயை பற்றி .....
""ஏதோ ததஜ வருவதற்க்கு முன் எல்லா முஸ்லீம்களும் அறைகுறை ஆடைகளுடன் புத்தி சுவாதினமற்று வாழ்ந்தார்களா???!
ரத்த தானமென்பது சுத்த ஹம்பக்!!!!! ஒருவரிடம் ரத்தம் பெரும் முன் அவர் ரத்தத்தை ஸ்டெரிலைஸ் செய்ய வேண்டும் அதில் நோய் தொற்றுகள் இல்லையென்றால் தான் தானம் பெறுவார்கள் கூட்டம் கூட்மாக ரத்தம் கொடுப்பது பின்பு அதில் ஏதாவது நோய் தொற்றுகளிருந்தால் அழிப்பதே பெரும் சிரமம்!!!! அப்பப்போது தானம் கொடுப்பதே சிறப்பு!!!கோடைகாலங்களில் குழந்தைகளுக்கு வாழ்க்கையை எதிர் கொள்ளும் சிறப்பு பயிற்சிகள் தருவதே சிறப்பு!!!!! நீச்சல் ஸ்கேட்டிங் தற்காப்பு விளையாட்டு போன்றவைகள் """அது என்ன நல்லொழுக்கப் பயிற்சி .....
ததஜ க்கு முன் தமிழகத்தில் போராட்டமே செய்ததில்லையா????! ததஜ வின் பாபரி மஸ்ஜித் போராட்டம் என்னவானது????????? சங் பரிவாரங்களே பயப்படுகிறார்களாம்!!!!!! தற்போது ததமிழகமெங்கும் எல்லா நிலைகளிலும் மீடியாக்கள் அரசு வேலைகள் காவல்துறை ராணுவம் ஆசிரியர்கள் என சகலத்திலும் ஊடுருவியுள்ளனர் .....
"""ததஜ வின் துரோகங்ளை பட்டியலிடுவோம் "'

-நண்பரின் கேள்வி :

இறைவன் மனிதனை படைத்தது எதற்க்காக????? நான் கேட்டது எதற்க்காக????
வெறுமனே 24 மணி நேரமும் மார்க்க பிரசங்கம் செய்யவா அல்லது வணகத்திலேயே காலத்தை கழிப்பதா!!!! மனித குலத்துக்கு சக மனிதனுக்கு உதவியாய் வாழ வேண்டுமென்பதா அல்லது இதுதான் பக்தி இதுதான் வழிமுறையென்று அடித்துக் கொண்டு சாவதா??? வாழும் பூமியைப் பற்றி கடந்த கால படிப்பினைகளை பற்றி நிகழ்காலத்தில் சரி செய்யாமல் எதிர்காலத்தில் எதை சாதிக்கமுடியும்?????


//தயவு செய்து இயக்கம் அமைப்பு என்று எதிலும் இனைந்து உங்களின் வாழ்க்கையை
தொலைத்துக்கொள்ளாதீர்கள் இயங்கங்களால் உங்களுக்கு எந்த விதத்தியிலும் நம்மைகள் கிடைக்காது//
//இனியும் இந்த நாதாரிகளுக்கு பின்னால் சொல்லாதீர்கள்//

இவை எல்லாம் பதிந்த வார்த்தைகள். ஒரு பொய்யை சபையில் அரங்கேற்றும் போது அதற்கு விளக்கமளிப்பது எனது கடமையல்லவா? அதற்காகத்தான் இந்த பதிவுகள்.

//நல்ல முறையில் படித்து நல்ல.வேலைகளை
தேடிக்கு கொள்ளுங்கள்//
//இம்மை வாழ்வுக்கு ததஜ செய்ததென்ன?????//

என்னமோ ராஜகிரி பண்டாரவாடை முழுக்க படித்த பட்டதாரி இளைஞர்கள் வீட்டுக்கு வீடு இருந்த மாதிரியும் தவ்ஹீத் ஜமாத் வந்து குறைந்து விட்டதைப் போன்றும் பதிவது உங்களுக்கே ஓவராக தெரியவில்லையா? 

கடந்த 30 வருடங்களுக்கு முன்னால் ராஜகிரி பண்டாரவாடையின் நிலையை எண்ணிப் பாருங்கள். ஊருக்கு மூன்று பட்டதாரிகள் நான்கு பட்டதாரிகள்தான் இருந்திருப்பார்கள். எம்காம் ஜாபர் அலி, எம்காம் ரவூஃப் என்று குறிப்பிடுவதிலிருந்து வெகு சொற்பமான நபர்களே பட்டதாரிகளாக இருந்ததை விளங்குவோம். பெரும்பாலான இளைஞர்கள் எட்டாம் வகுப்பு, பத்தாம் வகுப்பு, பன்னிரண்டாம் வகுப்பு முடிந்தவுடன் பாஸ்போர்ட் எடுத்துக் கொண்டு கிடைத்த வேலைக்கு கிடைத்த சம்பளத்துக்கு வளைகுடா நோக்கி வந்தவர்களாகத்தான் இருந்தனர்.

இந்த மனிதர் பிஜே மஞ்சள் பையை கக்கத்தில் வைத்துக் கொண்டு ஊர் ஊராக சென்று இளைஞர்களை தட்டி எழுப்பினார். 'ஒட்டகம் மேய்க்க, அரபு காரன் பிள்ளையை கவனிக்க, தெரு கூட்ட 10000, 15000 ரூபாய்க்கு ஏனப்பா அந்த பாலைவனத்துக்கு செல்கிறீர்கள்? பார்பனர்களைப் போல படித்து விட்டு ஒரு லட்சம், இரண்டு லட்சம் சம்பளத்துக்கு செல்லுங்கள்' என்று ஊர் ஊராக சென்று கத்தினார். அதற்கு தக்க பலனை இறைவன் கொடுத்தான். இளைஞர்கள் மத்தியில் படிப்பின் தாகம் அதிகரித்தது. இன்று வீட்டுக்கு இரண்டு பட்டதாரிகளைப் பெற்றுள்ளோம்.

எல்லா புகழும் இறைவனுக்கே!

எனவே ஏகத்துவ இயக்கத்தால் இந்த இஸ்லாமிய சமூகத்துக்கு பெரும் பலன் கிடைத்துள்ளது என்பதை மேலும் இங்கு பதிகிறேன்.


பட்டதாரிகள் படிப்பு என்பதெல்லாம் காலத்தின் கட்டாயம் அன்று 8ம் வகுப்போடு பள்ளி 9ம் வகுப்பு ராஜகிரியில்!!!! இன்று கிரசன்ட் மெட்ரிகுலேசன் பள்ளி!!!! அன்று பேஸ்புக் வாட்ஸ்அப் மொபைல் போன்கள் போன்ற சாதனங்கள் இல்லை ..... இன்று.... அறிவியல் முன்னேற்றம் அளப்பரியது ...அன்று டாக்டர்கள் அரசுப்பணியாளர்கள் பலர் இருந்தனர் இன்று!!!! மதம் சார்ந்த இயக்ங்களால் பிளவுபட்டது சமுதாயம் குடும்பம் நட்பு ....


//அரசுப்பணியாளர்கள் பலர் இருந்தனர் இன்று!!!! மதம் சார்ந்த இயக்ங்களால் பிளவுபட்டது சமுதாயம் குடும்பம் நட்பு ....//

ஒரு குழப்பத்திற்கு பிறகுதான் தெளிவு பிறக்கும். தவ்ஹீத் ஜமாத்தில் தங்களை இணைத்துக் கொண்ட இளைஞர்களையும் மற்ற இளைஞர்களையும் நமது ஊரில் கொஞ்சம் ஒப்பிட்டு பாருங்கள். கல்லூரி படிப்பை முடித்த அந்த ஏகத்துவ இளைஞனிடம் ஐந்து வேளை பள்ளி சென்று தொழும் வழக்கம் உள்ளது. இதனால் இள வயதில் ஏற்படும் பல கெட்ட பழக்கங்கள் அவனை விட்டு தூரமாகிறது. படிப்பும் ஒழுக்கமும் ஒரு சேர அமையப் பெற்ற ஒரு இளைஞர் சமுதாயத்தால்தான் சமூக புரட்சிகளை ஏற்படுத்த முடியும்.

மற்ற சமூகங்களில் படித்த இளைஞர்கள் குடித்து விட்டு காதல் கத்தரிக்காய் என்று ஊர் சுற்றுவதையும் ஏகத்துவ இளைஞன் ஐந்து வேளை தொழுது கொண்டு தனது குடும்பத்தையும் காத்துக் கொண்டு ஹராம் ஹலால் பார்த்து தனது வாழ்வை ஓட்டுவதையும் ஒப்பிட்டுப் பாருங்கள்.



தமாஸ் சகோ!!!!  தன்னை தவிர மற்றவர்களை மட்டமாய் நினைத்து .....நான்கு நாள்கள் பெருநாள் கொண்டாடி ஜனாசாவை ரோட்டில்கிடத்தி 400 வருட பெரிய பள்ளியை "காபீர்களின் "பள்ளியென்று பயான் செய்து .....ததஜ வை தவிர மற்றவர்களெல்லாம் ஒழுக்கக் கேடாக வாழ்கிறார்கள் என்பதெல்லாம் தங்களின் இயக்க வெறியையும் அறியாமையையும் காட்டுகிறது ....மற்ற சமூகங்களைப் பற்றி பேச நமக்கு உரிமையில்லை ....எந்த புரட்சியும் விளையாது வேண்டுமானால் பெரும் கலவரம் விளையலாம்!!!!
அஸ்ஸலாமுஅலைக்கும் வரஹ்மதுல்லாஹிவபரகாத்துஹு...



பதிவுநாள்:28/1/2018
மணமகன் தேவை.
முதல்மணம்.
தஞ்சைமாவட்டம்.
கும்பகோணம் பகுதி
ஆடுதுறையை சேர்ந்த அழகுள்ள மார்கபற்றுள்ள நடுத்தரமான உயரம் பி எஸ் ஸி முடித்த தெவ்ஹீது குடும்பத்தை சேர்ந்த மணப்பெண்ணுக்கு ஒருவருடமாக தெவ்ஹீது மணமகனுக்காக காத்திருந்து, கிடைக்காத பட்ச்சத்தில் +2முடித்த சுன்னத் ஜமாஅத் மாப்பிள்ளையாக இருந்தாலும் பரவாயில்லை என்று முடிவெடுத்துத்துள்ளார்கள்.இத்தனை வருடங்களாக பல பிரச்சனைகளை கடந்து தெவ்ஹீதுவாதியாக இருந்து மாப்பிள்ளை கிடைக்காத காரணத்தினால் மீண்டும் சுன்னத்ஜமாஅத்தாரை நாடிவேண்டியுள்ளது என்று மணம்நொந்துள்ளார்கள். நம் தெவ்ஹீதுசகோதரர்கள் உடனே முயற்ச்சிசெய்து
தகப்பனில்லாத இம்மணப்பெண்ணுக்கு உறிய மணமகன் கிடைக்கவும் இந்த குடும்பத்தார்கள் தெவ்ஹீதில் நிலைத்திருக்கவும் அல்லாஹ்விடத்தில் இருகரம் ஏந்தி துஆ செய்யவும்.
துபையில் தொடர்பு கொள்ள:  மு.அப்துல்பாசித்.
0552470515.
உள்ளூரில் தொடர்புகொள்ள: சாதிக்பாட்சா.
9443564240.
தஞ்சைமாவட்டத்தில்உள்ளோர்களாக இருந்தால் நல்லது .


//எந்த புரட்சியும் விளையாது வேண்டுமானால் பெரும் கலவரம் விளையலாம்!!!!//

கலவரம் வரக் கூடாது என்பதற்காகத்தான் பெரிய பள்ளியில் சங்கு ஊதி மூன்று தவ்ஹீத் இளைஞர்களை ஊரே சேர்ந்து அடித்த போதும் அமைதி காத்தோம். ஜனாஸாவை அடக்க விட மாட்டோம் என்று முரண்டு பிடித்த போதும் சட்டத்தின் கதவுகளை தட்டி முறையாக அடக்கம் செய்தோம். உங்களைப் போன்றவர்களிடம் எங்களுக்கு கோபம் வரவில்லை. அனுதாபமே ஏற்படுகிறது. இன்றில்லா விட்டாலும் இன்னும் சில ஆண்டுகளில் உங்களிடம் மாற்றங்கள் ஏற்படும் அது வரை நாங்களும் பொறுமை காக்கிறோம்.


கொள்ளை புறத்தில் அடக்கம் செய்தது எந்த வகையில் .......சட்டம் ஜனசாவை தோண்டச் சொன்ன போதும் அமைதி காக்கிறோம்!!!! ஒரு தரப்புக்கு அனுமதி தந்த நீதிமன்றத்தை நாடி தடுக்கவும் முடியும்!!!!
"'எனக்கு ஜனசாவை அடக்க விடாமல் தடுப்பதில் எல்லாம் உடன் பாடில்லை.. அந்த சம்பவம் பள்ளியில் அடிதடி வகாப் பாய் வீடு உடைப்பு இதில்லெல்லாம் உடன்பாடில்லை .......அதை கண்டிக்கவும் செய்தேன் அப்போது நான் சென்னையில் இருந்தேன் """"
இப்போது அப்படியில்லை பல ஊர்களிலிருந்தும் ஆட்கள் திரட்டப்படுவது எதற்கென்றுதான் புரிய்வில்லை


//எவ்வளவு கீழ்தரமான பதிவு சுன்னத் ஜமாத்தை நாடியதால் மனம் நொந்தார்களாம்!!!! வக்கிரமான எண்ணம் கொண்டவர்களால் மட்டுமே இப்படி யோசிக்க முடியும் .....//

சுன்னத் ஜமாத் என்றால் வரதட்சணை கொடுக்க வேண்டும். நபிகள் காட்டித் தராத 'அல்லி குத்து பைனா' துவா ஓத வேண்டும். மஹராக மாப்பிள்ளை 2001 ரூபாய் எழுதுவார் . :-) மார்க்கம் காட்டாத பெண் வீட்டில் பெண்ணின் தகப்பனார் செலவில் ஊர் விருந்து. ஆடம்பர திருமணம். அடுத்து மாப்பிள்ளை சுன்னத் ஜமாத்தில் பிடிப்பாக இருந்தால் கல்யாணம் முடிந்த கையோடு நாகூர் தர்ஹாவுக்கு அழைத்துச் செல்வார். இதை எல்லாம் ஏகத்துவத்தில் வார்த்தெடுக்கப்பட்ட மணப் பெண்ணால் தாங்கிக் கொள்ள முடியுமா? எனவேதான் மனம் நொந்த அந்த பதிவு.
"'எனக்கு ஜனசாவை அடக்க விடாமல் தடுப்பதில் எல்லாம் உடன் பாடில்லை.. அந்த சம்பவம் பள்ளியில் அடிதடி வகாப் பாய் வீடு உடைப்பு இதில்லெல்லாம் உடன்பாடில்லை .......அதை கண்டிக்கவும் செய்தேன் அப்போது நான் சென்னையில் இருந்தேன் """"//

நன்றி....


கண்ணை மூடிக்கொண்டு கருத்தை சொல்வதெல்லாம் எந்தவகையென்று புரியவில்லை .....
மணப்பெண் தாங்குவவாரோ இல்லையோ ....தாங்கள் எழுதுவது கண்ணை மூடிக் கொண்ட பூனையை போல் உள்ளது ...
//Anaivarukkum kaadhu nandraaga keakkum endru ninaikkiren...sago..Asif avarkal evalavu alagaaka     pesi anuppi ullar athai keattum silar ippadi vivatham paanni kondu iruppathu arivukku porutham illatha ondru....
Iniyaavathu thavirkkavum...pls...//

------------------------------------------------------------------------------------
எனக்கும் இதை எல்லாம் இழுத்துப் போட்டுக்கிட்டு எனது நேரத்தையும் இதில் செலவிடுவதில் விருப்பமா என்ன?

நாளைக்கு இறைவனுக்கு முன்னால் 'இறைவா! என்னோடு சிறு வயதில் ஒன்றாக ஒரே தெருவில் விளையாடிய நஜீர் தனக்கு தெரிந்த ஏகத்துவத்தை எனக்கு சொல்லாமல் விட்டு விட்டான். வாய்ப்பு இருந்தும் எனக்கு எடுத்து சொல்லவில்லை. எனவே  என்னை மட்டும் பிடிக்காமல் நஜீரையும் சேர்த்து பிடிப்பாயாக!' என்று வழக்கு தொடுத்தால் நான் என்ன செய்வேன். :-( அதற்கான முன்னேற்பாடுகள்தான் இதெல்லாம்.






Sunday, November 15, 2015

இஸ்லாத்தை இந்தியா தடை செய்யுமாயின் உங்கள் நிலை?

//சிம்பிளாக ஒரு கேள்வி....
Nazeer Ahamed

நான் இந்தியன்.......
எனக்கு என் மதநம்பிக்கை பெரியதா?... இந்திய தேசியம் பெரியதா என்ற கேள்வி வந்து ஏதாவது ஒன்றை மட்டுமே தேர்ந்தெடுக்கும் சூழல் ஏற்படுமாயின்.....
அதாவது இந்தியாவில் மதநம்பிக்கை என்பது தடை செய்யப்படுமாயின்....
நான் என் மத நம்பிக்கைகளை தூர வீசிட்டு இந்திய தேசியத்தைதான் தேர்ந்தெடுப்பேன்.....
நீங்கள் எப்படி?...
உங்கள் மத நம்பிக்கையை துறந்துவிட்டு இந்திய தேசியத்தை தேர்ந்தெடுக்க உங்களால் முடியுமா?....//

-Ram Nivas

முதலில் இந்திய தேசியம் என்றால் என்ன? அது எவ்வாறு இருக்கும்? அதன் அடிப்படை என்ன? யாரெல்லாம் அதில் கோலோச்சுவார்கள் என்பதை முதலில் தெரிந்து கொண்டுதான் இதற்கு விடையளிக்க முடியும்.

இவ்வாறெல்லாம் மத சுதந்திரத்துக்கு தடை போட இந்தியாவில் எந்த சாத்தியதையும் இல்லை. பார்பனர்கள் மட்டுமே இந்துத்வாவுக்கு கொடி பிடிப்பர். மற்ற 80 சதவீதமான பிற்படுத்தப்பட்ட மக்கள் தலித் மக்கள் இந்துத்வாவை ஓட ஓட விரட்டுவதில் முன்னணியில் இருப்பார்கள். சமீபத்தில் பீஹாரில் அதனைத்தான் கண்டோம். அந்த மக்களுக்கு இஸ்லாமியரும், கிருத்தவரும், சீக்கியர்களும் துணை நிற்பர்.

ஒருகால் ராம் நிவாஸ் சொல்வது போல் இந்தியாவில் மதம் மார்க்கம் தடை செய்யப்படுமாயின் அதற்கு இஸ்லாம் சொல்லும் தீர்வையும் காண்போம்.

முதலில் அரசுக்கு மதம் மற்றும் மார்க்கத்தின் அவசியத்தை வலியுறுத்தி சாத்வீக முறையில் போராட்டங்களை நடத்த வேண்டும். அமைதி முறை சரி வரவில்லை என்றால் அரசுக்கு எதிராக ஆயுதங்களை எடுக்க வேண்டும்.

ஆயுதப் போராட்டம் பண்ணும் அளவுக்கு வசதியும் வாய்ப்புகளும் இல்லை என்றால் நாட்டை துறந்து எந்த நாடு இஸ்லாமிய மார்க்கத்தை கடை பிடிக்க அனுமதிக்கிறதோ அங்கு சென்று விட வேண்டும். இது கடைசி நிலையே...

ஆனால் எனது நாடான இந்தியாவில் இப்படியான ஒரு நிலை ஏற்பட வாய்ப்பே இல்லை. எனவே இப்படியான ஒரு சிந்தனைக்கு அவசியமும் இல்லை.

ராம் நிவாஸ் வெகு சுலபமாக மதத்தை உதறி விட்டு வரலாம். அதனை இந்து மதமும் அனுமதிக்கும். ஆனால் இஸ்லாம் அதனை அனுமதிக்காது. இஸ்லாமிய மார்க்கமில்லாது ஒரு முஸ்லிம் இந்த உலகில் நிம்மதியாக வாழ்ந்து விடவும் முடியாது. சகல சுதந்திரத்தையும், சகல இன்பங்களையும் இஸ்லாமிய மார்க்கத்தால் அனுபவித்து வரும் நான் எவ்வாறு எனது மார்க்கத்தை கை கழுவ முடியும்?

Thursday, July 09, 2015

மிருகங்களின் பாஷையை நபிகள் நாயகம் அறிவாரா?

//Nazeer Ahamed அண்ணாச்சி.....
விலங்கினத்துலயும் காபிர் அம்சம் அல்லது சாத்தான் அம்சம் கொண்ட விலங்கினம் இருக்குதா???
இல்லியா???//

மனிதர்களுக்குத்தான் நன்மை எது? தீமை எது? என்ற பிரித்தறியும் தன்மையை கொடுத்துள்ளான் இறைவன். ஒரு மாடு உங்கள் வீட்டு வைக்கோலையும் தின்னும். எனது வீட்டு வைக்கோலையும் தின்னும். நமது முதலாளியின் வீட்டு வைக்கோல் எது என்று பகுத்தறியும் அறிவு கொடுக்கப்படவில்லை. ஆனால் தனது எஜமானனின் வீடு எது என்பதை அது விளங்கிக் கொள்ளும். மனிதனுக்கும் மிருகங்களுக்கும் அறிவில் உள்ள வேறுபாட்டை புரிந்திருப்பீர்கள் என்று நினைக்கிறேன்.

//முகம்மது தான் மனிதன்தான் அப்படின்னு அவரும் குரான்ல சொல்லியிலுக்காரு.. நீங்களும் அப்படித்தான் சொல்றீங்க.....
அதான் இப்போ பிரச்சனை.....
முகம்மதுவுக்கு மிருக பாஷை தெரியுமா???
தெரியாதா???//

நபிகள் நாயகம் உங்களையும் என்னையும் போன்ற ஒரு மனிதர்தான். அவருக்குள்ள தனிச் சிறப்பே அவருக்கு இறைவனிடம் இருந்து வரும் செய்திகள்தான்.

பல நேரம் சாதாரண மனிதராகத்தான் இருப்பார். இறை செய்தி வரக் கூடிய சில நேரங்களில் மனிதர்களுக்கு குர்ஆனை விளக்கும் சமயங்களில் இறைத் தூதராக விளக்கம் அளிப்பார்.

இறை செய்தியின் மூலம் மிருகங்களின் பாஷையையும் அறியும் ஆற்றல் பெற்றவர் நபிகள் நாயகம். ஆனால் எல்லா நேரமும் இந்த சக்தி அவருக்கு இருக்காது. இறைவன் சொல்லிக் கொடுத்தால் அதன் அடிப்படையில் மிருகங்களின் பாஷையையும் நபிகள் நாயகம் அறிவார்.

நபிகள் நாயகம் அவர்களிடம் ஒரு ஒட்டகம் இருந்தது. 'அள்பா' என்று அதற்குப் பெயரிட்டிருந்தார்கள். இந்நிலையில் ஒரு கிராம வாசி ஒரு ஒட்டகத்துடன் வந்தார். அவரது ஒட்டகத்துக்கும், நபிகள் நாயகத்தின் ஒட்டகத்துக்கும் வைக்கப்பட்ட போட்டியில் அக்கிராம வாசியின் ஒட்டகம் முந்திச் சென்றது. இது முஸ்லிம்களுக்கு மனக் கவலையை ஏற்படுத்தியது. இதனை அறிந்து கொண்ட நபிகள் நாயகம் அவர்கள் 'இவ்வுலகில் எப்பொருள் உயர்நிலையை அடைந்தாலும் அதைத் தாழ்த்துவது அல்லாஹ்வின் நடவடிக்கையாகும்' என்று கூறினார்கள்.

நூல் : புகாரி 2872, 6501

'உயருகின்ற ஒவ்வொரு பொருளும் ஒரு நாள் இறங்கியே ஆக வேண்டும்' என்னே அற்புதமான வாசகம்!

தனது ஓட்டகம் தோற்றது தான் சரி. இப்படித் தோல்வி ஏற்படுவது தான் நல்லது என்று போட்டியில் பங்கெடுத்த எவரேனும் கூறுவதுண்டா?

இந்த ஒட்டகத்தை எந்த ஒட்டகத்தினாலும் முந்த முடியாது என்ற நிலையே கர்வத்தின் பால் கொண்டு செல்லும் என இம்மாமனிதர் நினைக்கிறார். கோழிச் சண்டையில் தனது கோழி வெற்றி பெற வேண்டும் என்று சாதாரண மனிதன் விரும்புவானே அந்த விருப்பம் கூட இவருக்கு இருக்கவில்லை. தன்னை ஒரு சாதாரண மனிதராகவே காட்டிக் கொண்டார் என்பது இந் நிகழ்விலிருந்து நமக்கு தெரிகிறது.

Tuesday, May 26, 2015

ஏகன் அனேகன் இறைவனடி போற்றி - திருவாசம்‬

திரு சென்னி மலை!

//ஏகன் அனேகன் இறைவனடி போற்றி,
---‪#‎திருவாசம்‬
திருவாசக சித்தர் அண்ணன் Nazeer Ahamed இங்கு வந்து இந்த பாடல்களுக்கு நபிவழி விளக்கம் அளிப்பார் என்று தெரிவித்துக் கொள்ளப்படுகிறது,//

“திருவாசகத்தில் “ஏகன் அனேகன் இறைவனடி வாழ்க” என்று ஒரு வாக்கியம் இருக்கு. அதில் ஏகன் என்றால் ஓர் ஆள், அனேகன் என்றால் பல ரூபங்களில் இருக்கும் ஒரே ஆள் என்று அர்த்தம்.

ஒரு மனிதனுக்குள்ளே குடும்ப சூழலில் பல எண்ணங்கள் வருவதைப் பார்க்கிறோம். அன்பு, பணிவு, அடக்கம், கோபம், தாபம், நெகிழ்வு, காமம் ஊடல் என்று பல தன்மைகளை இந்த மனிதன் எடுக்கிறான். ஆனால் அந்த மனிதன் ஒருவன்தான்.

அதே போல் இறைவனானவன் தனது அடியார்களைப் பார்த்து சந்தோஷமடைகிறான், சிலரைப் பார்த்து சிரிக்கிறான், இன்னும் பலரைப் பார்த்து கோபப்படுகிறான். குணங்கள் மனிதர்களின் செயல்களைப் பார்த்து மாறுகிறதே யொழிய அந்த இறைவன் ஒருவன்தான். ஒரு இறைவன்தான் மனிதர்களுக்கேற்ப பல தன்மைகளை பெறுகிறான்.

இந்த இறைவனின் தன்மைகள் 99 ஐத்தான் நான் போன பதிவில் குர்ஆனிலிருந்து எடுத்து பதிவிட்டேன். நபிகள் நாயகமும் குர்ஆனும் எதைச் சொல்கிறதோ அதனைத்தான் தேவாரமும் கூறுகிறது. இந்து மதமும் இதே போல் இறைவனின் தன்மைகளை பட்டியலிடுகிறது. அனால் சென்னி மலை போன்றோர் இதனை தவறாக விளங்கிக் கொண்டு அந்த இறைவன் ஒருவனல்ல... பலவாக பிரிந்து விட்டான் என்ற கற்பனையில் உள்ளனர். ஆக்குவதற்கு ஒரு கடவுளும், அழிப்பதற்கு ஒரு கடவுளும், காப்பதற்கு ஒரு கடவுளுமாக எண்ணற்ற கடவுள்களை கற்பனையில் உருவாக்கி விட்;டனர். அவர்களுக்கு உண்மையை விளக்கி நேர் வழியில் கொண்டு வருவது நம்மவர்களின் கடமை. அதனைத்தான் இந்த பதிவும் சொல்கிறது.

'கடவுள்களைப் பூமியிலிருந்து இவர்கள் தயாரிக்கிறார்களா? இவர்கள் கூறும் அந்த கடவுள்கள் உயிர் கொடுத்து எழுப்புவார்களா?'

'வானங்களிலும் பூமியிலும் அல்லாஹ்வைத் தவிர வேறு கடவுள்கள் இருந்திருந்தால் அனைத்தும் சீரழிந்திருக்கும். அவர்கள் கூறுவதை விட்டும் அர்ஷூக்கு அதிபதியான அல்லாஹ் தூயவன்'

-குர்ஆன் 21: 21,22

Monday, May 18, 2015

இஸ்லாமியருக்கு இவ்வாறு பேச யார் கற்றுக் கொடுத்தது?

இஸ்லாமியருக்கு இவ்வாறு பேச யார் கற்றுக் கொடுத்தது?

கணேச பிள்ளை அவர்களே!

//எனது இஸ்லாமிய நண்பர்களை யார் இப்படி பேச சொல்லிக் கொடுக்கிறார்கள் என்று தெரியவில்லை. இந்தியாவில் பிறந்த அனைவரும் பிறப்பால் இந்துக்களே இந்துக்களே.........இந்திய இஸ்லாமியர்கள் இஸ்லாமை பற்றி இப்போதுதான் தெரிய ஆரம்பித்து இருக்கிறார்கள். அதனுடைய தாக்கம் தான் இவைகள்.......மாற்றம் ஒன்றே மாறாதது....... காலம் மாறும்....// - Ganesh Pillai..

சில விஷயங்களை தெளிவுபடுத்தி விடுகிறேன். இந்தியாவில் பிறந்த அனைவரும் இந்தியர்களே... ஆனால் நீங்கள் சொல்வது போல் இந்துக்கள் அல்ல. மொகலாயர்களும் ஆங்கிலேயர்களும் மக்கள் கணக்கெடுப்புக்காக 'இந்துக்கள்' என்ற பொதுப் பெயரை இஸ்லாம் கிருத்தவர் அல்லாதவருக்கு வைத்தார்கள். அது தற்போது இந்துத்வாவாதிகளால் நிலை நிறுத்தப்பட்டு விட்டது.

2000 வருடங்களுக்கு முன்பு தமிழனின் வாழ்வு முறையை ஆராய்ந்தீர்கள் என்றால் இந்து என்ற சொல்லாடலே உங்களால் பார்க்க முடியாது. இறை தியானத்திலும், இறைவனை அறிந்து கொள்வதிலும் தமிழர்கள் மிகச் சிறந்த இடத்தையே பெற்றிருந்தனர். திருக்குறள், திரு மந்த்ரம், திருப் புகழ் போன்ற காலத்தால் அழியாத பல ஆக்கங்களை நமது தமிழகம் கண்டுள்ளது. என்று ஆரியர்கள் படையெடுத்து நம்மை அடிமைபடுத்தி தனது கலாசாரத்தை திணிக்க ஆரம்பித்தார்களோ அன்று தமிழன் தனது அடையாளத்தை இழந்தான். அது இன்று வரை தொடர்கிறது.

இஸ்லாமியருக்கு இவ்வாறு யார் பேசக் கற்றுக் கொடுத்தது என்ற கேள்விக்கு வருகிறேன்.

கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்பாக தமிழக இஸ்லாமியர்கள் தர்ஹா வணக்கம், தட்டு, தாயத்து, மாந்த்ரீகம், செய்வினை என்று தங்களின் அடையாளத்தை தொலைத்து விட்டிருந்தார்கள். இஸ்லாம் தமிழகத்துக்கு வந்து 1400 ஆண்டுகளாகியும் குர்ஆன் தமிழில் மொழி பெயர்க்கப்படவில்லை. அதற்கு பதிலாக நூர் மசலா, மவுலூது, விறகு வெட்டியார் கிசா, சலாத்துந் நாரியா என்று சில அரபு தெரிந்த புரோகிதர்களால் பல கற்பனை கதைகள் இஸ்லாம் என்ற பெயரில் தமிழக இஸ்லாமியருக்கு வழங்கப்பட்டன. சிறு வயதில் நூர் மசலாவை மெய் மறந்து கேட்டுள்ளேன். பள்ளி வாசல்களில் அமர்ந்து மவுலூதை சினிமா பாட்டு ராகங்களில் மெய் மறந்து ஓதியுள்ளேன். இதுதான் தமிழக இஸ்லாமியரின் மார்க்கமாக 30 வருடங்களுக்கு முன்புஇருந்தது.

இந்த நேரத்தில் ஏகத்துவ கொள்கையை மக்கள் மத்தியில் கொண்ட செல்ல சில மார்க்க அறிஞர்கள் முன் வந்தனர். பொது மேடைகளில் விவாத அழைப்பு விடுக்கப்பட்டது. 10 க்கு மேற்பட்ட நேரடி விவாதங்கள் மக்கள் மன்றத்தில் நடத்தப்பட்டன. மக்களுக்கு உண்மை விளங்கியது. குர்ஆனின் தமிழ் மொழி பெயர்ப்புகள் லட்சக் கணக்கில் விற்றுத் தீர்ந்தன. குர்ஆனை தமிழில் ஆய்வு செய்த இஸ்லாமியர் சாரை சாரையாக ஏகத்துவ கொள்கையின்பால் ஈர்க்கப்பட்டனர். சாமான்யனும் குர்ஆனை விளங்க ஆரம்பித்தான். புரோகிதர்கள் மட்டுமே மார்க்க உபன்யாசம் பண்ணிய நிலை போய் குர்ஆனை விளங்கிய 15 வயது 20 வயது இளைஞர்களெல்லாம் மார்க்க சொற்பொழிவு ஆற்றினர். கல்லூரியில் படித்துக் கொண்டே குர்ஆன் ஆராய்ச்சியிலும் இறங்கினர். தர்ஹா மவ்லூதை வைத்து பிழைப்பு நடத்திய புரோகிதர்கள் கடுமையாக எதிர்த்தனர். அத்தனை எதிர்ப்புகளையும் ஏகத்துவ வாதிகள் இறைவனின் துணை கொண்டு வென்றார்கள்.

மாற்றுமத கருத்தரங்கு, ரத்ததானம், போன்ற தொடர் பிரசாரங்களினால் மாற்று மதத்தவரும் இஸ்லாம் என்றால் என்ன என்று தெரிந்து கொள்ள ஆர்வமூட்டப்பட்டனர். முன்பு இந்துக்களுக்கு குர்ஆனை கொடுக்கக் கூடாது என்று விளங்காத புரோகிதர்கள் தடுத்தனர். அது தவறான வாதம் என்று விளக்கி தமிழ் மொழி பெயர்ப்புகளை இலவசமாக அனைத்து இந்து கிருத்தவ சகோதரர்களுக்கும் கொடுத்தனர். லட்சக் கணக்கான மாற்று மதத்தினர் இதனால் பலன் அடைந்தனர். முஸ்லிம்களும் தெளிவடைந்தனர்.

இஸ்லாமியருக்கு இந்த அளவு விழிப்புணர்வு கிடைக்க முழு காரணமே குர்ஆனின் தமிழ் மொழி பெயர்ப்புதான் என்றால் மிகையில்லை. இதற்காக அல்லும் பகலும் உழைத்த தவ்ஹீத் ஆலிம்களுக்கும் இளைஞர்களுக்கும், தாய்மார்களுக்கும் இறைவன் மேலும் மேலும் நன்மையை வாரி வழங்குவானாக!

'இந்த குர்ஆனை நம்புங்கள்! அல்லது இதை நம்பாமல் இருங்கள்(அதனால் எங்களுக்கு எந்த நஷ்டமும் இல்லை).' என்று கூறுவீராக! இதற்கு முன் வேத அறிவு கொடுக்கப்பட்டோரிடம் குர்ஆனின் வசனங்கள் கூறப்பட்டால் உண்மையை உணர்ந்து அவர்கள் முகம் குப்புற இறைவனின் காலடியில் விழுவார்கள்'

-குர்ஆன் 17:107


Sunday, May 17, 2015

தொப்பி போட்டு தொழுதால் கண்ணியமாக இருக்குமே!










சில நாட்களுக்கு முன் ஃபஜ்ர் (காலை நேர தொழுகை) தொழுகைக்கு சுன்னத் ஜமாத் பள்ளிக்கு தொழச் சென்றேன். அந்த பள்ளியில் சுன்னத் தொழுது கொண்டிருந்தேன். தற்காலிகமாக தொழ வைக்க வந்துள்ள இமாம் எனது அருகில் வந்து அவரும் சுன்னத் தொழுகை தொழுதார். தொழுது முடித்தவுடன் என்னிடம்....

'அஸ்ஸலாமு அலைக்கும்' என்றார்....

'வஅலைக்கும் சலாம்' என்று பதிலளித்தேன். உடன் அவர் என்னிடம்

'தொப்பி போட்டு ஏன் நீங்கள் தொழுவதில்லை?' என்று கேட்டார்.

'தொப்பி போட்டுத்தான் தொழ வேண்டும் என்று மார்க்க சட்டம் ஏதும் இருக்கிறதா?' என்றேன்.

'அப்படி ஏதும் இல்லை'

'குர்ஆன் ஹதீஸில் இதற்கு ஆதாரம் தர உங்களால் முடியுமா?'

'ஆதாரம் இல்லைதான். ஆனால் பார்க்க கண்ணியமாக இருக்குமே... உலமாக்கள் தொப்பி போடுதல் அவசியம் என்று சொல்கிறார்களே'

'எது கண்ணியம் என்பதை நபிகள் நாயகம் அவர்கள் சொல்ல வேண்டும். உலமாக்கள் சொல்வதெல்லாம் மார்க்கம் ஆகி விடாது. இதே உலமாக்கள்தான் தர்ஹா வணக்கம், கத்தம், கந்தூரி, மௌலூது, சலாதுன் நாரியா என்று மார்க்கம் சொல்லாததை எல்லாம் மார்க்கமாக ஆக்கி வைத்திருந்தனர்.'

'அதெல்லாம் தவறுதான். அதனை சரி என்று நான் சொல்லவில்லையே'

'நீங்கள் குறிப்பிடும் அந்த பெரிய ஆலிம்களிடம் என்றாவது இதெல்லாம் தவறு என்று என்னிடம் கேட்டது போல் கேட்டிருக்கிறீர்களா?'

எனது வரிசையான கேள்விகளால் நிலை குலைந்த அந்த ஆலிம் பதில் என்ன சொல்வது என்று திகைத்தார். அதற்குள் கடமையான தொழுகைக்கான நேரம் வரவே தொழ வைக்க அவர் எழுந்து சென்று விட்டார். நானும் அவரை பின் பற்றி தொழ தயாரானேன்.

இஸ்லாம் சொல்லாத இந்த தொப்பி அணியும் முறையை யார் மார்க்கத்தில் புகுத்தியதோ தெரியவில்லை. யூதர்களுக்கு தொப்பி அணிவது கடமை. பள்ளிக்கு அவர்கள் வரும் போது அவசியம் தொப்பியுடன்தான் இருப்பார்கள். கிருத்தவர்களின் போப் ஆண்டவரும் அவசியம் தொப்பி அணிந்திருப்பர். யூத கிருத்தவ கலாசாரமான இந்த தொப்பி அணியும் முறையை இஸ்லாத்திலும் புகுத்தி 'தொப்பி அவசியம் அணிந்து தொழுங்கள்' என்று சில பள்ளிகளில் போர்டு வைக்கும் நிலைக்கு சென்றுள்ளார்கள். அனைத்து சுன்னத் ஜமாத் பள்ளிகளிலும் ஒரு அட்டைப் பெட்டியில் பிளாஸ்டிக்கால் ஆன தொப்பிகள் வைத்திருப்பர். அதனை வேண்டா வெறுப்பாக சிலர் போட்டுக் கொள்வர். தொழுகையில் நெற்றியை தலையில் வைக்கும் போது அந்த தொப்பியானது பலரது தலையில் இருக்காமல் நழுவி விழுந்து விடுகிறது. அதனை எடுத்து திரும்பவும் போட்டுக் கொள்வார்கள். இது பல முறை நடைபெறும். எதற்கு இந்த வேண்டாத கட்டாய தொப்பி அணியும் முறை? ஹதீஸிலோ குர்ஆனிலோ 'தொப்பி' என்ற வார்த்தையை எங்குமே காண முடியாது. நபிகள் நாயகம் வலியுறுத்தாத ஒரு பழக்கத்தை நாம் எவ்வாறு கட்டாயப்படுத்த முடியும்?

'யூதர்களுக்கு மாறு செய்யுங்கள்' என்று நபிகள் நாயகம் நமக்கு அறிவுறுத்தியிருக்க யூதர்களின் பழக்கமான தொப்பி அணியும் முறையை இனியும் கட்டாயப்படுத்துவது சரியாகுமா? என்று யோசிக்க வேண்டும்.

அரபு நாடுகளில் கடும் பனி, கடும் வெயில், பாலைவனப் புயல் போன்ற வற்றிலிருந்து தங்கள் தலையைக் காத்துக் கொள்ள தொப்பி அணிந்து அதற்கு மேல் துண்டையும் சுற்றி கட்டிக் கொள்வர். அது அரபு நாடுகளுக்கு சரி. அது அரபு கலாசாரம் என்று வேண்டுமானால் சொல்லிக் கொள்ளலாம். அதனையே தமிழகத்திலும் கடை பிடிக்கச் சொல்வது அதனை கட்டாயப்படுத்துவது என்பது மார்க்க அறிவின்மையே ஆகும்.

தற்போது இந்த தொப்பியானது விஜயகாந்த், மு க ஸ்டாலின் போன்றோர் அணிந்து கொண்டு நோன்பு கஞ்சி குடிப்பதற்கும் ஓட்டு அறுவடை செய்வதற்கும் சினிமாவில் முஸ்லிம்களை தீவிரவாதிகளாக சித்தரிப்பதற்கு ஒரு அடையாளமாகவும் தான் பயன்படுகிறது :-)

Friday, May 15, 2015

கோரம் - அகோரம் உண்மையான பொருள் என்ன?



கோரம் - அகோரம் உண்மையான பொருள் என்ன?

//சுத்தம் - அசுத்தம்
சாதாரணம் - அசாதாரணம்
பாக்கியம் - அபாக்கியம்
கோர வாழ்வு - அகோர வாழ்வு
அப்படியே வரிசையாக
அர்த்தம் சொல்லிட்டு வாங்க,
தாய்மொழியோ தகறாரு
இதுல எங்க அடுத்தவங்க
மதத்தை பற்றி புரிஞ்சிக்க போறீங்க???
ஒருவேளை உங்க தாய்மொழி
தமிழ் இல்லையா??????//

பிணந்தின்று தினமும் கஞ்சா அடித்து உருண்டு கிடக்கும் அகோரிகளை காப்பாற்றப் போய் தமிழ் மொழிக்கும் ஆப்பு வைக்க ஆரம்பித்தாகி விட்டதா?

முதலில் கோரம், அகோரம் என்ற இந்த வார்த்தைகள் தமிழ் வார்த்தைகளே அல்ல. இது வட மொழிச் சொல். இதற்கு தமிழின் முக்கிய தளங்கள் என்ன அர்த்தம் தருகின்றன என்று பார்போம்.


அகோரம், பெயர்ச்சொல்.
1. அழகின்மை, கொடுமை, வெறுக்கத்தக்க, சரியில்லாதவை. [1]
2. உக்கிரம், ஞானம், உஷ்ணம். [2]

http://ta.wiktionary.org/wiki/%E0%AE%85%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D

------------------------------------------------------------------------

அகோரம்:

மிக்க கொடுமை, வெப்பம், சிவனின் ஐந்து முகத்தில் ஒன்று, ஞானம்
http://www.valaitamil.com/%E0%AE%85%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D--tamil-dictionary60742.html

-------------------------------------------------------------------------

அன்பிற்கினிய நண்பர் செம்மலுக்கு
வணக்கம்
கோரம், அகோரம் பற்றிய தங்கள் குறிப்பைக் கண்டேன்.
தாங்கள் குறிப்பிட்டது சரியே -
இவை இரண்டுமே வடமொழிச் சொற்கள்!
கோரம் = கொடுமையான, அஞ்சத்தக்க, அருவெறுப்பான ...
அகோரம் = அதிகக் கொடுமையான, மிகவும் அஞ்சத்தக்க, மிக அருவெறுப்பான ...

அகோரம் என்பதைப் பெயராகக் கொண்டவர்கள் உண்டு. இங்கே பிரான்சில் உள்ள கோயில் குருக்கள் ஒருவர் பெயர் அகோரமூர்த்தி. சதாசிவ உருவில் இருக்கும் சிவனுக்கு அகோரமூர்த்தி என்று பெயர்.

சிவனுக்கு ஐந்து தலைகள் (முகங்கள்) :தத்புருஷம், அகோரம், வாமம், சத்யோஜாதம், ஈசானம்.
பிரமனுக்கும் ஐந்து தலைகள் இருந்தனவாம்.
ஒருமுறை, பார்வதி தேவி, தன கணவன் என்று எண்ணித் தவறுதலாகப் பிரமன் பக்கத்தில் அமர்ந்துவிட்டாளாம். அதைக் கண்டு விளக்கம் கேட்ட சிவனுக்குப் பார்வதி, "பிரமனுக்கும் ஐந்து தலை ; உங்களுக்கும் ஐந்து தலை வேறுபாடு தெரியவில்லை" எனச் சமாளிக்கச் சிவன் சினந்து பிரமாவின் தலைகளில் ஒன்றைக் கொய்துவிட்டாராம். அன்று முதல் பிரமா, நான்முகராக வலம் வரத் தொடங்கினார்.

"அற்ற தலை போக அறாத தலை நான்கினையும்
பற்றித் திருகிப் பறியேனோ..." என வரும் ஒளவையாரின் பாடலில் இக்கதை பொதிந்துள்ளது.

பறித்த பிரமனின் தலை (மண்டையோடு?) சிவனின் கையிலேயே ஒட்டிக்கொண்டதாம். பிரமன் தலையைக் கொய்தலால் சிவனுக்கு பிரம அத்தி தோசம் பிடித்ததாம்.

இவை புராணக் கதைகள்.

https://groups.google.com/forum/#!topic/tamil_ulagam/0CLSOJ4azZ8

---------------------------------------------------------------


இப்போது அகோரிகளுக்கு உண்மையான அர்த்தம் என்ன என்பதை விளங்கிக் கொண்டீர்களா? இதில் எனக்கு வேறு அட்வைஸ் பண்ணுகிறீர்கள்? நீங்கள் தமிழனா என்று ஒரு கேள்வி வேறு கேட்கிறீர்கள்? :-)

சென்னி மலை உண்மையில் தமிழனா என்ற சந்தேகம் எனக்கு வருகிறது. உங்களின் தாய் மொழி தெலுங்காகவோ, கன்னடமாகவோ இருக்க வாய்ப்புள்ளது. எதுவாக இருந்தாலும் இனி எதையும் யாரையும் விமரிசிக்கும் போது உண்மை என்ன என்பதை விளங்கி பதிவிடவும்.

எனது தாய் மொழி தமிழ். இனத்தால் திராவிடன், தேசத்தால் இந்தியன், மார்க்கத்தால் இஸ்லாமியன்.

உங்களின் தாய் மொழி தமிழ்தானா? சென்னி மலை?

வர்ட்டா.......... :-)

Thursday, May 14, 2015

அகோரிகள் என்றால் யார்? - சென்னி மலை

அகோரிகள் என்றால் யார்? - சென்னி மலை

//இஸ்லாமிய குடியிருப்பு சுத்தமாக இருக்குனு உங்களால் உறுதியாக சொல்ல முடியுமா???!
வந்தவாசி கோட்டை எப்படி இருக்குன்னு தெரியுமா???? //

இஸ்லாமிய குடியிருப்புகளுக்கு அரசு உதவி முறையாக சென்று சேராததும் ஒரு காரணம்.

மற்றபடி இந்தியாவை பொருத்த வரை இந்து , முஸ்லிம், கிருத்தவர்கள் என்று எல்லா குடியிருப்புகளும் அசுத்தமாகத்தான் உள்ளன. ஆனால் கங்கையின் அசுத்தம் என்பது புனிதம் என்ற பெயரில் நாமாக வரவழைத்துக் கொள்வது. அதற்கு மாற்று ஏற்பாடு இருக்கும் போது அதனை செயல்படுத்துவதில் ஏன் தயக்கம் காட்ட வேண்டும்? இதற்காக மக்களின் வரிப் பணம் 20000 கோடி செலவழிப்பதால் எந்த பலனும் இல்லை என்று ஆய்வாளர்கள் சொன்ன பின்பும் ஏன் இந்த முயற்சி? முதலில் கங்கை அசுத்தமாவதற்கு காரணங்களை கண்டு பிடித்து அதனை நிறுத்தி விட்டல்லவா தூய்மைப் பணியை தொடங்க வேண்டும்?

//அகோரிகள் அப்படினா யார்????
எந்த அகேரியேட ஆசிரமத்து வீடியோவாவது உங்களிடம் இருக்கா????//

https://www.youtube.com/watch?v=g9YepUqlR44

https://www.youtube.com/watch?v=wl4O2dg3txQ

https://www.youtube.com/watch?v=T2RhDq7-_Ec

https://www.youtube.com/watch?v=Qf3NLel3Tl4

https://www.youtube.com/watch?v=IqSelBNHRqU

சன் டிவியில் வந்த 'காசியின் மறுமுகம்' என்ற இந்த ஐந்து தொடரையும் தமிழில் பார்த்து விட்டு இந்த அகோரிகளைப் பற்றி ஒரு முடிவுக்கு வாருங்கள். இவர்களின் பின்னால் இந்து இளைஞர்கள் சென்றால் அவர்களின் வாழ்வு 'நான் கடவுள்' படத்தில் உள்ள ஆர்யாவின் வாழ்வு போல்தான் மாறிப் போகும். இந்து மறுமலர்ச்சி என்று இதைத்தான் சொல்கிறீர்களா?

//செத்த பிணத்தை தின்பதாக சொல்லும் நீங்க உயிரோட மனுசனை அறுத்து தின்னும் காட்டுமிராட்டிகளை பற்றி ஏன் பதிவு போடவில்லை, //

ஐஎஸ்ஐஎஸ், போகோ ஹராம், அல்சபாப் போன்ற தீவிரவாத குழுக்கள் செய்யும் எந்த செயலும் இஸ்லாம் கூறும் செயல் அல்ல. அவர்களைப் பற்றி கடுமையாக விமரிசித்து பல பதிவுகள் முன்பு எழுதியுள்ளேன்.அப்பாவிகளை பெண்களை சிறுவர்களை மத குருமார்களை போர்களில் கூட கொல்லக் கூடாது என்று குர்ஆன் கட்டளையிட அதற்கு மாற்றமாக நடக்கும் இந்த தீவிரவாதிகள் இஸ்லாமியர்களா? மனிதனை வெட்டி அவனது கறியை சாப்பிட்டு அதனை வீடியோவாக்கி வெளியிடும் இவர்கள் இஸ்லாமியர்களா? கண்டிப்பாக இல்லை. உலக அளவில் இஸ்லாமிய வளர்ச்சியை தடுக்க அமெரிக்க, ஐரோப்பிய, இஸ்ரேலிய அரசுகளால் உருவாக்கப்பட்ட கூலிப் படைகள் இவர்கள்.

வெளி நாடுகளுக்கு ஏன் போகிறீர்கள்? உங்களோடு அண்ணன் தம்பிகளாக பழகி வரும் தமிழக இஸ்லாமியரிகளிடம் இது பொன்ற தீவிரவாத எண்ணம் கொஞ்சமாவது இருக்கிறதா? ஆராய்ந்து பாருங்கள். உங்களுக்கு ஐஎஸ்ஐஎஸ், போகோ ஹராம் யார் என்பது விளங்கும்.

//கங்கை மூலமாக லச்சம் கோடிகணக்கில் சம்பாதிக்கும் அரசு ஏன் சில ஆயிரம் கோடிகள் அதை சுத்தம் செய்ய உபயோகிக்க கூடாது???? //

தாராளமாக செய்யட்டும். 'நோய் முதல் நாடி' என்ற சொல்லுக்கேற்ப கங்கை அசுத்தமாவதற்கான காரணத்தை முதலில் சரி செய்து விட்டு பிறகு தூய்மைப் பணியை துவங்கட்டும் என்பதுதான் எனது வாதம்.