ஆரியர்கள் இந்தியாவின் பூர்வீக குடிகள் அல்ல -ஆய்வு சொல்கிறது.
ஆதிச்சநல்லூரில் நடத்தப்பட்ட அகழ்வாராய்ச்சி முடிவுகளின் அறிக்கை வெளியிடப்படாமலேயே இருந்தது. இந்நிலையில், ஆதிச்சநல்லூரில் மீண்டும் அகழ்வாராய்ச்சி நடத்த வேண்டும் என்று மதுரை உயர் நீதிமன்றக் கிளையில் தூத்துக்குடியைச் சேர்ந்த முத்தாலங்குறிச்சி காமராஜ் என்பவர் வழக்குத் தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், ஆதிச்சநல்லூர் அறிக்கையை சமர்ப்பிக்கச் சொல்லி உத்தரவிட்டிருந்தனர். இந்நிலையில், ஆதிச்சநல்லூரில் கண்டெடுக்கப்பட்ட பொருள்களில் சிலவற்றை கார்பன்காமராஜ் பகுப்பாய்வுக்கு அனுப்பியிருந்தது மத்திய அரசு. அதன் ஆய்வு முடிவைத் தற்போது நீதிமன்றத்தில் சமர்ப்பித்துள்ளது மத்திய அரசு.
அதில், ''கார்பன் பகுப்பாய்வு செய்யப்பட்ட இரண்டு பொருள்களின் காலம், 'கி.மு 905 மற்றும் கி.மு 971' என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. இதையடுத்து, ஆய்வு முடிவின் அடிப்படையில் ஆதிச்சநல்லூரில் யார் அகழாய்வு செய்ய வேண்டும் என்று கேள்வி எழுப்பியுள்ளது நீதிமன்றம். ஆதிச்சநல்லூரில் மத்திய அரசு அல்லது மாநில அரசில் யார் ஆய்வு நடத்தவிருக்கிறார்கள் என்பதைத் தொல்லியல் துறை பதிலளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளனர். பல வருடங்களாக கிடப்பில் கிடந்த ஆதிச்சநல்லூர் அகழ்வாராய்ச்சியின் முழு அறிக்கையை விரைவில் வெளியிட வேண்டும் என்பதே தொல்லியல் ஆர்வலர்களின் வேண்டுகோளாக இருக்கிறது. நீதிமன்றம் இதற்கு விரைவில் ஆவண செய்ய வேண்டும்.
'ஆதிச்சநல்லூர் ஆய்வறிக்கையை விரைவில் சமர்ப்பிக்க வேண்டும்' என்று நீதிமன்றம் கடந்த பிப்ரவரி மாதம் உத்தரவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
Thanks
Vikatan
04-04-2019
Vikatan
04-04-2019
ஹெச்.ராஜா, இல கணேசன் போன்றவர்கள் இனியும் தங்களின் பூர்வீகத்தை பூசி மொழுக முடியாது. இந்தியாவின் பூர்வீக மொழி தமிழ் என்பதும் சமஸ்கிரதம் வந்தேறி மொழி என்பதும் மற்ற இந்திய மொழிகள் தமிழிலிருந்து பிரிந்த கிளை மொழிகள் என்பதும் இதிலிருந்து நிரூபணமாகிறது.
ஹெச்.ராஜா இனி யாரையாவது 'ஆண்டி இந்தியன்' என்றால் 'நீ இந்தியனே அல்ல' என்று உரத்து கூறலாம்.
1 comment:
முட்டாள்தனமான கட்டுரைகளை வெளியிடுவதில் மன்னன் சுவனப்பிரியன். ஆரியர் திாராவிட பொய்வாதங்களுக்கும் இந்த கட்டுரைக்கும் என்ன சம்பந்தம் ? தாய் நாட்டின் நலன்களுக்கு பொருத்தமில்லாத காரிங்களைச் செய்பவனை தேச விரோதி என்று சொல்வது இயற்கை. திரு.ராஜா தாய் நாட்டு வளா்ச்சிக்காக தன்னையே அா்பணித்துக் கொண்டவா்.
Post a Comment