இலங்கை தொடர் குண்டு வெடிப்பிற்கு யார் காரணம்...??
இலங்கையின் தெற்கு, மேற்கு, கிழக்குப் பகுதி கடற்பரப்புகளில் அபரிமிதமான இயற்கை எரிவாயு உள்ளதாக சமீபத்தில் கண்டறியப்பட்டுள்ளது. இந்த ஆய்வுகளை மேற்கொண்டது முழுக்க முழுக்க வெளிநாட்டு நிறுவனங்களே.
50 ஆண்டுகளுக்கு முன்பே இந்த ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டிருப்பினும் சமீபத்தில் நடத்தப்பட்ட ஆய்வு முடிவுகள் இயற்கை எரிவாயு இருப்பதை உறுதி செய்துள்ளன. குறிப்பாக தமிழகத்தின் அருகேயுள்ள மன்னார் வளைகுடா கடல் பகுதியில் மிக அதிகமான அளவில் எரிவாயு உள்ளதாக முப்பரிமாண சோதனைகள் தெளிவுபடுத்தியுள்ளன.
இந்த எரிவாயு வளங்களை பயன்படுத்திக் கொள்ளும் தொழில்நுட்பம் இலங்கையிடம் இல்லை. இதற்கான டெண்டர் கோரி பல வெளிநாட்டு நிறுவனங்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அதற்கான காலக்கெடு வரும் மே மாதம் 7-ம் தேதியுடன் முடிவடைகிறது. டெண்டர் பெறப்பட்ட மூன்று மாதங்களுக்குள் நிறுவனங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு எரிவாயு எடுக்கும் பணிகள் ஒப்படைக்கப்படும் எனத் தெரிகிறது.
இது இப்படியிருக்க இலங்கையின் வடகிழக்கு கடற்பரப்பில் நடத்தப்பட்ட ஆய்விலும் எரிவாயு உள்ளதாக, பிரான்ஸை சேர்ந்த டோடா நிறுவனம் கண்டறிந்துள்ளது. அடுத்தக்கட்ட பணிகளை தீர்மானிப்பதில் பிரான்ஸ் நிறுவனம் முக்கியப் பங்கு வகிக்கும் என சமீபத்தில் செய்திகள் வெளியானது. பிரான்ஸில் தேவாலயம் சமீபத்தில் தீவிபத்துக்குள்ளானது ஞாபகம் வருகிறதா?
இலங்கையில் சீனா ஏகப்பட்ட முதலீடுகளை செய்துள்ளது. எவனோ ஒரு பிரான்ஸ் கம்பெனிக்காரன் இலங்கையில் கால் பதிப்பதை சீனா வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்காது. செய்த முதலீட்டுக்கு அதிகப்படியான லாபத்தை எதிர்பார்க்கும்தானே?
மத்திய கிழக்கு நாடுகளில் பெட்ரோலிய வளம் உள்ளதையும் வெளிநாட்டு நிறுவனங்களே கண்டறிந்து உறுதிப்படுத்தின. கடலுக்கடியில் இருந்து கச்சா எண்ணெய்யை உறிஞ்சி எடுப்பதற்காக மத்திய கிழக்கு நாடுகளில், ஏகாதிபத்திய நாடுகளின் நிறுவனங்கள் கால் பதித்த பின்னரே அங்கு பிரிவினைகள், கலவரங்கள், குண்டுவெடிப்பு, உயிரிழப்புகள், ஆட்சிக் கவிழ்ப்புகள், போர்கள் நடைபெற்றன. இதைக் காரணம் காட்டி பெட்ரோலிய வளமுள்ள அரசுகளுக்கு பாதுகாப்பு அளிப்பதாக வல்லரசுகள் களத்தில் இறங்கி கல்லா கட்டும்.
இலங்கை கடற்பரப்பில் இருந்து எரிவாயு எடுக்கும் பணியினை 2023 க்குள் ஆரம்பிக்கப்போவதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
ஒருபக்கம் மத்திய கிழக்கு நாடுகளில் பெட்ரோலிய வளம் குறைந்து வருகிறது. இன்னொருபுறம் இலங்கையில் அபரிமிதமான இயற்கை எரிவாயு கண்டறியப்படுகிறது. மத்திய கிழக்கில் ஐ.எஸ். ஆதிக்கம் மட்டுப்படுகிறது. இலங்கையில் தொடர் குண்டுவெடிப்பு நிகழ்கிறது. குறிப்பாக கிறிஸ்தவ பண்டிகையின்போது தேவாலயங்களில் தாக்குதல் நடந்துள்ளது. 35 வெளிநாட்டினர்களும் பலியாகியுள்ளனர்.
ஆக இலங்கையின் பாதுகாப்பு கேள்விக்குறியாகியுள்ளது. உலகத்தில் எங்கெல்லாம் பாதுகாப்பு குறைபாடு உள்ளதோ அங்கெல்லாம் வல்லரசுகள் கால் பதிக்கும் அமைதியை நிலைநாட்டும் போர்வையில் தேவையான காரியத்தை சாதிக்கும்.
இலங்கைக்கு உதவ அமெரிக்கா தயார் நிலையில் உள்ளது என அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார். அடுத்து சீனாவும் உதவத் தயாராக இருப்பதாக செய்திகள் வரும்.
எப்படியோ இலங்கையில் குட்டையைக் குழப்பி குழப்பத்தை உண்டாக்கிவிட்டாயிற்று. இந்த குழப்பத்தில் மீன் பிடிக்கப்போவது அமெரிக்காவா? சீனாவா? சீனாவின் ஆதரவுடன் ரஷ்யாவா? என்பது போகப் போக தெரியும்.
குண்டுவெடிப்பில் பலியான அப்பாவிகளின் ஆன்மா சாந்தியடைய பிரார்த்திக்கிறேன்.
-இரா.சுந்தரபாண்டியன்.
3 comments:
இன்னும் விசாரணையே ஆரம்பிக்கல!அதுக்குள்ள தூக்கிட்டு வந்துட்டான் காமெடி பீசு!
கள்ளிக்கு கண்ணீா் முந்தும்.கள்ளி புருஷனுக்கு சொல் முந்தும் என்பார்கள். சுவனப்பிரியன் ஒரு விசயத்தில் முந்துகிறாா் எனில் அங்கே ஒரு முஸ்லீம் இருக்கினறான் என்று அா்த்தம். புசி மழுப்புகின்ற வேலையை அருமையாக செய்கின்றாா் எனில் முஸ்லீம்கள் செய்த தவறை மறைக்க முயல்கின்றாா் என்ற அர்த்தம். இலங்கையில் உள்ள இயற்கை எரிவாயுவை எடுப்பது ஒரு பொருளாதார நடவடிக்கையாகும். இதற்கும் கிறிஸ்தவ ஆலயங்களில் தற்கொலை தாக்குதல் நடத்துவதற்கும் எள்ளளவும் சம்பந்தமில்லை.
”குணடு வெடிப்பிற்கு யாா் காரணம்”
என்ற தலைபபிற்கும் உள்ளே உள்ள கருத்துக்களுக்கும் சம்பந்தமேயில்லையே.தௌகீத் ஜமாத் காரணமாக இருக்கலாம் என்பது இன்று தினமணி பத்திரிகை முதல் பக்கச் செய்தி.ஆக இசுலாம் ஒரு இனிய மார்க்கம் தான் இரத்தக்களறிக்கும் நாச வேலைக்கும் காரணம் என்று குற்றவாளிகளின் தடம் இசுலாத்தை நோக்கி நகா்கின்றது.
உ்ண்மை. முஹம்மது என்ற அரேபியன் பிறந்திருக்காவிட்டால் இந்த உலகம் மிக அமைதியாக இருந்திருக்கும் .வருங்காலத்திலும் அமைதி முன்னேற்றம் ஏற்படும்.
யாரும் -முஸ்லீம்கள் யாரும் வைக்கவில்லை.
பிஷப் மீதுள்ள கோபத்தினால் கோவில் ஊழியா் ஒருவா் வைத்து விட்டாா் என்பதுபோல் நான் கனவு கண்டேன். ஆா்எஸ்எஸ காரா்களாக இருக்கலாம். அப்படியும் விசாரனை நடத்தவேண்டும் என்று ஒரு கோரிக்கை வைக்கலாமே
Post a Comment